Saturday, January 9, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 20

சத்யனின் கார் வீட்டுக்கு வந்ததும் டிரைவரின் உதவியுடன் சத்யனை வீல் சேரில் அமர்த்தி வீட்டுக்குள் அழைத்துப் போனான் வேலு... சத்யனின் அறை கதவை திறந்து சேரை உள்ளே அனுப்பிவிட்டு கதவை மூடிவிட்டு போனான் வேலு..

கதவு திறக்கும் சப்தம் கேட்டு கட்டிலில் படுத்திருந்த மான்சி திரும்பிப் பார்க்க... அந்த நேரத்தில் சத்யனைப் பார்த்ததும் பதறி எழுந்து “ என்னங்க? உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று கேட்டவாறு அருகில் வந்தாள்..

சத்யன் மான்சியின் கையைப்பற்றிக் கொண்டு “ எனக்கு ஒன்னுமில்ல மான்சி.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஆபிஸ்ல இருக்கும் போது உன்னை பார்க்கனும்னு தோனுச்சு.. தாத்தாகிட்ட சொன்னேன்... உடனே வீட்டுக்கு அனுப்பிட்டார்” என்று புன்னகையுடன் கூறியதும் தான் மான்சிக்கு அடக்கி வைத்த மூச்சே வந்தது..

அருகில் வந்து நின்றவளின் மேடிட்ட வயற்றில் முகம் பதித்த சத்யன்.... “ இனிமே என் வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும்னு எனக்கு முழு நம்பிக்கை வருது மான்சி...” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான்..


வயிற்றில் அழுந்தியிருந்த அவன் தலை முடியை இதமாக களைத்த மான்சி “ அப்போ அய்யாவுக்கு இத்தனை நாளா பாதி நம்பிக்கை தான் இருந்ததாக்கும்?” என்று குறும்பாக கேட்டவளை நிமிர்ந்து பார்த்து சிரித்த சத்யன்...

“ அதில்லை மான்சி நீ என்கிட்ட வந்ததும் பாதி நம்பிக்கை வந்தது... இன்னிக்கு முழுசா நம்பிக்கை வந்திருச்சு” என கூற...

“ அதென்ன இன்னைக்கு மட்டும் ஸ்பெஷல்? எனக்குத் தெரியாம எந்த சாமி வந்து வரம் குடுத்துச்சு?” மீண்டும் மான்சியின் குரலில் ஆராய்ச்சி கலந்த குறும்பு...

இரு கைகளால் அவள் இடுப்பை வளைத்துத் திருப்பி தன் மடியில் உட்கார வைத்த சத்யன் அவள் மூக்கை தன் மீசையால் உரசியபடி “ ஏன் உனக்கு தெரியாதா மான்சி? என் சாமி நீதான்டி … சாவை எதிர்நோக்கி காத்திருந்தவனுக்கு வாழ வழிகாட்டிய தெய்வம் நீ ” என்று சத்யன் உணர்ச்சிவசப்பட்டு பேச...

அவன் மடியில் தனது உடல் சுமையை அழுத்த மனமின்றி மெல்ல எழுந்தவள் அவன் சேரை கட்டில் வரை தள்ளிச்சென்று கட்டிலில் ஏறி படுக்க உதவியவாறு “ சாமிய இப்படித்தான் வாடிப் போடின்னு கொஞ்சுவாங்களா?” என்று குறும்புடன் கேட்டாள்....

அவனது உடைகளை மாற்ற உதவிக்கொண்டு இருந்தவளை வேகமாக இழுத்து தன்மீது சரித்தவன் “ பின்ன சாமி பொண்டாட்டியா வந்தா அப்படித்தான் கூப்பிட முடியும்” என்று லேசாக வளைந்து அவள் கழுத்தடியில் முகம் புதைத்து அவள் வாசனையை நுகர்ந்தான்

உடல் கூசி சிலிர்க்க... அவன் முகத்தை விலக்கி “ அய்யாவுக்கு இன்னிக்கு என்னாச்சு? பாதிலயே ஆபிஸ்லருந்து வந்து ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரு?” என்றதும்...

