Monday, December 14, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 24



சத்யன் தனது திருமண வேலைகளை தினாவிடம் ஒப்படைத்துவிட்டு .... அர்ச்சனாவை பெண் கேட்ட மாப்பிள்ளை ரவிச்சந்திரனை பார்க்க விக்டருடன் கோவ சென்று விமானம் மூலமாக சென்னை கிளம்பினான்....

ரவி சத்யன் வயதுடையவன் தான் ... நல்லவனாகவும் மரியாதை தெரிநதவனாகவும் இருந்தான்.... கல்லூரியில் லெக்சரராக இருக்கிறான் என்று கூறினால் நம்பமுடியாத அளவுக்கு இளைஞாக இருந்தான்.... அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் அர்ச்சனா மீது அவன் கொண்டுள்ள நேசம்தான் தெரிந்தது..

அவன் அப்பா அம்மாவும் கூட நல்ல குணமுடையவர்களாக இருந்தார்கள்... சத்யன் மான்சி பற்றி அவர்களுக்கு சகல விஷயமும் தெரிந்திருந்தது... அதைப்பற்றி அதிகம் பேசாமல் நாகரிகம் காத்தனர்....

சத்யன் தனது திமணத்திற்க்கு அவர்களை தகுந்த மரியாதையோடு அழைத்துவிட்டு விக்டருடன் கிளம்பும்போது ரவி அவர்களை வழியனுப்ப ஏர்போர்ட் வரை வந்தான்...

விமானம் புறப்பட தாமதம் என்றதும் மூவரும் பேசிக்கொண்டிருக்க .... ரவி சங்கடமாக நெளிந்த படி சத்யனின் கையைப் பற்றி “ உங்களால எனக்கு ஒரு ஹெல்ப் வேனும் சத்யன்?” என்று கேட்க...

சத்யன் அவன் தடுமாற்றத்தை ரசித்தபடி “ என்ன சொல்லுங்க ரவி?” என்று கேட்டான்...



“ இல்ல உங்க மேரேஜ் முடிஞ்சு ஆறு மாசம் கழிச்சு தான் எனக்கும் அர்ச்சனாவுக்கும் மேரேஜ் பண்ணமுடியும்னு அர்ச்சனாவோட அம்மா சொல்றாங்க... அது சரியா வராது சத்யன்...” என்று ரவி சொல்லும்போதே குறுக்கிட்ட சத்யன்

“ ஏன் ரவி அதுல என்ன பிரச்சனை?” என்று குழப்பமாக கேட்க

“ ஏன்னா இப்போ லீவ் டைம்ல மேரேஜ் பண்ணிட்டா மறுபடியும் காலேஜ் திறக்கறதுக்குள்ள நாங்க ஓரளவுக்கு செட்டில் ஆயிடுவோம்... அதுமட்டுமல்ல அர்ச்சனாவை மேல படிக்க வைக்க இங்கே இருக்கும் காலேஜ்ல அட்மிஷன் வாங்கிருக்கேன்... ஆனா அர்ச்சனா அம்மா ரொம்ப பிடிவாதமா இருக்காங்க... நீங்கதான் அவங்களுக்க புரியவைக்கனும் சத்யன்” என்றான் ரவி

விக்டர் சத்யனின் கையைப் பற்றி சற்று நகர்ந்து சென்று காதருகே குனிந்து ரகசியமாக “ நான் இதைப்பற்றி பேசிட்டேன் சத்யா..... மான்சிக்கு அடுத்து உடனே அர்ச்சனாவுக்கு கல்யாணம்னா சீர் செய்ய முடியாதுன்னு சொல்றாங்க.. சரி நான் எதுக்கும்மா இருக்கேன் நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டேங்கறாங்க சத்யா.. அவங்க தன்மானம் பார்க்கிறாங்க சத்யா ” என்று நிலைமையை சொன்னான் விக்டர்...

“ ஓ அப்படியா ” என்று யோசனையாய் இருந்த சத்யனை நெருங்கிய ரவி “ நீங்க என்ன பேசினீங்கன்னு புரியுது சத்யன்... நானும் என் பேரன்ட்ஸ்ம் எதையுமே எதிர்பார்க்கலை.. அர்ச்சனா எங்க வீட்டுக்கு வந்தா போதும்... அவளை நல்லா படிக்க வைக்கனும் அதுதான் எனக்கு முக்கியம்” என்று ரவி தெளிவாக சொல்ல...

