Tuesday, December 8, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 14


சத்யனின் உட்சபட்ச கோபத்தை கண்டுவிட்ட மான்சி திகைப்புடன் அப்படியே அமர்ந்திருக்க... தனது அறைக்குப் போன சத்யனோ கொதிப்பு அடங்காமல் கூண்டில் அடைக்கப்பட்ட வேங்கையாய் உலாவினான்...

இப்படியொரு சூழ்நிலையை அவன் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை... விக்டரை நினைத்தவுடனே ரத்தம் சூடேறி அதன் சிவப்பு விழிகளில் தெரிந்தது... “ என் வீட்டுக்குள்ளயே வந்து என் கண்முன்னாடியே கொஞ்சுறியாடா? இனி நீ இந்த வீட்டுக்குள்ள வந்தா நான் ஆம்பளை என்பதற்கே அர்த்தம் இல்லைடா?” என்று சத்தமாக பேசினான்..

எதையெதையோ கற்பனை செய்தபடி தனது ஒன்பது மாத காத்திருப்புக்கு வடிகால் தேடி மான்சியிடம் வந்தவனுக்கு இப்படியொரு அதிர்ச்சி காத்திருந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை... மான்சி பெருத்த வயிறு அவனை இன்னும் வெறியனாக்கியிருந்தது... அவன் எதை வேண்டாமென்று ஒதுக்கினானோ அது இப்போது முழு வளர்ச்சியுடன் மான்சியின் வயிற்றில்... சத்யன் முஷ்டியை மடக்கி சுவற்றில் குத்தினான்...



‘ காதலாம் கல்யாணமாம்... யார்கிட்டடி கதை விடுற? உன்னைப்போல எத்தனைப் பொண்ணுங்களைப் பார்த்தவன் நான்.... நீ இங்கேருந்து போனால் தான காதல் கல்யாணம் எல்லாம்... உன்னை என்னோடையே இருக்க வைக்கல நான் சத்யன் இல்லடி’ சூளுரைத்தது சத்யனின் அடிபட்ட நெஞ்சம்...

அலமாரியை திறந்து அங்கிருந்த வேட்காவை எடுத்து ராவாக தொண்டையில் சரித்தான்... தொண்டை எரிந்ததும் தண்ணீரை எடுத்து ஊற்றிக்கொண்டான்... மறுபடியும் மறுபடியும் தொண்டையில் இறங்கிய வேட்கா அவனை போதையின் உச்சத்திற்கு அழைத்துச்சென்றது...

உடைகளை கழட்டி பக்கத்துக்கு ஒன்றாக வீசி எறிந்தவன்.. ஒரு ஷாட்ஸை மாட்டிக்கொண்டு தள்ளாடியபடி வந்து கட்டிலில் விழுந்தான்... மான்சி மான்சி என்று புலம்பியது மனம்... எதிலோ ஏமாந்த உணர்வு.. ஆனால் எதில் ஏமாந்தான் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை... மான்சிக்காக எதையாவது விட்டுக்கொடுத்தால் என்ன? என்று இங்கே வரும்போது எண்ணியிருந்த மனம்... இப்போது எதற்காகவும் அவளை விட்டுத் தராதே என்று மாறிப்போயிருந்தது.. வரும்போது இருந்த குதூகலம் வடிந்து அவனது இதயம் குப்பைமேடாக மாறியிருந்தது...

வெகுநேரம் வரை கொதித்த உள்ளத்தை எதைக்கொண்டும் அடக்க முடியாமல் தவித்து மீண்டும் அலமாரியை திறந்து வேட்காவை தேடினான்... எதுவுமே இல்லை என்றதும்.. சில ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு கீழே வந்தான்

சாமுவேலை தேடினான்... அவனும் சியாமாவும் சமையலறையின் மூலையில் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்... சத்யனைப் பார்த்ததும் இருவரும் எழுந்து நின்றனர்...

