Friday, January 22, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 2

மறுநாள் சத்யன் வயலுக்கு கிளம்பும் போது மான்சி வரவில்லை.... சத்யனின் ஊமை காதல் உள்ளுக்குள் அவளைக் காணாமல் கண்ணீர் விட .... குடும்பம் பந்தம் பாசம் நிறைந்த சராசரி சத்யனின் மனமோ மான்சி வராமல் போனாலே நன்றாக இருக்கும் என்று ஆண்டவனை வேண்டியது....

அன்று மட்டுமில்லை அடுத்து வந்த நாட்களிலும் மான்சி பசுக்களுடன் வரவேயில்லை.... காத்திருந்த சத்யனின் கோழைத்தனமான காதலுக்கு கிடைத்தது ஏமாற்றமே... மான்சியின் அம்மாதான் மாடுகளை மேய்க்க வந்தாள்.... சத்யன் அவளைத் தேடியும் போகவில்லை... நாளுக்குநாள் உள்ளுக்குள் நலிந்து நொந்தவனுக்கு மான்சியின் திருமண செய்திதான் காதில் விழுந்தது...

விடிந்தால் ஊர் கோவிலில் மான்சிக்கு திருமணம் என்ற எண்ணமே நெஞ்சு பிணத்தை அரித்துத் தின்னும் புழுவாய் அரித்து குடைந்தது... இரவில் விடும் கண்ணீர் கூட வற்றிப்போனது சத்யனுக்கு....



அன்று இரவு தான் சாப்பிடாவிட்டால் தன் குடும்பமும் சாப்பிடாதே என்ற எண்ணத்தில் ருசியறியாது உணவை அள்ளி விழுங்கினான் சத்யன் .... வீட்டுக்குள் தங்கைகளும் அம்மாவும் படுத்துக்கொள்ள சத்யன் தனது வழக்கமான திண்ணையில் பாயை விரித்துப் படுத்தான்...

உறக்கம் அவனுக்கு இரக்கம் காட்டவில்லை.... உள்ளுக்குள் வெடித்து சிதறிய எரிமலையின் தகிப்பு அவன் கண்களில் சுடுநீராய் வெளி வந்து தலையணையை நனைத்தது... இந்த கலிகாலத்தில் தன்னால் சுதந்திரமாக காதலியை கைபிடிக்க கூட முடியவில்லையே என்ற இயலாமை வெறுப்பைத் தர தன் நெஞ்சிலேயே கையால் குத்திக்கொண்டான்... நடுநிசி வரை விழித்திருந்தவன் ... எப்போது உறங்கினான் என்று தெரியாமல் உழைப்பின் களைப்பு வந்து அவன் விழிகளை மூடியது....

எங்கோ சாமக்கோழியின் ரீங்காரம் காதை குடைய... தன் கால்களை யாரோ சீண்டுவது போல் இருக்கவும் அலறிப்போய் எழுந்த சத்யன் தன் காலடியில் அமர்ந்திருந்த மான்சியைப் பார்த்து திகைப்பில் நெஞ்சடைக்க " மான்சி?" என்றான்....

இத்தனை வருடங்களில் சத்யன் இதுதான் முதல்முறையாக மான்சியை பெயர் சொல்லி அழைக்கிறான்.... ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் மான்சி இல்லை.... அவளின் தளிர் விரல்கள் சத்யனின் பாதங்களைப் பற்றியிருந்தது...

இருட்டில் அவள் விழிகளில் தேங்கியிருந்த நீர் வைரங்களாய் ஜொலிக்க " சத்தி வா சத்தி எங்கயாவது போய்டலாம்.... விடிஞ்சா எனக்கு கல்யாணம் சத்தி .... என்னை எங்கயாவது கூட்டிட்டுப் போய் தாலி கட்டிடு சத்தி ... வா போகலாம்" என்று மெல்லிய குரலில் இறைஞ்சியவளுக்கு என்ன பதில் சொல்வான் சத்யன்?....

