Wednesday, January 6, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 12

கொள்ளை அழகை குத்தகைக்கு எடுத்தது போல் நின்றிருந்தவளை விழியெடுக்காமல் பார்த்திருந்தவனின் உதடுகள் அசைந்தன “ உட்கார் மான்சி” என்றான்...

சற்றுநேரம் கழித்தே மான்சி அமர்ந்தாள்... அவள் அமர்ந்த சேர் சத்யனுக்கு பக்கவாட்டில் இருக்க... மான்சி மறுபடியும் எழுந்து அவனுக்கு நேரே சேரை திருப்பிப்போட்டு அமர்ந்தாள்.... சத்யனின் உதடுகளில் மென் சிரிப்பு...
இன்னும் சற்றுநேரத்தில் இந்த அழகு முழுமையும் எனக்கே எனக்கு ... ஆனால் நான் தள்ளிநின்று ரசிக்கக்கூடிய அழகு.... தொடமுடியாத அழகு... தொட்டால் என்ன என்று அன்று அலட்சியமாக நெருங்கிய அழகு இன்று மொத்தமாக எனது காலடியில்... ஆனால் எனக்கு தான் என்று சந்தோஷம் கொள்ள முடியாத அழகு.... சத்யனின் மனதில் வழக்கம் போல வெறுமை சூழ்ந்தது...

மான்சியின் பார்வை சத்யனின் சட்டைப் காலரை விட்டுவிட்டு மேலே போகவேயில்லை...

சத்யனுக்கோ அவள் கண்களை நேருக்குநேர் சந்திக்க ஆசை... “ நிமிர்ந்து என் முகத்தைப் பார்க்கவே மாட்டியா?” ஏக்கத்துடன் வந்தது சத்யனின் குரல்...

குனிந்த நிலையிலும் மான்சியின் வெட்கத்தை காணமுடிந்தது சத்யனால்.... ஊப்ஸ் என்று மூச்சு விட்டவனை மெல்ல மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் மான்சி..... அதன்பின் மான்சியின் விழிகள் தாழவில்லை... அவன் முகத்தையே மொத்துக்கொண்டன அவள் விழிகள்.... இன்னும் சற்றுநேரத்தில் இந்த அழகனுக்கு நான் மனைவி... அன்று என் இதயத்தை திருடிய இந்தத் திருடனுக்கு என்னையே கொள்ளையடிக்கும் உரிமை இன்னும் சற்றுநேரத்தில்.... மான்சியின் பார்வை இஞ்ச் இஞ்ச்சாக வருடியது சத்யனை... சத்யனின் கண்களுக்கு வந்ததும் நேராக சந்தித்தாள்...

அவன் பார்வையில் தெரிந்த வெறுமையை அவள் கண்கள் கண்டுகொண்டது... பட்டென்று வெட்கம் விடுத்து அவன் விரல்களைப் பற்றினாள் அருகில் நெருக்கமாக அமர்ந்து “ இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு... உங்களை பேன்ட் சர்ட்ல பார்த்துட்டு இது போல வேட்டி சட்டையில பார்க்க ரொம்ப நல்லாருக்கு” என்று திக்காமல் திணறாமல் மெல்லிய குரலில் தெளிவாக பேசினாள்... அவள் விரல்கள் சத்யனின் விரல்களை ஆராய்வது போல வருடிவிட... நகங்களை கூட உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்

அவளின் அருகாமை சத்யனின் உள்ளத்து உணர்வுகளை மாற்றியது... அவள் விரல்களை தன் நெஞ்சில் அழுத்தியவன் “ நீயும் ரொம்ப அழகா இருக்க மான்சி” என்றவன் அவள் விரல்களை தனது உதடுகளில் ஒற்றியெடுக்க... மான்சி சிலிர்த்துப் போனாள்... அந்த ஏகாந்த நிலையிலும் முதல்நாள் மாலை டாக்டர் இவளிடம் தனியாக அழைத்துச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது

“ மான்சி நீ சத்யனை விரும்பி மேரேஜ் பண்ணிக்கிறது பெரிய விஷயமில்லை.... ஆனால் எந்த அழகு அவனுக்கு விருப்பமானதோ அதே அழகு அவனுக்கு ஆபத்தாகவும் முடியக்கூடாது... அதாவது நீ அவனை நெருங்கும்போது அவன் உணர்வுகள் தூண்டப்படும் அப்போ சத்யன் உன்னை அணைத்து சுகிக்க துடிப்பான்... அது முடியாது எனும்போது அந்த ஆசையே தன்மீதே வெறுப்பாக.. தாழ்வுணர்ச்சியாக மாறும்.. அதுபோன்ற நிலையில் நாளடைவில் சத்யனின் மனநிலை பாதிக்கப்படலாம்... ஏக்கமும் தாபமும் அவன் ஆரோக்கியத்தை கெடுத்து மனநோயாளி போல் மாற்றிவிடும்... தன்னால் முடியவில்லையே என்ற ஏக்கம் டிப்ரஷனாகி விடும்... அதனால் நீதான் கவனமா இருக்கனும்” டாக்டர் சொல்லிவிட்டு போனது மான்சியின் மனதில் மீண்டும் ஓடியது...

சத்யனிடமிருந்து சங்கடமாக விரல்களை வரும் விடுவித்துக்கொண்டவள்... ‘ ச்சே இந்த ஐயர் ஏன் இன்னும் கூப்பிடலை?” என்று எண்ணியபடி கதவைப் பார்க்க... மிகச்சரியாக ராஜா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்..

“ ம்ம்ம் இளவரசனும் இளவரசியும் சீக்கிரம் வாங்க” என்று உற்சாகத்துடன் கூறியபடி மகனின் சேரை தள்ளிக்கொண்டு வெளியே வர.. மருமகளை அழைத்துக்கொண்டு போக ராஜி உள்ளே வந்தாள்....

ஹாலின் நடுவே போடப்பட்டிருந்த மணப்பந்தலில் சத்யன் அழைத்துச்செல்லப் பட்டு வேலு வரதன் உதவியுடன் வீல் சேரில் இருந்து வேலைபாடுகள் நிறைந்த சிம்மாசனம் போன்ற வேறு சேருக்கு மாற்றப்பட்டான்.. அவனுக்கு பக்கத்தில் இருந்த மற்றொரு சேரில் மான்சி அமர வைக்கப்பட்டாள்...

