Tuesday, January 5, 2016

மான்சி மை லவ் - அத்தியாயம் - 8

இருவரும் தாத்தாவின் அறையை அடைந்தபோது அப்பாவும் மகன் அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தனர்... மான்சிக்கு அங்கிருந்த அமைதி வித்தியாசமாகப்பட... குழப்பத்துடன் பெரியவரைப் பார்த்து “ நேரமாச்சே இன்னும் தூங்கலைங்களா ஐயா?” என்று கேட்க....

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்தவர் “ சத்யன் தொடர்ந்து சாப்பிடாமலேயே இருந்தா நீயும் அப்படியே இருப்பியா மான்சி?” என்று கேட்டதும் மான்சி சட்டென்று தலைகுனிந்தாள்...

“ ம்ஹீம் இதுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கனும்னா நீ சத்யனைப் பற்றி முழுசா தெரிஞ்சுக்கனும்.....” என்ற பெரியவர் “ ராஜி நீயும் உட்கார்ந்து மான்சியையும் உட்கார சொல்லு” என்று மருமகளுக்கு உத்தரவிட்டார்..



ராஜி மான்சியின் கையைப் பிடித்து தன்னருகே அமர வைக்க... மான்சி பெருத்த சங்கடத்துடன் சோபாவின் நுனியில் அமர்ந்தாள்...

சொக்கலிங்கம் வேறு யாரையும் கவனிக்காமல் மான்சியை மட்டும் நேரடியாக பார்த்து பேச ஆரம்பித்தார்.... “ மான்சி சத்யனோட தற்போதைய நிலைமை உனக்கு ஓரளவுக்கு தெரிஞ்சிறுக்கும்... உனக்குத் தெரியாத சில விஷயங்கள் இருக்கு... சின்ன பொண்ணான உன்கிட்ட இதைப்பத்தி பேசக்கூடாது தான்... ஆனா நீ தெரிஞ்சுகிட்டே ஆகவேண்டிய சூழ்நிலை இப்போ எங்களுக்கு.. அதனால்தான் இதையெல்லாம் பேசவேண்டிருக்கு மான்சி... ஒரு மருத்துவரீதியான தகவலா சங்கடப்படாம நீ கேட்கனும்” என்று கூறிவிட்டு மான்சியின் முகத்தைப் பார்க்க...

அவள் முகத்தில் குழப்பத்தை மீறிய ஆர்வம்... சத்யனுக்கு என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம்... “ சொல்லுங்கய்யா பரவாயில்லை” என்றாள்

“ மான்சி சத்யனுக்கு நடந்த ஆக்சிடெண்ட்ல முதுகு தண்டுவடம் நகர்ந்து விட்டதால இடுப்புக்கு கீழே செயலிழந்து போய் படுத்த படுக்கையா இருக்கான்... இப்போ அவனோட கால்கள் மட்டுமல்ல அவனோட ஆண்மையும் செயலிழந்து தான் போயிருக்கு.... ஆனா முதுகுத் தண்டுவடம் அடிப்பட்டதுக்கும் ஆண்மையின் செயல்பாடுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை... முதுகுத்தண்டில் அடிப்பட்டதால் அவனது உடல்நிலையில் மட்டுமல்ல மனநிலையிலும் மாற்றம் நிச்சயம் வரும்... ஒரு உறவை தூண்டுவது ஒரு ஆணின் மனநிலையும் நரம்புகளும் தான்... சத்யனைப் பொருத்தவரை அவனது ஆணுறுப்பின் செயல்பாடுகள் எப்பவும் போலத்தான் இருக்கும்... ஆனால் கால்களும் இடுப்பும் செயலிழந்த நிலையில் நல்ல ஆண்மகனா மனைவியுடன் திருப்தியான உறவில் ஈடுபட முடியாது.... சத்யனுக்கு இப்போதைய நிலைமை இதுதான்....” என்ற பெரியவர் பேரனின் நிலையில் வருந்தி கலங்கிய கண்களை மற்றவர்கள் தெரியாமல் மறைத்தார்...

