Monday, December 28, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 24

நண்பனின் உணர்வுகளைப் படித்த முத்து சிரித்தபடி அவனை அணைத்து “ உன் பொண்டாட்டி இன்னிக்கு இங்கதான் வர்றா” என்று சிரிப்பும் சந்தோஷமுமாக கூற... சத்யனின் முகமும் மனமும் ஒருங்கே மலர்ந்து விகசிக்க “ தாங்க்ஸ் முத்து” நண்பனை அணைத்துக்கொண்டான் ...

“ ஆனா அவ வர லேட்டாகும்... நீ அதுக்குள்ள உன் ஆபிஸ் வேலையை முடிச்சிட்டு வந்துடு.... என் பைக்கை எடுத்துகிட்டு போ சத்யா” என்று முத்து கூற....

“ ம்ம் சரி” என்று வேகமாக எழுந்தவன் “ ஆமா நீ இன்னிக்கு ஸ்டேஷன் போகலையா?” என்று கேட்டான் சத்யன்...



லேசாக வழிந்தாலும் அதை உடனே மாற்றிக்கொண்டு “ இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் வந்துருக்கீங்களா... சமையல் வேலை நிறைய இருக்கும்... அம்மா வேற பக்கத்து வீட்டுக்காரங்க கூட காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு போறாங்களாம்... அதான் பவித்ராவுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு லீவு போட்டுட்டேன்” என்று முத்து சொல்ல....

சத்யன் முறைப்புடன் “ நீ ஹெல்ப் பண்ணப் போறியா? மவனே கல்யாணத்துக்கு முன்னாடி கையை வச்ச? அப்புறம் என் பொண்டாட்டியை விட்டு உதைக்கச் சொல்லுவேன்” என்று சத்யன் மிரட்டிவிட்டு அறைக்குள் போக.... வெட்கத்துடன் பவித்ரா அவசரமாக கிச்சனுக்குள் சென்று மறைந்தாள்...

“ இதென்னடா அநியாயம்? நீயும் உன் பொண்டாட்டியும் அவ்வளவு கூத்தடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்குவீங்க நான் மட்டும் விட்டத்தைப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்கனுமா? இதோ நாளைக்கே நன்னிலத்துக்கு போய் கல்யாணத்துக்கு தேதி வச்சிட்டு வர்றேன்” என்று முத்து சத்யனின் மூடிய அறைக்கதவுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டு இருந்தான்...

“ ம்ம் போ போ எப்படியிருந்தாலும்... எங்க தயவு இல்லாம ஒரு வேலையும் ஆகாது தம்பி” என்று சத்யன் உள்ளிருந்தபடி மிரட்டல் விடுக்க....

“ டேய் வேனாம்டா சத்யா” என்று கெஞ்சலில் இறங்கிய முத்துவை அலட்சியமாகப் பார்த்தபடி “ ம்ம் என் பொண்டாட்டி வரட்டும்...உங்க மேட்டரை பேசி முடிவு பண்ணுவோம்” என்றபடி வெளியே போய் பைக்கில் கிளம்பினான்...

“ ஏய் பவி என்ன இவன் இப்படி சொல்றான்?” என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தவனை இழுத்து சுவற்றோடு சாய்த்து நிறுத்திய பவித்ரா.... “ பொண்ணு குடுக்கலைன்னா நான்கடத்திக்கிட்டு வந்துடுவேன்னு சொல்ல வேண்டியது தானே” என்றபடி அவன் மூக்கை தன் மூக்கால் உரசினாள்...

அவ்வளவு நெருக்கத்தில் அவளை கண்டு தினறியபடி “ ஏய் நான் போலீஸ்காரன்டி... என்னைப்போய் கடத்த சொல்ற? ” என்று முத்து கிசுகிசுக்க...

“ அய்யோ போலீஸ்காரன் காதலிச்சா கடத்த மாட்டானா?” என்று பதிலுக்கு கேட்டபடி அவனை இன்னும் நெருங்கி அவளுக்கு பிடித்த மீசையை பற்களால் கவ்வினாள்....

“ ஸ்ஸ்ஸ் வலிக்குது பவி.... ஏன் என் மீசை மேலயே குறியா இருக்க?” என்று அவள் இடுப்பை கைகளால் சுற்றி வளைக்க...