சத்யன் உடல் பாதிப்படைந்தவன் என்று யார் சொன்னாலும் நம்பமுடியாத அளவுக்கு நிமிர்வுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தான்... அவன் அருகில் தங்கச்சிலையாக மான்சி... சத்யனின் உடல் குறைபாடு மட்டும் இல்லையென்றால் இதுபோல் ஜோடி உலகிலேயே இல்லை எனுமளவுக்கு இருவரும் பொருத்தமாக அமர்ந்திருந்தனர்...

ஹால்முழுவதும் நிரம்பி வழியும் சொந்த பந்தங்கள்.... தாத்தா ராஜா ராஜி சாமிக்கண்ணு மரகதம் என மிக முக்கியமானவர்கள் மட்டும் மணவறையின் அருகில் நிற்க்க... கணவனை காணாமல் ஆத்திரத்துடன் அலைந்துகொண்டிருந்தாள் கோமதி...

அனுரேகா அலையும் பார்வையும் தனக்கேற்ற ஜோடி கிடைக்குமா என்று தேடும் விழிகளுமாக... திருமணத்திற்கு சம்மந்தமேயில்லாமல் அரைகுறையாக தொடை தெரிய ஒரு உடையை அணிந்துகொண்டு யாருடனோ அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள்..
இதெல்லாம் ஒரு கல்யாணம்.. இதை பார்க்க வேறு செய்யனுமா? என்ற அலட்சியம் அவளது தோற்றத்தில்

ஐயர் மந்திரம் சொல்ல சத்யன் எரியும் ஹோமத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான்... இருவருக்கும் மஞ்சள் முடிந்த கங்கணம் கட்டப்பட்டது... அவ்வளவு நேரம் அமைதிகாத்த மான்சிக்கு அப்போதான் உள்ளுக்குள் சிறு பதற்றம்... தம்பியும் பாட்டியும் இல்லையே என்று... ஐயரின் கணீர் குரல் மந்திரத்தை சொல்ல... சிலவற்றை சத்யனும் திரும்ப சொன்னான்.. சத்யனின் எதிரே ஒரு நாற்காலியில் மஞ்சளில் பிடித்து வைத்த பிள்ளையாருக்கு பூக்களால் அர்ச்சனை செய்தபடி ஐயர் சொல்லும் மந்திரத்தை கவணமாக சொன்னான் சத்யன்....

“ திருமாங்கல்யத்தை எடுத்துட்டு வாங்கோ” என்று ஐயர் குரல் கொடுக்க .. எல்லோரிடமும் ஆசிர்வாதம் பெற சென்றிருந்த திருமாங்கல்யம் ஐயரிடம் எடுத்துவரப்பட்டது... அதை வாங்கி கீழே வைத்துவிட்டு தனது மந்திரத்தின் மூலம் அந்த மாங்கல்யத்துக்கு உருவேற்றி உயிர்கொடுத்து அதை கையில் எடுத்து சத்யனிடம் கொடுத்தார் ஐயர்...

சத்யன் திருமாங்கல்யத்தை கையில் வாங்கிக்கொண்டு மான்சியைப் பார்த்தான்... மான்சி தலை குனிந்திருந்தாலும் அவளது கண்ணீர் அவளின் மார்புச் சேலையில் சொட்டியிருந்ததை சத்யன் கவனித்தான்... அவள் பக்கமாக திரும்பினான்...

யாரோ பின்னாலிருந்து மான்சியை திரும்புமாறு கூற... மான்சியும் சத்யன் பக்கமாக திரும்பினாள்... சத்யன் உதட்டில் வழியும் புன்னகையுடன் தாலியை மான்சியின் கழுத்தருகில் எடுத்துச்சென்றான்..

அப்போது பங்களாவின் வாசலில் இருந்து பரசுவின் உரத்த குரல் “ அக்கா......... வேனாம் அக்கா...... அவன் உனக்கு வேணாம்... எழுந்திரிச்சு வந்துடு அக்கா” என்று கெட்டிமேளத்தையும் மீறி பங்களா முழுவதும் எதிரொலிக்க... அனைவரின் கவனமும் பரசுவின் பக்கம் திரும்பியது...

மான்சி அதிர்வுடன் திரும்பி தம்பியைப் பார்க்க.... சத்யனும் திரும்பி பார்த்தான்... சத்யனின் ஆசைப்படி பரசுவின் முன்னால் மான்சியின் கழுத்தில் தாலிக்கட்டப் போகும் கர்வம் சத்யனின் கண்களில் மின்னலாய்...

பரசு கூட்டத்தை விளக்கிக்கொண்டு அவசரமாய் உள்ளே ஓடி வந்தான்... “ இவன்கூட உனக்கு கல்யாணமா? அக்கா வந்துடு நம்ம வீட்டுக்கு போயிடலாம்... இவன் கூட உனக்கு கல்யாணம் வேண்டவே வேண்டாம்” என்று கதறியபடி பரசு கூறியதும் மான்சியின் மனம் உடைந்துபோனது..

“ எப்படிடா வந்த பரசு” என்றபடி எழ முயன்றவளின் கழுத்தை சத்யனின் கைகள் சுற்றி வளைத்திருந்தது... மான்சி என்னவென்று சுதாரித்து குனிந்து தன் நெஞ்சில் தவழும் மாங்கல்யத்தைப் பார்த்துவிட்டு நிமிரும் போது சத்யன் முகம் முழுவதும் சிரிப்புடன் அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்தான்...

அனைவரும் திகைப்பு விலகி அவசரமாக அட்சதையை தூவி ஆசிர்வதிக்க... மான்சி கண்ணீருடன் தம்பியைப் பார்த்து தலையசைத்தாள்... சத்யன் ஏளனமான சிரிப்புடன் பரசுவைப் பார்க்க.... எல்லாம் முடிந்துபோனது...

பரசு அப்படியே தரையில் மண்டியிட்டு சிறு குழந்தை போல் கேவிக் கேவி அழுதுகொண்டிருந்தான்... மான்சி இருக்கையிலிருந்து எழுந்து தம்பியிடம் செல்ல நினைக்க... சத்யன் அவள் கையை வலுவாகப் பற்றியிருந்தான்... மான்சி அவனைத் திரும்பி பார்க்க... அவன் பார்வையில் போகாதே என்ற எச்சரிக்கை.....


