Tuesday, December 1, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 19

ஜோயல் நம்பமுடியாமல் கண்களில் வழிந்த கண்ணீரைக்கூட துடைக்காமல் மான்சியைப் பார்க்க.... “ அண்ணா இந்த டாக்டரம்மாவை கட்டிக்க சொன்னேன்?.. ஆனா நீ இன்னும் சும்மாவே நிக்கிற? இதுதான் நீ எனக்கு தர்ற மாரியாதையா? நான் சொன்னதையெல்லாம் செய்வேன்னு இப்பதான் சொன்ன? ” என்று கண்ணீர் வழிய நின்ற ஜோயலைப் பார்த்தபடி அண்ணனைத் தூண்டிவிட..

“ அய்யோ ராசாத்தி நீ சொன்னா அதை தட்டுவேனா?” என்ற டயலாக் பேசியபடி ஜோயல் எதிர்பார்க்காத தருனத்தில் அவளை சுண்டி இழுத்து தன்னோடு கட்டிக்கொண்டான் வீரேன்..

சத்யன் குறும்பு பேசி இருவரையும் திண்டாட வைக்கும் மனைவியை ரசித்தபடி... ஊருக்கு கிளம்ப எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்



மான்சி சற்றுமுன் கிளப்பிய பீதியிலிருந்து இன்னும் மீளாத ஜோயல் வீரேன் நெஞ்சிலேயே சாய்ந்து கண்ணீரை உகுத்தாள்... ஆறுதலாக அவள் முதுகை வருடிய வீரேன் “ எனக்கு என் தங்கச்சி ரொம்ப முக்கியம் ருத்ரா... அவளை மீறி எந்த சந்தர்பத்திலும் எதையும் செய்யமாட்டேன்.. நீ இதை புரிஞ்சு எப்பவுமே நடந்துக்கனும் ருத்ரா... மான்சிக்கு அடுத்து தான் எனக்கு மற்ற எல்லாரும்” என்று வீரேன் சொல்ல... இப்போது ஜோயலோடு சேர்ந்து மான்சியும் கண்கலங்கினாள் ..
ஆனாலும் அவள் குறும்பு போகவில்லை “ ம்ம் போதும் கட்டிப்பிடிச்சது... இப்போ ரெண்டு பேரும் விலகிப்போங்க” என்று உத்தரவு போல சொல்ல... இருவரும் பட்டென்று விலகி அசடு வழிய மான்சியைப் பார்த்தனர் ...

“ ஏம்மா நீ சொன்னதை செய்தேனே... எதுவும் ஆஃபர் கிடையாதா?” என்று வீரேன் வழிய...

“ ஆஃபர் வேனுமா?” என்று நெற்றிப்பொட்டில் தட்டி யோசித்த மான்சி “ சரி தினமும் ரெண்டு முறை மூனு நிமிஷம் ரெண்டு பேரும் போன்ல பேசிக்கலாம்” என்று ரொம்ப பரிதாபப்பட்டு மான்சி அனுமதி வழங்கினாள்..

“ ஏய் இது ரொம்ப அநியாயம் மான்சி... பாவம் ரெண்டுபேரும் பொழச்சுப் போகட்டும் விட்டுடு” என்று சத்யன் அவர்களுக்கு பரிந்துகொண்டு வந்தான்...

“ ம்ம் என் மாமா சொல்றதால விடுறேன்... ரெண்டுபேரும் எதுனா பண்ணிக்கங்க.”. என்று சிரித்தவள் ஜோயலின் கையைப்பிடித்து “ என்னை தப்பா நினைச்சுக்காதீங்க... சும்மா விளையாட்டுக்குத் தான் இப்படி பண்ணேன்” என்றாள்..

ஜோயல் மான்சியின் அருகில் வந்து அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டு “ மான்சி உன்னை அந்த சமயத்திலும் நான் தப்பா நினைக்கமாட்டேன்மா .. எனக்கு உங்க குடும்பத்தில் இணையனும் என்ற ஆசையே உன்னால தான் வந்தது மான்சி ... உனக்காக ஒட்டுமொத்த குடும்பமே துடிச்சதைப் பார்த்ததும்... இந்த மான்சிக்காக நானும் துடிக்கனும்னு தோனுச்சும்மா.. நீ உன் அண்ணனுக்கு தங்கச்சின்னா எனக்கு நீ என்னோட முதல் குழந்தை மாதிரி.. நானும் உன்னை மீறி எதுவுமே செய்யமாட்டேன்” என்று உணர்வுபூர்வமாக பேசினாள் ஜோயல் ...

