Friday, December 4, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 1

மென்மையான இருட்டும்.... வன்மையான மழைச்சாரலும் ஒன்றாய் சேர .... மேகங்கள் நாளெல்லாம் வின்னில் ஒன்றோடொன்று மறைந்து கலந்து புணர்ந்து விட்டு ... மழைநீரில் நனைந்து தங்களைப் புதுபித்துக் கொள்ள ஒன்றாக திரண்ட ஒரு அழகான அந்தி மாலை....

அந்த ஏகாந்த இரவில் .... மின்னல்களை தோரணமாய் இறக்கி ... சாரலெனும் பூக்களை தூவி தன் பூமிக் காதலியுடன் காதல் சமரசம் பேசியது மழை.... சாலையில் விழுந்த சிறு துளிகள் பெருவெள்ளமாக பக்கவாட்டில் வழிந்து ஓடியது....

திடீரென்று கொட்டிய மழையை எதிர்கொள்ள முடியாமல் சிறு சிறு முனங்கலுடன் பறவைகள் கூட்டைத் தேடி விரைந்து பறக்க.... சாலையில் தேங்கும் நீரை கிழித்துக்கொண்டு செல்லும் வாகனங்களின் வேகத்தைவிட அந்த வாகனங்களின் வைப்பர்கள் வேகமாக நீரை கிழித்துத் தள்ளிக்கொண்டிருந்தது...


தனது கார் கண்ணாடியின் உள்புரத்தில் துளிர்த்த நீரை கை டவலால் துடைத்தபடி.... முந்திச்செல்ல விரும்பும் வாகனங்களுக்கு வழிவிட்டு அவசரமின்றி காரை செலுத்தினான்... சத்யன்

சத்யன் தருமபுரியை அடுத்த பொம்மிடியில் மாம்பழங்களை கொண்டு பழச்சாறு தயாரிக்கும் கம்பெனியின் உரிமையாளரின் பேரன் .... தாத்தா மகாலிங்கம் துவங்கி வைத்து அப்பா சுந்தரலிங்கம் நடத்திவிட்டு இப்போது சத்யனின் வசம் வந்துள்ள மூன்று தலைமுறை நிறுவனம்....

பூர்வீகமாக மலேசியாவில் வாழ்ந்தது இவர்களது குடும்பம் ... சத்யனின் தாய் அவனது பதினேழாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட... மிச்ச நாட்களை தந்தையின் கண்டிப்பற்ற கட்டுப்பாட்டில் வளர்ந்தவன்..... சுந்தரம் தன் மனைவி இருந்தவரை ஒழுக்கசீலன்.... மனைவி இறந்துவுடன் ஜகதலப்ரதாபன் என்று பெத்தப் பெயர் வாங்கியவர்.....

மெல்போர்னில் MBA முடித்துவிட்டு வந்த சத்யனின் பொருப்பில் நிறுவனத்தை வற்புறுத்தி ஒப்படைத்துவிட்டு தன் அப்பா மகாலிங்கத்தை மகன் துணைக்கு வைத்துவிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டார் சுந்தரம்....
சுந்தரம் மலேசியா வந்தபோது ஹோட்டலில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு.. பார்ட்டி முடிந்து இவர் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்த விவாகரத்தான முப்பதாறு வயது ரஷ்யப் பெண்ணின் பொன்னிற கூந்தலில் மயங்கி ... தனது ஐம்பத்தியோராவது வயதில் ஏற்ப்பட்ட திடீர் காதலால் கசிந்து உருகி வழிந்து தேங்கி அவளுடன் திருமணமல்லாத ஒரு ஒப்பந்தத்துடன் அங்கேயே தங்கிவிட்டார்....

தன் தந்தைக்கும் தன் மகனுக்கும் தனது காலங்கடந்த காதலை புரியவைக்க முயன்று தந்தை மகாலிங்கத்தின் அளவுகடந்த வெறுப்பையும்... மகன் சத்யனின் பற்றற்ற நாகரீகமான வாழ்த்தையும் பெற்றுக்கொண்டு கடந்த மூன்று வருடங்களாக அந்த பெண்ணுடன் வாழ்ந்து மலேசியாவில் இருக்கும் தங்களின் சொத்துக்களை கரைத்து கோப்பையில் ஊற்றி ரஷ்யப் பெண்ணின் கால்களை கழுவிக்கொண்டிருந்தார்

சத்யன் நான் சுந்தரத்தின் மகன்தான் என்பதை எல்லா வழிகளிலும் நிரூபித்துக் கொண்டிருந்தான்.... தாத்தாவிடம் அளவுகடந்த மரியாதை இருந்ததால் தனது சல்லாபங்களை அவருக்கு தெரியாமல் ரகசியமாக நடத்தினான்... படிக்கும் காலத்திலேயே அவன் பிஞ்சிலேயே பழுத்துவிட... அவன் கற்றுக்கொண்டதெல்லாம் கலவியில் கல்விதான்... 


