Friday, January 8, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 18

அவன் அருகாமையும் நெருக்கமும் மான்சியின் இளம் மனதில் பல ஆசைகளை தூண்டியது... அதிலும் அந்த முரட்டு உதடுகள் அவள் முகத்தில் பட்ட போதெல்லாம் மான்சி தன்னை மறந்தாள்.... சீக்கிரமே அவனுடன் கலக்கும் நாள் வரும் என்று நல்லது கூறும் பட்சி ஒன்று அவள் காதுகளில் அடிக்கடி கூறிவிட்டு சென்றது....

அவளின் பெண்மை பூத்த இத்தனை காலத்தில் முதன்முறையாக பாலணுக்கள் உயிர்த்து ரத்தத்தில் கலந்து தனது இயக்கத்தை ஆரம்பித்தது.... சத்யனைப் பார்க்கும் பார்வைகள் அணைத்தும் காதல் பார்வையாக மாறிப் போனது.... அவன் புருவம் உயர்த்திக் கேட்கும்போது அவசரமாய் ஓடிவந்து அவன் கன்னத்தில் தன் இதழ்களை பதித்துவிட்டு ஓடிவிடும் அந்த நீலோன் மணிப்புறா...



உடல் உறவு இல்லாமல் காதலோடு கட்டித்தழுவி கொண்டு காலத்தை கடத்த கற்றுக்கொண்டனர் இருவரும்... மான்சியை பார்த்தவுடன் உள்ளுக்குள் ஏற்படும் கிளர்ச்சி மாறி.... சத்யனின் இதயத்தில் வீணை தந்திகளை இழுத்துக் கட்டி தடவித் தடவி மீட்டினார்கள்.... மான்சி வெட்கமாய் தலைசாய்த்து சிரித்தாள் என்றாள் இவனது இதயம் ஒரு பனிக் குளியலுக்கு போனது....

மனைவியை நெஞ்சில் சுமந்தபடி பால்கனியில் படுத்துக்கொண்டு நிலவின் அழகை ரசிக்க கற்றுக்கொடுத்தாள் மான்சி... சத்யன் என்ற கல்லிலிருந்து பல அழகான சிற்பங்களை கண்டு பிடித்தாள் மான்சி...

சத்யன் என்ற எரிமலையை சாந்தப்படுத்தும் சக்தி மான்சியின் புன்னகையில் இருந்தது... எரிமலையின் மீது காதலெனும் நீர் தெளித்து புன்னகையால் புதுக் கோலம் போட்டு... தாம்பத்யம் எனும் பூசனிப் பூவை தினமும் வைத்து ரசித்தாள் மான்சி....

மான்சியின் கடைவிழியோர சுருக்கத்தின் மடிப்பில் தன்னை சிறை வைத்துக்க்கொண்டான் சத்யன்....

அழகான தோட்டத்தில் பூத்த வாடாத ஜோடி மலர்களாக எப்போதும் புன்னகையும் பூரிப்புமாக கிடந்தனர் இருவரும்...



“ ஒரு ஜோடி உதடுகள் கல்லாகி...

“ ஒரு ஜோடி உதடுகள் உளியாகி....

“ இரு ஜோடி உதடுகள் இணைந்து...

“ செதுக்க செதுக்க...

“ தேன் கசியும் ஒரு நிகழ்ச்சிதான்....

“ முத்தமிடுவதும்...

“ முத்தமிடப் படுவதும்! 

அதன்பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இருவரின் பொழுதும் அதிகநேரம் மருத்துவமனையிலேயே கழிந்தது ... பலதரப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு சத்யனிடம் சேகரிக்ப்பட்ட வீரியமுள்ள இரண்டு அணுக்கள் பல சோதனைகளுக்குப் பின் வெளியே வளர்க்கப்பட்டு இரண்டாவது மாதம் மான்சியின் கருப்பையில் செலுத்தப்பட்டது ....

திருமணம் முடிந்து நான்கு மாதம் ஆனநிலையில் மான்சி தனது கன்னித் தன்மையை இழக்காமலேயே தன் காதல் கணவனின் கருவை சுமக்க ஆரம்பித்தாள் ....