“ சந்தோஷம்டி.... மனசு முழுக்க சந்தோஷம்...” என்றான் சத்யன் கைகளை விரித்து....

மான்சியின் மது படபடவென்று அடித்துக்கொண்டது.... சத்யனின் சந்தோஷத்திற்கான காரணம் நான் நினைப்பது தானா? அலுவலக உடையை கழற்றி விட்டு சத்யனின் தலைவழியாக கைலியை மாட்டி அதை இடுப்புவரை கொண்டு வந்து சரி செய்தவள் “ என்னன்னு சொன்னா நாங்களும் சந்தோஷப் படுவோம்ல? ” என்றாள் ஆர்வத்தை அடக்கியபடி

அவள் முகத்தை நேராகப் பார்த்தவன் “ ஏன் மான்சி உனக்கு தெரியாதா என் சந்தோஷத்துக்கு காரணம் எதுவாயிருக்கும்னு?.... சரி அதை விடு... காலையில உனக்கு யார் கால் பண்ணது?” என கேட்க..

இதுவரையில் எதையும் அவனிடம் மறைத்துப் பழக்கமில்லை... வந்ததும் சொல்லியிருக்க வேண்டும்... இவன் காதலை ஆரம்பித்ததில் கடமை மறந்துவிட்டது... நேரடியாக திரும்பி நின்று சத்யனைப் பார்த்தாள் “ பரசு கால் பண்ணான்... வர்ற வெள்ளிக்கிழமை எனக்கு சீர் செய்ய வர்றவான்னு கேட்டான் ... நான் உங்ககிட்ட அனுமதி வாங்கச் சொல்லி சொன்னேன்” என்றாள் மெல்லிய குரலில் ...


அவளை நோக்கி கைகளை விரித்த சத்யன்.... “ இப்போ நீ ஏன் அவ்வளவு தூரம் தள்ளி நிக்கிற ... இங்கே கிட்ட வந்து பேசேன்” என்று காதலாய் அழைக்க.... மான்சி இரண்டே எட்டில் அவன் கைகளுக்குள் வந்தாள்.... “ ம்ம் இப்ப சொல்லு? அதுக்கு அவன் என்ன சொன்னான்?” என்று மிச்சத்தை சொல்லச் சொன்னான்...

“ சரி அவர் நம்பர் குடு நான் பேசுறேன்னு சொன்னான்... நானும் உங்க நம்பர் குடுத்தேன்...... பேசினானா?” மான்சி எதிர்பார்ப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்

சத்யனின் விரல்கள் அவள் வயிற்றில் வருடி விளையாடியது... மான்சி கிறக்கமாக அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்....

“ ம்ம் பேசினான் மான்சி ... நான் மான்சி அக்காவோட தம்பி பரசு பேசுறேன்னு அறிமுகம் பண்ணிகிட்டு பேசினான்.... என்கிட்ட அனுமதி கேட்டான்... உன் அக்காவுக்கு சீர் செய்ய உனக்கு உரிமையிருக்கு நீ தாராளமா வந்து செய்னு சொன்னேன்...” சத்யன் பேசிக்கொண்டே போனான்... மான்சியிடம் “ ம்ம்” என்ற வார்த்தை தான் வந்தது... “ அப்புறம் அப்பா தாத்தா ரெண்டு பேர்கிட்டயும் பேசினான்....... நாங்க எதுவும் தடுத்து சொல்லாததால அவனுக்கு ரொம்ப சந்தோஷம் மான்சி....”

“ பரசு வேற எதுவும் கேட்கலையா?” மான்சியின் மனது பிரார்த்தனை செய்தது... பரசு தன் மச்சானை விசாரிச்சிருப்பானா?...

