Saturday, December 26, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 21

செல்வமும் பவித்ராவை நேருக்குநேர் சந்திக்க ரொம்ப சங்கடப்பட்டார்... பவித்ரா இலகுவாக சலுகையுடன் தனது மாமனின் தோளில் சாய்ந்துகொண்டு “ மாமா என்னை நினைச்சு வேதனைப் படாதீங்க... எனக்கு எந்த வருத்தமும் இல்லை... யார் யாருக்கு யார்னு இறைவன் போட்ட முடிச்சை மாத்த யாராலையும் முடியாது... சத்யன் மாமாவுக்கு மான்சிதான்னு ஆண்டவன் போட்ட முடிச்சு மாமா..... நாமெல்லாம் அவ்வளவு கஷ்டப்பட்டு சரி பண்ணமுடியாத மாமாவை அவ ஒரே மாசத்துல சரி பண்ணி நமக்கு குடுத்திருக்கா... இதுலேருந்தே தெரியலை மான்சி சத்யன் மாமாவுக்கு எவ்வளவு முக்கியமானவள்னு? மாமா பிறந்ததிலிருந்தே சத்யன் மாமாக்கு நான் அவர் எனக்குன்னு பேசி வச்சு அதையே குறிகோளா வாழ்ந்த எங்களைவிட...

ஒரு முறை மாமாவை கோயில் பார்த்து பத்து வருஷமா அவர்தான் தன்னோட புருஷன்னு வாழ்ந்து அவருக்கு தன்னையே குடுத்து குணப்படுத்தி இரண்டு குடும்பமும் ஒன்னா இணையனும்னு நெனைச்ச அந்த மான்சியோட காதல் எவ்வளவு உயர்ந்ததுன்னு உங்களுக்குப் புரியுதா மாமா? தயவுசெஞ்சு அவங்களை பிரிச்சு வச்சு வேடிக்கைப் பார்க்காதீங்க மாமா.... இனிமேலாவது எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்கனும்” என்ற பவித்ராவின் பேச்சில் அங்கிருந்த எல்லோரும் வாயடைத்துப் போயினர்....

அப்போது ரயில் வரும் ஓசை கேட்க எல்லோரின் கவனமும் அவர்களை அனுப்பி வைப்பதில் திரும்பியது.... முத்து ரிசர்வ் செய்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறிக்கொள்ள சத்யன் பெட்டிகளையும் பைகளையும் எடுத்து அவனிடம் கொடுத்தான்... எல்லாவற்றையும் எடுத்து கொடுத்தபிறகு முத்துவின் அம்மா பவித்ரா இருவரும் மதுமிதாவுடன் ஏறினர்.... எல்லோரும் கையசைத்து விடைகொடுக்க... ஜானகி கண்ணீருடன் விடைகொடுத்தாள் மகளுக்கு...

ரயில் புறப்பட்டது.... உருவங்கள் தோய்ந்து மறைந்தன... காலையில் மலைபோல் தெரிந்த பிரச்சனைகளின் தாக்கம் சற்று குறைந்திருக்க... சத்யனும் செல்வமும் இலகுவாக மூச்சுவிட்டு தங்களது காரில் வீட்டுக்கு கிளம்பினார்கள்

ரயிலில் ஏறியதும் சற்றுநேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்து பவித்ராவுக்கு டிக்கெட் இல்லாததால் அபராதம் செலுத்தும் படி சொல்ல... முத்து பேரம் எதுவும் பேசாமல் முகம் முழுவதும் சிரிப்புடன் அபராதத் தொகையை செலுத்தி டிக்கெட்டை பெற்றுக்கொள்ள... அந்த கம்பார்ட்மெண்ட்டில் இருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே அபராதம் செலுத்தும் முத்துவை வித்தியாசமாக பார்த்தனர்...

