Friday, January 8, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 16

அன்று காலை மரகதமும் சாமிக்கண்ணுவும் பஸ் விட்டு இறங்கி பரசுவின் வீட்டுக்கு போகும் போதே பரசுவை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற கவலையுடன் தான் சென்றனர் ...

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவர்களை பார்த்த பரசு எதுவும் பேசாமல் கட்டிலில் திரும்பி படுத்துக்கொள்ள... மரகதத்துக்கு அழுகையே வந்தது ..

முந்தானையில் மூக்கை சிந்தியபடி பேரனின் கட்டிலின் ஓரம் அமர்ந்தவள் " என்ன ராசு முகத்தை திருப்பிக்கிட்ட? .. நாங்க என்ன பண்ணோம்யா? அது விதி.. நான் நெச்சா மாத்தமுடியுமா? நீ நெனைச்சு மாத்தமுடியுமா?" என்று மரகதம் கூற ...



வெடுக்கென்று திரும்பிய பரசு எது அம்மாச்சி விதி? உங்களை நம்பி என் அக்காவை அனுப்பினேன் பாருங்க அதுதான்... ஆனா அந்த வீட்டில நடந்தது எல்லாமே சதி அம்மாச்சி சதி.... அக்கா ஆசை வார்த்தை பேசி ஏமாத்திட்டாங்க அந்த பணக்காரங்க... அதுவும் அந்த பொறுக்கி கூட என் அக்காவை பார்க்கவே முடியலை ... என் நெஞ்சு கொதிக்குது அம்மாச்சி பெரிய மனுஷனுங்களா அவனுங்க? " பரசுவின் வார்த்தைகள் உட்சபட்ச ஆத்திரத்துடன் வந்தது

இப்படி பேசுபவனுக்கு எதை சொல்லி புரியவைப்பது என்று சாமிக்கண்ணு குழப்பத்துடன் அமர்ந்திருக்க... மரகதம் பரசுவை கூர்மையுடன் பார்த்து " பரசு என்ன நடநிததுனு தெரியாம நீபாட்டுக்கு பேசிகிட்டே போகாத .... நான் சொல்றதை முழுசா கேட்டுகிட்டு அப்புறமா முடிவு பண்ணு யாரு பெரிய மனுஷங்கனு" மரகதத்துக்கு கொஞ்சம் கோபம் தான் .. மனகஷ்டத்தில் பரசு வார்த்தையை தவறாக விடுகிறானே என்று......

பாட்டியை முறைத்தான் பரசு " நீ என்னா அம்மாச்சி சொல்லுவ? அவங்களை மாதிரியே ... இது என் அக்காவோட சம்மதத்தோடு தான் நடந்துச்சுனு சொல்லுவியா... " எழுந்து அமர்ந்து விட்டிருந்தான் பரசு ...

" ஆமாம் நானும் அதைத்தான் சொல்லப்போறேன் .... ஆனா அதுக்கு முன்னாடி என்ன நடந்ததுனு முழுசா தெரிஞ்சுக்க.... நான் மான்சிய வேலைக்கு கூட்டிப் போகும்போது சின்னய்யா அங்க இருக்குறதே அவளுக்கு தெரியாது... பத்துநாள் வரைக்கும் அவரு யாருனே தெரியாது மான்சிக்கு" என்ற மரகதம் மான்சி வந்தவுடனேயே அந்த வீட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் ... வெகு சீக்கிரத்திலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்து உயர்ந்தது என எல்லாவற்றையும் விபராமாக சொன்னாள் பாட்டி

பரசுவுக்கு இதெல்லாம் ஓரளவுக்கு தெரிந்தவன் போல் அலட்சியமாக இருந்தான் ..... அவன் அக்காவின் குணங்கள் தெரிந்தவன் அல்லவா? அவளை பிடிக்காதவர்கள் இருப்பார்களா என்ன? ஆனால் அடுத்ததாக அவனுக்கு சொல்லப்பட்ட விஷயங்கள் தான் திகைப்பாக இருந்தது

மிச்ச கதையை சாமிக்கண்ணு தனது பேரனுக்கு சொல்ல.. பரசு திகைப்பின் உச்சிக்கேப் போனான் ... என் அக்கா அவனை காதலித்தாளா? அது எப்படி நடந்தது?....

