Thursday, January 14, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 30

அன்றும் அப்படித்தான்.... பிஸியோதெரபிஸ்ட் வந்து போனதும் சத்யனை விட்டுவிட்டு ராஜாவும் ராஜியும் பேரனுக்கு சில உடைகள் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டனர்... வீட்டுக்குள்ளேயே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவனை அழைத்தது ராஜியின் மொபைல்...

‘ ஓ அம்மா போனை விட்டுட்டு போய்ட்டாங்க போலருக்கு என்று எண்ணியபடி போனை எடுத்தவன் இந்தியாவில் இருந்து போன்கால் என்றதும் ஆன் செய்து காதில் வைத்து “ ஹலோ நான் சத்யன் பேசுறேன்..... அம்மா இல்லை வெளியேப் போயிருக்காங்க” என்றவனிடம் பேசியது கோமதி தான்...

முதலில் அவனைப்பற்றிய நலம் விசாரிப்பில் ஆரம்பித்து.... போகப்போக நடந்தவை எல்லாவற்றையும் இரண்டை நாலாக... நாலை எட்டாக ... எட்டை பதினாறாக... இட்டுக்கட்டி கண்ணீருடன் தனது விஷ குரலில் தேன் கலந்து சத்யனிடம் சொல்ல ஆரம்பித்தாள் கோமதி.....



கோமதி சொல்வதை சாதரணமாக கேட்க ஆரம்பித்த சத்யனுக்கு அனு மானபங்கம் செய்யப்பட்டாள் என்ற செய்தி பயங்கர அதிர்ச்சியை கொடுத்தது.... ஆனால் விஷ நாக்குள்ள கோமதி தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வது போல் பேசியது தான் ... சத்யனை மொத்தமாக அனு தரப்பில் சாய்த்தது,, அனு செய்தது தவறே ஆயினும் அதை குற்றம் கூறமுடியாதளவுக்கு இருந்தது கோமதியின் பேச்சு.......

முதலிலிருந்தே தனது கணீர் குரலை மாற்றி கண்ணீர் குரலில் தான் ஆரம்பித்தாள் கோமதி “ ஆமா சத்யா என்மகள் வாழ்க்கையே போச்சு... ஒரு தோட்டக்காரனை வச்சு எங்களை அடக்கி ஒடுக்கிட்டாங்க..... எங்க மேலயும் தப்பு இருக்குதான் சத்யா,, நான ஒத்துக்கிறேன்... நீங்கல்லாம் இல்லாத நேரத்தில் வீட்டுல இப்படியெல்லாம் நடக்குதேங்குற ஆதங்கத்துல பொறுத்துக்க முடியாம தான் மான்சி அந்த தோட்டக்காரன் கூட இருக்குறதை போட்டோ எடுத்து அனுப்பினா என் மகள்.... அத்தை மகனோட வாழ்க்கை வீனாயிடக் கூடாதுன்னு நினைக்க என் மகளுக்கு உரிமையில்லை சத்யா? சரி,, அது தவறா இருந்தா கூட அதுக்கான தண்டனையை நீ தானே தரனும்? என் பொண்டாட்டியோட நடத்தையை தவறா சொன்னது தப்புன்னு நீ கோபப்பட்டு எந்த தண்டனை கொடுத்தாலும் உனக்கு முழு உரிமையிருக்கு..... ஆனா கேவலம் ஒரு தோட்டக்காரனை வச்சு என் மகளோட வாழ்க்கையை நாசம் பண்ணது சரியா சத்யா?” என்று கோமதி கேட்க