சத்யன் எப்போதும் மான்சியை தனது கையணைப்பிலேயே வைத்திருக்க நினைத்தான் ... அந்த குடும்பம் முழுவதும் மான்சியை பூவாய் தாங்கியது .... மான்சியால் அடிக்கடி மாடியேறி வரமுடியாது என்று சத்யன் தனது அறையை கீழ்த் தளத்திறேகு மாற்றிக் கொண்டான் ..

தண்டபாணி குடும்பத்தின் ஏளனம் மட்டும் மாறவேயில்லை ... மான்சியை விரட்ட ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்து கிடந்தனர் ...

மருத்துவபரிசோதனைகள் முடிந்து மீண்டும் மருத்துவமனைக்கு செல்லவேண்டியதில்லை என்றானதும் சத்யன் தாத்தாவுடன் கம்பெனிக்கு செல்ல ஆரம்பித்தான் ... ஆனால் மான்சியில் தான் அவனுடன் செல்ல முடியவில்லை ....

அந்த சிலமணிநேர இடைவெளி கொடுத்த துன்பத்தில் அவன் தனது காதலை உணர ஆரம்பித்தான்... மனைவியிடம் போனில் பேசி தனது தாகத்தை தனித்துக்கொள்வான் ...

மான்சியின் மணிவயிற்றைப் போலவே சத்யனின் காதலும் படிப்படியாக வளர்ந்தது... ஒவ்வொரு நொடியும் தன் காதலை உணர ஆரம்பித்தான் .. முதல் சந்திப்பில் மான்சியின் கண்ணீரும் புரிந்தது ... அதற்கான அர்த்தமும் புரிந்தது

இருவரும் காதலை பரிமாறிக்கொள்ள வில்லையேத் தவிர.. அதை அனுபவித்து வாழ்ந்தார்கள்.... அறைக்குள் சென்றால் அவர்களுக்கென்று ஒரு தனியுலகம் ....

சத்யன் முதல் முறையாக காமம் இல்லாமல் பெண் துணையை ரசிக்க கற்றுக்கொண்டான் ... அவர்களின் புரிதலான காதலில் காமம் கதவுக்குப் பின்னால் கைக்கட்டி வாய்ப் பொத்தி நின்றது

தான் முழுமையாக ஒரு புருஷனாக மாறிய பிறகுதான் தனது காதலை சொல்லவேண்டும் என்று சத்யன் காத்திருந்தான்.... மனைவியாக ஏற்ற தன்னை அவன் காதலியாகவும் ஏற்றுக்கொண்ட பிறகுதான் தன் மனதை திறக்க வேண்டும் என்று மான்சி காத்திருந்தாள்...

ஒவ்வொரு இளைஞனின் பதினாறாவது வயதில் வாழ்க்கை அவன் முன் இரண்டு அம்சங்களை வைக்கிறது... ஒன்று சவப்பெட்டி... மற்றொன்று சிறகுகள்.... பலர் உல்லாசம் எனும் சவப்பெட்டியை தான் தேர்வு செய்கிறார்கள்.. வெகு சிலரே சிறகுகளைக் கட்டிக்கொண்டு விண்ணைத்தாண்டி பறக்க முயல்வார்கள்...

இவர்களில் சத்யன் வித்யாசமானவன்... சிறகுகளை கட்டிக்கொண்டு சவப்பெட்டியில் படுத்துக்கொண்டவன்... அவன் சிறகுகள் துண்டிக்கப்படும் நேரம் சரியாக மான்சி அவன் வாழ்வில் வந்தாள்... சவப்பெட்டியில் இருந்து சத்யனை எழுப்பி அவன் சிறகுகளுக்கு உயிர்கொடுத்து தன்னுடன் இழுத்துச்சென்று பறக்க கற்றுத் தருகிறாள்

“ சிறகுகளோ...

“ சவப்பெட்டியோ...

“ வாழ்க்கை எதுவாயிருந்தாலும்..

“ நமது தெளிவான சிந்தனையில் தான்...

