Saturday, January 2, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 2

விழுப்புரத்திலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் பெரம்பலூர்க்கு முன்பே பிரிந்து செல்லும் கிளைச்சாலையில் சென்றால் வேப்பூர்... இதன் சுத்துப்பட்டு கிராமங்கள் அனைத்திருக்கும் விவசாயம் தான் குலத்தொழில் என்றாலும் இவர்களுக்கெல்லாம். சீசனுக்கு ஏற்றவாறு மாற்றுத் தொழிலும் உண்டு...

மாதனூர் கிராமமும் அப்படித்தான்... விவசாயம் பொய்க்கும் நாளில் இந்தபக்கம் அரியலூர் ரயில்நிலையம்.. அந்தபக்கம் வாலிகண்டாபுரம் வேப்பூர் பேருந்துநிலையம் என பயணிகளுக்கு நொறுக்குத்தீனி விற்கும் தொழில் அமோகமாக ஓடும்...

பத்தொன்பது வயது பரசுராமனுக்கும் அப்படித்தான்.... சகலவிதமான விவசாய வேலைகளும் தெரியும்... விவசாய வேலைகள் இல்லாத நாளில் தனது பாட்டிக்கு சொந்தமான சிறிய தென்னந்தோப்பில் இளநீர் இறக்கி அங்கேயே கொட்டகை போட்டு வியாபாரம் செய்வேன்...



பரசுராமன் நல்லவன்.... கருப்பாக இருந்தாலும் அழகன்... வாலிப முறுக்கில் ஊர் சுற்றாமல் தனது ஒவ்வொரு நிமிடத்தையும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியென கொண்டிருப்பவன்... ஆனாலும் அவனுக்கென்று நல்ல துணிகளைக் கூட வாங்கிகொள்ளாமல் வங்கியில் சேர்த்து வைக்கிறான்...

எதற்காக? அவனுடன் பிறந்த ரதிதேவி ஒருத்திக்காகத்தான் பரசுவின் உழைப்பு மொத்தமும்... அக்காவுக்காகவே வாழ்பவன்... சிறுவயதில் தாய் தந்தையை ஒரு விபத்தில் இழந்த இருவரும் தாய்வழி பாட்டியின் ஆதரவில் வாழ்பவர்கள்....

பரசுவின் அக்கா மான்சி இவளைப் பற்றி என்னவென்று சொல்வது? பிரம்மனே தனது சொந்த கவணத்தில் இழைத்து இழைத்து செதுக்கிய சந்தனச் சிலை என்றா? மானிடப் பிறப்பில் தனது திறமைக்கு சவாலாக எண்ணி இவளைப் படைத்தானோ பிரம்மன்? வெண்மையா மஞ்சளா என்று இனம் காணமுடியாதொரு நிறம்.... சராசரி பெண்களைவிட இவள் உயரமா? அல்லது சராசரி பெண்கள் இவளைவிட குள்ளமா? அலையலையாக பரந்து விரிந்து இடையைத் தொடும் கூந்தல்... இவளின் கூந்தலில் ஏறிக்கொள்ள பூக்கலெல்லாம் போட்டியிடுமோ? இவளின் வளைந்த புருவமத்தியில் வசிக்க ஏங்குவான் மன்மதனும்?... அகன்ற விழிகளை மான்விழி என்பதா மீன்விழி என்பதா? அந்த நாசிகளின் கூர்மையில் மயங்கியவர்களை கணக்கில் கொள்வது எப்படி? மேலுதடும் கீழுதடும் இணைந்து குவிந்து இருந்தால் ஒரு அழகுதான்... அவை இரண்டும் பிரிந்திரிந்து பேசும்போதும் சிரிக்கும்போதும் எதிரில் இருப்பவர்களின் கதி? குவளைப் பூவைப் போன்ற மெல்லிய காதுகளில் அணிமணியின் தேவையா? ம்ம் தேவைதான்,, அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் அந்த அணிகளும் ஆடினால்... கவிஞர்கள் பிழைப்பார்களே? போன்ற அழகு என்பது இதுவா?... பார்த்தவர்களின் பேச்சு? ஆமாம் ஆமாம் இதுதான் பேரழகு... பார்க்காதவர்களின் பேச்சு? இதைவிட அழகா? இருக்கவே முடியாது...

ஆமாம் அந்த வெண்சங்கு கழுத்தை படைக்க எங்குபோய் படித்துவந்தான் பிரம்மன்? அதன்கீழே பார்வையை கொண்டு செல்லுமுன் பரசுவின் நன்கு தீட்டிய இளநீர் சீவும் வெட்டரிவாளை நினைவில் கொள்வது நல்லது....