ஏனோ சத்யனின் அணைப்பு இறுகியது.... மான்சி கழுத்து பக்க வாட்டில் சரிய அந்த இடத்தில் தனது தாடையை பதித்துக்கொண்டான் “ம்ம் கடைசியா போனை வைக்கிறது முன்னாடி நீங்க நல்லாருக்கீங்களான்னு கேட்டான் மான்சி... எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலை.... மறுபடியும் நீங்க நல்லாருக்கீங்களா மச்சான்னு கேட்டான்.... எனக்கு அழுகையா வந்துருச்சு மான்சி.... அவனும் அழுதுட்டான்.... நான் நல்லாயிடுவேன் நம்பு பரசுன்னு சொன்னேன்.... நம்புறேன் மச்சான்... நீங்க நல்லாயிடுவீங்க... அக்காவும் நீங்களும் சந்தோஷமா வாழ்ந்து இன்னும் நிறைய பிள்ளைகள் பெத்துக்குவீங்கன்னு சொல்லிட்டு கதறிட்டான்... அப்புறம்... என்னால பேச முடியலை நான் வச்சிடுறேன்னு சொல்லி போனை வச்சிட்டான் மான்சி” என்ற சத்யனின் உணர்ச்சிவசப்பட்ட குரல் இறுதியில் உடைந்தது...

“ அவன் அப்படி கேட்டதும் என்னால முடியலை மான்சி.... அழுதுட்டேன்... உடனே உன்னைப் பார்க்கனும் உன் மடியில விழுந்து கதறனும்னு தோனுச்சு.. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்... பரசுவோட அக்காவுக்கு நான் நல்ல புருஷனா இருக்கனும் மான்சி... அவன் சொன்ன மாதிரி நிறைய குழந்தைங்க பெத்துக்கனும் ” என்றவன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் மான்சியை அணைத்தவாறு சத்தமிட்டு அழ ஆரம்பித்தான்... மான்சியாலும் கட்டுப்படுத்த முடியவில்லை அணைத்து அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று இவளும் அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்...

அவர்களின் கண்ணீரில் வலியோ வேதனையோ இல்லை.... உறவுகள் ஒன்றுகூடிய உணர்ச்சிமிக்க தருணத்தை தாங்கமுடியாத சந்தோஷத்தால் வந்த கண்ணீர்.... தங்கள் வாழ்வில் மாற்றங்கள் நிகழ்ந்து பரசுவின் வார்த்தைகள் பலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வந்த கண்ணீர்...

சத்யன்தான் முதலில் நிதானத்துக்கு வந்தான்... தன் மீது விழுந்து அழும் மான்சியின் முகத்தை நிமிர்த்தி “ ச்சு என்னடா இது எப்பவும் நான் கலங்கினா நீ ஆறுதல் சொல்வ.... இன்னைக்கு என்னடான்னா நீயும் கூட சேர்ந்து அழுவுற” என்றவன் சட்டென்று வரவழைத்த புன்னகையுடன் அவளின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு “ ஆனாலும் உன் தம்பிக்கு ரொம்ப ஆசைடி.... நிறைய புள்ளைங்க பெத்துக்கனும்னு சொல்றான்” என்று குறும்பாக சொல்ல...




அவனின் குறும்பு புன்னகையில் மான்சியின் மனநிலையும் மாறிப்போனது... அவன் மீசைப் பிடித்து வலிக்கும் படி இழுத்தவள் “ பின்ன உங்களைப்போல ஒன்னே ஒன்னு எனக்கு வேனாம்.... நிறைய குழந்தைங்க வேனும்....” என்றவளின் முகம் சிவந்துவிட்டது

மனைவியின் முகச் சிவப்பை ரசித்தவன் “ ஓஓஓ வருங்காலத்துல காலேஜ் கட்ற பிளான்ல இருக்கியா நீ?” என்று சிரித்து “ ஆனா மான்சி உன்னையும் பரசுவையும் பார்த்து எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு... எனக்கு இப்படியொரு தம்பியோ தங்கையோ இல்லாம போச்சேன்னு..... அனு பிறக்கும் போது எனக்கு ஏழு வயசு... நல்லா வெள்ளையா குண்டா இருப்பா.... எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்.... எப்பபார்த்தாலும் தூக்கி வச்சுகிட்டு கொஞ்சுவேன்.... ஆனா அவ வளர வளர அவ அப்பா அம்மாவே அவ மனசுல விஷத்தை விதைச்சிட்டாங்க... என்னை கல்யாணம் செய்தா மொத்த சொத்தும் வரும்னு என் மேல விழுந்து லவ் பண்றேன்னு சொல்லுவா.... அப்போல்லாம் ஒரு தூணுக்கு புடவை கட்டினாக்கூட திரும்பி பார்த்துட்டு போகும் எனக்கு அனு மேல எந்த ஆர்வமும் வரலை மான்சி.... அவ என் மேல விழுந்து புரளும் போது நானும் கொஞ்சம் விளையாடத்தான் நெனைப்பேன்.... ஆனா மனசுக்குள்ள உடனே ஒரு குற்றவுணர்வு வந்துடும்... அவளை நான் எவ்வளவுதான் உதறினாலும் அவளும் எவ்வளவோ முயன்றாள்... ஆனா எனக்குத்தான் எதுவுமே தோனலை... சின்ன குழந்தையில என் தங்கச்சியா நெனைச்சு அவளை கொஞ்சினதால் கூட இருக்கலாம்.... இப்போ உங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டு இந்த அனு ஏன் இப்படி ஆனான்னு கோபமா வருது மான்சி” தன் மனதை திறந்தவனை வியப்புடன் பார்த்தாள் மான்சி...

