Saturday, January 9, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 19

சத்யனை பேக்டரிக்கு அனுப்பிவிட்டு கிச்சனுக்கு வந்த மான்சி மதிய உணவிற்கான மெனுவை சொல்லிவிட்டு... மெல்ல நடந்து தோட்டத்திற்கு வந்தாள்... மேடிட்ட வயிற்றுடன் தோட்டத்து பூக்களுக்கு நடுவே நடந்து வரும் மான்சியைப் பார்த்ததும் வரதன் முகம் மலர ஓடிவந்தான்...

“ என்ன இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டீங்க?” என்று கேட்க

பாதம் மரத்தின் கீழே அமர்ந்த மான்சி மரத்தின் மீது இலகுவாக சாய்ந்துகொண்டு “ எல்லாரும் இன்னைக்கு சீக்கிரமாவே ஆபிஸ் போய்ட்டாங்க அண்ணா.... ஏதோ ஆடிட்டிங் நடக்குதாம்.... அத்தையும் போய்ட்டாங்க... பேசக்கூட யாருமில்லை... அதான் சீக்கிரம் வந்துட்டேன் ” என்றாள் மான்சி...

“ சரிம்மா நீங்க இங்கேயே உட்கார்ந்து எதையெல்லாம் மாத்தனும்னு சொல்லுங்க நான் செய்றேன்... அப்புறம் நீங்க கேட்ட மஞ்சள் ஆவாரம்பூ செடிகள் வந்திருக்கு...

அதையெல்லாம் நேத்து சொன்ன மாதிரி ரெட் ரோஸ் செடிகளை சுத்தி நட சொல்லவா?” என்று வரதன் கேட்க ..

சரியென்று தலையசைத்தாள் மான்சி... ரோட்டோரத்தில் தானாக வளர்ந்து கிடக்கும் மஞ்சள் ஆவாரம்பூ செடிகளை யாரும் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள்.. இங்கே சிவப்பு ரோஜா செடிகளை தனியாக பிரித்து இதய வடிவில் அடுக்கியிருந்தாள் மான்சி... இப்போது அவற்றுக்கு பார்டர் கட்டியது போல் கொத்துக் கொத்தாக பூக்கும் ஆவாரம்பூ செடிகளை நட்டால் தொலைவிலிருந்து பார்த்தால் மஞ்சள் இதயத்திற்குள் சிவப்பு ரோஜாக்கூட்டம் தெரியும்.. நேற்றுதான் இந்த யோசனையை சொன்னாள்.. இன்று செடிகள் வந்துவிட்டது... இதேபோல் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாக பிரித்து கூட்டம் கூட்டமாக அடுக்க சொல்லிருந்தாள்

வரதன் சம்பள ஆட்கள் இருவரை வைத்துக்கொண்டு அந்த செடிகளை நட ஆரம்பித்தான்... விதை போட்டாலும் வளரக்கூடியது தான்.. ஆனால் வேரோடு சிறு செடிகளையே நட்டுக்கொண்டிருந்தார்கள்...

வரதன் பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தோட்டக்கலையை சிறப்பு படிப்பாக எடுத்து இரண்டு வருடம் படித்தவன்.... அவனது படிப்பு தான் இவ்வளவு பெரிய இடத்தில் வேலை பெற்று தந்த கைநிறைய சம்பளமும் வாங்கி தந்தது.. இங்கே தனியாளாக தோட்டத்தை பராமரித்தாலும் அதிகப்படியான தோட்ட வேலைசெய்ய வெளியிலிருந்து கூலிக்கு ஆட்களை வரவழைத்து கொள்வான்....