பவித்ராவும் பார்த்தாள்... பொங்கி வந்த புன்னகையை மறைக்க ஜன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டாள்

முத்துவின் அம்மா தனக்கான கீழ் பர்த்தில் படுத்துக்கொள்ள... மதுவுக்கு ரிசர்வ் செய்த மற்றொரு கீழ் பர்த்தில் பவித்ரா மதுவை அணைத்தபடி படுத்துக் கொண்டாள்.... சற்றுநேரத்தில் மது தூங்கிவிட “ பவி மதுவை வைச்சுக்கிட்டு உன்னால ஒரே சீட்டுல படுக்க முடியாது... மது உருண்டு கீழே விழுந்தாலும் விழுந்திடுவா... அதனால கீழே பெட்சீட் விரிச்சு படுக்க வச்சிடலாம்” என்று கூற...

பவித்ராவுக்கும் அவன் சொல்வது சரியென்று தோன்ற கீழே பெட்சீட்டை விரித்து மதுவை தூங்க வைத்துவிட்டு... அவள் தனது சீட்டில் படுத்துக்கொண்டாள்...

முத்து மேல் பர்த்துக்கு ஏறி படுத்துக்கொண்டு கீழே படுத்திருந்த பவித்ராவைப் பார்க்க... விழித்திருந்த பவித்ரா முத்து தன்னையேப் பார்ப்பதை உணர்ந்து சட்டென்று அவனுக்கு முதுகுகாட்டி படுத்தாள்.... முத்து ஏமாற்றத்துடன் கண்மூடினான்..

சற்றுநேரத்தில் ஏதோவொரு உந்துதலில் கண்விழித்து மீண்டும் பவித்ராவின் பர்த்தை பார்க்க.... அவள் திரும்பி படுத்து இவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்... முத்து பார்ப்பது தெரிந்ததும் பட்டென்று கண்களை மூடிக்கொண்டாள்...
லேசான இருட்டில் அவளின் முகச் சிவப்பு முத்துவுக்கு தெரிந்தது. வெட்கப்படும் பவித்ரா அவனுக்கு பேரழகியாக தெரிந்தாள்






“ உன்னைத் தொட்ட காற்று வந்து...

“ என்னை தொடும்போதெல்லாம்...

“ உடனடியாக ஒரு கவிதையை...

“ ஒளிப்பதிவு செய்கிறேன்...

“ என் கவிதைகள் காற்றில் கரையாமல்...

“ உன் காலடி வந்து சேர்கிறதா அன்பே? 


வீட்டுக்கு வந்த அப்பா மகன் இருவருக்குமே பவித்ராவின் பிரச்சனைக்கு தற்காலிகமாக ஒரு தீர்வு கிடைத்ததில் கொஞ்சம் நிம்மதி.... இரவு சாப்பாட்டை கீதா பறிமாற இருவரும் சாப்பிட அமர்ந்தனர்

கைகழுவிட்டு சாப்பிட அமர்ந்த செல்வம் “ அம்மா சாப்பிட்டாளா கீதா?” என்று கேட்க

“ இன்னும் இல்லைபா” என்றாள் கீதா..

“ சரி அண்ணனுக்கு போடு நான் இதோ வர்றேன்” என்றவர் மனைவியைத் தேடி சென்றார்....

கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்த மனைவியின் அருகில் அமர்ந்து தோளில் கைவைத்து “ ஆதி வா சாப்பிடலாம்” என்றழைத்தார்

தோளில் இருந்த அவரது கையை விலக்கிய ஆதி “ நீங்க சாப்பிடுங்க... நான் பிறகு சாப்பிடுறேன்” என்றாள் சன்னமாக..

“ சரி நீ அப்புறமாவே சாப்பிடு வேனாங்கல.... இப்போ எனக்கு வந்து சாப்பாடு போடு” என்று மீண்டும் அழைத்தார்

“ அதான் கீதா இருக்காளே? அவளைப் போடச்சொல்லி சாப்பிடுங்க” விரக்தியான குரலில் கூறினாள் ஆதி...