“ எனக்கு கூட அனுவை பார்க்கும்போது கோபம் வராதுங்க... அவ என்னை எதிரியா நெனைச்சாலும் நான் அவளை என் தங்கை மாதிரி தான் நினைக்கிறேன்... நீங்க கவலைப் படாதீங்க அவ மனசு மாறும்... நாமளே அவளுக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து கல்யாணம் செய்து வைக்கலாம்” கணவனுக்கு தேறுதல் சொன்னவள் “ இப்போ தம்பியோ தங்கச்சியோ அவசரமா வேனும்னா ஒன்னு செய்யலாம்.... அத்தை மாமாகிட்ட வேனா சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்லலாம்” மான்சி குறும்புடன் கண்சிமிட்ட...

சத்யன் பக்கென்று சிரித்து “ நீ ரொம்ப தேறிட்டடி..... ஆனா அதுகூட நல்லாத்தான் இருக்கும்.... டாடியும் மம்மியும் இன்னும் யங்காத் தான இருக்காங்க ” என்ற கூறிவிட்டு வாய்விட்டு சந்தோஷமாக சிரித்தான்...
இருவரின் மனநிலையும் மாறியிருக்க சற்றுநேரம் சந்தோஷமாக பேசிச் சிரித்தனர்.... மான்சி எழுந்து சென்று சத்யனுக்கு குடிக்க ஜூஸ் எடுத்து வர..... சத்யன் கண்மூடி பலத்த சிந்தனையில் இருந்தான்... மான்சி அவன் நெற்றியை வருடி “ என்ன குழப்பம் குட்டிப்பையனுக்கு?” என்று கொஞ்ச...

கண்விழித்து புன்னகைத்த சத்யன் “ இல்ல மான்சி பரசு பேசினதும் என் மனதுல நிறைய மாற்றங்கள்... முன்னாடி அவன் மேல இருந்த விரோதம் எப்பயோ போயிடுச்சு... இப்போ அவன் என்னை மச்சான்னு கூப்பிட்டதும் அவன்கூட நிறைய பேசனும் உறவு முறையோட கேலி கிண்டல்னு இருக்க ஆசையாயிருக்கு... ஆனா அவனுக்குள்ள இன்னும் சில தயக்கங்கள் இருக்கு மான்சி... நீ அவனுக்கு ரொம்ப உயர்வு உனக்கு புருஷனா இருக்க சில தகுதிகள் வேனும்னு அவன் நெனைச்சதுல தப்பில்லை... அந்த தகுதிகளோட நான் அவன் முன்னாடி நின்னாதான் அவன் மனசு என்னை முழுசா ஏத்துக்கும்... அதுவரைக்கும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவன் நெஞ்சுக்குள்ள வேதனைதான் வரும்... அந்த வேதனையோட அடுத்தவங்க முன்னாடி அவன் நடிக்கிறது ரொம்ப கஷ்டம் மான்சி... இவ்வளவு நாளா அவனுக்கு எவ்வளவோ கஷ்டத்தை குடுத்த நான் இன்னுமும் கஷ்டம் குடுக்க விரும்பலை...” என்று சத்யன் சொல்லும்போதே குறுக்கிட்ட மான்சி


“ அப்படின்னா? என்ன செய்யப் போறீங்க?” கலவரத்துடன் கேட்டாள்...