அவர்கள் வேலை செய்வதை பார்த்துக்கொண்டு மான்சி அமர்ந்திருக்க... அறைக்குள்ளிருந்து அவளை கண்காணித்தபடி அனு அமர்ந்திருந்தாள்

“ கண்ணு நீ இங்க தான் இருக்கியா?” என்று தேடி வந்த மரகதம் பேத்தியின் அருகில் அமர்ந்தாள் “சித்த முன்னாடி பரசு போன் பண்ணான் கண்ணு... நாளை மறுநாள் வெள்ளிகிழமை நாள் நல்லாருக்காம்..... சீர் எல்லாம் எடுத்துகிட்டு வர்றானாம்... உன்கிட்ட சொல்லச் சொன்னான்... நானே சொல்றது முறையில்லை நீயே ஒரு வார்த்தை சொல்லிடுனு சொன்னேன்....” என்று கூறி மரகதம் நிறுத்த.....

“ அதுக்கு பரசு என்ன சொன்னான் அம்மாச்சி?” மான்சியின் குரலில் ஆர்வம்....

“ சரி கொஞ்ச நேரங்கழிச்சு போன் பண்றேன்னு சொல்லிட்டு வச்சிட்டான்... நானும் தாத்தா போனை கையோட எடுத்துட்டு வந்துட்டேன்...” என்று மரகதம் சொன்னதும் மான்சியின் மனதுக்குள் ஒரு படபடப்பு....

தம்பி போன் பண்ணுவானா? அஞ்சு மாசம் ஆச்சே அவன் குரல் கேட்டு?... என்கூட பேசாம அவனால எப்படி இருக்க முடிந்தது? இதை எண்ணும்போதே நீயும் பேசாமல் தானே இருந்தாய்.. என்று அவள் மனம் குத்தியது


எப்போதும் போல் மரகதத்துடன் இயல்பாக பேசமுடியாமல் தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.... தோட்ட வேலை செய்யலாம் என்று பார்த்தால் குத்தங்காலிட்டு அமர்ந்தோ அதிகமாக குனிந்தோ வேலை செய்யக்கூடாது என்று டாக்டர் உத்தரவு... மான்சி நாளை மலரவிருக்கும் மொட்டுக்களை கணக்கெடுக்க ஆரம்பித்தாள்

அப்போது மரகதம் கையிலிருந்த செல் அடிக்க... மான்சி திடுக்கிடலுடன் திரும்பினாள்... ஆன்செய்து காதில் வைத்த மரகதம் “ இதோ என்கூடத்தான் இருக்கு ராசு... குடுக்குறேன் பேசு” என்றவள் மொபைலை மான்சிடம் கொடுத்து “ தம்பிதான் பேசு கண்ணு... எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்றுவிட்டு எழுந்து செல்ல..

மான்சி லேசாக நடுங்கும் விரல்களுடன் செல்லை காதில் வைத்தாள்... சற்றுநேரம் வரை அவளும் பேசவில்லை... பரசுவும் பேசவில்லை.... மான்சியால் அடக்க முடியாமல் கேவ ஆரம்பித்தாள்.... அதோடு பரசுவின் மவுனம் களைந்துவிட “ இப்ப ஏன் அழுவுற? இந்த மாதிரி இருக்குறப்ப நீ அழுவக் கூடாது... சந்தோஷமா இருக்கனும்” என்று சொல்லும்போதே அவன் குரலும் உடைந்தது...

“ அழுவாத பரசு... என்னை மன்னிச்சுக்கடா... எனக்கு வேற வழி தெரியலை பரசு... அவரை விட்டு என்னால வாழமுடியாது... அதை சொன்னா நீ ஒத்துக்க மாட்டேன்னு தான் இந்த மாதிரி பண்ணேன்... அந்த சமயத்துல அவரைத் தவிர வேற எதுவுமே என் ஞாபகத்துக்கு வரலை பரசு... எதையயாவது செய்து அவர் கடவே இருக்கனும் என்ற நெனைப்பு மட்டும் தான் என் நெஞ்சுல இருந்துச்சு... உன்னைப் பத்தி நான் யோசிக்கவே இல்லை பரசு.... மன்னிச்சுடுடா தம்பி” என்றவளின் கேவல் அழுகையாய் வெடிக்க....