தொடர்ந்து கம்பெனிக்கு செல்ல செல்ல கம்பெனியின் நெளிவு சுளிவுகள் கணக்கு வழக்குகள் என எல்லாம் சத்யனுக்கு அத்துப்பியானது .. கம்பெனியிலும் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தான்

தண்டபாணியின் சில தில்லுமுள்ளுகளை கண்டுபிடித்து தாத்தாவிடமும் அப்பாவிடமும் சத்யன் கூறியபோது அவர்கள் அதிர்ந்துதான் போனார்கள் ..... ஏனென்றால் தண்டபாணி பதுக்கி வைத்த கிராணைட் கற்க்களின் மதிப்பு அப்படி ...

ரகசியமான சில ஆட்களை நியமித்து தண்டபாணியின் நடவடிக்கைகளை கண்கானித்தபோது இன்னும் அதிர்ச்சித் தரும் பல தகவல்கள் கிடைத்தது

இவர்கள் கம்பெனியின் பெயரில் வரவழைக்கப்பட்ட கற்கள் ஒரு வெட்ட வெளியில் பெரிய பெரிய ராட்சத பள்ளங்கள் எடுக்கப்பட்டு அந்த பள்ளங்களில் கிரானைட் கற்கள் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டு அதன் மேல் ஆற்று மணல் கொட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது

அவற்றின் மதிப்பை கேட்டு சொக்கலிங்கத்துக்கே தலை சுற்றிப் போனது .... தண்டபாணியை நேரடியாக கூப்பிட்டு விசாரித்தார் பெரியவர்...

கையும் களவுமாக மாட்டிக் கொண்டபின் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார் தண்டபாணி... ஆனால் ராஜா ஆத்திரத்துடன் போலீஸ்க்கு தகவல் தெரிவித்து விட கிரானைட் கற்களை சட்ட விரோதமாக பதுக்கிய குற்றத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார் தண்டபாணி ... விசாரனைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்...

அப்பா போலீஸ் காவலுக்கு சென்றவுடன் ரொம்பவே உடைந்து போனது அனுரேகா தான் ... அவளால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ... எல்லாவற்றுக்கும் காரணம் மான்சிதான் என்று கருவினாள் ... ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே அந்த வீட்டை விட்டு செல்லத் துடிக்கும் அனு .. இப்போது அமைதியாக அங்கேயே இருந்தது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது

நெஞ்சம் முழுவதும் விஷத்துடன் மான்சியின் மேல் அதைத் துப்ப காத்திருந்தாள் அனு .... வலுவான சந்தர்பத்தை தேடி வஞ்சத்துடன் காத்திருக்க தொடங்கினாள் ...

கணவன் மாட்டிக் கொண்டான் என்றதும் கோமதி கூட கொஞ்சம் அடங்கிப் போனாள் ... அனுகூட தனது நடை உடை பாவனை அனைத்தையும் மாற்றிக் கொண்டாள் ... இல்லை இல்லை மாற்றிக்கொண்டது போல் நடித்தாள்.... சோகமே உருவாக வலம்வந்த தாயையும் மகளையும் அந்த வீட்டைவிட்டு அனுப்ப மனமின்றி விட்டுவிட்டார் சொக்கலிங்கம்...

மான்சியின் மீதே கண் வைத்து சுற்றிவந்த அனுவுக்கு சிக்கியது வரதன் மான்சி இருவரின் அன்பான உறவு.... அதை அசிங்கமான உறவாக மாற்றுவது எப்படி என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தவளுக்கு பல ஐடியாக்கள் வந்தாலும் மான்சி பிள்ளையை சுமக்கும் இந்த நேரத்தில் தனது ஐடியாவை செயல்படுத்தினால் அது சரியாக வராது என்று முடிவு செய்து மான்சி பிள்ளை பெறும் வரை காத்திருந்தாள் ....

“ தென்னங்கீற்று அழகு...

“ விளக்குமாறு அசிங்கம்...

“ பொருள் ஒன்றேதான்..

“ தரம் அதன் தோற்றத்தால்!

“ பெண்களும் இப்படித்தான்...

“ தரமும் தராதரமும்...

“ அவர்களின் நடத்தையில் தான்! 



மான்சிக்கு ஐந்தாவது மாதம் ஆரம்பித்தது..... கர்பிணிப் பெண்ணுக்கு இயற்க்கையாய் ஏற்ப்படும் தாய்வீட்டு ஏக்கம் மான்சிக்கும் வந்தது.... இத்தனை நாளில் பரசு ஒருமுறைகூட அவளை வந்து பார்க்கவில்லை.. அவளிடம் பேசவுமில்லை...