மனைவி பயப்படுவதை கண்டு ஆறுதலாக கையைப்பிடித்தவன் “ இரு இரு பயப்படாதே.. நான் சொல்றதை முழுசா கேளு.... நான் நல்லாகி உன்கூட அவன் வீட்டுக்கு விருந்துக்கு போறவரைக்கும் அதிகமா அவன் கூட உறவாடக் கூடாதுன்னு முடிவு பண்ணிருக்கேன்...... நாங்க மச்சான் மாப்ளன்னு உறவு கொண்டாடினாலும் பரசுவோட அடி மனசுல ஒரு இயலாமையுடன் கூடய வலி இருக்கும்... அதான் அதுபோல ஒரு சங்கடம் பரசுவுக்கு வேண்டாம் மான்சி.... அவன் மேல எனக்கு உருவாகிருக்கும் அன்பை காட்டவேண்டிய காலம் இது இல்லை... நாம ஜோடியா அவன் வீட்டுக்கு போகும் போதுதான்...... அதனால நான் அவன்கூட சரியாப் பேசலைனு நீ தப்பா நெனைக்ககூடாது மான்சி” மனைவிக்கு விளக்கமாக சொன்னான் சத்யன்...


மான்சிக்கு அவன் மனம் தெளிவாகப் புரிந்தது... சந்தோஷத்தில் சத்யனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்... அவள் மார்புகளில் தனது முகத்தை புரட்டியவன் “ நிறைய பேசிட்டேன்... மேடம் அந்த ஜூஸை குடுத்தா நல்லாருக்கும்” சத்யன் கேலியாக சொல்ல..

மான்சி ஜூஸ் க்ளாஸை எடுத்து தன் மார்போடு அவன் முகத்தை பிடித்துக்கொண்டு அவன் உதடுகளில் வைத்ததும் சத்யன் அவள் கண்களைப் பார்த்ததுக்கொண்டே நிமிடத்தில் ஜூஸை குடித்து நாக்கை சப்புக்கொட்டியபடி “ இதுகூட நல்லாத்தான் இருக்கு... இனிமே இப்படியே குடேன்” என்று கண்சிமிட்டி சிரிக்க...

மான்சி க்ளாஸை வைத்துவிட்டு அவன் கன்னத்தில் செல்லமாக தட்டி “ ம்ம் ரொம்பத்தான் ஆசை” என்றாலும் வெட்கத்துடன் தலையசைத்து சரிசரி என்று கிசுகிசுப்பாக சம்மதம் சொன்னாள்...

சத்யன் இன்னும் தன் முகத்தை அகற்றவில்லை... அந்த பிளவிலிருந்து வந்த மெல்லிய வியர்வை வாசனையை தம்பிடித்து இழுத்து சுவாசித்தபடி அணைப்பை இறுக்கினான்

அவன் தலையை அசையவிடாமல் மான்சி இறுக்கிப் பிடித்துக்கொண்டு “ என்ன இது சும்மா இருக்கமாட்டீங்களா?” என கிறக்கமாய் கேட்க.....

சத்யன் தனது முகத்தை சற்று விலக்கிவிட்டு கையை அவள் மார்புகள் மீது படரவிட்டு “ மான்சி எனக்கொரு சந்தேகம்.... இது ஏன் நாளுக்குநாள் வளர்ந்துகிட்டே போகுது.....?” என்று கேட்க

விரல்களை மடக்கி அவன் தலையில் செல்லமாக குட்டி “ அய்யோ ஆராய்ச்சியைப் பாரு?” என்றவள் வெட்கத்தால் நிறமாற....

“ இல்லடி முன்னாடி பார்த்ததுக்கு இப்போ ரொம்ப பெரிசா ஆகி போச்சேன்னு கேட்டேன்... ம்ஹ்ம் எவ்வளவு பெருசானாலும் என் கண்ணுல கூட காட்டாம மறைச்சு வைக்கிற? இரு இரு எத்தனை நாளைக்குன்னு பார்க்குறேன்... ஒரு நாளைக்கு அதுக ரெண்டும் என் கையில சிக்கும்ல அப்ப காட்டுறேன் நான் யாருன்னு” சத்யன் விளையாட்டாக சவல் விட்டாலும் அவன் வார்த்தைகளில் மிதமிஞ்சிய ஏக்கம் தான் இருந்தது...