அவர்கள் முகத்தில் இருந்த கவலையைப் பார்த்து “ என்ன சாமு? எங்க அவ?” என்று சத்யன் உளறலாக கேட்க....

“ மான்சியம்மா சாப்பிடவே இல்லைங்கய்யா... அழுதுகிட்டே போய்ப் படுத்துட்டாங்க.... நாங்களும் கெஞ்சிப் பார்த்தோம்... வரமாட்டேங்குறாங்க” என்று சியாமா கவலையுடன் கூறினாள்...

அலட்சியமாக தலையை சிலுப்பிய சத்யன் “ ஓ சாப்பிடலையா? விடுங்க பட்டினி கிடக்கட்டும்” என்றவன் பணத்தை சாமுவேலின் முன்பு நீட்டி “ சரக்கு காலி... போய் வாங்கிட்டு வா சாமு ” என்று அவனிடம் கொடுத்துவிட்டு திரும்பியவனை சியாமாவின் குரல் தடுத்தது..

“ அவங்கள பட்டினியா கிடக்கட்டும் விட வெத்து ஆள் இல்லைங்கய்யா... இப்போ நிறைமாத கர்ப்பிணி... அவங்க பட்டினியா கிடந்தா வயித்துல உள்ள குழந்தையும் தான் பசியால துடிக்கும்” என்று கண்ணீருடன் கூறிவிட்டு முந்தானையால் வாயைப்பொத்திக் கொண்டு குமுறினாள்..

திரும்பி சியாமாவைப் பார்த்தவன் “ ஓ.........” என்று சொல்லிவிட்டு தலையை உலுக்கியபடி “ அவ எந்த ரூம்ல இருக்கா?” என்று கேட்க...

சியாமா கைகாட்டிய அறையை நோக்கி தள்ளாடியபடி நடந்தான் சத்யன்.... முதன்முதலாக மான்சியை எடுத்துவந்து சத்யன் கிடத்திய அதே அறை.... அறைக்கதவு திறந்தே கிடக்க அதை விரிய திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்... அங்கிருந்த கட்டிலில் தன்னை சுருட்டிக்கொண்டு கிடந்தாள் மான்சி... ஒருக்களித்துப் படுத்திருந்தவளின் அருகில் சென்று அமர்ந்த சத்யன் அவள் தோள்தொட்டு “ ஏய் மான்சி சாப்பிட்டு படு ” என்று போதையான வார்த்தைகளில் அழைத்தான்..

விழியோரம் நீர் கசிய மூடிய விழிகளை திறக்காமலேயே “ எனக்கு எதுவும் வேண்டாம்.. மொதல்ல நீங்க வெளிய போங்க ” என்று முனங்கலாய் பதில் சொன்னாள் மான்சி..

மறுபடியும் கோபம் சுர்ரென்று ஏற “ என் வீட்டுலயே இருந்துகிட்டு என்னையே வெளியே போகச் சொல்றியா?” என்றவன் கட்டிலில் இருந்து இறங்கி... அவள் தொடையில் ஒரு கையும் முதுகில் ஒரு கையும் நுழைத்து அவளை கட்டிலிலிருந்து அள்ளினான்...

தன்னை தூக்கிக்கொண்டு கதவை நோக்கி நடந்தவன் நெஞ்சில் குத்தி “ விடுங்க என்னை” என்று திமிறினாள் மான்சி...

சத்யன் தள்ளாட்டமாகவே நடந்து டைனிங் ஹாலை அடைய... மான்சியை எங்கே கீழே போட்டுவிடப் போகிறானோ என்று பயந்த சியாமா அவசரமாக ஒரு சேரை இழுத்துப்போட்டு “ மெதுவா இதுல உட்கார வைங்கய்யா” என்றாள்..

