Monday, January 18, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 34

பரசு வீட்டுக்குப் போகும் போது இரவு எட்டு மணி ஆகிவிட்டது ..... பஸ் விட்டு இறங்கி பரசுவின் தோப்பருகே சென்ற போது கடை மூடியிருப்பதை பார்த்து குழப்பத்துடன்.... பத்து மணி வரைக்கும் கடை இருக்குமே ? இன்னிக்கு என்ன இவ்வளவு சீக்கிரமே மூடிட்டான் என்று எண்ணியபடி வீட்டை நெருங்கி கதவைத் திறந்து உள்ளே போனவன் வாசலைக்கூட தாண்டாமல் அதிர்ந்து நின்றுவிட்டான்.....

வீட்டுக்கு ஒரு சேரில் அனு அமர்ந்திருக்க.... அவள் காலடியில் துணிகள் அடங்கய ஒரு லெதர் பை ... அவளும் அப்போது நிமிர்ந்து வரதனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்....



சமையலறை தடுப்புக்குள் இருந்து வந்த மான்சி வேகமாக வரதனை நெருங்கி " உள்ள வாண்ணா.... அனு உன்னைப் பார்க்கனும்னு தான் வந்திருக்கா.... பாவம் பஸ்ல தூங்கிட்டாப் போலருக்கு .... இடம் தெரியாம இறங்கி மறுபடியும் ரெண்டு மூனு பஸ் பிடிச்சு அலைஞ்சு திரிஞ்சு வந்திருக்கா.... இப்பதான் ஏழு மணிக்கு வந்தா அண்ணா" என்று மான்சி சொல்ல சொல்ல வரதனின் இதயம் கசிந்தது....

அனுவின் தோற்றம் அவன் மனிதில் அழுத்தமாய் பதிந்தது... ஏன் இப்படியிருக்கா? என்று யோசித்தவன் ... அவள் இப்படியிருக்க காரணம் தான்தான் என்று எண்ணி நொந்தபடி வாசலை கடந்து வீட்டுக்குள் வந்தான் ....

அனு தலையை கவிழ்ந்திருக்க .... மான்சி எடுத்து வந்து கொடுத்த காபி கையிலிருந்தது ... பரசு வீட்டின் ஒரு மூளையில் சுமேதனை மடியில் வைத்துக் கொண்டு நடப்பதை நம்ப முடியாமல் ஆவென்று வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்

" காபி ஆறுது அனு ... குடிச்சிடு" என்று மான்சி சொன்னதும் .... நிமிர்ந்த அனு மான்சியை சங்கடமாகப் பார்த்து " நான் காபி குடிக்கிறதில்லை மான்சி ... குடிச்சதும் வாமிட் வர்றதால நிறுத்திட்டேன்" என்று கூறினாள்...

" காபி குடிச்சா வாமிட்டா? ஏன் ? என்னாச்சு ? உடம்பு எதுவும் சரியில்லையா?" என்று பதட்டமாக கேட்க ...

" இல்ல. இப்பல்லாம் அப்படியில்ல" என்ற அனு காபியை மான்சியிடமே திருப்பிக் கொடுத்தாள்....

வரதன் இன்னும் எதுவும் பேசாமல் அப்படியே நின்றிருந்தான்.... மான்சி அவனருகே வந்து " என்னண்ணா இது .. பாவம் எவ்வளவு தூரம் தேடி வந்திருக்கா?... என்ன? ஏதுன்னு விசாரிங்கண்ணா?" என்று கிசுகிசுத்து விட்டு சென்றாள்...

வரதனுக்கு பேச நா எழவில்லை... அனு தான் ஒரு மெல்லிய பெருமூச்சுடன் .... " நான் இனிமே உங்க கூட இருக்கலாம்னு முடிவு பண்ணி கிளம்பி வந்திருக்கேன்" என்றாள் .... 


வரதனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை .... அதிர்ச்சி அவனை வாய்த் திறக்க வைக்க " ஏன் ? எதுக்கு கேஸை வாபஸ் வாங்கின?" என்று கேட்க......

அவன் முகத்தைப் பார்த்த அனுவுக்கு இன்னும் போலீஸ் அடியின் தழும்புகள் மாறாதது நெஞ்சுக்குள் ஒரு வலியை ஏற்ப்பசுத்த .... " இனிமே எதுவும் பிரச்சனை வேனாம்னு தோனுச்சு ... அதான்" என்றாள்..

சற்றுநேரம் வரதன் மவுனமாக சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தான்..... பாட்டி இரவு உணவை எடுத்து வந்து வைத்து விட்டு " மொதல்ல எல்லாரும் கை கழுவிட்டு சாப்பிடுங்க ... பொறவு பேசலாம் " என்று உத்தரவிட..

பரசு முதல் ஆளாக சுமேதனுடன் சென்று கை கழுவிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்து " அண்ணே அவங்களையும் கூட்டிட்டுப் போய் கை கழுவிவிட்டு வந்து சாப்பிடுங்க" என்று அதட்டியதும் வரதன் அனுவைப் பார்க்க அவள் எழுந்து கொண்டாள்...

