Thursday, January 7, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 13

அறைக்குள் நுழைந்த மான்சி புன்னகையுடன் சத்யனைப் பார்த்தபோது அவனால் பதிலுக்கு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை... பெட்டியை வைத்துவிட்டு வேலு சென்றதும் அறைக் கதவை வெறுமென மூடிவிட்டு வந்து சத்யனின் அருகில் கட்டிலில் அமர்ந்தாள்...

உடலை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தவாறு படுத்த சத்யன் அவள் விரல்களை நீவியபடி “ என்ன தாத்தா கிட்ட சொல்லியாச்சா?” என்று கேட்க...

நிமிர்ந்து அமர்ந்திருந்தவள் சற்றே சரிந்து “ ம்ம் சொன்னேன் சரிம்மானு ஒத்துக்கிட்டாங்க” என்றவள் அவன் தலையை தன் பக்கமாக இழுத்து முடிகளுக்குள் விரலை நுழைத்து கோதியவாறு “ மாத்திரைகள் நைட் தான்னு வேலு சொன்னார்.... இப்போ கொஞ்ச நேரம் தூங்குங்க...” என்று அவன் முடிக்கள் விரல் விட்டு வருட வருட சத்யனின் கண்கள் சொருகியது...



“ நீ பேசலாம்னு சொன்னியே?” குரல் சுரத்தில்லாமல் வந்தது... இன்னும் வாகாக அவள் பக்கம் உடலைத் திருப்பியவன் இடுப்பு திரும்பாமல் போகவே மான்சியை நிமிர்ந்து பார்த்து வேலுவை கூப்பிடேன் எனக்கு உன் பக்கமா ஒருக்களித்து படுக்கனும்” என்றான்

மான்சி கட்டிலை விட்டு இறங்கி “ வேலு ஏன்? என்னப் பண்ணனும்னு சொல்லுங்க நானே செய்றேன்” என்றாள்...

“ ம்ம் நான் முதுகைத் திருப்பும் போது நீ இடுப்பையும் சேர்த்து திருப்பினா நான் திரும்படுவேன் என்றான்....

மான்சி அதேபோல் சத்யனின் இடுப்பைப் பற்றி ஒரு பக்கமாக திருப்ப... அவனது கனத்த வலது தொடை பொத்தென்று புரண்டு இடது பக்கமாக விழ மான்சி பயத்துடன் கையை எடுத்துக் கொண்டாள்...

அவளைப் பார்த்து சிரித்த சத்யன் “ என்ன பயந்துட்டயா? புரண்டா அப்படித்தான் வந்து விழும்... நீ அந்த கால் முட்டிக்கு கீழே ஒரு தலைகாணியை வச்சுட்டு இங்கே வா” என்றான்...

அவன் சொன்னதுபோல் வலது கால் முட்டிக்கு கீழே ஒரு தலையணையை வைத்தவள் பெட்சீட்டை இடுப்பு வரை போர்த்தி விட்டு சத்யனின் அருகில் முன்போல் வந்து அமர்ந்தாள்...

சத்யன் அவளது கையை எடுத்து தனது தலை முடிக்குள் விட்டு “ கொஞ்சம் முன்னாடி செய்தயே அதுபோல் பண்ணு மான்சி” என்று கேட்க... மான்சி புன்னகையுடன் சரிந்து அவன் பக்கமாக திரும்பி அவன் முடியை விரல்களால் கோதி விட்டாள்...

சத்யன் தனது கையால் மான்சியின் இடுப்பை சுற்றி வளைத்துக்கொண்டு மான்சியின் சுகமான வருடலில் உடனே உறங்க ஆரம்பித்தான்... இதுபோல் உடனே உறங்குவது சத்யனுக்கு புதிது... எதையாவது எண்ணிக் குழம்பி தவித்து உறக்கம் வராமல் டிவியையும் மொபைலையும் நோண்டிக்கொண்டிருப்பான்... இன்று மான்சியின் இதமான வருடல் அவனை சுகமாக உறங்க வைத்தது