சற்றுநேரம் வரை அங்கே அமைதி நிலவ... அமைதியை கலைக்கும் விதமாக சத்யன் வீரேனின் தோளில் கைவைத்து “ வீரா இதைப் பத்தி உன் அப்பாகிட்ட எப்படி பேசுறதுன்னு புரியலை .. அவருக்கு இன்னும் உன்மேல கோபம் தீரலைடா மாப்ள” என்று வருத்தமாக கூறினான்...

“ இருக்கட்டும் மாமா... அவர் என்னைப் புரிஞ்சுகிட்டதும் இதைப்பத்தி பேசலாம்... அதுவரைக்கும் நான் காத்திருக்கேன் மாமா” என்று வீரேன் கவலையுடன் கூறும்போதே கதவை திறந்தகொண்டு தர்மனும் மீனாவும் வந்தனர் ..

தர்மன் நேராக மகளிடம் வந்தவர் அவள் நெற்றியில் இருந்த முடியை ஒதுக்கியபடி “ என்னம்மா நல்லாருக்கியா? இன்னிக்கு வீட்டுக்கு கிளம்பலாமா?” என்று கேட்க..

“ ம்ம் நல்லாருக்கேன்பா... சீக்கிரமா வீட்டுக்குப் போகலாம்” என்று மான்சி கொஞ்சலாக கூறினாள்..


தர்மன் ஜோயலிடம் திரும்பி “ உங்களோட உதவியையும் ஆறுதலையும் நாங்க மறக்கமாட்டோம் டாக்டர்... இவ்வளவு சின்ன வயசுல உங்களுக்கு இருக்கும் இந்த இரக்க சுபாவம் நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கு.. முடிஞ்சா எங்க ஊருக்கு வாங்க டாக்டர்” என்று சொல்ல...

மீனாவும் வந்து ஜோயலின் கையைப்பற்றிக்கொண்டு “ ஆமாம்மா எங்க வீட்டுக்கு வரனும்... வந்து ரெண்டு நாள் தங்கிட்டுப் போகனும்” என்று அழைப்பு விடுத்தாள்..

“ சரி மாப்ள எல்லாத்தையும் எடுத்திட்டு போய் கார்ல வைக்கச்சொல்லு... கிளம்பலாம்... பக்கத்துல ஏதாவது கடையில தேங்காய் கற்பூரம் எல்லாம் வாங்கி கார்ல வைக்கச் சொல்லு போற வழியில குலதெய்வம் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்” என்று மருமகனைப் பார்த்து மகனுக்கு உத்தரவிட்டார்

வீரேன் அந்த வார்த்தைக்கே தனது அப்பா தன்னிடம் பேசிவிட்டது போல் பூரித்துப் போனான்... வேகவேகமாக ஓடி ஓடி அவர் சொன்னவற்றை செய்தான்... சத்யனும் தர்மனும் மருத்துவமனையின் பில்லை செட்டில் பண்ணுவதற்காக ரிசப்ஷனுக்கு போய்விட...

ஜோயல் மான்சியை எழுப்பி அவளது நைட்டியை கழட்டிவிட்டு அழுத்தமில்லாத காட்டன் சுடிதார் ஒன்றை அணிவித்தாள்... அவள் கூந்தலை அழகாக வாறி பின்னலிட்டாள்... முகத்தை துடைத்து நெற்றியில் பொட்டு வைத்துவிட்டு.. காலையில் கோவிலுக்கு சென்று வாங்கி வந்த குங்குமத்தை மான்சியின் வகிட்டில் வைத்து விபூதியை நெற்றியில் பூசிவிட்டாள்...

மீனாள் ஜோயலை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.... இவ்வளவு படித்தும் கர்வமின்றி இருக்கும் ஜோயல் அவளுக்கு பெரிய அதிசயமாக இருந்தாள்... மறுபடியும் அவள் கையைப் பற்றி “ நீங்க கட்டாயம் எங்க வீட்டுக்கு வரனும்” என்று அன்போடு அழைத்தாள்...

சரியென்று தலையசைத்த ஜோயல் “ நான் இப்போ டியூட்டியில் இல்லை அதனால என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க ஆன்ட்டி” என்றாள்
சற்றுநேரத்தில் மூன்று ஆண்களும் வந்துவிட்டனர்... வீரேனை பிரியப்போகும் துயரம் ஜோயலின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.... வீரேனும் கலங்கிய கண்களை மறைத்து சத்யனின் பின்னால் போய் நின்றான்.. மான்சி கட்டிலைவிட்டு இறங்கி தயாராக நின்றாள்..

தர்மன் மகளின் தோளில் கைப்போட்டு அறை வாசலை நோக்கி மெதுவாக நடத்தினார்... அப்போது “ சார் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” என்ற ஜோயலின் தடுமாறிய குரல் அவரை தடுத்து நிறுத்தியது...