தம்பியின் கண்ணீர் மான்சியின் இதயத்தை கிழிக்க... சத்யனின் எச்சரிக்கையை மீறி தம்பியிடம் செல்லமுடியாமல் மணவறையிலேயே அப்படியே மண்டியிட்டு அமர்ந்தவள் முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் விட்டாள்....





“ வெற்றியும் நிரந்தரமில்லை...

“ தோல்வியும் நிரந்தரமில்லை...

“ இவை இரண்டுக்கும் இடையேயான...

“ போராட்டம் மட்டும் என்றும் நிரந்தரம்!

சத்யன் மான்சி திருமணம் இனிதே முடிந்தாலும்... அதன்பின் நடந்த சம்பவங்கள் அங்கிருப்பவர்களை திகைப்பில் ஆழ்த்த.... எல்லோரும் கதறியழும் மணமகளையே பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தனர்...

தன் காலடியில் மடிந்து அமர்ந்து அழும் மனைவியைப் பார்த்த சத்யனின் மகிழ்ச்சி நொடியில் மறைய.... கையை நீட்டி அவள் தலையில் வைத்தான்.... மான்சி பட்டென்று நிமிர்ந்து கண்ணீருடன் அவனைப் பார்த்ததும் “ இப்ப ஏன் அழற? இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கலையா?” சத்யனின் குரலில் வேதனை கலந்த விரக்தி...

அவன் கூறிய வார்த்தையைவிட வேதனையை சுமந்த சத்யனின் முகம் மான்சியின் இதயத்தை தைக்க... கண்ணீரை அவசரமாக துடைத்துக்கொண்டு வேகமாக எழுந்து சத்யனின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு அவனருகில் நின்றுகொண்டாள்...

மான்சியின் அந்த நிமிடநேர செயலில் உண்மையிலேயே சத்யன் சட்டென்று உருகித்தான் போனான்.... அவள் கையை எடுத்து கன்னத்தில் அழுத்திக்கொண்டு மான்சியைப் பார்த்து கீற்றாய் புன்னகைத்தான்...

மான்சி மெல்ல தலைகுனி்ந்து “ வந்திருக்கறது என் தம்பி பரசுராமன்.... நான் அவன்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரவா?” என்று கணவனிடம் அனுமதி கேட்டாள்....

சத்யன் அவள் முகத்தையே உற்றுப்பார்த்தான் ... பிறகு “ சரி மான்சி.... ஆனா நானும் வருவேன்” என்றவன் பக்கவாட்டில் திரும்பி “ வேலு” என்று குரல் கொடுக்க ... வேலு அவசரமாக ஓடிவந்து சத்யனின் அக்குளில் கைவிட்டு தூக்க... சற்றுமுன் நடந்த கண்ணீர் படலத்தில் திகைத்து நின்றிருந்த ராஜாவும் ராஜியும் வேகமாக வேலுவின் உதவிக்கு வந்தனர்...

சத்யனை மூவரும் சேர்ந்து தூக்கி வீல்சேரில் அமர்த்த...அதையெல்லாம் பார்த்த பரசுவின் கதறல் அதிகமானது.... இப்படியொருவனா என் அக்காவுக்கு கணவன்? ஓவென்று தலையில் அடித்துக்கொண்டான்....

மான்சியால் மணவறையில் நிற்க்கமுடியவில்லை.. ரத்தம் கசியும் அளவிற்கு கீழுதட்டை கடித்து குமுறலை அடக்கினாள்.. சத்யனின் கையை அழுத்தமாகப் பற்றியவளை ஏறிட்டுப் பார்த்த சத்யன் “ வா ” என்றதும் கால்கள் துவள சத்யனின் வீல்சேர் அருகிலேயே நடந்தாள் ...

இருவரும் பரசுவை சமீபித்ததும்... பரசு சத்யனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை ... அவன் பார்வை மான்சியையும் அவள் கழுத்தில் தொங்கும் தாலியையும் மாறிமாறிப் பார்த்தது... “ ஏன்க்கா இப்படி ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட்ட? ” என்று கண்ணீருடன் கேட்டான்

பரசுவின் வார்த்தை அங்கிருந்த அத்தனைபேரையும் வருத்தப்படுத்தியது... ராஜா சட்டென்று முன்னால் வந்து “மான்சியோட சம்மதத்துடன் தான் இந்த கல்யாணம் நடந்திருக்கு” என்று கூற...

விறைப்புடன் நிமிர்ந்த பரசு “ எது சார் கல்யாணம்? இதுவா கல்யாணம்? பொம்மை கல்யாணம் செய்ற குழந்தைங்க கூட பொருத்தமான பொம்மைகளைத்தான் ஜோடி சேர்ப்பாங்க... ஆனா பெரியவங்க நீங்கல்லாம் சேர்ந்து செய்திருக்க கல்யாணத்தைப் பாருங்களேன்.... என் அக்காவோட கால் தூசிக்கு சமமாவானா இந்த ஆளு ... போயும் போயும் இவனைப் போய் .... ச்சே ” பரசு ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டினான்...

சத்யன் முகம் இறுக அமைதியாக பேசும் பரசுவையே வெறிக்க... பெரியவர்கள் பரசுவுக்கு பதில் சொல்லமுடியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தனர்....

மான்சிதான் பரசுவின் வார்த்தைகளில் துடித்துப் போனாள்... சத்யனின் கையைவிட்டு விட்டு தம்பியின் அருகில் வந்தவள்... பட்டென்று அவன் வாயைப்பொத்தி “ அப்படியெல்லாம் பேசாதடா... நான் விருப்பப்பட்டு தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன்... யாரும் என்னை வற்புறுத்தலை பரசு ” மான்சியின் கண்ணீர் குரல் இறைஞ்சியது.....



தன் வாயை பொத்திய மான்சியின் கையை விலக்கிய பரசு விறைப்புடன் பார்த்து “ யாரு இவனை கல்யாணம் பண்ண உனக்கு விருப்பமா? அவன் உன் கையை பிடிச்சதுக்கே அப்படி அழுத... நான் என்னன்னவோ கற்பனை பண்ணேனே இப்படிப் போய்,,, ம்ஹூம் வேனாம்க்கா இவன் உனக்கு பொருத்தமானவன் இல்லை.... வா போயிடலாம்...” மான்சியின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு வெளியேப் போகும் வழியில் திரும்ப...