“ ம் அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்குது... அதான் இழுக்குறேன்” என்றவள் வலிக்காமல் இழுக்க.. சந்தர்பத்தை பயன்படுத்தி முத்துவின் விரல்கள் அவள் உடலில் அத்துமீறலாயின....

அப்போது டைனிங் டேபிளில் இருந்த அவனது வழக்கம் போல அவன் மொபைல் அவனுக்கு எதிரியாக... மீசையை வருடுவதை விட்டுவிட்டு “ போன் அடிக்குது எடுங்க” என்றாள் பவித்ரா....

அவளின் இடையில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த முத்து “ ம்ஹூம் அது இனிமே நமக்கு வேனாம் உடைச்சிடலாம்” என்றான்...

அவனை விலக்கி நிறுத்தியவள் இதழ்களில் வழிந்த சிரிப்புடன் “ அதை பிறகு உடைக்கலாம்... இப்போ போய் யாருன்னு பாருங்க” என்றுகூறி அவனைப் வெளியே தள்ளிக்கொண்டு போய் விட்டுவிட்டு வந்தாள்

முத்து வேறு வழியின்றி எரிச்சலுடன் மொபைலை எடுத்து ஆன்செய்ய...... எதிர்முனையில் செல்வம் தான் "ஹலோ முத்து என்னப்பா ரொம்ப பிஸியா இருந்தியா? " என்று கேட்க ....

முத்து சங்கடமாக நெற்றியில் தட்டிக்கொண்டு ... " ஸாரிப்பா பாத்ரூம்ல இருந்தேன் " என்று சமாளித்து ... " நீங்க சொல்லுங்கப்பா" என்றான்

" ஒன்னுமில்லை முத்து .... எனக்காக ஆதியும் சத்யனும் இவ்வளவு செய்யும்போது அவங்களுக்காக நான் ஏதாவது செய்யனும்னு முடிவு பண்ணி ..
ஆதியை கூட்டிகிட்டு தாராசுரம் வந்துட்டேன்பா" என்று அவர் சொல்லி முடித்ததும் ....

" அப்பா நிஜமாவாப்பா" என்று முத்து உற்ச்சாகத்தில் உரக்க கத்திவிட .. கிச்சனில் இருந்த பவித்ரா பதறியடித்துக்கொண்டு ஒடிவந்தாள் ..

அவளை நோக்கி ஒன்றுமில்லை என்று கையசைத்த முத்து " அப்பா ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா.... எனக்குத்தெரியும் உங்க மனசு மாறும்னு" என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான்

" ஆமாம் முத்து ... இங்க வந்தபிறகு தான் எவ்வளவு சந்தோஷத்தை இழந்துருக்கேன்னு புரியுது " என்று அவரும் உணர்ச்சிவசப்பட்டார்

" ம்ம் எனக்கு புகியுதுப்பா" என்றான் முத்து 


"ஆனாலும் மருமகளை பார்க்க முடியலைபா .. நாளைக்குதான் வர்றாளாம் ... அதான் இங்கேயே இருந்து நாளைக்கு அவளைப் பார்த்து கையோட கூட்டிட்டு போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன்" என்றார்

" அப்படியே செய்ங்கப்பா .. மான்சி இன்னைக்குதான் கிளம்புறா" என்றவன் நேற்று மான்சியை சந்தித்த விஷயத்தில் தன் காதலை தவிர்த்து மீதியை ஒன்றுவிடாமல் ஒப்பித்தான்

" ஆகா இவ்வளவு தெரியுமா? அந்த வாயாடிக்கு? ம்ம் யாரு செலக்ஷன் .. என் மகனாச்சே? என் மருமக எது செய்தாலும் சரியாத்தான் இருக்கும் போலருக்கு" செல்வத்தின் குரலில் பெருமை வழிந்தது

" ஆமாப்பா .... ரொம்ப நல்ல பொண்ணு .... ஆனா வாயை குடுத்தா மீள முடியாது" என்று கூறிவிட்டு முத்து சிரித்தான்

எதிர்முனையில் செல்வமும் சிரித்துவிட்டு " எல்லாம் சரி முத்து உன் சங்கதியும் ஆதி நேத்து ஏதோ சொன்னா.. அது மட்டும் நடந்த நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ... பவித்ராவுக்கு சம்மதம்னா... நீ இன்னும் ரெண்டு நாள்ல அம்மாவை கூட்டிகிட்டு கிளம்பி ஊருக்கு வா முத்து சுப்புகிட்ட பேசி கல்யாணத்தை முடிச்சிடலாம்" என்று செல்வம் பொறுப்புடன் பேச ....