மான்சிக்கு இது இயல்பானது அல்லவே... எந்த பக்கமும் திரும்ப முடியாமல் அப்படியே வளைந்து சரிந்து படுத்திருந்தாள்... சத்யனின் அணைப்பில் துளிக்கூட விரசமில்லை.. ஒரு தாயின் அணைப்பில் உறங்கும் குழந்தையைப்போல் அவள் இடையைக் கட்டிக்கொண்டு முகத்தை அவள் கழுத்தடியில் வைத்துக்கொண்டு உறங்கினான்... அதிகாலையில் எழுந்தது மான்சிக்கும் உறக்கம் வருவதுபோல் இருக்க இன்னும் கொஞ்சம் சரிந்து சத்யன் பக்கமாக படுத்துக்கொண்டு கண்மூடினாள்

அப்போது ராஜி கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தாள்... சத்யனின் நிம்மதியான உறக்கத்தை கண்டு சிலவிநாடிகள் கண்கலங்கி நின்றாள்... சலனம் உணர்ந்து கண்விழித்த மான்சி ராஜிப் பார்த்துவிட்டு சங்கடமாக சிரித்துவிட்டு எழ முயன்றாள்.... ராஜி அவசரமா கையசைத்து ‘ தான் வெளியே போவதாகவும்.. நீங்க தூங்குங்க’ என்று ஜாடையில் கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்தாள்

அன்று மாலை ஆறு மணிவரை உறங்கினார்கள்... மரகதம் வந்துதான் கதவைத் தட்டி அவர்களை எழுப்பினாள்... எழுந்ததும் சத்யன் பார்த்தது மான்சியின் முகத்தை தான்... அந்த புன்னகையை ரசித்தபடி கண்சிமிட்டி “ என்ன சின்னம்மா நல்லா தூங்கினீங்களா?” என்றவனுக்கு சிரிப்பையே பதிலாக கொடுத்தவள் எழுந்து குளியலறைக்கு சென்றாள்...

அன்று இரவு வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது... மான்சி மாலைவேளை பூஜை முடித்து வந்து விபூதியை நெற்றியில் வைத்தபோது புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான்.... அமைதியாக சாப்பிட்டான் வேலுவின் உதவியுடன் வீல்சேரில் அமர்ந்து அந்த அறையிலேயே சுற்றிவந்தான்... சிரிப்பும் சந்தோஷமுமாக வேலுவிடம் பேசினான்... 


எல்லாம் இரவுவரை தான்... மான்சி கீழே பெரியவரிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்தபோதே “ இவ்வளவு நேரமா என்ன பண்ண?” அவளிடம் எரிந்து விழுந்தான்... முகம் சிவந்து போயிருந்தது... மான்சி கட்டிலின் விரிப்பை சரி செய்யும்போது... தேவையில்லாமல் டிவியில் சேனல்களை மாற்றிவிட்டு எதையும் பிடிக்காமல் ரிமோட்டை தூக்கி வீசியெறிந்தான்... சிகரெட்டை மாற்றி மாற்றி புகைத்து அறையையே புகை மண்டலம் ஆக்கினான்

மான்சி அமைதியாக இருந்தாள்... அவள் எதிர்பார்த்ததுதான்.... இது சத்யனின் இயலாமை அல்லவா? திருமணமான இரவில் மனைவியை அணைக்க முடியாமல் படுக்கையில் கிடக்கும் அவலத்தை அவனால் சகிக்க முடியாத ஆத்திரம் இது...

வேலு சுட்டிக்காட்டிய மாத்திரைகளையும் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு கட்டிலை நெருங்கி “ இதை போட்டுக்கங்க” என்றவளைப் பார்த்து கொடுரமாக விழித்தவன்.... “ என்னடி நீ நோயாளின்னு எனக்கு சொல்லாம சொல்றியா?” என்று ஆத்திரமாக கேட்க...

மான்சி அதே அமைதி மாறா முகத்துடன் நின்றிருந்தாள்... “ என் புருஷன் நோயாளி இல்லேன்னு எனக்குத் தெரியும்.... இந்த மாத்திரைகளை போட்டுகிட்டு நல்லா தூங்குங்க ப்ளீஸ்” என்றதும் சத்யனின் சீற்றம் இன்னும் அதிகமானது...

“ மாத்திரை மாத்திரை மாத்திரை.... மாத்திரையே எனக்கு வாழ்க்கையாகிப் போச்சு..” என்றவன் அவள் கையிருந்த மாத்திரைகளை பிடுங்கி வீசியெறிய.... மான்சி கொஞ்சம் பயமும் நிறைய கண்ணீருமாக அவனைப் பார்த்தாள்...