தம்பியின் வலுவான பிடியில் இருந்து கையை விடுவிக்க முடியாமல் போராடியபடி மான்சி பதட்டத்துடன் திரும்பி சத்யனைப் பார்த்தாள்... அவன் தனது வலது புருவத்தை மட்டும் உயர்த்தி “ என்ன?”என்பது போல் பார்த்து தனது வலது கையை அவளை நோக்கி நீட்டி “ இங்கே வந்துடு ”....என்பது போல் அழைக்க...

அவ்வளவு தான் உள்ளுக்குள் உருகி ஓடியது மான்சிக்கு.... “விடு கையை” ஆவேசத்துடன் முரட்டுத்தனமாய் தம்பியின் கையை உதறியவள் ஓடிவந்து சத்யனின் கையைப் பற்றி தனது இடுப்பைச் சுற்றி விட்டுக்கொண்டு அவன் முகத்தை இழுத்து தனது நெஞ்சில் அழுத்திக்கொண்டு “ இல்ல இல்ல உங்களை விட்டு நான் போகமாட்டேன்... எப்பவுமே போகமாட்டேன் ” என்று குமுறியவளின் இடுப்பை இரு கையாலும் வளைத்துக்கொண்டு அவள் நெஞ்சில் முகம் புதைத்த சத்யனுக்கு கூட கண்கள் கலங்கியது... ஆனால் ஏன் கலங்கியது என்றுதான் அவனுக்கு புரியவில்லை... ம்ஹூம் தெரியவில்லை...

மான்சி திரும்பி தம்பியை பார்த்தாள்... “ இவரை விட்டு நான் வரமாட்டேன் பரசு... வந்தா செத்துடுவேன்” என்று கூற... சத்யனை அவள் அணைத்திருந்த விதமும்.. அவளின் வார்த்தைகளும் பரசு அதிர்ச்சியடைச் செய்ய.. கண்கள் சிமிட்டாமல் அவளையேப் பார்த்தான்...

அவ்வளவு நேரம் ஒதுங்கியிருந்த பெரியவர் பரசுவின் அருகில் வந்து... தோளில் கைவைத்து “ பரசுராமா உன்னோட வேதனை எனக்கு புரியுது... நீ சொல்றது நியாயமான வார்த்தைகள் தான்... அதனால்தான் இவ்வளவு நேரம் ஒதுங்கியிருந்தேன்... ஆனா பெரியவன் என் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து உள்ளே வந்தேன்னா சில விஷயங்களை விவரமா பேசலாம்...” என்று கூப்பிட பரசு அவருக்கு பதில் சொல்லாமல் வெறித்துப் பார்த்தான்... பெரியவர் அவன் தோளில் கைப்போட்டு தனது அறைக்கு தள்ளிக்கொண்டு போக... ராஜாவும் ராஜியும் அவர்கள் பின்னால் போனார்கள்...

பேரனின் கண்ணீரில் கலங்கிப்போயிருந்த மரகதம் மான்சியின் அருகில் வந்து “ என்னா கண்ணு இது? இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்.... போம்மா போய் தம்பியை சமாதானப்படுத்து ” என்று பேத்தியிடம் சொல்ல...

மான்சி சத்யனின் முகம்ப் பார்த்தாள்... அவன் வேலுவைப் பார்க்க... வேலு சத்யனை தள்ளியபடி பெரியவரின் அறைக்குப் போக... மான்சி அவர்கள் பின்னால் போனாள்...

அங்கே சுதாரித்தது சபாபதி தான்... சாமிக்கண்ணுவின் உதவியுடன் கல்யாணத்துக்கு வந்தவர்களை சாப்பட அழைத்துச் சென்றார்...

நின்றுவிடும் என்று எண்ணிய திருமணம் நடந்துவிட்டதில் அதிர்ந்து போய் நின்றிருந்தனர் தண்டபாணியும் கோமதியும்... சற்று நேரம் நின்றிருந்துவிட்டு வெறுப்புடன் தங்களின் அறைக்கு திரும்ப.. அவர்களின் சீமந்தப் புத்திரியோ உதட்டை பிதுக்கி காட்டிவிட்டு தனது ஸ்கூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினாள்..

அறைக்குள் சென்ற பெரியவர் “ உட்காரு தம்பி ” என்று பரசுவுக்கு சோபாவை காட்ட... அவனோ மான்சியின் கையைப் பற்றியிருக்கும் சத்யனையே வெறித்துப் பார்த்தான்...

“ பரசு கல்யாணம்ங்கறது நாம நிச்சயம் பண்றது இல்லை.. நமக்கும் மேல ஒருத்தன் இருக்கான் அவன் எடுத்த முடிவை நாம செயல் படுத்துறோம்... அதனால முதல்ல பதட்டத்தை குறைச்சு நடந்ததை ஏத்துக்கப் பாரு பரசு..” என்று சொக்கலிங்கம் பொறுமையாக எடுத்து சொல்ல...

வெடுக்கென்று திரும்பிப்பார்த்த பரசு “ எது சார் ஆண்டவன் எடுத்த முடிவு? இதுவா? உங்கவீட்டுப் பொண்ணை இப்படியொருத்தனுக்கு உங்களால கல்யாணம் பண்ணி குடுக்க முடியுமா சார்? என் அக்காவை எப்படியெல்லாம் வாழ வைக்கனும்னு நான் ஆசைப்பட்டேன்... என் அக்கா சாமி மாதிரின்னு எல்லார்கிட்டயும் சொல்வேனே... ஆனா இப்போ அவளை இப்படி ஒருத்தனுக்கு கட்டி வச்சிட்டீங்களே” என்று பரசு ஆற்றாமையுடன் குமுற...

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த சத்யன்... திடீரென்று வாய்விட்டு சத்தமாக சிரித்து “ யாருடா சாமி உன் அக்காவா? அன்னைக்கு நீ சொன்ன அந்த வார்த்தைதான் இன்னைக்கு உன் அக்கா என் பொண்டாட்டி ஆனதுக்கு காரணம்... அவ கையைப் பிடிச்சதுக்கே என் கழுத்துல கத்தி வச்சல்ல நீ? இப்போ அவளை நான் தொடாமலேயே என் குழந்தையை சுமக்கப் போறா... நான் கையைத்தானடா தொட்டேன்.. ஆனா நீ அதுக்கு என் கழுத்துலயே கத்தி வச்ச.... எது நடக்க கூடாதுன்னு நீ என் கழுத்துல கத்தி வச்சயோ அது உன் அக்கா வாழ்க்கையில இனிமே கிடையவே கிடையாது.... உன் அக்கா சாமின்னா அந்த சாமியவே என் காலடில வச்சிருக்க நான் யாருடா?” சத்யனின் குரல் உரத்து ஒலித்தது...