கோபமாய் நிமிர்ந்தவன் “ தாத்தா நீ உன் மொதலாளிக்கு சாதகமா என்ன வேனும்னாலும் சொல்லிக்கோ.... ஆனா அந்தாளை என் அக்கா காதலிச்சான்னு மட்டும் சொல்லாத... அவன் யாரு எப்படிப்பட்டவன்னு கொஞ்சநேரத்துல புரிஞ்சிகிட்டு எவ்வளவு அழுதுச்சு தெரியுமா?” என்று பரசு கேட்டதும்...

சாமிக்கண்ணு அவனை கூர்ந்து நோக்கி “ எவனோ ஒருத்தன் கையைப் பிடிச்சான்னு கோபத்துல அறையாம ஏன் மான்சி அழுவனும் பேரான்டி? இதுக்கு உன்னால காரணம் சொல்லமுடியுமா?” என்றார்....

பரசு பட்டென்று நிமிர்ந்தான் “ அது பயத்துல அழுதுச்சு” என்றான்...


“ அது பயத்துல இல்லடா பேரா.... பாசத்துல அழுதது.... இதோ பார் பரசு உன்கிட்ட இப்படி பேசினா எனக்கு என்ன கிடைக்கப் போகுது.... இது மான்சி அதுன் வாயாலேயே சொன்னதுதான்...” என்றவர் சத்யன் மான்சியை திருமணம் செய்து கொள்வதற்காக பட்டினி கிடந்ததும்... பெரியவர் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் இருந்து பிறகு வேறு வழியின்றி மான்சியை அழைத்து பேசியது மான்சி உடனே சம்மதித்தது என எல்லாவற்றையும் விபரமாக சொன்னவர்.. “ மான்சி தான் பரசு உனக்கு தெரியாம கல்யாணத்தை செய்யனும்னு சொல்லுச்சு... பெரியவரு இதுக்கும் சம்மதிக்கலை.... மான்சி ஏதேதோ பேசி எல்லாரையும் சம்மதிக்க வச்சு இந்த கல்யாணத்தை பண்ணிகிச்சு... நடந்தது எல்லாத்துக்கும் மான்சி தான் பொறுப்பு... அந்த வீட்டுல மான்சியை யாருமே வற்புறுத்தலை ” என்றார் சாமிக்கண்ணு...

பரசு திகிலடித்துப் போய் அமர்ந்திருந்தான்... அக்காவுக்கு போயும் போயும் அவன் மேலயா காதல் வந்துச்சு?... அதுவும் பார்த்த சில நிமிஷத்துல?... எதன் அடிப்படையில் வந்தது இந்த காதல்? ம்ஹூம் என்ன கருமமே இப்படி போய் விழுந்திருச்சே?.... பரசுவுக்கு அவர்களின் கல்யாணத்தைப் போலவே மான்சியின் காதலும் பிடிக்காமல் போனது... என் அக்காவோட காதலுக்கு அவன் தகுதியானவனா?

பரசுவால் மான்சியின் காதலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.... அதைவிட காதலுக்காக தனது சந்தோஷத்தையே பலியிட்டது இன்னும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது... அப்படியென்ன அவனிடம் இருந்தது?... இப்படி ஒன்றுமேயில்லாத வாழ்க்கை வாழும் அளவிற்கு? ஏதோ முறையற்ற உறவு போல் மனதிற்குள் ஒரு கசப்பு...

கட்டிலில் இருந்து எழுந்தவன் சாமிக்கண்ணுவைப் பார்த்து “ தாத்தா நீ சொல்றதை நானும் இப்போ நம்புறேன்... அன்னைக்கு அவங்க கல்யாணத்துல நடந்ததை எல்லாம் ஒன்னுக்கொன்னு சேர்த்துப் பார்த்தா நீங்க சொன்னதுதான் உண்மைனு புரியுது... ஆனா தாத்தா என்னால இதை ஏத்துக்க முடியலை... பொறுக்கித்தமா கையை பிடிச்சி இழுத்தவனை காதலிச்சதும் இல்லாம... அவன் முடமா கிடக்கும் போது தியாகி மாதிரி கல்யாணமும் பண்ணிகிட்டது எனக்கு வெறுப்பா இருக்கு... எனக்கு இந்த காதல் கன்றாவியெல்லாம் சுத்தமா பிடிக்கலை.... அதனால இனிமேல் அவங்களைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க... என் அக்கா எங்கருந்தாலும் நல்லாருக்கனும்னு சாமிய வேண்டிக்கிறேன்... அவ்வளவுதான் என்னால முடியும்” என்று தீர்மானமாக சொன்னவன் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்

பரசுவுக்கு தெரியவில்லை..... காதல் எப்படி வந்தது? ஏன் வந்தது? எதற்காக வந்தது? என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று...