அவனுக்கும் கண்ணீர் வந்தது.... ஆனால் கண்ணீரை காட்டினால் மான்சி கழிவிரக்கத்தில் வேறு ஏதாவது முடிவெடுப்பாள் என்று அவனுக்குத் தெரியும்... வீராப்பான பேச்சே அவளை ரோசமாக வாழ வைக்கும் என்று சத்யனின் உள் மனம் உத்தரவிட ... எங்கயாவது போய் நல்லபடியா வாழட்டும் என்று இதயத்தை இரும்பாக்கினான் சத்யன் ...

குனிந்து தன் கால்களைப் பற்றியிருந்த மான்சியின் கைகளை விலக்கியவன் முகத்தை கடுமையாக மாற்றிக்கொண்டு " ஏய் வயசுப் பொண்ணு அர்த்த ராத்திரில ஒரு ஆம்பளைய தேடி வந்திருக்கியே உனக்கு அசிங்கமா இல்லையா?" என்று வரவழைத்த ஆத்திரத்துடன் கேட்க....


மான்சி பட்டென்று தன் கைகளை உதறிக்கொண்டு திகைப்புடன் அவனைப் பார்த்து " என்ன சத்தி இப்புடி பேசுற?... எப்படியாவது நீ வந்து கூட்டிட்டு போவேன்னு காத்திருந்தேன் ... நீ வரலைனதும் நானே கிளம்பி வந்தேன் சத்தி.... உன்னையத்தான பாக்க வந்தேன்.. இதுல அசிங்கமென்ன சத்தி?" என்று குழப்பத்துடன் கேள்வி கேட்டவளை ஆத்திரமாக வெறித்தான் சத்யன்...

" நான் எப்பயாச்சும் உன்னைய விரும்புறேன்னு சொல்லிருக்கேனா?.... நீயா எதையாவது கற்ப்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நானா பொருப்பு?.... இதோப் பாரு மான்சி நீ வேற சாதி நான் வேற சாதி .... உன்னைய கட்டுனா அப்புறம் என் தங்கச்சிகளுக்கு கல்யாணமே ஆகாது... அதுமட்டுமில்லை என் மனசுல அந்த மாதிரி நினைப்பே கிடையாது" என்று சொல்ல வந்ததை தெளிவாக சத்யன் சொல்லிவிட....

அவனை நம்பாமல் பார்த்த மான்சி .... " இல்ல சத்தி நீ பொய் சொல்ற.... இப்ப போய் கல்யாணத்தை பண்ணிகிட்டு ஒரு பத்துநாள் கழிச்சு வரலாம் சத்தி... எல்லாரும் நம்மளை ஏத்துக்குவாங்க" என்று மேலும் ஏதோ சொல்ல முயன்றவளை கையசைத்து தடுத்த சத்யன்

" வாயை மூடு .... இந்த மாதிரி ஓடுகாலித் தனமெல்லாம் குடும்பத்துக்கு லாயக்கில்லை... எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது... நீ மொதல்ல இடத்தை காலி பண்ணு ... யாராவது பார்த்தா வம்பாயிடும்" குரலில் வரவழைத்த வெறுப்புடன் சத்யன் கூறியதும்...

முதன்முறையாக அவன் வார்த்தைகள் மூளையில் சென்று உரைத்தது.... " நானா ஓடுகாலி ? என்னையவா சத்தி ஓடுகாலினு சொன்ன?" என்று சந்தேகம் கேட்டாள் மான்சி...

அவள் வைத்திருந்த துணி மூட்டையை காட்டிய சத்யன் " பின்ன இதுபோல மூட்டை முடிச்சோட ராவு ஒருத்தனை தேடி வர்றவளுக்குப் பேரு ஓடுகாலி இல்லாம வேற என்ன சொல்லுவாங்க?" என்று நக்கலாக கேட்டான் ....