அவன் வார்த்தைகள் மான்சி வாழப்போகும் வாழ்க்கையை பரசுவுக்குப் படமாக போட்டு காமிக்க... கொதித்துப்போனான் பரசு... முகம் கோப வெறியில் சிவக்க “ டேய் ” என்று ஆக்ரோஷத்துடன் சத்யன் மேல் பாய்ந்து அவன் கழுத்தை தனது கைகளால்ப் பற்றி இறுக்கி “ நீ உயிரோட இருந்தா தானடா நீ சொன்னதெல்லாம் நடக்கும்... நீ செத்து என் அக்கா முண்டச்சி ஆனாலும் பரவாயில்லை நீ இருக்கக்கூடாது” என்று கத்தியபடி சத்யனின் கழுத்தை நெறிக்க....

எல்லோரும் அலறியபடி சத்யன் அருகில் ஒடி வந்தனர்... ஆனால் சத்யன் மட்டும் இன்னும் சிரித்தபடியே இருந்தான்...

அப்போது யாரும் எதிர்பாரதவிதமா மான்சி “ அடப்பாவி” என்று அலறியபடி பரசுவின் சட்டை காலரைப் பிடித்து இழுத்தாள்... மற்றவர்கள் அவன் கையை சத்யனின் கழுத்திலிருந்து விடுவிக்க.... மான்சி ரௌத்திரமாக பரசுவின் பக்கம் திரும்பி வலது கையை துவளவிட்டு அதை தனது பலங்கொண்ட மட்டும் பரசுவின் கன்னத்தில் இறக்க பரசு கன்னத்தைப் பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தான்....

அவன் சுதாரித்து எழுந்திரிப்பதர்கள் அவனை நெருங்கி சட்டை காலரைப் பற்றி தூக்கிய மான்சி “ யார்மேலடா கைவச்ச? உனக்கு மரியாதை குடுத்து வீட்டுக்குள்ள கூப்பிட்டு பேசினதுக்கு அவர்மேலயே கைவைக்கிறயா? யாருடா சொன்னது நான் சாமின்னு... இல்லை நான் சாமி இல்ல.. நான் இப்போ சத்யனோட பொண்டாட்டி... இனி நீ இந்த வீட்டுல இருந்தா நான் கொலைகாரி ஆயிடுவேன்... போடா வெளியே” என்று அவனை வாசலை நோக்கித் தள்ளிவிட... பரசு கீழே விழாமல் கதவைப் பிடித்துக்கொண்டு நின்று திரும்பி தனது அக்காவை பார்த்தான்...

என் அக்காவா இது? அவளுக்கு அதிர்ந்து கூட பேச தெரியாதே? அமைதியான அவள் முகமா இது? இது காளியின் ரூபம் போல............... ம்ஹூம் இல்ல இது என் அக்கா இல்லை? ’ மான்சியின் விரல்கள் தடம் பதித்த கன்னத்தை கையால் தாங்கிய பரசுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது... அவனது ஆத்திரம் வடிந்து ஆற்றாமை மேலோங்க கண்ணீர் வற்றாமல் போனது

மரகதம் ஓடிவந்து தன் பேரனை அணைத்துக் கொண்டு “ வேனாம் ராசு நீ இங்கருந்து போயிடேன் .... சின்னய்யா மேல போய் கை வச்சுட்டியே? போயிடு ராசா” என்று கண்ணீருடன் வேண்டினாள்...

அதிர்ச்சி விலகிய சொக்கலிங்கம் வேகமாக பரசுவை நெருங்கி அவன் தோளில் கைபோட்டு வெளியே அழைத்து வந்து “ பரசு நீ இப்போ போ... இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நானே உன்னை தேடி வர்றேன்” என்றவர் டிரைவரை அழைத்து “ இவரை கொண்டுபோய் மதுரை பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏத்தி விட்டுட்டு வா கோபி ” என்று கூற...

டிரைவர் சரியென்று தலையசைக்க... சாமிக்கண்ணு பேரனை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று காரில் ஏற்றினார்.. ஆனால் அவர் ஏற்றிய மறு நிமிடம் காரை விட்டு இறங்கிய பரசு “ நான் இந்த வீட்டு கார்ல போகமாட்டேன் தாத்தா.... எனக்கு ஒரு அக்கா இருந்தா... அவ இப்போ இல்லை... எப்ப இப்படியொருத்தனை கட்டிக்க சம்மதிச்சாளோ இனிமேல் அவளுக்கு தம்பியும் இல்லேன்னு சொல்லிடுங்க தாத்தா” என்று நிமிர்வுடன் கூறிவிட்டு விடுவிடுவென்று ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்

சாமிக்கண்ணு கவலையுடன் அவனையேப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் வந்து பெரியவரிடம் விபரத்தை சொல்ல... “ சரி போகட்டும் விடு சாமி .. அவன் இங்க இருந்தா பிரச்சனை மேலும் அதிகமாகும்” என்று கூறிவிட்டு அறைக்கு சென்றார்...

மான்சி தன் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்காமல் சத்யனின் கழுத்தை விரல்களால் வருடிக்கொண்டு “ மன்னிச்சிடுங்க... அவன் சின்னப்பையன் தெரியாம பண்ணிட்டான்” என்று கெஞ்சுதலாக கூற...