நின்று திரும்பிய தர்மன் மகளை சத்யனிடம் ஒப்படைத்து விட்டு ஜோயலின் பக்கம் திரும்பினார்.. மான்சியின் உடல்நிலை குறித்து தான் ஏதோ சொல்லப்போகிறாள் என்று நினைத்து “ என்ன டாக்டர் சொல்லுங்க? ” என்றார்

தயக்கத்துடன் வீரேனை ஏறிட்டாள்... என்ன சொல்லப் போகிறாளோ என்ற கலவரம் அவன் முகத்தில்.. ஒரு முடிவுடன் தர்மனிடம் வந்த ஜோயல் “ சார் என் பெயர் ருத்ரா ஜோயல்... பிறப்பால ஒரு இந்து பெண்... அப்பா அம்மா என்னோட பத்தாவது வயசுலேயே பஸ் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க... அதுக்கு பிறகு ஆதரிக்க யாரும் இல்லாமல் கிறிஸ்துவ ஆசிரமத்தில் வளர்ந்தவள்.. சில நல்லவங்க உதவியால டாக்டருக்கு படிச்சேன்.. இப்போ இந்த ஆஸ்பிட்டல் ஜீனியர் சர்ஜனா வேலை செய்றேன்.. ஆசிரமத்தில் இருந்து வெளியேறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கேன்.. இவ்வளவு தான் நான்... என்னைப் பத்தி சொல்ல வேற ஒன்னுமே இல்லை சார்” என்று குரலில் உறுதியுடன் தீர்கமாக கூறினாள் ஜோயல்..





ஏதோ உதவிகேட்டு தான் தன்னிடம் இதையெல்லாம் சொல்கிறாள் என்று நினைத்த தர்மன் “ படிப்புக்காக யார் உதவினாலும் ... படிக்கனும்னு வைராக்கியத்தோடு படிச்சு தனியா இருந்து முன்னேறியிருக்கீங்க ... உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கும்மா... உங்களுக்கு என்ன உதவி வேனும்னாலும் கேளுங்க எங்க குடும்பத்துல செய்ய தயாராக இருக்கோம்.. எங்க ஊர்ல சரியான மருத்துவ வசதி கிடையாது.. உங்களுக்கு சம்மதம்னா எங்க ஊர்லயே ஒரு ஆஸ்பிட்டல் கட்டித் தர்றோம் நீங்க அங்க வந்து எல்லாருக்கும் சேவை செய்ங்க.. உங்களை மாதிரி சேவை மனப்பான்மை உள்ளவங்க ஒரே இடத்தில் முடங்கிவிடக் கூடாது டாக்டர்... இதுதான் என் விருப்பம் ” என்று தர்மன் அன்பாக பேசி தனது விருப்பத்தை சொன்னார்...

அவர் பேசியதை கேட்டு மீனாவும் ஜோயலிடம் வந்து “ அவரு சொல்றதும் சரிம்மா நீங்களும் எங்ககூடவே வந்துருங்க.. உங்களுக்கு பெரிய ஆஸ்பத்திரி கட்டித் தர்றோம்” என்று அழைக்க...

நாம் எதையோ சொல்லப் போய். இவங்க வேற விதமா புரிஞ்சுக்கிட்டாங்களே என்ற சங்கடத்துடன் அவர்களைப் பார்த்தவள் “ இல்ல எனக்கு அந்த மாதிரி எதுவும் ஆசையில்லை... நான் சொல்ல வந்தது வேறங்க” என்றாள் ஜோயல்

தர்மன் குழப்பமாக அவளைப் பார்த்து “ எதுவாயிருந்தாலும் சொல்லுங்க டாக்டர்... நான் உதவி செய்றேன்” என்றதும் சத்யன் முன்னால் வந்து “ ஆமாம்மா எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லுங்க ஜோயல்.. என் மாமா கொடுத்த வாக்கை மீறமாட்டார் ” என்று அவளை தூண்டினான் சத்யன்... வீரேன் அடுத்து என்ன நடக்குமோ என்று அலறிப் போய் சத்யனின் முதுகுக்குப் பின்னால் மறைந்தான்

நிமிர்ந்த ஜோயல் “ நான் உங்க ஊருக்கு டாக்டரா வரவிரும்பலை... உங்க மருமகளா வர விரும்புறேன் அங்கிள்” என்றவள் சட்டென்று வெட்கத்துடன் தலைகுனிந்து “ நானும் உங்க மூத்த மகனும் ஒருத்தரையொருத்தர் விரும்புறோம் அங்கிள்... எனக்கு அவரோடதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன்... நீங்க எங்க காதலை ஏத்துக்கனும் அங்கிள்” என்று ஒருவாறு தன்கட்சிக்கு தானே வாதியாகி தனது தரப்பை சொன்னாள் ..