சற்றுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தவர் “ அப்போ நீ வரமாட்ட? சரி எனக்கு சாப்பாடு வேனாம் ஆதி” என்றவர் விடுவிடுவென தனது அறைக்கு சென்று படுத்துவிட...
அப்பா சாப்பிடாமல் போவதை வருத்தமாக பார்த்த தங்கையை உதட்டில் விரல் வைத்து தடுத்த சத்யன் “ அப்பா சாப்பிடுவாறு... நீ சாப்பிட்டு போய் தூங்கு கீதா” என்று தங்கைக்கு சொல்லிவிட்டு அவன் சாப்பிட்டு தனது அறைக்கு சென்றுவிட .. கீதாவும் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்று படுத்துவிட்டாள்

இரவு பத்தானது... செல்வத்தின் அறைக்குள் நுழைந்த ஆதி “ வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க... அதற்காகவே காத்திருந்தது போல உடனே எழுந்து வந்தார் செல்வம்..

இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்... மனைவியின் உணர்வுகளை மதிக்க பழகினார் செல்வம்.... சாப்பிட்டுவிட்டு அமைதியாகவே இருவரும் விலகிச்சென்று அவரவர் அறைகளில் படுத்துக்கொண்டனர்...

நாட்கள் கடுகி விரைந்தது... ஜானகியிடம் சத்யன் சென்று மன்னிப்பு கோரியதும்... ஜானகிக்கு தாங்கவில்லை... “ நான் செய்ததும் தப்பு தானே சத்யா?” என்று அண்ணன் மகனிடம் மன்னிப்பு கேட்டாள்.. நிகழ்காலம் அவளுக்கு பனிவை கற்று கொடுத்திருந்தது... அண்ணன் மகனுடனேயே அண்ணன் வீட்டுக்கு வந்தவள் ஆதியிடம் மனதார மன்னிப்பு கேட்க..

கர்வமாய் பேசும் ஜானகி கண்ணீருடன் மன்னிப்பு கேட்டதும் ஆதிக்கும் சங்கடமாகிவிட்டது ஆதிக்கு திருமணம் ஆகி வரும்போது ஜானகிக்கு பதினோரு வயது... இன்று அதே பதினோரு வயது சிறுமியாக தெரிந்தாள் ஜானகி

மன்னித்தேன் என்று வார்த்தைகளில் சொல்லாமல் நாத்தனாருக்கு விருந்து வைத்து குங்குமம் கொடுத்து வழியனுப்பினாள் ஆதிலட்சுமி....

எல்லாம் சீரானது... ஆனால் செல்வத்தின் மவுனம் மட்டும் உடையவில்லை... மனைவியின் கையால் சாப்பிட்டாரே தவிர ஒரு தீர்க்கமான பார்வையுடன் தனது அறைக்குச் சென்று முடங்கினார்

சத்யன் தோட்டம் துறவு என்று விரகத்தியாக கால் போனபோக்கில் சுற்றி வந்தான்... அவன் முகம் மனதை படம் பிடித்து காட்டியது... மனைவியை பிரிந்து வாழும் மகனின் ஏக்கத்தை செல்வம் தெளிவாக உணர்ந்தார்.... ஏனென்றால் அவரும் இப்போது அப்படித்தானே வாழ்ந்தார்... ஒரே வீட்டில் இருந்தாலும் ஆதியுடன் பேச்சுவார்த்தை அதிகமின்றி எதிரெதிர் துருவமாக வாழ்வது அவருக்கு வெறுத்தது..

ஐம்பதை கடந்த தனக்கே இப்படி என்றால் தன் மகனுக்கு எப்படியிருக்கும் என்று அனுபவபூர்வமாக உணர்ந்தார் செல்வம்.... ஆனாலும் வீனாப்போன அந்த கௌரவத்தை விட்டுவிட்டு மாமியார் வீட்டு வாசல் செல்ல அவரது மனம் இடம் கொடுக்காமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தார்

சத்யனின் திருமணம் முடிந்த பத்தாவது நாள்... முன்பு கீதாவை பெண் கேட்ட மாப்பிள்ளை வீட்டார் வந்து “ பையன் கல்யாணம் முடிஞ்சதுமே பேசி முடிக்கலாம்னு சொன்னீங்க... அதான் வந்திருக்கோம்” என்று திருமணத்திற்கு அவசரப்படுத்த... செல்வத்துக்கு அடுத்த சோதனை தயாரானது...