சத்யன் புன்னகையுடன் கழுத்தில் இருந்த அவள் விரல்களை எடுத்து அவன் உதடுகளில் அழுத்தி முத்தமிட்டு... “ நீ இருக்கும் போது எனக்கென்ன கவலை” என்றான்.. அவன் முத்தமிட்ட விரல்கள் பரசுவின் கன்னத்தில் பதிந்ததால் சத்யனின் முத்தத்தில் மகிழ்ந்தது…

சிரிக்கும் சத்யனை முறைத்த பெரியவர் “ நீ பேசினது கொஞ்சங்கூட சரியில்லை சத்யா.... பழிவாங்கவும் பகையை வளர்க்கவும் இல்லை இந்த கல்யாணம்...... என் குடும்பத்துக்கு வாரிசு அத்துப் போயிடக் கூடாதுன்னு தான் நான் இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிச்சேன்... ஆனா நீ நெஞ்சுல வக்கிரத்தை வளர்த்து வச்சுகிட்டு மான்சி கழுத்துல தாலி கட்டிருக்க?.... இன்னிக்கு பரசுவுக்கு நடந்தது நாளைக்கு மான்சிக்கு நடந்ததுன்னா மான்சியை நானே அழைச்சுக்கிட்டுப் போய் பரசு கிட்ட ஒப்படைச்சு வந்துடுவேன்... பரசுவோட அக்காவா........... “ பெரியவரின் குரலில் என்றுமில்லாத கோபம்....

மெல்லியதாக இருந்த புன்னகை மேலும் விரிய “ தாத்தா மான்சி மை ஒய்ப்... அவளை என்னைத்தவிர வேற யாரும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது...” என்று கூறிவிட்டு சிரித்தவன் .. சட்டென்று சிரிப்பு உதட்டில் உறைய “ என்னடா வீல்சேர்ல இருக்குறவனால என்ன பண்ணமுடியும்னு நெனைக்காதீங்க..... எனக்குப் பிடிக்காத எது நடந்தாலும் இந்த குடும்பத்தையே அழிச்சிடுவேன்” என்று சிங்கமாய் கர்ஜித்தான்...

அந்த குரலில் எல்லோரும் மிரண்டாலும் பெரியவர் அசரவில்லை... “ உனக்குப் பிடிக்காதது நடந்தா நீ இந்த குடும்பத்தை அழிக்கிறயோ இல்லையோ... மான்சிக்குப் பிடிக்காதது நடந்தா நான் உன்னையே அழிச்சிடுவேன்” என்று அலட்சியமாக கூறிவிட்டு “ டேய் வேலு இவனை ரூமுக்குக் கூட்டிப்போ...” என்று வேலுவுக்கு உத்தரவிட... அவன் பதட்டமாக சத்யனின் சேரைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தான்...

சத்யனின் வார்த்தையிலும். தாத்தாவின் பேச்சிலும் கலங்கிப்போய் நின்றிருந்தனர் மான்சியும் ராஜா தம்பதிகளும்...

“ ராஜி மான்சியைக் கூட்டிப்போய் சாப்பிட ஏதாவது கொடுத்து சத்யன் அறையில விட்டுட்டு வா... நான் போய் வந்தவங்களை கவனிக்கிறேன் ” என்று மருமகளுக்கு உத்தரவிட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினார் பெரியவர்.....

அப்பாவின் கோபத்தில் அலறிப் போய் நின்றிருந்த ராஜா அவசரமாக அப்பாவின் பின்னால் ஓடினார்..... ராஜி கண்களைத் துடைத்துக்கொண்டு மான்சியை தோளோடு அணைத்தபடி வெளியே அழைத்து வந்தாள்...

மதியம் 1-20 மணி... காலையிலிருந்து தம்பிக்காக அழுத கண்ணீர் கரை போக முகத்தை கழுவிவிட்டு.. சத்யனுக்கான உணவை கையிலேந்திய படி ராஜி பின்தொடர மான்சி பதுமையாய் அசைந்து மாடியேறினாள்... சத்யனின் அறைக்குள் நுழைந்தபோது அவன் உடை மாற்றி வெறும் ஷாட்ஸ்ம் டீசர்ட்டுமாக மொபைலை நோண்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தான்... 

இவர்களைப் பார்த்ததும் புன்னகையுடன் தலையசைத்து மொபைலை எடுத்து வைத்தான்.. மான்சியால் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை.... ராஜி உணவுகளை வைத்துவிட்டு “ நடந்ததை மறந்துட்டு ரெண்டுபேரும் சாப்பிடுங்க... நான் போறேன்” என்று கூறிவிட்டு ராஜி கீழே போக... வேலு டெஸ்க்கை எடுத்துவந்து வைத்துவிட்டு சத்யன் கைகழுவ உதவியதும் “ நீங்களே பரிமாறுறீங்களா சின்னம்மா? நான் போறேன்” என்றதும்..

மான்சி சரியென்று தலையசைத்தாள்... வேலு வெளியேறினான்... மான்சி நின்றபடி தட்டில் உணவுகளை எடுத்து வைக்க... சத்யன் அவள் கையைப் பற்றி தன்னருகில் உட்கார வைத்து “ உட்கார்ந்தே சாப்பாடு வை மான்சி” என்றான்..

மான்சி அவன் அருகில் அமர்ந்தாள்... வெகு அருகாமையில் சத்யனின் மூச்சுக்காற்று அவள் பிடரியில் பட்டு சிலிர்க்க வைக்க சாதம் வைத்த கை மெல்ல நடுங்கியது... முதுகுப்புற ரவிக்கையின் இடைவெளியில் சத்யனின் மூச்சுக்காற்று உள்ளே ஊடுறுவியதும் மான்சி பட்டென்று திரும்பி பார்த்தாள்..

சத்யன் ரொம்ப பக்கத்தில் சரிந்து அவள் முதுகைப் பார்த்துக்கொண்டிருந்தான்... மான்சி திரும்பியதும் “ என்ன மான்சி சிலிர்க்குதா? என்னோட மூச்சுக்காத்துக்கே இப்படி நடுங்குற? இவ்வளவு கட்டுப்பாடு இல்லாம இருக்கியே? முதல் நாளே இப்படினா? இனி எப்படிதான் எந்த சுகமும் வேணாம்னு இருக்கப் போற? ஆனா என்னப் பண்றது? என்னால எதுவும் முடியாதே.” என்று அப்பாவியாய் உதட்டைப் பிதுக்கினான்....

மான்சிக்கு உடனே அவன் வார்த்தையின் அர்த்தம் புரிந்தது... உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஏளனம் செய்கிறான்... எனக்கு கட்டுப்பாடு இல்லை என்று கேலி செய்ய வழி தேடுகிறான்... ம்ஹூம்.... மான்சி சட்டென்று விறைப்புடன் நிமிர்ந்து அவன் கண்களை நேரடியாகப் பார்த்தாள்...

