Friday, December 11, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 19

அடுத்த இரண்டு நாளும் மான்சியின் வார்த்தை அம்புகள் சத்தமின்றி தாக்க அமைதியாகவே போனது.... அத்தனையயும் மவுனமாக தன் நெஞ்சில் தாங்கினான் சத்யன் ...

நண்பனின் போன்காலுக்காக காத்திருந்தான்... அன்று மாலை சத்யனின் நண்பன் கால் செய்ய அவசரமாக வெளியே போய் மொபைலை ஆன் செய்தான்

“ வேலை முடிஞ்சது சத்யா... நம்மை சேர்ந்தவங்க யார் பெயரும் வெளியே வராது... நாளைக்கு காலையில நியூஸ் பேப்பர் பாரு புரியும்... நான் கொஞ்ச நாளைக்கு ஊருக்குப் போய்ட்டு வர்றேன்.. நீ என்கிட்ட எந்த தொடர்பும் வச்சுக்க வேண்டாம்” என்று சர்வ ஜாக்கிரதையாக பேசினான் நண்பன்... சரியென்று சத்யன் இணைப்பை துண்டித்தான்...



அன்று இரவு தூங்கிய சத்யன் காலை ஆறு மணிக்கு வரும் செய்திதாளுக்காக நாலரைக்கே எழுந்து காத்திருந்தான்.... நேரத்தை கடத்த மான்சிக்கு சந்தேகம் வராத வாறு குளிரில் ஜாக்கிங் செய்தான்... மான்சியை எழுப்பாமல் பால்பவுடரில் டீ போட்டு குடித்துவிட்டு அமர்ந்திருந்தவனுக்கு செய்தித்தாள் எடுத்துவருபவரின் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது....

ஓடிச்சென்று பேப்பரை வாங்கி வந்து பங்களாவின் வாசற்படியில் அமர்ந்து பிரித்துப் பார்த்தான்.... அவனுக்கு தேவையானது விரிவான தலைப்பு செய்தியாக போடப்பட்டிருந்து... முகத்தில் படர்ந்த சந்தோஷத்தை மறைத்து மான்சியின் வீட்டுக்குப் போனான்...

மான்சி எழுந்து முகம் கழுவிவிட்டு காபி போட்டுக்கொண்டிருந்தாள்... இப்போதே சொல்ல வேண்டாம் என்று நிதானமாக குளித்து முடித்து காலை உணவை முடித்துப் பிறகு.... கிச்சனில் ஏதோ வேலையாயிருந்த அவள் பின்னால் போய் நின்றவன் ஒன்றும் தெரியாதன் போல “ இன்னைக்கு நியூஸ் பேப்பர் பார்த்தியா மான்சி? கோவை தொழிலதிபர்கள் நாலுபேர் போன கார் பயங்கர விபத்துக்குள்ளாகிருச்சாம்” என்றான்

கோவை... நான்கு தொழிலதிபர்கள் என்றதும் மான்சிக்கு திக்கென்றது... வேகமாக திரும்பி “ எங்க பேப்பரை கொடுங்க?” என்று அவனிடமிருந்து பேப்பரை வாங்கிப் பார்த்தாள்....

அவள் வேலை செய்த மில் முதலாளிகளும் அந்த மில்லின் ஆடிட்டரும் தான்... புகைப்படங்களுடன் விரிவான செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.... ஏதோ பார்ட்டிக்கு சென்றுவிட்டு பயங்கர போதையில் ஒன்றாக காரில் திரும்பிய நால்வரும் எதிரே வந்த டேங்கர் லாரியில் மோதாமல் இருக்க காரை அதிக்கப்படியாக வளைத்துத் திருப்பியதில் சாலையோர பள்ளத்தில் உருண்டு பயங்கர விபத்து என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது...

மான்சி செய்தித்தாளை நெஞ்சோடு அணைத்தபடி கண்மூடி நின்றாள்.... சத்யன் அமைதியாக அவள் முகத்தில் ஓடிய உணர்ச்சியை கூர்ந்து கவனித்தான்..
மனது ஒரு நிலைக்கு வந்ததும் மீண்டும் செய்தியை வாசித்தாள்.... அவர்கள் நால்வரும் உயிர் பிழைத்தாலும்... ஆளுக்கொரு முக்கிய உடல் உறுப்புகளை இழந்து இனிமேல் அவர்கள் வாழும் பிணங்கள் என்று தெளிவாகப் புரிந்தது.. மான்சியின் கண்களில் கண்ணீர் பெருகியது... அப்படியே சுவற்றில் சாய்ந்துகொண்டாள்

சத்யன் தனது கைக்குட்டையை எடுத்து அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு “ என்ன மான்சி உன்னோட முருகன் சரியான தண்டனை கொடுத்துட்டாரு போலருக்கு?” என்றான் மெல்லிய குரலில்...

மான்சி கண் திறக்காமல் மவுனமாக தலையசைத்தாள்.... சிறிதுநேரம் அப்படியே நின்றிருந்தவள் சட்டென்று உடல் விறைக்க கண் திறந்து அவனை கூர்மையாகப் பார்த்து “ இவங்க தான் என் பழைய முதலாளிகள்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்க...

“ நீதான் என்கிட்ட வேலைக்கு சேர்றதுக்கு முன்னாடியே சொன்னியே மான்சி” என்று அவசரமாக சமாளித்தான் ....முன்புபோலவே அவனது அவசரம் அவனை காட்டிக் கொடுத்தது

“ இல்ல நான் சொல்லலை... நீங்களும் அதைப்பத்தி கேட்கலை... அப்போ இது உங்க வேலைதான்? ... விபத்து மாதிரி செட் பண்ணிருக்கீங்க?” என்று மான்சி உறுதியாக கூற..... சத்யன் மவுனமானான்....

மான்சி கண்கள் சிவக்க நிமிர்ந்தாள் “ அவங்களுக்கு தண்டனை கொடுக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்குது? அவனுங்க என்னை தொட முயன்றதுக்கு நீங்க தண்டனை கொடுத்துட்டீங்க... ஆனா நீங்க எனக்கு செய்த பயங்கரத்துக்கு யார் தண்டனை கொடுப்பது?” மான்சியின் கேள்விகள் ஈட்டியாய் சத்யன் நெஞ்சில் இறங்கியது...

அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் சுவர்ப் பக்கமாக திரும்பியவன் சுவற்றில் மடாரென்று தன் தலையை மோத.... அவன் மோதிய வேகத்தில் அந்த சிறிய வீடே அதிர்ந்தது போல இருந்தது

அந்த சத்தம் மான்சியின் காதுகளில் காய்ச்சிய ஈயமாக வந்து விழுந்தது “ ஆஆஆஆ........... அய்யோ.... என்ன இது?... ” என்று அலறி துடித்தபடி அவன் தலைமுடியைப் பற்றி அடுத்து சுவற்றில் மோதாமல் தடுத்து முகத்தை தன் பக்கமாக திருப்பினாள்...

சத்யனின் நெற்றி பிளந்து ரத்தம் வழிந்தது... அவன் கண்களில் கண்ணீர்.... ரத்தத்தைப் பார்த்ததும் மான்சி துடித்துப் போனாள்... தனது முந்தானையை எடுத்து அவன் நெற்றியில் வைத்து அழுத்தி தன் நெஞ்சில் அவன் முகத்தை சாய்த்தாள்

சத்யன் உதறி விலகினான்.... ரத்தம் வழியும் நெற்றியுடன் சேரில் போய் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினான்.... “ நான் பண்ணது கொடும் பாவம்தான்... நீயே எனக்கு தண்டனை கொடு மான்சி” என்று கதறினான்

மான்சி ஓடிச்சென்று பஞ்சும் மருந்தும் எடுத்துவந்து பிடிவாதமாக அவன் கைகளை விக்கிவிட்டு ரத்தத்தை துடைத்து மருந்திட்டு பிளாஸ்டர் போட்டாள்.... ஒரு ஈர டவலை எடுத்து வந்து முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்தாள்... அவன் சட்டையில் ஆங்காங்கே ரத்தத்துளிகள் இருக்க பட்டன்களை விடுவித்து சட்டையை கழட்டி எடுத்துச்சென்று தண்ணீரில் அலசினாள்.....

சேரில் அமர்ந்திருந்த சத்யன் கண்மூடி பின்புறமாக தலையை சாய்த்துக்கொள்ள... அவன் அருகிலேயே வெகுநேரம் நின்றிருந்தாள்.... “ போய் லதா அக்காகிட்ட ஓரு இன்ஜெக்ஷன் போட்டுக்கங்க” என்று மான்சி கெஞ்சினாள்...

சத்யன் எழுந்து வேறு சட்டை எடுத்து மாட்டிக்கொண்டு “ இன்னைக்கு எஸ்டேட்ல லேபர்ஸ் மீட்டிங் இருக்கு நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு வேகமாக வெளியேறி கார்செட்டில் இருந்து காரை வெளியே எடுத்தான்

அப்போது மான்சி காரின் அருகே வர... சத்யன் என்ன என்பது போல் பார்த்தான்.... இறக்கி விடப்பட்ட கண்ணாடி வழியாக குனிந்து அவன் முகத்தைப் பார்த்து “ என்னை நம்ப வைக்கிறதுக்காக உங்களை வருத்திக்கிறத எப்பதான் விடுவீங்க சத்யன்?..... முன்னாடி நடிப்பாயிருந்தாலும் ரொம்ப பெர்பெக்டா மாசக் கணக்கில் பட்டினி கிடந்து உடலை மெலியவச்சு தாடி மீசை வளர்த்து ரொம்ப சிரமப்பட்டீங்க.... இப்பயும் பாருங்க சுவத்துல முட்டிக்கிட்டு சிரமப்படுறீங்க.... எவ்வளவு ரத்தம் வேஸ்டா போச்சு?... விட்டுடுங்க சத்யன்... எனக்கு நம்பிக்கை வராது... வரவே வராது” என்று மான்சி நக்கலாக சொல்ல.....

சற்றுமுன் கண்ணீருடன் காயத்திற்கு மருந்திட்ட மான்சி எங்கே? சத்யன் மவுனமாக அவளையேப் பார்த்திருந்துவிட்டு “ சரி வழிவிடு நான் போகனும்” என்று காரை ஸ்டார்ட் செய்ய... ஒரு ஏளனப் புன்னகையுடன் ஒதுங்கி வழிவிட்டாள் மான்சி


அன்று மதியம் சத்யன் வரவேயில்லை என்றதும் அவன் மொபைலுக்குகால் செய்தாள் மான்சி ... ஒரே ரிங்கில் எடுத்த சத்யன் “ இன்னும் மீட்டிங் முடியலை... நான் ஈவினிங் தான் வருவேன் மான்சி... நீ வெயிட் பண்ணாம சாப்பிடு” என்று கூறிவிட்டு வைத்துவிட்டான்....

ஏதாவது சாப்பிட்டானா என்று கேட்க நினைத்த மனதை அடக்கிக்கொண்டு தான் மட்டும் சாப்பிட்டுவிட்டு படுத்தாள்... உறக்கம் வரவில்லை... மீண்டும் செய்தித்தாளை எடுத்துப் புரட்டினாள்.... ம்ம் நிறைய வேலைகள் செய்திருக்கிறான்... என்று எண்ணியபடி காலையில் நடந்ததை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.... சத்யனின் ரத்தம் வழியும் முகம் அவள் இதயத்தை கசக்கியது....

அன்று மாலை ஆறு மணிக்கு வந்த சத்யன் தனது அறைக்குப் போய் சில கணக்குளை எழுதி... சில பைல்களைப் பார்த்துவிட்டு குளித்து ஷாட்ஸ்ம் டீசர்ட்டும் அணிந்து மான்சியின் வீட்டுக்கு வரும்போது மணி ஏழரை ஆகியிருந்தது..

வந்தவன் மான்சியின் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் வெளியே வந்து தோட்டத்தில் கிடந்த பெஞ்சில் போய் அமர்ந்தான்... சாப்பிடக்கூட வரவில்லை.... இரவு எட்டானதும் மான்சி வெளிய வந்து அவனை நெருங்கி “ சாப்பிட வரலையா?” என்று மெல்லிய குரலில் அழைக்க....

அவளை நிமிர்ந்துப்பார்த்த சத்யனின் கண்கள் ரத்தமென ஒளிர்ந்தது... அழுதானோ என்று மான்சி எண்ணும்போதே கீற்றாய் ஒரு புன்னகையுடன் “ எனக்கு பசிக்கலை .. நீ போய் சாப்பிடு மான்சி... நேரமாச்சு”என்று கூறிவிட்டு சிமிண்ட் பெஞ்சின் பின்னால் சாய்ந்துகொண்டான்

மான்சி சிறிதுநேரம் நின்றிருந்தாள் “ பசிக்கலை மான்சி... நீ போ” என்று வற்புறுத்தி சொன்னான் சத்யன்.... மானசி எதுவும் பேசாமல் அங்கிருந்து நகன்றாள்...