சத்யன் மான்சியை மெல்ல இறக்கினான்.... அவள் பக்கத்திலேயே இவனும் ஒரு சேரை இழுத்துப்போட்டு அமர்ந்து “ சாப்பாடு எடுத்துட்டு வா சியாமா” என்று சத்யன் சொல்ல.. சியாமா இருவருக்கும் தட்டு வைத்து இட்லிகளை பறிமாறினாள்...

தனது தட்டை தள்ளிவிட்டு மான்சியின் தட்டில் இருந்த இட்லியை எடுத்து சட்னியில் தொட்டு மான்சியின் வாயருகே எடுத்துச்சென்று “ ம் வாயைத் திற” என்று அதட்ட... “ எனக்கு வேனாம்னு சொல்றேன்ல” என்றாள் மான்சி எரிச்சலாக...

“ நீ வேனாம்னு சொல்லி நான் விட்டுட்டா அப்புறம் நான் சத்யன் இல்லையே ” என்று போதையாக சிரித்த சத்யன் “ வாயை திறடி” என்று கடுமையான குரலில் அதட்டியதும் மான்சியின் வாய் பட்டென்று திறந்துகொண்டது...

போதையில் தலை துவண்டாலும் அவளுக்கு இட்லியை ஊட்டுவதில் மிகவும் கவனமாக இருந்தான் சத்யன்... வம்பாக அவளுக்கு ஊட்டியவன் தான் சாப்பிடும் வரை அவள் கையை பற்றியபடி அப்படியே அமர்ந்திருந்தான்....

சாப்பிட்டு எழுந்தவன் அவள் கையை விடாமல் மாடிப்படிகளை நோக்கி இழுத்துச்செல்ல... பின்னாலேயே ஓடிவந்த சியாமா “ மான்சியம்மாவை மாடியேற வேனாம்னு டாக்டரம்மா சொல்லிருக்காங்கய்யா” என்று கவலையுடன் கூறினாள்....

உடனேயே நின்ற சத்யன் “ ஓ அப்படியா? யாரு நம்ம லதா சொன்னாங்களா? அவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்” என்றவன் துவண்ட தலையை சிரமப்பட்டு நிமிர்த்தி “ ஆனா எனக்கு இப்போ மான்சியை கட்டிப்பிடிச்சுகிட்டு தூங்கனுமே? என்ன செய்ய?” என்று பரிதாபமாக சியாமாவிடமே திருப்பி கேட்டான் ...


அவள் சங்கடமாக விழித்தபடி மான்சியைப் பார்த்தாள்... மான்சி உதடுகளை மடித்து கடித்து மூக்கு விடைக்க தனது குமுறலை அடக்கியபடி நினறிருந்தாள்....

சத்யன் கீழே விழாமல் மாடியின் கைப்பிடியை பற்றிக்கொண்டு “ அப்போ நானும் உன் ரூம்லயே படுத்துக்கறேன் வா” என்று அவளை இழுத்துக்கொண்டு மான்சியின் அறைக்கு சென்றான்.... மான்சியின் கண்ணீரால் மார்புச் சேலை நனைய அவன் இழுத்த இழுப்புக்கு போனாள்...

அவளை அழைத்துச்சென்று கட்டிலில் படுக்க வைத்த சத்யன்... அதே கட்டிலில் படுத்து அவளை இழுத்து அணைக்க முயல.... அவள் வயிறு பெரும் தடையாக இருந்தது.... குனிந்து பார்த்தான் சத்யன் அவனுக்கும் அவளுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரடி இடைவெளியை ஏற்படுத்தியிருந்தது மான்சியின் வயிறு...

“ ச்சே இதுக்குத்தான்டி இதெல்லாம் வேனாம்னு நான் நெனைச்சது” என்று உளறியபடி எழுந்து கட்டிலைவிட்டு இறங்கி அவளின் மறுபக்கம் வந்தவன் ஏதோ ஞாபகம் வந்தாற்ப் போல் நெற்றிப் பொட்டை தடவியவன் “ கால் வீங்கியிருக்கு... அதனால காலுக்கு தலைகாணி வச்சுப் படுத்துக்க சொல்லி அந்த அல்லக்கை சொன்னான்ல” என்றவன் ஒரு தலையணையை எடுத்து வைத்து அவள் கால்களை தூக்கி அதன்மீது வைத்துவிட்டு வந்து கட்டிலில் ஏறி படுத்து அவளின் முதுகுப்பக்கமாக அணைத்தான்...