“ சரி ரவி நான் அத்தை கிட்ட பேசிக்கிறேன்... நீங்க உங்க வீட்டுல அடுத்த மாசமே நாள் பார்க்க சொல்லுங்க” என்று சத்யன் தைரியம் சொல்லிவிட்டு புறப்பட... அவனை நெருங்கிய ரவி “ அப்போ உங்களை நம்பி ஹனிமூனுக்கு இப்பவே டிக்கெட் புக் பண்ணலாமா?” என்று ரகசியமாக கேட்க.... சத்யனும் விக்டரும் பக்கென்று சிரித்து “ நடத்து ராசா நடத்து” என்று கூறிவிட்டு விமானமத்தை நோக்கி நடந்தார்கள்...

சத்யனும் விக்டரும் கோவையிலிருந்து டாப்சிலிப் வரும்போது மாலை ஏழு மணியாகியிருந்தது.. இரண்டு நாட்களாக மான்சியையும் தன் மகளையும் பார்க்காத சத்யன் அவசரமாக உள்ளே நுழைய.... ஹாலில் தரையில் அமர்ந்து சம்யுக்தாவை மடியில் வைத்துக்கொண்டு புட்டியிலிருந்த பாலை புகட்டிக் கொண்டிருந்தாள் சியாமா....


மகளுக்கு புட்டிப்பால் கொடுக்கப்படுவது சத்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது சியாமாவை நெருங்கி “ என்ன சியாமா சமிக்கு புட்டில பால் குடுக்குற?” என்று கேட்க ...

சியாமா சங்கடமாக அவனைப் பார்த்து “ மான்சியம்மா தான் குடுக்க சொன்னாங்கய்யா” என்றாள்.....

சத்யன் புருவம் சுருக்கி யோசித்தபடி மான்சியின் அறைக்குள் போனான்.... கட்டிலில் ஒருக்களித்துப் படுத்திருந்த மான்சியின் முகத்தில் பலத்த சிந்தனை.... கட்டிலை நெருங்கி மெல்ல அவளருகே சரிந்த சத்யன் அவளை தன் நெஞ்சோடு சேர்த்து இறுக்கமாக அணைத்து சற்றுநேரம் இருந்துவிட்டு பிறகு “ எப்படி இருக்க மான்சி?” என்று அவள் காதில் ரகசியமாக கேட்க....

அவன் நெஞ்சில் அழுந்தியிருந்த முகத்தை சற்று விலக்கி “ ம் நல்லாருக்கேன்” என்றாள்....

சத்யன் மனமேயில்லாமல் அவளை விலகி எழுந்து “ நான் போய் குளிச்சிட்டு வந்துர்றேன் மான்சி...” என்று கதவு வரை போய் நின்று திரும்பியவன் “ பாப்பாவுக்கு ஏன் புட்டிப்பால் குடுக்குற? ” என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு கேட்டான்...

மான்சி எழுந்து ஜன்னலருகே போய் நின்றுகொண்டு “ குழந்தைக்கு என் பால் பத்தலை அதனால்தான்.......” என்றாள் .... சத்யன் அதற்கு மேல் எதுவும் பேசவுமில்லை அங்கே நிற்கவுமில்லை... தன் அறைக்குப் போக மாடிபடிகளில் ஏறினான்

மான்சி சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்று சத்யனுக்குத் தெரியும்... சற்றுமுன் அவளை இறுக்கி அணைத்தபோது அவன் சட்டையில் ஏற்பட்ட ஈரமே அவள் சொல்வது அப்பட்டமான பொய் என்று சொன்னது... சத்யன் மீண்டும் குனிந்து தன் சட்டையை பார்த்தான்... சட்டை முற்றிலும் நனைந்து போயிருந்தது ...மான்சியை இவன் மார்போடு அழுத்தியபோது அவள் மார்புகளில் கசிந்து வழிந்த பால் தான் அவன் சட்டையை நனைத்திருந்தது

தனது அறைக்குள் போய் சட்டையை கழட்டி சுருட்டி கையில் வைத்துக்கொண்டு அதையே வெறித்தான் “ என் மான்சிக்கு பொய் பேச தெரியுமா?’என்று தன்னைத்தானே வாய்விட்டு கேட்டுக்கொண்டான்......

“ ஒரு அணைப்பில் சட்டையே நனையும் அளவிற்கு இவ்வளவு பால் இருந்தும் ஏன் குழந்தைக்கு தராமல் புட்டிப்பால் கொடுக்கிறாள்?” என்ற கேள்வி அவள் மனதை வண்டாக குடைந்தது...