அரை மணிநேரம் கழித்து வெளியே வந்து தோட்டத்தில் நடக்க ஆரம்பித்தாள்... கொஞ்சம் மூச்சு வாங்கியதால் மெல்ல நடந்தாள்... அவளையேப் பார்த்தபடி அமர்ந்திருந்த சத்யன் வேகமாக எழுந்து வந்து அவளுடன் இணைந்துகொண்டு “ என்னாச்சு மான்சி முகமெல்லாம் வேர்த்து வழியுது... உடம்புக்கு ஏதாவது பண்ணுதா ” என்று கவலையுடன் கேட்க...

“ இல்ல ரொம்ப புழுக்கமா இருக்கு... மழை வரும்னு நெனைக்கிறேன்” என்று திணறலாக பதில் சொன்னாள்....

“ ம்ம் அப்படித்தான் நினைக்கிறேன்.... நீ ரொம்ப திணர்ற மாதிரி இருக்கு ...நடந்தது போதும் வா” என்று கவலையுடன் கூறிவிட்டு அவள் கையைப் பற்றிக்கொண்டு வீட்டுக்குத் திருப்பினான்... மான்சிக்கும் ரொம்ப இறுக்கமாக இருப்பது போல் தெரிய எதுவும் சொல்லாமல் மெல்ல நடந்து வீட்டுக்கு திரும்பினாள்...

வீட்டுக்குள் போனதும் “ குளிச்சிட்டயா மான்சி?” என்று கேட்டபடி அவளது படுக்கையை விரித்துப் போட்டான்

சத்யனின் கையைப்பிடித்துக் கொண்டு விரித்திருந்த படுக்கையில் மெல்ல சரிந்து அமர்ந்தாள் “ இன்னிக்கு சாயங்காலமாவே குளிச்சிட்டேன்.... கொஞ்சம் தண்ணீ எடுத்துட்டு வர்றீங்களா?” என்று கேட்க...

சத்யன் ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.. “ லதாவுக்கு கால் பண்ணி வரச் சொல்லவா மான்சி” என்று சத்யன் கவலையுடன் கேட்க...

“ வேனாம் வேனாம்.... அவங்க சொன்ன தேதிக்கு இன்னும் ஆறு நாள் இருக்கு... அடிக்கடி இது போல வரும்னு சொன்னாங்க... வயிறு கொஞ்சம் டைட்டா இருக்குற மாதிரி இருக்குமாம்... ஆனா பயப்பட வேண்டியதில்லை...” என்று படுக்கையில் சரிந்து படுத்தவள்... “ நீங்க சாப்பிட்டு படுங்க.. சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்” என்ற மான்சியின் குரல் கெஞ்சுவதுபோல் இருக்க...




சத்யன் அவள் கண்களை உற்றுப் பார்த்தான்... மான்சி தன் பார்வையை தழைத்துக் கொண்டு “ இனிமேல் அதுபோல பேசமா இருக்க முயற்சி பண்றேன்.. இப்போ போய் சாப்பிடுங்க ப்ளீஸ்” என்று மெல்லிய குரலில் கூறினாள்....

சத்யனுக்கு இதுவே போதாதா? இந்த சின்ன கனிவான பேச்சுக்கே அவனுக்கு உள்ளம் துள்ளியது... “ ம் சாப்பிடுறேன் மான்சி” என்றவன் எழுந்து கிச்சன் தடுப்புக்குள்ள போய் சாப்பாட்டை எடுத்துவந்து மான்சிக்கு அருகில் அமர்ந்துகொண்டு சாப்பிட ஆரம்பித்தான்...

அவன் பார்க்கும்போதே மான்சிக்கு அதிகமாக வியர்த்தது.. முந்தானையால் அடிக்கடி முகத்தைத் துடைத்துக்கொண்டாள்... காய்ந்து போன உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டாள்.. சத்யன் கொடுத்த தண்ணீர் காலியாகிவிட மறுபடியும் தண்ணீருக்காக அவனைப் பார்த்தாள்...

சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்துபோய் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்... எழுந்து அமர்ந்து தண்ணீரை குடித்தவள் “ இதுபோல சூட்டுவலி வந்தா வயித்துல விளக்கெண்ணெய் தடவச் சொல்லி ராசாத்தி அக்கா சொன்னாங்க.. எண்ணையும் வாங்கிட்டு வந்து குடுத்திருக்காங்க.. கிச்சன் ஷெல்பில் இருக்கு எடுத்துட்டு வந்து குடுக்குறீங்களா?” என்று மான்சி திணறலாக கேட்டதும்...

சாப்பிட்டது போதும் என்று எழுந்த சத்யன்... எல்லாவற்றையும் எடுத்துச்சென்று வைத்துவிட்டு விளக்கெண்ணெய் பாட்டிலை எடுத்து வந்து அவளிடம் கொடுத்துவிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்து “ எனக்கு பயமாயிருக்கு மான்சி.. லதாவுக்கு போன் பண்ணவா?” என்றான்...

“ ம்ஹூம் அன்னைக்கே அவசரப்பட்டு போன் பண்ணிட்டு அக்கா வந்து கேலி பண்ணாங்க... இது சும்மா வலிதான்... நான் பாத்ரூம் போய் எண்ணை தடவிக்கிட்டு வர்றேன்” என்று எழுந்தவளை தடுத்து மீண்டும் படுக்க வைத்த சத்யன்...

“ இப்பக்கூட என்ன பிடிவாதம்? என்னை ஒரு நர்ஸா நெனைச்சுக்கோ மான்சி ப்ளீஸ்” என்றவன் அவளிடமிருந்து எண்ணை பாட்டிலை வாங்கிக்கொண்டு “ நேராப் படு மான்சி” என்றான்...

மான்சிக்கும் வேறு வழியில்லை... அடிவயிறு இறுக்கமாக இருக்க... குழந்தை அடிக்கடி சுழன்றபடி தனது தலையை இடம் மாற்றிக்கொண்டு இருந்தது... இந்த நிலையில் பாத்ரூமுக்கு எழுந்து போகமுடியுமா என்று தெரியவில்லை? ... கால்களை நீட்டி மல்லாந்து படுத்தாள்...