“ உடல்கள் விடைபெற்றாலும்....

“ உள்ளங்கள் விடைபெறாது....

“ அது தானே காதல்!



அலுவலகத்தில் சத்யனுக்கு என்று தனியாக எந்த வேலையும் இல்லையென்றாலும்... சொக்கலிங்கமும் ராஜாவும் ஒவ்வொன்றையும் அவனிடம் சொல்லிவிட்டே செய்தார்கள்... கிராண்ட் இறக்குமதி.... ஏற்றுமதி பற்றி சத்யன் தெரிந்துகொள்ளும் விதமாக இலகுவாக பேச்சுவாக்கில் சொல்வது போல் சொன்னார்கள்....

மான்சி எதிலும் கலந்துகொள்ளாமல் அவர்கள் பேசுவதையே ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தாள்... சத்யன் கூட தன்னை சிரமப்படுத்துவதாக எண்ணாமல் அப்பா தாத்தா சொல்வதை கேட்டுக்கொண்டு அவனுக்கு தெரிந்த பதிலை சொன்னான்...

மணி பதினொன்று ஆனதும் மான்சி சத்யனுக்கு வீட்டிலிருந்த ஜூஸை குடிக்க கொடுத்தாள்... ராஜா வந்து மகனை வீல்சேரில் அமர வைத்து தள்ளிக்கொண்டு பேக்டரியின் உள்ளே போனார்...

அங்கே பிரமாண்டமான கிரானைட் கற்கள் அளவெடுத்து சைஸ் வாரியாக அறுக்கப்பட்டு பாலீஸ் செய்யப்படுவதை சுற்றிக் காட்டினார்... ஊழியர்கள் அணைவரும் சத்யனை நட்புடன் வரவேற்க... தனது ஊனத்தை பெரிதுபடுத்தாமல் நட்புடன் பழகும் அவர்களை சத்யனுக்கு ரொம்பவே பிடித்துப் போனது...

அவனை அங்கேயே விட்டுவிட்டு ராஜா சென்றுவிட... சத்யன் எல்லோருடனும் வேலை சம்மந்தப்பட்ட விபரங்களை கேட்டபடி சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தான்.... படுக்கையே கதியென்று நரக வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு புதிதாய் ஒரு உலகத்தை அறிமுகம் செய்திருந்தாள் மான்சி

சத்யன் ரொம்பவே உற்சாகமாய் இருந்தான்... அடிக்கடி மான்சியின் கைகளை நன்றியோடு பற்றிக்கொண்டான்... அந்த நன்றியையும் மீறி அவன் பார்வையில் ஏதோவொன்று ஊடுருவி அவள் உள்ளத்துக்குள் நுழைய பார்த்தது... இப்போதெல்லாம் அடிக்கடி முத்தமிடுவதால் மான்சியின் கைகள் நேரகாலமின்றி அவனிடம் முத்தத்தை பெற்றுக்கொண்டது....

மதியம் ஒரு மணிக்கு இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்... சொக்கலிங்கமும் அவர்களுடன் புறப்பட்டார்.... ராஜி வாசலிலேயே காத்திருந்து மகனுக்கும் மருமகனுக்கும் ஆரத்தி சுற்றி வரவேற்க... சத்யன் சிரித்தபடி “ என்ன மம்மி வெட்டியா உட்கார்ந்துட்டு வர்றதுக்கெல்லாம் இவ்வளவு கிராண்டா வரவேற்பு குடுக்குறீங்க” என்று கேலியாக கூறினான்..

ஆரத்தி நீரைத் தொட்டு இருவரின் நெற்றியிலும் வைத்த ராஜி “ ஏன் அப்பு அப்படி சொல்ற? நீ பேக்டரிக்கு போனதே எங்களுக்கு பண்டிகை மாதிரிதான்” என்று சொல்லிவிட்டு அவர்களை உள்ளே அனுப்பினாள்

“ பாருங்க தாத்தா... நீங்களும் டாடியும் கம்பெனிக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க... மம்மி ஒரு நாளாவது இப்படி வரவேற்பு குடுத்திருப்பாங்களா? எனக்கு பார்த்தீங்களா? நான் எப்பவுமே ஸ்பெசல் தானே தாத்தா” என்று சந்தோஷத்துடன் கேட்டபடி சாப்பிட கைகழுவினான்..