மான்சி மவுனமாக இருந்தாள்... எந்த மனைவிக்கும் இப்படியொரு நிலை வரக்கூடாது.... அவன் கேசத்தை வருடிய விரல்கள் பின்னந்தலையைப் பற்றி மார்போடு அழுத்த “ உங்களுக்கு இப்போ வேனுமா?” என்று தொண்டை அடைக்க கேட்டாள்..

சத்யனிடம் ஒரு தேவையற்ற அமைதி... சட்டென்று அவளை விட்டு விலகு பின்புறமாக கட்டிலில் விழுந்தான் “ நான் சும்மா விளையாட்டுக்கு பேசினேன் மான்சி...” என்று வெற்று குரலில் கூறியவன் “ எனக்கு பசிக்குது மான்சி... லஞ்ச் ரெடியாயிடுச்சான்னு பாரு சாப்பிட போகலாம்” என்று கூற...

மான்சி சிலநிமிடங்கள் அவனைப் பார்த்துவிட்டு பிறகு குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு “ சரி ரெடி பண்ணிட்டு வந்து கூட்டிட்டுப்போறேன்” என்று அங்கிருந்து வெளியே போனாள்

போகும் அவளையேப் பார்த்தான் சத்யன் ‘ ஏதேதோ பேசி அவளையும் கஷ்டப்படுத்திட்டேனே?’ என்று தனது நெற்றியில் அறைந்து கொண்டான்...



“ என் கண்களில் மோகத்தின்...
“ தேடலுக்கான முகவரி இல்லை....

“ என் உதடுகளில் தேன்கனிச்...
“ சுவை தேடும் தேடல் இல்லை!

“ என் மார்பில் தேகத்தின்...
“ கூடலுக்கான ஆவேசம் இல்லை !

“ ஆனாலும் உன் விழி காணும் போது ...
“ ஆழியில் சிக்கிய ஓடமாய்....
“ நான் தடுமாறி தத்தளிக்க.....

“ என் உணர்வுகளுக்கு...
“ ஆறுதல் வரும் காலம் எப்போது?.... 

அடுத்தநாள் இயல்பாகவே போக... வெள்ளிக்கிழமை காலை நாலரை மணிக்கே விழிப்பு வந்து எழுந்த மான்சியை இழுத்து அணைத்த சத்யன் கண்ணை திரவாமலேயே “ இந்த நடுச்சாமத்துல எழுந்து எங்கடிப் போற?... பேசாம தூங்கு” என்று தன்னுடன் சேர்த்து இறுக்கிக்கொண்டான்...

பற்களால் அவன் மீசை நுனியை கடித்தவள் “ இது நடுச்சாமம்மா? விடிஞ்சு போச்சு விடுங்க என்னை... பரசு வந்துடுவான்” என்று திமிறியவளை சுலபமாக அடக்கியவன்

“ அதுக்காக இவ்வளவு காலையிலயேவா எழுந்திரிக்கிறது? சும்மா படுடி” என்றவன் அவளை இழுத்து தன்மேல் கிடத்த.. மான்சி எதுவும் பேசாமல் மவுனமாக படுத்துக்கொண்டாள்... அவளது மவுனத்திலேயே அவள் மனதை அறிந்தவன் “ என்னடா கோபமா? சரி வா போகலாம்” என்று அவளை விலக்கினான்...

எழுந்து அமர்ந்த மான்சி கண்ணை கசக்கியபடி “ எனக்குத தூக்கமே வரலை நான் என்னப பண்றது?” என்று சினுங்கி “ நீங்க ஏன் வர்றீங்க.. நீங்க தூங்குங்க” என்று கூற...