சத்யன் லேசாக கைகள் நடுங்க வயிற்றின் மீது கிடந்த முந்தானையை விலக்கினான்.... தந்த நிறத்தில் இருந்தது மான்சியின் வயிறு... சில இடங்களில் ஓடிய பச்சை நரம்பு அவள் நிறத்தை மேலும் வெளுப்பாக காட்டியது... சத்யன் வலது உள்ளங்கையில் எண்ணையை ஊற்றி மான்சியின் தொப்புளில் வழியவிட்டான்.. பிறகு வயிறு முழுவதும் பரவலாக தடவினான்... இடது பக்கமாக எண்ணையை தடவிக்கொண்டு இருக்கும்போது வயிற்றில் ஏதோ அசைந்து அந்த இடத்தில் உருண்டையாக மேலெழும்பி மீண்டும் அடங்கியது போலிருக்க... சத்யன் “ ஆஆ.....ஆ.....” வென்று அதிர்ந்து போய் கையை எடுத்துக்கொண்டான்...

கண்மூடியிருந்த மான்சியின் இதழ்களில் மெல்லிய புன்னகை ஓடி மறைந்தது ... முகம் சிவந்து போக “ பாப்பா தான்..... அடிக்கடி இப்படி உள்ளுக்குள்ள சுத்தி சுத்தி வரும்... தலையால் முட்டும்... காலால் உதைக்கும்... நைட்ல தான் ரொம்ப படுத்தும் ” என்று அவனுக்கு தெரியாத தகவலை சொன்னாள்...

சத்யனால் பேச முடியவில்லை.... குழந்தையா அசைந்தது?.... என் கையைத் தொட்டுப் பார்த்ததா? இல்ல ஏன்டா என்னை தொடுற என்று உதைத்து விலக்கியதா? இல்லை அப்பாவோட கை என்று என் கைக்கு முத்தம் கொடுத்துவிட்டு சென்றதா? சத்யனின் கைகள் அதிகமாக நடுங்கியது.... 


மான்சி அப்படியே கிடக்க... சத்யன் மீண்டும் எண்ணையை ஊற்றி தடவினான்... மேல் வயிற்றில் தடவியபடி புடவையை இறக்கிவிட்டு அடிவயிற்றில் தேய்த்தான்... இப்போது மான்சியின் வயிறு முழுமையாக உருண்டு திரண்டு அவன் பார்வையில்

எண்ணையின் வழுக்கலில் சத்யனின் கை மெல்ல குழந்தையின் அசைவுகளை கண்டுபிடித்தது... சத்யனின் உணர்வுகளை வடிக்க வார்த்தைகள் இல்லை... இது என் பாப்பா என்றவனின் கண்களில் கண்ணீர்.... தன் குழந்தையை தொட்டுவிட்ட புன்னகை உதடுகளில்... குழந்தையின் அசைவுகளை உணர்ந்த கைகளில் நடுக்கம்... இது நிஜமா என்ற பதட்டத்தால் இதயத்தில் படபடப்பு.... மெல்லத் தடவியவனின் கை துள்ளியமாக கண்டது தன் பிள்ளையின் அசைவுகளை...
இடது பக்க இடைப்பகுதியில் தடவிவாறு “ பாப்பாவோட தலை இங்கதான் இருக்கு போலருக்கு மான்சி” என்றவனின் குரலில் உலகின் எட்டாவது அதிசயத்தை கண்ட சிலிர்ப்பு....

கண்மூடிக்கிடந்த மான்சி “ ம்ம் ” என்றாள்... அவள் வயிற்றின் அருகே மண்டியிட்டு அமர்ந்து எண்ணை தடவிய சத்யனால் அதற்குமேல் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை... பட்டென்று குனிந்து எண்ணை தடவிய வயிற்றில் அழுத்தமாக முத்தம் ஒன்றை பதித்தான்... இரண்டாவதாக ஒரு முத்தம்.. அடுத்தாக ஒன்று... சத்யனின் உதடுகளும் மீசையும் எண்ணை பூசிக்கொண்டது.... மான்சி உடலில் ஒரு மின்சார அதிர்வு “ போதும்” என்றாள் மெல்லிய குரலில்....

சத்யன் இதுவே சொர்க்கம் என்பதுபோல் மகிழ்ச்சியுடன் நிமிர்ந்தான்..... முந்தானையை இழுத்து வயிற்றை மூடிவிட்டு எழுந்துபோய் கை கழுவிவிட்டு வந்தான்... மான்சி ஒருக்களித்துப் படுத்திருந்தாள்.... சத்யன் தனது படுக்கையை அவளுக்கு அருகில் போட்டான்... அவள் ஏதுவும் சொல்வதற்கு முன்பு அவசரமாக படுக்கையில் விழுந்தான்....

சுவர் பக்கமாக திரும்பி படுத்திருந்தாள் “ உங்க இடத்தில் போய் படுங்க சத்யன்” என்ற மான்சியின் குரல் அதட்டலாக ஒலித்தது...

அவளை நெருங்கிய சத்யன் “ ப்ளீஸ்மா ... நான் எதுவுமே பண்ண மாட்டேன்... சும்மா உன்னை தொட்டுகிட்டு மட்டும் படுத்திருக்கேன்... இந்த நிலைமையில உனக்கு என்ன பண்ணுதுன்னு தெரியாம என்னால தள்ளியிருந்து தவிக்க முடியாது... தயவுசெஞ்சு மறுக்காதே மான்சி ” சத்யனின் குரல் ரொம்பவும் இறங்கி வந்து கெஞ்சியது....

மான்சியிடம் பதிலில்லை... சத்யன் அன்றுபோலவே அவளை முதுகுப் பக்கமாக நெருங்கி முந்தானைக்குள் கையை விட்டு எண்ணை தடவிய வயிற்றில் கையை வைத்து படுத்துக்கொண்டான்... பொட்டு உறக்கம் வரவில்லை சத்யனுக்கு... குழந்தை அடிக்கடி அசைந்து அவன் கையைத் தொட்டுத்தொட்டு சென்றது....

சத்யன் சிகரத்தில் ஏறி சிறகடித்துப் பறந்தான்... மான்சி உறங்கிவிட்டாள் என்பது அவளின் சீரான சுவாசத்தில் கண்டுகொண்டு இந்த காதல் கள்வன் மெல்ல சரிந்து அவள் பிடரியில் இருந்த புடவை தலைப்பை விலக்கிவிட்டு தனது முகத்தை அங்கே வைத்துக்கொண்டு அவள் போர்வைக்குள் புகுந்து இன்னும் நெருக்கமாக அவளை அணைத்துக்கொண்டான்...