“ அழாத மான்சி... என் முன்னாடி அழாதே.....” என்று இறைந்து கத்தியவனை நெருங்கிய மான்சி அன்று காலைப்போல முகத்தை இழுத்து தனது வயிற்றோடு அணைத்து “ ஏன்மா இப்படி? யார்மேல் இவ்வளவு ஆத்திரம்? நமக்கு விதிச்சது இவ்வளவு தான்னு வாழப் பழகிக்கனும் நாம ரெண்டுபேரும்.... வேண்டாம் கண்ணா இவ்வளவு கோபம்” என்று கூறிய மான்சி முகத்தை இன்னும் அழுத்தமாக வயிற்றோடு பற்றிக்கொண்டு குமுறிவிட்டாள்

அவ்வளவுதான் சத்யனின் கோபம் எங்கு போனதோ தெரியவில்லை... அவள் இடையைக் கட்டிக்கொண்டு “ மான்சி மான்சி.... என்னால இப்படி பிணம் மாதிரி கிடக்க முடியலை மான்சி” என்றபடி சிறு குழந்தைபோல் அவள் வயிற்றில் முகம் பதித்து அழ ஆரம்பித்தான்.... 





" முடிவேயில்லாத காட்டாறாய் ஓடிக்கொண்டிருந்த நான்....

" இன்று ஒரு அடைப்புக் குறிக்குள் சிக்கிய குளத்து நீராய்.......

" நீர் நின்றுபோனால் அதற்க்குப் பேர் நதியல்ல....

" தேங்கிநிற்கும் குளம்....

" இனி நான் நதியாகவா? குளமாகவா ?



மான்சி கொஞ்சம் பயமும் நிறைய கண்ணீருமாக அவனைப் பார்த்தாள்... “ அழாத மான்சி... என் முன்னாடி அழாதே.....” என்று இறைந்து கத்தியவனை நெருங்கிய மான்சி அன்று காலைப்போல முகத்தை இழுத்து தனது வயிற்றோடு அணைத்து “ ஏன்மா இப்படி? யார்மேல் இவ்வளவு ஆத்திரம்? நமக்கு விதிச்சது இவ்வளவு தான்னு வாழப் பழகிக்கனும் நாம ரெண்டுபேரும்.... வேண்டாம் கண்ணா இவ்வளவு கோபம்” என்று கூறிய மான்சி முகத்தை இன்னும் அழுத்தமாக வயிற்றோடு பற்றிக்கொண்டு குமுறிவிட்டாள்

அவ்வளவுதான் சத்யனின் கோபம் எங்கு போனதோ தெரியவில்லை... அவள் இடையைக் கட்டிக்கொண்டு “ மான்சி மான்சி.... என்னால இப்படி பிணம் மாதிரி கிடக்க முடியலை மான்சி” என்றபடி சிறு குழந்தைபோல் அவள் வயிற்றில் முகம் பதித்து அழ ஆரம்பித்தான்....

அவனது கண்ணீர் மான்சியின் வயிற்றில் பட்டு இதயத்தை சுட்டது... சத்யனின் முகத்தை நிமிர்த்தியவள் நெற்றியில் கிடந்த அடர்ந்த கிராப்பை ஒதுக்கிவிட்டு அந்த இடத்தில் தனது உதடுகளை அழுத்தமாகப் பதித்து “ இதென்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிகிட்டு... சரியாகும் என்ற நம்பிக்கை மனசுல இருந்தா எல்லாம் சரியாகும்ங்க.... நீங்க இந்த நிலையிலும் சகல மருத்துவ வசதியோட இருக்கீங்க... ஆனா இதுபோல் அடிப்பட்டவங்க எத்தனைபேர் அடிப்படை வைத்தியத்துக்கு கூட காசில்லாம இருக்காங்க தெரியுமா? அவங்களோடு ஒப்பிட்டால் நாம பலமடங்கு தேவலை... அதனால மனசுல எந்த குழப்பமும் இல்லாம இருக்கும் நிமிடம் வரை சந்தோஷமாவும் தைரியமாவும் இருங்க.... அதுவே சிறந்த மருந்தா பயன்படும்” என்று மான்சி பொருமையுடன் எடுத்துச்செல்ல...

சத்யனுக்கு அவள் வார்த்தைகள் கொடுத்த ஆறுதலை விட அவளின் அணைப்பு அதிக ஆறுதலை தந்தது..... வயிற்றிலிருந்த முகத்தைப் மேலேற்றி அவள் மார்புகளுக்கு மத்தியில் புதைத்தான்... மான்சியின் வாசம்.... முகத்தை புரட்டினான்... இடையை வளைத்த கைகள் அவளை தன்னோடு இறுக்கியது...