சின மேல்தட்டு பெண்களைப் போல் குழந்தைக்கு பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று நினைக்கிறாளா? ..... சத்யனுக்கு குழப்பமாக இருந்தது ...

திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இப்போது இதை பெரிதுபடுத்தி விசாரிக்க ஆரம்பித்தால் புதிதாய் ஏதாவது பூதம் கிளம்பக்கூடும்.... திருமணம் முடியட்டும் பிறகு கேட்போம் என்று எண்ணியவாறே குளிக்க சென்றான் ...

மறுநாள் புவனாவுக்கு போன் செய்து ரவியின் சூழ்நிலைப் பற்றி சொல்லி அடுத்த மாதமே ரவி அர்ச்சனா திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று விவரமாக எடுத்துச்சொன்னான்...

“ இல்லப்பா இப்போ கையில இருக்குறது மான்சிக்கு சீர் செய்யத்தான் இருக்கு.... ஊர்ல கொஞ்சம் நிலம் இருக்கு அதை வித்துதான் அர்ச்சனாவுக்கு செய்யனும்... அது உடனே முடியாது ஆறு மாசம் ஆகும்” என்று தனது நிலைமையை சொன்னாள் புவனா...


எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று சொன்னாலும் நிச்சயம் கேட்கமாட்டாங்க ... என்ன செய்யலாம் என்று யோசித்த சத்யனுக்கு ஒரு யோசனை தோன்ற “ ஒன்னு செய்யலாம் அத்தை ... இப்போ இருக்குறதை வச்சு அடுத்த மாசம் அர்ச்சனா மேரேஜ் முடிக்கலாம்... எங்களுக்கு ஆறு மாசம் கழிச்சு சீர் செய்ங்க...” என்று சத்யன் யோசனை சொல்ல...

“ அது சரியா வருமா ? யாராவது எதுனா பேசுவாங்க மாப்பிள்ளை” என்று சங்கடமாக பேசியவரை ஏதேதோ சொல்லி சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்துவிட்டு உடனே ரவிக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான் சத்யன்

மறுநாள் எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் மான்சி வர மறுத்துவிட... லதா விக்டருடன் கோவை சென்று திருமணத்திற்கு வேண்டிய துணிகள் எல்லாவற்றையும் வாங்கியவன்... பிறகு ஒரு பிரபல நகைக்கடையில் மான்சிக்கும் மகளுக்கும் நிறைய நகைகள் வாங்கினான்... அவன் மனக்கண்ணில் ஒவ்வொன்றையும் மான்சிக்கு அணிவித்துப் பார்த்து ரசித்து ரசித்து வாங்கினான்

வீட்டுக்கு வந்து மான்சியிடம் அவற்றைப் பிரித்துக்காட்டியபோது “ ம் நல்லாருக்கு” என்றாளே தவிர வேறு ஆர்வம் காட்டவில்லை.... இவளுக்கு என்ன ஆச்சு? என்று வேதனையுடன் அவள் முகம் பார்த்தவனை...

விக்டர் தான் தோளோடு அணைத்தபடி வெளியே அழைத்துப்போனான் “ கொஞ்சம் பொறுமையாயிரு சத்யா.... அவளும் சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி மாறனும்ல... நாம அதுக்கேத்த டைம் குடுக்கலை... எல்லாமே அவசரகதில நடக்குது... அதனால் கூட இப்படி இருக்கலாம்... போகப்போக சரியாயிடுவா” என்று ஆறுதல் கூறி அழைத்துச்சென்றான்... சத்யனுக்கும் மான்சியின் தன்மானம் மிக்க குணம் தெரியும் என்பதால் அதுவாகத்தான் இருக்கும் என்று தன்னை சமாதானம் செய்துகொண்டான்

விக்டரின் திருமணத்தின் போது தனது அப்பாவின் கண் ஆப்ரேஷனுக்காக சென்னையில் இருந்த தினா......... சத்யனின் திருமணப் பொருப்பு முழுவதையும் தனதாக்கிக் கொண்டு வேலைகள் செய்தான் ....

ஒரு பெரய மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு எஸ்டேட் ஊழியர்கள் அனைவரும் வாய் வார்த்தையாக திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர்... சில முக்கிய ஆட்களை தினாவும் விக்டரும் நேரில் சென்று அழைத்தனர்...