எதிர்முனையில் பரசு முற்றிலும் உடைந்து போனன்... “ வேனாம்க்கா... அழாத... எனக்கு புரியுது அக்கா... நான் உன்னை புரிஞ்சுக்கிட்டேன்... நீ அழாதேயேன்” என்று கெஞ்சினான்...

மான்சியின் அழுகுரல் கேட்டு சற்று தள்ளி வேலை செய்து கொண்டிருந்த வரதன் பதட்டமாக ஓடி வந்தான்... பார்த்த விநாடியில் மான்சி அவள் தம்பியுடன் பேசுகிறாள் என்று புரிய சற்று அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து ‘ அழாமல் பேசுமாறு ஜாடையில் கெஞ்சுதலாக கூறினான்...

மான்சி அவனுக்கு தலையசைத்து சரியென்றாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.... கேவிக்கொண்டே போனில் பேசினாள் “ இத்தனை நாளா பேசலைனு கோவமா இருக்கியாடா தம்பி?” கேவலுக்கிடையே வந்தது அவள் குரல்...

பரசுவுக்கு கோபம்தான்... நேற்று வந்தவனுக்காக உடன்பிறந்த இருபது வருங்களாக ஒன்றாய் வளர்ந்தவனையே மறந்துவிட்டாளே அக்கா என்று கோபம் தான்... ஆனால் அதை சொல்லும் நேரம் இதுவல்ல... அதுவும் அவள் இப்போது இருக்கும் நிலையில் சொல்லக்கூடாதே... “ இல்லக்கா உன்மேல எனக்கு கோபமே இல்லை... முன்னாடி இருந்துச்சு... இப்போ இல்லைக்கா” என்று சமாதானம் செய்தான்...

கண்ணீரை தன் தோளில் துடைத்துக்கொண்ட மான்சி “ ம்ம் அப்பனா சரி.... நீ நல்லாருக்கியா தம்பி? ” என்று கேட்க...

“ நான் நல்லாருக்கேன் அக்கா... அம்மாச்சியும் நல்லாருக்கு... நீ நல்லாருக்கியா?” என்றவன் விநாடி நேர மவுனத்திற்கு பிறகு “ நல்லா வச்சிருக்காங்களா அக்கா?” என்று மெல்லிய குரலில் தயக்கமாக கேட்டான்...


மான்சிக்கு அவனது தயக்கம் புரிந்தது “ என்னை ரொம்ப சந்தோஷமா வச்சிருக்காங்க பரசு... ஒரு பூவைப்போல தாங்குறாங்க” என்று குரலில் சந்தோஷம் குமிழியிட கூறினாள்

“ நீ நல்லாருந்தா எனக்கு போதும்க்கா.... வெள்ளிக்கிழமை உனக்கு பூமுடிக்கவும் மருந்து குடுக்கவும் வரலாம்னு இருக்கேன் அக்கா... அவங்க எல்லார்கிட்டயும் சொல்லிடுக்கா” என்றான் பரசு

மான்சி கொஞ்சநேரம் அமைதியாக இருக்க... “ என்ன அக்கா எதுவுமே பேசமாட்டேங்கற?” ஆற்றாமையுடன வெளி வந்தது அவன் குரல்

“ இல்ல பரசு.... இதுக்கு அனுமதி நீ என் புருஷன் கிட்டதான் கேட்கனும்... அவர் மனைவிக்கு வளைகாப்பு செய்ய நீ அவர்கிட்ட தான் முதல் அனுமதி வாங்கனும்.. வீட்டுல இருக்கிற பெரியவங்க கிட்ட கூட நான் சொலலிக்கவேன்... ஆனா எனக்கு வளைகாப்பு செய்ய என் தம்பி வர்றான்னு என் புருஷனுக்கு என்னால தகவல் சொல்ல முடியாது பரசு... நீ அவரோட நம்பருக்கு கால் பண்ணி பேசி அனுமதி வாங்கு... அவர் அனுமதிக்கலைனா எனக்கு எந்த சீராட்டும் வேண்டாம் பரசு ” என்று உறுதியாக கூறினாள் மான்சி