அவளை கூர்ந்து பார்த்து “ நீ இல்லாம எனக்கு எப்புடி தூக்கம் வரும் மான்சி... வா ரெண்டுபேருமே வெளிய போய் வெயிட் பண்ணுவோம்” என்றவன் தனது மொபைலை எடுத்து வேலுவுக்கு கால் செய்து அழைத்தான்...

மான்சி எழுந்து உடைகளை சரி செய்துகொண்டு பாத்ரூம் போய் வருவதற்குள் வேலு சத்யனை சேரில் தூக்கி உட்கார வைத்திருந்தான்.... மூவருமாய் வெளியே வந்து சாய்வாக அமரக்கூடிய சத்யனின் பிரத்யோக சோபாவில் அமர வைத்துவிட்டு வேலு போய்விட.. மான்சி சத்யனின் அருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள்

விண்ணை விட்டு நிலவு பிரிந்து செல்ல... மலர்ந்த மலர்கள் உதிர்ந்து சூரியனுக்கு அழைப்பு அனுப்பும் இருள் கலந்த விடியல் நேரம்... இரவின் ஈரத்தோடு மலர்ந்த மலர்களின் வாசனையும் கலந்து ஒரு மகோன்னதமான வாசனையை ஹால் முழுவதும் பரப்பியிருந்தது...

இன்னும் வேலைக்காரர்கள் கூட தூக்கம் கலைந்திட வில்லை... அந்த இருள் பிரியா விடியலில் மான்சியுடன் அமர்ந்திருப்பது சத்யனுக்கு பிடித்திருந்தது... சற்று பின்னால் சரிந்து மான்சியை முழுவதுமாக தன்மீது சாய்த்துக் கொண்டான்...

சத்யன் மார்பில் வசதியாக சரிந்தாள் மான்சி.... இரவு முழுவதும் தம்பியைப் பற்றிய சிந்தனையில் சரியாக உறங்காத மான்சிக்கு கணவனின் இதமான அணைப்பில் மீண்டும் உறக்கம் வர.. ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தாள்....

சத்யனுக்கு சிரிப்பாக வந்தது... ‘ ரூம் உள்ள படுத்து தூங்குடினா தூக்கம் வரலைனு சொல்லிட்டு இங்க வந்து எப்புடி தூங்குறாப் பாரு?’ என்று எண்ணி சிரித்தபடி அவள் நெற்றியை இதமாக வருட மான்சி தூக்கம் இன்னும் ஜோராக வந்தது...



சத்யனும் மெல்ல கண்மூடினான்... சற்றுநேரத்தில் சபாபதி தான் முதலில் வந்தார் இருவரும் ஹாலில் தூங்குவதைப் பார்த்து புன்னகைத்தபடி பெரியவரின் அறைக்கு சென்று அவரை எழுப்பிவிட்டு வந்தார்.. இது சபாபதியின் தினப்படி கடமை....

பெரியவர் எழுந்துவந்து பேரனையும் அவன் மனைவியையும் பார்த்து சிரித்துவிட்டு “ இன்னைக்கு மான்சியோட தம்பி வர்றான்ல .. அதான் ரெண்டுபேரும் தூங்கிகிட்டே வெயிட் பண்றாங்க” என்று சபாபதியின் காதில் கிசுகிசுத்து விட்டு வாக்கிங் செல்ல வாசல் கதவை திறக்க...

வாட்ச்மேன் பரசுவிடம் இருந்து ஒரு பெரிய பையை வலுக்கட்டாயமாக “ குடுங்க தம்பி நான் எடுத்துட்டு வர்றேன்” வாங்கிக்கொண்டு வீடுநோக்கி முன்னால் வர ... அவனுக்குப் பின்னால் பரசு நிமிர்வுடன் வர அவன் பாட்டி அந்த பங்களாவை கண்டு ஒருவித திகைப்புடன் சுற்றிலும் பார்த்தபடி வந்தார்...

பெரியவர் முன்னால் போய் “ வா பரசு... வாங்கம்மா” என்று இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார்... வெளியே மிகப்பெரிய வராண்டாவை கடந்து ஹாலுக்குள் நுழைந்ததும் பரசுவின் கண்கள் அமர்ந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்த சத்யனையும் மான்சியையும் தான் கண்டது... 


No comments:

Post a Comment