சற்று நிதானப்பட்ட பிறகு “ அவனுக்கு குணமாக ஏதாவது வழியிருக்கா என்று ஒருபக்கம் நாங்க அலசி ஆராய்ந்தாலும்.. மறுபக்கம் குடும்பத்துக்கு வாரிசு இல்லையே என்ற கவலை எங்களுக்கு... போனமாசம் சத்யனைப் பார்க்க வந்த டாக்டர் எங்களுக்கு ஒரு யோசனை சொன்னார்... அதாவது testicular sperm extraction – TESE என்ற முறையில் விதைப்பையில் இருந்து நேரடியாக ஒரு டிஸ்யூவை எடுத்து பல பரிசோதனைக்களுககுப் பிறகு ஒரு ஆரோக்கியமான பெண்ணை தேர்ந்தெடுத்து.. அவளின் முதிர்ச்சியடைந்த சினைமுட்டைக்குள் செலுத்தி கரு உருவாக முயற்சி செய்யலாம் என்று டாக்டர் யோசனை சொன்னார்... சாதரண IVF அல்லது IUI முறைகள் போல் இது இல்லை... இதற்கு பல கோடிகள் வரை கூட செலவாக வாய்ப்பு உள்ளது.. அதனால சத்யனின் சம்மதத்தோட இந்த ஏற்பாடு செய்து ஒரு வாரிசை உருவாக்கலாம்னு சொன்னார்.... எங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தது... சத்யன் கிட்ட இது விஷயமா பேசின போது அவன் பயங்கர டென்ஷன் ஆகி ரொம்ப கோபமா கத்துனான்... அதுபோல ஒரு குழந்தையைப் பெத்துக்கறதை அவமானமா நினைச்சான்... நாங்க எவ்வளவு கெஞ்சியும் சத்யன் ஒத்துக்கலை.. தனக்கு இப்படியொரு வாரிசே வேண்டாம்னு பிடிவாதமா மறுத்துட்டான்... நாங்களும் மேல வற்புறுத்தாம அதோட விட்டுட்டோம்… ஆனா இப்போ..................” என்று பெரியவர் முடிக்காமல் நிறுத்த....

மான்சியின் பார்வை கூர்மையுடன் அவர் மேல் படிந்தது... “ இப்போ என்னாச்சுங்கய்யா?” என்று கேட்டாள்...

“ ம்ம் இப்போ அவனுக்கு இந்த முறையை குழந்தையை உருவாக்க சம்மதம்னு சொல்லிட்டான் மான்சி” என்றார் சொக்கலிங்கம்....

மான்சியின் முகத்தில் தெரிந்தது ஏமாற்றமா என்று கவனிக்கும் முன்பே அது கானாமல் போக “ ஓ..... ரொம்ப சந்தோஷமாயிருக்குங்க ஐயா” என்றவளின் குரலில் சந்தோஷம் இருந்ததா? என்ற கேள்விக்கு பதில் மான்சிக்கே தெரியவில்லை

“ மிச்சத்தையும் கேட்டுட்டு சந்தோஷப்படு மான்சி” என்று விரகத்தியாக கூறியவர்... சொல்லத்தான் வேண்டுமா என்பதுபோல் மருமகளைப் பார்த்தார்.... ராஜியின் பார்வையும் கெஞ்சியது அவரிடம்....

ஒரு முடிவுடன் நிமிர்ந்த சொக்கலிங்கம் “ சத்யன் சம்மதிச்சதுக்கு காரணம் நீதான் மான்சி.... அவன் குழந்தையை சுமக்கும் பெண் நீயாத்தான் இருக்கனும்னு சொல்றான்... அதுவும் முறைப்படி கல்யாணம் முடிஞ்சதும் தான் நடக்கனும்னு சொல்றான்.... அதுக்கு உன்கிட்ட பேசி சம்மதம் வாங்கும் வரை சாப்பிடமுடியாதுன்னு தீர்மானமா சொல்றான் மான்சி.... எனக்கு இதில் துளிகூட சம்மதமில்லைனு சொல்லிட்டேன்.. அதுக்காக தான் இன்னக்கி உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிருக்கான்... இப்போ அவனை சாப்பிட வைக்க எங்களுக வேற வழி தெரியலை.... அதான் உன்கிட்ட வந்து நிற்கிறோம்... இனிமேல் சத்யன் சாப்பிடுவது உன் கையிலதான் மான்சி ” என்று கூறிவிட்டு அமைதியானார்....