மாமன் மனைவியின் கண்ணீருக்கும் கேள்விக்கும் பதில் கூற முடியாமல் சத்யன் அதிர்ச்சியில் இறுகிப்போய் அமர்ந்திருந்தான்.... இதுவரை தண்டபாணி கோமதியின் மீது எவ்வளவு கோபப்பட்டிருக்கிறான்... ஆனால் அனு பேசும்போது எதிர்வாதம் செய்தாலும் சற்றுநேரத்தில் சமாதானம் ஆகிவிடுவான்..... அவன் பார்க்க பிறந்து அவனுடனேயே படித்து வளர்ந்த அனுவின் மீது மனதறிந்து கோபப்படமாட்டான்...அனு அவனுக்கு உறவுமுறையில் தங்கை இல்லையென்றாலும் அவனுக்கு ஒரு தங்கை இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாள் என்று அடிக்கடி ஞாபகப்படுத்தும் ஏராளமான செல்ல சண்டைகள் அவர்களுக்கிடையே உண்டு,, பெண்களிடம் சபலப்பட்ட சத்யன் அனுவை மட்டும் நெருங்காததற்கு காரணம் இந்த உறவின் அடிப்படை தான்..... இப்போது அவளை ஒருவன் மானபங்கம் செய்துவிட்டான் என்பதை கேள்விப்பட்டதும் சத்யனின் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போனது 


“ அத்தை அந்த ராஸ்கலை சும்மாவா விட்டீங்க? தாத்தாகிட்ட சொல்லி அவனை உள்ள தள்ளி நார்நாராகக் கிழிக்க வேண்டியது தானே? இல்லேன்னா நம்ம பேக்டரில் வேலை செய்ற ஆளுங்க கிட்ட சொன்னாக்கூட யாருன்னே தெரியாத மாதிரி அவனை அடிச்சு காலி பண்ணிருப்பாங்களே? ஒரு சின்னப் பொண்ணை ரேப் பண்ணவன் உயிரோட இருக்கனும்னு அவசியமே இல்லை அத்தை? அந்த நாயை அப்புறம் என்னதான் பண்ணீங்க?” என சத்யன் கோபமாய் கத்தினான்

அவன் கேள்விக்கு பதிலே சொல்லாமல் கேவிக்கொண்டிருந்தாள் கோமதி,, சத்யனுக்கு சங்கடமாக இருந்தது...... இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு தாயின் மனம் எப்படியிருக்கும் என்று அவனால் உணரமுடிந்தது “ அத்தை அழறதுக்கு இது நேரமில்லை.... அவனை என்னதான் செய்தீங்க? அதை சொல்லுங்க?” என்று பரிதாபப்பட்டு கேட்டான்

அழுகையை அடக்கிக்கொண்டு “ அவன் என் மகளை கெடுத்து நாசமாக்குனது ஒரு கொடுமைன்னா........ அதுக்கப்புறம் நடந்தது தான் அதைவிட பயங்கர கொடுமை சத்யா...... சொந்த வீட்டுலயே எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு துரோகம் பண்ணிட்டாங்க சத்யா..... இதுக்காக நீங்கல்லாம் லண்டன் போற வரைக்கும் காத்திருந்தாங்க போலருக்கு” என்றவளின் பேச்சை மறித்த சத்யன் “ புரியலை அத்தை நம்ம வீட்டுலயா? யார் என்ன பண்ணாங்க? விவரமா சொல்லுங்க ப்ளீஸ்?” என கூர்மையுடன் கேட்க

“ அது சத்யா நான்தான் காலையில அனு ரூமுக்குப் போய் பார்த்தேன்.... அனு கிடந்த நிலையைப் பார்த்து என்ன ஏதுன்னு விசாரிச்சேன்,, எல்லாத்தையும் சொல்லி கதறினா என் மக.... அப்புறம் உன் மாமாவை எழுப்பி போலீஸ்க்கு போன் பண்ணி சொன்னோம்... போலீஸ் வந்தப்ப அந்த வரதன் அவன் ரூம்ல தான் தூங்கிகிட்டு இருந்தான்.... போலீஸ் அவனை கேட்டதுக்கு ‘ ஆமா குடி போதையில செய்தேன்னு சொன்னான்.... உடனே போலீஸ் அவனை கூட்டிட்டு போயிருச்சு சத்யா.... நான் மாமா கிட்ட ஐம்பதாயிரம் ரூபா கொடுத்து அந்த நாயை நல்லா அடிக்க சொல்லி சொல்லி அனுப்பினேன்,, அதே போல போலீஸும் அடிச்சிருக்காங்க.... ஆனா ரெண்டு நாள் கழிச்சு அவனை கோர்ட்ல ஆஜர் படுத்தினா,,,, அங்க அவனுக்காக ரெண்டு லட்சம் ரொக்க பணம் கட்டி ஜாமீன்ல எடுத்துட்டாங்க..... ஜாமீன்ல எடுத்தது யாருன்னா............. உன் மச்சான் பரசு தான்” அவ்வளவு நேரம் கண்ணீருடன் பேசிய கோமதி இறுதியில் ஆத்திரமாக கத்த