பரசு அயர்ந்து போனான்... ஆனால் அக்கா குணம் தெரிந்து அவள் இப்படித்தான் பேசுவாள் என்று ஏன் எதிர்பார்க்கவில்லை என்ற தனக்குத்தானே குட்டிக்கொண்டு “ சரி அவர் நம்பர் குடு நான் பேசுறேன்” என்றான்

மான்சி முகத்தில் சந்தோஷத்துடன் வரதனைப் பார்த்து கையசைத்து விட்டு சத்யனின் நம்பரை பரசுவிடம் சொன்னாள்.... அதன் பிறகு ஊரில் சிலரைப் பற்றி விசாரித்தவள் இறுதியாக பரசு போனை வைக்கட்டுமா என்று கேட்டதும்

கண்ணீர் முட்டிக்கொண்டு வர “ என்னை இத்தனைவாட்டி நல்லாருக்கியான்னு கேட்டியே பரசு?... ஒரு வார்த்தை அவர் நல்லாருக்காரான்னு கேட்கலையே? அவருக்கு இப்போ உன்மேல கோபம் இல்லைடா... ரொம்ப மாறிட்டார்... அவர் மனசு குழந்தை மாதிரி பரசு அந்த மனசுல விரோதத்தை ரொம்ப நாள் வச்சுக்க முடியாது.... அதை அவராலேயே தாங்க முடியாது.. ரொம்ப நல்லவர் பரசு ” என்று தன் கணவனின் உயர்வுகள் பற்றி மான்சி கூற

பரசு அமைதியாக இருந்தான்... சற்றுநேரம் கழித்து வீம்புடன் “ சரி நான் வச்சிடுறேன்” என்று சொல்ல

மான்சிக்கும் வீம்பு வந்தது... நான் உனக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் “ சரி வச்சிடு” என்றவள் அவன் வைக்கும் முன்பு இவள் செல்லை அணைத்து வைத்தாள்....

முந்தானையால் கண்களை துடைத்த மான்சசியை நெருங்கிய வரதன் “ என்னம்மா இது? அவன்தான் சின்னப் பையன்... நீ என்னடான்னா அவன் கூடவே வீம்பு பண்ணிகிட்டு.. ஒரே நாள்ல எல்லாம் நடந்துடுமா? போகப்போக அவனும் சின்னய்யாவை புரிஞ்சுக்குவான்” என்று மான்சிக்கு ஆறுதல் சொன்னான்....




“ நிச்சயம் புரிஞ்சுக்குவான் அண்ணா.... அவர் முகத்தை கொஞ்சநேரம் பார்த்தாப் போதும் யாராலையும் கோபப்பட முடியாது” என்று சத்யனைப் பற்றி மான்சி சொல்ல....

வரதன் அவசரமாக தன் காதுகளைப் பொத்துக்கொண்டு “ அய்யோ கடவுளே இந்த பொண்ணு புருஷன் புராணத்தை ஆரம்பிடுச்சே... இதோட என் காதுல ரத்தம் வர்ற வரைக்கும் விடாதே... தினமும் எனக்கு இதே சோதனையா ஆண்டவனே” என்று போலியாக நடித்து மான்சியை கேலி செய்தான்...

அவ்வளவு நேரம் அழுத மான்சி பட்டென்று சிரித்து “ ச்சே போண்ணா நீ வரவர ரொம்ப கேலி பண்ற... நான் அவரை பத்தி பேசினா உன் காதுல ரத்தம் வருதா” என்றவள் விளையாட்டாய் வரதனை கைநீட்டி அடிக்க....