குடும்ப சூழ்நிலை சரியில்லாத இந்த நிலையில் கீதாவின் திருமணத்தை எப்படி நடத்துவது... ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அவசரப்படுத்தினர்... இந்த இடம் வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியாது.... மாப்பிள்ளை நல்ல பையன்... நல்ல வேலை... நல்ல குடும்பம் என அனைத்தும் சரியாக அமைந்த வரன்

அன்று இரவு செல்வம் குழப்பத்துடன் வீட்டு தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார்... அப்போது சத்யனின் அறையை கடக்கும் போது ஜன்னல் வழியாக ஏதோ வந்து விழ செல்வம் விழுந்தது என்னவென்று குனிந்து பார்த்தார்... பிரிக்கப்படாத மாத்திரை அட்டைகள்... அதிர்ந்து போனார் செல்வம்... அப்படியானால் சத்யன் இப்போதெல்லாம் மாத்திரைகளை உட்கொள்வதில்லையா?....

வெகுநேரம் நடந்து யோசித்தவரின் மனம் இறுதியாக ஒரு முடிவுக்கு வர தனது அறைக்கு வந்து அமைதியாக படுத்துக்கொண்டார்... சிந்தனையில் தெளிவு வந்ததால் தூக்கமும் நிம்மதியாக வந்தது

மறுநாள் காலை எழுந்த வந்தவரை எதிர் கொண்ட சத்யன் “ அப்பா என்னோட வேலை சம்மந்தமா ஹெட் ஆபிஸ்க்கு நேத்து கால் பண்ணி பேசினேன்... என்னோட மெடிக்கல் சர்டிபிகேட்ஸ் எல்லாத்தையும் எடுத்துகிட்டு நாளை காலை நேர்ல வரச்சொல்லிருக்காங்க... தஞ்சாவூர் அல்லது திருவாரூர் பிராஞ்ச்க்கு மாற்றல் கேட்டிருக்கேன்... ஆபிஸ் சம்மந்தமான வேலைக்கு போய்தான் எனக்கு இப்படி ஆனதுன்னு அவங்களுக்கு என்மேல் மதிப்பு இருக்குப்பா... அதனால மாற்றலோடு வேலையும் கிடைக்கும்பா” என்றான்

செல்வத்துக்கு சந்தோஷமான செய்திதான்... சரி நாமும் அவனுக்கு சந்தோஷமான செய்தியை சொல்லலாமா என்று யோசித்தவர்... எப்படியிருந்தாலும் நாளைக்கு தகவல் தெரியும்... அப்போ அவனே தெரிஞ்சுக்கட்டும்.. என்று எண்ணி அன்று இரவு மகனை சென்னைக்கு அனுப்பி வைத்தார்..

வீட்டுக்கு வந்தவர் கீதாவை அழைத்து “ நீ உன் ஸ்கூட்டியை எடுத்துக்கிட்டு அத்தை வீட்டுக்கு போ கீதா... அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா” என்று மகளை தங்கையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்...

இரவு உணவை ஆதி பறிமாற அமைதியாக சாப்பிட்டவர்... ஹாலில் அமர்ந்து ஆதி சாப்பிட்டு விட்டு வரும் வரை காத்திருந்தார்.... சாப்பிட்டுவிட்டு கிச்சனை ஒதுக்கிவிட்டு வந்தவளிடம் “ ஆதி உன்கூட பேசனும்... வா நம்ம அறைக்கு?” என்று அழைத்தார்...

