Saturday, January 23, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 5

இருவரும் பஸ்ஸில் ஏறி சரஸ்வதி வேலை செய்யும் வீட்சுக்கு வந்தார்கள்.... மான்சி அந்த வீட்டைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றிருந்தாள்.... சினிமாவில் வருவது போல் பிரமாண்டமாக இருந்தது வீடு... சரஸ்வதி சொன்னது போல அவர்களின் ஆச்சாரம் தெரு வாசலிலேயே தெரிந்தது... அந்த சென்னை மாநகரில் சானி தெளித்து அரிசி மாவில் கோலம் போட்டு பூசனிப் பூ வைத்திருந்தார்கள்... அதைப் பார்த்த மான்சிக்கு தன் கிராமத்தைப் பார்த்தது போல் சந்தோசமாக இருந்தது...



பிரமாண்டமான இரும்பு கதவுக்கு பக்கத்திலிருந்த சிறிய கதவை வாட்ச்மேன் திறந்து விட இருவரும் உள்ளே நுழைந்து பறந்து விரிந்த புல்வெளிக்கு நடுவே இருந்த சிமிண்ட் பாதையில் நடந்து பங்களாவுக்கு வெளியே இருந்த ஆபிஸ் ரூமுக்குள் சென்றனர்...

அங்கே 50 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் மான்சியை அறிமுகம் செய்து வேலைக்கு அழைத்து வந்ததாக சரஸ்வதி சொல்ல... மான்சியை ஏற இறங்கப் பார்த்த அந்த மனிதர் எந்த கேள்வியும் கேட்காமல் ஒரு பேப்பரில் எதையோ எழுதி மான்சியிடம் கையெழுத்து வாங்கி கொண்டு " இன்னைக்கு வாட்ச்மேன் சம்சாரம் தான் டாக்ஸ்க்கு சாப்பாடு செய்றா... நீபோய் எப்படி செய்றாங்கனு பார்த்துக்க... நாளையிலருந்து கரெக்டா பதினோரு மணிக்கு இங்க இருக்கனும் பனிரெண்டரைக்கு டாக்ஸ்க்கு சாப்பாடு குடுத்துடனும்" என்று கூறிவிட்டு அட்வான்ஸாக இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க... மான்சி கை நடுங்க அந்த பணத்தை வாங்கிக் கொண்டாள்....

சரஸ்வதி மான்சியை தோட்டத்து அறைக்கு அழைத்து செல்ல.. அங்கே ஒரு பெண் பெரிய அலுமினிய டபரா ஒன்றில் மாட்டிறைச்சியை வேகவைத்துக் கொண்டிருந்தாள்.... அந்த வாசனையே மான்சியின் வயிற்றைப் புரட்டியது.... பல்லை கடித்துப் பொருத்துக் கொண்டாள்

எப்படி செய்யவேண்டும்... என்னென்ன போடவேண்டும் என அந்த பெண் மான்சிக்கு விளக்கமாக சொன்னாள்... கிட்டத்தட்ட பிரியாணி செய்வது போல்... ஆனால் மசாலா எதுவுமில்லாமல்... உப்பு கூட குறைவாக போட்டு செய்ய வேண்டும் ... மான்சி கவனமாக கேட்டுக் கொண்டாள்...

அடுத்ததாக நாய்களைப் பார்க்க என்று மான்சியை அழைத்து சென்றாள் சரஸ்வதி.... நாய்களைப் பார்த்ததும் மான்சிக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது.... ஒவ்வொன்றும் குதிரைகள் போல் இருந்தன.... புதிதாக மான்சியைப் பார்த்ததும் எல்லாம் ஒட்டு மொத்தமாக குறைக்க ஆரம்பிக்க மான்சி நடுங்கிப் போனாள்..... அழுகையே வந்துவிட்டது மான்சிக்கு....

சரஸ்வதிக்கு மான்சியைப் பார்த்து பாவமாக இருந்தது... " இதுக்குத்தான் சொன்னேன்... உனக்கு இந்த வேலை சரியா வராதுனு" என சரஸ்வதி கூற...