அவனை ஆறுதல் படுத்தும் நோக்கில் முதலில் கவனிக்கவில்லை மான்சி... சத்யனின் அடர்த்தியான முடிகள் அவளின் கழுத்தடியில் உரசியது..... மார்புகளில் உரசி குறுகுறுப்பை ஏற்படுத்தியவனை எப்படித் தடுப்பது என்று யோசிக்கும் முன்பு அவளது தலை பின்னால் சரிந்தது... விரல்கள் அவன் தலைமுடிக்குள் நுழைந்தது... அவளும் பெண்தானே? ஆனால் அவள் பெண்மை விழிக்கும் முன்பு தாய்மை விழித்துக்கொண்டது..

அவனுக்கு உறுத்தா வண்ணம் முகத்தை தன் மார்பிலிருந்து நகர்த்தினாள்... இரு கைகளிலும் ஏந்தினாள் “ உங்களுக்கு தூக்கம் வரலையா? எனக்கு தூக்கம் வரதே? காலையிலிருந்தே அலைச்சல் அலுப்பு.... ரொம்ப டயர்டா இருக்கு தூங்கலாமா?” என்று முகமும் குரலும் மாறாமல் மான்சி கேட்க...

சத்யன் அவளை வியப்புடன் பார்த்தான்... இவளுக்கு உணர்வே இல்லையா? அல்லது நடிக்கிறாளா? நிமிடத்தில் சுதாரித்துவிட்டாளே? இடுப்பை பற்றியிருந்த கையை விலக்காமலேயே “ நிஜமாவே உனக்கு தூக்கம் வருதா? இந்த நைட் நமக்கு பர்ஸ்ட் நைட்... அதற்குண்டான ஏக்கமோ தாபமோ உனக்கு வரலையா? அல்லது நடிக்கிறயா?” தனது வியப்பிற்கான் கரணத்தை சொல்லியேவிட்டான்...

மான்சி தனது இடுப்பில் இருந்த அவனது கைகளை விலக்கி விட்டு நகர்ந்து சென்று மருந்துகள் வைக்கும் ஷெல்பில் இருந்து வேறு மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வந்து “ இப்ப நான் எந்த மாதிரி பதில் சொன்னா உங்களுக்கு திருப்தியா இருக்கும்?” என்று அவனிடமே திருப்பிக் கேட்டாள்...

சத்யன் அவளை கூர்ந்து நோக்கி “ ம்ம் உண்மையை சொல்லு” என்றான்...

அவன் வாயருகே தண்ணீரை எடுத்துச்செல்ல சத்யன் அவளிடமிருந்து பதிலறியும் ஆவலில் வாயைத் திறந்து அவள் போட்ட மாத்திரைகளை விழுங்கினான்... டவலால் தண்ணீர் வழிந்த அவன் வாயைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தவள் “ எனக்கு எந்த உணர்ச்சியுமே இல்லை... நான் ஜடம்னு சொல்லமாட்டேன்... ஆனா நீங்க சொல்ற ஏக்கமும் தாபமும் எனக்கு இல்லைன்னு நிச்சயமா சொல்வேன்... நான் உங்களை விரும்பி மணந்திருக்கேன்... ஒரே நாள்ல ஏக்கமும் தாபமும் என்னை வீழ்த்த முடியாது... காலப்போக்கில் அதுபோல நடக்கலாம்... அப்ப நீங்க சரியாயிடுவீங்க என்ற நம்பிக்கை எனக்கிருக்கு.... அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்..அதனால எந்த குழப்பமும் எனக்கில்லை... இப்போ தூங்கலாமா? ” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காது அவன் தோளில் கைவைத்து படுக்கையில் சாய்த்தாள்...

சத்யன் அவள் சொன்ன வார்த்தைகளை மறுபடியும் மறுபடியும் யோசித்து அதில் தனக்கு சாதகமாக ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தான்... எதுவும் கிடைக்கவில்லை... தலையை தலையணையில் சாய்த்தான்...

மான்சி ஒரு விரிப்பை எடுத்து தரையில் விரித்தாள்.... அதில் தலையணையை போடும்போது .. “ இப்போ நீ எதுக்கு தரையில படுக்குற?” சத்யன் கேட்டதும்...