பிள்ளைகள் இருவரும் இல்லை என்றதுமே ஆதிக்கு உள்ளுக்குள் சற்று உதைப்பாகத்தான் இருந்தது .. இருந்தாலும் வீம்பை விடாமல் நிமிர்ந்து பார்த்து முறைத்து “ ஏன் இங்கயே பேசலாமே” என்றாள்

அவள் முறைத்ததும் செல்வத்துக்கும் வீம்பு வந்தது “ பேசனும் வாடின்னா என்னமோ முறைக்கிற?” என்றவர் எழுந்து மனைவியை இரண்டு கையாளும் வளைத்து தனது அறைக்கு தள்ளிக்கொண்டு போனார்... ஆதியை உள்ளே தள்ளிவிட்டு கதவை மூடினார்

காதலால் உண்டான கர்வத்தோடு தன் கைகளுக்குள் கட்டுண்டு கிடந்தவளின் நெற்றியில் கலைந்துபோன குங்குமத்தை விரலால் ஒதுக்கி சரிசெய்தபடி “ ஆதி “ என்று அழைத்தார்

அவரின் வருடலில் சொக்கிப்போய் கிடந்த ஆதி “ ம்ம்” என்றாள்..

“ நாளைக்கு காலையில கொஞ்சம் சீக்கிரமா எழுந்திரிக்கனும்டி” என்று ரகசியமாக கூறினார்..

இன்னும் அந்த ஆனந்த மயக்கம் தீராத ஆதி “ ஏன்?” என்று கேட்க

குங்குமத்தை சரி செய்த நெற்றியில் குனிந்து ஒரு முத்தத்தை வைத்துவிட்டு மனைவியுின் முகத்தை நிமிர்த்தி கண்களுக்கு தன் கண்களை கலந்து “ ம் என் மாமியார் வீட்டுக்கு தாராசுரம் போகனும் அதனால்தான் சீக்கிரமா எழுந்திரிக்கனும்” என்று குறும்பாக கூறியவரின் குரலில் இருந்த காதல் கடலளவு இருந்தது .... 

“ ஒரு அந்தரங்கமான இருட்டுக்குள்...

“ இரு உடல்களின் அசுரத்தனமான வேட்கையில்...

“ உயிர்த்துடிப்புள்ள பல உண்மைகள் புலப்படுவதுதான்...

“ தாம்பத்தியம் என்ற புனிதம்! 

ரயில் சென்னையை சென்றடைவதற்கு சற்று முன்பு செங்கல்பட்டிலேயே தூக்கம் கலைந்து எழுந்த பவி கீழே படுத்திருந்த மதுவை தூக்கி சீட்டில் படுக்கவைத்து குழந்தையின் காலருகில் அமர்ந்துகொண்டாள்... மிடில் பர்த்தில் ஒருவர் படுத்திருந்ததால் அவளால் நிமிர்ந்து அமர முடியவில்லை சற்றே வளைந்து அமர்ந்துகொண்டு மதுவின் பாதங்களை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டாள்....

‘ இவள் மட்டும் இல்லேன்னா என்னோட துன்பத்தின் அளவு எத்தனை பெரியதாக இருந்திருக்கும்?.... பவித்ராவின் விரல்கள் குழந்தையின் பாதத்தை வரும்போது அன்று மாலை முத்து தன் பாதங்களில் முத்தமிட்டது நினைவுக்கு வர.... அவள் இதழும் மனமும் ஒருங்கே மலர்ந்தது... பார்வை சட்டென்று முத்துவை தேடி பயணமானது....