தன் குழந்தையின் தடமறியும் ஆவலில் அவன் கை அவள் வயிறு முழுவதும் தடவிய படியே இருந்தது... அவனின் இதமான வருடலில் அன்று முழுவதும் சரியாக தூங்காத மான்சி அயர்ந்து உறங்கினாள்... யாருமற்ற சூழ்நிலையில் எதிர்ப்பில்லாத ஒரு இணக்கம் மான்சியிடம்.... சத்யனும் மனம் நிறைந்த சந்தோஷத்தில் மெல்ல கண்ணயர்ந்தான்...


சரியாக பனிரெண்டரைக்கு மான்சியிடம் அசைவை உணர்ந்து கண்விழித்த சத்யன் அவள் உணரும்முன் சட்டென்று விலகி எழுந்து அவளின் வியர்த்த முகத்தைப் பார்த்து பதறி “ என்னடா பண்ணுது?” என்று கவலையாக கேட்க

எழுந்து அமர்ந்திருந்து ஒரு கையை தரையில் அழுத்தி ஊன்றி மறு கையை இடுப்பில் அழுத்திக்கொண்ட மான்சி லேசாக ஆரம்பித்த வலியால் கீழுதட்டை அழுத்தமாக கடித்துக்கொண்டு “ வயிறு வலிக்குது... எப்படி வலின்னு சொல்லத் தெரியலை ” என்றாள் வேதனையுடன்...

சத்யன் வேகமாக ஓடிச்சென்று தனது மொபைலை எடுத்து வந்து மான்சியின் அருகில் வந்து “ லதாவுக்கு கால் பண்றேன்” என்று ஆன் செய்ய...

மொபைலை வாங்கி பக்கத்தில் வைத்த மான்சி “ இதுபோல அடிக்கடி வலி வரும்னு அவங்கதான் சொல்லிருக்காங்களே... அதோட பிரசவ வலி எப்படியிருக்கும்னு சொல்லிருக்காங்க... இது அது இல்லை ” என்று பத்துப் பிள்ளை பெற்றவள் போல் பேசினாள்...

“ நீதானே மான்சி இது எப்படி வலின்னு சொல்லத் தெரியலைன்னு சொன்ன? எனக்கு பயமாயிருக்கு மான்சி” என்று சத்யன் சொல்ல

“ ஒரு பயமும் கிடையாது... நீங்க அதே விளக்கெண்ணெய்யும் மிளகுத்தூளும் ஒரு ஸ்பூனும் எடுத்துட்டு வாங்க” என்று மான்சி கூறியதும் ... எதற்கு என்று கேட்காமலேயே ஓடிப்போய் எடுத்துவந்து கொடுத்தான்....

“ மிளகுத்தூளை விளக்கெண்ணெய்ல குழைச்சி உள்ளுக்கு சாப்பிட்டா சாதரண வலியா இருந்தா நின்னுபோயிடும்னு ராசாத்தி சொல்லுச்சு” என்று மான்சி சொன்ன அடுத்த நொடி சத்யன் ஸ்பூனில் விளக்கெண்ணெயை ஊற்றி அதில் சிறிது மிளகுத்தூளை கொட்டி விரலால் கலந்து மான்சியிடம் கொடுக்க...
மான்சி அதை வாங்காமல் “ அதை வழிச்சு என் நாக்குல தடவுங்க” என்று நாக்கை நீட்டினாள்....

சத்யன் கண்களை மூடி தனது அம்மாவை மனதில் கொண்டு வந்து ‘ மான்சி ரொம்ப வேதனைப்படாம நீதான் உடனிருக்கனும் அம்மா’ என்று நினைத்துக்கொண்டு ஸ்பூனில் இருந்ததை வழித்து மான்சியின் நாக்கில் தடவினான்... மான்சி கண்ணை மூடிக்கொண்டு விழுங்கினாள்....

ஃபேன் காற்று போதாமல் மேலும் மேலும் மான்சிக்கு வியர்க்க... சத்யன் நியூஸ் பேப்பரை எடுத்து வந்து .. அவள் அனுமதியின்றி கழுத்தை ஒட்டிக்கிடந்த முந்தானை எடுத்து கீழே போட்டுவிட்டு நியூஸ் பேப்பரால் விசிறிவிட ஆரம்பித்தான்....

மான்சி தடுக்கவில்லை... ரொம்ப சிரமமாக உட்கார்ந்திருந்தாள் புருவம் சுழித்திருக்க.. கலைந்த கூந்தலை அள்ளி கொண்டையாக வளைத்துப் போட்டாள்.... நெற்றியில் வழிந்த வியர்வையை அவள் முந்தானையால் ஒற்றியெடுத்தான் சத்யன்... சற்று துணிச்சல் பெற்று சத்யன் சவர் பக்கமாக சாய்ந்து மான்சியை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்... அந்த நிலை மான்சிக்கு சவுகரியமாக இருக்க கால்களை நீட்டி அவன்மீது சாய்ந்துகொண்டாள்

இருவருமே பதட்டமாக இருந்தனர்.... சற்றுநேர தவிப்புக்குப் பிறகு “ எனக்கு டாய்லட்க்கு போகனும்” என்று மான்சி அவனிடமிருந்து விலகி கையூன்றி எழு முயல... சத்யன் அவளுக்கு முன் எழுந்து அவளை அணைத்தார்ப் போல் தூக்கி நிறுத்தினான்...

வயிற்றில் எண்ணை தடவ புடவையை லூசாக்கியதால் புடவை முற்றிலும் அவிழ்ந்து விழ... பதட்டமாக குனிந்தவளை தடுத்த சத்யன்... “ மொதல்ல டாய்லட் போய்ட்டு வா ... பிறகு புடவையை கட்டிக்கலாம்” என்றபடி அவளை மெல்ல நடத்தி கிச்சன் தடுப்பை ஒட்டியிருந்த குளியலரையுடன் கூடிய டாய்லெட் அழைத்து சென்றான்...


மான்சி உள்ளே போய் கதவை மூட முயல.... அதை பாதியாய் தடுத்த சத்யன் “ நீ இருக்கும் நிலைமை எனக்கு பயமாயிருக்கு மான்சி... கதவை மூடாதே... நான் இங்கயே நிக்கிறேன் ” என்று வேதனையாக சொல்ல...

மான்சிக்கும் கதவைச் சாத்திவிட்டு போக பயமாகத்தான் இருந்தது... குளியலறைக்கும் டாய்லெட்டிற்கும் நடுவே இடுப்பு உயரத்திற்கு தடுப்பு சுவர் இருக்க மான்சி தடுப்பு சுவரை பலமாகப் பற்றிக்கொண்டு டாய்லெட் பக்கம் போனாள்....