“ பின்ன இளவரசர் நகர் வலம் போயிட்டு வர்றார்னா சும்மாவா? ராஜா இன்னைக்கு எல்லா தொழிலாளர்களுக்கும் பத்து பர்ஸன்ட் சம்பளம் ஏத்திட்டான்.. நீ கம்பெனிக்கு வந்ததுக்கு ஊழியர்களுக்கு ட்ரீட்.” சொக்கலிங்கத்தின் சந்தோஷம் வார்த்தைகளில் தெரிந்தது....

வாயில் இருந்த சாதத்தை விழுங்கிவிட்டு “ அப்போ நீங்களும் மான்சியும் தான் எனக்கு எதுவுமே தரலை போலருக்கு?” என்றவனின் பார்வை மான்சியின் இதழ்களுக்கு இடம்பெயர்ந்தது ...

கடைசியாக மோர் சாதத்தில் இருந்த சொக்கலிங்கம் பேரனின் பார்வையை கவனித்து குறும்பு சிரிப்புடன் “ நான் தரவேண்டிய பரிசையும் என் பேத்திகிட்டயே கேட்டு வாங்கிக்க சத்யா” என்றவர் எழுந்து சென்று கையை கழுவிவிட்டு “ நாளைக்கு காலையில டாக்டரை பார்க்க போகனும் மான்சி” என்று ஞாபகப்படுத்தி விட்டு தனது அறைக்கு சென்றார்.... 

சத்யன் மான்சியை குறும்புடன் பார்த்து “ தாத்தா சொன்னதை கேட்டயா? அவரோட பரிசையும் நீதான் தரனுமாம்... சும்மா நெத்தியில குடுத்து சமாளிச்சேன்னு வை... அப்புறம் நடக்குறதே வேற?” சத்யன் பொய்யாய் மிரட்ட...

மான்சி செங்கொழுந்தாக மாறி தலையை நிமிர்ந்து அவனைப் பார்க்காமல்... “ ம்ம் குடுக்கலைனா என்ன பண்ணுவீங்களாம்?” என்று கேட்க..

சத்யன் அவளையே உற்றுப் பார்த்தான்... அங்கம் அங்கமாக வருடியது அவன் பார்வை.... அவனிடம் பதில் இல்லாமல் போனதும் நிமிர்ந்தாள் மான்சி... அவன் பார்வை சென்ற திக்கை எல்லாம் வெட்கத்தால் மறைக்க முயன்று தோற்று தலையை மீண்டும் குனிந்து கொண்டாள்...

அவளின் அழகு வதனம் சத்யனின் சந்தோஷத்தை அதிகரிக்கவில்லை... தட்டில் கையை கழுவினான்.. பிறகு அவளை நோக்கி உதட்டை பிதுக்கி “ என்னால என்ன செய்யமுடியும் மான்சி? அதுக்குத்தான் வாய்ப்பே இல்லையே? நான் கேட்டது கிடைக்குமான்னு எதிர்பார்ப்போட பார்ப்பேன்.. ஆனா முத்தத்துக்காக உன்கிட்ட கெஞ்சமாட்டேன் மான்சி” என்றான் உறுதியுடன்...

சற்றுமுன் இருந்த இதம் சட்டென்று தொலைந்து போனது... தனது வார்த்தைகள் அவனை காயப்படுத்தி விட்டதை மிக தாமதமாகவே உணர்ந்தாள் மான்சி... விழிகள் குளமானது.. எட்டி அவன் விரல்களை பற்றியவள் “ என்னங்க இது... நான் சும்மா விளையாட்டுக்காக சொன்னேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பு கண்ணீர் கன்னங்களில் உருண்டது...

சத்யன் அவள் கன்னத்தில் உருளும் கண்ணீரைப் பார்த்தான் ... “ மான்சி இப்ப ஏன் அழற? நானும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்” என்று உதடுகள் சொன்னாலும் அவன் இன்னும் சரியாகவில்லை என்று முகம் சொன்னது...

மான்சி உணவை விரல்களால் அலைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.. எப்படி கொஞ்சநேரத்தில் எல்லாவற்றையும் மறந்தேன்.. எந்த வார்த்தை சத்யனை பாதிக்கும் என்றுகூட தெரியாமல் பேசிவிட்டோமே’ மான்சி யோசிக்கும் போதே...

சத்யன் “ வேலு ” என்று உரக்க அழைக்க—வேலு ஓடிவந்து சத்யனின் பின்னால் நின்றான் .. “ வேலு என்னை ரூமுக்கு அழைச்சிட்டுப் போ... மான்சி சாப்பிட்டு வரட்டும்” என்று உத்தரவிட... “ சரிங்கய்யா” என்றவன் சத்யனின் சேரை தள்ளிக்கொண்டு லிப்ட்டை நோக்கி செல்ல...

