Tuesday, December 22, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 8



பவித்ரா வீடு வந்து சேர்ந்த போது..... அவள் முகத்தைப் பார்த்து ஆதிலட்சுமி அதிர்ந்து போனாள்.... சத்யனுக்குத் தான ஏதோ ஆகிவிட்டதோ என்று பதறிய அந்த தாயுள்ளம் பவித்ராவின் கைகளைப் பற்றி “ என்ன பவி முகமெல்லாம் அழுது சிவந்து போயிருக்கு? சத்யன் நல்லாத்தானே இருக்கான்?” என்று முடிந்தவரை பதட்டத்தை அடக்கிக்கொண்டு கேட்டாள் ...

அப்போது தான் தனது நிலையை உணர்ந்தவள் போல அவசரமாக தனது முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டு ... முகத்தில் சந்தோஷத்தை வழிய வரவழைத்தபடி “ அத்தை சத்யா மாமா நல்லாருக்காரு... அவருக்கு ஒன்னுமேயில்லை... நான்தான் ஆட்டோவில் வரும்போது ஏதோ பழைய நினைப்புல கண்ணு கலங்கிட்டேன்...” என்று தன் அத்தைக்கு தைரியம் சொன்னவள் ஆதியின் கையைப்பிடித்து சோபாவில் அமரவைத்து தானும் அருகில் அமர்ந்தாள்

“ அத்தை நான் இப்போ ஒரு சந்தோஷமான செய்தி சொல்லப் போறேன்... மாமாவுக்கும் எனக்கும் கூடிய சீக்கிரமே கல்யாணம் நடக்கப்போகுது... அதைப்பற்றி பேசறதுக்காக நான் இன்னிக்கு நைட் தஞ்சாவூர் போகப்போறேன்” என்று வரவழைத்த புன்னகையுடன் கூறினாள் ...



ஆதிலட்சுமி பவித்ராவை குழப்பத்துடன் பார்த்து “ சத்யன் இன்னும் சரியாகலையே பவி அப்புறம் கல்யாணம் எப்படி?” என்று கேட்க.....

பவித்ரா மெல்ல தலைகுனிந்து “ அத்தை மாமாக்கு சரியாகுற வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது..... இன்னிக்கு மாமாகிட்ட கேட்டேன் சரின்னு சொல்லிருச்சு... எங்களுக்கு கல்யாணம் ஆனதும் மாமா என்ன பிரச்சனைனாலும் நான் தாங்குவேன்... இதுக்கு மேலயும் அவரை இப்படி மெண்டல் ஆஸ்பிட்டல்ல விட்டுவைக்க நான் தயாராயில்லை.... எங்க கல்யாணத்துக்குப் பிறகு மாமாக்கு இப்படி ஒரு நிலை வந்திருந்தா நான் என்னப் பண்ணிருப்பேனோ அதையே இனிமேல் பண்ணுறேன்... எங்க விதி எப்படியோ அப்படியே எல்லாம் நடக்கட்டும்.... அதான் நான் இப்போ ஊருக்குப்போய் அப்பா... மாமா ... ரெண்டு பேர்கிட்டயும் பேச சீக்கிரமா தேதி வைக்க சொல்றேன்..... உங்களுக்கு இதுல சம்மதம் தானே அத்தை?” என்று கவலையாக.... கலவரமாக கேட்டாள்...

ஆதி எதுவும் பேசவில்லை பவித்ராவின் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள் ..... “ பவி எனக்கு இதைவிட சந்தோஷம் இந்த உலகத்திலேயே இல்லம்மா.... நீ கிளம்பி போய் உன் மாமாகிட்ட பேசி சீக்கிரமே தேதி வைக்க சொல்லும்மா.... இந்த சென்னையே நமக்கு வேனாம்... கல்யாணம் ஆனாக் கூட நீங்க ரெண்டுபேரும் அங்கேயே இருங்க ” என்று ஆதியும் சந்தோஷமாக அனுமதி வழங்கினாள்

“ சரி அத்தை நான் ஊருக்குப் போக எல்லாத்தையும் ரெடி பண்றேன்.... முத்து சார்கிட்ட சொல்லிருக்கேன்... நீங்க சாப்பாடு ரெடி பண்ணி வச்சா அவர் தினமும் மாமாவுக்கு எடுத்துப் போவாரு” என்ற தகவலை சொல்லிவிட்டு தனது அறையை நோக்கி சென்றாள்...