இதை சற்றும் எதிர்பார்க்காத தர்மன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து “ ஏன்மா இது விளையாட்டு சமாச்சாரம் இல்லை... உன் படிப்பு எங்க? இவன் எங்க? ரெண்டுபேருக்கும் சரியா வருமா?” என்றார்...

“ எவ்வளவு படிச்சாலும் நானும் ஒரு பொண்ணு தானே அங்கிள்... எனக்கும் மனசிருக்கு தானே?” என்று பதிலுக்கு கேட்டாள் ஜோயல்

அவளை யோசனையுடன் பார்த்த தர்மன் “ எல்லாம் சரிம்மா... ஆனா மான்சியோட இந்த நிலைமைக்கு இவன்தான் காரணம் அது தெரியுமா? என் மகளை வெட்டுனதே இவன்தான் தெரியுமா?” என்று கேட்க
பட்டென்று நிமிர்ந்த ஜோயல் “ எனக்கு தெரியும் அங்கிள்... ஆனா முன் கோபத்தால அதை செய்துட்டு அதன் பிறகு வீரேன் விட்ட கண்ணீர் எனக்குத்தான் தெரியும்... நீங்க எல்லாரும் துடிச்சதை விட அவருதான் தன் தங்கைக்காக அதிகமா துடிச்சார்.. ஒவ்வொரு நிமிஷமும் குற்றவுணர்வில் செத்து செத்து பிழைச்சார்... அவர் பட்ட வேதனையை நான் பார்த்தேன் அங்கிள்... அவர் தங்கச்சி மேல வச்சிருந்த பாசம் தான் என்னை அவர்பக்கம் ஈர்த்தது.. அந்த ஈர்ப்புதான் காதலா மாறியது.. அவர் கொஞ்சம் முன்கோபி தான்.. என்னால அவரை மாத்தமுடியும் அங்கிள்.” என்றவள் இறுதியாக உடைந்து போய் அவரை நோக்கி கண்ணீருடன் கையெடுக் கும்பிட்டு “ தயவுசெய்து என்னை உங்ககூட கூட்டிட்டுப் போயிடுங்க அங்கிள் அவரைப் பிரிஞ்சு என்னால இங்க இருக்கமுடியாது ” என்று ஜோயல் குலுங்கியதும்..

அதுவரை சத்யனின் பின்னால் நின்று ஜோயல் பேசுவதை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்த வீரேன் வேகமாக வெளியே வந்து அவள் கையை ஆறுதலாகப் பிடித்து “அழாத ருத்ரா” என்றான்


ஜோயலின் வார்த்தைகள் தர்மனை தலைகுனிய வைத்தது... பார்த்து பத்து நாட்களே இவள் சொல்லி தன் மகனின் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியிருக்கு.. வீரேன் முன்கோபி தான் .. அதை சத்யனின் பிரச்சனையின் போதே பார்த்துவிட்டு அப்போதே அவனுக்கு புத்தி கூறியிருந்தால் இன்று இவள் வந்து ‘ அவரை நான் திருத்துகிறேன் என்று சொல்வாளா? ஆனாலும் இவ்வளவு படித்த ஒருத்தி தன் மகன்மீது காதல் கொண்டு கண்ணீர் விடுவது அவருக்கு கர்வமாய் இருந்தது ... இவளால் தான் தன் மகன் வாழ்வு சிறக்கனும் என்று விதி போலிருக்கிறது என்று நினைத்தார்.. திரும்பி தன் மனைவியைப் பார்த்தார் .. மீனாவின் முகத்தில் எதைப் படித்தாரோ தெரியவில்லை.. புன்னகையுடன் ஜோயலிடம் திரும்பினார்... “ ஏன்மா உனக்கு யாருமே சொந்தக்காரங்க இல்லையா?” என்று கேட்டார்..

அவர் அப்படி கேட்டதும் ‘ சொந்தகள் அற்ற அனாதை என்று நம்மை தட்டிக்கழித்து விடுவாரோ என்ற பயத்துடன் “ புதுக்கோட்டையில இருக்காங்க ஆனா யார்கூடயும் எந்த தொடர்புமில்லை” என்றாள் வேதனையுடன்..

தாடையை தேய்த்தபடி மகனைப் பார்த்தவர் அவன் முகத்தில் இருந்த வேதனையை எண்ணி உள்ளம் உருகினாலும்... அதை வெளிக்காட்டாமல் “ அப்போ யார்கிட்ட போய் உன்னை முறையா பொண்ணு கேட்டு எங்கவீட்டு கூட்டிப் போறது?” என்றார்...

