Friday, January 8, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 17

சத்யன் கொஞ்சமாய் நிதானப்பட்டான் அவளின் பின்னந்தலையில் கைவைத்து தன் நெஞ்சோடு அழுத்தியவன் “ என்னடா... என்னாச்சு?” என்று கசிந்தான் ...

முகத்தை நிமிர்த்தி அவனைப்பார்த்து கண்சிமிட்டி உதடுகள் சுழித்து சிரித்தவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு காதருகில் சென்று “ அப்போ சாப்பிடும் போது கேட்டீங்களே.. இப்போ அதைத் தரப்போறேன்” என்று தகவல் சொல்லிவிட்டு நிமிர்ந்தவள் கண்களை மூடிக்கொண்டு சத்யனின் உதடுகள் நோக்கி பயணமானாள்...

அவள் மேலுதடு சத்யனின் மீசையை உரசியது... இன்னும் கொஞ்சம் இறங்கினால் அவன் உதடுகளோ... அவன் பின்னந்தலையில் அழுந்திய மான்சியின் விரல்கள் நடுங்கியது... உதடுகளும் உதடுகளும் உரசும் தூரத்தில்... கண்ணை மூடிக்கொண்டு மான்சி அவன் உதட்டில் தன் இதழ்களை பதிக்க... அது முத்தத்தில் முடியாமல் எதிலோ முட்டி நின்றது... மான்சி பட்டென்று கண்விழித்துப் பார்த்தாள்...



சத்யன் தன் கையை குறுக்கே விட்டிருந்தான்.... சீனப்பெருஞ்சுவரை விட பெரிதாக இருந்தது இந்த விரல்களால் ஏற்ப்படுத்தப்பட்ட சுவர்... மான்சி கேள்வியாய் அவன் கண்களைப் பார்க்க....

சத்யனின் முகம் தீவிரமாய் இருந்தது “ இல்ல மான்சி... இது இப்போ வேண்டாம்” என்றான் உறுதியாக....

மான்சி பார்வை கேள்வியின் கொக்கியாக வளைந்தது...

“ ஆமா மான்சி உதட்டுல குடுக்குற முத்தம் மட்டும் வேண்டாம்... நான் கேட்டேன் தான்... ஆனா இப்போ வேணாம்னு தோனுது.... எல்லா இடத்திலும் குடுக்குற முத்தம் மாதிரி இல்லை உதடுகள் கலக்குறது.... அதன்பின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு உடல்கள் கலக்கனும்னு வெறியே வரும்.... எனக்கும் இப்போ வெறி இருக்கு... சீக்கிரம் எனக்கு குணமாகனும்ங்கற வெறி.. இத்தனை நாளா நான் குணமாகனும்னு நெனைக்கவே இல்லை... ஆனா இப்போ வெறியா நினைக்கிறேன்... நான் சரியாகனும்.. என் கால்கள் சரியாகனும்... உன்னை என் கைகள்ல தூக்கிட்டு வந்து இந்த கட்டில்ல போட்டு அணுவணுவா ரசிச்சு ருசிக்கனும்....நான் சரியாகனும் மான்சி எப்படியாவது குணமாகனும்... உன்கூட இந்த கட்டில்ல விழுந்து புரளனும்.... இன்னும் நிறைய நிறைய பண்ணனும்...எல்லாம் வேனும்” சத்யன் கண்கள் ஜொலிக்க பேசிக்கொண்டே போனான்......

மான்சிக்கு அவன் மனம் புரிந்தது..... முத்தத்திற்குப் பிறகு ஏற்படும் வேட்கையின் வேதனையை எப்படி எதிர்கொள்வது?...... அவன் குணமாகவேண்டும் என்று வேகத்துடன் கூறியது மான்சிக்கு சந்தோஷமாக இருந்தது.... முன்புக்கு இப்போது அவனது மனக் கட்டுப்பாடும் கூட சந்தோஷம் தான்... காதலை மறுப்பதும் துறப்பதும் மட்டும் தான்..............

மயான அமைதியை அங்கே கொண்டுவந்தது சத்யனின் பேச்சு.... இருவரின் மூச்சு சப்தம் கூட அவர்களிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வெளியே போனது... அமைதியாக கட்டுண்டு கிடந்தவர்களை அழைத்தது சத்யனின் கைப்பேசி....

மான்சி திடுக்கிட்டு விலக... அவள் விலகா வண்ணம் அணைத்தவாறே தனது செல்லை எடுத்து ஆன் செய்து யார் என்று ஆங்கிலத்தில் கேட்டான்...