பரசு வரதனை ஜாமீன்ல எடுத்தான் என்றதுமே சத்யன் கொதித்துப்போனான் “ அத்தை நிஜமாத்தான் சொல்றீங்களா? பரசுவா ஜாமீன்ல எடுத்தான்? அவனுக்கு ஏது அவ்வளவு பணம்?” சத்யனின் வார்த்தைகள் நம்பாமல் வந்தது 




“ என்ன சத்யா நம்ப முடியலையா? அவனுக்கு பணம் கொடுத்தது மட்டுமில்ல ஜாமீன் எடுக்க வக்கீலையும் ஏற்பாடு பண்ணது உன் தாத்தா தான்..... ஏன் அந்த வரதனை வெளியே எடுக்க வக்கீலை ஏற்பாடு செய்தீங்கன்னு கேட்டதுக்காக உன் தாத்தா எங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டார் உன் தாத்தா....... அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததுக்கு நாங்க வருத்தப்படலை.... ஆனா இவங்கல்லாம் பிளான் பண்ணி என் மகளை இப்படி பண்ணிட்டாங்களே..... இதைவிட அவளை கொலையே செய்திருக்கலாமே.... இனிமே அவளோட வாழ்க்கை என்னாகும்னு ஒன்னுமே புரியலை சத்யா..... எங்க ஒரே மகளோட வாழ்க்கையே நாசமாப் போச்சே” என்று கூறிவிட்டு மறுபடியும் அழுகையை ஆரம்பித்தாள் கோமதி

சத்யனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பேசக்கூட நா எழும்பவில்லை..... முதல் அதிர்ச்சி பரசுதான் ஜாமீன்ல எடுத்தான் என்பது இரண்டாவது அதிர்ச்சி தாத்தா அதுக்கு ஏற்பாடு செய்தார் என்பது..... அன்று ஒருநாள் மான்சியை திருமண செய்த அன்று மான்சிக்கு ஏதாவது என்றால் நான் உன்னையே அழிச்சிடுவேன் என்று தாத்தா தன்னிடமே கூறியது ஏனோ அந்த சமயம் காரணமின்றி ஞாபகத்துக்கு வந்தது..... மான்சியின் மேல் இருக்கும் அன்பால இதை செய்தாலும் ஒரு சின்னப் பெண்ணோட வாழ்க்கையை நாசமாக்கியவனுக்கு தாத்தா துணை போவார் என்று சத்யன் துளியும் எதிர் பார்க்கவில்லை...... ச்சீச்சீ சொந்த குடும்பத்துப் பெண்ணுக்கா இந்த கதி? அவமானத்தோடு கூடிய அருவருப்பில் சத்யனின் முகம் கோணியது

“ நான் சொல்றதை நம்ப முடியலைனா நீயே உன் தாத்தாக்கு போன் பண்ணி விசாரிச்சுக்கோ சத்யா.... அனுவை நாசம் பண்ணிட்டு அவன் ஓடிப்போகாம அவன் ரூம்ல படுத்திருக்கும்போதே எனக்கு சந்தேகம் தான் சத்யா? இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிச்சல் வந்திருக்கும்னு நெனைச்சேன்..... வீட்டுல இருக்கிற அத்தனை பேரோட சப்போர்ட்டும் தனக்கு இருக்குன்ற தைரியம் தான் அவன் அங்கயே இருந்திருக்கான்.... அதுமட்டுமல்ல சத்யா அந்த ராஸ்கல் போலீஸ்கிட்டயோ வேற யார்கிட்டயுமே மான்சியையும் என்னையும் தவறா போட்டோ அடுத்து அனுப்பி வச்சதால தான் அனுவை ரேப் பண்ணதா சொல்லவே இல்லை..... அதாவது அவங்க பிளான்படி என் மக கலங்கப்பட்டு நிக்கனும் அதே சமயம் மான்சியைப் பத்தி தவறா அனு சொன்னது வெளிய தெரியக்கூடாது... எங்களை அடக்கி ஒடுக்க எவ்வளவு கரெக்டா பிளான் பண்ணிருக்காங்க பாரு சத்யா? இதைவிட எங்க குடும்பத்தை கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிருக்கலாமே? கௌரவமா வெளியே போயிருப்போமே சத்யா? இப்போ என் மக வாழ்க்கையே வீனாப் போச்சே” என்று கதறியவளை சமாதானம் செய்ய முடியாமல் சற்றுநேரம் அமைதியாக இருந்தவன் ...