மான்சி இல்லையென்று தலையசைத்துவிட்டு நாய்களுக்கு சற்று தள்ளி நின்று அவற்றையேப் பார்க்க... கொஞ்சம் கொஞ்சமாக அவைகளின் சத்தம் அடங்கி வாலை குழைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டன....

சற்று நேரத்தில் அவற்றுக்கு சாப்பாடு வர பெரியப் பெரிய பீங்கான் பேழைகளில் அவற்றின் உணவை அள்ளிப் போட்டதும் பாய்ந்துகொண்டு சாப்பிட்டன நாய்கள்....

மான்சி எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக்கொண்டு சரஸ்வதி வேலையை முடித்து வரும்வரை காத்திருந்து இருவரும் ஒன்றாக வீட்டுக்கு கிளம்பினர்....

மதியத்துக்கான உணவை தெருவோற கடை ஒன்றில் வாங்கிக்கொண்டு மான்சி தன் வீட்டை நெருங்கியபோது கதவு திறந்தே இருந்ததை கண்டு ஆச்சர்யத்துடன் உள்ளே போனாள்....

கோபால் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.... மான்சியை கண்டதும் கையிலிருந்த பீடியை அணைத்துப் போட்டுவிட்டு..... எழுந்தவன் " எந்த ஆஸ்பத்திரிக்கு போன? டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று கேட்க...

' ஓ நான் ஆஸ்பத்ரிக்கு போயிருக்கேன் நினைச்சிட்டாரு போல? என்று எண்ணிய மான்சி மான்சி குடத்திலிருந்து நீரை மொண்டு குடித்துவிட்டு " நான் ஆஸ்பத்ரிக்கு போகலை" என்று கூற...

" பின்ன வேற எங்க போன?" என கோபால் கேட்க......

சற்றுநேர மவுனத்திற்குப் பிறகு " சரஸ்வதி அக்கா வேலை செய்ற இடத்துல வேலை காலியிருக்குனு சொன்னாங்க... நான் வீட்டுல சும்மா தானே இருக்கேன்... அதான் அந்தக்கா கூடவே வேலைக்குப் போய்ட்டு வரலாம்னு கூடப் போனேன் உடனே வேலை குடுத்துட்டாங்க... காலையில பத்தரைக்குப் போயி மதியானம் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடலாம்... மாசம் மூனாயிரத்தி ஐநூறு சம்பளம்... இப்ப ரெண்டாயிரம் அட்வான்ஸ் குடுத்தாங்க" என்று மான்சி எதையும் மறைக்காமல் விளக்கமாக கூற....

அவள் சொல்லி முடிக்கும் வரை அமைதியாக இருந்த கோபால் " உனக்கு குறை வச்சேன் ? இன்னும் காசு வேனும்னா நான் தருவேன்ல... அதை விட்டுட்டு வேலைக்கெல்லாம் ஏன் போகனும்... அந்த அட்வான்சை திருப்பி குடுத்துட்டு வீட்லயே இரு நான் சம்பாதிக்கிறதே போதும்" என்றான் தீர்மானமாக...

அவன் முகத்தைப் பார்க்காமல் காலையில் துவைத்த துணிகளை எடுத்து மடித்த மான்சி " என்னக்கு உங்க காசு வேணாம்... அதுல இனிமே சாப்பிடமாட்டேன்" என உறுதியுடன் சொல்ல.....

கோபால் விறைப்புடன் நிமிர்ந்து " அப்படின்னா? இதுக்கு என்ன அர்த்தம்?" என கேட்டான்...

" நீங்க எனக்கு மட்டும் புருஷனா இருக்குற அன்னைக்கு நான் வேலைக்குப் போறதை நிறுத்திட்டு உங்க காசுல சாப்பிடுறேன்... அது வரைக்கும் எனக்கு வேண்டாம்" என மான்சி சொல்லிவிட்டு வாங்கி வந்த உணவை எடுத்துக்கொண்டு தரையில் அமர்ந்து பிரித்தாள்...