“ சின்னராசா நான் மரகதம் பேசுறேன்... எப்பிடி இருக்கீக சின்னய்யா?” என்று மரகதம் விசாரிக்க...

உதட்டில் தவழும் சிரிப்புடன் மனைவியைப் பார்த்து “ உன் அம்மாச்சி தான்” என்றவன்.. “... நான் நல்லாருக்கேன்... சொல்லு என்ன விஷயம்?” என்றான்.....

“ நம்ம மான்சி கண்ணு கூட பேசனும்”

சத்யன் தன் நெஞ்சில் கிடந்த மான்சியின் காதில் மொபைலை வைத்து “ உன்கூடத்தான் பேசனுமாம்.... பேசு மான்சி” என்றான்...

மான்சி அவன் கழுத்தை வளைத்திருந்த கையை எடுத்து மொபைலை பிடித்துக்கொண்டு “ சொல்லு அம்மாச்சி.... ஊர்ல பெரிய அம்மாச்சி பரசு எல்லாரும் நல்லாருக்காங்களா?” என்று கேட்டாள்....

அதன் பின் போனில் நடந்த உரையாடல்கள் சத்யன் காதிலும் விழுந்தது... மான்சி எழுந்து அமர்ந்து கொண்டு பேசினாள்.... இறுதியாக “ சரி அம்மாச்சி தம்பியை தொடர்ந்து மாத்திரை சாப்பிட சொல்லு... நல்லா சத்தான பொருளா வாங்கி சாப்பிட சொல்லு.. அவன் எல்லாத்தையும் மறந்து எனக்கு நிச்சயம் போன் பண்ணுவான்... அதுக்காக நான் காத்திருப்பேன்னு சொல்லுங்க அம்மாச்சி” என்று கூறிவிட்டு இணைப்பை கட் செய்தாள்...

விழிநீரை சுண்டியபடி மொபைலை சத்யனிடம் கொடுத்தாள் மான்சி....

போனை வாங்கி தலையணைக்கு அடியில் வைத்தவன்.... “ என்னாச்சு உன் தம்பிக்கு? எதுக்காக மாத்திரை சாப்பிடுறான்” என்று அக்கரை இல்லாதது போல் காட்டிக்கொண்டு கேட்டான் சத்யன்...

மான்சி பொங்கி வந்த விழிநீரை கட்டுப்படுத்த உதட்டை கடித்தபடி சத்யனைப் பார்த்தாள்...

அவளின் உணர்ச்சி கொந்தளிப்பைப் பார்த்து சத்யன் குழப்பத்துடன் “ என்ன மான்சி? உன் தம்பிக்கு ஏதாவது பயங்கர நோயா?” சத்யன் கேட்க...

இல்லையென்று தலையசைத்தவள் “ அவனுக்கும் ஒரு மோசமான விபத்து நடந்துடுச்சு... உங்களுக்கு விபத்து நடந்த அதே நாள்ல.. அதே நேரத்துல... என்னை வீட்டுல விட்டுட்டு வந்து இளநீர் அறுக்க மரம் ஏறுனவன் தலைக்குப்புற விழுந்து தலையில பலத்த அடி... கிட்டத்தட்ட ஆறு மாசமா செத்து பொழைச்சான்” மான்சி இதை சொல்லி முடிக்கும்போது அன்றைக்கு பரசு இருந்த நிலைமை கண்முண் வந்து போக.... முகத்தை இரு கையாலும் மூடிக்கொண்டு கதறிவிட்டாள்....

சத்யனுக்கு இந்த செய்தி அதிர்ச்சிதான்.... ஆனால் அதையும் மீறி மனைவி அழுகிறாளே என்ற உணர்வு வர... அழும் தன் மனைவியை இழுத்து அணைத்து ஆறுதல்படுத்த முயன்றான்.....




“ என் கனவு தேவதையே....

“ கட்டழகு மண்டலமே....

“ கவிதைப் புத்தகமே....

“ களவியல் கடலே...

“ காதல் கட்டிலே....

“ கற்பனைத் தொட்டிலே...

“ எனக்கு எல்லாமுமாய் நீயே....

“ இப்படி கண்ணீராய் மட்டும்...

“ எனக்கு வேண்டாம்!