சத்யன் தவிப்புடன் நிமிடத்திற்கு ஒருமுறை “ மான்சி மான்சி “ என்று அழைத்தபடி நின்றிருந்தவன் ... மான்சியின் வேதனை முனங்கல் அதிகமாக கேட்டதும் தடுப்பு சுவரின் அருகில் போய் நின்று “ மான்சி நீ என்னம்மா ? ” என்றான்...

கூச்சத்துடன் மெல்ல சுவற்றைப் பிடித்து எழுந்த மான்சி.... “ நீங்க வெளியே போங்க... நான் வர்றேன் ” என்றவளை பொய்யாய் முறைத்த சத்யன் அவள் கைப்பற்றி மெல்ல இழுத்து குளியலறையில் விட்டுட்டு டாய்லட்டில் தண்ணீரை திறந்து விட்டான்...

நகரமுடியாத அளவுக்கு மான்சியின் வலி அதிகரிக்க... மெல்ல கைப்பிடித்து வெளியே அழைத்து வந்து சேரில் அமர்த்திவிட்டு மணியைப் பார்த்தான்... அதிகாலை 2-50 ஆகியிருக்க “ மான்சி வலி அதிகமா இருக்கா?” என்று கேட்டவனைப் பார்த்து கண்கலங்க தலையசைத்து ஆமாம் என்றாள் மான்சி
அவள் முகத்தை கையில் ஏந்தி “ அப்போ லதாவுக்கு போன் பண்ணிட்டு க்ளினிக் போயிடலாமா?” என்று கலவரத்துடன் சத்யன் கேட்க....

“ போகலாம்.... அதுக்கு முன்னாடி நான் குளிச்சிட்டு வேற டிரஸ் போட்டுக்கிறேன்... இது மொத்தம் எண்ணையா இருக்கு” என்று மான்சி சொன்னதும்... சத்யன் ஓடிச்சென்று ஸ்டவ்வை பற்றவைத்து ஒரு பாத்திரத்தில் வெண்ணீர் வைத்துவிட்டு ... மான்சிக்கு தேவையானவற்றை அவள் சொல்ல சொல்ல ஒரு பையில் எடுத்து வைத்தான்... பின்னர் அவள் குளித்துவிட்டு உடுத்திக்கொள்ளும் உடையை எடுத்து பாத்ரூமில் போட்டுவிட்டு வெண்ணீரை எடுத்துப் போய் பக்கெட்டில் ஊற்றினான்...

மீண்டும் மான்சியின் கைப்பிடித்து பாத்ரூம்க்கு அழைத்துச்சென்று குளிக்க உதவினான்.... மான்சி லேசாக குனிந்து நிற்க இடுப்பில் மிதமான சூட்டில் இருந்த வெண்ணீரை ஊற்றினான்.. அன்று மறுத்த மான்சி இன்று அமைதியாக அவன் சேவையை ஏற்றுக்கொண்டாள்... அவள் இருக்கும் நிலையில் எதையும் மறக்கவும் முடியவில்லை.. சத்யனின் உதவியை வெறுக்கவும் முடியவில்லை...

ஈரப் பாவாடையின் முடிச்சை அவிழ்த்தவன் அது கால்வலியாக அவிழ்ந்து விழும்முன் புதிய பாவாடையை தலை வலியாக மாட்டினான்.. ரவிக்கையை எடுத்துப் போட்டுக்கொண்டு மான்சி புடவையை கட்டும் போது இரவுப் பார்த்ததை விட வயிறு இப்போது சிறியதாகிவிட்டது போல் இருக்க... சத்யன் பயத்துடன் வயிற்றை வருடியவாறு “ மான்சி வயிறு ரொம்ப குட்டியா ஆயிட்ட மாதிரி இருக்கு.. சீக்கிரமா வா போகலாம்” என்றவன் லதாவுக்கு கால் செய்தான்....

நான்கு ரிங்குகளுக்குப் பிறகு எடுத்த லதா “ என்ன சத்யா? மான்சிக்கு வலி வந்திருக்கா ?” என்று கேட்க

“ ஆமா லதா... நைட்ல இருந்தே தவிப்பா இருந்தா.. இப்போ பனிரெண்டு மணிலேருந்து சுத்தமா தூங்கலை” என்றவன் அடுத்து நடந்தவைகளை ஒன்றுவிடாமல் கூறிவிட்டு “ இப்போ அங்கேதான் வர்றோம் .. எல்லாத்தையும் ரெடி பண்ணி வைங்க” என்று கூறி காலை கட் செய்துவிட்டு...

மழையில் நனைந்தபடி வெளியே ஓடி காரை எடுத்து கேட் அருகே நிறுத்திவிட்டு வந்து அவளுக்கு தேவையானவை இருந்த பையை எடுத்துப்போய் காரில் வைத்துவிட்டு மீண்டும் வந்து மான்சியை அழைத்துப்போனான்... முதலில் பின்புறம் கதவை திறந்து அமர வைத்தவன்.. “ ம்ஹூம் வேனாம் நீ முன்னாடியே உட்காரு” என்று எழுப்பி முன்பக்கமாக உட்கார வைத்துக்கொண்டான்..



எடுத்தவுடனே வேகமெடுத்தவன் மான்சி முகத்தைப் பார்த்துவிட்டு வேகத்தை குறைத்துவிட்டு ஒரு கையால் அவளை வளைத்து மறுகையால் காரை செலுத்தினான்... மான்சி உதட்டைக் கடித்து வலியைப் பொருத்து ... வயிற்றை விரல்களால் அழுத்தியபடி சீட்டில் சாய்ந்துகொண்டாள்..

திடீர் திடீரென மான்சியின் மூச்சுகள் வேகமாக சத்யனுக்கு பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது.... காரின் வேகத்தை குறைத்து எட்டி அவளை அணைத்து “ ரொம்ப வலிக்குதா கண்ணம்மா? இதுக்குத்தான் மொதல்லயே கெளம்பச் சொன்னேன்? இன்னும் கொஞ்ச தூரம்தான்” என்று கலக்கமாக சொன்னவன் தோளில் முகத்தை வைத்து அழுத்திக்கொண்ட மான்சி

“ தாங்குற அளவுக்குதான் வலிக்குது.. ஆனா என்னையும் மீறி யூரின் வர்ற மாதிரி இருக்கு அதான் பயமாயிருக்கு” என்று மான்சி வேதனைக் குரலில் சொல்ல...