மான்சி தனது துண்கள் அடங்கிய மூட்டையை தூக்கிக்கொண்டு எழுந்து நின்று அவனையே சற்றுநேரம் வெறித்துப் பார்த்தாள் .... உள்ளுக்குள் ஓலமிட்டு அழும் மனதை அடக்கி வெளியேத் தெரியாதவாறு அமுக்கியவன் மான்சியை ஏளனமாகப் பார்க்க...

" அடச்சீ நீ இவ்வளவு கேவலமானவனா?" என்ற ஒரு வார்த்தையை கூறி தரையைப் பார்த்து காறித்துப்பிவிட்டு விடவிடுவென தனது வீடிருக்கும் திசையை நோக்கி முதுகு வளையாத நிமிர்ந்த நேர் நடை நடந்தாள் மான்சி

அவள் அந்த தெருவை கடக்கும் வரை காத்திருந்த சத்யன் ... அவள் தெரு முனை திரும்பியதும் தனது தலையில் அடித்துக்கொண்டு ஓவென்று கதறியபடி படுக்கையில் விழுந்தான் ..... தனது முதல் காதல் முழுவதுமாக உணரப்படாமலேயே மடிந்து போன அவலத்தை எண்ணி எண்ணி அழுதவன் விடியும் முன்பாகவே எழுந்து வயலுக்குப் போய் வெட்டவெளியில் மல்லாந்து விழுந்தான்...

எதையும் கேட்கவும் பார்க்கவும் தைரியமில்லை அவனுக்கு ... தன் மீதான கோபமும் ரோசமும் மான்சியை நல்லபடியாக வாழவைக்கும் என்று சத்யனுக்குத் தெரியும் .....


ஊர் கோயிலில் அடிக்கும் மேளச் சத்தம் இவன் வயக்காடு வரை கேட்டது ... காதுகளைப் பொத்திக்கொண்டு கதறியவனை ஆறுதல்ப் படுத்தக்கூட யாருமில்லை அங்கே... மேளச்சத்தம் தேய்ந்து மறைய மான்சியின் திருமணம் முடிந்துவிட்டது என்று அவனுக்குப் புரிந்தது ....

எழுந்து அமர்ந்து முழங்காலை கட்டிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தவன் .... மனதை தேற்றிக்கொண்டு எழுந்து தனது சட்டையை கழட்டி வரப்பில் வைத்துவிட்டு கிணற்றில் குதித்து தலை முழுகி எழுந்து வந்தான்

மான்சியின் நினைவுகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டதாக எண்ணிக்கொண்டவனுக்கு எப்படித் தெரியும் இனிதான் அவள் நினைவுகளால் இவன் வதைபட போகிறான் என்று?

அன்று மதியம் உணவு எடுத்து வந்த அன்பரசி அண்ணனை கண்ணீருடன் ஏறிட்டு " மன்னிச்சிடு அண்ணா.... எல்லாம் எங்களாலதான்" என்றதும் தங்கையின் தோளைத் தட்டி " அதெல்லாம் ஒன்னுமில்லை அன்பு .... நான் நல்லாத்தான் இருக்கேன்.... யாருக்கு யார்னு ஆண்டவன் எழுதினதை மாத்த யாரால முடியும்?... விடும்மா இனி அதைப் பத்தி நினைக்க கூடாது" என்று தங்கைக்கு ஆறுதல் சொல்வது போல தனக்கும் சொல்லிக்கொண்டான்....

ஆனால் அன்று மாலை அவன் காளைகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது தான் மான்சியும் அவள் கணவன் கோபாலும் ஊர் மக்களிடம் சொல்லிக்கொண்டு சென்னைக்குப் புறப்பட தயாராக வரவும் சத்யன் அவர்களின் எதிரே வரவும் சரியாக இருந்தது ....