அறைக்குள் நுழைந்து கதவை சாத்திவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து சுவற்றில் சாய்ந்தவள் ரவிக்கைகுள் இருந்த அந்த மருந்து சீட்டை எடுத்து விரித்துப் பார்த்தாள்... வீட்டுக்குள் வரும்போது நின்றுபோயிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்தது... அவளின் கையில் நைந்து போயிருந்த அந்த பேப்பரை தன் உதட்டருகில் எடுத்துச்சென்று மிஸஸ் பவித்ரா முத்துகுமார் என்ற எழுத்தில் தன் உதடுகளை அழுத்தினாள்....

சற்றுநேரம் வரை அப்படியே கண்மூடி நின்றிருந்தாள்.... சற்றுமுன்னர் பேசிய ஆதியின் சந்தோஷமான வார்த்தைகள் காதில் ஒலித்தது.... உதட்டோடு ஒற்றிய பேப்பரை எடுத்து கையில் கசக்கியபடி ஷவரை திறந்து அதனடியில் ஆடைகளுடன் நின்றாள்..... தண்ணீர் தலையில் விழுந்து உடலில் வழிந்து கையிலிருந்த கசங்கிய காகிதம் கரைந்து தண்ணீரோடு சேர்ந்து ஓடியது

வெகுநேரம் கழித்து நிர்மலமான மனதுடன் ஈர ஆடைகளை களைந்துவிட்டு ஒரு டவலை உடலில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவள்... வெறும் நைட்டியை மட்டும் அணிந்துகொண்டு கட்டிலில் படுத்துவிட்டாள் ...


உறங்காமல் புரண்டவளை அவளது மொபைல் அழைக்க... எடுத்துப் பார்த்தாள்... முத்துதான் அழைத்திருந்தான்... வெகுநேரம் ஆன் செய்யாமல் அந்த பெயரையேப் பார்த்தவள்.. கடைசியாக கட்டாகிவிடுமோ என்ற நிலையில் ஆன் செய்தவள் “ ஹலோ?” என்றாள்

எதிர்முனையில் முத்துவின் சீறலான மூச்சு இவள் காதில் வந்து மோதியது... சற்றுநேர இறுக்கமான மவுனத்திற்குப் பிறகு “ ஊருக்கு போறதை கன்பார்ம் பண்ணியாச்சா?” என்று கேட்டான்....

“ ம்ம் நைட் போறேன்” என்றவளின் குரல் அவளுக்கே கேட்காது போல் இருந்தது...

கொஞ்சநேரம் அமைதியாக இருந்தவன் “ வழியனுப்ப நான் வரலாமா?” என்றவனின் குரலில் இருந்த வெறுமை... இவள் குரலுக்கும் மாறியது ... “ வாங்க... வரும்போது மதுமிதாவையும் கூட்டிட்டு வாங்க” என்று கூறிவிட்டு போனை கட் செய்தாள்....

மொபைலை தன் நெஞ்சோடு அணைத்த படுத்துகிடந்தவள்... மாலை ஆறு மணிக்கு எழுந்து தனது பொட்டியை எடுத்து உடைகளை அடுக்க ஆரம்பித்தாள்.... இரவு ஏழு மணியளவில் முத்து தன் மகளுடன் ஜீப்பில் வந்தான்....

பவித்ரா பெட்டியுடன் வெளியே வரவும் மதுமிதா அவளிடம் தாவி ஏற ... கையிலிருந்த பெட்டியை கீழே வைத்துவிட்டு மதுவை தூக்கிக்கொண்டாள் பவித்ரா....

ஆதி முத்துவுக்கு காபி எடுத்து வந்து கொடுக்க சிறு புன்னகையுடன் காபியை வாங்கிக்கொண்டான் முத்து .... பவித்ரா மதுவை இடுப்பில் சுமந்தபடி சமையலறைக்கு சென்று பாலில் காம்ப்ளான் கலந்து ஆற்றிவிட்டு மதுவுக்கு புகட்டியபடி வெளியே வர....