இரவு அவளை பார்த்துக்கொண்டே அப்படியே உறங்கியிருந்தான் முத்து... இரண்டு கைகளையும் மடித்து தலைக்கு கீழே வைத்து ஒருக்களித்துப் படுத்திருந்தான் பவித்ரா அவன் முகத்தையேப் பார்த்தாள்.... இவனுக்குத்தான் என்மேல் எவ்வளவு நேசம்... ஆனால் அந்த நேசத்துக்கு தகுதியானவள் நானில்லையே? மாமன்தான் புருஷன்னு சின்ன வயசுலேருந்து வாழ்ந்தது... சத்யனுக்காகவே அழுதது துடித்தது என எல்லாம் முத்துவுக்கு தெரியும்.... அப்படியிருக்க இன்று மணவறை வரை வந்து சத்யன் கட்டப்போகும் தாலிக்காக காத்திருந்து அந்த தாலி கிடைக்கவில்லை... இப்போது சத்யன் மீது காதல் இல்லை உன்மீதுதான் காதல் என்று சொன்னால் முத்து என்மீது உள்ள காதலால் ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் என் மனசாட்சியே என்னை சித்ரவதை செய்யுமே... ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று என்று எடுத்துக்கொள்ள இது துணிமணிகளா? வாழ்க்கை ஆயிற்றே?...

தன் மனம் கேட்கும் கேள்விக்கு பதில் தெரியாமல் அமைதியாக விரல்கள் மதுவின் பாதங்களை வருடிவிட முத்துவின் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தாள் ...

அவள் பார்க்கும் போதே முத்து பட்டென்று கண்விழித்தான்.... பவித்ராவைப் பார்த்து பளிச்சென்ற புன்னகையுடன் “ குட்மார்னிங் பவி” என்றான் ..... காலையில் பவியின் முகத்தில் விழித்தது அலாதியான சந்தோஷத்தை தர... சிறுபையன் போல் துள்ளலுடன் தாவி இறங்கினான்..

அவனைப் பார்க்காதே என்று மனசு சொன்னாலும் பார்வை அவனைவிட்டு நகராமல் சண்டித்தனம் செய்தது.... ஏற்கனவே அவனது ஒவ்வொரு அசைவையும் தேடித்தேடி திருட்டுத்தனமாக மனதுக்குள் பதிவுசெய்த பவித்ரா இன்று ஒழிவு மறைவின்றி தன் பார்வையால் பின்தொடர்ந்தாள்.

குனிந்து தரையில் புரண்ட பவித்ராவின் புடவையை ஒதுக்கிவிட்டு சீட்டுக்கு கீழே இருந்த தனது செருப்பை தேடியெடுத்து காலில் மாட்டிக்கொண்டு பாத்ரூம் சென்று முகம் கழுவிக் கொண்டு வந்தான்... அதற்குள் பவித்ராவுக்கு மேலே இருந்த மிடில் பர்த்தில் படுத்திருந்தவன் பாத்ரூம் போக இறங்கிவிட... முத்து அந்த சீட்டை இறக்கி விட்டு பவித்ரா நிமிர்ந்து அமர வழிசெய்து தானும் அவள் பக்கத்தில் அமர்ந்துகொண்டான்...

அம்மா இன்னும் உறங்கிக்கொண்டிருக்கஇவர்களுக்கு மட்டும் இரண்டு கப் காபி வாங்கி ஒருவரையொருவர் பார்த்தபடி அருந்தினார்....மதுவின் தலை முத்துவின் மடியில் கால்கள் பவித்ராவின் மடியில்... தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்துக்கொடுத்து “ தலை கலைஞ்சு போயிருக்கு பவி சரி பண்ணிக்க” என்றான்.... 

அவளது கைப்பையில் சீப்பு இருந்ததுதான் .. ஆனாலும் மறுக்காமல் வாங்கி கூந்தலை மேலாக வாறி பின்குத்திக் கொண்டாள்... நெற்றியில் நகர்ந்திருந்த பொட்டை சரியான இடத்தில் வைத்துவிட்டு ‘ சரியா இருக்கா?’ என்பதுபோல் அவனைப்பார்க்க.... “ ம் கரெக்டா இருக்கு பவி” என்றான் முத்து...

இந்த சிலமணிநேர ரயில் பயணம் ஒருவருடமாக இல்லாத நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை இருவருமே உணர்ந்தனர்... அவனது பவித்ரா என்ற அழைப்பு பவி என்று சுருங்கிப் போனதை பவித்ரா உணர்ந்தாள் ......