சத்யனின் நெஞ்சுக்குழி வரண்டு போனது ... இவனா மான்சிக்கு புருஷன்? மான்சியின் கணவன் முரட்டு உருவமாக கத்தை மீசையுடன் அலட்சியமாக நின்றிருந்தான் ... குடிகாரன் என்பதின் அடையாளமாக செக்கச் சிவந்த கண்கள்... வயதின் முதிர்ச்சி முகத்தில் தெரிய அவன் மகள் போல் தோற்றமளித்த மான்சியின் அருகில் நிற்கும் இவனா மான்சியின் புருஷன்?


மான்சி ஒரு அலட்சிய பாவனையுடன் சத்யனை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள் ... நீ வேணாம்னு சொன்னா எனக்கு ஆம்பளையாட இல்லாம போயிடுவான்? என்று கர்வத்தில் நெஞ்சு நிமிர அவனைப் பார்த்தவளின் கழுத்தில் புது மஞ்சள் கயிறு மிளிர்ந்தது......

பக்கத்தில் நின்றவனைப் பார்த்து " வாங்க போகலாம்" என்றாள் குரலில் கூட நிமிர்வுடன்...

கணவனின் தோள் உரச அவனை கடந்து சென்றவளைப் பார்த்து விட்டு தலைகுனிந்து வீட்டுக்கு வந்தான் சத்யன் ....






" என் காதல் சிறுகதையாக முடிந்தாலும்....

" அதன் வலிகள் என்றும் எனக்கு தொடர்கதையாக...

" என் சந்தோஷத் தருணங்கள் எல்லாம் ...

" நீர் மேல் இட்ட கோலமாய்...

" உறவுகளை வெட்டிவிட மனமின்றி ....

" உன்னை உயிரோடு வெட்டிவிட்டேனே....

" சொந்தகள் கூட எனக்கு சுமையாகிப் போக....

" நிதானம் தவறி நிம்மதி இழந்து நிர்கதியாய் நான்....

" என் இதயத்தில் குதூகலம் மறைந்து ...

" குற்றத்தில் குறுகுறுக்க குமுறிப்போனேன் ...

" உன்னைத் தொலைத்து... உணர்வுகள் மறைத்து...

" தடம் மாறி தவித்து நிற்க்கின்றேனே....

" இனிமையாய் இருக்க வேண்டிய நாம்...

" விஷமாய் வீரியத்துடன் பிரிந்ததேன்?????



மான்சி கோபாலுடன் சென்னை செல்லும் பேருந்தில் ஏறிச் சென்று தனது புதுக்குடித்தனத்தை ஆரம்பிக்க .... அவள் மீதான சத்யனின் காதல் விழலுக்கிறைத்த நீராய் வீனாய் போனது.....

இரவு எட்டரை மணி வாக்கில் சென்னை சைதாப்பேட்டை சென்றடைந்த மான்சி மற்றும் கோபாலுடன் வந்தது பன்னீரும் அவன் மனைவி மஞ்சுளாவும் தான்...... சைதாப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து பக்கத்தில் ஜோதிமாநகர் குடியிருப்பு பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்...

ஒரு மாரியாதைக்கு கூட மனைவியுடன் சேர்ந்து வரவேண்டும் என்று நினைக்காமல் மான்சிக்கு பத்தடி தூரம் முன்னால் சென்றுகொண்டிருந்தான் கோபால்... ரொம்ப பழக்கப்பட்ட ஏரியா போல மஞ்சுளா கைவீசி நடக்க ... நரிக்குறவர் பள்ளியை கடந்ததும் மெல்ல காற்றில் கலந்து வந்தது கூவத்தின் நாற்றம்...