“ இப்போ நீங்க உங்க ஊர்ல தானே இருக்கீங்க? சரி அங்கேயே இருங்க.... நான் இன்னும் இருபது நாள்ல வந்துடுவேன்..... வந்ததும் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்... நீங்க கவலைப் படாதீங்க அத்தை” என்றவன் “ நான் தாத்தா கிட்ட பேசுறேன் அத்தை நீங்க வைங்க” என்று இணைப்பை துண்டித்துவிட்டு சோர்வும் ஆத்திரமுமாக கட்டிலில் சாய்ந்தான்..


தாத்தாவும் பரசுவும் இவ்வளவு செய்வார்கள் என்று சத்யன் துளியும் எதிர்பார்க்கவில்லை... அனுவை தனது குடும்பத்துப் பெண் என்று நினைக்காத அவர்களின் மீது ஆத்திரமாக வந்தது... இந்த பிரச்சனையில் மான்சியின் பங்கு எவ்வளவு என்று தெரியாததால் அவனால் அவளை ஆதரிக்கவும் முடியவில்லை எதிர்க்கவும் முடியவில்லை....

ஆனால் மான்சி இவ்வளவு நடந்தும் இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாததால் ஒரு மனைவியாக தன் கடமையிலிருந்து தவறிவிட்டதாக எண்ணினான்... அனு எனது சகோதரிக்கு சமமானவள் என்று கூறியும் அவளுக்கு நடந்த இந்த அநியாயத்தை தன்னிடம் சொல்லாதது மட்டுமல்ல பரசுவின் நடவடிக்களை மறைத்தது பெரும் குற்றமாக தெரிந்தது... தாத்தா பரசுவின் நடவடிக்கைகள் மான்சிக்கு முதலிலேயே தெரியாவிட்டாலும் அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் தெரிந்திருக்கும்... ஆனால் மறைத்துவிட்டாள்....

மான்சியை திருமணம் செய்வதற்கு முன்பு இருந்து அதே மனநிலை இப்போதும் ஏற்பட்டது.... மான்சிக்கு கணவனாக ஒரு தகுதி வேண்டும் என்று பரசு கூறிய வார்த்தை தான் அவளை அடைந்தே தீரவேண்டும் என்று வெறியை கிளப்பியது... இன்று அதே வெறி வேறு விதமாக வந்திருந்தது... வரதன் அனுவை ரேப் செய்ததற்கு காரணம் தனது சகோதரியாக எண்ணியிருந்த மான்சியை அவமானப்படுத்திவிட்டாள் அனு என்ற ஒரே காரணம்...

பரசு வரதனை ஜாமீனில் எடுத்ததற்கான காரணம் மான்சிக்கு அண்ணனாக வரதன் இருக்கின்றது ஒன்று... அடுத்தது தனது அக்காவின் மானத்தை காப்பாத்தத் தான் அனுவை மானபங்கம் செய்தான் வரதன் என்றொரு காரணம்.... பரசுவின் பார்வையில் இப்போது வரதன் கடவுளைப் போல் தெரிவான்

தாத்தா வக்கீலை ஏற்பாடு செய்து உதவியதற்கு காரணம் வரதன் பரசு இருவரும் மான்சியின் சகோதரர்கள் அடுத்ததாக மான்சிக்காக யாரையும் அழித்துவிடுவேன் என்று அன்று சொன்னதை நிரூபித்துவிட்டார்...