மான்சி உணவு பரிமாற எல்லோருக்கும் இருந்த பசியில் உணவு வேகமாக இறங்கியது.... சாப்பிட்டு முடித்ததும் அனு சுமேதனை வாங்கிக் கொண்டு மறுபடியும் சேரில் அமர்ந்தாள் ... வரதனுக்கு இன்னும் கூட என்ன பேசுவது என்று புரியவில்லை..... முழங்காலை கட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.... ரொம்பவும் இருக்கமான சூழ்நிலை நிலவியது .....

சாப்பாட்டுப் பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு வந்த மான்சியிடம் குழந்தையை கொடுத்த அனு ... வரதனின் அருகே வந்து ... " நீங்க எங்க தங்கியிருக்கீங்க ? அங்க போகலாமா?" என்று கேட்க...

வரதன் மவுனம் கலைந்து நீண்ட பெருமூச்சுடன் எழுந்து .... " சரி வா " என்று அனுவிடம் கூறிவிட்டு மான்சியைப் பார்க்க.... " கூட்டிட்டுப் போண்ணா'' என்றாள் மான்சி

வரதன் முன்னால் நடக்க .. அனு அவன் பின்னால் சென்றாள்... சற்று தூரம் சென்றவன் நின்று அவளிடம் இருந்து பையை வாங்கிக் கொண்டான்... நிலவின் வெளிச்சத்தில் பரசுவின் தோப்பை கடந்து தனது நர்சரிக்கு சென்றவன் அவன் தங்கும் அறைக் கதவை திறந்து லைட்டைப் போட்டான் ....

சிமிண்ட் சீட் போட்ட பத்துக்குப் பத்து சைஸ் கொண்ட அறையின் மூலையில் உரம் மூட்டைகளும் .. தோட்டத்துக்குத் தேவையான் வேறு சில சாமான்களும் கிடக்க ... மறு மூளையில் ஒகு கட்டிலும் அதில் ஒரு தலையணையும் போர்வையும் மட்டுமே இருந்தது ....

அறையை ஓரளவுக்கு ஒதுக்கிய வரதன் அனுவை பார்த்து " உனக்கு இங்க வசதி பத்தாதே?" என்று சங்கடமாக சொல்ல..




அவன் முகத்தைப் பார்க்கால் " பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்" என்றபடி உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தவள் தனது பையை எடுத்து அதிலிருந்து ஒரு நைட்டியை எடுத்துக்கொண்டு " நான் டிரஸ் மாத்தனும்" என்றாள் ..

வரதன் உடனே வெளியே வந்தான் ... சற்றுநேரம் கழித்து தனது சுடிதாரை கலைந்து நைட்டியை மாட்டிக்கொண்டு வெளியே வந்த அனு நிலவின் வெளிச்சத்தில் தோட்டத்தை ரசித்தாள்.... வீட்டின் இரு பக்கமும் இருந்த திண்ணையில் ஆளுக்கொன்றில் அமர்ந்திருந்தனர்.... இருவரின் மவுனமும் நீண்டு கொண்டே போனது... யார் முதலில் ஆரம்பிப்பது என்ற போட்டியில் வரதனே வென்று " என்ன இப்படி திடீர்னு முடிவு? " என்று கேட்க...

அனு தனது பார்வையை தோட்டத்திலேயே பதித்து " இனிமேலும் மறைச்சு வைக்க முடியாதே... அன்னிக்கு என்மேல இர்ந்த ஆத்திரத்தை விதைச்சிட்டு வந்தது இப்போ வளர்ந்து அஞ்சு மாசக்கருவா ஆயிருச்சு ... இதுக்கு மேல நான் மறைச்சாலும் என் வயிறு காட்டிக் குடுத்துடும்..." என்று அனு விளக்கமாக கூறியதும் ...

அவளின் வார்த்தைகளை வரதன் கிரகிக்க சற்று நேரமானது.... என்ன சொன்னாள் என்று புரிந்ததும் திகைப்புடன் எழுந்தவன் அவள் அருகில் வந்து " நீ சொல்றது நிஜமா?" என்று கேட்க....

அனு அவனை கோபமாகப் பார்த்து விட்டு " எந்த பொண்ணும் இந்த விசயத்தில் பொய் சொல்லமாட்டா" என்றுவிட்டு அவன் கையை இழுத்து தன் வயிற்றில் வைத்து அழுத்தி " இது நீங்க விட்டுட்டு வந்ததுதான் " என்று கூற...

வரதனின் கையில் அவளின் லேசாக மேடிட்ட வயிற்றை வருடியது... அவனால் அதற்க்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவள் கையைப் பிடித்து " அனு நிஜமாவே நீ என்னை மன்னிச்சிட்டயா?" என்று கேட்கும் போதே அவன் கண்களில் நீர் தேங்கி வழியும் தருவாயில் வந்து நின்றது...

" நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கும் போது நான் உங்களை மன்னிக்க மாட்டேனா?.... உங்களை என்னால ஓரளவுக்குப் புரிஞ்சுக்க முடியுது.... ஆனா என் மனசு மாற நீங்க காத்திருக்கனும்" என்றாள் ....