முன்புபோல் அவள் மார்புகளுக்கு நடுவே தனது கையைப் போட்டு அவளை தன்னோடு இழுத்து அணைத்தபடி கண்மூடினான்.... மான்சியின் விழிகள் மட்டும் வற்றாத நீரூற்று போல் பொங்கி வழிந்தபடியே இருந்தது....



" நமக்கு திருமணம் ஆனதும்

" உன்னிடம் நான் எதையும் கேட்டு....

" கொடுமை செய்யமாட்டேன்...

" ஏனென்றால் என் காதலே ...

" பயங்கர கொடுமையானதாக இருக்கும்!

" நமது திருமணத்திற்காக...

" நான் போடும் ஒரே கண்டிஷன்...

" என் காதல் கொடுமையை நீ...

" என் இதயத்தில் கைதியாய் இருந்து...

" அனுபவிக்க வேண்டும் என்பதுதான்!



அன்று கம்பெனியில் இருந்து திரும்பிய சுந்தரம் தனது அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வந்து சமையல்காரர் கொடுத்த காபியை குடித்துவிட்டு ஹாலில் அமர்ந்து கம்பெனியில் இருந்து எடுத்து வந்திருந்த பைல்களை கவனமாகப் பார்க்க ஆரம்பித்தபோது வீட்டு வேலைக்காரன் ஒருவன் வந்து “ உங்களை பெரியவர் அவரோட ரூமுக்கு வரச்சொன்னார் ” என்று சொல்லிவிட்டுப் போக... சுந்தரம் பைல்களை அப்படியே விட்டுவிட்டு தனது அப்பாவின் அறைக்குச் சென்றார்

பெரியவரின் அறையில் அவர் சோபாவில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருக்க... சுந்தரம் அவரருகில் சென்று அமராமல் மரியாதையாக நின்றார்... மகனை நிமிர்ந்து பார்த்த பெரியவர் தன் எதிரில் இருந்த சோபாவை காட்டி “ உட்காரு சுந்தரம் உன்கிட்ட முக்கியமா பேசனும்” என்றார்

சுந்தரத்திற்கு பெரியவரின் முகத்தைப் பார்த்ததுமே விஷயம் பெரியது என்று புரிய தன் அப்பாவின் எதிரில் அமர்ந்து “ சொல்லுங்கப்பா?” என்றார்...
சற்றுநேரம் அமைதியாக இருந்த பெரியவர் மகன் முகத்தைப் பார்த்து “ உன் மகன் சத்யன் இப்போ என்ன நிலையில் இருக்கான்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்க...

சுந்தரம் குழப்பமானார் “ என்னாச்சுப்பா சத்யனுக்கு?... நல்லாத்தானே இருக்கான்?” என்று பதட்டத்துடன் கேட்க

“ அவன் நல்லாத்தான் இருக்கான் சுந்தரம்.... ஆனா ஒரு நல்ல குடும்பத்துப் பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு அவன் நல்லாத்தான் இருக்கான்” என்று பெரியவர் வெறுப்புடன் கூற....

“ என்னப்பா சொல்றீங்க?” என்று அதிர்ச்சியுடன் எழுந்த சுந்தரத்தை மறுபடியும் அமருமாறு சைகை செய்த பெரியவர் ....