எப்போதும் பாவாடை தாவணியில் சிறகடிக்கும் இந்த சிட்டுக்கு ஏற்றவன் இந்த ஈரேழுலகிலும் இல்லை என்பது பார்த்தவர்களின் கருத்து.... பார்க்காதவர்கள்.... ம்ஹ்ம் எங்காவது எவனாவது பிறந்திருப்பான்

இவ்வளவு அழகை கொடுத்த ஆண்டவன் இவளுக்கு அமைதியையும் கொடுத்தது தான் ஆச்சரியம்?... எப்போதும் அமைதியும் அழகும் ஒன்றாய் இருந்தால் அங்கே துளியாவது கர்வமிருக்கும்... ஆனால் மான்சியிடம் இருந்ததென்னவோ பொறுமையும் சகிப்புத்தன்மையும் இரக்க குணமும் தான்...

பரசுவை விட பதிநான்கு மாதம் மூத்தவள் மான்சி... பரசுவுக்கு தனது அக்காவை காணும்போதெல்லாம் கர்வத்தையும்... பாட்டிக்கு தனது பேத்தியைக் காணும்போதெல்லாம் பயத்தையும் கொடுக்கும் அழகிய மலர் மான்சி... மொத்தத்தில் சேற்றில் முளைத்த அழகான செந்தாமரை

கிணறுகளுக்கு தோட்டா வைக்கும் வேலை செய்துவந்த அப்பா அவர் வைத்த தோட்டாவிலேயே மாட்டிக்கொண்டு இறந்துவிட... போலீஸ் விசாரனை என்று வீட்டுக்குள் நுழைந்தது... சட்ட விரோதமாக வெடிமருந்துப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக விசாரனைக்கு என்று அம்மாவை போலீஸ் அழைத்துச்செல்லும் போது மான்சிக்கு வயது எட்டு பரசுவுக்கு வயது ஆறரை... போலீஸ் தாயை அழைத்துச்செல்லவதை கண்ணீருடன் வேடிக்கைப் பார்த்தனர் இருவரும்...

பதினைந்து நாள் விசாரனை அது இதென்று அலைக்கழிக்கப்பட்ட இவர்களின் அம்மா வீட்டுக்கு வந்ததும் சந்தோஷமாகத்தான் பிள்ளைகளை கொஞ்சினாள்... ஆனால் பிள்ளைகள் விடிந்து எழுந்து பார்க்கும்போது உத்திரத்தில் தொங்கிய அம்மாவின் சடலத்தைத் தான்...

ஊர்மக்களில் சிலர் கணவனைப் பிரிந்த துக்கம் என்றார்கள்... சிலர் விசாரனைக்கு போன இடத்தில் போலீஸ்காரன் எவனாவது கையை வச்சிருப்பான் என்றார்கள்... எதற்கும் எந்த முடிவையும் எடுக்க முடியாத தெரியாத பாட்டி மகளையும் அடக்கம் செய்துவிட்டு பேரக்குழந்தகளை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊர்க்கு வந்துவிட்டார்..

இப்போது பாட்டி மான்சி பரசுராமன் என்று சிறிய குடும்பம் என்றாலும் அடுத்தவரிடம் எதற்காகவும் கையேந்தாமல் வாழ்கிறார்கள்.... பரசுவின் தன்மானமும் மான்சியின் அமைதியும் பொறுமையும் அந்த ஊரில் அவர்களுக்கு நன்மதிப்பை பெற்றுத்தந்திருந்தது

பரசு இளநீர் வியாபாரத்துக்கு போய்விட்டான் என்றால் மான்சி வீட்டில் சமையலை முடித்துவிட்டு பாட்டியுடன் சேர்ந்து தென்னங்கீற்றுகளை கிழித்து விளக்குமாறு செய்வது தான் வேலை... பரசுவுக்கு மதிய உணவு பாட்டிதான் எடுத்துச்செல்ல வேண்டும்... தனது அக்கா எடுத்துவர பரசு அனுமதிப்பதில்லை... பல வாகனங்கள் செல்லும் சாலை என்பதாலும் அந்த வழியில் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்கும் காரணத்தாலும் மான்சி தோப்புப் பக்கம் வரமாட்டாள்...

ஆனால் இன்று வழக்கமாக சப்பாடு எடுத்துச்செல்லும் பாட்டிக்கு மூட்டுவலி என்று படுத்துவிட மான்சி தனது தம்பிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு தோப்புக்குகிளம்பினாள்...