மதுவை காம்ப்ளான் குடிக்க வைக்க போராட வேண்டும்.. ஆனால் இப்போது பவித்ராவின் இடுப்பில் ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டே அருந்தும் மகளைப் பார்த்து முத்துவுக்கு சந்தோஷம் வரவில்லை.... மாறாக.. இது நிலைக்காதே கண்ணம்மா என்று மகளுக்கு சொல்வதுபோல் தனக்கும் சேர்த்து மனதுக்குள் சொல்லிக்கொண்டான்

பவித்ரா மதுவை தூக்கிக்கொள்ள.... முத்து அவளுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து ஜீப்பில் ஏறினார்கள்...

ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரயிலுக்காக காத்திருக்கும் தருனத்தில் பவித்ரா மதுவை அணைத்த பிடியை விடாமல் அமர்ந்திருந்தாள்.... அவளுக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்தான் முத்து

மதுவின் தலைமுடியை ஒதுக்கியவாறு “ நான் இதோடு சென்னை வரமாட்டேன்.... நீங்க எவ்வளவோ உதவி பண்ணிருக்கீங... கடைசியாக இன்னும் சில உதவிகள் செய்யனும்” என்றவள் நிமிர்ந்து முத்துவைப் பார்த்தாள்...

அவள் பார்வை அவனிடம் கெஞ்சியது... ‘ சரி சொல்லு செய்றேன்’ என்பது போல் தலையசைத்தான் முத்து

“ இன்னும் கொஞ்ச நாள்ல அப்பாவும் மாமாவும் வருவாங்க.. சத்யன் மாமாவை ஆஸ்பிட்டல்ல இருந்து கூட்டிட்டு வர ஹெல்ப் பண்ணுங்க... அப்புறம் வீட்டுல இருக்கு எல்லா திங்க்ஸையும் ஏதாவது வண்டி பிடிச்சு ஏத்தி அனுப்பிடுங்க... அப்புறம் இந்த பிளாட்டை யாருக்காவது லீசுக்கோ ரென்ட்க்கோ விட்டுடுங்க...” என்று கூறிவிட்டு பவித்ரா அவனைப் பார்க்க...

அவன் பார்வையோ “ இன்னும் ஏதாவது இருக்கா?” என்று கேட்டது...


அப்போது ரயில் வரும் அறிவிப்பு வெளியாக.... பவித்ரா எழுந்துகொண்டாள்.... முத்துவின் பார்வை அவளைவிட்டு இம்மிகூட அசையவில்லை... இதோ முடியப்போகிறது எனது காதல் சரித்திரம் என்பதுபோல் அவசர அவசரமாக அவளை பார்வையால் பருகி இதயம் முழுவதும் வழிய வழிய நிரப்பினான்...

அவன் பார்வை புரிந்து நிமிரவில்லை பவித்ரா... முத்து நீண்டதொரு பெருமூச்சுடன் அவள் பெட்டியை கையிலெடுத்துக்கொண்டு லேடிஸ் கம்பார்ட்மெண்ட் நோக்கி நடக்க... பவித்ரா மதுவுடன் அவனை தொடர்ந்தாள்...

கம்பார்ட்மெண்ட் உள்ளே ஏறி பெட்டியை மேலே வைத்துவிட்டு ஜன்னல் வழியாக பவித்ராவின் கைப்பையை வாங்கி காலியாக இருந்த ஒற்றை இருக்கையில் வைத்துவிட்டு கீழே இறங்கி மகளை வாங்கினான்....

அதுவரை பவித்ராவுடன் தானும் தனது அப்பாவும் ஊருக்குப் போகிறோம் என்று எண்ணியிருந்த மதுமிதா.... பவித்ரா மட்டும் ரயிலில் ஏறியதும் வீறிட்டு கத்த ஆரம்பித்தாள்... முத்துவால் தனது மகள் மாதிரி வாய்விட்டு கத்தமுடியவில்லை அவ்வளவு தான்.. மற்றபடி அவன் மனமும் குமுறி கொந்தளித்தது ....

தோளோடு மகளை அணைத்து எவ்வளவோ சமாதானம் செய்தும் முடியாமல்... லேசாக கலங்க ஆரம்பித்த கண்களுடன் ‘ எங்களுக்கு என்ன வழி சொல்லப் போற?” என்பதுபோல் பவித்ராவைப் பார்த்தான்

பவித்ரா கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்துகொண்டாள்.... ‘ எனக்கே நான் எந்த திசையில் போகனும்னு தெரியலை... இதில் உங்கள் இருவருக்கும் நான் என்ன பதில் சொல்வது?’ என்ற அவளது மனக்குமுறல் கண்ணீராய் விழியோரம் வழிய....