“ ஆமா சுந்தரம்... சத்யன் நம்ம கையை மீறிப் போய் பல வருஷம் ஆச்சு” என்றவர் தான் கேள்விப்பட்ட சத்யனின் நடத்தைகளைப் பற்றி சொல்லிவிட்டு.... “ இதெல்லாம் விட மிகப்பெரிய தவறு ஒன்னு செய்திருக்கான் உன் மகன்” என்று கூறியவர்.... துயரத்துடன் நெற்றியை தடவிக்கொண்டு “ ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி இங்கேருந்து டாப்சிலிப் போகும்போது கார்ல இருந்த தவறி விழுந்த ஒரு பொண்ணை காப்பாத்தியிருக்கான்” என்று ஆரம்பித்து மான்சிக்கும் சத்யனுக்கும் நடந்த மோதல்கள் அனைத்தையும் விபரமாக தன் மகனிடம் எடுத்து சொன்னவர் “ அந்த பொண்ணை அடைஞ்சே தீரனும்னு இவனும் என்னென்னவோ பண்ணிருக்கான் சுந்தரம்... அந்த பொண்ணு மானத்துக்கும் கற்புக்கும் மரியாதை தர்ற நல்ல பொண்ணு போலருக்கு... இவன் ஆசைக்கு இணங்கவில்லை... ஆனா அந்த பொண்ணு சத்யனை விரும்பியிருக்கு... இவன் அவளை இணங்க வைக்க முடியாம கடைசில ஒரு நாடகம் ஆடிட்டான் சுந்தரம்... அந்த கேவலமான நாடகத்துக்கு என்னையும் உடைந்தையாக்கிட்டான் சுந்தரம்” என்று பெரியவர் வேதனையுடன் புலம்ப...

“ என்ன பண்ணான் அப்பா? விவரமா சொல்லுங்க?” என்றார் சுந்தரம் பதட்டத்துடன்...

அதிகமான குடியால் கல்லீரல் கெட்டுப்போய் பயங்கர வயிற்று வலி என்று சத்யன் சொல்லி தகுந்த ஆதாரங்களுடன் தன்னை ஏமாற்றிய கதையையும்... இவரே போன் செய்து தினாவிடம் சத்யன் அங்கே வருவதாக கூறி அவனை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுமாறு கூறிய கதையை மகனுக்கு சொன்னார் பெரியவர்....

சுந்தரம் மீண்டும் குழப்பத்துடன் அப்பாவைப் பார்த்து “ அவன் உடம்பு சரியில்லைன்னு நடிச்சான் சரி... ஆனா அங்கபோய் என்ன பண்ணான்... இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்பா?” என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்க...
“ அங்கேபோய் அந்த பொண்ணை நடிச்சு ஏமாத்திருக்கான்... ஒருநாள் வயித்து வலி தாங்காம இவன் துடிச்சதும் அந்த பொண்ணு இவன் மேல உள்ள காதலால தன்னோட கட்டுப்பாட்டை மீறி தன்னையே சத்யன் கிட்ட கொடுத்துட்டா... ஆனா சத்யன் மறுநாள் இதெல்லாம் நடிப்புன்னு சொல்லி எவளை கேவலப்படுத்திருக்கான்... அது மட்டுமல்ல முன்னாடி போட்ட கன்டிஷனை சொல்லி அவளை மூனு வருஷம் தன் கூடவே தங்கச் சொல்லி மிரட்டியிருக்கான் ...

"அவளும் இவனோட மிரட்டலுக்கு பயந்து அங்கேயே தங்கி சித்ரவதை படுறா சுந்தரம்... இதெல்லாம் தினாவுக்கு தெரிஞ்சு அவன் உடனே இங்கே கிளம்பி வந்து மொத்த விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டான்.. சத்யன்கிட்ட நான் இதைப்பற்றி கேட்கனும்னு நெனைச்ச சமயத்தில் தான் நீ பிரச்சனையில மாட்டிகிட்ட விஷயம் தெரிய வந்துச்சு.. அதனால இதைப்பற்றி அவன்கிட்ட பேச முடியாம போச்சு... இப்போ எல்லாமே கையை மீறி போயாச்சு சுந்தரம்... ஆமா அந்த பொண்ணு கர்ப்பமா இருக்கா... இந்த மாசத்துல பிரசவிச்சுடுவா... ஆனா இவன் கல்யாணம் குழந்தை குடும்பம் இதையெல்லாம் வெறுக்குறான்... ” என்று பெரியவர் சொல்லி முடிக்க...