மான்சி தன் காதுகலையே நம்பமுடியாதவள் போல அமர்ந்திருந்தாள்.... இதயத்தின் அதிர்ச்சி விழிகளில் தெரிய... கண்களை சிமிட்டாமல் பெரியவரைப் பார்த்து “ நானா?.... என்னையா சொன்னார்?..... ஏன் திடீர்னு இப்படி?” அடுத்தடுத்து கேள்விகளை கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருந்த நிமிடத்தில் அவள் மனம் ஆயிரமாயிரம் சிந்தனைகள் செய்தது...


அன்னைக்குப் பார்த்தப்ப வேற எதுக்கோ கூப்பிட்டு என்னை கேவலப்படுத்தியவன்.. இப்போ கல்யாணம் வரை வந்த காரணம் என்ன? சத்யன் இப்போது நோயாளி என்பதால் மனம் திருந்தி ஆதரவு தேடுகிறான் என்பதை மான்சியால் ஒத்துக்கொள்ள முடியாது... படுத்த நிலையில் தூக்கத்திலும் கர்வமும் கம்பீரமும் குறையாமல் இருந்தவனை பார்த்துவிட்டு வந்தவள் தானே? வேறென்ன காரணம்? அதுவும் பட்டினி கிடந்து என்னை கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து நினைக்கும் அளவுக்கு மாற்றியது எது

“ உன்னைத்தான் சொன்னான் மான்சி .... ஏன் இப்படின்னு இன்னுமா புரியலை மான்சி? அன்னிக்கு நடந்த பிரச்சனைக்குப் பிறகு உன்னை இப்பத்தான் பார்க்கிறான்.... அவன் மனசுல என்ன இருக்குன்னு தெரியலை... ஆனா நீதான் வேனும்னு பிடிவாதமா இருக்கான்” சொக்கலிங்கம் சொன்னதும் மான்சி யோசனையுடன் அமர்ந்திருக்க...

ராஜி மான்சியின் கைகளைப் பற்றி “ என் மகன் இருக்கிற நிலையில் உன்கிட்ட இதை கேட்பது மகாபாவம் தான்.... ஆனா படுத்த படுக்கையா இருந்தாலும் எனக்கு என் பிள்ளை உயிரோட இருந்தா போதும் மான்சி... அதுக்கு நீதான் உதவனும்...” என்றவள் பற்றியிருந்த மான்சியின் கைகளை தனது கண்களில் ஒற்றிக்கொண்டு “ என் பிள்ளையால் உனக்கு எந்தவிதமான சந்தோஷமும் கிடைக்காது தான்... கடைசிவரைக்கும் நீ எங்களுக்கு ஒரு மகளா சகல செல்வாக்கோட இந்த வீட்டுல இருக்கலாம் மான்சி... ஒரு தாயோட வேண்டுதலா நெனைச்சு முடிவு பண்ணு மான்சி” என்றதும் ..