முத்துக்கு சந்தோஷம் பிடிபடவில்லை " பவிக்கும் ஓகேபா .. நான் வந்து பேசுறேன்பா" என்று சொன்னான்

" சரி முத்து .... அப்புறம் ஒரு விஷயம் நாங்க இங்க வந்திருக்குறது சத்யன் மான்சி ரெண்டு பேருக்கும் தெரியவேனாம்... அவங்க இங்க வந்து நேரடியா தெரிஞ்சுக்கட்டும்" என்று கூறிவிட்டு இணைப்பை துணடித்தார்

முத்து சந்தோஷ கூச்சலுடன் பவித்ராவை தூக்கி ஒரு சுற்று சுற்றிவிட்டு கீழே இறக்கி " பவி எல்லா பிரச்சனையும் சால்வ்டு..... எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது" என்று செல்வம் கூறியவற்றை சொன்னான் ......

பவித்ராவுக்கு சந்தோஷத்தில் விழிகள் குளமானது .. " மான்சியோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாதான் நடக்கும்" என்று கூறிவிட்டு முத்துவை இறுக்கி அணைத்துக்கொண்டாள்


இருவரும் சிரிப்பும் சந்தோஷமுமாக மதிய உணவிற்கான வேலைகள் முடித்துவிட்டு சத்யன் மான்சிக்காக காத்துருந்தனர்



" ஒரு தலைவன் மற்றொரு தலைவனை சந்திக்கும் சந்திப்பு.....

" அறிவுபூர்வமாக இருக்கவேண்டும்!

" ஒரு நண்பன் சக நண்பனை சந்திக்கும் சந்திப்பு......

" உணர்ச்சிகரமாக இருக்கவேண்டும்!

" ஒரு காதலனும் காதலியும் சந்திக்கும் சந்திப்பு.....

" உணர்வுபூர்வமாக இருக்கவேண்டும்



பவித்ரா சமையல் செய்தவற்றை எடுத்துவந்து டேபிளில் வைக்க... முத்து அவளுக்கு உதவினான்.... அது முடிந்ததும் பவித்ராவின் இடையைப் பற்றி தூக்கி டேபிளில் அமர வைத்து அவள் எதிரில் சேரில் அமர்ந்து பவித்ராவின் இடையைக் கட்டிக்கொண்டு மடியில் தலைசாய்த்தான் முத்து .... இதழ்களில் நெளிந்த வெட்கப் புன்னகையுடன் அவன் தலையை கோதிவிட்டாள் பவித்ரா....

பவித்ரா தனக்கு கிடைத்துவிட்டாள் என்பதை இன்னும் முத்துவால் நம்பமுடியவில்லை... கடந்த ஒரு வருடமாக அவன் காத்திருப்பின் வேதனை அவ்வளவு கொடூரமானது.... என் உயிராய் நான் நேசிப்பவள் நண்பனை கல்யாணம் செய்துகொள்ள போகிறாள் என்ற வேதனையை எப்படி அணுவணுாக அனுபவித்தானோ...... அதேபோல் இந்த இன்பமான சூழலையும் விநாடி விநாடியாக அனுபவிக்க ஆசைப்பட்டான்.... ஏகப்பட்ட தவிப்பிற்கும் .. கண்ணீருக்கும்.. காத்திருப்பிற்கும் பிறகு கிடைத்த பொக்கிஷமல்லவா இந்த பவித்ரா?... அன்று அந்த மருத்துவமனையில் ஏட்டில் எழுதப்பட்ட மிஸஸ் பவித்ரா முத்துகுமார் என்ற வரிகளுக்காக அவன் கொண்டாடி குதூகலித்த தருணங்கள் எல்லாம் உண்மையாகப் போகிறதல்லவா? இந்த ஏகாந்த உணர்வை அமைதியாக அவள் மடியில் படுத்து அனுபவித்தான் முத்து...

அவன் தலை முடியில் விரலால் கோதிக்கொண்டிருந்த பவித்ராவுக்கும் அதேநிலைதான்.... ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சில் குற்றவுணர்ச்சியுடன் ஏங்கி ஏங்கி தவித்த தன் காதல் இன்று முறையோடு தன் கைகளில் தவழும் இந்த விநாடியை உணர்வுபூர்வமாக அனுபவித்தாள்.... ஆனாலும் அவள் மனதை நெருடும் அந்த உண்மையை முத்துவிடம் சொல்லிவிட வேண்டும்....