“ ம்” என்றவளின் உடல் அன்றைய ஞாபகத்தில் லேசாக நடுங்கியது.... சத்யன் தனது அணைப்பை தளர்த்தி அவளை கவிழ்த்தார்ப் போல் தன்மீது திருப்பி இடையைப் பற்றி கொஞ்சம் தூக்கி தனது முகத்துக்கு நேராக அவள் முகத்தை கொண்டுவந்து கன்னத்தோடு கன்னம் வைத்து “ ம் இப்ப சொல்லு?” என்றான்..

மான்சிக்கு இதுபோல் படுத்திருப்பது சங்கடமாக இருந்தது... இதுவரை அவன் பக்கவாட்டில் தான் சரிந்து படுத்திருக்கிறாள்.. இதுபோல் அவன் மேலே இல்லை... அவனது முரட்டு நெஞ்சில் அவளது பூப்பந்துகள் நசுங்கியது... சத்யனின் இரு கைகளும் அவள் இருபக்க இடையிலும் அழுந்திகிடந்தது

மான்சி கூச்சத்துடன் நெளிய... “ என்னம்மா? உன் உடம்பு நடுங்குச்சு.... அதான்..... அப்படியே பேசாம படுத்துக்க மான்சி” சத்யன் கிசுகிசுப்பாக கூற... அந்த குரலில் இருந்த வசியம் ம்ம்ம்... மான்சியின் துடிப்பும் தவிப்பும் அதிகமானது....

தனது தனங்கள் அவன் நெஞ்சில் அழுந்தாமல் குறுக்கே கையை விட்டு அதன் மேல் படுத்துக்கொண்ட மான்சி “ உடம்பு நடுங்கினா இப்படியா? ம்ஹூம்.... விடுங்க நான் பக்கத்துலயே படுத்துக்கிறேன் ” என்றாள் சினுங்கலாக...

மான்சி கையை குறுக்கே விட்டதும் சத்யனுக்கு சிறு கோபம் தலைதூக்க “ ப்ளீஸ் மான்சி கையை எடு.... இதெல்லாம் நம்ம இளமைக்கு சின்ன வடிகால்தான்.. ஹஸ்பண்ட் ஒய்ப்பா இல்லாம... வெறும் லவ்வர்ஸ் மாதிரி இந்த சின்னச்சின்ன விளையாட்டுகள் நல்லது தானே மான்சி? ரெண்டுபேரோட மனசும் விரக்தியடையாம இளமையோட இருக்கும்...” என்று சத்யனின் குரலில் இருந்த ஏக்கம் அவள் கைகளை அகற்றியது.... மான்சி அழுத்தமாக அவனை அணைத்தபடி படுத்துக்கொள்ள ...

“ ம்ம் இப்ப சொல்லு? என்னை பார்த்துட்டு ஏன் அப்படி அழுதுகிட்டே ஓடுன?” சத்யன் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்...

சற்றுநேர அமைதிக்கு பிறகு மான்சி மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தாள் “ அன்னைக்கு உங்களுக்கு சாப்பாடு எடுத்துகிட்டு வந்தப்ப நீங்க தூங்கிகிட்டு இருந்தீங்க... சரி கிட்ட வந்து பார்க்கலாமேன்னு வந்தேன்.. பார்த்ததும் நெஞ்சுக்குள்ள திக்குன்னுச்சு... அது நீங்க இல்லேன்னு ஆயிரம் கடவுளை வேண்டினேன்... என்னால நம்ப முடியாம மறுபடியும் மறுபடியும் உங்க முகத்தைப் பார்த்தப்ப அது நீங்கதான்னு என் மனசு சொல்லுச்சு.... அப்புறம் ஷெல்பில் இருந்த உங்க போட்டோவை எடுத்துப் பார்த்ததும் நீங்கதான்னு உறுதியா தெரிஞ்சது... என்னால அழுகையை கட்டுப்படுத்த முடியலை... நீங்க கூப்பிட கூப்பிட அழுதுகிட்டே ஓடிப்போனேன்” மான்சி இயந்திரம் போல சொல்லிகொண்டே போனாள்...

“ ம்ம் அப்புறம்” சத்யன் பேசத் தூண்டினான்...