சத்யனின் சுயரூபம் தெரிந்த அதிர்ச்சியில் உறைந்துபோய் அமர்ந்திருந்தார் சுந்தரம்...

மகனின் முகத்தை வேதனையுடன் பார்த்த பெரியவர் “ இவன் இப்படி ஆனதுக்கு காரணம் நீதான் சுந்தரம்.... காதல் கல்யாணம் குடும்பம் குழந்தைகள் இதையெல்லாம் அவன் மதிக்காததுக்கு காரணம் நீதான் சுந்தரம்... ஒரு ஊதாரி அப்பனோட மகன் எப்படியிருப்பான் என்பதற்கு சத்யன் நல்ல உதாரணமாயிட்டான்... ஆனா இதனால ஒரு நல்ல குடும்பத்து பொண்ணோட வாழ்க்கை தான் வீனாப் போச்சு.... இதுக்கு நானும் உடந்தைன்னு நினைக்கும் போது மனசுக்கு வேதனையா இருக்கு... என்னோட வளர்ப்பு எவ்வளவு தரம்தாழ்ந்து போச்சுன்னு வேதனையா இருக்கு சுந்தரம்... நீ திருந்தி வந்துட்ட... இனி உன் மகனை திருத்த நீ என்ன செய்யப்போற? ” என்று பெரியவர் கூர்மையாக கேட்க...

சுந்தரம் கண்ணீர் வழிய அவரைப் பார்த்து கும்பிட்டு “ என்னை மன்னிச்சிடுங்கப்பா.. வயசுக்கு வந்த பிள்ளைகளை வச்சுகிட்டு தவறு செய்தா அந்த பிள்ளைகளோட வாழ்க்கை எப்படி தடம்மாறி போகுதுன்னு நான் புரிஞ்சிகிட்டேன்... நான் இன்னிக்கே டாப்சிலிப் போறேன்... சத்யனுக்கு எடுத்து சொல்லி என் மருமகளோட வர்றேன்பா... நம்ம குடும்ப வாரிசு நல்லமுறையில் பிறக்கனும்பா” என்று சுந்தரம் உணர்வுபூர்வமாக பேச...

மகனின் கைகளைப் பற்றிய மகாலிங்கம் “ அதை செய் சுந்தரம்... இந்த குடும்பம் அழியாம காப்பாத்த வேண்டியது அந்த பொண்ணு மட்டும் தான்... எப்படியாவது அவளை கூட்டிட்டு வந்துடு” என்று பெரியவரும் மலர்ந்த முகத்துடன் சொல்ல...

மகாலிங்கத்திடம் இருந்து விடைபெற்ற சுந்தரம் மனதில் ஒரு தீர்மானத்துடன் அங்கிருந்து டாப்சிலிப் கிளம்பினார்.... தன் மகன் வாழ்க்கை சீரழிய தானே காரணம் என்பது அவருக்கு நெஞ்சில் முள்ளாக தைத்தது... குற்றவுணர்வில் குறுகிப்போனார்... அமகனை சரிசெய்யும் பொறுப்பு தனக்கு மட்டுமே என்று உண்டு என்று சுந்தரத்திற்கு புரிந்தது...

ஆனால் மான்சி எப்படிப்பட்டவள் என்பது அவருக்கு தெரியாதே பாவம்.... அவள் பொறுமையில் பூமாதேவி என்றால்... தனது தன்மானத்தை காத்துக்கொள்வதில் புராணகாலத்தில் வாழ்ந்த சிறந்த தமிழச்சி என்று சுந்தரத்திற்கு எப்படி தெரியும்? ... காதலனே ஆனாலும் தன்னை இழிவுபடுத்திய சத்யனை பழிவாங்கும் எண்ணம் அவள் மனதில் வேரூன்றி விருச்சமாகிவிட்டதை இவர் எப்படி அறிவார்?