" என்னடி திமிறா? நானும் ஒரு அளவுக்குதான் பொறுத்துப் போவேன்" கோபால் கோபமாக கத்த... மான்சி அதை லட்சியம் செய்யாமல் உணவை அள்ளி விழுங்கினாள்

கோபால் கோபம் குறையாமல் அவள் எதிரில் அமர்ந்து " இந்த எலவுக்கு தான்டி கல்யாணமே வேனாம்னு சொன்னேன் .... இந்த மாதிரி பஞ்சாயத்து எல்லாம் நடக்கும்னு எனக்குத் தெரியும்,, நீ வேலைக்கும் போகவேனாம் ஒரு கருமமும் வேனாம்... கிளம்பு உன்னை கூட்டி போய் ஊர்ல விட்டுட்டு வந்துர்றேன்" என்றதும் ....

வெடுக்கென்று நிமிர்ந்த மான்சி.... " என்ன என்னைய பொணமா பாக்கனும்னு ஆசை வந்துருச்சா?" என்று சூடாக கேட்க...

" ஏன்டி இப்புடிலாம் பேசுற?" என கோபால் தலையிலடித்துக் கொண்டான் .... சற்றுப் பொருத்து சமாதானம் அடைந்தவன் போல் " சரி அந்த பங்களாவுல என்ன வேலை செய்யப் போற?" என கேட்டான்....

சோற்றை விழுங்கி தண்ணீர் குடித்து விட்டு " நாய்களுக்கு சோறாக்கிப் போடுற வேலை ... மொத்தம் ஆறு நாய் இருக்கு" என்றாள்...

" என்னாது?" என அதிர்ச்சியுடன் கத்தியவன் மான்சி முன்பு மண்டியிட்டு " இங்க பாருமே நீ வேலைக்குப் போ நான் வேனாம்னு சொல்லலை... ஆனா இந்த வேலை வேணாம்மே... மாட்டுக்கறி ஆக்கிப் போடனும்... ஒனக்கு ஒத்துவாராது" என்று கெஞ்சினான் கோபால்...

மான்சி அவனுக்கு தயவுகாட்டவில்லை " இல்லை நான் செய்வேன்" என்று கூறிவிட்டு படுத்துக்கொண்டாள்.....




கோபாலின் வார்த்தைகள் மான்சியிடம் எடுபடவில்லை.... பேசிப் பார்த்து சலித்துப் போன கோபால் கோபமாக வெளியேறி விட... மான்சி அமைதியாக படுத்துக்கொண்டாள்....

அன்று இரவும் வேலைக்கு போகாதே என்று கெஞ்சிப் பார்த்தான் கோபால்... மான்சி பதில் சொல்லாமல் தனது மவுனாத்தாலேயே பிடிவாதத்தை உணர்த்தினாள்....

வழக்கம்போல் அருகில் படுத்து அவள் மீது படர முயன்றவனை ஒதுக்கித் தள்ளிவிட்டு ரௌத்திரமாக முறைத்து " உங்களுக்குத் தேவையானது தான் தாராளமா கிடைக்குதே? அப்புறம் நான் எதுக்கு? என்னை எதுக்கு தொடுறீங்க?" என்று ஆத்திரமாய் கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் விலகிப் போய் படுத்தான் கோபால்.... ஆனால் அன்று இரவு எழுந்து சுகுனாவின் வீட்டுக்கு செல்லவில்லை.... இரவு படுத்த இடத்திலிருந்து காலையில் தான் எழுந்தான்....

கணவனின் இந்த சிறிய மாற்றத்தை கண்டு மான்சியின் உள்ளம் துள்ளியது ... ஆனால் இன்னும் ஆயிரம் படிகள் இருக்கே ? ஒரு படி ஏறியதற்கே இவ்வளவு சந்தோசம் கூடாது என்று மனதை அடக்கிக்கொண்டாள்.....

மறுநாள் காலையிலேயே உணவு சமைத்து வைத்துவிட்டு சரஸ்வதியுடன் வேலைக்கு கிளம்பினாள் மான்சி....

இறைச்சியைப் பார்த்ததும் குமட்டிக்கொண்டு வர... முந்தானையை எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டு நாய்களுக்கான உணவுகளை சமைத்தாள்.. ஆனால் நாய்கள் முன் கால்களைத் தூக்கிக்கொண்டு குறைக்கும் போதுதான் குலைநடுங்கியது மான்சிக்கு.... வாட்ச்மேன் உதவியுடன் அவைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு சரஸ்வதி வேலை முடித்து வரும்வரை காத்திருந்து வீட்டுக்கு கிளம்பினார்கள்....