அடிக்க வந்த அவள் கையை எட்டிப் பிடித்து “ பின்ன தினமும் இதே டயலாக்கை கேட்டு கேட்டு என் காது வலிக்குது” என்றவன் மான்சி மரத்தடியிலிருந்து எழுந்திரிக்க கையைப் பிடித்து உதவினான்...

பிறகு சிறிதுநேரம் அவனுடன் பேசிய மான்சி பங்களவுக்கு திரும்ப.. வரதன் ததன் வேலைகளை கவனிக்க சென்றான்...

ஆனால் இவர்களின் நடவடிக்கைகளை மிகவும் கவனமாக தனது மொபைலில் படம்பிடித்துக்கொண்டாள் அனு... இன்றில்லாவிட்டாலும் என்றாவது உதவும் என்று படம் பிடித்து தனது லாப்டாப்பில் பதிவு செய்தாள்...

அவள் படித்த அனிமேஷன் & கிராபிக்ஸ் படிப்பை முதன் முதலாக ஒரு குடும்பத்தை களைக்கும் நோக்குடன் பயன்படுத்த திட்டமிட்டு எடுத்த படங்களில் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்தாள் அனு...


“ உலகில் உள்ள பல கல்வெட்டுகள்...

“ சாதனைகளைச் சொல்லும்!

“ உலகில் உள்ள பல கல்லரைகள்....

“ துரோகத்தைச் சொல்லும்!

“ நம்பிக்கை துரோகம் என்பது....

“ நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும்...

“ சவக்குழிகள் என்பதுதான் உண்மை!!! 

சத்யனுக்கு வசதியாக தனி கேபின் அமைத்து கொடுத்திருந்தார் ராஜா... நீண்டநேரம் அமர்ந்திருந்து முதுகு வலிக்கும் நேரத்தில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுக்க வசதியாக அமைக்கப்பட்ட அறை...

எப்போதும் சத்யனுடன் இருக்கும் வேலு என சத்யனுக்கு எந்த சிரமமும் இல்லை ... மான்சி அருகில் இல்லை என்பதைத் தவிர .... அதுவும் அவள் தூங்கும் நேரத்தை கணக்கில் கொண்டு மற்ற நேரத்தில் அடிக்கடி போன் செய்து பேசிக்கொண்டிருப்பான் ...

அன்று கொஞ்சம் அலுவல் அதிகமாக இருந்தது... ஆடிட்டருக்குத் தேவையானவற்றை பார்த்து தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ... அவன் அறையிலேயே தாத்தாவும் ராஜாவும் அமர்ந்து வேலை சேர்ந்து பார்த்தார்கள் ...

ராஜியிடம் கையொழுத்து வாங்க வேண்டிய பைல்களில் வாங்கிவிட்டு மான்சிக்கு துணையாக இருக்குமாறு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்...

" டாடி போனமாசம் மான்சிக்கு சில நகைகள் வாங்கிய பில் அப்புறம் அவளோட மெடிக்கல் பில் எல்லாம் எடுத்துட்டு வரச்சொல்லிருந்தேன் அம்மா எடுத்துட்டு வந்தாங்களா?" என்று சத்யன் கேட்க...

" ம்ம் வந்ததுமே என்கிட்ட குடுத்துட்டா சத்யா" என்றவர் தனது ப்ரீப்கேஸை திறந்து அவற்றை எடுத்துக் கொடுத்தார்....

சத்யன் அவற்றை வாங்கி தனது லாப்டாப்பில் பதிவு செய்து விட்டு அருகில் நின்றிருந்த ஸ்டெனோவிடம் கொடுத்து " இதையெல்லாம் ஆபிஸ் சிஸ்டம்ல பதிவு பண்ணிட்டு... ஆடிட்டருக்கான பைலில் சேர்த்து வைங்க " என்றதும் அந்த பெண் பணிவுடன் வாங்கி சென்றாள்

அடுத்ததாக ஒரு பைலை எடுத்து பிரித்து வைத்த சத்யனை அவன் மொபைல் அழைத்தது ... பைலை மூடிவிட்டு போனை எடுத்துப் பார்த்தான் புதிய நம்பராக இருந்தது ... ஆன் செய்து காதில் வைத்து " ஹலோ ஐ ஆம் சத்யன் .. ஹவ் ஆர் யூ" என்று ஆங்கிலத்தில் அழகாக கேட்டான்...