மான்சி அவசரமாக கைகளை உதறிக்கொண்டு எழுந்து “ என்னம்மா நீங்க என் கையைப் பிடிச்சு..... இதெல்லாம் வேண்டாம்மா..... எனக்கு யோசிக்க கொஞ்சம் அவகாசம் கொடுங்க” என்று சங்கடமாக கூறியவள் சற்றுநேரம் அமைதியாக நின்றிருந்தாள்.... பிறகு பெரியவரிடம் திரும்பி “ ஐயா உங்க பேரன் எதை மனசுல வச்சுகிட்டு என்னை கல்யாணம் பணணிக்கிறேன்னு சொன்னாரோ தெரியலை... ஆனா நான் நல்ல மனசோட அவருக்கு குணமாகும் என்ற நம்பிக்கையோட இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிக்கிறேன்... ஆனா என் வீட்டில் நீங்க வந்து பேசவோ.... நானே பேசி சம்மதம் வாங்குவதோ முடியாது..... இந்த ஏற்ப்பாட்டுக்கு என் தம்பி நிச்சயம் சம்மதிக்கமட்டான்,, அதனால என் வீட்டுக்குத்் தெரியாமல் தான் இது நடக்கனும்.... எல்லாம் முடிஞ்ச பிறக நானே சொல்லி சமாதானம் பண்ணிக்கிறேன்.... நீங்க ஏற்பாடு பண்ணுங்க ஐயா ” என்று மானசி உறுதியாக கூறினாள்.....

பெரியவர் அவளை அமைதியாகப் பார்த்தார் “ மான்சி புரிஞ்சு தான் பேசுறியா? ஏற்கனவே இந்த கல்யாண ஏற்ப்பாட்டை உன்னோட வாழ்க்கைக்கு நாங்க செய்யும் அநீதியா நினைக்கிறேன்... இதுல உன் வீட்டுக்கு தெரியமா இதை செய்றதுக்கு என்னால முடியாதம்மா” என்று பெரியவர் வேதனையுடன் கூற...

“ இல்லப்பா மான்சி சொல்றதும் சரிதான்... எந்த வீட்டிலும் இப்படியொரு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாங்க... மான்சி சொல்ற மாதிரி கல்யாணம் மொதல்ல முடியட்டும்... பிறகு அவங்களை இங்கே வரவழைச்சு நாமளே பேசி சமாதானம் செய்யலாம்” ராஜாவும் மான்சியின் கூற்றை சரியென்று கூற ராஜியும் தன் கணவனோடு சேர்ந்து இதுதான் சரியென்றாள்...




எல்லோரையும் யோசனையுடன் ஒரு பார்வை பார்த்த பெரியவர்... “ எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்க.. இனி நான் மாத்தி சொல்ல எதுவுமில்லை..... ஆனால் நாளைக்கு காலையில மான்சி சத்யனோட டாக்டரைப் பார்க்கனும்... அவர் சொல்றதுக்கு முழு மனசோட சம்மதம்னு தெரிஞ்ச பிறகுதான் நான் சத்யன் கிட்ட சொல்லுவேன்... அதுவுமில்லாம மான்சியின் பாதுகாப்புக்காக நான் செய்யும் சில ஏற்பாடுகளுக்கு சத்யனும் சம்மதிக்கனும்... அதன்பிறகுதான் கல்யாணத்துக்கு நாள் பார்ப்பேன்.. ஏன்னா இது சாதரணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் கல்யாணம் இல்லை.. அதனால முன்னாடியே எல்லாவற்றையும் பேசி சம்மந்தம் வாங்கிடனும்” என்று பொதுவாக பேசியவர்.. மான்சியிடம் திரும்பி “ நீ போய் சாப்பிட்டு தூங்கும்மா.. நாளைக்கு காலையில பேசலாம்” என்றார்

எல்லோரும் எழுந்துகொள்ள.. மான்சி அவசரமாக பெரியவரை நெருங்கி “ நாளைக்கு டாக்டரை பார்க்கும்போது பார்க்கலாம்.. இப்போ எல்லாருக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம்னு அவர்கிட்ட நீங்க போய் சொன்னா உடனே சாப்பிடுவாரே தாத்தா.... ப்ளீஸ் தாத்தா ” என்றவளின் பார்வையை கண்ணீர் மறைத்தது...