சென்னை ரயில் நிலையம் வந்து இறங்கியதும் ஒரு டாக்ஸி பிடித்து வீடுவந்து சேர்ந்தனர்... முத்து அம்மா அவசர சமையலாக எதையோ தயார்செய்ய.... குளித்துவிட்டு வந்த பவித்ரா மதுவை வேகவேகமாக மதுவை ஸ்கூலுக்கு தயார் செய்தாள்... ஸ்கூல் பஸ் மெயின் ரோட்டுக்கு வரும் என்பதால் பவித்ரா மதுவை தூக்கிக்கொள்ள முத்து மகளின் ஸ்கூல் பேக் லஞ்ச் பேக் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மூவரும் ஸ்கூல் பஸ் நிற்குமிடம் வந்தனர்

பஸ் வந்ததும் அடம்பிடிக்காமல் ஏறும் மகளை வாயை பிளந்தபடி பார்த்தான் முத்து... அடிப்பாவி மகளே இத்தனை நாளா என்னை என்னா பாடுபடுத்துவ’ என்று எண்ணியவாறு மகளுக்கு டாட்டா சொன்னான்...

பஸ் புறப்பட்டதும் இருவரும் வீட்டுக்கு திரும்பும் வழியில் இருந்த கடையில் அம்மா வாங்கிவர சொன்ன பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்...

முத்து குளித்து முடித்து யூனிபார்ம் மாட்டிக்கொண்டு ஸ்டேசனுக்கு கிளம்பி வந்தான்... டைனிங் டேபிளில் அவனுக்கு உணவு எடுத்து வைத்த பவித்ரா முதல் முறையாக அவனை போலீஸ் யூனிபார்மில் கம்பீரமாக பார்த்து தனது விழிகளை அகல விரித்துக்கொள்ள.... தனது பார்வையாலேயே என்ன? என்று கேட்டான் முத்து

ஒன்றுமில்லை என்று தலையசைத்துவ விட்டு முகச் சிவப்பை மறைக்க சமயலறைக்குள் புகுந்தாள் பவித்ரா.... முத்து டேபிளில் அமர்ந்ததும் மறுபடியும் வந்து உணவை எடுத்து வைத்தாள்...

முத்து சாப்பிட்டுக்கொண்டே “ இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடு பவி .... நாளைக்கு காலையில நான் பர்மிஷன் சொல்லிட்டு வர்றேன்.. ரெண்டு பேரும் உன் ஆபிஸ்க்கு போய் வேலையைப் பத்தி விசாரிச்சுட்டு வரலாம்” என்றான்

“ ம் சரி... அப்படியே ஆபிஸ்க்குப் பக்கத்திலேயே லேடி ஹாஸ்டல்லயும் இடமிருக்கான்னு கேட்டுட்டு வந்துடலாம்” என்று பவித்ரா மெல்லிய குரலில் கூறியதும்..

சாப்பிடுவதை விட்டு வெடுக்கென்று நிமிர்ந்தான்.... பிறகு தன்னையே சமாதானம் செய்தவனாக “ சரி விசாரிக்கலாம்” என்றான்...

மாலை மூன்றரைக்கு ஸ்கூல் பஸ்ஸில் வந்த மதுவை பவித்ராதான் சென்று அழைத்து வந்தாள்.... மதுவின் சந்தோஷத்தை கண்டு பவிக்கும் உற்சாகமாகிவிட மதுவை இடுப்பிலும் ஸ்கூல் பேக்கை தோளிலும் சுமந்தபடி வந்தவளைப் பார்த்து கண்கலங்கி விட்டார் முத்துவின் அம்மா... 