எதிர் முனையில் மூச்துவிடும் சப்தம் மட்டுமே கேட்டது ... எந்த பேச்சும் இல்லை....

வேலை நேரத்தில் கால் செய்து பேசாமல் இருக்கவும் சட்டென்று கோபம் துளிர்விட " ஹலோ யாருங்க கால் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க" என்று அதட்டலாக கேட்க..

மீண்டும் சிறு அமைதி... சத்யன் எரிச்சலுடன் காலை கட் செய்ய நினைக்கும் போது " நான் பரசுராமன் பேசுறேன்" என்றது எதிர் முனை ...

சத்யனுக்குள் சில்லென்று ஒரு உணர்வு .. சில நிமிடங்கள் வரை என்ன பேசுவது என்று புரியவில்லை... திடீரென்று ஏதோ தோன்ற " எந்த பரசுராமன்?" என்று கேட்டான் சத்யன் ...

இப்போது பரசுவுக்கு எரிச்சலாக இருந்திருக்கும் " ம்.... நான் என் அக்கா மான்சியோட தம்பி பரசுராமன் " என்றான் அழுத்தமான குரலில்...

சத்யனுக்கு சிரிப்பு வந்தது ... தாத்தாவும் அப்பாவும் தன்னையே கவனிப்பதை உணர்ந்து சிரித்தபடி அவர்களை நோக்கி கையசைத்தான்... அவர்களுக்கும் பேசுவது பரசு தான் என்று புரிந்தது ...சத்யன் சிரிப்புடன் இருந்ததில் பரசு மேல் அவனுக்கு கோபம் இல்லை என்று புரிந்த அவர்களுக்கும் சந்தோஷம் தான் .... பேசு பேசு என்று ஜாடை செய்தனர்
" ஓ உன் அக்கா மான்சியோட தம்பியா ? ம்ம் ... சரி என்ன விஷயமா கால் பண்ண?" என்று குரலில் கேலியை கஷ்டப்பட்டு மறைத்து இலகுவாக பேசினான் ...

" என் அக்காவுக்கு ஐஞ்சாம் மாசம் சீர் செய்யனும் அதுக்காக நான் நாளைக்கு வர்றேன் ... வீட்டுக்குப் போன் பண்ணேன் .. அக்கா பேசுச்சு .. அதுகிட்ட சொன்னதுக்கு .... உங்ககிட்டயும் வீட்டு பெரியவங்ககிட்டயும் பேசி அனுமதி வாங்க சொல்லுச்சு ... அக்காதான் இந்த நம்பர் குடுத்துச்சு .." பரசு படபடவென பேசினான் .. அவன் குரலில் ஒழிவு மறைவு இல்லை ...

சத்யன் அமைதியாக இருந்தான்... மான்சியை கொண்டாடியது அவன் மனது ... ஆரோக்கியத்துடன் இருக்கும் கணவனையே பெண்கள் அலட்சியப்படுத்தும் இந்த காலத்தில் தனக்கு மரியாதை தரும் மான்சியை மனதிற்க்குள் மெச்சிய வாறு " ம்ம்" என்று மட்டும் சொன்னான்நசத்யன்

சற்றுநேர அமைதிக்குப் பின் " என் அக்காவுக்கு சீர் செய்ய உங்க அனுமதி வேனும்" பரசுவின் குரலில் இருந்த உறுதி சத்யனை நிமிர வைத்தது

ம்ம் யாரு மான்சியோட தம்பியாச்சே... சத்யன் உதட்டில் வழிந்த புன்னகையுடன் " மான்சி உன் அக்கா ... அவளுக்கு செய்ய என் அனுமதி தேவையில்லை .. நீ எப்ப நினைக்கிறயே அப்ப வரலாம்" என்றான் நட்பான குரலில் ...