“ அப்புறம் சபாபதி அங்கிள் கிட்ட உங்களுக்கு விபத்து நடந்த தேதியை கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.. என்னாலதான் உங்களுக்கு இப்படி ஆகியிருக்குமோன்னு நெனைச்சு நெனைச்சு அழுதேன்... ரெண்டு நாள் கழிச்சு தாத்தா என்னை கூப்பிட்டு நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டதா சொன்னாரு..... மொதல்ல என்னால நம்பமுடியலை ... நம்பிக்கை வந்ததும் ஒரு நிம்மதி... அன்னைக்கு போல இல்லாம முறையா கல்யாணம் செய்துக்க கேட்டீங்களேனு ஒரு நிம்மதி.. நீங்க கேட்கலைனாலும் உங்க கூட இருந்து பணிவிடை செய்றதுக்கு எப்படியாவது தாத்தா கிட்ட அனுமதி வாங்கிருப்பேன்... ஆனா நீங்களே கல்யாணம் பண்ணிக்க கேட்டதும் உடனே சம்மதிச்சுட்டேன்...” இறுதியாக மான்சி கல்யாணம் பற்றி சொல்லும்போது அவள் குரலில் இருந்த சந்தோஷம் அவளுக்கு இந்த கல்யாணம் எவ்வளவு முக்கியமானது என்று சொல்லாமல் சொன்னது...



ஏனோ சத்யனுக்கு மான்சியை உடனே முத்தமிட வேண்டும் போல் இருந்தது... மான்சியின் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் தனது உதடுகளை அழுத்தமாக பதித்த சத்யன் “ உன்னை தோட்டத்துல வச்சு பார்த்ததும் என் மனசுல மொதல்ல தோனுனது உன்னை இங்கேயே பிடிச்சு வைக்கனும்னு தான்.. அது கல்யாணத்தால தான் முடியும்னு தோனுச்சு... அதான் தாத்தாவை மிரட்டி உண்ணாவிரதம் இருந்து எல்லாரையும் சம்மதிக்க வச்சேன்... அப்பவும் அடி மனசுல ஒரு பயம்... எங்கே நீ சம்மதிக்காம போயிடுவியோன்னு..... ஆனா அன்னிக்கு அழுததும் எனக்காக சாமி கும்பிட்டதும் சின்ன நம்பிக்கையை கொடுத்துச்சு... நிச்சயம் நீ ஒத்துக்கிட்டு கல்யாணம் நடக்கும்னு காத்திருந்தேன்.. அதேபோல எல்லாம் சரியா நடந்துச்சு” என்று சத்யன் சொன்னதும் வெகுநேரம் அங்கே அமைதி....

மீண்டும் சத்யனே ஆரம்பித்தான் “ ஏன் மான்சி தாத்தா கிட்ட சொல்லி உன் தம்பிக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய சொல்லவா?” என்று கேட்க...

மான்சி நிமிர்ந்து அவன் முகத்தை ஆச்சர்யமாக பார்த்தாள்... இவன் மறுபடியும் போட்டுப்பார்க்கிறானா? சத்யனின் முகத்தை கவனித்தாள்.. அதில் வெளிப்பூச்சு அற்ற உண்மையான அக்கறை.... மான்சியின் மனசுக்குள் மத்தாப்பூவாய் மலர்ச்சி ... “ ம்ஹூம் பரசு பயங்கர ரோஷம்.... எதையுமே ஏத்துக்க மாட்டான்... என்னை த்துக்கவே இன்னும் ரொம்ப நாள் ஆகும்.... இதுல உங்க உதவிகளையா... ம்ஹூம் ” என்று மான்சி சொன்னாள்...

அன்று பகல் தூக்கம் போனது இருவருக்கும்... மான்சியைப் பற்றி அவள் குடும்பம் அப்பா அம்மா என எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான் சத்யன்.... அவள் துக்கமாக பகிரும் விஷயங்களுக்கு தன் அணைப்பால் ஆறுதல் தந்தவன்.. அவள் சந்தோஷமாக கூறும் விஷயங்களுக்கு சிரிப்புடன் கலந்து கொண்டான்....

சத்யன் மான்சியைப் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டான்.... தன்னைப் பற்றியும் சிறிது சொன்னான்... மான்சியை சந்தித்த தினத்தன்று சென்னைக்கு எதற்காக சென்றான் என்பதையும்... இளமையிலேயே தறிகெட்டப் போனதை கொஞ்சம் கெத்தாக சொல்ல... மான்சி அவன் மீசையை பிடித்து இழுத்துக்கொண்டு “ அதெல்லாம் ஒன்னும் சொல்லவேண்டாம்... போதும் நிறுத்துங்க” என்று பொய் கோபத்துடன் சினுங்கினாள்...