அவனை ஆச்சர்யமாக திரும்பி பார்த்தவள் “ இதென்ன கேள்வி? பின்ன உங்க கூட எப்படி படுக்கமுடியும்?”...

“ அப்போ இது உன் பலகீனத்தை காட்டுது மான்சி... எதுவும் செய்ய முடியாதுன்னாலும் ஒரு ஆணோட அருகாமை சரியா வராதுன்னு பயப்படுற தானே?” சத்யன் கேலி சிரிப்புடன் கேட்க...

மான்சி அவனையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு சிறு சிரிப்புடன் “ நீங்க என்ன சொன்னாலும்.. என்ன செய்தாலும் உங்களால என்னை வீழ்த்த முடியாதுங்க.... நான் மனக்கட்டுப்பாடு உள்ளவ.... ” என்றவள் அவன் கண்களை நேராகப் பார்த்து “ எல்லா விஷயத்திலும்” என்றவள் கீழே விரித்த விரிப்பை எடுத்துவிட்டு சத்யனின் அருகில் சென்று படுத்து அவனது பெட்சீட்டை இழுத்து தன்னையும் மூடிக்கொண்டு அவன் முகத்தை தன் பக்கமாக திருப்பி அணைத்து “ ம்ம் தூங்குங்க” என்று கூறிவிட்டு கண்களை மூடினாள்...

அவள் என்னவோ அசையாமல் அவனை அணைத்து உறங்க... சத்யன் பாடுதான் திண்டாட்டம் ஆனது... அவன் முகத்தின் அருகில் அவள் முகம்... உடல்கள் இரண்டும் உரசிக்கொள்ளும் தூரம்... ஆனால் உணர்வுகள் பற்றிக்கொள்ள முடியாத அவலம்....

அவன் வெறித்தனமாக விரும்பி கேட்ட பொருள் இதோ அருகிலேயே... அவனுக்கு சொந்தமாக... ஆனால் உபயோகிக்க முடியாத பரிதாபம்.... இதுபோல் அவதிப்பட அவளை கீழேயே தூங்க விட்டிருக்கலாம்... சத்யன் கையால் அவளை வளைத்தான்.... “ அமைதியா தூங்குங்க” அதட்டினாள் மான்சி.... வெகுநேரம் அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவனை மாத்திரைகள் தூங்க வைத்தன....

உடல்களின் உரசலும்... இன்பத்தின் வேகமூச்சுகளும் இல்லாத இதுவும் அழகுதான்.... நோய் என்ற ஒன்று அங்கிருந்து சற்று விலகிப் போனது... அன்பும் ஆறுதலும் வந்து முகாமிட்டது... நீண்டநாட்களுக்குப் பிறகு அமைதியான உறக்கம் சத்யனுக்கு... மனைவியின் இதமான அணைப்பில்....


“ கணவன் மனைவி தொடு உணர்வு என்பது....

“ நூறு சதம் அன்பினால் இயங்குவது....

“ வேட்கைத் தாண்டி...

“ வேகம் தாண்டி....

“ வேதனைகளைத் தாண்டி...

“ விருப்பு வெறுப்புகளைத் தாண்டி....

“ திளைக்கும் புனிதம் அது!

“ இன்பத்திலும் தேவைப்படும்!

“ துன்பத்திலும் தேவைப்படும்!
மறுநாள் பொழுது அழகாகத்தான் விடிந்தது... ஆனால் விடியும்போது மான்சி சத்யன் அருகில் இல்லை ... அவளுக்கு பதிலாக ஒரு தலையணை அவன் கையிடுக்கில் இருந்தது... எப்போது எழுந்து போனாள்? காலையில? அல்லது இரவே எழுந்து போய்ட்டாளா?

எழும்போதே ஏமாற்றம்.. முகம் சிவந்து கோபத்தை பறைசாற்ற கைகளுக்குள் இருந்த தலையணையை தூக்கி வீசியெரிந்தான் ... திரும்பி மல்லாந்து படுக்க முயன்றான்... முடியவில்லை ... மேல் உடல் மட்டும் வளைந்தது புரளமுடியவில்லை ... சத்யனின் ஆத்திரம் எல்லை மீறியது .... வழக்கம் போல "வேலு " என்று ஆத்திரமாக கத்தினான் ...