அவன் படித்த நாட்டில் செக்ஸ் என்பது உணவு தூக்கம் என்பது போல் அத்தியாவசியமான ஒன்று... அதை எங்கும் வாங்கலாம் என்ற நிலையில்... சுலபமாக கிடைத்த சுகத்தை சத்யன் சொர்கமாக அனுபவித்தான்...

அவனது கருமை கலந்த மாநிறமும் கம்பீரமான உயரமும்.. நெற்றியில் வழியும் அடர்ந்த கிராப்பும்... உதட்டின் மேலே இளமையாய் அரும்பும் மீசையும்.. எப்போதும் தாடையில் இருக்கும் மூன்றுநாள் ரோம வளர்ச்சியும்... ஊடுருவும் பார்வையும்... சிரிக்கும் உதடுகளும்.. ம்ம் இவையெல்லாம் சேர்ந்து அவன்பால் பெண்களை எளிதாக விழவைத்தது

வாரத்திற்க்கு இரண்டு என்று முறைவைத்து உறவுகொள்ளும் அளவிற்கு சத்யனின் காதலிகள் பெருகிப் போனார்கள்... சத்யன் தாத்தாவுக்கு பயந்து படிப்பை ஒழுங்காக முடித்துவிட்டு வந்தவனை வழியனுப்ப தங்கள் புதிய காதலனுடன் வந்து சத்யன் முகத்தில் எச்சில் வழிய வழிய முத்தமிட்டு அனுப்பிய காதலில் ஏராளம்....

இந்தியா வந்தவனுக்கு தாத்தா விதித்த கட்டுபாடுகள் பிடிக்கவில்லை என்றாலும் எதிர்த்து ஒரு வார்த்தைகூட கூறாமல் அடங்கியிருந்தான்... கட்டுப்படுத்த முடியாமல் போகும் நாட்களில் ஓய்வெடுக்கிறேன் என்று தனது டாப்சிலிப் எஸ்டேட்க்கு வரும்போது கூடவே குட்டிகளையும் அழைத்துவந்து கூத்தடித்து விட்டு போவான்... சில பெண்கள் ஒரு இரவோடு போய்விடுவார்கள்... சிலர் இவனின் சேவையிலும் லீலையிலும் மயங்கி மாதக்கணக்கில் இவன் காலடியில் விழுந்து கிடப்பார்கள்

கம்பெனி பொறுப்புகளை ஏற்றப் பிறகு சில சில்லறைத் தனமான விளையாட்டுகளை குறைத்துவிட்டு தனது மோகத்தை அடக்க மட்டும் பெண்களைத் தேடினான்... காரணம் தொழிளாலர்களிடம் இவனுக்கு இருந்த மரியாதை... இவன் லீலைகள் அனைத்தும் தர்மபுரியை விட்டு தள்ளி பெங்களூர் கோவை போன்ற இடங்களிலும் நடக்கும்.....

இருபத்தெட்டு வயதில் திருமணத்தை வெறுக்கும் சத்யன் சற்று வித்தியாசமானவன்.... காதல் ...கல்யாணம்.. மனைவி ..குழந்தைகள்.. குடும்பம்.. என இதுபோன்ற சமூகக் கட்டுபாடுகளை சங்கிலியாக பூட்டிக்கொண்டு நடக்க சிரமப்படாமல் அத்தனையும் தகர்த்தெறிந்து விட்டு சுதந்திரமாக வாழவேண்டும்... சத்யனும் காதல் வயப்படுவான்.. ஆனால் இவனது காதல் ஒரேயொரு இரவு மட்டுமே நீடிக்கும்... இந்த இரவுக் காதலனுக்காகத்தான் பல பெண்கள் மயங்கிக்கிடந்தார்கள்

அவனுக்கு வாழ்க்கை என்பது ஒரு வட்டமல்ல.... நீந்த நீந்த படர்ந்து விரிந்துகொண்டே போகும் கடல்... இந்த கடலில் மூழ்கி முத்தெடுக்க ஆசைப்படவில்லை..... உல்லாசமாக நீந்தித்திரியவே ஆசைப்பட்டான்... அவனைப் பொருத்தவரை வாழ்க்கையை கட்டுப்பாடுகள் இன்றி கடைசி நிமிடம் வரை அனுபவிக்க வேண்டும்.... இந்த நிமிடம் வரை தனது கொள்கையிலிருந்து மாறாமல் நினைத்ததை செய்துவந்தான்

பெண் புனித காவியம் .... ஆண் அதை ஆராதிக்க வேண்டும் என்பதெல்லாம் சுத்த பேத்தல்.... சத்யனுக்கு பெண் இரவுநேர சதைக் கவிதை... அதனைப் படிப்பதைவிட விடிய விடிய விழுந்து புரண்டு கிடந்து கடந்து எழுந்திருக்கவே பிடிக்கும்

கல்யாண வாழ்க்கையில் காமம் எனும் ஆறு அணை திறந்து வரும்போது கரைக்குள் அடங்கி ஓடும்.... தனிமனித வாழ்க்கையில் காமம் அணை உடைத்து வந்தால் கரைகடந்து ஓடும்... சத்யனும் உடைப்பெடுத்து கரையை கடந்து ஓடிக்கொண்டிருந்தான்

காம விலங்கினால் கடித்துக்குதறப்பட்ட சத்யன் அதற்க்கான மருந்தை மோக விலங்குகளான பெண்களின் ஆடை மறந்த உடலில் தேடினான்...