ஆனால் தினமும் மரகதத்திற்கு போன் செய்து... தனது அக்காவின் நலன் பற்றி அக்கரையாக விசாரித்துக் கொள்வான்... மான்சியின் உடல்நிலை பற்றிய தகவல் சத்யனுக்கு அடுத்தபடியாக பரசுவுக்கு தான் தெரியும் எனுமளவுக்கு உடனுக்குடன் அவனுக்கு தகவல் தெரிய ஏற்பாடு செய்திருந்தார் சொக்கலிங்கம்...

அன்றும் அப்படித்தான் மரகதத்திடம் போன் செய்து மான்சியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான் பரசு...

“ கண்ணு அக்காளுக்கு இது அஞ்சாவது மாசம்.... அம்மா வீட்டுல இருந்து வந்து பூ முடிச்சு... அப்புறம் மசக்கைக்கு மருந்து அரைச்சு குடுத்து.... நல்லது பொல்லது ஆக்கிப் போடனும்... ஆனா நம்ம பக்கம் யாரும் செய்யாததால அவுகளே செய்யப் போறதா இன்னைக்கு பேசிக்கிட்டாகப்பா” என்று பரசுவிடம் தகவல் சொல்ல...

பரசுவிடம் சில நிமிடங்கள் அமைதி.... “ ஏன் அம்மாச்சி யாருமில்லை? நான் என்ன செத்தா போயிட்டேன்? என் அக்காவுக்கு நான் சீர் செய்ய மாட்டேனா? என்னதான் நெனைச்சிக்கிட்டு இருக்காங்க அந்த பணக்காரங்க... ” படபடவென்று பொரிந்து தள்ளினான் பரசு...

“ அவங்க அப்படி சொல்லலை கண்ணு.....” என்று மரகதம் சமாளிக்க....

“ நீ சும்மா இரு அம்மாச்சி.... எல்லாம் எனக்கும் தெரியும்... நல்லநாள் பார்த்து அக்காவுக்கு சீர் செய்ய நானும் பெரிய அம்மாச்சியும் வர்றோம்னு அந்த பெரிய மனுஷங்களுக்கு தகவல் சொல்லு.... கல்யாணத்தை எனக்கு சொல்லாம செய்த மாதிரி இதையும் செய்துட போறாங்க? அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன்” என்ற எச்சரிக்கையுடன் போனை வைத்தான்...

மரகதத்துக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.... எழுந்து பெரியவரின் அறைக்குப் போய் நின்றாள் “ ஐயா,, மான்சிக்கு சீர் செய்ய என் பேரன் பரசு வர்றேன்னு சொல்லிருக்கான்... அவன் வராம யாரும் எதுவும் செய்யக்கூடாதுனு கன்டிசனா சொல்லிருக்கானுங்க” என்று கூற...

“ வரட்டுமே மரகதம்... அவன் அக்காவுக்கு செய்றதை யார் தடுக்கப் போறா? எனக்கு சந்தோஷம் தான்... எல்லார்ட்டயும் தகவல் சொல்லிடலாம்” என்றார்

தங்களின் அறையில் சோர்வுடன் கட்டிலில் படுத்திருந்தாள் மான்சி... சத்யன் அவனே இயக்கும் நவீன வீல்சேரில் அமர்ந்து தனது லேப்டாப்பில் வேலைசெய்து கொண்டிருந்தான்... அடிக்கடி அவன் பார்வை மான்சியிடம் சென்று வந்தது...

இப்போதெல்லாம் இவன் எவ்வளவு அன்பாக இருந்தாலும் அதையும் மீறி அவள் விழிகள் எதையோ தேடியது... சட்டென்று வந்து போகும் ஏக்கத்தின் ரேகைகளை சத்யன் கண்டு வைத்திருந்தான்.... எது என்று புரியாமல் மனைவியின் முகத்தையே அடிக்கடி பார்த்தான்...

அவள் மெதுவாக புரண்டு படுக்க.... சத்யன் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு வீல்சேரை திருப்பிக்கொண்டு கட்டிலின் அருகில் வந்தான்... எட்டி அவள் கூந்தலை வருடியவன் “ என்னடா? என்ன பண்ணுது... காலையிலேயே ரொம்ப டல்லா இருக்கியே? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? ” என்று கேட்க...