“ என்னங்க?” என்று சீறலாய் பவி அழைக்க...

முத்து தன் சொர்கத்தில் இருந்து நிமிராமல் “ சொல்லுங்க” என்றான் குரலில் குறும்பு மிளிர....

“ என்னைப் பத்தி உங்ககிட்ட கொஞ்சம் சொல்லனும்” பவித்ராவின் குரல் கம்மியிருந்தது...

அவள் குரல் அவனை நிமிர வைக்க .. மடியிலிருந்த வாறு நிமிர்ந்து பார்த்து “ என்னம்மா?” என்று காதலாய் கேட்க...

தனது இருக்கைகளில் அவன் முகத்தை ஏந்திய பவித்ரா அவன் கண்களை நேராகப் பார்த்து “ சத்யன் மாமாவுக்கும் எனக்கும் இருந்தது சின்னபசங்க அப்பா அம்மா விளையாட்டு விளையாடுற மாதிரி உறவுகளால் நிச்சயிக்கப்பட்ட ஒரு விளையாட்டுத்தனமான நேசம்... உங்கமேல எனக்கு வந்தது தான் உண்மையான நேசம்னு எனக்குப் புரியும்போது அந்த நேசத்தை வெளிப்படையா சொல்லக்கூடிய நிலையை கடந்து ஒவ்வொருநாளும் கண்ணீர் சிந்தி .... என் மனசு பூராவும் உங்களை சுமந்துகிட்டு சத்யன் மாமா கூட கல்யாணத்துக்கு தயாரானது எவ்வளவு சித்ரவதையா இருந்தது தெரியுமா? நான் சின்ன வயசுலேருந்து சத்யன் மாமாவுக்காக நிச்சயிக்கப்பட்டு மணவறை வரை போய் அந்த கல்யாணம் நின்னதால உங்கிகிட்ட வந்துட்டதா என்னை தவறா நினைக்காதீங்க.....” என்று பவித்ரா சொல்லி முடிக்கும் போது முத்துவின் முகம் கோபத்தில் சிவந்து போயிருந்தது...

“ போடி லூசு .... என்னைப் பத்தி நீ புரிஞ்சுகிட்டது இவ்வளவு தானா?.... நீயும் என்னை நேசிக்கிற என்பதை உன் பார்வை எனக்கு எப்பவோ உணர்த்திருச்சு.... ஆனாலும் உன் நேசத்தை சொல்லமுடியாம குடும்ப சூழ்நிலை தடுத்த மாதிரி... என் நேசத்தை சொல்லமுடியாம சத்யனுக்கு எனக்கும் இருந்த நட்பு தடுத்தது..... நீ எந்த மாதிரி நிலைமையில அந்த மணவறையில் போய உட்கார்ந்தன்னு எனக்கு தெரியும் பவி.... உன் மனசு பூராவும் நான் இருக்கும்போது அந்த மண்டபத்துல நீ பட்ட அவஸ்த்தையை பார்க்க முடியாமதான் அன்னிக்கு நைட்டு புல்லா குடிச்சேன் தெரியுமா? ” என்று முத்து வருத்ததுடன் சொல்ல.....

தன் கைகளில் இருந்த அவன் முகத்தை இழுத்து நெஞ்சோடு அணைத்து “ தெரியும்ங்க.... நீங்க குடிச்சது தெரியும்... குடிச்சிட்டு எதையோ நெனைச்சு அழுது கீழே விழுந்தது தெரியும்.... விழுந்த உங்களை தூக்கிட்டு வந்து மாமா ரூம்ல படுக்க வச்சது தெரியும்.... ஆனா அதுக்கப்புறம் நான் மதுவை உங்ககிட்ட விடுற சாக்கில் மாமா ரூமுக்கு வந்து உங்களைப் பார்த்து அழுதது உங்களுக்கு தெரியுமா?” என்று பவி சொன்னதும் “ பவித்ரா” என்று சிறு கூச்சலுடன் அவள் இடையை இறுக்கி நெஞ்சில் முகம் புதைத்தான்....