சத்யன் சிரிப்புடன் கண்சிமிட்டி அவள் கையை எடுத்து உதட்டில் பதித்துவிட்டு “ ம்ம் முறைக்காதீங்க சின்னம்மா... சாப்பாடு போடுங்க பசிக்குது” என்றான் அன்பு காதலனாய்....

இவள் பார்த்த இருவரில் யார் நிஜமான சத்யன்?... சற்றுமுன் என் உணர்வுகளுடன் விளையாடி ஏளனம் செய்தவனா? அல்லது இப்போது காதலே உருவாக கண்சிமிட்டி சிரிக்கும் இவன் நிஜமா?.... எவன் நிஜமோ? இருவரையுமே எதிர்கொள்ள மான்சி தயாரானாள்... என் முகம் உணர்ச்சியை காட்டினால் தானே இவன் ஏளனம் செய்வான்? இவன் காதலுக்கும் சரி கோபத்துக்கும் சரி நான் அசையமாட்டேன்...

உறுதியுடன் அமைதியாக சாதத்தை பறிமாறினாள்... சத்யன் அவள் முகத்தையேப் பார்த்துக்கொண்டு சாப்பிட்டான்... நான்கு வாய் சாப்பிட்டவன் ஐந்தாவது கவளத்தை மான்சியின் வாயருகே எடுத்துச்செல்ல.. அவள் விலகினாள்... “ ம்ஹும் வாயைத் திற மான்சி ... என்னால அதுதான் முடியாது... இதெல்லாம் முடியும்” என்று சிரித்தான்...

மறுபடியும் குத்தல் வார்த்தைகள்... உடலுறவு மட்டும் வாழ்க்கை இல்லை என எப்போது இவன் புரிஞ்சுக்குவான்? இவனுக்குப் புரிய வைப்பேன்.... மான்சி தனது வழக்கமான அமைதிப் புன்னகையுடன் வாயைத் திறந்து வாங்கிக்கொண்டாள்... இருவரும் சாப்பிட்டு முடித்தனர்... நிறைய நேரம் தொண்டையை அடைத்தது மான்சிக்கு... தம்பியின் நினைவு உணவை உள்ளே இறங்க விடவில்லை... மென்று விழுங்கினாள்...

மான்சி உணவில் கையே வைக்க விடவில்லை.. சத்யன்தான் ஊட்டினான்... காதலை கண்களில் தேக்கி... அன்பை உணவில் தேக்கி மிகவும் கவனமாக ஊட்டினான்... எதிரே உயிராய் காதலித்தவன் கணவனாக... ஆனால் அதற்க்கான உணர்வுகளை கண்களால் கூட காட்டிக்கொள்ளாமல் வாழவேண்டும்... உணர்ச்சிகளின் பிடியில் சிக்கினால் கேலிக்கு இடமாகும்... கவனம் கவனம்... மான்சியின் உடலில் ஒவ்வொரு செல்லும் அவளை எச்சரித்தது 

சாப்பிட்டு முடித்த சத்யன் கைகழுவிவிட்டு ஈரக்கையால் அவள் வாயை துடைத்தான்... அவளின் இதழ்கடையில் ஒட்டியிருந்த உணவுத் துணுக்கை புன்னகையுடன் எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டான்.... எல்லாம் இவள் செய்ய வேண்டியது... இங்கே தலைகீழாக.... இந்த நிலை அழகுதான்... ஆனால் இதில் அவன் உள் நோக்கம் என்ன? சத்யன் விஷயத்தில் தனது ஒவ்வொரு அடியும் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று மான்சிக்கு புரிந்தது..

மான்சி பாத்திரங்களை எடுத்துக்கொண்டு “ நான் கீழேப் போகவா?” என்று அனுமதி கேட்டு நின்றாள்....

புருவங்கள் சுருங்க “ ஏன் போகனும்?.... நீ இனிமேல் எப்பவுமே இங்கேதான்... உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் இங்க கொண்டு வந்து வைக்க சொல்லி நேத்தே சொன்னேன்... ஆனா இன்னும் எதுவும் வரலை” என்று முகம் இறுக கூறியவன்... “ ஏய் வேலு” என்று கத்த... வேலு கதவைத் திறந்து தலையை நீட்டினான்... “ கீழே போய் தம்முகிட்ட சொல்லி மான்சியோட திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வரச்சொல்லு” என்று உத்தரவிட... வேலு தலையை மட்டும் அசைத்துவிட்டு ஓடினான்...

இவனுடன் எப்போதும் ஒரே அறையிலா? வந்த பெருமூச்சை அடக்கினாள்.... “ இல்லங்க தாத்தா பக்கத்து ரூம்ல தங்க ஏற்ப்பாடு செய்றதா சொன்னார்.” மான்சியின் குரல் உள்ளுக்குள்ளேயே சிக்கியது...

சத்யன் அவளை உற்றுப்பார்த்தான் “ இதுல லூசு நீயா? இல்லை தாத்தாவா? அறிவில்லை அவருக்கு? ஒய்ப் ஒரு ரூம்ல? புருஷன் ஒரு ரூம்லயா? அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு...” என்று கத்தியவன்... “ எனக்கு தாத்தாவைப் பத்தி கவலை இல்லை நீ என்ன சொல்லப் போற? இங்கே என்கூட இருக்கப் போறியா? அல்லது பக்கத்து ரூம்லயா?” சத்யனின் கண்கள் ரத்தினங்கள் போல் ஜொலித்தன.....

மான்சி கையிலிருந்தப் பாத்திரத்தை எடுத்து மீண்டும் டேபிள் வைத்துவிட்டு அவனை நெருங்கி சத்யனின் முகத்தை தனது கைகளில் ஏந்தினாள்.... விழிகளை நேராக சந்தித்தாள் குனிந்து நெற்றியில் தன் இதழ்களை பதித்துவிட்டு நிமிர்ந்தாள்... சத்யனின் விறைத்த உடல் சட்டென்று தளர்ந்தது... அவள் முகத்தையேப் பார்த்தான்.... அமைதி தேவதையின் கண்கள் அவனை ஆதரவோடு நோக்கியது “ நீங்க சொல்லுங்க... நான் எங்க இருக்கட்டும்?” மான்சி கேட்க....