கண்விழித்து அவனை பார்த்தவள் “ ம்ஹூம் அதெல்லாம் ஒன்னுமில்ல... நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றவள் சற்று பொறுத்து “ நீங்க இன்னைக்கு கம்பெனிக்கு போகாம என்கூடவே இருங்களேன்...” என கேட்க

இதைவிட சத்யனுக்கு வேறன்ன சந்தோஷம்?.. மான்சியின் அருகில் இருப்பதென்றால் வேறு எதுவுமே வேண்டாமே? மனைவியின் கூந்தலை வருடியவன் .. .. " சரிடா தாத்தாவுக்கு கால் பண்ணி அவரை பார்த்துக்க சொல்லிட்டு உன் கூடவே இருக்கேன்" என்றான்

சொன்னதோடு அல்லாமல் தனது மொபைலை எடுத்து தாத்தாவின் நம்பருக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான் ... அவர் எடுத்ததும் " தாத்தா நான் நாளைக்கு கம்பெனிக்கு வர்றேன் .. இன்னைக்கு மான்சி கூட இருக்கலாம்னு ப்ளான் தாத்தா" என்று சொல்ல ...

அவர் மறுபுறம் என்ன சொன்னாரோ .... சத்யன் லேசாய் சிரித்து " இல்ல தாத்தா .. கொஞ்சம் டல்லா இருக்கா .. வெளிய எங்கயாவது கூட்டிப் போய்ட்டு வரலாம்னு நெனைச்சேன்... அவ்வளவுதான் ... மத்தபடி மான்சி நல்லாதான் இருக்கா" என்றவன் அன்றைக்கு அவன் பார்க்க வேண்டிய அலுவல்களை வரிசையாக தாத்தாவிடம் சொன்னான் ...

மான்சி அவன் பேசுவதையே பெருமையாக பார்த்துக் கொண்டிருந்தாள் ... இப்போதெல்லாம் சத்யனின்றி கம்பெனியில் ஒரு அனுவும் அசையவில்லை ... கம்பெனி சம்மந்தப்பட்ட எல்லாவற்றையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தான்

தாத்தாவிடம் பேசிவிட்டு வந்த சத்யன் மனைவியின் காதல் பார்வையைப் பார்த்து புன்னகையுடன் " மேடம் நான் ரெடி இப்போ என்ன செய்யனும் ? ..... அல்லது எங்க போகனும்? உத்தரவிடுங்க மேடம்?" என்றான் குறும்பாக ...

மான்சி உதடு சுளித்து சிரித்தவாறு " எங்கயும் போகவும் வேண்டாம் ..எதுவும் செய்யவும் வேண்டாம் ... அமைதியா இங்க வந்து என்னை கட்டிகிட்டு படுங்க" என்று சொன்னதும்

சத்யன் உதடு குவித்து விசிலடித்தான் ... " அதுதான் எனக்கு பிடிச்ச விஷயமாச்சே ... இதோ வர்றேன்" என்றான்

மான்சி கட்டிலில் இருந்து இறங்கி சத்யனின் கால்களை சேர்த்துப் பிடித்து கட்டிலில் வைக்க ... சத்யன் கட்டிலில் ஒரு கையை ஊன்றி இடுப்பை இழுத்துக்கொண்டு கட்டிலில் தாவினான் ... குறுக்கே விழுந்தவன் மெல்ல நகர்ந்து நகர்ந்து நேராக திரும்பி படுத்துக் கொண்டான் ...

மான்சி சிரிப்புடன் அவனருகில் சரிந்து படுத்து " இப்பல்லாம் வேலு இல்லாம நீங்கள பெட்டுக்கு வந்துடுறீங்க" என்று சந்தோஷமாக கூற...

" பின்ன எத்தனை நாள் இதுக்கு பயிற்சி எடுத்தேன்..... மான்சி என்னோட தன்நம்பிக்கைதான் என்னை இந்தளவுக்கு தயார் செய்தது ... அந்த தன்நம்பிக்கையை கொடுத்தது நீதான் மான்சி.... உன்னை பார்க்கும் போதெல்லாம் இவளுக்கேத்த புருஷனா நான் மாறனும்னு வெறி வருது மான்சி ... அதுதான் இவ்வளவுக்கும் காரணம் " என்றான் ..