இவள் அழுவதைப்பார்த்து மதுமிதா தனது அழுகையை நிறுத்திவிட்டு... கம்பிகளுக்கிடையே கையைவிட்டு பவித்ராவின் கண்ணீரை துடைத்தது... துடைத்த விரல்களை உதட்டில் ஒற்றிக்கொண்டாள்...

ரயில் கிளம்பும் அறிவிப்பை தொடர்ந்து ரயில் மெல்ல நகர ஆரம்பிக்க பவித்ரா மதுமிதாவின் கையை விட்டுவிட்டு ஜன்னல் கம்பியில் தனது முகத்தைப் பதித்தாள்.... முத்துவால் அதற்குமேல் தாங்குமுடியாமல் கண்களை மூடிக்கொள்ள ... மூடிய விழிகளில் உருண்ட நீரை துடைக்கும் ஆவலில் பவித்ராவின் கரம் அவசரமாக வெளியே நீண்டது..... முத்துவின் கண்ணீரை அவள் விரல்கள் தொடுமுன் ரயில் நகர்ந்துவிட்து.....

திடீரென வந்த ஆவேசத்துடன் ஜன்னல் கம்பிகளைப் பற்றிக்கொண்டு முடிந்தவரை எக்கிப்பார்த்து முத்துவை பார்க்க முயன்றாள்... ரயில் நகர்ந்து அவன் உருவம் மெல்ல தேய்ந்த மறைந்தது....

தொப்பென்று சீட்டில் சாய்ந்தவளை எதிர் சீட்டு வயசானப் பெண்மணி புன்னகையுடன் பார்த்து “ உன் ஆம்படையானுக்கு உன்மேல ரொம்ப பாசம் போலருக்கு... பொம்மனாட்டி மாதிரி அழறானே.... இந்த காலத்துல யார் இம்புட்டு பாசமா இருக்காங்க” என்றாள்... பவித்ரா அந்தப் பெண்ணுக்கு எந்த பதிலும் கூறாமல் கண்களை திறக்க பயந்து மூடியபடி அப்படியே இருந்தாள்....






“ பூவாய் இருந்த என் மனதை...

“ உன் கண்ணீரால் புரட்டிவிட்டு...

“ போகும் என்னவனே!

“ நான் என்றோ பொசுங்கிப் போனேன்...

“ உன் புன்னகையில்!

“ புன்னகையோ உன் கண்ணீரோ...

“ இரண்டுமே எனக்கு மட்டும்...

“ சொந்தமாக வேண்டும்!

தனது அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்த மான்சிக்கு இருக்கும் சூழ்நிலையில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்றே புரியவில்லை... சத்யனை பவித்ராவிடமிருந்து பிரித்து தன்னையே சுற்ற வைக்க என்ன வழி? என் அளவுக்கு அழகிதான் பவித்ரா.. அப்படியிருக்க அவளை மறந்து என் பின்னால் சுற்றவைக்க முடியுமா?

மான்சி ஒன்றும் புரியாமல் தலையை கையில் தாங்கி அமர்ந்திருந்தாள்... ஏதோவொரு சினிமா பாடலை முனுமுனுத்தபடி அறைக்குள் வந்த மோகனா மான்சி தலையை கையில் தாங்கி அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்து வேகமாக அவளருகில் வந்து அமர்ந்து “ என்னடி இப்படி உட்கார்ந்திருக்க?” என்று கேட்க...

அவளை நிமிர்ந்து பார்த்த மான்சி ... “ என் மாமா எனக்கு மட்டும்தான்னு இருந்ததுக்கு இன்னொருத்தி என்கூட பங்கு போட வந்துட்டா மோகி” என்று ஆத்திரமாய் கூற...

“ அடக்கடவுளே யாருடி அந்த சூர்ப்பணகை?” என்று கேட்டாள் மோகனா...