மான்சி சாப்பிடுவதை விட்டுவிட்டு அவன் செல்வதையேப் பார்த்தவள்... தானும் கைகழுவிவிட்டு எழுந்தாள்... தற்செயலாக ராஜியின் அறையை நோக்கியவள் அங்கே கதவில் சாய்ந்து நின்று கண்ணீருடன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்... மான்சி சட்டென்று உடைந்து போனவளாய் “ அத்தை” என்ற கதறலுடன் ஓடிச்செல்ல.. ராஜி மான்சியை நோக்கி கையை நீட்டி அணைத்துக்கொண்டாள்...

இரண்டு பெண்களும் சத்தம் வெளியே வராமல் மெல்ல கேவியழ... வேலைக்காரர்கள் ஒன்றிரண்டு பேர் நின்ற இடத்திலிருந்து இவர்களை கவனித்தபடி தங்களது கண்ணீரை துடைத்துக்கொண்டனர்...

மருமகளின் கூந்தலை இதமாக வருடிய ராஜி “ எனக்கத் தெரியும் மான்சி நீ சொன்னது சாதரணமாத்தான்.... ஆனா சத்யனோட நிலைமை அதை மாத்தி யோசிக்க வச்சிருக்கு...” என்றவள் தன் தோளில் இருந்த மான்சியின் முகத்தை நிமிர்த்தி “ உன்னால் காயம்பட்ட மனசை உன்னாலதான் சரி பண்ணமுடியும்.. போ மான்சி” என்று மாடிப்படிகள் வரை அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்தாள்..

மான்சி விழிநீரை விரலால் சுண்டிவிட்டு மாடியேறிச் சென்று சத்யனின் அறைக் கதவை திறந்து உள்ளே சென்றாள்.. சத்யன் டீசர்ட் ஷாட்க்கு மாறி முதுகுக்கு தலையணை வைத்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்து சிகரட்டை புகைத்து கொண்டிருந்தான்...

மான்சி அமைதியாக அவனருகே சென்று அருகில் அமர்ந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்..... விரல்கள் டீசர்ட்டுக்குள் நுழைந்து அகப்பட்ட ரோமங்களை அள்ளி அளந்தது...விழியில் வழிந்த நீர் சத்யனின் சட்டையை நனைத்தது.. ..

அவ்வளவு நேரமாக அமைதியாக புகைத்தவன் அவளின் மெல்லிய விசும்பலில் களைந்தான்.. “ உன்னை அழாதேன்னு சொன்னேன் மான்சி” என்றவன் சிகரெட்டை சுண்டியெறிந்து விட்டு அவள் முகத்தை நிமிர்த்தி “ இந்த மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு அழுவுறதை நிறுத்து மான்சி.. நீ அழுதாலே எனக்கு உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுது ” என்றவன் அவளை தனது கையால் சுற்றி வளைத்தான்...

சரி என்பது போல் தலையசைத்த மான்சி அழுத கண்ணீரை குழந்தையைப்போல் அவன் சட்டையிலேயே முகத்தை இப்படியும் அப்படியும் புரட்டி துடைத்துக்கொண்டு மீண்டும் நிமிர்ந்து அவனைப்பார்த்து சிரிக்க....

சற்றுமுன் சத்யனிடம் இருந்து தொலைந்துபோன புன்னகை மீண்டும் வந்து தடம் பதிக்க “ மான்சி.... மான்சி ” என்று சிரித்தபடி அவள் முகத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு... “ மான்சி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் உன்னை அழ வைக்கனும்னு தான் கல்யாணம் பண்ணதே... ஆனா நான் நினைச்சதை ஒரு பர்ஸன்ட் கூட என்னால சாதிக்க முடியலை... உன்னோட கண்ணீரைப் பார்த்ததுமே உள்ளுக்குள்ள ஏதோ பிசையுற மாதிரி வலிக்குது மான்சி... ஏன்னே எனக்கு புரியலை” என்றவன் சற்றுநேரம் அமைதியாக... இருக்க மான்சியும் எதுவும் சொல்லாமல் அவன் நெஞ்சிலேயே தஞ்சமடைந்திருந்தாள்..