ஓடிவந்த வேலு சத்யனின் தேவையறிந்து சட்டென்று கால்களைப் பற்றித் திருப்ப... சத்யன் மல்லாந்து விழுந்தான்... அவன் முகம் பார்த்த வேலு ஓடிச்சென்று பாத்ரூமிலிருந்த யூரினல் கேன் எடுத்து வந்து சத்யனிடம் கொடுத்து விட்டுமறுபடியும் அவன் பல் தேய்க்க முகம் கழுவ தேவையானவற்றை எடுத்து வந்தான் ... சத்யன் கொடுத்த கேனை வாங்கி பாத்ரூம் சென்று கொட்டிவிட்டு வந்தான் ...

" எங்கடா அவ?" சத்யனின் வார்த்தைகள் நெருப்பில் விழுந்து வந்தது

பழக்கமான வேலுவுக்கே நடுங்கியது.... " காலையில குளிச்சிட்டு சாமி கும்பிட பூஜை ரூமுக்குப் போயிருக்காங்க சின்னய்யா" உதறலுடன் சொன்னான் .....

சத்யனின் கோபம் எல்லையை கடந்தது ... என்னை விட சாமி கும்பிடுவது அவ்வளவு முக்கியமா? பற்களை கடித்து கோபத்தை அடக்கிக்கொண்டு காத்திருந்தான் பேஸ்ட்டை பிதுக்கி பிரஸில் வைத்து வேலு நீட்ட .. சத்யனை அவனை முறைத்து உன் வேலையைப் பார் வேலு .. அவ வரட்டும்" என்றான்

" சரிங்கய்யா " வேலு கலவரத்துடன் சென்று அறைக்கு வெளியே காத்திருந்தான்

மான்சி பூஜை முடித்து பூஜை தாம்பாளத்தில் எரியும் கற்ப்பூர தீபத்தோடு மாடியேறி வந்தாள் .... வெளியே நின்ற வேலுவை கணும்போது உள்ள சத்யனின் நிலையை ஓரளவு யூகிக்க முடிந்தது மான்சியால்.. புன்னகை மாறா முகத்துடன் உள்ளே சென்றாள்

முதுகுக்கு தலையணை வைத்து கட்டிலில் சாய்ந்திருந்த சத்யன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை... மான்சி அவனை நெருங்கி தட்டிலிருந்த விபூதியைத் தொட்டு நெற்றியில் வைத்த அடுத்த நிமிடம் " ஏய் " என்ற கர்ஜனையுடன் பூஜை தட்டை பலமாக தட்டிவிட ... அந்த அறைங்கும் குங்குமமும் விபூதியும் பறந்தது .. மான்சி நடுக்கத்துடன் ஓரடி பின் வாங்கினாள்

" எங்க போன ?என்னை விட சாமி கும்பிடுறது உனக்கு முக்கியமா போச்சு ? எனக்குத் தெரியும்டி ... ஒன்னுக்கும் ஆகாதவன கட்டிப் புடிச்சி கிட்டு தூங்குறதை விட ... சாமி கும்பிடுறேன்னு பக்தியா சீன் போட்டா இந்த வீட்டுல இருக்குறவங்க நம்பிடுவாங்க..... அப்பதான இதுபோல நகையும் டிரஸூம் இன்னும் நிறைய கிடைக்கும்.... சூப்பர் ஆளுடி நீ " சத்யனின் வார்த்தைகள் அமிலமாய் கொட்டியது ...

மான்சி சத்யனின் வார்த்தைகள் ஈட்டியாய் பாய்ந்தாலும்.. அவன் அதை அவன் உள்ளிருந்து பேசவில்லை என்று புரிந்தது.... காலையில் தான் அருகில் இல்லாத கோபம் இப்படி வெறியாக மாறியிருக்கிறது.. அதனால்தான் வார்த்தையால் காயப்படுத்த நினைக்கிறான் என்று புரிந்தது ... மனதை திடப்படுத்திக் கொண்டு நெஞ்சில குத்தி வார்த்தை அம்புகளை புன்னகையால் புறந்தள்ளினாள்


சத்யனை நெருங்கி அவனது கலைந்து கிடந்த கேசத்தை விரல்களால் கோதி சரி செய்தபடி " நகையும் டிரஸூம் அவங்கதான் எனக்கு குடுக்கனுமா? எல்லாமே என்னோடது தானே? நான் ஏன் அதை சீன் போட்டு வாங்கனும்? இப்போ கோபம் நான் நகை போட்டிருக்கதாலயா? இல்ல சின்னராசா தூங்கி விழிக்கும் போது இந்த பொண்டாட்டி பக்கத்துல இல்லைங்கற தாலயா?" மான்சியின் கேள்விகள் நேரடியாக வந்தது