பரசு சத்யனிடம் இதை எதிர்பார்க்க வில்லை என்பது அவனது மவுனத்திலேயெ தெரிந்தது ... சத்யன் மறுப்பான் ... அனுமதிக்க மாட்டான் என்று எண்ணியிருந்தான்... ஏனென்றால் சத்யனை பரசு சந்தித்த இரு சந்தர்பமும் சரியில்லாதது அல்லவா? சத்யனின் இந்த மாற்றம் பரசுவின் புன்பட்ட நெஞ்சுக்கு இதமாக இருந்தது... எதிர்முனையில் சத்யன் காத்திருப்பதை உணர்ந்து .. ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டு ".நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாள் நல்லாருக்கு அன்னைக்கே வரலாம்னு இருக்கேன்... உங்க எல்லாருக்கும் அன்னைக்கு வசதிப்படுமா? " என்று கேட்க ...

" ம்ம் வெள்ளிக்கிழமைனா எங்களுக்கு வசதிதான்.. அன்னிக்கே வா பரசு" என்று முதன் முதலாக மைத்துனன் பெயர் சொல்லி அழைத்த சத்யன் " இங்க தாத்தாவும் அப்பாவும் இருக்காங்க அவங்ககிட்டயும் பேசு பரசு" என்றான்

சத்யன் தனது பெயர் சொல்லி அழைத்ததும் நெகிழ்ந்துபோன பரசு " ம்ம் குடுங்க" என்றான்

சத்யன் போனை தாத்தாவிடம் நீட்ட... அவர் வாங்கியதுமே " பரசுராமா என்னைக்குபா வர்ற? " என்றுதான் கேட்டார்

பரசு அனுமதி கேட்க வந்தால் அவரோ எப்ப வர்ற என்று கேட்டதும் பரசு மேலும் அன்பினால் துவண்டான் " வெள்ளிக்கிழமை காலையில அங்க இருப்பேன் ஐயா" என்றான் ...

" சரி பரசுராமா... நாங்க தயாரா இருக்கோம்.. நீ கிளம்பி வா ... இரு ராஜா கிட்ட பேசு " என்று மகனிடம் போனை கொடுத்தார் பெரியவர்

" பரசு உனக்கு இப்போ உடம்புக்கு பரவாயில்லையா ?" ராஜா அக்கரையுடன் விசாரிக்கவும் பரசு நொருங்கிப்போனான் ...

" ம் நல்லாருக்கேன்ங்க ... நான் வெள்ளிக்கிழமை மதுரை வர்றேங்க" என்று அவரிடமும் தகவல் சொன்னான் ...

" சரி பரசு " என்றவர் போனை சத்யனிடம் கொடுக்க ... சத்யன் போனை காதில் வைத்து " ஓகே பரசு வச்சுடவா?" என்று சத்யன் கேட்க .....

பரசு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் ... அவன் இன்னும் ஏதோ சொல்ல விரும்புகிறான் என்று புரிய " என்ன பரசு.. ஏதாவது சொல்லனுமா?" என்று சத்யனே கேட்டான்...

ஒரு நீண்ட மவுனத்திற்கு பிறகு மிக மெல்லிய குரலில் “ நீங்க நல்லாருக்கீங்களா?” என்று பரசு கேட்டதும் சத்யனுக்குள் இருந்த கடினமான ஒன்று உடைந்து உருகி பரசுவைத் தேடி ஓடியது....