சற்றுப் பொருத்து அவனாகவே மீண்டும் ஆரம்பித்தான்.... “ அன்னிக்கு கூட அப்படித்தான் மான்சி உன் பார்வையில ஒரு அழைப்பு இருந்துச்சு... அதனாலதான் கையை பிடிச்சி கூப்பிட்டேன்... உன் தம்பி என் கழுத்துல கத்தி வைப்பான்னு எதிர்பார்க்கலை... எனக்கிருந்த வெறிக்கு அவனைத் தூக்கி பந்தாடிட்டு உன்னை தூக்கி கார்ல போட்டுகிட்டு வந்திருப்பேன்... அந்தபய என்னை தடுத்திருக்கவே முடியாது... ஆனா நீ விட்ட பாரு கண்ணீரு? அது அதுதான் என்னை கட்டுப்படுத்துச்சு... அந்த நிமிஷம் ஏன் திரும்பி வந்தோம்னு தெரியாமலேயே கார்ல போய் உட்கார்ந்தேன்... உன்னை மிஸ் பண்ணது ரொம்ப ஆத்திரமா வந்துச்சு.... அதே டென்ஷன்ல இருந்ததால என் ப்ரண்ட் ப்ருத்வி கார்ல வச்சிருந்த சரக்கை எடுத்து குடிச்சத கூட கவனிக்காம இருந்துட்டேன்... அதனால்தான் இந்த விபத்து.. எனக்கும் இந்த நிலைமை” ஏதோ கவனத்தில் சொல்பவன் போல் சொல்லிக்கொண்டே போனவன் அப்படியே நிறுத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்து “நீ அப்படிப்பட்டவள் இல்லைனு உன் கண்ணீரைப் பார்த்த அன்னிக்கே புரிஞ்சது ஏன் மான்சி அன்னிக்கு அப்படிப் பார்த்த?..... அப்புறம் ஏன் அப்படி அழுத? அந்த பார்வை....அது அது ஏன் அப்படி மான்சி?” சத்யனின் பார்வையில் ஆர்வம் வார்த்தைகளில் தேடல்......

என்ன சொல்வாள் மான்சி?... முதல் பார்வையின் அர்த்தத்தையே அழைப்பாக எண்ணி அழைத்தவனுக்கு என்ன பதில் சொல்வது?... நான் அப்படிப்பட்ட பெண் இல்லையென்று என் கண்ணீரை கண்டு யூகித்தவனுக்கு அந்த பார்வையின் அர்த்தம் மட்டும் ஏன் புரியாமல் போனது?... அன்றே அந்த நிமிடமே என் மனதில் நிகழ்ந்தது போல் இவன் மனதிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காதோ? இப்படி நெருங்கிய அணைப்பிலும் கூட பார்வையின் அர்த்தம் புரியவில்லை என்று சொல்பவனுக்கு எதை சொல்லி புரியவைப்பது?
அவன் நெஞ்சிலிருந்து நிமிர்ந்து எழுந்து அமர்ந்தவள் அவனைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து “ தெரியலையே...” என்று மட்டும் சொன்னாள்..

அவள் பக்கம் திரும்பிய சத்யன் “ தெரியலையா? அன்னிலேருந்தே தெரியலையா? அல்லது இன்னிக்கு நான் கேட்டதும் தெரியலையா?” அம்புகள் போல் வந்து குத்தியது வார்த்தைகள்...

மான்சி மறுபடியும் இல்லை என்பது போல் தலையசைத்தாள்...

சத்யன் தலையணைக்கு கீழே கைவிட்டு சிகரெட் கேஸை தேடி எடுத்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து தன் உதட்டில் பொருத்திக்கொண்டு லைட்டரால் பற்றவைத்து புகையை நெஞ்சின் ஆழம்வரை இழுத்து நிதானமாக வெளியே விட்டவன் “ தெரியலைனு சொல்ற வார்த்தை பொய்னு எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்... அப்புறம் ஙன் மான்சி இந்த வேஷம்?” தேள் கொடுக்காய் மாறியிருந்தது சத்யனின் பேச்சு..

“ நிஜமாவே எனக்கு தெரியலை” மான்சி இன்னும் அவன் எதிர்பார்த்த பதிலை சொல்லவில்லை...

சத்யனின் கண்கள் இரைதேடும் புலியின் கண்களைப் போல ஜொலித்தன... பக்கத்து மேசையிலிருந்த ஆஷ்ட்ரேயை எட்டி எடுத்து சிகரெட் சாம்பலை அதில் தட்டியவன் “ உனக்கு தெரியாட்டி என்ன மான்சி? எனக்குத் தெரியும்.... முதல் பார்வையிலேயே என்மேல் உனக்கு லவ்னு சொல்ற?... அப்படித்தானே மான்சி?... அந்த பார்வையின் அர்த்தம் அது தானே?” சத்யன் கேட்டதும்...