நேற்று போலவே இன்றும் கோபமாக காத்திருந்தான் கோபால்.... மான்சி அமைதியாக சாப்பாடு எடுத்து வைக்க..... " நான் சம்பாதிச்ச காசுல நீ சாப்பிட மாட்ட? ஆனா நீ சம்பாதிச்சதுல நான் சாப்பிடனுமா?" என்று கேட்டான்...

மான்சி அவன் முகத்தைப் பார்க்காமல் தட்டைப் பார்த்து சாதத்தை பிசைந்தபடி " நீங்க தான இந்த வீட்டுக்கு வாடகை கரண்ட்பில் எல்லாம் தர்றீங்க? அதுக்கும் இதுக்கும் சரியாப் போகும்" என்றாள்...

" எல்லாத்துக்கும் பதில் தயாரா வச்சிருக்க?" என்றவனின் குரலில் இருந்த மாற்றம் மான்சியை நிமிர வைத்தது...

கோபாலின் முகத்தில் லேசான புன்னகை... மான்சி தன் கணவனின் முதல் புன்னகையை அதிசயமாகப் பார்த்தாள்..... ஆனால் ஏதோ குற்றம் செய்தவன் போல் உடனே தலையை கவிழ்ந்து கொண்டான் கோபால்....
அன்று கோபால் சாப்பிட்டுப் போனப் பிறகு மான்சி அசதியாக இருக்கிறதே என்று படுத்துக் கொண்டாள்... ஆனால் படுத்த சிலநிமிடங்களில் கதவு தட்டப்பட... " யாரு?" என்றபடி எழுந்து சென்று கதவை திறந்தவள் அங்கே நின்றிருந்த சுகுனாவை கண்டு அதிர்ச்சியுடன் விழிக்க....

சுகுனா மீதி கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்..... உரிமையோடு வந்து தரையில் அமர்ந்தவள் " உன்கிட்ட பேசத்தான் வந்தேன் ,, நீயும் உட்காரு" என்றதும்...

மான்சி பயந்து போனாள்... ' ஒருவேளை நைட் அவரு ஏன் வரலைனு சண்டை போட வந்திருப்பாளோ?' என மான்சி பயந்தபடி சற்று தள்ளியே அமர்ந்தாள்....


கொஞ்சநேரம் எதுவுமே பேசாமல் மான்சியைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர் குளமாக தேங்கியிருக்க..... " இங்கப் பாரு மான்சி நான் ஒன்னும் உனக்கு துரோகம் பண்ணனும் நெனைச்சு இதையெல்லாம் பண்ணலை.... நாங்க பத்து வருஷத்துக்கு மேல புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்துட்டோம்... அந்தாளோட அம்மா என்கிட்ட சொன்னதால தான் ரொம்ப செரமப்பட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சேன்... அப்பறமும் கொஞ்சம் கொஞ்சமா வெலகிடனும்னு தான் தினமும் நெனைக்கிறேன்... ஏன்னா நானும் ரெண்டு பொண்ணுகளைப் பெத்தவ தான்... உன் வயசுல எனக்கு மக இருக்கா.... ஆனா இந்தாளு என்னை விட்டு போகமாட்டேன்னு பிடிவாதம இருக்கான்..." என்றவள் வழிந்த கண்ணீரை துடைத்தபடி தலைகுனிந்து " இது வந்து தொட்டதும் நானும் விழுந்துர்றேன்... பல வருஷமா சொகம் கண்ட உடம்பு ... சட்டுனு உதற முடியலை... நான் எப்புடியாச்சும் அதை உன்கிட்ட அனுப்பிறேன்... அதுக்காக நீ வேலைக்கெல்லாம் போகவேணாம் மான்சி" என்று கெஞ்சினாள் சுகுனா.....

மான்சி பதிலேதும் சொல்லாமல் புடவை முந்தானையை முடிவதும் அவிழ்ப்பதுமாக இருந்தாள்.....