மான்சி பவித்ராவை சந்தித்தது அதன்பிறகு அவர்களுக்குள் நடந்த உரையாடல்கள்... சத்யனுக்கு நடந்த சம்பவங்கள் ... முத்துவின் உதவி.... சத்யனின் தற்போதைய நிலைமை... என தனக்குத் தெரிந்தது அத்தனையையும் மோகனாவிடம் சொன்னாள்...

“ எங்க குடும்பத்துக்கு பரம எதிரியான அந்த ஜானகியோட மகள்தான் என்னோட வாழ்க்கைக்கும் எதிரி.... எனக்கு வர்ற ஆத்திரத்தில் அம்மாவையும் மகளையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு கூட போயிடுவேன்... ஆனா என் மாமாவை இழக்க நேரிடுமே என்ற பயம்தான் என்னை பிடிச்சு நிறுத்தி வச்சிருக்கு... இப்போ சொல்லுடி என் பிரச்சனைக்கு ஏதாவது வழியிருந்தா?” என்று மான்சி கேட்க...

மோகனா அமைதியாக யோசனையுடன் அமர்ந்திருந்தாள்..... “ அந்த பொண்ணு சைடு ஏதாவது வீக்கா இருந்தா கூட பரவாயில்லை... அவளும் பிறந்ததிலிருந்து சத்யனை நெனைச்சு வாழுறான்னு சொல்ற... அதோடு ரெண்டு பேமிலி சப்போர்ட்டும் அவளுக்கு இருக்கு... சத்யனும் அவளை காதலிக்கிறார் எனும்போது உன் சைடு பயங்கர வீக்கா இருக்கே மான்சி... சரி சத்யனை குணப்படுத்தி உன் காதலை சொல்லனும்னா கூட அவருதான் பவித்ராவை சின்ன வயசுலேருந்தே லவ் பண்றாரே... அப்புறம் அவளை விட்டுட்டு உன்னை காதலிப்பாருன்னு நாம பத்து பர்ஸன்ட் கூட நம்பமுடியாது..... ம்ஹூம் எனக்கு எதுவுமே தோனலையே மான்சி..... உன் பானியில் சத்யனை கடத்திக்கிட்டு போய்தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும் போலருக்கு ” என்று மோகனா குழப்பத்துடன் சொல்லி முடிக்க .....

மான்சி யோசனையுடன் மோகனாவைப் பார்த்து “ என் சைடு வீக்கா இருக்குன்னா சொல்ற மோகி?” என்று அவளை கூர்மையுடன் கேட்டுவிட்டு.... “ அந்த பவித்ரா இதுவரை கொடுக்காத ஒன்றை நான் கொடுத்து என் மாமானை என் காலடியில் வீழ்த்தி காட்டட்டுமா மோகி?” என்று குரலில் உறுதியுடன் பேசியவளை பயத்துடன் பார்த்த மோகனா....

“ என்னடிப் பண்ணப்போற” என்று கலவரத்துடன் கேட்டாள்...

“ ம்.............. என் மாமனை கற்பழிக்கப் போறேன்... போடி இவளே ... கொஞ்சம் பொறுத்திருந்து பாரு புரியும்... ஆனா இந்த உலகமே என்னை ஒதுக்கினாலும் எதிர்த்தாலும்... நான் சத்யனை விட்டுக் கொடுக்க முடியாது மோகி” என்று உறுதியாக கூறிவிட்டு எழுந்து பாத்ரூம் பக்கமாக போனாள்....

மோகனா அவளை குழப்பத்துடன் பார்த்து “ எது எப்படியே உன் வாழ்க்கையில ஒரு நல்லது நடந்து சத்யனும் நீயும் ஒன்னா ஆனா சரி..... நான் சாப்பிடப் போறேன் நீயும் சீக்கிரம் வா” என்று சொல்லிவிட்டுப் போனாள்.....

அன்று மதிய உணவுக்குப் பிறகு நோயாளிகளின் நோய்களுக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து அட்டவனை தயார் செய்யு பணியே சரியாக இருக்க... மான்சி கொஞ்சநேரம் தனது பிரச்சனையை மறந்து வேலையில் கவனம் செலுத்தினாள்...