அரக்கு நிற பாவாடை ரவிக்கைக்கு மஞ்சள் நிற தாவணி அணிந்து ஒரு வயர் கூடையில் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்தவளை கண்டதும் பரசுவிற்கு கோபம் தான் வந்தது

“ உன்னை யாருக்கா எடுத்துட்டு வரச்சொன்னது? அம்மாச்சி எங்கபோச்சு?” என்று எரிந்துவிழுந்த தம்பியைப் பார்த்து அமைதியாக புன்னகைத்த மான்சி

“ அம்மாச்சிக்கு பயங்கரமா கால்வலி பரசு... அதான் நான் எடுத்துட்டு வந்தேன்... நீ கிணத்தடிக்குப் போய் கைகால் கழுவிட்டு சாப்பிடு... கொஞ்சநேரம் நான் கடையைப் பார்த்துக்கிறேன் ” என்றாள்

“ வேனாம்க்கா நான் இங்கயே உட்கார்ந்து சாப்பிடுறேன்... நீ கொட்டகைக்கு பின்னாடி போய் உட்காரு” என்ற பரசுவைப் பார்த்து மறுபடியும் ஒரு அமைதி புன்னகை...

மான்சியின் அமைதிப் புன்னகைக்கு எதிரில் இருப்பவர்களையும் அமைதிபடுத்தும் சக்தியுண்டு.... அப்படித்தான் பரசுவையும் அமைதிப்படுத்தி சாப்பிட அனுப்பியது அந்த புன்னகை...

மான்சி கடையில் இருந்த பிளாஸ்டிக் பெஞ்சில் அமர்ந்தாள்... பைக்கில் சென்ற ஒரு ஜோடி இளநீருக்காக நிறுத்த... பரசு சீவி வைத்த இளநீரில் பொத்தல் போட்டு அதில் ஸ்ட்ராவை நுழைத்து கொடுத்தாள்... பணம் குடித்துவிட்டு அவர்கள் கிளம்ப மீண்டும் அமர்ந்துகொண்டாள்...

அப்போது ரோட்டின் மறுபுறம் ஒரு கார் வந்து நிற்க்க இருவர் இறங்கி அதில் ஒருவன் மட்டும் ரோட்டை கடந்து இளநீர் கடையை நெருங்கினான்... இளநீர் குடிக்கத்தான் வருகிறான் என்று தோன்ற மான்சி எழுந்துகொண்டாள் ... தன்னை நோக்கி வரும் அவனை கவனித்தாள்... அவனது வித்தியாசமான ஹேர் ஸ்டைல் அவளை ஈர்க்க அவனையேப் பார்த்தாள்... வெயிலுக்காகப் போட்டிருந்த ரேபன் கிளாஸை கழட்டி சட்டையில் மாட்டிக்கொண்டு தனது நீளமான தலை முடியை விரல்களால் கோதியபடி காதில் போட்டிருந்த வளையத்துடன் வந்தான் அவன்...

அவனும் நெருங்கியதும் தான் கண்டான் போல் இந்த அழகியை... ஒருநிமிடம் அப்படியே நின்றே விட்டான்.... “ இளநீ வேனுமா சார்?” என்ற அவளின் கிடார் வாசிப்பில் மீண்டும் உயிர்பெற்று அருகில் வந்து ஆமாம் என்று தலையசைத்தான்

அவள் குனிந்து இளநீரை எடுக்கும் நேரத்தில் மீண்டும் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டான்... அப்போதுதான் அவளை அக்கு அக்காக ரசிக்கமுடியும்? அவள் கொடுத்த இளநீரை வாங்கி உறிஞ்சியபடி கூலிங்கிளாஸ் வழியாக அவளை உரித்துப் பார்த்தான்...

ஏற்கனவே ஏறியிருந்த மது போதையும் காமமாக பேசிக்கொண்டு வந்ததும் சேர்ந்து மான்சியின் மதர்த்த உடல் மேலும் போதையேற்றியது... இவளைவிட அழகிகளை பார்த்திருக்கிறான் தான் ஆனால் இதுவேறு... அவளின் ஒவ்வொரு அங்கத்தையும் தொட்டுப்பார்க்க துடித்தது அவன் கரங்கள்...

இளநீர் முடிய தூக்கி வீசியவன் “ இன்னொன்னு குடு” என்றான்...

அவன் பார்வை தன்னைவிட்டு நகரவில்லை என்றதும் மான்சிக்கு அவன்மீது கோபம் வந்தது தான்... ஆனால் அதையும் மீறிய ஏதோவொன்று அவன் பார்வையை தவிர்க்க விடாமல் அவளை அங்கேயே நிற்க்க வைத்தது... இன்னொரு இளநீரை எடுத்துக் கொடுத்தாள்... அவள் விரல்களை அழுத்தமாக வருடியபடி வாங்கிக்கொண்டான் சத்யன்...