முதன்முறையாக சாக்கடையின் மனத்தை நுகர்ந்த மான்சி மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு நடந்தாள்.... ஒரு ஆட்டோ கூட நுழையமுடியாத சிறு சிறு தெருக்கள் மான்சிக்கு பயங்கர குழப்பமாக இருந்தது... எந்த தெருவில் நுழைந்து எப்படி வந்தோம் என்றுகூட புரியவில்லை... சிங்கார சென்னை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறாள்... அதற்குள் இப்படியொரு நாற்றமெடுத்த குடியிருப்பு பகுதியை அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை....
பத்து பதினைந்து தெருக்களில் நுழைந்து ஒரு சிறிய வீட்டின் முன் வந்து நின்றார்கள் ....

கோபால் முன்பே தகவல் சொல்லியிருந்தானோ என்னவோ? அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அவள் தலையைவிட பெரிய ரிங் கொண்டை போட்டு இரண்டுரூபாய் நாணயம் அளவுக்கு நெற்றியில் பொட்டு வைத்து வாயில் புகையிலை சாறு வழிய கையிலிருந்து ஆரத்தியை சுற்றியபடி " இன்னா கோவாலு ..... கிளியாட்டம் பொஞ்சாதி கட்டிகினு வந்திருக்க தட்டுல ஐநூரு ரூவா நோட்டா போடு" என்று ஆரத்தி சுற்றியதர்க்கான கூலியை அடித்து பேசி கேட்டாள்....

" அட நீவேற நானே நாளைக்கு சவாரிக்குப் போனாதான் சாப்பாட்டுக்கு வழினு இருக்கேன் ... இதுல உனக்கு ஐநூரு ரூவா போடனுமா? போக்கா வேலைய பாத்துகிட்டு" என்றபடி கோபால் வீட்டுக்குள் நுழைந்தான்...
அவன் பின்னாலேயே நுழைந்த மான்சிக்கு முதல் திகைப்பு " இதுதான் வீடா? இதுல எங்க சமைக்கறது? எங்க குளிக்கிறது? " மவுனமாக அந்த எட்டுக்கு எட்டு அறையை சுற்றிப் பார்த்தவளுக்கு இன்னொரு விஷயமும் தெளிவாகப் புரிந்தது....

அந்த வீட்டில் இருந்த பாத்திரம் இன்னும் மற்ற பொருட்க்கள் எல்லாமே புதிதாக இருந்தன... அதாவது இந்த வீடே இப்போதுதான் வாடகைக்கு எடுத்சு குடும்பம் நடத்த தேவையான பொருட்களை வாங்கி வைத்திருந்தார்கள்.... கோபால் கடந்த பத்து வருஷமாக சென்னையில் ஆட்டோ ஓட்டுவதாக சொன்னாங்களே? அப்படினா இத்தனை நாளா எங்க தங்கிருந்தான்? மான்சியின் மனதில் எழுந்த இந்த கேள்விக்கான பதில் எப்போது தெரியவரும்?.....

மஞ்சுளா ஒரு பாயை எடுத்துப் போட்டு " உட்காரு மான்சி" என்று கூற.... அண்ணியின் கரிசனம் நெஞ்சு வரை கசக்க மான்சி பாயில் அமர்ந்தாள்...
" மஞ்சு இதுக்கு மேல சாப்பிட எதுவும் செய்ய முடியாது... நாங்க போய் ஹோட்டல்ல வாங்கிட்டு வர்றோம்" என்ற கோபால் பன்னீரை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்பினான்....