" மான்சி என்னைய கேவலமா நெனைக்காத.... நானும் மனுஷி தான... இந்தாளுதான் புருஷன்னு வாழ்ந்து பழகிட்டேன்.... இப்ப நான் செய்ற பாவம் என் பொண்ணுகளை சுத்துமோனு பயமாருக்கு.... அதுவும் நீ இப்ப முழுகாம இருக்குற நேரத்துல இந்த மாதிரி வேலைக்குப் போறது நல்லதில்லை மான்சி... தயவுபண்ணி வீட்டுலயே இரு... சீக்கிரமே அந்தாளு உன்கிட்ட வந்துடுவாரு" மீண்டும் கெஞ்சியவளை பரிதாபமாகப் பார்த்தாள் மான்சி.....

" எனக்கு உங்கமேல எந்த கோபமும் இல்லைங்க.... எனக்கு என் புருஷன் வேனும்... எனக்கு மட்டும் வேணும்... அவரு மனசு மாறி வர்றவரைக்கும் நான் வேலைக்குப் போவேன்... யார் சொன்னாலும் நிக்க மாட்டேன்" என்று உறுதியுடன் கூறிவிட்டு... கிளம்புங்க என்பது போல் மான்சி எழுந்துகொள்ள...

சுகுனாவும் வேறு வழியின்றி எழுந்துகொண்டாள்....

மான்சி யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.... அவள் வேலைக்குப் போவது வழக்கமானது.... கோபாலிடம் சிறிது மாற்றம் என்னவென்றால் இரவில் சுகுனாவின் வீட்டுக்கு செல்லாமலேயே இருந்தான்....

வேலைக்கு செல்லும் மான்சிக்கு உதவுவது போல் தனது துணிகளை தானே துவைத்துக் கொண்டான்..... போரில் போய் தண்ணீர் எடுத்து வந்து வைத்தான் ... ஆனால் மான்சி தன் உறுதியிலிருந்து மாறாமல் இருந்தாள்.... அவள் மனதில் கோபால் தனக்கு மட்டுமே வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவும் இல்லை.... சத்யன் என்ற ஒருவன் அவள் மனதில் இருந்திருந்தான் என்பது முன்பிறவி போல மறந்துவிட்டாள்.....

ஆனால் சத்யன்? மான்சியின் நினைவுகளலால் வெந்து சருகாகியிருந்தான் .... அவள் இன்னொருவனின் மனைவி அவளை நினையாதே மனமே என்று நெஞ்சில் குத்திக் குத்தி தீவிரமாய் காதலித்தான்.... மான்சி அருகிலிருக்கும் போதெல்லாம் அவன் கண்ணுக்கு கூட தெரியாத காதல்.... இப்போது வளர்ந்து விருட்சமாகி சத்யனை இரவும் பகலும் பயமுறுத்தியது..... மொத்தத்தில் மான்சியின் மீதான காதலை அவன் முழுமையாக உணர்ந்து திளைக்கும் நேரம் மான்சி இன்னொருவனின் மனைவி.... காத்ல் அவனை செய்யும் சித்ரவதைக்கு தன்னையே பலி கொடுத்தால் என்ன என்று யோசிக்கும் அளவிற்கு மான்சி அவனை பித்தனாக்கியிருந்தாள்......







" எனக்குள் ஒரு இதயம் இருக்கின்றது....

" அதற்க்கும் வலிக்க வலிக்க துடிக்கத் தெரியும்....

" வேதனையில் வீழ்ந்து புரளத் தெரியும் ....

" மரணத்தின் சுகத்தை ரசிக்கத் தெரியும்.....

" இதயத்தில் ரத்தமே வழிந்தாலும் சிரிக்கத் தெரியும்....

" என்ற சங்கதியெல்லாம்.....

" நீ என்னைப் பிரிந்த பின்தான் புரிந்தது..... 

சத்யன்,, மான்சியின் நினைவுகளலால் வெந்து சருகாகியிருந்தான் .... அவள் இன்னொருவனின் மனைவி அவளை நினையாதே மனமே என்று நெஞ்சில் குத்திக் குத்தி தீவிரமாய் காதலித்தான்.... மான்சி அருகிலிருக்கும் போதெல்லாம் அவன் கண்ணுக்கு கூட தெரியாத காதல்.... இப்போது வளர்ந்து விருட்சமாகி சத்யனை இரவும் பகலும் பயமுறுத்தியது..... மொத்தத்தில் மான்சியின் மீதான காதலை அவன் முழுமையாக உணர்ந்து திளைக்கும் நேரம் மான்சி இன்னொருவனின் மனைவி.... காதல் அவனை செய்யும் சித்ரவதைக்கு தன்னையே பலி கொடுத்தால் என்ன என்று யோசிக்கும் அளவிற்கு மான்சி அவனை பித்தனாக்கியிருந்தாள்......