சத்யனின் கோபம் உடனே தனியவில்லை ... இவ நேத்து மாதிரியே பேசி மயக்கப் பார்க்குறா... “ ரெண்டுமே தான் ” என்றவன் அவள் கையை தட்டிவிட்டு “ பணம்.... நகை இதுமேல எல்லாம் ஆசையில்லாம எனக்கு சேவை செய்ய மட்டும் தான் என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு சொல்லாதே மான்சி... நான் நம்பமாட்டேன்” வார்த்தைகள் தேளாக கொட்டியது....

மான்சி சத்யனை ஒரு பார்வை பார்த்து விட்டு கதவு பக்கம் திரும்பி “ வேலு இங்கே வாங்க” என்று குரல் கொடுக்க.... வேலு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் “ வேலு சின்னய்யாவை தூக்கி சோபால உட்கார வைங்க.... பெட்டுக்கு கவர் மாத்தனும்” என்று அதிகாரமாக உத்தரவிட்டாள்....

வேலு தலையை சொரிந்தபடி தயக்கத்துடன் நின்றான்....

“ என்னாச்சு வேலு?” மான்சி கேட்டதும்.... “ இல்லம்மா சின்னய்யா சோபாவுல உட்கார மாட்டார்.... கட்டில்லயும் வீல்சேர்லயும் மட்டும் தான் இதுவரைக்கும் உட்கார்ந்திருக்கார்” என்றான்....

நெற்றி சுருங்க அவனை பார்த்தவள் “ ஏன் அப்படி... வீல்சேர்ல நிமிர்ந்து உட்கார்றவரால சோபால உட்காரமுடியாதா? இனிமேல் பெட்லயே பிரஸ் பண்றது... சாப்பிடுறது இதெல்லாம் கூடாது... மதியமும் இரவும் தூங்க மட்டும் தான் கட்டில்... மிச்சமெல்லாம் உட்கார்ந்து தான்...” என்றவள் சத்யனின் கால்களை சேர்த்து பற்றிக்கொண்டு “ நீங்க தூக்குங்க வேலு” என்று அதட்டினாள்... குரலில் கடுமை ஏறியிருந்தது...



வேலு அவள் அதட்டலுக்கு பணிந்து சத்யனின் அக்குளில் கைவிட்டு தூக்க... இருவரும் சேர்ந்து சத்யனை தூக்கி சோபாவில் உட்கார வைத்தனர்...

இதற்கெல்லாம் சத்யன் எப்போதும் கடுமையாக எதிர்ப்பவன் இன்று அமைதியாக ஒத்துழைத்தான்... அவனுக்குள் ஒரு ஆர்வம்... என்னதான் செய்யப் போகிறாள் என்று..... ஆனாலும் தனது கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னை டைவர்ட் பண்ணுவதாக தான் எண்ணினான்

சத்யனை உட்கார வைத்துவிட்டு இரண்டு பக்கமும் திண்டுகளை வைத்து முட்டு கொடுத்தவள் “ வேலு நீங்க பெட்டுக்கு கவர் மாத்துங்க... நான் இவருக்கு பிரஸ் பண்ண ரெடி பண்றேன்” என்றதும் வேலு தலையசைத்து விட்டு போக... மான்சி சத்யனிடம் பிரஸை கொடுத்துவிட்டு “ ம்ம் தேய்ங்க.. நான் போய் ஹீட்டர் போட்டுட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு போனாள்...

ஹீட்டர் போட்டுவிட்டு வந்த மான்சி இன்டர்காமில் கீழே சபாபதியை அழைத்து “ மாடிக்கு காபி குடுத்தனுப்ப சொல்லுங்க அங்கிள்... டிபன் இப்போ வேண்டாம் நான் சொன்னதும் அனுப்புங்க” என்று உத்தரவிட்டு விட்டு மீண்டும் சத்யன் அருகில் வந்தாள்... அவன் பல் தேய்த்ததும் வாய் கொப்புளிக்க உதவியவள்.. டவலால் முகத்தை துடைத்து விட... காபி தயாராக வந்தது 




No comments:

Post a Comment