முத்து எதிர்பாராதது பவித்ரா கூறிய விஷயம்.... விடிந்ததும் வேறு ஒருத்தன் மனைவி என்ற சூழ்நிலையிலும் இரவு தனக்காக வந்து கண்ணீர் சிந்திய பவித்ராவின் காதல் எவ்வளவு உயர்வானது... அவன் அணைப்பு இறுகியது “ வேண்டாம் பவி இனிமேல் அதையெல்லாம் நினைக்க வேண்டாம்..... இனிமேல் சந்தோஷம் மட்டுமே நம் வாழ்க்கையில் நிலைக்கனும்” என்றான் முத்து

“ ம்ஹூம் நான் நினைப்பேன்.... நான் உங்களுக்காக கண்ணீர் சிந்திய தருணங்களை நினைத்துப் பார்க்கும்போது தான் இந்த சந்தோஷத்தை எவ்வளவு விலைகொடுத்து வாங்கியிருக்கேன்னு எனக்கு புரியும்... பல வலிகளுக்குப் பிறகு கிடைச்ச என் சந்தோஷத்தின் மதிப்பு ரொம்ப அதிகம்னு புரியும்” பவித்ரா சொல்ல சொல்ல..... இந்த நேசமே உருவான என் கண்மணிக்காக கண்ணீர் மட்டுமல்ல... உயிரையும் கூட விடலாம் என்று தோன்றியது முத்துவுக்கு.... இருவரும் அடுத்தப் பேச வார்த்தைகள் இன்றி ஒரு மோனநிலையை நோக்கி செல்ல... அப்போது வாசலில் சலசலவென பேச்சு குரல்.....

தன் மார்பில் புதைந்து கிடந்த முத்துவின் முகத்தை அவசரமாய் விலக்கியவள் “ உங்க மச்சினிச்சி வந்துட்டான்னு நினைக்கிறேன்... வாங்க போய் பார்க்கலாம்” என்று பவித்ரா சிரிப்புடன் கூற....

“ ஆமா ஆமா ஆட்டோக்காரன் கூட சண்டை போடுறா போல” என்று அவசரமாய் சென்றவனை “ ஹலோ இன்ஸ்பெக்டர் செய்ற வேலையை திருந்த செய்யமாட்டீங்களா?” என்று அழைத்த பவித்ரா “ தூக்கி உட்கார வச்சீங்கல்ல.... இப்ப யாரு இறக்கி விடுறதாம்” என்று டைனிங் டேபிளில் அமர்ந்து காலாட்டியபடி கேட்டாள்...

சிரிப்புடன் அவளை நெருங்கிய முத்து இரு கைகளால் அவளின் சிறுத்த இடையைப் பற்றி தன் நெஞ்சோடு அவள் தனங்கள் அழுந்தி பிதுங்க அணைத்து தூக்கி மிக மெதுவாக இறக்கிவிட..... பவித்ரா முகம் செவ்வானமாய் சிவக்க “ ம்ம் போதும் வாங்க போகலாம்” என்று அவனை வாசலை நோக்கி தள்ளிச் சென்றாள்...

“ ஏம்மா ஆட்டோவுல ஏத்திட்டு வந்துதான் விட முடியும்... உங்க லக்கேஜ்லாம் எடுத்து வீட்டுக்குள்ள கொண்டு போய் வைக்க நான் என்ன போர்டரா” என்று ஆட்டோக்காரன் எகிறிக்கொண்டிருக்க...

“ ஓய் எக்ஸ்ட்ரா இருபது ரூபாய் கேட்டு வாங்குனல்ல அப்போ நீதான் லக்கேஜை கொண்டு வரனும்” என்று பதிலுக்கு மான்சியும் எகிறிக்கொண்டிருந்தாள்...

முத்து அவசரமாக ஓடி வந்து “ மான்சி அவரை விடு போகட்டும்.... நான் எடுத்து வைக்கிறேன்” என்று லக்கேஜ்களை முத்து எடுத்த மறுகணமே ஆட்டோக்காரன் அவசரமாய் கிளப்பிக்கொண்டு ஓடினான்....

“ என்ன மான்சி அவனை ரொம்ப பயமுறுத்திட்டயா? பய இப்படி ஓடுறான்” என்று முத்து கேட்க....

“ ஆமா மாம்ஸ் உங்களைப் பத்திதான் சொல்லிகிட்டு வந்தேன்..... அதான் பய ரொம்ப பயந்துட்டான்” என்றாள் கூந்தலை சிலுப்பிக் கொண்டு...