இரவு உணவை முடித்துக்கொண்டு மிட்நைட்டில் டாப்சிலிப் கிளம்பிய சுந்தரம்.... அங்குபோய் சேரும்போது காலை ஆறு மணியாகியிருந்தது.... வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த சியாமா சுந்தரத்தைப் பார்த்ததும் கையிலிருந்த விளக்குமாற்றை கீழே போட்டுவிட்டு கைகால்கள் உதற “ வாங்கய்யா?” என்றாள்...

அவளின் குரல்கேட்டு வெளியே வந்த சாமுவேல் சுந்தரத்தை பார்த்ததும் சங்கடமாக நெளிந்தபடி “ வாங்கய்யா” என்றான்...

“ எங்கே சத்யன்?” என்று சத்யனைப் போலவே நடுங்க வைக்கும் குரலில் சுந்தரம் கேட்க.... சியாமா சாமுவேல் இருவரும் ஒரே சமயத்தில் சத்யனும் மான்சியும் படுத்திருந்த அறையினை கைநீட்டி காட்டினார்கள்...

சுந்தரம் அந்த அறையை நெருங்க... சியாமா பதட்டத்துடன் அவர் பின்னால் வந்து “ ஐயா மான்சியம்மாவும் அவர் கூடத்தான் தூங்குறாங்க... நீங்க உட்காருங்கய்யா... நான் சின்னய்யாவை எழுப்புறேன்” என்று சங்கடமாக கூற...

சுந்தரத்திற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை... இப்படியொரு சூழ்நிலையை எதிர்பார்த்து அவர் வரவில்லை... ஆனாலும் அந்தப்பெண் தன் மகனுடன் தான் தூங்குகிறாள் என்றதும் அவர் மனதிற்குள் சிறு அமைதி நிலவியது... ‘சரி கூப்பிடு’ என்பதுபோல் தலையசைத்து விட்டு சோபாவில் போய் அமர்ந்தார்...

சியாமா மான்சியின் அறை கதவை நெருங்கி விரலால் தட்டியபடி “ சின்னய்யா... பெரியய்யா வந்திருக்காரு கொஞ்சம் வெளியே வாங்க” என்று சங்கடமாக அழைத்தாள்...

இந்த சூழ்நிலை யாருமே எதிர்பாராதது... மகனை எதிர்பார்த்து மூடிய அறையின் வெளியே காத்திருக்க நேரிடும் என்று சுந்தரம் எதிர்பார்க்கவில்லை... இதுவரை என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்று அவருக்கு தெளிவாக புரிய குற்றம் செய்தவர் போல் தலைகுனிந்தார்...

இரவெல்லாம் கண்ணீரில் கரைந்து அதன்பிறகு அன்று இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் மான்சியும் தன்னை மறந்து சத்யனின் அணைப்பில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்தாள்.... சத்யன் மது போதையோட மான்சியின் போதையும் சேர்ந்துகொள்ள கையால் அவளின் பெரிய வயிற்றை சுற்றி வளைத்துக் கொண்டு உறங்கினான்

கதவை தட்டியும் இருவரும் எழவில்லை என்றதும் சுந்தரம் ஏதோ யோசனை தோன்ற தனது மொபைலை எடுத்து சத்யனின் நம்பருக்கு கால் செய்ய... அவனது மொபைல் மாடியில் ஒலிக்கும் சத்தம் கேட்டது... சுந்தரம் தனது மொபைலை அணைத்துவிட்டு சலிப்புடன் சாமுவேலைப் பார்க்க...