மான்சி,, என் புருஷனைப் பத்தி கேட்கமாட்டியா? என்று கேட்டபோது மவுனமாக இருந்தவனால் இப்போது சத்யனுடன் பேசும்போது அந்த மவுனம் உடைந்துவிட்டது... மீண்டும் கேட்டான் பரசு “ நீங்க நல்லாருக்கீங்களா மச்சான்?” அவன் குரல் உடைந்து நீர் கசிந்தது..

ஏனோ சத்யனுக்கும் கண்கலங்கியது... பரசுவின் மச்சான் என்ற அழைப்பு பலகோடி சந்தோஷத்தை கொடுத்தது.... “ ம்ம் நல்லாருக்கேன் பரசு....” என்று கரகரத்த குரலில் கூறியவன் “ என் மான்சி இருக்கும்போது எனக்கென்ன குறை... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பரசு” என்று தொண்டை அடைக்க கூறினான்...

பரசு அழும் குரல் எதிர்முனையில் கேட்டதும் சத்யன் பதறிப்போய் “ அழாத பரசு... எங்களுக்கு எந்த குறையும் இல்லை நாங்க நல்லாருக்கோம்.... நான் சீக்கிரம் எழுந்து நடமாடி மான்சி ஒரு முழுமையான புருஷனா மாறுவேன்னு நம்பிக்கை இருக்கு... என்னோட நம்பிக்கை பொய்க்காது பரசு... நீயும் அதை நம்பு” என்று சத்யன் தீர்கமாக கூறியதும்...

மெல்லிய அழுகையுடனே “ ம்ம் நானும் நம்புறேன் மச்சான்... நீங்களும் என் அக்காவும் நூறு வருஷத்துக்கும் மேலே வாழ்ந்து இன்னும் நிறைய புள்ளைங்க பெத்துக்குவீங்க” என்றவனின் குரல் அதற்குமேல் பேச முடியாமல் தொண்டையை அடைக்க “ என்னால பேசமுடியலை.... நான் வச்சிடுறேன் மச்சான்” என்று சத்யனின் பதிலை கூட எதிர்பார்க்காமல் இணைப்பை துண்டித்தான்...

சத்யன் சற்றுநேரம் போனையேப் பார்த்துக்கொண்டிதுக்க ராஜா எழுந்து வந்து அவன் தோளில் ஆறுதலாக கைவைத்து “ பரசு ரொம்ப எமோஷனாயிட்டானா?” என்று கேட்க..

ஆமாம் என்பது போல் தலையசைத்த சத்யன் அவர் கைமேல் தன் கையை வைத்து “ அப்பா நான் சீக்கிரம் சரியாயிடுவேன்ல?” என்று சிறு பையன் போல் கேட்டதும்



ராஜா மகனின் முகத்தை வயிற்றோடு அணைத்துக்கொண்டார் “ நல்லாயிடுவ சத்யா.... நிச்சயம் ஏதாவது ஒரு வழி பிறக்கும்” என்று மகனை ஆறுதல் படுத்தினார்

“ அப்பா நான் மான்சியை பார்க்கனும்... வீட்டுக்குப் போறேன்பா” என்று சத்யன் கூறிய மறு நொடி பெரியவர் வேலுவை அழைக்க... வேலு உடனே ஓடி வந்தான்

“ வேலு காரை ரெடியா இருக்க சொல்லு... சத்யன் வீட்டுக்குப் போறான்” என்று பெரியவர் உத்தரவிட்டதும் வேலு கார் டிரைவரைத் தேடி வெளியே ஓடினான்

சற்றுநேரத்தில் சத்யனை வேலுவுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்....

“ எனது ஒரு கோடி கனவுகளும்...

“ உன் தழுவலுக்காக ஏங்கித் தவமிருக்கிறது!

“ நீ பேசி சிரிக்கும் ஆறுதலைவிட....

“ மவுனமாக என்னைத் தழுவிக்....

“ கொடுக்கும் ஆறுதல் தான் .....

“ எப்போதும் வேண்டும்! 


No comments:

Post a Comment