ஆகமொத்தம் அத்தனைப் பேரும் மான்சியின் நலனை மட்டுமே யோசிச்சு செய்திருக்காங்க,, மான்சியின் மானம் மரியாதை காப்பாற்ற படவேண்டி ஒரு இளம் பெண்ணின் கற்பை காற்றில் பறக்க விட்டிருக்கிறார்கள்.... அனுவுக்கு அநீதி நடந்த பிறகும்கூட வரதனை ஜாமீனில் எடுத்ததன் மூலம் அவளுக்கு மேலும் மேலும் தண்டனை கொடுத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள் என்று எண்ணினான் சத்யன் 


அனு தப்பே செய்திருந்தாலும் கூட அதை தண்டிக்கவோ மன்னிக்கவோ எனக்கு மட்டுமே உரிமையிருக்கும் போது இவர்கள் நான்குபேரும் சேர்ந்து அனுவை தண்டித்த கொடுமையை சத்யனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை... எப்படி யோசித்தாலும் அத்தனை பேரும் சேர்ந்து அனுவை வஞ்சித்து விட்டதாகவே தோன்றியது... இறுதியாக அவன் மனதில் நின்ற கேள்விகள்... இத்தனை பேரின் ஆராதனையுடன் வாழும் மான்சி என்ன கடவுளா? அப்படியானால் என் தங்கையாக நான் கூறிக்கொள்ளும் அனு இவர்கள் எல்லோரையும் விட அவ்வளவு மட்டமானவளா? அனு உண்மையாகவே என் தங்கையாக இருந்தாலும் இதுதான் கதியா? சத்யனின் தன்மானமும் கௌரவமும் நிமிர்ந்து எழுந்து அவனைப்பார்த்து கேவலமாக சிரிப்பது போல் இருந்தது...

மான்சி மீதான கடலளவு காதலில் குறைவு ஏதும் இல்லை... ஆனால் அவளுக்காக நடந்த இந்த அநீதியைத் தான் ஏற்க முடியவில்லை... இவர்கள் யாருமே தன்னைப் பற்றி யோசிக்கவில்லையே என்று மனம் குமுறினான்.... யோசிக்க யோசிக்க அனுவின் மீதான பரிதாபம் அதிகமாக மற்றவர்கள் மீதான குற்ற எண்ணிக்கையும் அதிகமானது... நடந்த சம்பவத்தை தன் குடும்பத்துக்கே நேர்ந்த அவமானமாக கருதினான்.... மான்சியின் உயர்வுகள் எல்லாம் அனுவின் தாழ்வுக்கு காரணமாகிப் போனதே என்று குமுறினான்.... தன் மனைவி தான் இவ்வளவுக்கும் மூல காரணம் என்று புரிய வேதனை தான் அதிகமானது

அப்பாவும் அம்மாவும் வரும்வரை அமைதியாக கண்மூடிப் படுத்திருந்தான்.. மனசு முழுக்க இருந்த காதலை விட அனுவின் இழப்பும் குடும்ப கௌரவமும் தான் பெரிதாக தோன்றியது சத்யனுக்கு... இறுதியாக அவன் சிந்தனையில் ஓடியது எதுவென்றால்.... என் குடும்ப கௌரவத்தைப் பற்றி யோசிக்காம மான்சிக்காக இவ்வளவும் செய்து எனக்கு வலிக்க செய்தாங்களே.... இப்போ இவங்களுக்கு நான் எதை செய்தா வலிக்கும்????

ராஜாவும் ராஜியும் வந்தபோது சத்யனின் இறுகிப்போன முகத்தைப் பார்த்து திகைத்து... பின் சுதாரித்து “ என்ன அப்பு முகமெல்லாம் இப்படியிருக்கு?” என்று கேட்டபடி அருகில் அமர்ந்த ராஜியை ஏறிட்ட சத்யன் “ அனுவுக்கு நடந்ததைப் பத்தி ஏன்மா என்கிட்ட சொல்லலை?” என்று இறுகிப்போன குரலில் கேட்டான்...

அனுவைப் பத்தி கேட்டதுமே ராஜா ராஜி இருவரின் முகமும் மாறியது... “ உனக்கு யார் சொன்னது சத்யா?” என ராஜா கேட்க...