சத்யன் ஒன்றிரண்டு முறை வந்து வார்டன் எடுத்துவந்து கொடுத்த காபி கப்புகளை டாக்டர்களுக்கு கொடுப்பது.... ஏதாவது நோயாளிகளின் சாட்டுகளை எடுத்துச்சென்று அந்தந்த பிரிவுகளில் கொடுப்பது என்று சிறுசிறு உதவிகள் செய்துகொண்டு அங்கேயே சுற்றினான்... மான்சியை அவன்ப் பார்க்கும்போதெல்லாம் சினேகமாய் புன்னகைக்க... மான்சி தரப்பிலிருந்து வந்த பதில் புன்னகை காதலோடு வந்தது... 

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மனநோயாளி ஆனவர்கள் பிரிவில் மறுநாள் ட்ரீட்மெண்ட்க்கு ஒதுக்கப்பட.... மான்சி தலைமை வார்டனை சந்தித்து சத்யன் முரட்டுத்தனமான மனநோயாளி அல்லாத பட்சத்தில் தனக்கு உதவியாக அவன் தங்களுடன் பகல் நேரத்தில் இருக்க அனுமதி கேட்டாள்...

சத்யன் ஒழுங்கானவன் என்பதால்.... சில சில்லறை வேலைகளுக்கு நாள்பட்ட நல்ல நிலைமையில் இருக்கும் நோயாளிகளை பயன்படுத்துவது அங்கே வழக்கம் தான் என்பதால் அவரும் அனுமதி வழங்கினார்...

சத்யன் மான்சி சொல்லும் உதவிகளை செய்துகொண்டு அவளுடனேயே சுற்றினான்.... கிட்டத்தட்ட நான்கு நாட்கள் எய்ட்ஸ் நோயாளிகள் பிரிவிலேயே அலுவல் சரியாக இருந்தது... சத்யனுக்கு மான்சி தனக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லாவற்றுக்கும் கூடவே அழைத்துச்செல்வது ரொம்ப பிடித்து போனது

அவளை கவனமாக பார்த்துக்கொள்வது தனது கடமை என்பது போல் கூடவே இருந்தான்... ஒரு வார்டுக்கு இரண்டு டாக்டர்கள் என்று ஒதுக்கப்பட்டதால் மோகனாவும் மான்சியும் ட்ரீட்மெண்ட் செய்த வார்டில் சத்யன் உடனிருந்தது மற்றவர்களின் பார்வைக்கு தவறாக தெரியாமல் போனது...

மான்சியுடன் இருக்கும் ஜோரில் மதிய உணவு எடுத்துவரும் முத்துவிடம் கூட பேச நேரமில்லாமல் போனது சத்யனுக்கு... அவசர அவசரமாக உணவை உண்டுவிட்டு எனக்கு வேலையிருக்கு என்று ஓடும் நண்பனை சரியாக கவனிக்கும் மனநிலையிலும் முத்து இல்லை....

அவன் சிந்தனைகளை கொன்றுவிட்டு சென்றவளின் தடம் தேடியே முத்துவின் நினைவுகள் அலைந்தது.... முத்துவின் புன்னகை பவித்ராவுடனேயே ரயிலேறி சென்றுவிட்டிருந்தது

தினமும் டாக்டர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டது... தங்குவதற்காக நிறைய குடில்கள் இருந்தாலும்... ஆண் டாக்டர்கள்.. பெண் டாக்டர்கள் என நான்கு நான்கு பேராக தனித்தனி குடில்களில் தங்கிக்கொண்டனர்...

அன்று காலை மான்சி எய்ட்ஸ் நோயாளிகளின் உடல்நிலை குறித்த பரிசோதனைகளுக்காக ஒவ்வொருவராக பார்த்துக்கொண்டு வர... அவள் தோளில் உரிமையுடன் கைவைத்து திருப்பிய சத்யன் தன் கையிலிருந்த பச்சைநிற முக உரையை அவள் முகத்தில் வைத்து பின் பக்கமாக இழுத்து கட்டியபடி “ இன்னிக்கு இதை போடாமலேயே வந்துட்டீங்க” என்றான்....

அவனது அக்கரை மான்சியை லேசாக அசைத்துப் பார்த்தது... திரும்பி மோகனாவைப் பார்த்தாள்... அவளும் இவர்களை தான் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்

எல்லோருக்கும் எழுதி கொடுத்த மருந்து மாத்திரைகளை நடக்க முடிந்தவர்கள் போய் வாங்கிக்கொள்ள... முடியாதவர்களுக்கு சத்யன் சென்று வாங்கி வந்து கொடுத்தான்....