மான்சியின் உடலில் ஒரு நடுக்கம்... வார்த்தைகள் ஏதுமில்லை அவளிடம்... மவுனமாய் குலுங்கின அவள் முதுகு...

“ மறுபடியும் அழுகை.... ச்சே” என்று ஆத்திரமாய் கத்தியவன் “ இதோ பார் மான்சி எனக்கு இந்த காதல் மேல எல்லாம் நம்பிக்கையும் கிடையாது.. ஆர்வமும் கிடையாது.. அன்னிக்கு உடம்பு நல்லாருந்தப்பயும் சரி இப்பவும் சரி... இப்போ முடமாகி கிடக்கும் போதும் சரி எனக்கு காதல் மேல நம்பிக்கை இல்லை... இது நான் சந்திச்ச பொண்ணுங்களால் கூட இருக்கலாம்.. அதனால உன் காதல் மேலயும் நம்பிக்கை இல்லை மான்சி... நான் உன்னை மேரேஜ் பண்ணது என் கழுத்துல கத்தி வச்ச பரசுவை பழிவாங்கனும்.. எனக்கு உன்னை தர சம்மதிக்காத நீ காலம் பூராவும் அழனும்... அதுக்காகத்தான் மேரேஜ் பண்ணேன்.. பரசுவை பழிவாங்கிட்டேன்னு தான் நெனைக்கிறேன்... ஆனா உன்னைத்தான் என்னால அழ வைக்க முடியலை மான்சி... என்னால அது மட்டும் எப்பவுமே முடியாது போலருக்கே” வேதனையுடன் தன் நெற்றியில் தட்டிக்கொண்டான்

அவன் வார்த்தைகளின் முரண்பாடு அவனுக்கே புரியவில்லை... தாயாய்....தாதியாய்.... தோழியாய்... இருக்கும் மான்சி காதலியாய் தன்னை எப்போது கொஞ்சுவாள் என்று ஏங்குவதும் அவன்தான்.... உன் காதலிலும் நம்பிக்கை இல்லை... என்னிடமும் காதல் இல்லையென்று சொல்வதும் அவன்தான்.. இந்த முரண்பாடு தீரும் போது சத்யனின் நிலை எப்படியிருக்கும்?

சத்யனுக்கு அழக்கூடாதே.... மான்சி எழுந்து பாத்ரூம் சென்று சற்றுநேரம் குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து கழுவினாள்... சுவற்றில் சாய்ந்து நின்று தன் மனதை நிலைப்படுத்திக் கொண்டாள்... சற்றுநேரம் கழித்து முகத்தை டவலால் துடைத்தபடி வெளியே வந்தபோது சத்யனின் மடியில் சிறிய டீப்பாய்.. அதன் மேல் ஒரு ஸ்காட்ச் பாட்டில்.. பக்கத்தில் ஒரு க்ளாஸூம் தட்டில் சிப்ஸூம்... வேலு சங்கடமாய் தலைகவிழ்ந்து நின்றிருந்தான்..

மான்சி அதிர்ச்சியுடன் பாத்ரூம் வாசலிலேயே நிற்க... சத்யன் அவளை ஏறிட்டுப் பார்த்து “கூடாதுன்னு சொல்லாத மான்சி... எனக்கு இப்போ இது அவசியம் வேணும்” என்று கெஞ்சுதலாய் கூறியதும்...

மான்சி திக்பிரமை கலைந்து மெல்ல நடந்து கட்டிலருகே வர.. . “ இங்க வராத மான்சி... கொஞ்சநேரம் வெளிய இரு ப்ளீஸ்” மறுபடியும் கெஞ்சினான்...

மான்சி என்ன சொல்வது என்று புரியாமல் தவித்து நின்று... சரியென்று தலையசைத்து வெளியே போக திரும்பியவள்.. இரண்டு எட்டு எடுத்து வைத்துவிட்டு சட்டென்று நின்றவள் “ இல்லை பரவாயில்லை நீங்க குடிங்க.. நான் இங்கேயே இருக்கேன்” என்று ஒரு சேரை இழுத்து கட்டில் அருகே போட்டு அமர்ந்தாள்...