முத்து திகைப்புடன் “ என்னது என்னைப் பத்தியா?” என்று முத்து கேட்க.....

“ ஆமாம் மாம்ஸ் .... நீங்க போன மாசம் என்கவுண்டர்ல நாலு பேரை போட்டுத் தள்ளுனீங்களே அதைப்பத்தி சொன்னேன் பயபுள்ள பயந்துருச்சு” என்று மான்சி குறும்பு பேச...

முத்து உண்மையாகவே அதிர்ந்து கையிலிருந்த லக்கேஜை கீழே போட்டுவிட்டு “ என்கவுண்டரா? நானா ? எப்போ போட்டுத்தள்ளுனேன்?” முத்துவின் குரலில் கலவரம்

“ போனமாசம் மாம்ஸ்..... நியூஸ்பேப்பர்ல வந்ததே.... அப்போ அது நீங்க இல்லையா?.... அப்படின்னா நீங்க வெறும் சிரிப்பு போலீஸ் தானா? ” மான்சி நக்கல் செய்ய...

“ முத்து அன்று போலவே கையெடுத்துக் கும்பிட்டு “ அம்மா தாயே வந்ததுமே வா... நான் ரொம்ப பாவம்... என்னை ஆளைவிடு” என்று கெஞ்சி கேட்க....

“ சரி சரி அதுக்கு ஏன் அழுவுறீங்க... பெட்டியை தூக்குங்க” என்ற மான்சி வெறும் ஹேன்ட்பேக்கை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போக.... எதிரில் வந்த பவித்ரா சினேகமாக அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “ வா மான்சி” என்று உள்ள அழைத்துச் சென்றாள்...

உரிமையோடு சோபாவில் அமர்ந்த மான்சி பின்னால் வந்த முத்துவை பார்த்து “ இன்னா மாம்ஸ் இதுக்கே மூச்சு வாங்குது” என்று கேலி செய்ய...

ஒரு பெட்டி இரண்டு பேக் எல்லாவற்றையும் எடுத்து வந்து ஹாலின் மூளையில் போட்ட முத்து “ ம்ம் சொல்லமாட்டியா பின்ன... ஓய் அந்த பெட்டில அப்படி என்னதான் வச்சிருக்க? பொணம் கணம் கனக்குது” என்று அவளுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தான்....

மான்சி அவனைப் பார்த்து சிரித்து “ முன்னாடி பார்த்ததை விட தொப்பையை நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க மாம்ஸ்.... ஆனா பலம்தான் இல்லை” என்று கேலி செய்ய...

“ ஏய் என்ன நக்கலா? யாருக்கு தொப்பை விழுந்திருக்கு ? நான் ஜிம்பாடி” என்று முத்து உடலை முறுக்கிக்காட்டினான்..

மான்சிக்கு காபி எடுத்துவந்த பவித்ரா சிரித்துவிட்டு “ அவருக்கு ஒன்னும் தொப்பை இல்லை?” என்று முத்துவை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூற.....

காபியை உறிஞ்சியபடி “ ம்ஹூம் எனக்கு வித்தியாசம் தெரியுது.... மாம்ஸ் தினமும் தண்டால் எடுங்க தொப்பை குறையும்” என்று தனது கேலியை தொடர்தாள்....

முத்துவின் முகம் அசடு வழிய “ ஹிஹிஹி தண்டால் தானே? ஆனா இப்போ எப்புடி? கல்யாணத்துக்குப் பிறகுதான்............. ” என்று இழுத்தான்....

காபியை குடித்துக்கொண்டிருந்தவள் சட்டென்று திகைத்து “ யோவ் மாம்ஸ் நான் என்ன சொல்றேன் நீங்க எதை சொல்றீங்க? நீங்க போலீஸ் இல்ல மாம்ஸ் பொறுக்கி” என்று மான்சி பொய் கோபமாய் கத்த...

அவள் பக்கத்தில் அமர்ந்த பவித்ரா “ அவரு நல்லாத்தான் இருந்தாரு.... நேத்து உன்னை பார்த்துட்டு வந்ததுலருந்து தான் இப்படி ஆயிட்டார்” என்று முத்துவை விட்டுக் கொடுக்காமல் பேசியதும் ....

பவித்ராவின் பக்கத்தில் இருந்த சிறு இடைவெளியில் நெருங்கி அமர்ந்த முத்து “ கரெக்டா சொன்ன பவி” என்று கொஞ்சினான்...