அன்று மதிய உணவுக்குப் பிறகு ஓய்வாக அமர்ந்தார்கள்... வெளியே தூரலாய் ஆரம்பித்த சாரல் மழை பெரும் இடியுடன் கூடிய மழையாக கொட்ட ஆரம்பித்தது

மான்சி சத்யனை பச்சை நிற ஸ்கீரின் தடுப்புக்குப் பின்னால் அழைத்துச்சென்று.. அவனை அங்கிருந்த பெஞ்சில் படுக்கச் சொல்லி... இடுப்பிலிருந்த பேன்ட்டை இறக்கிவிட்டு ஒரு ஊசியை இடுப்பில் குத்த... சத்யன் ஆவென்று கத்தியபடி எழுந்து அமர்ந்தான்... கடுகடுத்த புட்டத்தை கையால் தேய்த்தபடி “ இப்போ எனக்கு எதுக்கு ஊசி போட்டீங்க?” என்று கோபமாக கேட்டான்..

மான்சி அவனை நெருங்கி நின்று அவன் முகத்தை தன் கையால் தாங்கி “ எல்லா பேஷன்ட்டையும் தொட்டு தூக்கி மருந்தெல்லாம் குடுக்குறேல்ல... உனக்கு எதுவும் இன்பெக்ஷன் பரவாமல் இருக்க தடுப்பூசி போட்டேன்.. அவ்வளவு தான்”

“ அப்போ நீயும் தானே எல்லாரையும் தொடுற... நீ ஊசி போட்டுக்களையா?” என்ற சத்யன் இத்தனை நாளாக மான்சியை அழைத்த பன்மையில் இருந்து ஒருமைக்கு மாறியிருந்தான்....
“ அதெல்லாம் நாங்க வரும்போதே போட்டுகிட்டு தான் வருவோம்” என்றவள் குனிந்து சத்யனின் நெற்றியில் தனது உதடுகளை உரிமையோடு பதித்தாள்... சத்யன் மான்சி இருவரின் கண்களும் நேருக்குநேர் சந்தித்தன.. சத்யன் தெளிவில்லாத தனது பார்வையை கீழே தாழ்த்திக் கொள்ள....

“ நான் உன்னை கிஸ் பண்ணேனே பதிலுக்கு எனக்கு நீ கிஸ் பண்ண மாட்டியா?” என்று தனது முத்தத்துக்கு பதில் கேட்டவளை நோக்கி தனது உதடுகளை குவித்தபடி நெருங்கிய சத்யனை தடுத்தவள் “ எனக்கு நெத்தில வேண்டாம்... இங்கே தான் வேணும்” என்று தனது உதட்டில் விரல் வைத்து கிறக்கமாக கேட்டாள்....

சத்யன் மான்சியை திகைப்புடன் பார்த்து “அங்கேயே குடுக்கனும்?” என்று கேட்க..

ஆமாம் என்பதுபோல் தலையசைத்த மான்சி “ எப்படின்னு நான் பர்ஸ்ட் கத்துத்தறேன்... அப்புறமா நீ குடு என்றவள் தன் கைகளில் ஏந்தியிருந்த அவன் முகத்தை நோக்கி குனிந்து அவனின் முரட்டு உதட்டோடு தனது மென்மையான இதழ்களை அழுத்தி பதியவைத்து முத்தமிட்டவள் அங்கிருந்து தனது உதட்டை விலக்கி கொள்ளாமல் சத்யனின் கீழுதட்டை கவ்வி இழுத்து உள் வாங்கி சுவைக்க....

அதுவரை கண்கள் விரித்தபடி மான்சியைப் பார்த்தவன்... தனது உதடுகள் அவளிடம் சிறைப்பட்டு அவளின் ஜீவரசம் போன்ற உமிழ்நீர் இவன் வாய்க்கு பரிமாறப்பட்டதும் கண்கள் சொரு மயங்கியவன் போல் தலை துவள அவள் இடுப்பை தன் கைகளால் வளைத்துக்கொண்டான்...