“ இப்பதான் கோமதி அத்தை கால் பண்ணாங்க.... அப்பா மத்தவங்களைப் பத்தி எனக்கு கவலையில்லை... ஆனா தாத்தா? அவர் இப்படி செய்யலாமா? அனு நம்ம வீட்டுலயே பிறந்து வளர்ந்த பொண்ணுங்கற நினைப்பு கூடவா அவருக்கு இல்லை?” சத்யனின் வார்த்தைகள் வேதனையுடன் வந்தது...

அதை கேட்ட ராஜாவுக்கு திகைப்பு தான் “ இதுல தாத்தா என்ன பண்ணார் சத்யா?” என்று மகனை கேட்க....

அவரை ஆச்சர்யமாகப் பார்த்த சத்யன் “ தாத்தா தான்பா அந்த வரதனை ஜாமீன்ல எடுக்க பரசுவுக்கு வக்கீல் அரேஞ்ச் பண்ணி குடுத்திருக்கார்.... ஆனா ஜாமீனுக்கு கட்டியப் பணம் யார் குடுத்ததுனு தெரியலை.. லாயரை ஏற்பாடு பண்ணது தாத்தாதான்னு கோமதி அத்தை கன்பார்மா சொல்றாங்க ” சத்யன் சொன்னதும் ராஜா ராஜி இருவருக்குமே அதிர்ச்சி தான்...

“ இது எங்களுக்கு தெரியாதே? கோமதி அண்ணி இதைப் பத்தி என்கிட்ட சொல்லவேயில்லையே” ராஜி வருத்தமாக கூற...

“ ஒரு வேளை அவங்களுக்கே யார் மூலமாவது இப்பதான் தெரிஞ்சிருக்கலாம்.... சரி விடுங்க நான் தாத்தா கிட்டயே கேட்குறேன் ” என்ற சத்யன் தனது மொபைலை எடுத்து பெரியவரின் நம்பருக்கு கால் செய்தான்....

அவன் கால் செய்யும்போது இந்தியாவில் இரவு எட்டு மணி... சில ரிங்குகளிலேயே எடுத்த பெரியவர் “ சத்யா எப்படிப்பா இருக்குற?” என்று அன்பான குரலில் கேட்க...

“ நான் நல்லாருக்கேன் தாத்தா” என்று வெற்று குரலில் பதில் சொன்னவன் சில நிமிட மவுனத்திற்கு பிறகு “ தாத்தா அனுவை நாசம் பண்ண வரதனை ஜாமீன்ல எடுக்க நீங்கதான் பரசுவுக்கு வக்கீல் ஏற்பாடு செய்து குடுத்தீங்களா?” என்று கேட்டான்..

பெரியவரிடம் மவுனம்... ஓ........ சத்யனுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு போலருக்கு.... ஆனா குறிப்பிட்ட இதை மட்டும் கேட்டதும் பெரியவரின் மனம் லேசாக துணுக்குற்றது... இது நேரடி கேள்வி மறைத்து பதில் சொல்ல முடியாத கேள்வி .. “ ஆமாம் சத்யா.... பரசுவுக்கு வக்கீல் யாரையும் தெரியாததால நான்தான் ஏற்பாடு செய்து கொடுத்தேன்” என்று நேர்மையாக பதில் சொன்னார் பெரியவர்...

சில நிமிட அமைதிக்குப் பின் “ ஓகே தாத்தா நான் இன்னும் பதினஞ்சு நாள்ல இந்தியா வந்துடுவேன்... வந்ததும் பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு போன் காலை கட் செய்தான்...

ராஜாவும் ராஜியும் கேள்வியாக மகனைப் பார்க்க ... “ தாத்தாவே ஒத்துக்கிட்டார் அப்பா” என்று வெறுப்புடன் கூறினான் சத்யன்..

ராஜா நெற்றியில் அடித்துக்கொண்டு “ இவருக்கு ஏன் இந்த வேலை? ஒரு வேலைக்காரனை விட என் மச்சானோட மகள் அவ்வளவு கேவலமா போயிட்டாளா?” என்று கோபமாக கத்த... 