அவர் எதற்காக கேட்டார் என்று புரிந்ததும் தன் கையைப்பற்றியிருந்த வீரேனையும் இழுத்துக்கொண்டு “ அங்கிள்” என்று அவர் காலில் விழுந்தாள்...

உடனே மீனா வந்து ஜோயலை தூக்கி தன்னோடு அணைத்துக்கொண்டு “ இந்த ஆன்டி அங்கிள் எல்லாத்தையும் விட்டுட்டு ஒழுங்கா அத்தை மாமான்னு கூப்பிட கத்துக்கோ” என்று மாமியாராக தனது முதல் அறிவுரையை மருமகளுக்கு வழங்கினாள்...

சத்யன் மான்சியுடன் தர்மனிடம் வந்து “ உங்களுக்கு முறையாப் பொண்ணு வந்து கேட்கனும் அவ்வளவு தானே? ஜோயலை நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன் நீங்க எல்லா சீர் வரிசையோட முறையா வந்து கேளுங்க... ஆனா ஒன்னு இந்த முரட்டுப் பயலுக்கு பொண்ணு குடுக்குறதா வேனாமான்னு? நாங்க யோசிச்சுதான் பதில் சொல்வோம்” என்று கெத்தாக பேசியவன் மனைவியிடம் திரும்பி “ என்னம்மா நான் சொல்றது சரிதானே?” என்று அபிப்பிராயம் கேட்டாள்..

ஆண்கள் தான் கூஜா என்ற வழக்கத்தை மாத்தி “ ஆமா ஆமா ரொம்ப கரெக்ட்... இவனுங்க எல்லாம் முரடனுங்க... நம்ம டாக்டரை அவங்களுக்கு கொடுக்குறதுக்கு முன்னாடி ஆயிரம் முறை யோசனை பண்ணித்தான் செய்யனும்” என்று நீட்டி முழக்கினாள்..

மீனா ரோஷத்துடன் தன் மகளைப் பார்த்து “ யாரைடி முரடன்னுங்கன்னு சொல்ற? நீ என்ன பொண்ணு தர்றது... டேய் வீரா மருமகளா கூட்டிக்கிட்டு போய் கார்ல ஏறுடா” என்று மகனுக்கு உத்தரவிட்டாள் ..

தர்மன் மருமகனைப் பார்த்து சிரித்து “ மாப்ள என் மவன் சிங்கக்குட்டியா... பார்த்தியா பத்தே நாள்ல எவ்வளவு படிச்சு இவ்வளவு பெரிய உத்தியோகத்துல இருக்குறவளையே அவனுக்காக கதற வச்சிட்டான்.. எனக்கு அவன் வார்த்தைதான் போதும்” என்று மகனின் பத்துநாள் சாதனையைப் பற்றி பெருமை பேசியவர் வீரேனிடம் திரும்பி “ நீ என்னடா சொல்ற? முறையாவது மண்ணாவது இப்பவே நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிரலாமா? ” என்று சிரிப்புடன் கேட்க...

தன் அப்பா வெகுநாட்கள் கழித்து தன்னிடம் இயல்பாக பேசியதால் பூரித்த வீரேன் “ இல்லப்பா நான் தங்கச்சி சொல்றததான் கேட்பேன்..இனிமேல் அவ என்ன சொல்றாளோ அதைதான் செய்வேன்” என்று உறுதியாக கூறினான்..

மகனின் வார்த்தையை கேட்டு பெற்றவர்கள் கண்கலங்கினார்கள்... “ சரிடா மாப்ள சொல்ற மாதிரியே ஜோயல் அவங்க வீட்டுல இருக்கட்டும் ஒரு நல்லநாள் பார்த்து முறையாவே போய் அவங்க வீட்டு பொண்ண கேட்கலாம்” என்று தர்மன் சொல்லி முடித்தார்


மான்சி ஜோயலின் கையைப் பற்றிக்கொண்டு “ வாங்கண்ணி போகலாம்” என்றதும் எல்லோரும் ஊருக்கு கிளம்பினார்கள்.... ஆஸ்பிட்டலில் நீண்ட லீவுக்கு எழுதி கொடுத்துவிட்டு அவர்களுடன் கிளம்பினாள் மான்சியின் அண்ணி...

ஜோயலின் வீட்டருகே காரை நிறுத்தி அவளுக்கு தேவையானவற்றை எடுப்பதற்காக ஜோயல் வீரேன் இருவரும் அவசரமாக உள்ளே போனார்கள்..
உள்ளே நுழைந்ததும் சந்தோஷ மிகுதியில் அவனை கட்டிக்கொண்டு உதட்டை கவ்வினாள் ஜோயல்... வீரேன் அவள் இடுப்பை பற்றி தன் உயரத்துக்கு உயர்த்திக்கொண்டு பதிலுக்கு அவசரமாக அவள் இதழ்களை கவ்வி ஆவேசமாக உறிஞ்சினான்... வெளியே எல்லோரும் காரில் காத்திருப்பதை உணர்ந்து பிரிந்த இருவரும் வேண்டியவைகளை எடுத்துக்கொண்டு வந்து காரில் ஏறினார்கள்...