சிலநேரங்களில் பருவத்தின் மூட்டைகள் சுகமாக கழுத்தை நெறித்து அவனுக்கு விருப்பமில்லா விட்டாலும் அவனை விரட்டிவந்து நுகர்ந்தது காமம்....

மொத்தத்தில் சத்யன் எனும் கம்பீரம் நிறைந்த இந்த ஆண் கத்தி அழகிய பெண்களின் காதுகளை சொறிய மட்டுமே பயன்படுத்தப்பட்டது... 


இதோ இன்றும் தனது டாப்சிலிப் எஸ்டேட்க்குத்தான் போய்க்கொண்டு இருக்கிறான்... ஆனால் கூட எந்த பெண்ணும் இல்லை... சத்யன் பெண்ணை அழைத்துச்செல்லாமல் தனியாக டாப்சிலிப் செல்கிறான் என்றால் அது அவனது தாயாரின் நினைவுநாளாகத் தான் இருக்கும்....

இந்த ஒருநாளில் மட்டும் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது தாயுடன் செலவிட்ட கணங்களை நினைத்தபடி மவுனமாக எஸ்டேட்டில் இருக்கும் வீட்டில் கிடப்பான்.... விடிந்தால் அவன் அம்மாவின் நினைவுநாள்...

இரவு 11- 30 .. சத்யனின் கார் ஈரோடு திருப்பூர் வழியாக பல்லடத்தை கடந்து பொள்ளாச்சி வந்தது... திருப்பூர் வரை தொடர்ந்த மழை பொள்ளாச்சியில் தணிந்திருக்க.. ஒரு டீகடையின் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கி போய் டீ குடித்துவிட்டு.. குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டை பற்றவைத்து புகையை உறிஞ்சி வெளியேற்றினான்... மணிக்கட்டை திருப்பி மணிபார்த்தான்.. இன்னும் இரண்டு மணிநேரத்தில் அவன் எஸ்டேட்டில் இருக்கலாம்...

எரிந்து முடிந்த சிகரெட்டை அணைத்து வீசிவிட்டு காரில் ஏறி கிளப்பினான்.... பொள்ளாச்சியில் இல்லாத மழை ஆனைமலையை நெருங்கும் போது பிடித்துக்கொண்டது... டாப்சிலிப் செல்லும் மழை பாதையில் ஜாக்கிரதையாக காரை செலுத்தினான்...

இவனுக்குப் பின்னால் வந்த கார் பலத்த ஹாரன் ஒலியுடன் இவனை முந்திச்செல்ல முயல... மற்றொரு சூழ்நிலையாக இருந்தால் உடன் வரும் பெண்களை அணைத்தபடி முந்திச்செல்லும் காருக்கு வழிவிடாமல் போக்குக் காட்டியிருப்பான்... ஆனால் இன்று அவன் மனதில் இருந்தது அவனது அம்மா மட்டுமே.... சத்யன் அமைதியாக தனது வேகத்தை குறைத்து அந்த காருக்கு வழிவிட்டு ஒதுங்கினான்...

ஹாரன் சத்தத்தை குறைக்காமலேயே அவன் காரை கடந்து சென்றது பின்னால் வந்த குவாலிஸ் கார்.... அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது... முன்னால் சென்ற காரின் பின் கதவைத்திறந்து கொண்டு ஒரு உருவம் ரோட்டில் பாய்ந்து விழுந்து உருண்டு வந்தது...

அதிர்ந்துபோன சத்யன் தனது காரின் பிரேக்கை ஒரே அழுத்தாக அழுத்த... டயர்கள் தேய கிரீச்சென்ற பலத்த சப்தத்துடன் சத்யனின் கார் ரோட்டில் கிடந்த அந்த உருவத்தை உரசி நின்றது... அந்த உருவத்தின் மீது காரை ஏத்திவிட்டோமோ என்று திகைப்புடன் சிலநொடிகள் காரிலேயே தாமதித்த சத்யன்.. சுதாரித்துக்கொண்டு இறங்கி ஓடிச்சென்று காரின் முன்புறம் குனிந்து பார்த்தான்...