சட்டென்று திடுக்கிட்டு விரல்களை விலக்கிக் கொண்டாள்... ‘ எவ்வளவு துணிச்சல்? என்னமோ அவனுக்கும் எனக்கும் பலநாள் பழக்கம் போல சுலபமா தொடுறான் பாரு?’ மான்சியின் மனம் எண்ணியது... ஆனால் அவன் விரல் பட்ட இவள் விரல்கள் முதன்முறையாக ஒரு ஆணின் தீண்டலில் சிலிர்த்து நடுங்கியது... இதுவரை மான்சி உணராத சிலிர்ப்பு உடலெங்கும் பரவியிருந்தது

ஆனால் சத்யனின் கணக்கு வேறாக இருந்தது... தனது பார்வையை தாங்கி நிற்க்கும் இவளுக்கு தூண்டில் போட்டால் நிச்சயம் மாட்டுவாள்.... இரண்டாவது இளநீரை பாதி குடித்தவன்.. குடிப்பதை நிறுத்திவிட்டு “ இந்த கடை உன்னோடதா?” என்று கேட்க...




மான்சி பட்டென்று நிமிர்ந்து பார்த்து அதேவேகத்தில் தலை கவிழ்ந்தாள்... இது போன்ற கவர்ச்சியான கம்பீரமான ஆண் குரலை அவள் இதுவரை கேட்டதேயில்லை.... அவள் தலை ஆமாம் என்று அசைந்தது....

சத்யன் இரண்டடி முன்னால் வந்து “ என்கூட கார்ல் வர்றியா? மேட்டர் முடிஞ்சதும் நானே வேற வண்டி ஏற்பாடு பண்ணி அனுப்பிர்றேன்?” என்று ரகசியமாக கேட்டான்..

மான்சி குழப்பமாக நிமிர்ந்து பார்த்தாள்... எங்கே வரனும்? என்ன மேட்டர் முடியனும்? இவன் ஏன் மறுபடியும் திரும்ப அனுப்பனும்? இவ்வளவு நேரமாக அவனது அருகாமையில் ஏற்பட்டிருந்த ஒருவித மோனநிலை கலைந்து சட்டென்று மான்சியைச் சுற்றிலும் தீப்பற்றிக் கொண்டது போன்ற எரிச்சல்....

அவளிடம் பதில் வராததால் இன்னும் கொஞ்சம் நெருங்கி “ நிறைய பணம் தர்றேன்.... உனக்கு விருப்பம்னா ரெண்டு மூனுநாள் என்கூடவே தங்கிட்டு கூட வரலாம்” மீண்டும் தூண்டிலை வீசினான் பணம்படைத்தவன்....

அவனின் எண்ணம் பட்டென்று தெளிவாக திகைப்புடன் அவனையும் அவன் வந்த காரையும் மாறிமாறிப் பார்த்தாள்....

சத்யனுக்கு இப்போது அவசரத்தேவை ஒரு பெண்... அது இந்த அழகியாக இருந்தால் ரொம்ப நல்லது.... போதை கண்களை குருடாக்கியது... “ என்கூட இன்னும் நாலுபேர் இருக்காங்க.. ஆனா உனக்கு பிடிக்கலைன்னா எனக்கு மட்டும் கம்பெனி கொடுத்தாப் போதும்... என்ன சொல்ற? ” என்றபடி நெருங்கினான்....

மான்சி பின்னால் நகர்ந்து “ இ....ல்....ல.... நீங்...க” முடிக்கவில்லை அவள்... சத்யன் அவள் கையைப்பிடித்து இழுத்து “ என்ன இல்ல? உனக்கு என்னை பிடிக்குதுன்னு நீ பார்க்குற பார்வையே சொல்லுது.... பிறகென்ன வா?” என்று தன் பக்கமாக இழுத்தான்...

மான்சி ரொம்பவே மெல்லிய உடல் கொண்டவள்... அவன் சுண்டி இழுக்கவும் சட்டென்று சரிந்தாள் அவன் மேலேயே ... அவன் வளைத்து அணைத்தபடி கொட்டகைக்கு வெளியே இழுக்க... இவள் திமிறி விடுபட முயன்றாள்... சத்யனுக்குள் இருந்த போதையும் காமமும் அவளை பிடிவாதமாக சுகிக்க துடித்தது... பிடியை இறுக்கினான் ...

அப்போது அவன் கழுத்தில் ஏதோ ஊர்வது போல் இருக்க... சட்டென்று பக்கவாட்டில் பார்வையைத் திருப்பினான்.... பரசுதான் அவன் கழுத்தில் கூர்மையான வெட்டரிவாளை வைத்திருந்தான்.... அவன் கண்கள் ரத்தமென சிவந்து நெருப்பை கக்கியது....