சத்யனுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்த வீரேனைப் பார்த்து “ வீரண்ணா உன் உதட்டுல என்னமோ ஒட்டிருக்குப் பாரு” என்று மான்சி குறும்புடன் கூற... அவன் திகைப்புடன் வாயை துடைத்துக்கொண்டு பிறகு தங்கை குறும்பு செய்கிறாள் என்று புரிந்து வேனாம்மா என்பது போல் கையெடுத்துக் கும்பிட்டான்

“ ஏய் பாவம்டி அழுதுடப் போறான்” என்று மனைவியை ரகசியமாக அடக்கினான் சத்யன்.... கொஞ்சநேரத்தில் மான்சி அவனை சீண்டி “ மாமா எனக்கும் அதேமாதிரி வேனும்... இப்பவே” என்று அவன் காதருகில் கேட்க...“ ஸ்ஸ்ஸ் அப்பா அம்மா இருக்காங்க.. வீட்டுக்குப் போய் நிறைய தர்றேன்.. இப்போ சைலன்ட்டா வாடி” என்று மனைவியின் கையைப்பிடித்து ரகசியமா கூறினான்...

இந்த பத்து நாளில் அந்த மருத்துவமனையே காதலர்களின் சுற்றுலாத்தளம் போல் மாற்றிவிட்டு பெருமையோடு மான்சி தனது ஊருக்குப் போனாள் 





“ சும்மா கிடந்த இடங்களையெல்லாம்..

“ சுற்றுலாத் தளமாக மாறிவிட்டது..

“ உன் காலடித்தடங்கள் பட்டதால்! 

சின்னமனூரில் தர்மனின் ஆலையின் வெளியே இருந்த பிரமாண்டமான காலி இடத்தில் மிகப்பெரிய கல்யாண பந்தல் போடப்பட்டிருக்க.... கிழக்கு மூலையாக போடப்பட்டிருந்த மேடையில் தேவன் அக்னிக்கு முன்பு அமர்ந்திருந்தான்... அவன் அருகே செல்வி.. மணப்பெண் அலங்காரத்தில்... செல்வி இத்தனை அழகா என்று வாய்பிளந்து வேடிக்கைப் பார்க்கவே வந்தது போல் ஊர் மக்கள் மணமேடையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்

தர்மனும் மீனாவும் மேடையில் நின்றுகொண்டு ஐயர் கேட்ட பொருட்களை எடுத்து கொடுப்பதும்.. பிறகு கூட்டத்தில் இருக்கும் தெரிந்தவர்களை புன்னகையுடன் பார்ப்பதும் என கல்யாண வீட்டுக்காரர்களை போல் பாந்தமாக இருந்தார்கள்....

பஞ்சவர்ணம் சொந்தகாரர்களை தேடித்தேடி நலம் விசாரித்துக்கொண்டிருந்தார்.... சிவாவின் கணவன் பந்தி பறிமாறும் இடத்தில் இருந்து பொறுப்பாகப் பார்த்துக்கொள்ள.... அவனிடம் ஓடி வந்த சிவா இரைச்சலால் எதுவும் கேட்காது என்று அவன் காதில் ஏதோ சொல்ல... உடனே சமையல் செய்யும் இடத்துக்குப் போய் ஒரு கப்பில் சூடான பாலை எடுத்துவந்து கொடுத்தான்... அதை வாங்கிக்கொண்டு சிவாத்மிகா பரபரப்புடன் மறுபடியும் வெளியே போனாள்

சத்யன் தேங்காய் பைகள் அடங்கிய மூட்டையை ஆட்களை வைத்து தூக்கிச்சென்று பந்தலின் வாசலில் வைத்தான்.... அங்கே மூத்த மகனாய் தன் மனைவி ருத்ராவுடன் வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்த வீரேன் மாமனைப் பார்த்து “ மாமா மான்சி எங்க மாமா?” என்று கேட்க...

“ அதோ அங்க இருக்கடா மாப்ள” என்று சத்யன் காட்டிய திசையில் ... மான்சி தனது பெரிய வயிற்றைத் தூக்கிக்கொண்டு இளம் பச்சைநிற பட்டுப்புடவையில்.. காதில் கழுத்தில் எல்லாம் வைரங்கள் ஜொலிக்க... கை நிறைய அடுக்கப்பட்ட கண்ணாடி வளையல்களுடன் கால் சலங்கை சத்தமிட நடந்துகொண்டிருக்க .. சிவாத்மிகா கையில் பால் டம்ளருடன் அவள் பின்னால் போய் குடிக்கச் சொல்லி கெஞ்சிக்கொண்டிருந்தாள்..