சத்யன் சிலவிநாடிகள் அவளை முறைத்துவிட்டு... பிறகு அலட்சியமாக தோள்களை குலுக்கியபடி.. ஸ்காட்ச் பாட்டிலி மூடியைத் திறந்து க்ளாஸில் அளவாக ஊற்றினான்.. மான்சியைப் பார்க்காமலேயே முதலில் சிப் செய்தவன் இரண்டாவது எடுக்கும் போது மான்சியை திரும்பிப் பார்த்தான்...

இரண்டு கையிலும் தலையை தாங்கி கவிழ்ந்து இருந்தாள்... சத்யன் சிறிதுநேரம் வரை முறைப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்... மான்சி தலையை நிமிரவேயில்லை... க்ளாஸை டீபாயில் வைத்தவன் வேலுவைப் பார்த்து ஜாடை செய்ய... அதற்காகவே காத்திருந்தவன் போல் வேலு உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தினான்....

இன்னமும் மான்சி நிமிரவில்லை.. தலையை தாங்கியகைகளை முழங்கால் முட்டிகளில் ஊன்றியிருந்தாள்... அழுகிறாளா என்றுகூட தெரியவில்லை.... “ மான்சி” சத்யன் அழைத்தான் மிக மிக மென்மையாக...

உடனே நிமிர்ந்தது மான்சியின் முகம்... அவள் அழவில்லை.. ஆனால் கண்கள் சிவந்து போயிருந்தது... அழுகையை அடக்கியதாலோ?... அவள் பார்க்க அந்த அறைக்குள் மது பாட்டிலும் இல்லை.. வேலுவும் இல்லை...

சத்யன் தன் கைகளை விரித்தான... அமைதியாய் ஒரு புன்னகை அவன் முகத்தில்... “ வா மான்சி” என்று அவன் அழைத்ததும்......

மான்சியின் கால்களுக்கு இறக்கைகள் முளைத்தது.. ஒரே தாவாக தாவி கட்டிலில் ஏறி சத்யனின் மீது பாதியாய் படர்ந்தாள்... எட்டிச் சென்று அவன் உச்சியில் முத்தமிட்டாள்... நெற்றிக்கு வந்தாள்... அங்கே அழுத்தி அழுத்தி முத்தமிட்டாள்... உதடுகளை பக்கவாட்டில் வலது பக்கமாக திருப்பி கன்னத்தில் இறங்கினாள்... உதடுகளைப் புரட்டியெடுத்தாள்... மீண்டும் நெற்றி வழியாக ஏறி இடது கன்னத்துக்கு வந்தவள் அங்கே சற்றுநேரம் இளைப்பாறினாள்... பின்னர் மீண்டும் ஆரம்பித்தாள்... இம்முறை சற்று சத்தமாக முத்தமிட்டாள்...

முரட்டு கன்னத்தை மான்சியின் மென் இதழ்கள் பதப்படுத்திக் கொண்டிருந்தன

சத்யனின் கன்னங்கள் ஈரமானது... கண்களை மூடிக்கொண்டு கைகளால் அவள் முதுகை பின்னிக்கொண்டு கிடந்தான்... ஒரு பெண்ணின் முத்தத்திற்கு இவ்வளவு சக்தியா? சத்யன் சர்வாங்கமும் ஒடுங்கிப்போய் கிடந்தான்... எத்தனைப் பெண்கள் இவனை முத்தமிட்டிருக்கிறார்கள்.... இவன் எத்தனை பெண்களுக்கு முத்தம் கொடுத்திருக்கிறான்.. அதிலெல்லாம் இல்லாத ஏதோவொன்று அவனை மயக்கி வீழ்த்தியது... நெஞ்சுக்குள் அருவிகளின் ஹோவென்ற இரைச்சல் கேட்டது.... அவளை அணைத்திருந்த கைகள் மேலும் இறுக்கியது... துவளும் மனதை எப்படியாவது நிலைப்படுத்த முயன்றான்...

மான்சியின் இரு இதழ்களும் அவனுக்கு ஈரேழுலகத்தையும் சுற்றிக் காட்டியது.... தாடையிலிருந்து கழுத்துக்கு இறங்கியவள் அங்கே இஞ்ச் இஞ்சாக இதழ் பதித்தாள்... நெஞ்சுக்கு வந்தவள் பட்டன் விடுவித்து தெரிந்த சொற்ப இடத்தில் தன் இதழ்களை வைத்துக்கொண்டு சற்றுநேரம் அப்படியே கிடந்தாள்....


No comments:

Post a Comment