காரின் முன் டயருக்கும் அந்த உருவத்துக்கும் சில அங்குலங்களே இடைவெளியிருந்தது ... தனது கார் ஏறவில்லை என்றதும் சத்யனுக்கு ‘அப்பாடா’ என்று மூச்சு வந்தது... காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் விழுந்து கிடந்தது பெண் என்பது பார்த்தவுடனே புலப்பட்டது... சத்யன் திகைப்புடன் திரும்பி இந்த பெண் எகிறி குதித்த குவாலிஸ் கார் மறுபடியும் திரும்பி வருகிறதா என்றுப் பார்க்க,... தூரத்தில் அந்த கார் நின்று அதிலிருந்து சிலர் இறங்கி சத்யனைப் பார்த்துவிட்டு மறுபடியும் அவசரமாக காரில் ஏறி சென்றுவிட்டனர்....

அவர்களின் நடவடிக்கை ஏதோ தவறு என்று சத்யனுக்கு உணர்த்த... கீழே கிடந்த பெண்ணை குனிந்துப் பார்த்தான்.... மல்லாந்து கிடந்தாள்... இருபதிலிருந்து இருபத்திமூன்றுக்குள் வயதை மதிப்பிடலாம் .. வெள்ளை ரோஜாவையும் மஞ்சள் ரோஜாவையும் சேர்ந்துக் குழைத்த சந்தனநிறம்.. கூந்தல் தாருமாறாக பறந்து மழையில் நனைந்து இருந்தது.... அவள் உடலில் முற்றிலும் நனைந்துபோன ரவிக்கையும் பாவாடையும் மட்டுமே இருந்தது... ரவிக்கை கிழிந்து கந்தலாகி உள்ளிருந்த கருப்புநிற உள்ளாடையை வெளிச்சமிட்டது...

முகம் முழுவதும் நகக்கீறல்கள்... உதடுகள் கிழிப்பட்டு ரத்தம் துளிர்த்திருந்தது.. கன்னங்களில் விரல் தடங்கள்... ரோட்டில் விழுந்து உருண்டதில் பாவாடை முழங்காலுக்கு மேல் சுருண்டு கிடக்க தந்தம் போன்ற காலில் நிறைய சிராய்ப்புகள்... வலது கால் முட்டியில் சதை சக்கையாக பெயர்ந்து ரத்தம் வழிந்தது... இடதுகால் பெருவிரல் நகம் உடைந்து ரத்தம் வழிந்தது.. மொத்தத்தில் கசங்கி எறியப்பட்ட கவிதைப் புத்தகம் போல் கிடந்தாள் அந்த பெண்...




சத்யன் பார்த்தவுடனேயே தெரிந்தது அந்தப்பெண் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டிருக்கிறாள் என்று.... பதட்டமாக மடிந்து அமர்ந்து கையைப்பிடித்து உயிர் இருக்கிறதா என்று பார்த்தான்.... துடிப்பு சீராக இருந்தது... இவன் கைகளிலே இருந்த அந்தபெண்ணின் கை அனிச்சையாக உதறிக்கொண்டன.. ரத்தத்தில் நனைந்த உதடுகள் முனங்கலாய் அசைந்தது .... “ எ...ன்...னை யா...ரா..வ..து கா..ப்..பாத்.துங்.களே.ன்” கடித்திருந்த பற்களின் நடுவே மாட்டிய வார்த்தைகள் சிக்கி சிதறி வந்து விழுந்தது...

சத்யனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.... இவளைத் தூக்கி ஓரமாக போட்டுவிட்டு போலீஸ்க்கு தகவல் தெரிவித்து கிளம்பிவிடலாமா என்று யோசித்தான்... ஆனால் அந்த பெண்ணின் முனங்கலான வார்த்தைகள் மனதை கிழித்தது... இன்று தனது அம்மாவின் நினைவுநாள் என்பதும் அவன் எண்ணத்திற்கு தடைபோட்டது...

அவள் முகத்தையே சிறிதுநேரம் உற்றுப் பார்த்தவன்... காருக்கடியில் இருந்து தூக்கி காரின் பின் இருக்கையில் கிடத்தினான்..... அப்புறம் ஏதோ தோன்ற காருக்கு வெளியே வந்து தனது மொபைலை எடுத்து எஸ்டேட் மேனேஜரும் இவனது நண்பனுமான தினகரனுக்கு போன் செய்தான்... மூன்று ரிங்கில் தினகரனின் குரல் “ என்ன சத்யா எங்க வந்துக்கிட்டு இருக்க?” என்றான்

“ தினா நான் ஆனைமலையை தாண்டி வந்துகிட்டு இருக்கேன்... ஆனா வர்ற வழியில ஒரு சின்னப் பிரச்சனை தினா” என்று சத்யன்

உடனே பதட்டமானான் தினா “ என்ன ஆச்சு சத்யா கார்ல யாரையாவது டச்ப் பண்ணிட்டியா?”....