“ மான்சியம்மா நம்பருக்கு அடிங்க ஐயா ... அவங்க எப்பவும் பக்கத்துல தான் வச்சிருப்பாங்க” என்ற சியாமா மான்சியின் நம்பரை சொல்ல... சுந்தரம் அந்த நம்பருக்கு கால் செய்தார்....

தனது தலையணைக்கு கீழேயிருந்த மொபைல் பலமுறை அடித்ததும் தூக்கம் கலைந்த மான்சி.... சூழ்நிலை புரிந்தும் சத்யனின் முரட்டு அணைப்பில் இருந்து விலகமுடியாமல் தலையணைக்குள் கைவிட்டு மொபைலை எடுத்து ஆன் செய்து “ “ ஹலோ யாரு?” என்றாள்..

“ நான் சுந்தரம்... சத்யனோட அப்பா... சத்யனைப் பார்க்கனும்... வெளியே ஹால்ல வெயிட் பண்றேன் ... சத்யனை எழுப்பி அனுப்ப முடியுமா?” என்று சுந்தரம் சொன்னதும்...

மான்சியின் முதுகுத்தண்டு சில்லிட்டு போனது.... ஏதோ கேவலத்தை செய்தவள் போல கூனிக்குறுகி போனாள் “ இதோ சொல்றேன் சார்” என்று மெல்லிய குரலில் சொன்னவள் உடனே இணைப்பை துண்டித்து போனை தலையணைக்கு கீழே வைத்தாள்...

அவமானத்தால் அவ்வளவு காலையில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது... பக்கத்தில் இருந்த சத்யனின் தோளைத் தொட்டு உலுக்கினாள்... அவன் அசையவில்லை.. மறுபடியும் பலமாக உலுக்கினாள்... சிரமமாக கண்விழித்த சத்யன் தன் நிலைமை உணர சிலவிநாடிகள் பிடித்தத பிறகு “ என்ன மான்சி?” என்றான்

மூக்கை உறிஞ்சியபடி “ உங்கப்பா வந்திருக்காராம்... வெளியே வெயிட் பண்றார்... இப்பதான் போன் பண்ணார்” என்றாள் மெல்லிய குரலில் ..

“ என்னது அப்பாவா?” என்று வாறிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவன்.... கலைந்த தலையை கூட சரி செய்யாமல் அவசரமாக கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான்...

சுந்தரம் மகனை ஏறஇறங்க பார்த்தார்... இரவு குடித்த சரக்கின் தாக்கத்தில் சத்யனின் கண்கள் ரத்தமென சிவந்திருக்க... இடுப்பில் வெறும் ஷாட்ஸூடன் நின்றிருந்த மகனைப் பார்த்து சுந்தரம் தலையை குனிந்து கொள்ள...

தனது அப்பாவை எதிர்பார்க்காத சத்யன் திகைப்பு விலகாமல் " என்னப்பா திடீர்னு வந்திருக்கீங்க?" என்று மெதுவாக கேட்க...

இனி பேசித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் தலைநிமிர்ந்த சுந்தரம் " என் மருமகள் எங்க சத்யா? அவளை வரச்சொல்லு பார்க்கனும்" என்றார்...

அவரை கூர்ந்து பார்த்த சத்யன் " என்னது மருமகளா? எவ அவ? " என்று ஏளனமாக கேட்க.... அவன் குரலில் இருந்த ஏளனம் சுந்தரத்தையும் பயப்படுத்தியது...



அப்போது அறைக்கதவை திறந்து கொண்டு வயிற்றில் சத்யனின் பிள்ளையும்... கண்களில் கண்ணீருமாக வெளியே வந்தாள் மான்சி



" என் கண்ணீரையும் என் காதலையும்...

" ஜோடி சேர்க்கத்தான் எண்ணுகிறேன் ....

" என் கண்ணீர் காற்றில் கூட உலர வில்லை!

" ஆனால் என் காதலோ உன்.....

" மூச்சுப் பட்டதுமே உலர்ந்து விடுகிறதே!




No comments:

Post a Comment