மான்சியின் பக்கத்தில் அமர்ந்த மஞ்சுளா " இங்கல்லாம் மொதல்ல அப்படித்தான் இருக்கும் மான்சி... போகப்போக பழகிரும் அதோ அந்த கதவை திறந்தா பின்னாடி கொஞ்ச இடம் இருக்கும் அதுல தட்டி கட்டி வச்சிருக்கும் அதுக்குள்ள குளிச்சிக்கலாம் துணிலாம் துவைச்சிக்கலாம்.... தோட்டத்துக்குப் போகனும்னா கொஞ்சதூரம் போனா மைதானம் ஒன்னு வரும் அங்கதான் போகனும்... ரொம்ப அவசரமாயிருந்தா தெருக் கோடியில காசு குடுத்து போற கக்கூஸ் இருக்கு ..... ஒரு ஆளுக்கு ரெண்டு ரூவா... அங்க கூட போகலாம்.... எங்கண்ணன் பொழுது விடிய ஆட்டோ எடுத்துகிட்டு சவாரிக்குப் போயிடும்,, அதனால அதுக்கு காலை சாப்பாடு வேனாம்... உனக்கு மட்டும் இப்ப ஆரத்தி சுத்துனாங்களே? அந்தம்மா பக்கத்துல நாஸ்டாக் கடை வச்சிருக்கா அதுகிட்ட நாலு இட்லி வாங்கி சாப்புட்டு மதியானத்துக்கு மட்டும் சாப்பாடு செய்தா போதும் அண்ணே மதியம் சாப்ட்டு போனா ராவு பத்து மணிக்கு மேலதான் வரும்... நீ அக்கம் பக்கம் நல்லா பழகிகிட்டேன்னா பேச்சுத் துணைக்கு வசதியா இருக்கும்" என்று மான்சி இனி வாழவேண்டிய முறையை சொன்னாள்...

மான்சியின் இதயம் துடிப்பை நிறுத்தி மீண்டும் துடித்தது.... இங்கே வாழப் போகும் வாழ்க்கைக்கான ஒத்திகை இன்றிலிருந்து ஆரம்பமாகிறது என்று புரிந்தது ..... ஆனால் தனிமையில் இருக்கப் போவதை நினைத்துதான் கலங்கினாள்....

" சரி எழுந்து வந்து முகத்தை கழுவிட்டு தலையை வாரி பூ வச்சுக்கோ மான்சி " என்று மஞ்சுளா அழைக்க... பலிகொடுக்கப் போகும் ஆட்டுக்கான அலங்காரம் தயாராகிறது என்று எண்ணிக்கொண்டாள் மான்சி... எவ்வளவு அடக்கியும் சத்யனின் நினைப்பு மனதில் எழுவதை தடுக்க முடியவில்லை.... துயரம் நெஞ்சை அடைக்க சத்யன் செய்த துரோகம் மீண்டும் அவளை விரைக்க வைத்தது

அந்த அறையின் மூலையில் இருந்த தகர கதவை திறந்து கொண்டு மஞ்சுளா தோட்டத்து பக்கம் போக... மான்சி எழுந்து தனது கூந்தலில் இருந்த உலர்ந்து போன பூக்களை எடுத்துப் போட்டபடி அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள்...

அவள் மணப்பெண் என்பதற்க்கான எந்த அடையாளமும் இல்லை....

எப்போதும் இருப்பது போல் சாதரணமாகத்தான் தெரிந்தாள்... ' ஒருவேளை மனதின் பூரிப்பால் தான் முகத்தில் கலை வருமோ?' எந்தவிதமான எதிர்பார்ப்போ ஆசையோ பூரிப்போ அவள் மனதில் இல்லை.... ஒரு யந்திரகதியான வாழ்க்கைக்கு தன்னை தயார் செய்துகொள்ளும் கடமையுணர்வு மட்டுமே அவளிடமிருந்தது

கண்ணாடிக்குப் பக்கத்தில் ஒரு மாத காலண்டர் மாட்டப்பட்டிருந்தது.... அதில் இரண்டு காதல் பறவைகள் ஒன்றோடு ஒன்று தங்களின் மூக்கை உரசியபடி காதல் செய்துகொண்டிருந்தது... மான்சியின் கண்கள் நீரை சுரக்க " இப்படித்தான நானும் சத்யனும் இருந்தோம் ... ஆனால் விரலால் கூட தொட்டுக்கொள்ளாமல் .... அது எப்படி பொய்த்துப் போனது?' அவனை நினையாதே மனமே..... இப்போது நான் கோபாலின் மனைவி.... அவனை நினைத்து என் புருஷனுக்கு துரோகம் செய்யாதே? மனதை எச்சரிக்கை செய்தாள் மான்சி