தேவனின் கல்யாணத் தேதி வேறு நல்லநாள் இல்லாததால் மான்சியின் வளைகாப்பு முடிந்த மறாவது வாரமே வைத்துவிட்டார்கள்.. யாருக்கும் இதில் சம்மதமில்லை என்றாலும் சத்யனும் மான்சியும் தான் வற்புறுத்தி இந்த தேதியை வைத்தார்கள்... இன்றோ நாளையோ எனும் பயமுறுத்தும் வயிற்றுடன் இருக்கும் மான்சியின் மீதே அனைவரின் கவனமும் இருந்தது...

“ ஏய் நீயேன்டி என்கூட வந்து நிக்கிற? அங்கப்போய் மான்சியைப் பார்த்துக்க ருத்ரா” என்று வீரேன் கோபமாய் கூற...

“ அய்யோ இவ்வளவு நேரமா அங்கதான் இருந்தேங்க... நீங்க தனியா நின்னு எல்லாரையும் வரவேற்குறீங்கன்னு மான்சிதான் உங்ககூட வந்து நிற்க்கச் சொல்லுச்சு” என்று வருத்தமாக ருத்ரா சொன்னதும்...

வீரேன் முகம் சற்று இறங்கியது “ இல்ல ருத்ரா மான்சி கொஞ்சம் கூட வலி தாங்க மாட்டா.... எனக்கு அதை நெனைச்சாலே பயமாயிருக்கு.. அதான் நீ கூடவே இருன்னு சொல்றேன்” என்று கவலையுடன் கூறினான்..

“ ஏங்க எத்தனை பேரு இருந்தாலும் அவதான் வலிச்சு பெத்துக்கனும்... அதோட மான்சியும் வலியை தாங்கனும்ங்க.. நாமளே சுத்தியிருந்து பயமுறுத்த கூடாது” என்று கண்வனுக்கு நிதர்சனத்தை சொன்னவள் “ நான் இங்க இருந்தாலும் என் பார்வை மான்சியை விட்டு நகராதுங்க நீங்க பயப்படாதீங்க” என்றாள்...

அதன்பின் வந்தவர்களை இருவரும் இன்முகத்துடன் வரவேற்க... அதில் ஒரு உறவுக்கார பெண்மணி ஜோயலை நெருங்கி அவள் கைகளைப் பற்றி “ என்னம்மா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி ஆறேழு மாசமாகுதே இன்னும் எதுவும் உண்டாகலையாம்மா?” என்று அன்புடன் விசாரிக்க

திரும்பி கணவனைப் பார்த்து வெட்கமாய் சிரித்த ஜோயல் “ இல்லைங்க பெரியம்மா... எங்கவீட்டுப் பொண்ணு இப்படி இருக்கும்போது அவளை கவனிச்சுக்க ஆள் வேனும்ல.. அதனால மான்சிக்கு குழந்தை பிறந்ததுக்குப் பிறகு நான் அம்மா அப்பா ஆகலாம்னு இருக்கோம்” என்றாள் .. “ ம்ம் நீ சொல்றதும் சரிதான் தாயி... இந்தகாலத்துல நாத்தனார் மேல இவ்வளவு அன்பா யாரு இருக்காங்க? ” என்றுவிட்டு போனார் அந்த பெண்மணி

“ சரி இனி யாரும் வரமாட்டாங்க .. நான் இங்கருந்து பார்த்துக்கிறேன்... நீ போய் மான்சி கூட இரு” என்று மனைவியிடம் வீரேன் சொன்னதும் “ சரிங்க இதோ போறேன்” என்று மான்சியிடம் ஓடினாள் ஜோயல்...

சத்யன் தாய்மாமனாய் பட்டுவேட்டி பட்டு சட்டையில் பந்தலில் வந்து நிற்க... தேவன் அவனை கையசைத்து அருகில் அழைத்து “ மாமா மான்சி எப்படியிருக்கா?” என்று கவலையுடன் கேட்க...

அவன் தோளைத் தட்டிய சத்யன் “ அவ நல்லாதான் இருக்கா... நீ அவளை நினைச்சு கவலைப்படாம சந்தோஷமா இரு தேவா... மான்சி கூட ஜோயலும் சிவாவும் இருக்காங்க” என்று ஆறுதலாக சொன்னான்..

அவன் இவ்வளவு சொல்லியும் திருப்தியுறாத தேவன் மணமேடையை கடந்து சென்ற ஜோயலைப் பார்த்து “ அண்ணி அண்ணி” என்று அழைக்க...வேகமாக அவனிடம் யந்து குனிந்து “ என்ன தேவா?” என்றாள் ஜோயல்...