சத்யன் பதட்டத்துடன் அவளை விலக்கி விட்டு அவள் காலடியில் பார்த்தான்... புடவையும் பாவாடையும் நனைந்து போய் காரின் கார்பெட்டில் நீர் தேங்கியிருந்தது.... கலங்கிப் போனான் சத்யன்... அவசரமாக காரை ஸ்டார்ட் செய்து விரட்டினான்.... வெளியே மழை வலுத்தது

கால் மணிநேரத்தில் லதாவின் க்ளினிக் வந்துவிட... லதா வாசலிலேயே குடை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள்... சத்யன் காரை நிறுத்திவிட்டு ஓடி வந்து மறுபக்கம் கதவை திறந்து இறங்குவதற்குள் மான்சியை தூக்கிக்கொண்டான்.. லதா ஓடிவந்து மான்சியின் தலையருகே குடை பிடிக்க... உள்ளே தூக்கிப்போன சத்யன் லதா சொன்ன அறைக்குள் கொண்டு போய் அங்கிருந்த உயரமான கட்டிலில் கிடத்தினான்....

லதாவின் க்ளினிக் மிக சிறியது... மாடியில் வீடும்... கீழே க்ளினிக்கும் இருந்தது... முன்னால் சிறிய ஹால்.. அதன் வலதுபக்க அறையில் காயங்களுக்கு கட்டுப போட மற்றும் ஊசி போட பயன்படுத்தினாள்... இடதுபக்க அறை லேபர் ரூம்...ஹாலை அடுத்த பெரிய அறையில் மூன்று கட்டில்கள் கொண்ட வார்டு.... உதவிக்கு ஒரு பெண் மட்டுமே... அவளும் இன்று விடுமுறை.... இவ்வளவு தான் லதாவின் க்ளினிக்...

மான்சியை படுக்க வைத்ததும் ... லதா பச்சை அங்கியை மாட்டிக்கொண்டு “ மான்சியோட புடவையை ரிமூவ் பண்ணிடு சத்யா... ப்ளவுஸோட ஊக்குகளை அவுத்து மூச்சுநல்லா வர்றமாதிரி பண்ணு... ம்ம் சீக்கிரம்... ஏற்கனவே பனிக்குடம் உடைஞ்சிட்டது போல .” என்றவள் தேவையான உபகரணங்களை எடுத்து பீங்கான் தட்டில் வைத்துக்கொண்டு மான்சியின் கால்களுக்கு நடுவே வைத்துவிட்டு பாவாடையை முழங்காலுக்கு மேலே உயர்த்தி விட்டு மான்சியின் கால்களை விரித்து வைத்தாள்....

சத்யன் ரவிக்கையின் ஊக்குகளை கழட்டியபடி மான்சியின் முகத்தைப் பார்த்தான்... மான்சியின் உரமேறிய இதயம் வலியை தாங்கியது... முக்கி முனங்கினாளே தவிர வாய்விட்டு கத்தவில்லை... மொத்த ரத்தமும் முகத்தில் தேங்கியது போல கருஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருந்தது மான்சியின் முகம்.....

விரித்த கால்களுக்கு நடுவே லதா ஏதோ செய்துகொண்டிருக்க இங்கே மான்சியின் வேதனை முனங்கல் அதிகமானது... “ மூச்சை நல்ல முக்கி விடு மான்சி ”... என்று அவள் தொடைகளை தட்டி சொன்னாள் லதா
மான்சி மூச்சை அழுத்தி அழுத்தி விட்டபடி தன் தோளில் இருந்த சத்யனின் கையை முரட்டுத்தனமாக பற்றி நகங்கள் பதிய அழுத்தினாள்...

அங்கே நடப்பது எல்லாம் சத்யனைப் பயமுறுத்தியது... ஒரு குழந்தையை பெறுவது இத்தனை கஷ்டமா? மான்சி பற்றி முறுக்கியதில் சத்யனின் கை வலித்தது... இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவள் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அணைத்துப் பிடித்தான்...


மான்சியின் கால்களுக்கிடையே குனிந்திருந்த லதா “ சத்யா வாஷ்பேஷின் கிட்ட ஹேன்ட்வாஸ் இருக்குப் பாரு அதைப் போட்டு கையை நல்லா கழுவிட்டு வா” என்று உத்தரவிட்டாள் ...’

சத்யன் குழப்பத்துடன் “ ஏன் லதா... நான் வெளியே இருக்கவா? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு” என்று கலவரத்துடன் சொல்ல...

நிமிர்ந்துப் பார்த்து அவனை முறைத்த லதா “ என்ன வெளையாடுறியா சத்யா? உதவிக்கு ஆள் இல்லாம என்னப் பண்றது? அந்த ஸ்வீப்ர் லேடியும் வரலை... இப்போ நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.. இந்த விக்டருக்கு கால் பண்ணாலும் போகலை... சமயம் பார்த்து மழை வேற சதி பண்ணுது... ம்ம் சீக்கிரமா சொன்னதை செய்... இன்னும் கொஞ்ச நேரத்துல பேபி வந்திரும்... போ சத்யா ” என்று அவசரப்படுத்தினாள்....

சத்யனுக்கு விக்டர் என்ற வார்த்தை சாவி கொடுக்க.. வேகமாக ஓடிப்போய் கைகளை கழுவிக்கொண்டு வந்தான்.... மான்சியின் கைகள் அவனைத் தேடியதும் அருகில் போய் நின்று கொண்டான்.... முதன்முறையாக வலியால் வாய்விட்டு அலறியவாறு மான்சியின் கை அவன் இடுப்புச் சட்டையை சதையோடு பற்றிக்கொண்டது... சத்யனுக்கு வலித்தது... ஆனால் அதைவிட மான்சியின் வேதனை பயங்கர வலியை தந்தது... கண்களில் வழிந்த நீர் கன்னங்களில் ஓட மான்சியின் முகத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தான்....

மான்சியின் முனங்கலும் அலறலும் அதிகமாக லதாவின் பதட்டமும் அதிகமானது... “ இன்னும் இரண்டே புஷ் தான் மான்சி ம்ம் அழுத்தி விடு” என்று லதா அவசரமாக சொல்லிவிட்டு... “ சத்யா நீ கொண்டு வந்த பையில் மெல்லிய டவல் இருந்தா எடு” என்று சொல்லிகொண்டு இருக்கும்போதே மான்சி “ அம்..........................மா” என்று ஒரு நீண்ட அலறலை வெளிப்படுத்திவிட்டு துவள... அதுவரை குனிந்திருந்த லதா நிமிரும்போது அவள் கையில் மான்சியின் உதிரத்தைப் பூசிக்கொண்டு கட் செய்யப்பட்ட தொப்புள்கொடியில் மாட்டியிருந்த கிளிப்போடு சத்யனின் குழந்தை இருந்தது...