வாய்விட்டு அழக்கூட முடியாத ஊமையின் கதறலாய்..... காதலை சொல்லாமல் பறிகொடுத்த மௌனக் காதலனாய் சத்யன் ....... அவளுடன் நடந்த பாதை..... அவளுடன் அமர்ந்திருந்த இடம் ...... வரப்பில் அமர்ந்து இரு ஜோடி கால்களை நீரில் ஆடவிட்டு பேசாமலேயே பல சங்கதிகளை பரிமாறிக்கொண்ட தருனங்கள்... காட்டு மரங்களை சாட்சியாய் வைத்து பேசிய வார்த்தைகள் ..... என எல்லாம் ஒட்டு மொத்தமாய் கூடி சத்யனை ஏளனம் செய்தன .....

தாகத்தோடு ஓடையை நெருங்கி குடிப்பதற்காக இரு கையின் விரல் கோர்த்து நீரை அள்ளியெடுத்த போது இவன் விரல் பட்டு அசைந்த நீரில் ஏற்பட்ட சுழலில் எல்லாம் மான்சியின் வட்ட முகம் வடிவாய் தெரிந்து கொல்லாமல் கொன்றது சத்யனை... அள்ளிய நீரை ஓடையில் வீசிவிட்டு தாகத்தில் நெஞ்சு வரண்டு போக வரப்பில் மல்லாந்தான்......

அன்று மான்சி அருகில் இருந்த போதெல்லாம் அவள் பூ வைத்திருக்கிறாளா என்று கூட நிமிர்ந்து பார்க்காத சத்யன்... இன்று காய்ந்து கொட்டும் புளியம்பூவில் கூட மான்சியின் முகத்தை கண்டான்..... தும்பைப் பூவை கண்டதும் ஒருமுறை மான்சி உடுத்தி வந்த வெள்ளை தாவணி ஞாபகம் வந்தது.... செம்பருத்தியின் இதழ்களில் மான்சியின் உதட்டுச் சிவப்பை தேடினான் ... தாபத்தில் மனம் நொந்து பூவை கிள்ளி தன் உதட்டில் வைத்துக்கொண்டான்....

மான்சியின் நினைப்பு இப்படி வதைக்குமா? இவ்வளவா நேசித்தேன் மான்சியை? எப்படியாவது சமாளித்து.... எதையாவது கொடுத்து... யாரையாவது வதைத்து ....

ஏன் மான்சியை என்னுடனே வைத்துக்கொள்ளவில்லை? என் நேசம் நிஜமென்று எல்லாருக்கும் சொல்லாமல் மறைத்த நான் காதல் கோழையா? காதல் குற்றவாளியா? இதுபோன்ற கேள்விகள் நாளைக்கு ஆயிரம் முறை தோன்றி மறைந்தது

மான்சி இனி நான் என்ன செய்ய? பொட்டல் காட்டில் மல்லாக்கப் படுத்து வெட்டவெளியைப் பார்த்து உரக்க கேட்டான்.... பாறைகளில் மோதி அவன் குரலே மீண்டும் எதிரொளித்தது.... வரமாட்டாயா மான்சி? கண்ணீர் வழிய கேட்டாலும் மான்சி அவனுக்கில்லை என்று தெரிந்ததும் கேட்டான்.....

சத்யனுக்கு உணவு நஞ்சானது... நீர் விஷமானது.... படுக்கை முள்ளானது... உடல் பாரமானது .... உயிர் சுமையானது.... வாழ்க்கை வெறுமையானது.... சொந்தங்கள் சோகங்கள் ஆனது..... இயற்கை எல்லாம் ஏளனமாய் சிரித்தன.... மொத்தத்தில் நான் வாழ லாயக்கில்லாதவன் என்று தனக்குத்தானே முடிவு செய்துகொண்டான்


No comments:

Post a Comment