மான்சி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் வலது கையை எடுத்து தனது மேடிட்ட வயிற்றின் மீது வைத்துக் கொண்டாள் ... ஐந்துமாத வயிறு அழகான தாய்மையை உணர்த்தும் வயிறு... தாய்மை எவ்வளவு அழகென்று மான்சியை பார்த்துதான் புரிந்து கொண்டான் சத்யன் ...

சத்யனின் விரல்கள் மான்சியின் வயிற்றை இதமாய் வருடியது ... சத்யன் ஏதோ பேச வாய் திறந்தபோது அறை கதவு தட்டப்பட்டது ... " சத்யா " என்று ராஜா அழைக்க..

" யெஸ் கமின் டாடி" என்று சத்யன் அழைக்க ...
மான்சி சட்டென்று விலகி கட்டிலில் இருந்து இறங்கினாள் ..

உள்ளே வந்தனர் ராஜாவும் ராஜியும் ராஜி மருமகளின் தோளை ஆதரவோடு பற்றி " மான்சி உனக்கு ஒரு குட்நியூஸ்.... உன் தம்பி பரசு உனக்கு ஐந்தாவது மாசம் சீர் செய்ய வர்றானாம்... மரகதம்மா இப்பதான் சொன்னாங்க" என்று சொல்ல ...

மான்சி சந்தோஷத்தில் விழிகள் விரிய " நெஜமாவா அத்தை? என் தம்பியா வர்றான்" என கேட்க...

" ம்ம் உன் தம்பியேதான்...... அதுவும் அவன் வர்றதுக்குள்ள நாங்க எதுவும் செய்யகுகூடாதுனு ஆர்டர் வேற போட்டிருக்கான்" என்றாள் ராஜி ...

மான்சி திரும்பி சத்யனைப் பார்த்தாள் ... அவன் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு .... மான்சி மீண்டும் ராஜியைப் பார்த்து " சரி அத்தை வரட்டும்.... ஆனா அவனோட மச்சானுக்கு தகுந்த மரியாதை கொடுத்தாதான் அவன் செய்ற சீரை நான் ஏத்துக்குவேன்.. அது மட்டும் உறுதி" என்றாள் தீர்க்கமாக ...

ராஜி மருமகளை வியப்புடன் பார்க்க... ராஜா " ம்ம் நீ நடத்து மருமகளே" என்றார் பெருமையுடன்...

ராஜாவும் ராஜியும் விடைபெற்று சென்றதும் .. மான்சி சத்யனின் அருகிலம அமர ..

அவள் கையைப் பிடித்து இழுத்து தன் நெஞ்சில் சரித்த சத்யன் சற்றுநேரம் அவளை இறுக்கியபடி இருந்துவிட்டு " உனக்காக நான் என்னடி செய்திருக்கேன்? எதுக்காக என்மேல இவ்வளவு அன்பு? " என்று நெகிழ்ச்சியுடன் கேட்க ...

மான்சி வழக்கம் போல் அவன் மீசையை பிடித்து இழுத்து .... " நீங்க என்ன செய்யனும்? உங்க பொண்டாட்டியா இருக்க என்னை அனுமதிச்சிருக்கீங்களே ,அது போதாதா? அன்பு தரமும் இடமும் பார்த்து வராதுங்க" என்றாள் கனிவுடன்

சத்யன் அவள் வார்த்தையில் உருகிப்போனான் ... இந்த கபடற்ற தூய்மையான அன்புதான் தனக்கு உயிர்ப் பால் ஊற்றி பிழைக்க வைத்தது' என்று எண்ணினான் ... இவ்வளவு நாட்களாக சலிக்காமல் அவள் தரும் அன்பு இணையாக தான் திருப்பி கொடுக்கவேண்டியது கடலளவு இருக்கிறது என்று நினைத்தான்



" என்னருகே ஒட்டு மொத்த நதியே.....

" ஒருக்களித்துக் கிடக்கிறது.....

" எவ்வளவு அள்ளிப் பருகியும் ....

" என் தாகம்தான் தனியவில்லை!


No comments:

Post a Comment