“ எடுடா கைய? இது என்ன ஜவுளிக்கடை பொம்மைனு நெனைச்சயா? எவன் வேனும்னாலும் தொட்டுப் பார்க்க.... சாமிடா இவ.... என் அக்கா அம்மன் சாமி.... இவளைத் தொடுறவன் இன்னொரு சாமியாத்தான் இருக்கனும்... உன்னைமாதிரி பொறுக்கி பொறம்போக்கு இல்லை” என்றவன் சத்யன் அசையாமல் நிற்க்கவும் கழுத்தில் இருந்த அருவாளை இன்னும் அழுத்தி “ கையை எடுடா... இல்லேன்னா ஒரே சீவுதான்... தலைவேற முண்டம் வேறன்னு ஆயிடுவ” என்று கர்ஜித்து அரிவாளை அழுத்தி பதித்தான் ...

சத்யன் கழுத்தில் தோல் கிழிப்பட்டு லேசாக ரத்தம் கசிந்தது... ஆனாலும் அசையாமல் நின்றவன் திரும்பி மான்சியைப் பார்த்தான்.....அவள் மிரட்சியுடன் அவனையே பார்க்க கைகால்கள் வெடவெடவென்று நடுங்கியது... அவளின் பெரிய விழிகளில் கண்ணீர் ஓடையாக வழிந்தது... சத்யனையே மிரண்டு போய் பார்த்தாள்.. அந்த மிரண்ட பார்வையில் ஏதோ........

சத்யன் அவளைப்பார்த்த படி தனது பிடியை தளர்த்த மான்சி கால்கள் துவள தொப்பென்று தரையில் விழுந்தாள்...

பரசுராமன் பதறிப்போய் கீழே விழுந்த மான்சியை நெருங்க... சத்யன் கீழே விழுந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து ரத்தம் கசியும் கழுத்தில் ஒற்றியபடி அங்கிருந்து நகன்றான்....

மான்சி முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி இருக்க... “ இதுக்குத்தான் வராதேன்னு சொன்னேக்கா.... இதுபோல குடிகாரப் பயலுகளை தினமும் இந்த ரோட்டுல எவ்வளவு பாக்குறேன்.... சாமிக்கும் கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதவனுங்க.... சரி வா வீட்டுக்குப் போகலாம்” என்று பரசு அவளை சமாதானம் செய்தான்...

ஆனால் தம்பியின் வார்த்தைகளை மீறி அந்த கார் கிளம்பிச் செல்லும் ஓசை மான்சியின் காதுகளில் விழுந்தது.... ‘ ஏன் அப்படி கேட்டான்? என்னைப் பார்த்து அதுதான் தோனுச்சா?’ மான்சியின் மனம் கேள்வி கேட்டு குமுறியது...

பரசு இளநீர் குலைகளை எடுத்துச்சென்று கிணறு பக்கத்தில் இருக்கும் மோட்டார் அறையில் போட்டுவிட்டு வந்து மான்சியை எழுப்பி அழைத்துக்கொண்டு தனது சைக்கிளில் கிளம்பினான்


சத்யன் காரை நெருங்குவதற்குள் டம்ளரில் இருந்ததை தொண்டையில் சரித்துக்கொண்டு இறங்கி முன்னால் சென்று டிரைவர் இருக்கையில் ஏறிக்கொண்டான்.... சத்யன் இருந்த மனநிலையில் ப்ருத்வியை கவனிக்க மறந்தான்... கர்சீப்பால் கழுத்தை துடைத்தவன் மது புட்டியை எடுத்து எதையும் கலக்காமல் அப்படியே ராவாக குடித்தான்....

மனதோடு சேர்ந்து வயிறும் எரிந்தது... கழுத்தில் கத்திவைத்தவனை சும்மா விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்ற ஆத்திரம் அவனை மேலும் குடிக்க வைத்தது... சத்யன் நினைத்திருந்தால் ஏதாவது செய்து கழுத்தில் கத்தி வைத்த அவனை உதறிவிட்டு அவளை இழுத்து வந்திருக்கலாம்... ஏனென்றால் சத்யனுக்கு பாதுகாப்பு கலைகள் எல்லாமே அத்துப்படி... ஆனால் அவனை மவுனமாக திரும்ப வைத்தது எது என்று புரியாமலேயே மறுபடியும் மறுபடியும் குடித்தவன் ப்ருத்வியின் கையில் கார் அடிக்கடி தடுமாறுவதை கவனிக்க மறந்தான்....

கார் தொழுதூரை நெருங்கும் போது ப்ருத்வியின் கண்களை மதுவின் மயக்கம் மறைத்தது... அடிக்கடி தடுமாறி பிறகு நேராக்கியவன் ஒரு நேரம் கண்கள் சட்டென்று சொருகிக்கொள்ள காரை சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதினான்....

முதலில் சத்யனுக்குப் புரியவில்லை... புரிந்தபோது பின்னாலிருந்து எகிறி முன்சீட்டின் மீது வளைந்து தொங்கியபடி கவிழ்ந்து கிடக்கிறோம் என்று தெரிந்தது..... காருக்குள் நண்பர்களின் குரல் நன்றாக கேட்டது... அவனவன் குரலை வைத்தே காயம் அதிகமில்லை என்று புரிந்தது...