“ இல்லடா..... என் காரைத்தான் ஒரு பொண்ணு டச்ப் பண்ணிட்டா....” என்றவன் நடந்தவற்றை ஒன்று விடாமல் தினாவிடம் கூறிவிட்டு “அந்த காரும் மின்னலா பறந்துடுச்சு .. இப்போ நான் மாட்டிகிட்டு வழியில நிக்கிறேன் இப்போ என்ன பண்றது தினா? ” என்று அவனிடம் யோசனை கேட்டான்

“ இப்போ போலீஸ்க்கு தகவல் சொன்னா நம்மளையே நுங்கெடுத்துடுவானுங்க” என்ற தினா சற்று நேர அமைதிக்குப் பின் “ சத்யா உன் மனசுக்கு என்ன தோனுது... எதுக்கு தேவையில்லாத ரிஸ்க் அப்படியே விட்டுட்டு வந்துறியா?” என்று கேட்க....

“ இல்ல முடியாது தினா ...... இன்னிக்கு அம்மாவோட நினைவு நாள்... இந்த நாளில் ஒரு பொண்ணை இப்படி விட்டுட்டு என்னால வரமுடியாது” என்று சத்யன் உறுதியாக கூறினான்

“ சரி சத்யா அப்போ நான் சொல்ற மாதிரி செய்... அந்த பொண்ணுக்கு பலத்த காயம்... அப்புறம் தலையில ஏதாவது காயம் இருக்கா?” என கேட்க..

“ ம்ஹூம் அதெல்லாம் இல்லடா... சின்னச்சின்னதா நிறைய அடி... ரத்தக்காயம் அதிகமா இருக்கு ... மூச்சு சீரா வருது... முனங்கலா ஏதோ பேசிகிட்டே இருக்கா ” என்று சத்யன் தெளிவுபடுத்த...

“ ஓகே அப்போ நீ அப்படியே நம்ம எஸ்டேட் பங்களாவுக்குகொண்டு வந்துடு.... நான் எனக்குத் தெரிஞ்ச லேடி டாக்டர் ஒருத்தரை கூட்டிட்டு வந்து ரெடியா அங்க இருக்கேன்... டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பார்த்துகிட்டு அப்புறமா போலீஸ்கிட்ட போகலாம்... நீ சீக்கிரமா வந்துசேரு” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான்...

சத்யன் காரின் டேஷ்போர்டை திறந்து பெரிய டர்க்கி டவலை எடுத்து பின் சீட்டுக்கு வந்து அந்த பெண்ணின் மீது போர்த்தினான்... பிறகு முன் இருக்கைக்கு வந்து காரை கிளப்பினான்.... அவனது பங்களாவை நெருங்கும்போதே அங்கே மற்றொரு காரும் நின்றிருந்தது...


சத்யன் தன் காரை நிறுத்திவிட்டு இறங்கி பின் சீட்டின் கதவை திறந்து அந்த பெண்ணை டவலோடு சேர்த்து சுருட்டி தூக்கினான்... அவளை தூக்கியபடி சத்யன் திரும்பவும் தினா அருகே வரவும் சரியாக இருந்தது.... வந்தவன் அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்துவிட்டு... “ ச்சே சின்னப் பொண்ணு இருக்கா இவளைப் போய் இப்படி நாசம் பண்ணிட்டானுங்களே.... சரி நீ முதல்ல இருக்குற கெஸ்ட் ரூம்ல கொண்டுபோய் படுக்க வை.... டாக்டர் காரில்தான் இருக்காங்க நான் கூட்டிட்டு வர்றேன் ” என்ற சத்யன் பின்னால் நடந்தபடி சொன்னான்..

சத்யன் தினாவைப் பார்த்து தலையசைத்து விட்டு... அந்த பெண்ணை சுமந்துகொண்டு தனது பங்களாவுக்குள் போனான்... கெஸ்ட் ரூமை தினா தயாராக திறந்து வைத்திருக்க.. அங்கிருந்த கட்டிலில் அந்தப்பெண்ணை கிடத்தி டவலை எடுத்துவிட்டு ஒரு போர்வையால் கழுத்து வரை மூடினான்....

லேடி டாக்டருடன் உள்ளே வந்தான் தினா.... அவன் அழைத்துவந்த டாக்டர் மிலிட்டரியில் பணிசெய்த தனது கணவரை ஒரு போரில் இழந்து.. குழந்தைகளும் எதுவுமில்லை என்பதால் ... டாப்சிலிப்பின் மலைவாழ் மக்கள் மற்றும் எஸ்டேட் தொழிலாளர்களுக்காகவும் இருபத்திநாலு மணிநேரமும் சேவை புரியும் முப்பத்தியிரண்டு வயது மதிக்கத்தக்க பெண் டாக்டர் பிரேமாலதா... சத்யனுக்கும் ஓரளவுக்கு பழக்கமானவர் தான்.... சத்யன் டாக்டரைப் பார்த்து நட்புடன் தலையசைத்தான்

கட்டிலை நெருங்கிய தினா “ இந்த பெண்தான் டாக்டர்.... சத்யனோட காருக்கு முன்னாடி போன காரிலிருந்து எகிறி விழுந்திருக்கா... இன்னைக்கு இவன் அம்மாவோட நினைவுநாள்... அதனால் இந்த நிலைமையில் ஒரு பெண்ணை விட்டுட்டு வர மனசில்லாம தூக்கிட்டு வந்துட்டான்” என்று நிலைமையை சுருக்கமாக சொன்னான்...