சத்யனுக்கு கிடைக்கும் முதல் இதழ் முத்தம்.... மான்சியின் வாய்க்குள் வந்த மணம் அவனை பித்தாக்க... தேனாய் இனித்த அவளின் உமிழ் நீர்... அவனை முற்றிலும் வீழ்த்தியது

மான்சி தன் ஆசை காதலனுக்கு கொடுக்கும் முதல் முத்தம்... ஆசை ஆசையாய் சுவைத்தாள் சத்யனின் உதடுகளை.... தனது நாக்கால் அவன் நாக்கை நலம் விசாரித்தாள்... முத்தத்தில் புதுமை எதுவும் இல்லையென்றாலும்... காதலர்களுக்கிடையே பரிமாறிக்கொள்ளப்படும் முதல் முத்தத்திற்கு இருக்கும் சக்தி வேற எதற்கும் இல்லை...

மான்சி மெல்ல நிதானித்து தனது இடுப்பிலிருந்த அவன் கைகளை மெல்ல விலக்கிவிட்டு அவனைவிட்டு நகர.... சத்யன் அவளை நகரவிடாமல் இடுப்பை வளைத்து தனது முகத்தை அவள் வயிற்றில் பதித்துக் கொண்டான்....

மான்சியின் மனம் இறக்கை கட்டிப் பறக்க விரல்களால் அவன் தலைமுடியை கோதியபடி “ என்னாச்சு சத்யா? ... என் இடுப்பை விடுங்க எனக்கு வேலையிருக்கு” என்று கிசுகிசுப்பாக கூற...

அவள் வயிற்றில் இருந்த முகத்தை எடுக்காமலேயே முடியாது என்பதுபோல் தலையசைத்தவனை மேலும் தன் வயிற்றோடு இறுக்கிக்கொண்ட மான்சி வளைந்து குனிந்து அவன் காதருகே தன் உதடுகளை வைத்து....

“ அப்போ என்னோட ரூமுக்குப் போயிடலாமா? அங்கே போய் இதேபோல முத்தம் நிறைய தர்றேன்” என்று சிறு பிள்ளைக்கு மிட்டாய் ஆசை காட்டி பள்ளிக்கு அழைத்துச்செல்லும் தாயைப்போல... தன் காதலனுக்கு முத்த ஆசையை காட்டி அழைத்தாள் பள்ளியறைக்கு.....

சத்யன் உடனே எழுந்து நின்று “ இதேபோல முத்தம் குடுப்பியா?” என்று சொக்கிப்போய் கேட்க...

“ ம்ம் நிறைய தருவேன்......... ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாது” என்று மான்சி எச்சரிக்கை செய்ய....

“ சொல்லமாட்டேன் வா போகலாம்” என்று அவள் கையைப்பிடித்து இழுத்தான்....

அவன் கைகளில் இருந்து தனது கையை உருவிக்கொண்டு “ மொதல்ல நீ போய் என் ரூமுக்கு வெளியே இருக்குற மரத்துக்குப் பின்னாடி நில்லு... நான் உன் பின்னாலேயே வர்றேன்” என்று மான்சி சொன்ன மறாவது நிமிடம் அங்கிருந்து வெளியேறி மழையில் நனைந்துகொண்டே அந்த மரக்கூட்டங்களுக்கு நடுவே ஓடினான் சத்யன்




" கொழுமுனை கிழிக்கும்...
"உழவு போல் வேர்ப்பிடித்து.. உட்சென்று......

" உடல் முழுவதும்ப் பற்றிப் படர்ந்து மேலேறி.....
" உயிரெங்கும் பூத்துவியாப்பிக்கும் காமம்...

" தண்ணீருக்குள் நெருப்பாய்..
" நெருப்புக்குள் தண்ணீராய்...
" காமம் நுழைந்து வெளியேறாத..
" உடல் உலகில் இல்லை!

" இரவில் பூத்து பகலில் உதிரும்...
" பூக்களிடமும் கேட்கலாம்...
" நகக்குறிகளின் அடையாளங்கள் பற்றி!

" ஒன்றின் மீது ஒன்று ஏறிச்செல்லும்...
" மேகக்கூட்டத்தை உற்றுப்பார்த்து..
" கண்டுகொள்ளலாம்..
" அவை கலவி செய்கிறதோ என்று!

" காதல் கூட ஒருகட்டத்தில்....
" தனது வாழ்நாளை நீட்டிக்க.....
" காமத்தைத் தான் துணைக்கழைக்கிறது !


No comments:

Post a Comment