பெரியவர் புன்னகையுடன் அவளைப் பார்த்து “ ம்ம் அவன் சாப்பிடனும்னு சொல்றதைவிட நீ தாத்தான்னு கூப்பிட்டதுக்காக போய் சொல்றேன்..... போதுமா?” என்றவர் மகனிடம் “ ராஜா நீயும் வா சத்யனைப் பார்த்துட்டு வரலாம்” என்றதும் எல்லோரும் அறையிலிருந்து வெளியே வந்தார்கள்

ராஜி கிச்சன் சென்று சத்யனுக்கான இரவு உணவை எடுத்துக்கொண்டு அவர்களுடன் மாடிக்குப் போக... சத்யன் சாப்பிட்டுவிட்டான் என்ற தகவலுக்காக மான்சி மாடிப்படியின் கடைசி படியில் அமர்ந்து மேலே பார்த்துக்கொண்டிருந்தாள்...

சத்யனின் அறைக்குள் மூவரும் நுழையும்போது சத்யன் இன்னமும் லாப்டாப்பில் கேம்தான் விளையாடிக்கொண்டிருந்தான்.... கட்டிலுக்கு கீழே கவலையுடன் வேலு அமர்ந்திருந்தான்.... இவர்கள் மூவரையும் ஒன்றாகப் பார்த்ததும் ஆர்வத்துடன் அவசரமாக எழுந்து “ சின்னய்யா தாத்தா வந்திருக்காரு பாருங்க” என்று சொல்ல... சத்யன் பட்டென்று நிமிர்ந்துப் பார்த்தான்...

தாத்தா ஒரு புன்னகையுடன் சத்யனின் அருகில் அமர்ந்து “ ம்ம் உண்ணாவிரதம் இருந்து நினைச்சதை சாதிச்சிட்ட...” என்றதும்...

சத்யனின் முகத்திலும் மெல்லிய சிரிப்பு படர “ ஆமாம் பின்ன உங்க பேரனாச்சே...” என்றான்..

கட்டிலின் அருகில் நின்றிருந்த ராஜா “ ஆனா சத்யா நீ எங்க பிள்ளை உனக்காக நாங்க எதையும் செய்வோம் தான்... எந்த சொந்தமும் இல்லாத மான்சி எப்படி உடனே சரின்னு சொன்னான்னு தான் புரியலை.... உன்னை சாபபிட வைக்கனும்னு அவளோட தவிப்பு..... நீ சாப்பிடாம இருக்கேன்னு அவளும் இன்னைக்குப் பூராவும் சாப்பிடாம இருந்தது.... ம்ஹூம்... இதுபோன்ற பெண்களை பார்ப்பது ரொம்ப ரேர் சத்யா.... அவள் உனக்கு கிடைச்சதில் நீதான் ரொம்ப லக்கி சத்யா” என்று பெருமையுடன் பேசியவரை வியப்புடன் பார்த்த சத்யன்....

“ அவளும் சாப்பிடலையா? ஏன்?” என்றான்..


“அது ஏன்னு கல்யாணம் ஆனபிறகு நீயே கேளு.... இப்போ அம்மா கொண்டு வந்திருக்க சாப்பாட்டை சாப்பிட்டு உண்ணாவிரதத்தை முடிடா பேரா” என்று உற்சாகத்துடன் சொக்கலிங்கம் சொல்ல...

அவரை கேள்வியாகப் பார்த்த சத்யன் “ இல்ல தாத்தா என்ன பேசினீங்க? அவ என்ன சொனனா? எப்போ மேரேஜ் ஏற்பாடு பண்ணப் போறீங்க... இதெல்லாம் சொல்லாம நான் சாப்பிடமாட்டேன்” என்றான் அதே பிடிவாதத்துடன்....

அவன் விடாக்கண்டன் என்று பெரியவருக்கு தெரியும்... மான்சியிடம் பேசியதையும்... அதற்கு அவளது பதிலையும் பேரனிடம் சொல்லிவிட்டு... “ கல்யாணத்தேதி நாளைக்கு மான்சி டாக்டரைப் பார்த்து பேசிய பிறகுதான் முடிவு பண்ணனும்... அது மட்டுமில்லாம மான்சியோட பிற்காலப் பாதுகாப்புக்கு சில ஏற்பாடுகள் செய்ய நீயும் சம்மதிக்கனும்.... இதெல்லாம் இந்த நைட்ல செய்யமுடியாது... நாளைக்குத்தான் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்.... ஆனா மான்சி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டா... இதை மட்டும் நம்பி இப்போ சாப்பிடு சத்யா ” என்றார்....