டாக்டர் தலையசைத்து அவன் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் போதே ... சத்யன் முன்னால் வந்தான் “ அந்த கார்ல நாலஞ்சு பேர் இருந்தாங்க மேடம்... இந்த பொண்ணை ரேப் பண்ணி தூக்கி வீசிட்டாங்கன்னு நெனைக்கிறேன்?” என் யோசனையுடன் வலதுகையால் பின்னங்கழுத்தை தடவியவாறு கூறினான்

காயம்பட்ட பெண்ணின் நாடித்துடிப்பை கணக்கிட்ட டாக்டர் “ பல்ஸ் நார்மலாத்தான் இருக்கு சத்யன் நீங்க சொல்றது எந்தளவுக்கு சரின்னு நான் செக்ப் பண்ணாதான் தெரியும்... ரெண்டுபேரும் வெளிய வெயிட் பண்ணுங்க.. நான் கூப்பிடும்போது வந்தா போதும்” என்றதும் இருவரும் உடனடியாக வெளியேறினர்...

இருவரும் ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்ததும்..... பங்களாவை கவனித்துக்கொண்டு சத்யன் வந்தால் சமையல் பொருப்புகளையும் பார்க்கும் சாமுவேல் இரண்டு கோப்பைகளில் சூடான டீயை எடுத்துவந்து கொடுக்க... இருவரும் வாங்கிக்கொண்டு உறிஞ்சினர்.... டாப்சிலிப் குளிருக்கு இதமாக இருந்தது அந்த மசாலா டீ.... புன்னகையோடு காலி கப்பை சாமுவேலிடம் கொடுத்தனர்....

அந்தப்பெண் ரோட்டிலிருந்து விழுந்த நிமிடத்தில் இருந்து நடந்தவைகளை மறுபடியும் ஒருமுறை விபரமாக தினாவிடம் கூறினான் சத்யன்... கவனமாக கேட்ட தினா “ ஏன் சத்யா..... இந்த பொண்ணை அவனுங்களே தூக்கி வீசியிருந்தால்.... ஏன் கொஞ்சதூரம் போய் காரை நிறுத்தி இறங்கி இவளைப் பார்க்கனும்?... எனக்கென்னவோ இந்த பொண்ணுதான் கார்லேருந்து குதிச்சிருக்கனும்னு தோனுது” என்று கூறியதும்...

அவனை வியப்புடன்ப் பார்த்த சத்யன் “ ஆமாம்டா அப்படித்தான் நடந்திருக்கும்.... ஆனா இப்புடிக்கூட முட்டாள் மாதிரி எகிறி குதிப்பாங்களா? ஜஸ்ட் மிஸ்... இல்லேன்னா என் காரோட வீல் ஏறியிருக்கும்... இன்னேரம் அவளும் செத்து என்னையும் ஸ்டேஷன்ல கம்பி எண்ண வச்சிருப்பா” என்று எரிச்சலுடன் கூறினான் சத்யன்


எதுக்கும் அவ மயக்கம் தெளிஞ்சு விவரமா சொன்னால்தான் தெரியும்... ஆனா டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு நாம போலீஸ்க்கு இன்பார்ம் பண்றதுதான் சரி சத்யா.... அதுக்குள்ள அந்தப்பெண் தெளிவாகி ... பேச ஆரம்பிச்சிட்டா நமக்கு சிரமமில்லை போலீஸ் எல்லாத்தையும் பார்த்துக்கும் ” என்றான் தினா...

அப்போது டாக்டர் லதா கதவை திறந்து “ ஒரு பாத்திரத்தில் வெண்ணீர் வேனும் சத்யன்” என்று கேட்க... சற்றுநேரம் வெண்ணீர் தயார் செய்து சாமுவேல் எடுத்துச்சென்று கொடுக்க.. அவனை அறை வாயிலேயே நிறுத்திவிட்டு லதாவே பாத்திரத்தை வாங்கிக்கொண்டு உள்ளே போனாள்...

இவர்கள் இருவரும் எஸ்டேட்டைப் பத்தி பேசிக்கொண்டிருக்க... வெகுநேரம் கழித்து அறைக்கதவை திறந்து வெளியே வந்த டாக்டர் அவர்களை கையசைத்து உள்ளே அழைத்தாள்.. இருவரும் எழுந்து உள்ளே போக ... அவர்களுடன் அறையின் மறு மூலைக்கு போய் டாக்டர் சத்யனைப் பார்த்து மெல்லிய குரலில் ஆரம்பித்தார்......