சத்யன் நிமிர்ந்து எழமுயன்றான்.. எவ்வளவு முயன்றும் முடியவில்லை... முதுகுத்தண்டில் பயங்கர வலி... சுரீரென்று மூளைவரை சென்று தாக்கக்கூடிய பயங்கர வலி... முன்சீட்டில் கையை ஊன்றி மறுபடியும் நிமிர முயன்றான்.. துளிகூட அசைய முடியவில்லை...

“ டேய் என்னை தூக்குங்கடா” என்று சத்யன் அலறியதும் நண்பர்கள் அவன் இடுப்பைப் பற்றிக்கொண்டு பின் சீட்டுக்கு இழுக்க.... சத்யன் வலியால் பயங்கரமாக அலற ஆரம்பித்தான்...

அவன் கத்தியதில் நண்பர்களே பயந்து போனார்கள்... அவனைத் தூக்கி உட்காரவைக்க முயன்றார்கள்... வேதனையுடன் கத்தியபடி பக்கவாட்டில் சரிந்தான் சத்யன்....

“ கார்ல் வேனாம்டா வெளிய தூக்கிப் படுக்கவைக்கலாம்” என்ற மார்ட்டின் சத்யனின் காலைப் பிடித்துக்கொள்ள.... மற்றவர்கள் தோளைப் பிடித்து சிரமமாக இறக்கி ரோட்டின் ஓரமாக தரையில் படுக்கவைத்தார்கள்....

சத்யன் வலியால் துடித்து அலறினான்... உடலில் சின்ன காயமோ ரத்த கசிவோ எதுவுமில்லை... ஏன் அவன் உடைகள் கூட கசங்கவில்லை.... ஆனாலும் கால் பெருவிரலைக் கூட அசைக்கமுடியாமல் வலியால் துடித்தான்.... ஆனால் தலையை அசைத்தான்... ஏன் கைகள் கூட நன்றாக அசைந்தது.... அப்படியானால் சத்யனுக்கு என்ன?

கவின் மார்ட்டின் கையைப்பிடித்து “ மச்சான் சத்யனுக்கு முதுகெலும்பு பிராக்ச்ர் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன்... மொதல்ல ஆஸ்பிட்டல் கொண்டு போகனும்டா” என்றான் கண்ணீருடன்....

ப்ருத்வி நெற்றியில் வழியும் ரத்தத்தோடு சத்யனின் அருகில் அமர்ந்து “ மச்சான் என்னடா இப்படி ஆயிடுச்சே” என்று அழ ஆரம்பித்தான்...

அதற்க்குள் ஹய்வே போலீசார் வந்துவிட அவர்கள் பின்னாலேயே ஆம்புலன்ஸ்ம் வந்தது... இடுப்புக்கு கீழே எந்த பகுதியையுமே அசைக்கமுடியாத வேதனையுடன் சத்யன் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டான்....

சத்யன் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப் பட்டு... அங்கே எடுத்த எம் ஆர் ஐ ஸ்கேனில் முதுகுக்கும் இடுப்புக்கும் நடுவே இருக்கும் பள்ளத்தில் வளையும் முதுகுத்தண்டுவடம் முறிந்துபோனது கண்டுபிடிக்கப் பட்டு உடனடியாக சென்னைக்கு எடுத்துப்போக சொன்னார்கள் மருத்துவர்கள்.....

சத்யனின் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் அவனது நண்பர்கள் சத்யனை ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை எடுத்துச்சென்றனர்... அங்கே பிரபலமான தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்யனை பரிசோதித்த டாக்டர்கள் குழு “ முதுகுத்தண்டு முறிந்த நிலையில் இடுப்புக்கு கீழே அனைத்தும் செயலிழந்த சத்யன் இனிமேல் உயிருடன் இருப்பதும் ஒன்றுதான்... இறப்பதும் ஒன்றுதான்” என்று தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்....







“ வாழ்க்கை ஒரு கனவு....

“ அதிலிருந்து விழித்தவன்....

“ ஜெயித்துவிடுவான்!


“ அழகு ஒரு விஷம்....

“ அதை அருந்தாமல் ரசிப்பவன்...

“ பிழைத்துக்கொள்வான்!


“ பிறப்பு ஒரு சாபம்....

“ அதிலிருந்து விமோசனம் பெற்றவன்...

“ இறந்துபோவான்!


“ இறப்பு ஒரு வரம்....

“ இதை பரிசோதிக்க நினைப்பவன்....

“ எரிந்துபோவான் !


" வலி ஒரு மரணவாசல்...

" அதை ஆவேசத்துடன் தாங்குபவன்...