அது ஒற்றை படுக்கையறை கொண்ட போலீஸ் குவாட்டர்ஸ் என்பதால் அன்று இரவு தனது படுக்கையறையில் மதுவுடன் பவித்ராவை படுத்துக்கொள்ள சொல்லிவிட்டு முத்து ஹாலில் படுத்துக்கொண்டான்

மறுநாள் காலை மது ஸ்கூலுக்குப் போனதும் இருவரும் பவித்ரா வேலை செய்த இன்சூரன்ஸ் அலுவலகம் சென்றனர்... சிறிதுநேர காத்திருப்புக்குப் பின் மேனேஜர் அறைக்குள் அழைக்கப்பட்டாள் பவித்ரா

முத்துவின் மனம் சுயநலமாக பிரார்த்தனை செய்தது.... வேலை எதுவும் காலி இல்லை என்று சொல்லவேண்டும் இறைவா என்று தான் ...

அவன் வேண்டுதல் பலித்தது..... முகம் சோர்வுற திரும்பி வந்தவளிடம் ரொம்ப அக்கரையாக விசாரித்தான் முத்து...

“ இப்போ எந்த வேகன்ட்டும் இல்லையாம்.... எந்த பிராஞ்ச்ல இடம் காலியானாலும் உடனே லட்டர் அனுப்புறதா சொல்லிருக்காங்க” என்று அவள் சோகமாக சொல்ல முத்துவும் போலியாக அவள் வருத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டு “ வந்த அன்னிக்கே வேலை கிடைச்சுடுமா? இரு கொஞ்சம் நாள் வெயிட் பண்ணி பார்க்கலாம்.... இந்த காலத்தில் வேலை கிடைக்கிறது குதிரை கொம்புன்னு உனக்கு தெரியாதா? ” என்று ஆறுதலாக கூறியபடி தனது ஜீப்பை நோக்கி சென்றான்....

இருவரும் ஏறி ஜீப் பாதி தூரம் சென்றதும் “ ஹாஸ்டல்ல விசாரிக்காம போறமே?” என்றாள் பவித்ரா

வெடுக்கென்று திரும்பிப் பார்த்த முத்து “ வேலைக்கு சேர்ந்த சான்றிதழ் இல்லாம எந்த ஹாஸ்டல்ல இடம் குடுப்பாங்க பவி? ... வேலை கிடைச்சதும் போய் விசாரிக்கலாம்...” எனறான்..... அவன் குரலில் இருந்த மெல்லிய கோபம் பவித்ராவை சுட்டது....

வீடு வந்ததும் “ நீ இறங்கி போ... நான் ஸ்டேஷன் போறேன்” என்றான் முத்து....



“ சாப்பாட்டு நேரம் தானே வாங்க சாப்பிட்டு போகலாம்” என்று பவித்ரா அழைக்க..... “ எனக்கு பசியில்லை” என்று முத்து சொல்ல.... இறங்காமல் பிடிவாதமாக ஜீப்பிலேயே அமர்ந்திருந்தவளைப் பார்த்து சிறு சிரிப்புடன் “ சரி வா சாப்பிடலாம்” என்றதும் வேகமாக இறங்கி உள்ளே போனாள் பவித்ரா...

இப்படி பிடிவாதம் செய்யும் பவித்ரா புதியவள்... ஆனால் இவளை ரொம்ப பிடித்தது முத்துவுக்கு .... புன்னைகையுடன் சாப்பிட சென்றான் முத்து ...

அதன் பிறகு வந்த நாட்களில் பவித்ரா அந்த வீட்டில் மிகச் சரியாக பொருந்திப்போனாள்.....

அக்கம்பக்கம் கேட்பவர்களிடம் என் தம்பி மகள் என்றார் முத்துவின் அம்மா.... அவரது வேலைகள் முக்கால்வாசி குறைய கோயில் குளம் என்று செல்லத் தொடங்கினார்... முத்து பவித்ரா இருவரையும் ஓரளவுக்கு கண்டு கொண்டார் ... ஆனால் அவர்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்... நாம் தலையிட்டு எதையும் குழப்பிவிடக் கூடாது என்று மவுனமாக இருந்தார்...


No comments:

Post a Comment