மான்ி எழுந்து இடுப்பில் கைவைத்து அவர்களை முறைத்து “ நேத்து என்கிட்ட என்னமோ சொல்லி வரச்சொன்னீங்க.... இங்க பார்த்தா வேறென்னமோ நடக்குது?” என்று கேட்க...

பவித்ராவின் காதோரத்தில் இருந்த முடிக்கற்றையை கவனமாக ஒதுக்கிய முத்து “ ஆமா சொன்னேன்.... ஆனா காலையில என் சத்யன் வந்து எங்களை சேர்த்து வச்சிட்டான்” என்றான் சாவகாசமாக...

“ ஹலோ அது என்னோட சத்யன்” என்று மான்சி கூறியது காதிலே விழாமல் முத்து பவித்ராவின் மேல் கவனமாக இருக்க.... அவர்கள் முன்னாடி கைத் தட்டி கவனத்தை கலைத்து “ ஏய் பவி பசிக்குது ஏதாவது இருந்தா போட்டுட்டு அப்புறமா கொஞ்சுங்களேன்” என்று மான்சி கைகால்களை உதறியதும் ...

“ ஸாரி மான்சி வாவா “ என்றபடி டைனிங் ஹாலுக்குள் நுழைந்தாள்.....

பவித்ரா போட்டதை அவசரமாக சாப்பிட்ட மான்சி “ எல்லாமே நீயா செய்த? சூப்பரா இருக்கு” என்றாள்....

அவள் எதிரில் அமர்ந்திருந்த முத்து “ உனக்கு சமைக்க தெரியுமா?” என்று கேட்க...

புறங்கையில் வழிந்த மோரை நக்கியபடி “ ஓஓஓஓ.... தெரியுமே.... நல்லா சுடுதண்ணி காய வைப்பேன்” என்று கண்களை விரித்து மான்சி சொல்ல....

முத்து பவித்ராவின் பக்கம் திரும்பி “ மொதல்ல சத்யன் பேமிலிக்கு இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்து வைக்கனும்” என்றான்...

கையை கழுவியது போல் நக்கிவிட்டு “ என்ன நக்கலா? எல்லாம் கத்துக்குவோம்ல.... என்றவள் “ மாம்ஸ் கையை அவசியம் கழுவனுமா? இல்ல தூக்கம் தூக்கமா வருது” என்று உடலை வளைத்து நெளிந்தபடி கெஞ்ச....



முத்து தலையிலடித்துக்கொண்டு “ அடிப்பாவி இன்னிக்கு காலையிலதான் சத்யன் அப்பாகிட்ட உன்னைப் பத்தி ஆகா ஓகோன்னு சொல்லி வச்சேன்.... இவ என்னடான்னா என் மானத்தை வாங்கிடுவா போலருக்கு... ஏய் எழுந்து போய் கையை கழுவு பிசாசு ” என்று முத்து மான்சியை அதட்ட.....

பவித்ரா சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து “ தட்டுலயே கழுவு மான்சி” என்று சிரித்தபடி தண்ணீர் ஊற்றினாள் ....

மான்சி கைகழுவிவிட்டு “ பெட்ரூம் எங்க?” என்று கண்ணை கசக்கியபடி கேட்க...... “ ஓய் உன் புருஷன் வந்திருக்கானே அவனைப் பத்தி ஒரு வார்த்தை கேட்டாளாப் பாரு? நல்லா தின்னா... இப்போ தூங்கனுமாம்” என்று முத்து குறைப்பட்டுக் கொண்டான்

“ அய்ய என் புருஷன் தானே... எங்க ஓடியாப் போகபோறான்?.... வந்தா பார்த்துகிட்டா போச்சு.... என் நிலைமை உங்களுக்கு என்னத் தெரியும்? என் பிரண்ட் மோகியை நைட்டு ஆந்திராவுக்கு ரயில் ஏத்தி விட்டுட்டு அப்புறமா ரூம் வந்து எல்லாத்தையும் க்ளீன் பண்ணி என் திங்க்ஸ் பேக் பண்ணி..... நைட்டெல்லாம் தூங்கவே இல்லை தெரியுமா? ” என்று மான்சி அழுபவள் போல சொன்னதும் முத்துவுக்கு உறுகிவிட்டது...


No comments:

Post a Comment