" மரணத்தையும் வெல்வான் !

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்யனுக்கு அனைத்து டெஸ்டுகளும் முடிந்து முறிந்துபோன முதுகெலும்பை இணைக்க முடியாவிட்டாலும் அறுவைசிகிச்சைகள் சில செய்தால் அவனது வலியை குறைத்து இனி வாழும் காலம்வரை வேதனை அதிகமில்லாமல் படுத்த படுக்கையாக வைத்திருக்கலாம் என்று முடிவு செய்த டாக்டர்கள் சத்யனின் பெற்றோர் வரவிற்காக காத்திருந்தனர்....

அன்று இரவே வந்து சேர்ந்தனர் சத்யன் குடும்பத்தினர்.... தலைமை மருத்துவரின் அறையில் காத்திருந்தவர்களை டாக்டர் வந்து சந்தித்து பேசினார்.... சத்யன் பற்றிய விபரங்கள் சேகரித்த பின் அவனது தற்போதைய நிலைமையை தெளிவாக எடுத்துரைத்தார் டாக்டர்.... ...

“ மிஸ்டர் ராஜா முதுகுத்தண்டு முறிந்தால் அதுக்கு செயற்கை முறை சிகிச்சைகளால் பலன் கிடையாதுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்... இப்போ சத்யனுக்கு முதுகும் இடுப்பும் இணையும் பகுதியில் எலும்புகள் தனித்தனியாக நகர்ந்து ஒரு எலும்புக்கும் மற்றொரு எலும்புக்கும் உள்ள இடைவெளியில் இரண்டு கால்களுக்கு வரும் நரம்புகள் மற்றும் அசைவிற்க்கான ஜவ்வின் மீது உடைந்துபோன மேல் எலும்பு இறங்கி அழுத்திவிட்டது இனிமேல்... இதற்கு சிகிச்சை அப்படின்னு சொன்னால்.. வலியை குறைத்து வாழும் நாட்களை நீட்டிக்க முடியுமே தவிர சத்யனை எழுந்து நடமாட வைக்க முடியாது.... நொருங்கிப் போன முதுகெலும்பின் பிசிறுகளை அகற்றிவிட்டு அங்கே செயற்கையாய் சிறிது இடைவெளியை உண்டாக்க தான் இப்போது அறுவைச் சிகிச்சை செய்யப்போகிறோம்... ஆனால் அறுவைசிகிச்சை முடிந்ததும் சத்யன் நடமாடுவாரா என்றால் அது நிச்சயம் முடியாது.. இனி நீங்கள் அனுமதித்து கையெழுத்துப் போட்டால் இன்று இரவு சிகிச்சையை தொடங்குவோம்... ஏனென்றால் பிசிறுகளை அகற்றாவிட்டால் நாளடைவில் அது கேன்சர் வரக்கூடிய வாய்ப்பை உருவாக்கும் ” என்று டாக்டர் சொல்லி முடிக்கவும் அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர்...

முதலில் சுதாரித்துக்கொண்டு டாக்டரிடம் பேசியது தண்டபாணி தான் “ டாக்டர் நீங்க சொல்றதைப் பார்த்தா இனிமே சத்யன் நடமாடவே முடியாதா?” என்று கேட்க...

“ நடமாட முடியாது தான்.... ஆனால் வீல்சேரின் உதவியுடன் நடமாட வைக்கலாம்... அதுவும் கிட்டத்தட்ட ஆறு மாதம் வரை ஆகவேண்டும் ” என்றார் டாக்டர்...

“ இடுப்புக்கு கீழே சுத்தமாக அசைவே இருக்காதா டாக்டர்?” இது தண்டபானி மனைவி.....

“ ஆமாம் எந்த அசைவும் இருக்காது... நடக்க மட்டுமில்லாமல் உட்காரவும் முடியாது..... யாராவது தூக்கி சாய்த்து அமர வைக்கலாம்.... மற்றபடி இனி எல்லாமே படுக்கையில் தான்..... ” என்று டாக்டர் உதட்டை பிதுக்கினார்...

அதுவரை தன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்த ராஜேஸ்வரி “ சத்யா.........................” என்று நீளமாக கத்தி அழ ஆரம்பிக்க... ராஜலிங்கமும் முகத்தை மூடிக்கொண்டு குமுற ஆரம்பித்தார்...

சொக்கலிங்கம் கொஞ்சம் திடமாக இருந்தார்... அவருக்கும் உள்ளுக்குள் வேதனை தான் ஆனால் அதை காட்ட இது சமயமல்ல என்று அவரது அனுபவ அறிவு சொல்ல “ சரிங்க டாக்டர் நீங்க ஆப்ரேஷனை ஆரம்பிங்க... எங்க கையெழுத்துப் போடனுமோ நான் போட்டுத்தறேன்... ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் தெளிவுப்படுத்துங்க... சத்யனுக்கு ஏதாவது வெளிநாடுகளில் சிகிச்சை செய்து நடமாட வைக்க வாய்ப்பிருக்கிறதா?” என்று கேட்டார்.....