“ ஆரம்பத்துலருந்தே அவருக்கு என் அண்ணன் குடும்பம்னா ஒரு இளக்காரம் தான்.... இப்போ வீட்டுக்கு வந்த மருமகள்ல இருந்து வேலைக்காரன் வரை எங்க குடும்பம்னா இளக்காரமா போச்சு.... நம்ம வீட்டுப் பொண்ணை நாசம் பண்ணவன்னு நினைப்பு கூட இல்லாம அவனுக்கு உதவி செய்திருக்காங்க பாத்தியா சத்யா” என்று மூக்கை உறிஞ்சியவள் “ உனக்கு இன்னோரு விஷயம் தெரியுமா சத்யா? அந்த வரதனுக்கு லட்சக்கணக்கில் செலவு செஞ்சு சொந்தமா நர்சரியே வச்சு குடுத்திருக்கான் அந்த பரசு... ஏழைனு நெனைக்காம அவனை நமக்கு சமமா மரியாதை குடுத்து நடத்தினோம்... ஆனா அவன் நமக்கு செய்த துரோகத்தை பார்த்தியா சத்யா?” ராஜியின் அழுகை அதிகமானது “ என் மடியில வளர்ந்த என் அண்ணன் மகளோட நிலை இப்படி ஆகும்னு நான் கனவுல கூட நினைக்கலையே... அவளுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்க்கனும்னு என் அண்ணன் கனவு கண்டார்.... இப்போ எல்லாம் நாசமா போச்சு... இதுக்கெல்லாம் காரணகர்த்தா மான்சி தான்னு நினைக்கும்போது என் வேதனை தான் அதிகமாகுது சத்யா..... நடந்து எல்லாம் அவளுக்கு தெரியுமோ தெரியாதோ... ஆனா எல்லாத்துக்கும் மூலம் அவதான் சத்யா...” ராஜியின் ஒவ்வொரு வார்த்தையும் கண்ணீருடன் வந்தது..

சத்யனின் நெஞ்சிலும் அதேதான் ஓடியது என்பதால் தன் தாய்க்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் இறுகிப் போய் அமர்ந்திருந்தான் ..... “ சீக்கிரமே இந்தியா கிளம்ப ஏற்பாடு செய்ங்கப்பா” என்று ராஜாவிடம் கூறினான்...

அடுத்து வந்த நாட்களில் எப்பவும்போல தினமும் மூன்று வேலையும் மான்சியுடன் பேசினான்... குழந்தையைப் பற்றி விசாரித்தான்.. வழக்கம் போல அவன் பேச்சில் காதல் இருந்தது அன்பு இருந்தது... ஆனாலும் மான்சி அவனிடத்தில் ஏதோவொரு வித்தியாசத்தை உணர்ந்தாள்...

ஆம் சத்யனின் நடவடிக்கை அனைத்துமே கடமைக்காக என்பது போல் இருந்தது... சில நாட்களாக ராஜா ராஜியின் பேச்சுக்கள் ஏதோவொரு பயத்தை கிளப்பியிருந்தது... இளங்கன்று பயமறியாது என்று பரசு செய்த காரியத்தின் பலன் நமக்குத்தான் என்று அவளுக்கு ஓரளவுக்கு புரியவே செய்தது.... எப்போ எப்போ என்று பயந்து தவித்திருந்த நாள் இப்போது நெருங்கி விட்டதை உணர்ந்தேயிருந்தாள்....

ஆனால் மான்சியின் மனம் குழம்பினாலும் எதுவாயினும் சமாளிக்கும் திடத்துடன் சத்யனின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தாள்...

தன் தாத்தாவும்,, மனைவியும்,, பரசுவும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக எண்ணிக் குமுறி கொந்தளித்த சத்யனும் இந்தியா வந்து சேர்ந்தான்... மனம் முழுவதும் காதல் இருந்தாலும் அதை புதைத்துவிட்டு அதன்மேல் தன்மானத்தை குடியமர்த்திக் கொண்டு வந்து சேர்ந்தான்....



...........நம்பிக்கை துரோகம்........

“ ஒரு மனைவி செய்தால் ... ஒரு குடும்பம் அழியும்

“ ஒரு காதலி செய்தால் ...... ஒரு காதலன் அழிவான்

“ ஒரு நண்பன் செய்தால்..... ஒரு நட்பு அழியும்

“ ஒரு வீரன் செய்தால்...... ஒரு தேசம் அழியும்

“ ஒரு தொண்டன் செய்தால்.... ஒரு தலைவன் அழிவான்


No comments:

Post a Comment