அவளின் வார்த்தைகள் தந்த தாக்கத்தில் வரதனின் கண்ணீர் உருண்டு விழ... அனுவும் கலங்கிவிட்டாள் " போலீஸ் ரொம்ப அடிச்சிட்டாங்கன்னு எல்லாரும் பேசிகிட்டாங்க....இப்போ பரவாயில்லையா? இன்னும் அந்த காயமெல்லாம் இருக்கா? " என்று கேட்டதும் வரதன் முற்றிலும் உடைந்து போனான்..... 


அவள் கைகளை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டு " அந்த அடி எனக்குப் பத்தாது அனு.... நான் உன்னை நாசம் பண்ணப் பிறகு ஒவ்வொரு நாளும் சித்ரவதை படுறேன்.... உனக்கு செய்த துரோகம் என்னை தினமும் கொல்லுது அனு... .. இந்த செடிகள் மட்டும் இல்லைனா நான் வேதனையில வெந்து செத்தே போயிருப்பேன்... அதுவும் நேத்து மான்சியைப் பார்த்ததும் ... என்னால எவ்வளவு குழப்பம்னு தான் கோர்ட்ல ஆஜராகனும்னு போனேன் ... கேஸ் வாபஸ் ஆயிடுச்சுனு கேள்விப்பட்டதும் " என்று அழுதவனிடம் இருந்து தனது கையை உருவிக்கொண்டவள் .............

" கவலைப் படாதீங்க எல்லாம் சரியாப் போகும்” என்றாள்

முகத்தைத் துடைத்துக்கொண்ட வரதன் “ இந்த நிலைமையில இப்படி அலைஞ்சு திரிஞ்சு வரனுமா? ஒரு போன் பண்ணிருந்தா நான் வந்து கூட்டி வந்திருப்பேனே?” என்றான்

“ கிளம்பும்போது போனை சுவிட்ச்ஆப் பண்ணது இன்னும் ஆன் பண்ணவே இல்லை.. ஏதோவொரு வைராக்கியத்தில் கிளம்பி வந்துட்டேன்.” என்று அனு சொல்ல...

வரதன் நெற்றியைத் தடவியபடி “ இப்போ உனக்கு என்ன தேவை? எப்படி பார்த்துக்கன்னு கூட எனக்கு தெரியாதே.... நான் போய் மான்சிய கூட்டிட்டு வரறேன்” என்று அங்கிருந்து நகர்ந்தவனை தடுத்த அனு....

“ காலையில கேட்டுக்கலாம்... இப்போ இப்படியே அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்... தூக்கம் வருது ” என்றவள் அறைக்குள் செல்ல... வரதன் அவள் பின்னால் சென்று கட்டிலில் அவள் படுக்க தயார் செய்துவிட்டு “ நீ இங்க படுத்துக்க.... நான் வெளியத் திண்ணையில படுத்திருப்பேன்... ஏதாவது வேனும்னா ஒரு குரல் குடு உடனே எழுந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு ஒரு சால்வையை எடுத்துக்கொண்டு வெளியேப் போனான்

திண்ணையில் படுத்தவனுக்கு வானில் மின்னும் நட்சத்திரங்கள் எல்லாம் தனக்காகவே சிரிப்பது போல் இருந்தது... ஒரேநாளில் தன் வாழ்க்கை வண்ணமயமானதை எண்ணி நம்பமுடியாமல் தன்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டான்....

அனுவின் வயிற்றில் தன் குழந்தை என்ற உணர்வு அவனை மிதக்க விட்டது... “ நான் அப்பா ஆயிட்டேன்.... இந்த அனாதைக்கும் ஒரு உறவு வந்துருச்சு.... இனி நானும் மனைவி குழந்தைன்னு வாழப் போறேன்.... அதுவும் நான் நேசிக்கும் பெண்ணே எனக்கு மனைவியாக” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டான்....

தூக்கம் வரவில்லை... எழுந்து சென்று தோட்டத்து செடிகொடிகளிடம் தான் அப்பா ஆகிவிட்ட விஷயத்தை சொன்னான்.... அவை தலையசைத்து வாழ்த்துக் கூறியதை ஏற்றுக்கொண்டான்....




" மகனோ மகளோ......

" எல்லாம் அப்பா என்ற வார்த்தைக்காகத்தான்.....

" கர்வ்ம் கசியும் கம்பீரத்துடன் நிமிர்கிறேன்.....

" குழந்தை கும்மாளமாய் சிரிக்க....

" நானும் குழந்தையாகி ...

" கூடவே தவழ்ந்து வருவேன் ..

" அந்த பூமுகம் காண ...

" புன்னகையைப் பூட்டிக்கொண்டு...

" புதுப் பூவாய் காத்திருப்பேன்..

" குட்டிக் குயிலின் குரலில்...

" இளம்பிஞ்சின் உதடுகளில் ஒலிக்கப்போகும் ...

" வார்த்தைக்காக ஏங்கிகிடப்பேன்....


No comments:

Post a Comment