“ உங்களோட கெஸ் தவறு சத்யன் இந்தப்பெண் இன்னும் கற்பழிக்கப்படலை.... ஆனா அதற்கான முயற்சிகள் பலமாக நடந்திருக்கு... இவளும் கடைசி நிமிடம் வரை அதை கடுமையா எதிர்த்திருக்கா... அதனால ஏற்ப்பட்ட காயங்கள் தான் இவ்வளவும்... மேபீ மூன்று அல்லது நாலு பேர் சேர்ந்து ரேப் பண்ண ட்ரைப் பண்ணிருக்காங்க... உடல் முழுவதும் மோசமான பல் மற்றும் நகக்குறிகள்... எல்லாத்துக்கும் மருந்து போட்டிருக்கேன்.” என்ற டாக்டரிடம்...

“ ஏதாவது பேசினாளா டாக்டர்? தான் யார் என்ன என்ற விபரங்கள் ஏதாவது சொன்னாளா?” என்று சத்யன் கேட்க...

“ ம்ஹூம் சத்யன்... எந்த விபரமும் சொல்லத் தெரியலை... நினைவு இருக்கு ஆனா எதையும் தெளிவா சொல்ல முடியலை... அவள் வாயிலிருந்து ‘ என்னை காப்பாத்துங்க’ என்ற வார்த்தையை தவிர வேற எதுவுமே வரலை.. இன்னும் அந்த சதிகாரர்களின் பிடியில் தான் இருக்கிறோம்னு நெனைக்கிறா... நல்லா தூங்கினாள்னா ஓரளவுக்கு தெளிவாயிடுவா.... உடல் வலிகள் குறையவும் தூக்கத்திற்கும் ஊசி போட்டிருக்கேன்.. நான் நாளை காலை பத்து மணிக்கு வர்றேன்...... இந்த டிரஸ் மொத்தம் பிளட்டா இருக்கு... அதனால டிரஸ் எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிட்டு ஷெல்பில் இருந்த ஒரு கைலியை கட்டிவிட்டு பெட்சீட்டால மூடியிருக்கேன்... காலையில அவள் தூக்கம் களைந்தால் மாத்திக்க ஏதாவது டிரஸ் குடுங்க... குடிக்க பால் ஏதாவது கொடுங்க... நான் வந்ததும் மற்ற விஷயங்களை விசாரிச்சு அவளை உரியவர்களிடம் ஒப்படைக்கலாம்” என்ற டாக்டர் சில மாத்திரைகளை சத்யனிடம் கொடுத்து “ காலையிலே எழுந்து நினைவு திரும்பாம ஏதாவது கத்தி கலாட்டா பண்ணினாள்னா இந்த மாத்திரையில் இரண்டை கொடுத்து மறுபடியும் தூங்க வைங்க... அதுக்குள்ள நான் வந்துடுவேன்” என்று தெளிவாக கூறிவிட்டு பிரேமலதா கிளம்பினாள்

தினா லதாவை வழியனுப்ப வெளியே போய்விட... சத்யன் யோசனையுடன் கட்டிலருகே வந்தான்.. முகத்தில் இருந்த கீறல்களுக்கு மருந்து தடவப்பட்டிருந்தது... கிழிந்த உதடுகளில் ரத்தம் துடைக்கப்பட்டு வீங்கியிருந்தன... நனைந்திருந்த கூந்தல் ஈரம் போக துடைக்கப்பட்டு இரண்டாகப் பிரித்து இரட்டைப் பின்னலாக போடப்பட்டிருந்தது... அவ்வளவு காயத்திலும் முகம் அழகாக இருந்தது.. கழுத்துவரை மூடியிருந்த போர்வையை லேசாக நீக்கிப் பார்த்தான்... மார்புவரை இருந்த கைலி முடிச்சு போடப்பட்டிருக்க.. அதற்கு மேல் இருந்த வென்மையான இடத்தில் எல்லாம் சிவப்பு சிவப்பாக ஏகப்பட்ட புள்ளிகள் கோடுகள்... போர்வையை இழுத்து மூடினான்... கழட்டப்பட்ட அவளது உடை.. ரத்தத்தில் நனைந்த காட்டன் பஞ்சுகள் எல்லாம் மொத்தமாக சுற்றி ஒரு மூலையில் கிடந்தது...

சத்யனுக்கு ஆத்திரமாக வந்தது... ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை புணருவது மகா அயோக்கியத்தனம் .. அவள் எப்பேர்ப்பட்ட பேரழகியாக இருந்தாலும் சரிதான்... அவளாக சம்மதித்து படுக்கைக்கு வரவேண்டும்.. அதுதான் சொர்க்கம்... இப்படி கசக்கி நுகர்வதால் என்ன இன்பம் கிடைத்துவிடப் போகிறது...