சத்யன் சந்தோஷமா பயமா என்று புரியாமலேயே கண்ணீருடன் டவலை நீட்டினான்... குழந்தையை மெல்லிய காட்டனில் சுத்தமாக துடைத்த லதா சத்யன் கொடுத்த டவலில் சுற்றி... சத்யனிடம் குழந்தையை நீட்டி “ உனக்கு மகள் பிறந்திருக்கா சத்யா..... உன் அம்மாவே வந்து மான்சிக்கு பிறந்திருக்காங்க” என்று சந்தோஷமாக கூறினாள்

லதா கூறிய வார்த்தைகள் தேவதைகளின் அருள்வாக்கு போல் சத்யனின் காதுகளில் ஒலித்தது... அவன் அம்மா அவனுக்கு மகளாகவா? அம்மா நீ என்கிட்ட வந்துட்டியா அம்மா... சத்யனின் மனம் சந்தோஷத்தில் கலங்கி கண்ணீர் விட்டது

ஆனாலும் குழந்தையை கையில் வாங்க பயந்து அலறிப்போய் பின்வாங்கினான்... “ நானா? வேனாம் லதா... நீங்களே வச்சிருங்க எனக்கு பயமாயிருக்கு” என்றவனைப் பார்த்து முறைத்த லதா...

“ சத்யா நான் மான்சியை க்ளீன் பண்ணனும்... குழந்தைப் பிறந்ததோட வேலை முடிஞ்சிறாது... அதன் பின் செய்யவேண்டியது தான் ஒரு பெண்ணின் உயிரையே காப்பாற்றும்... ம்ம் பிடி குழந்தையை” என்று அதட்டியதும்
மான்சிக்கு இன்னும் ஆபத்து இருக்கிறது என்றதும் சத்யனின் கைகள் நடுக்கத்துடன் நீண்டது... லதா அவன் கைகளில் குழந்தையை வைத்ததும் சத்யனின் கைகள் உதறியது... “ தைரியமா வாங்கு சத்யா? உன் வாரிசு சத்யா இவள் ” என்று புன்னகையுடன் லதா கூற...

சத்யன் தன் கையிலிருந்த மகளை நெஞ்சோடு மென்மையாக அணைத்துப் பிடித்தான்... அவன் கண்கள் கண்ணீரை கரகரவென வழியவிட்டது... தனது வாழ்க்கைக்கே புது அர்த்தம் கிடைத்தது போல் இருந்தது... என் அம்மா எனக்கு மகளாக? இந்த வார்த்தையை மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டான்...


கையிலிருந்த மகளின் முகத்தைப் பார்த்தான்... இன்னும் கண் திறக்காத ரோஜா மொட்டு... நல்ல பாலின் வெண்மை... தலை நிறைய அடர்த்தியாக கருகருவென தலைமுடி... நிலவைப் போன்ற வட்ட முகம்... கண்கள் மூடியிருந்தாலும் பெரிய கண்கள் என்று பார்த்ததும் சொல்லலாம்.... உள் உதடு சிவந்து வெளியுதடு லேசாக கறுத்து வாயை குவித்து வைத்திருந்தாள் சத்யனின் மகள்... கன்னங்களில் ரோஜா வண்ண சிவப்பு... உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சத்யனுக்கு நின்றுபோன கண்ணீர் மீண்டும் வந்தது....

“ சத்யா பாப்பாவை மான்சிக்குப் பக்கத்துல வச்சிட்டு... இந்த கட்டிலைத் தள்ள ஹெல்ப் பண்ணு” என்று லதா சொன்னதும் குழந்தையை மான்சியின் அருகில் வைத்து அவள் கையை எடுத்து குழந்தையை சுற்றிப் போட்டான்....

பிறகு லதா சொன்னபடி கட்டிலில் இருந்த சக்கரங்களை நேராக்கி கட்டிலைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்து பக்கதில் இருந்த வார்டுக்கு வந்ததும் அங்கிருந்த கட்டிலுக்கு மான்சியை மாற்றினார்கள்.... குழந்தையை மான்சியின் பக்கத்தில் கிடத்தி விட்டு “ சத்யா மான்சி அரை மயக்கத்தில் இருக்கா... நான் போய் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்... நீ கூடவே இரு” என்று சொல்லிவிட்டு லதா போய்விட....

சத்யன் ஒரு சேரை இழுத்து கட்டிலருகேப் போட்டு அமர்ந்துகொண்டு மான்சியின் முகத்தையே பார்த்தபடி இருந்தான்... குழந்தை பெற்று களைத்துப்போன மான்சி ரொம்ப அழகாக இருந்தாள்... நெற்றியில் இருந்த முடியை காதோரம் ஒதுக்கினான்... வரண்ட உதடுகளை விரலால் வருடினான்...



மான்சி மெல்ல கண்விழித்தாள்.... அருகில் இருந்த சத்யனைப் பார்த்து மெலிந்த புன்னகையுடன் “ என்னப் பாப்பா பிறந்திருக்கு?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டாள்...

சத்யன் அவள் கையை எடுத்து கன்னத்தில் அழுத்திக்கொண்டு பக்கத்தில் இருந்த மகளை கண்ணால் ஜாடை காட்டி “ நமக்கு மகள் பிறந்திருக்கா மான்சி... எ... ன்.... என் அம்மா வந்திருக்காங்க.. என் மகளா” என்று சத்யன் உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்க... மான்சி சிரிப்புடன் அவன் கன்னத்தை வருடினாள்...

அந்த நிமிடம் சத்யன் தன்னை மறந்தான்... இதயம் உருகி உதிரமாய் ஒழுக ... “ மான்சி மை லவ்...” என்றபடி அவள் முகத்தை கைகளில் ஏந்தி வரண்டு கிடந்த உதடுகளை கவ்விக் கொண்டான்... மான்சியிடம் எதிர்ப்பில்லை... தனது மலர் இதழ்களை மெல்ல விரித்தாள்... வரண்ட அவளின் வாயை ஈரப்படுத்தியபடி ஒரு அழகான நிறைவான முத்தத்தை வழங்கியவனை அவன் மகள் மெல்ல சினுங்கி அழைத்தாள்..... மகளின் அழுகை மணியோசை போல் அவனை நிலைப்படுத்த மான்சியின் நிலையுணர்ந்து மெல்ல விலகினான்... 



No comments:

Post a Comment