“ மான்சிக்கு எப்படி அண்ணி இருக்கு?” என்று கவலையுடன் கேட்டவனிடம் “ நல்லாருக்கா தேவா... நான் அவகூடவே இருக்கேன் நீங்க பயப்படாதீங்க” என்றாள் ஜோயல்

“ இல்ல அண்ணி அவ சின்ன வலியைக் கூட தாங்க மாட்டா... அதான் ரொம்ப பயமாயிருக்கு” என்று வீரேன் சொன்ன அதே வார்த்தைகளை இவனும் சொல்ல.. ஏனோ ருத்ராவுக்க கண்கலங்கி விட்டது ... “ நான் பார்த்துக்கிறேன் தேவா நீங்க கொஞ்சம் சிரிச்ச மாதிரி இருங்க... மூஞ்சி அழுது வடியுது” என்று கேலி செய்துவிட்டு அங்கிருந்து நகன்றாள்...

செல்வி தன் அருகில் நின்ற சத்யனைப் பார்த்து “ சித்தப்பா” என்று மெல்லிய குரலில் அழைக்க... சத்யன் “ என்னம்மா” என்று அவளருகே குனிந்தான்...
“ இங்க இருக்கிறவங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க... நீங்க போய் சின்னம்மா கூடவே இருங்க சித்தப்பா.. இவரு ரொம்ப பயப்படுறாரு” என்று தேவனை காட்டி சொல்ல... “ சரிம்மா நான் போய் மான்சி கூடவே” இருக்கேன் என்று சத்யன் மான்சி இருக்கும் இடத்துக்கு நகர்ந்தான்

மணமேடையின் மறு மூலையில் ஒரு சேர் போட்டு மான்சி அமர்ந்திருக்க... அவளுக்கு இருபுறமும் சிவாத்மிகாவும் ருத்ராவும் நின்றிருந்தனர்... சத்யனைப் பார்த்ததும் முகத்தில் சிரிப்புடன் கைகளை நீட்டினாள் மான்சி ... சத்யன் இரண்டே எட்டில் அவளை அடைந்து கைகளைப் பற்றிக்கொண்டு “ என்னடா கண்ணம்மா?” என்றான் காதலாகி...

“ ஒன்னுமில்ல மாமா நீ என்கூடவே இரு மாமா?” என்றவளிடம் ... “ ம் அதுக்குத்தான் வந்தேன்” என்றவன் மகளைப் பார்த்து “ சிவா நீயும் டைனிங்ஹால் போய் எல்லாரும் சாப்பிட்டாங்களான்னு பாரு.. மாப்பிள்ளை ஒத்தை ஆளா அல்லாடிக்கிட்டு இருக்காரு” என்றான்..



“ இதோ போறேன்பா... சின்னம்மாவுக்கு குடிக்க பால் எடுத்துட்டு வந்தேன்.. அவங்க குடிக்கவேயில்லை... ஏதாவது கூல்டிரிங்ஸாவது வாங்கிட்டு வரச்சொல்லி குடுங்கப்பா” என்று சொல்லிவிட்டு போனாள்...

மான்சியின் முகம் அதிகமாக வியர்த்து வழிய... சத்யன் கைகுட்டையால் துடைத்தபடி இருந்தான் “ என்ன ஜோயல் மான்சிக்கு இப்படி வியர்க்குது?” என்று கவலைப்பட்டவனைப் பார்த்து புன்னகைத்த ஜோயல்

“ ஏன் அண்ணா நிறைமாச கர்பிணிக்கு போய் இவ்வளவு நகையும் பட்டுப்புடவையும் போட்டுவிட்டா வியர்க்காம என்ன செய்யும்... நான் சொல்ற மாதிரி செய்யுங்க... தாலி கட்டினதும் மான்சியை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்க... நல்லா வெண்ணீர்ல குளிச்சுட்டு ரெஸ்ட் எடுக்கட்டும்... நான் இங்க மத்த சம்பிரதாயமெல்லாம் முடிஞ்சதும் உடனே கிளம்பி வர்றேன்” என்று சொல்ல ... “ ஆமாம் மாமா தாலி கட்டினதும் வீட்டுக்குப் போகலாம்” என்றாள் மான்சியும்...

சற்றுநேரத்தில் கெட்டிமேளம் முழங்க... பெரியவர்கள் ஆசியுடன் தேவன் செல்வியின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டினான்...கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக காதல் பறவையாக சுற்றித்திரிந்த இருவரும் குடும்பம் எனும் பொன் கூட்டில் அடைக்கப் பட்டனர் 



No comments:

Post a Comment