மஞ்சளாவுடன் பின்பக்க கதவை திறந்து வெளியே போனவள் இருட்டில் எதுவும் புலப்படவில்லை என்றாலும் நாற்றத்தை வைத்தே அங்கே ஓடிக்கொண்டிருப்பது சென்னை மக்களின் அழுக்கையெல்லாம் சுமந்துகொண்டு ஓடும் கூவம் எனும் மகாநதி தான் என்று புரிந்தது.... கிட்டத்தட்ட இருபதடி சரிவில் கூவம் ஓடியது.... இருட்டில் கால் தவறினாலும் உருண்டு சென்று சாக்கடையோட கலக்க வேண்டியதுதான் ென்று தெளிவாக தெரிந்தது

அங்கிருந்த தடுப்புக்குள் சர்வ ஜாக்கிரதையாக சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தவளை தலைவாரி பூவைத்து முகத்துக்கு வாசனையான ஏதோவொரு பவுடரை போட்டு விட்டாள் மஞ்சுளா... " இதப்பாரு மான்சி.... அப்புடி இப்புடினு வேற எவன் நினைப்புலயாவது இருந்துகினு அண்ணன் கிட்ட முரண்டு பண்ணாத.... எதுவாருந்தாலும் அனுசரிச்சு போய் ஊரு பேரையும் உங்காத்ா அப்பன் பேரையும் காப்பாத்து..... அண்ணே இப்ப வந்துரும்... நான் பக்கத்துல தெரிஞ்சவங்க வீட்டுக்கு போய் படுத்து தூங்கி நாளைக்கு காலையில வர்றேன்" அறிவுரை என்ற பெயரில் மான்சியின் தன்மானத்தை மேலும் சீண்டிவிட்டுவிட்டாள்

மான்சி எந்த பதிலும் சொல்லவில்லை..... தான் வாழப்போகும் வாழ்க்கை தான் இனி தன்னுடைய மானத்தை காப்பாற்றும்.... இனி வாழ்வோ சாவோ அது கோபாலுடன் தான் ... இவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் வாழ்க்கையில் தோற்று பிறந்த வீடு செல்லமாட்டேன்... என்று மனதுக்குள் உறுதியுடன் எண்ணிக்கொண்டாள்... அந்த நொடியிலிருந்து சத்யனை தன் மனத்திரையிலிருந்து அழித்துவிடவும் எண்ணினாள்...... உடனே முடியாது என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் நினைவுகளை சுத்தமாக அழித்து விடுவேன் என்று உள்ளுக்குள் சபதம் செய்து கொண்டாள்...

அவர்களை காக்க வைக்காமல் கோபலும் பன்னீரும் உணவுப் பொட்டலங்களுடன் வந்து சேர்ந்தனர்.... நுழையும் போதே மதுவின் நெடி மூக்கை துளைத்தது.... முகத்தை சுளித்தபடி வெடுக்கென நிமிர்ந்து பார்த்தாள் மான்சி.... கோபால் அவளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.... புது மனைவியை ஆவலோடுப் பார்க்கும் ஆர்வம் கூட இல்லாமல் இப்படியொரு மனிதனா?

மஞ்சுளா உணவுப் பொட்டலங்களை பிரித்து பரிமாறினாள்... மான்சிக்கு இரண்டு இட்லி கூட முழுசாக இறங்கவில்லை... அவளை சாப்பிடும் படி யாரும் வர்ப்புறுத்தவும் இல்லை.... கை கழுவியதும் மஞ்சுளாவும் பன்னீரும் கிளம்பினார்கள்

கோபால் கதவடைத்துவிட்டு வந்து பாயில் அமர்ந்தான்... மான்சி சுவற்றில் ஒட்டிய பல்லி போல நின்றிருந்தாள்.... அடுத்து என்ன? வயிறு தடதடத்தது... கால்கள் தளர்வது போல் இருக்க சுவற்றில் இன்னும் அழுத்தமாக ஒட்டிக்கொண்டாள்....