சத்யனின் கை அவனது கட்டிலைத் தட்டி காட்டியது... மான்சி சிரிப்புடன் மறுபடியும் நெற்றியில் முத்தமிட்டு தனது ஒரு கையை எடுத்து அவன் நெஞ்சில் வைத்து “ இங்கே நான் வேண்டாமா?” என்று சிரிப்புடன் கேட்டுவிட்டு அவன் பதில் சொல்லும் முன் சட்டென்று விலகியவள் “ அம்மாச்சிக்கு என்னோட திங்ஸ் எதெதுனு தெரியாது... எதனால நானே போய் எடுத்துட்டு வர்றேன்... அதுவரைக்கும் நீங்க தூங்க கூடாது... நாம கொஞ்ச நேரம் பேசலாம்” என்று கூற அவன் மவுனமாக தலையசைத்தான்... மான்சி புன்னகை மாறா முகத்துடன் அங்கிருந்து சென்றாள்...

சத்யன் கட்டிலில் சாய்ந்தான்... அவள் இப்போ என்ன செய்தாள்? என்ன சொன்னாள்? கொஞ்சநேரத்தில் என் கோபம் எங்கே போனது?.... சத்யன் முஷ்டியை மடக்கி பெட்டில் குத்தினான்.... முதல் நாளே பார்வையாலேயே என்னை ஆப் பண்ணிட்டாளே... ம்ஹூம் இனிமேல் ஏமாற மாட்டேன்... அது சபதமா அல்லது வரட்டு கவுரவமா என்று புரியாமலேயே திடமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டான்...

கீழே வந்த மான்சி முதலில் பெரியவரைத் தான் தேடினாள்.... பெரியவரே அவளைத் தேடி வர.... “ தாத்தா நான் அவர் ரூம்லயே தங்கிக்கிறேன்” என்று உறுதியாக கூறியவளை உற்று நோக்கியவர்

“ என்னம்மா ஏதாவது சொல்லி மிரட்டினானா?

சட்டென்று நிமிர்ந்த மான்சி “ தாத்தா அவரால என்னை மிரட்ட முடியும்னு நெனைக்கிறீங்களா? இல்ல நான் அவர் கூடவே இருக்குறது தான் நல்லது... அவரால என்னை காயப் படுத்த முடியாது தாத்தா.... நீங்க நம்பி அனுப்புங்க ” என்று மான்சி உறுதியுடன் கூறியதும் 

எதையோ எண்ணி சட்டென்று சிரித்த தாத்தா “ உத்தரவு இளையராணி” என்று கூறி மான்சியை வெட்கப்பட வைத்து ரசித்தார்... “ சரிம்மா உனக்கும் அதுதான் விருப்பம்னா நான் மறுக்க மாட்டேன்” என்றவர் மருமகளை அழைத்தார்...

“ ராஜி மான்சிக்காக வாங்கியது எல்லாத்தையும் சத்யனோட அறையில கொண்டு போய் வச்சிடும்மா” என்றார்....

ராஜிக்கும் சந்தோஷம் தான்.... மகனும் மருமகளும் தனித்தனி அறையில் என்று பெரியவர் சொன்னபோது ராஜிக்கு வருத்தம் தான்.... இப்போது அது முடிவுக்கு வந்ததில் அவளுக்கு சந்தோஷம்... “ நீ போ மான்சி... வந்திருக்க கெஸ்ட் எல்லாரையும் அனுப்பிட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று கூறி மருமகளை அனுப்பி வைத்தாள்...

மான்சி மரகதம் அறைக்கு சென்று ஊரிலிருந்து எடுத்து வந்த பெட்டியை எடுக்கப் போனாள்.... இருவரும் அழுதுகொண்டு அமர்ந்திருக்க... மான்சி மவுனமாக அவர்கள் அருகில் சென்று அமர்ந்தாள்..

முந்தானையால் முகத்துத் துடைத்துக்கொண்ட மரகதம் “ என்னா கண்ணு உன் கல்யாணம் இப்புடி கலவரமாகிப் போச்சே? பரசுவுக்கு யாரு சொன்னது? வந்ததும் வராததுமா சின்னய்யா மேலயே கையை வச்சுட்டு சம்மந்தி வீட்டுக்கு பகையாளியாப் போய்ட்டானே?” மீண்டும் அழுகை வெடித்தது மரகதத்துக்கு..



மான்சி பாட்டியின் பற்றிக்கொண்டாள் ... “ அம்மாச்சி இதெல்லாம் நாம ஓரளவுக்கு எதிர்ப் பார்த்தது தானே? என்ன இன்னும் நாலஞ்சு நாள் கழிச்சு நடக்கவேண்டியது இப்பவே நடந்துடுச்சு... ஆனாலும் பரசு அவர் மேல கையை வச்சுட்டானே அம்மாச்சி... அதுக்காக நானும் அவனை அடிச்சிட்டேனே” என்று கண்ணீருடன் கூறியவளை அணைத்த மரகதம்..

“ நல்லநாளும் அதுவுமா நீ கலங்காத கண்ணு... நானும் தாத்தாவும் நாளைக்கு ஊருக்குப் போகலாம்னு இருக்கோம்... நாங்க போய் பரசுகிட்ட எடுத்து சொல்லி அவனை சமாதானம் செய்றோம் கண்ணு... நீ எந்த குழப்பமும் இல்லாம சின்னய்யாவை கவனிச்சுக்க” என்று சொல்ல..

சாமிக்கண்ணுவும் பேத்தியின் அருகில் வந்து “ ஆமாம்மா நீ நல்லபடியா பெரியவங்க பேச்சைக்கேட்டு பொறுப்பா குடும்பத்தையும் சின்னய்யாவையும் கவனி... நாங்க ஊருக்குப் போய் ஒரு வாரம் தங்கிட்டு வர்றோம்..” என்றார்...

மான்சிக்கும் அதுதான் சரியென்று பட்டது... ஆறவிட்டு பரசுவின் நெஞ்சில் வஞ்சத்தை வளர்ப்பதை விட இப்போதே தாத்தா பாட்டி சென்று அவனை சமாதானம் செய்வதுதான் சரி’ என்று எண்ணினாள்... விரைவில் என் நல்லபடியாக தம்பியை சந்திக்க வழி காட்டு தாயே என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள்...... சத்யன் காத்திருக்கிறான் என்று தோன்ற.. தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அவர்களிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தாள்.. பின்னோடு அவள் பெட்டியை சுமந்து கொண்டு வேலு வந்தான்... 


No comments:

Post a Comment