“ இப்போதைக்கு இல்லேன்னு தான் சொல்லனும்... ஆனால் மெடிக்கல் மிராக்கிள்னு சொல்வாங்களே அதுபோல் ஏதாவது ஒரு வாய்ப்பு வருதான்னு காத்திருங்க... அதுவரை சத்யனை கவனமா பார்த்துக்கனும்.. இப்போ உயிருக்கு ஆபத்தில்லைனு சொன்னாலும் படுக்கையிலேயே இருக்கும்போது நோய்கள் பல தேடி வரும்... முதுகுத்தண்டின் இயக்கம் முளையைச் சேர்ந்தது எனும்போது சத்யனை மிகவும் கவனமாக பார்த்துக்கிட்டா சிலவருடங்களுக்கு நல்லபடியாக இருக்கலாம்” என்ற டாக்டரின் வார்த்தையில் அந்த இருக்கலாம் என்ற வார்த்தை நம்பிக்கையின் சாயலே இல்லாமல் வந்தது....

சற்றுநேரம் அமைதியாக அமர்ந்திருந்த சொக்கலிங்கம் “ சரி நீங்க ஆரம்பிங்க... எங்க கையெழுத்துப் போடனும்னு சொல்லுங்க” என்று எழுந்தார்....

சத்யனுக்கு பல மணிநேரம் அறுவை சிகிச்சை நடந்தது... வெளியே அவன் பெற்றோர் கண்ணீருடன் காத்திருக்க..... தண்டபானியும் அவர் மனைவியும் சத்யன் தங்கள் மருமகன் என்ற கனவு பொய்த்துப்போனதில் ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தனர்....

தாத்தா சொக்கலிங்கத்தின் மனம் குமுறியது.... சத்யனின் இந்த நிலைக்கு காரணம் தன் மகனும் மருமகளும் தான் என்பதை தெளிவாக உணர்ந்தார்... அவர்களின் மீது ஆத்திரம் குமுறினாலும் கண்ணீருடன் காத்திருக்கும் அவர்களிடம் அதை காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்....

கிட்டத்தட்ட ஏழு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு சத்யன் ஐசியூவிற்க்கு மாற்றப்பட்டு ஒவ்வொருவராக பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.... தண்டுவட சிகிச்சைக்கு என்று தயாரிக்கப்பட்ட பிரத்யோக படுக்கையில் பச்சை உடையுடன் படுத்திருக்க.. அவனைச் சுற்றிலும் மருத்துவ உபகரணங்கள் காவலிருந்தன...

ராஜேஸ்வரியும் ராஜாவும் அவனைப் பார்த்து கதறியழ... உடனடியாக அவர்களை வெளியேற்றினார்கள் மருத்துவர்கள்....



சொக்கலிங்கம் தனது குலத்தின் ஒரே வாரிசை கண்ணீர் மல்க கலங்கிப்போய் பார்த்தார்..... உன்னோடு என் வம்சம் முடிஞ்சு போச்சாடா என் சின்னய்யா” என்று மட்டும் சொல்லிவிட்டு வெளியே வந்தார்....

தனது ஒரே மகனின் நிலையை ஜீரணிக்க முடியாமல் கதறிக்கொண்டிருந்த மகனை நெருங்கியவர் “ சத்யனோட இந்த நிலைமைக்கு மொத்த காரணமும் நீங்க ரெண்டு பேரும் தான்... பணம் சம்பாதிக்கிறதில் காட்டின கவனமும் அக்கரையும் பெத்த மகன் எங்க போரான் என்ன செய்றான்னு கவனிக்கிறதுல காட்டியிருந்தா இப்போ இப்படி ஆகியிருக்குமா?” என்ற அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மீண்டும் கண்ணீர் விட்டனர் இருவரும்...

முழுதாக ஒருநாள் முடிந்து கண்விழித்த சத்யன் தன்னைப் பெற்றவர்களின் கண்ணீரைப் பார்த்து “ என்ன? எல்லாம் போச்சா? இனிமே பழைய மாதிரி நான் இருக்கமுடியும்னா மட்டும் எனக்கு ட்ரீட்மெண்ட் பண்ணச்சொல்லுங்க... இல்லேன்னா ஏதாவது இன்ஜெக்ஷன் போட்டு என்னை கொன்னுடுங்க” என்று வெறிப்பிடித்தவன் போல் கத்த... அவசரமாக மயக்கம் செலுத்தப்பட்டு தூங்க வைக்கப்பட்டான்.... 


No comments:

Post a Comment