" எவ்வளவு நேரம் நிப்ப? வந்து படு " மான்சி என்ற அழகான பெயரை கூட உச்சரிக்காமல் கவனத்துடன் தவிர்த்தவன் இயந்திரமாய் அழைத்தான்.... அவள் நகரவில்லை என்றதும் " வான்னு சொன்னேன்ல?" என்று அதட்டினான்

" வேற எவன் நெனப்புலயாவது எங்கண்ணன் கிட்ட முரண்டு பண்ணாத " என்ற மஞ்சுளாவின் குரல் மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலிக்க ' இல்ல இல்ல யார் நெனப்பும் எனக்கு இல்லை" என்று தனக்குத்தான கூறிக்கொண்ட மான்சி உள்ளுக்குள் உறுதியுடன் மெல்ல அடியிடுத்து வைத்தாள்

பக்கத்தில் வந்து நின்றவளை வெடுக்கென்று கையைப் பிடித்து இழுத்து படுக்கையில் சரித்தான் கோபால்..... மான்சி புரண்டு எழும் முன் அவள் மேல் படர்ந்திருந்தான்.... அடுத்த பத்து நிமிடங்கள் என்ன நடந்தது என்று மான்சி உணரும் முன்பே தனது முரட்டு உடலால் விறைத்த உறுப்பால் அவள் கன்னித்திரையை கிழித்து அதன் வலியால் அவள் கதறியதையும் பொருட்படுத்தாமல் அசுரத்தனமாய் இயங்கி தனது நீரை அவளுக்குள் வார்த்துவிட்டு சரிந்து படுத்தான்....

மீண்டும் மீண்டும் மான்சி யோசித்துப் பார்த்தும் எதுவும் புரியவில்லை.... ஆடைகள் கூட அவிழ்க்கப்படவில்லை....

தொடையிரண்டும் நெருப்பில் வெந்தது போல் எரிந்தது ..... இரண்டு நாய்கள் ஆசையோடு புணரும் அளவிற்கு கூட உணர்ச்சிகள் அங்கே பரிமாறக்கொள்ளப் படவில்லை... எத்தனை கனவுகள்?.... எவ்வளவு ரகசிய ஆசைகள் ?.....அத்தனையும் பத்து நிமிடத்தில் முடிவுரை எழுதப்பட்டு முடிந்து போனது

மார்புகள் இரண்டும் வலித்த போதுதான் அவன் அவற்றை தனது முரட்டு கரங்களால் நசுக்கியது புரிந்தது ..... இடுப்பு வரை உயர்த்தப்பட்டு கிடந்த புடவையையும் பாவாடையையும் இறக்கி விட்டு கசங்கி கிடந்த தனது பெண்மையை மறைத்தாள்..
.
இது நடக்கும் என்று தெரியும்.... தவிர்க்கமுடியாது என்றும் தெரியும்... ஆனால் துளியளவு நேசமில்லாத இந்த உடலுறவு ஏன்? கோபலுக்கு என்னை பிடிக்காதா?... அல்லது அவன் இயல்பே அப்படித்தானா?' மான்சியின் எண்ணங்களுக்கு யாரிடம் பதில் கிடைக்கும் என்ற யோசனையுடன் மெல்ல புரண்டுப் படுத்தாள்... பக்கத்தில் கோபால் இல்லை சற்று தள்ளி சுவற்றில் சாய்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்தான்... மான்சி தனது உயரம் முழுவதையும் நத்தை போல் சுருட்டிக் கொண்டு வலியை பொருத்து படுத்திருந்தாள்...


No comments:

Post a Comment