அவள் பொறாமையை கண்டு சிரித்தபடி இறுக்கி அணைத்த சத்யன் “ ம்ம் அதெல்லாம் பழசு மான்சி.... இனிமேல் நானே நெனைச்சாலும் அதெல்லாம் முடியாது....” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி தனது ஆள்காட்டி விரலால் அவள் முகவடிவை அளந்து “ அப்படி என்னால முடியும்னாலும்.... நான் இனிமேல் போகமாட்டேன் மான்சி” என்றான்...

மான்சிக்கு கொஞ்சம் குதூகலம் தான்... அவன் சொன்னதின் அர்த்தம் இனி உன்னைவிட்டு எங்கும் போகமாட்டேன் என்பது தானே?....

அன்று மாலை பூஜை செய்யும்போது கடவுளிடம் ஒரு சிறப்புப் பிரார்த்தனையை முன் வைத்தாள் மான்சி “ அவரோட முதல் குழந்தை செயற்கையான முறையில் என் வயிற்றில் உருவானாலும்... அடுத்த குழந்தை இயற்கையான முறையில் எனக்கு வேண்டும் ஆண்டவனே” என்று மனமுருகி பிரார்த்தனை செய்தாள்...

அவன் அருகாமையும் நெருக்கமும் மான்சியின் இளம் மனதில் பல ஆசைகளை தூண்டியது... அதிலும் அந்த முரட்டு உதடுகள் அவள் முகத்தில் பட்ட போதெல்லாம் மான்சி தன்னை மறந்தாள்.... சீக்கிரமே அவனுடன் கலக்கும் நாள் வரும் என்று நல்லது கூறும் பட்சி ஒன்று அவள் காதுகளில் அடிக்கடி கூறிவிட்டு சென்றது....

அவளின் பெண்மை பூத்த இத்தனை காலத்தில் முதன்முறையாக பாலணுக்கள் உயிர்த்து ரத்தத்தில் கலந்து தனது இயக்கத்தை ஆரம்பித்தது.... சத்யனைப் பார்க்கும் பார்வைகள் அணைத்தும் காதல் பார்வையாக மாறிப் போனது.... அவன் புருவம் உயர்த்திக் கேட்கும்போது அவசரமாய் ஓடிவந்து அவன் கன்னத்தில் தன் இதழ்களை பதித்துவிட்டு ஓடிவிடும் அந்த நீலோன் மணிப்புறா...

உடல் உறவு இல்லாமல் காதலோடு கட்டித்தழுவி கொண்டு காலத்தை கடத்த கற்றுக்கொண்டனர் இருவரும்... மான்சியை பார்த்தவுடன் உள்ளுக்குள் ஏற்படும் கிளர்ச்சி மாறி.... சத்யனின் இதயத்தில் வீணை தந்திகளை இழுத்துக் கட்டி தடவித் தடவி மீட்டினார்கள்.... மான்சி வெட்கமாய் தலைசாய்த்து சிரித்தாள் என்றாள் இவனது இதயம் ஒரு பனிக் குளியலுக்கு போனது....

மனைவியை நெஞ்சில் சுமந்தபடி பால்கனியில் படுத்துக்கொண்டு நிலவின் அழகை ரசிக்க கற்றுக்கொடுத்தாள் மான்சி... சத்யன் என்ற கல்லிலிருந்து பல அழகான சிற்பங்களை கண்டு பிடித்தாள் மான்சி...

சத்யன் என்ற எரிமலையை சாந்தப்படுத்தும் சக்தி மான்சியின் புன்னகையில் இருந்தது... எரிமலையின் மீது காதலெனும் நீர் தெளித்து புன்னகையால் புதுக் கோலம் போட்டு... தாம்பத்யம் எனும் பூசனிப் பூவை தினமும் வைத்து ரசித்தாள் மான்சி....

மான்சியின் கடைவிழியோர சுருக்கத்தின் மடிப்பில் தன்னை சிறை வைத்துக்க்கொண்டான் சத்யன்....

அழகான தோட்டத்தில் பூத்த வாடாத ஜோடி மலர்களாக எப்போதும் புன்னகையும் பூரிப்புமாக கிடந்தனர் இருவரும்...




“ ஒரு ஜோடி உதடுகள் கல்லாகி...

“ ஒரு ஜோடி உதடுகள் உளியாகி....

“ இரு ஜோடி உதடுகள் இணைந்து...

“ செதுக்க செதுக்க...

“ தேன் கசியும் ஒரு நிகழ்ச்சிதான்....

“ முத்தமிடுவதும்...

“ முத்தமிடப் படுவதும்! 


No comments:

Post a Comment