“ இல்லேன்னா மான்சியை வரச்சொல்லவா சத்யா?” என்று ராஜி மெதுவாக கேட்க...

சத்யன் சிறிதுநேரம் கண்மூடி அமர்ந்திருந்தான்... பிறகு ஏதோ சிந்தனையில் தலையை குலுக்கிக்கொண்டே “ ம்ஹூம் அவளை நாளைக்கேப் பார்க்கிறேன்... இப்போ வேண்டாம்...” என்றவன் “ சரி சாப்பாடை வச்சிட்டுப் போங்க சாப்பிடுறேன்” என்றான்...

“ இல்ல நீ சாப்பிடுற வரைக்கும் நான் இருக்கேனே” என்ற ராஜியின் குரலில் கெஞ்சல்....

சத்யன் எதுவும் சொல்லவில்லை.... பெரியவர் மகனைப் பார்த்து கண்ணசைக்க இருவரும் அங்கிருந்து வெளியேறினர்.... சத்யன் தனது மடியில் இருந்த லேப்டாப்பை மூடியதும் வேலு அவசரமாக அதை எடுத்து வைத்துவிட்டு சிறு மேசையை வைத்து சத்யன் கைகழுவ தண்ணீரையும் ஒரு பாத்திரமும் எடுத்து வந்து வைத்தான்....

ராஜி மகனுக்கு உணவினை எடுத்து வைத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்.... சத்யன் பசியோடு உணவே கண்ணாக இட்லிகளை விழுங்க... அவள் கலங்கிய கண்களை மறைத்து பாசத்தோடு பார்த்தாள்....

சத்யன் சாப்பிட்டு முடித்து கைகழுவும் போது “ சத்யா இனிமே நானே உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா?” ராஜியின் குரல் மிக மெல்லியதாக ஒலித்தது...சத்யன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க.....“ இல்ல மரகதம்மா வயசானவங்க.... நாலுவேளையும் மாடிப்படி ஏற ரொம்ப கஷ்டப்படுறாங்க... நானும் இப்பல்லாம் கம்பெனிக்கு போறதில்லை... வீட்டுல சும்மா தானே இருக்கேன்.. அதான் நானே கொண்டு வரலாம்னு ” ராஜியின் குரல் தயங்கித்தயங்கி வந்தது...

சற்றுநேர காத்திருப்புக்குப் பின் “ ம்ம் எடுத்துட்டு வாங்க.... ஆனா எதையாவது சொல்லி அழுதுகிட்டே இருக்ககூடாது.. அப்படின்னா வாங்க”என்றான் சத்யன்...

ராஜி சந்தோஷத்துடன் தலையசைத்து “ நானும் எவ்வளவு நாளைக்கு செய்யப் போறேன்? இதோ இன்னும் சிலநாள்ல மான்சி வந்துடுவா... அப்புறம் அவ உன்னை கவனிச்சுப்பா” என்று கூற.... சத்யனின் முகத்திலும் எதிர்பார்ப்பு கலந்த சந்தோஷம் முகாமிட்டது... நாளை மான்சியை நேருக்குநேர் சந்திக்கப்போகும் எதிர்பார்ப்பா??




“ எப்போதும் புயலாய் சுழன்றடிக்கும்...

“ என் இதயத்தில்...

“ இப்போது பதற்றத்தின் மெல்லிசை!



“ எப்போதும் சூரியனாய் சுட்டெரிக்கும்...

“ என் இதயத்தில்...

“ இப்போது அடர் பனியின் அழகிய நடுக்கம்!



“ எப்போதும் ஆக்ரோஷமாய் ஆர்பரிக்கும்...

“ என் இதயத்தில்...

“ இப்போது மௌனத்தின் மெல்லிய முனங்கல்!



“ ஏனிந்த மாற்றங்கள் ...... ?


No comments:

Post a Comment