இந்தப் பெண் மீதும் சத்யனுக்கு கோபம் வந்தது... இப்படி உயிருடன் போராடி இவள் கற்பை காப்பாற்றிக்கொண்டு என்ன செய்யப் போகிறாள்? கற்புக்கரசின்னு அவார்டா தரப்போறாங்க.. சரியான முட்டாள் பெண்’ என்று நினைத்தபடி வெளியே வந்தான்..


டாக்டர் லதாவை அனுப்பி விட்டு வந்து சோபாவில் அமர்ந்திருந்த தினாவின் அருகில் போய் அமர்ந்தான் சத்யன் “ தினா இந்த பொண்ணுக்கு ஏதாவது டிரஸ் வேனும்... என்ன செய்யலாம்?” என்று கேட்டான்...

தூக்கம் நிறைந்த கண்களை கசக்கியபடி “ சாமுவேல் கிட்ட சொல்லி அனுப்பியிருக்கேன்.. அவர் ஒய்ப் நைட்டி இருந்தா எடுத்துட்டு வர்றேன்னு போயிருக்கார்” என்ற தினா “ சத்யா எனக்கு தூக்கம் சமாளிக்க முடியலை.. நான் இந்த சோபாவிலேயே தூங்குறேன்... நீ உன் ரூமுக்கு போய் படு .. காலையில அந்தப்பெண் விழிச்சதும் வந்து கூப்பிடுறேன்” என்றான்..

“ சரி தினா... சாமுவையும் இங்கயே படுத்துக்கச் சொல்லு” என்று சத்யன் கூறியதும்.... “ ம்ம் வரட்டும் படுத்துக்க சொல்றேன்” தினா சொல்லும்போதே சாமுவேல் கையில் ஒரு நைட்டியுடன் வந்தார்...

“ இது ஒன்னு தானுங்க கொஞ்சம் சின்னதா இருந்தது” என்றபடி சாமுவேல் நைட்டியை கொடுக்க... அதை வாங்க தினா கைநீட்ட.. சத்யன் அவனுக்கு முன்பே வாங்கிக்கொண்டு அந்தப் பெண் இருந்த அறைக்குப் போனான்...

கதவை சாத்திவிட்டு கட்டிலருகே போய் அவள் பிடரியில் கைவிட்டு தூக்கி நைட்டியை தலை வழியாக மாட்டினான்.. கையை உயர்த்தி நைட்டியின் கைப் பகுதிக்குள் விட முயன்றபோது வலியால் அவள் புருவங்கள் சுருங்கியது.. சத்யன் வலிக்காமல் எப்படி உடையை மாட்டுவது என்று குழம்பி .. பிறகு கொஞ்சநேர வலிதானே என்று அவசரமாக இரண்டு கையையும் நைட்டியினுல் நுழைக்க “ அ....ம்...மா” என்ற தீனமமான முனங்கல் அவளிடமிருந்து வந்தது... அவளுக்காக பரிதாபப்பட்ட படி புரட்டி ஒருக்களித்துவிட்டு மார்புவரை நைட்டியை இறக்கி உள்ளே கைவிட்டு அவள் உடலில் இருந்த கைலியை உருவினான் பிறகு போர்வைக்குள் கைவிட்டு நைட்டியை கால்வரை இழுத்துவிட்டான்..



வெற்றிகரமாக அவளுக்கு நைட்டியை அணிவித்து விட்டு நிமிர்ந்த சத்யனுக்கு வியர்வை சொட்டியது.... அந்த கைலியையும் மூலையில் கிடந்த அவள் உடைகளோடு எறிந்தான் ... கதவை திறந்து “ சாம இங்க வாங்க?” என்று அழைத்து மூலையில் கிடந்தவற்றை எடுத்துச்சென்று குப்பையில் போடுமாறு கூறினான்...

கதவை மூடிவிட்டு வெளியே வந்து “ சாமு நீங்களும் இங்கயே படுத்துக்கங்க” என்றவன் தினாவிடம் திரும்பி “ தினா ஏதாவது முனங்கல் கேட்டா கூட என் மொபைலுக்கு கால் பண்ணு.. உடனே வர்றேன்” என்றுவிட்டு தனது அறைக்குப் போக மாடிப்படிகளில் ஏறினான்....

அறைக்கு வந்து உடைகளை களைந்துவிட்டு,, பாத்ரூமில் ஹீட்டரைப் போட்டு மிதமான வென்னீரில் குளித்தான்... வெறும் ஷாட்ஸ் மட்டும் அணிந்துகொண்டு கட்டில் விழுந்தவன் ‘ இந்த பொண்ணு யாராயிருக்கும்? என்ற சிந்தனையிலேயே உறங்கிப்போனான்...

அதிகாலை சரியாக நாலு நாற்பதுக்கு அவன் மொபைல் அலறி அவனை எழுப்பியது... எடுத்துப் பார்த்தான்.. தினாதான் ... ஆன் செய்து “ என்ன தினா?” என்றான்



No comments:

Post a Comment