சத்யன் இரண்டு நாள் பயணமாக தர்மபுரி சென்று தனது நண்பர்கள் நேரில் அழைத்தான்... சுந்தரம் முக்கியமான உறவினர்களை அழைத்து வருவதாக சொல்ல... சத்யன் தாத்தா மகாலிங்கத்துடன் டாப்சிலிப் வந்தான்...

தன் பேரன் வயிற்றுப் பேத்தியைப் பார்த்து கண்கலங்கினார் மகாலிங்கம்.... கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைக்குப் பிறகு வந்த பெண் வாரிசு சம்யுக்தா தான்.... அதனால் அந்த வீட்டின் செல்வச் சீமாட்டி அவள்தான்...

மான்சி தாத்தாவிடம் அடிக்கடி போனில் பேசி பழக்கமிருந்ததால் சங்கடமின்றி சகஜமாக அவரிடம் பேசினாள்... நல்ல மருமகளாக அவரது தேவைகளை கவனித்துக் கொண்டாள் திருமணத்திற்கு முதல் நாள் காலை புவனா தன் பிள்ளைகளுடன் ஒரு வாடகை காரில் வந்து இறங்கினாள்... நேரம் ஆக ஆக வீடு முழுக்க உறவினர் மற்றும் நண்பர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது....

தனது அம்மா தங்கச்சி என்று எல்லோரும் இருந்தாலும் அன்று காலையிலிருந்தே மான்சி தனது அறைக்குள் தனிமையை நாட ஆரம்பித்தாள்... புவனா மூடியிருந்த கதவைத்தட்டி “ என்னாச்சு மான்சி” என்று கேட்க...

எழுந்துவந்து கதவை திறந்தவள் “ இல்லம்மா ரொம்ப தலைவலியா இருக்கு... வீடு நிறைய இருக்கும் கூட்டத்தால வந்த அலர்ஜியா இருக்கும்னு நெனைக்கிறேன்... மாத்திரைப் போட்டுக்கிட்டு கொஞ்சநேரம் தூங்கினா சரியாப் போகும்” என்று கூறினாள்...




தாயறியாத சூல் உண்டா? என்பது போல் மகளை யோசனையுடன்ப் பார்த்த புவனா “ சரிபோய் தூங்கம்மா” என்று கூறிவிட்டு கதவை மூடிவிட்டு போனாள்...

குழந்தை புட்டிப்பால் குடிக்கும் போதே புவனாவுக்கு மனதுக்கு ஒருமாதிரியாக இருந்தது.... நடந்தவை அனைத்தும் கசப்பானவையாக இருந்தாலும் இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும் என்று முருகனை வேண்டியபடி கல்யாண வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள் அந்த ஏழைத்தாய் ....

அன்று ஐந்து ஆறு மணிக்கெல்லாம் சத்யனின் பங்களா திருவிழாக்கோலம் பூண்டது.... தோட்டத்தில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு ஒரு பக்கம் சமையலுக்கான வேலையும்... மறுபக்கம் சாப்பிடுபவர்களுக்காக மேஜை நாற்காலிகள் போடப்பட்டு.. பரபரப்புடன் எஸ்டேட் ஊழியர்களும் உறவினர்களும் அங்கும் இங்கும் நடமாடிக்கொண்டிருந்தனர்...

பங்களாவின் ஹாலில் இருந்த சோபாக்கள் ஊஞ்சல்கள் இன்னும் பிற பொருட்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு நடு ஹாலில் மணப்பந்தல் போடப்பட்டது .... திருமணம் அதிகாலை என்பதால் எல்லோருமே பரபரப்புடன்தான் இருந்தார்கள்...

மான்சி தலைவலியுடன் படுத்திருக்கிறாள் என்றதும் சத்யன் நிமிடத்திற்கொரு முறை அவள் அறையில் எட்டிப்பார்த்துவிட்டு ஓடிக்கொண்டிருந்தான்... கொஞ்சம் அதிகப்படியாக அவளுடன் இருக்கத் தோன்றினால் ... அவசரமாக கதவை மூடிவிட்டு அவளை அதே அவசரத்தோடு அணைத்து முத்தமிட்டு வெளியே ஓடுவான்....

வந்த உறவுக்கூட்டம் ஆறு மணியளவில் கல்யாணப் பெண் எங்கே விசாரிக்கவும் சத்யன் தர்மசங்கடமாக புவனாவைப் பார்க்க ... “ கவலைப்படாதீங்க நான் ரெடி பண்ணி கூட்டிட்டு வர்றேன்” என்று சத்யனுக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல கூறிவிட்டு மான்சியின் அறைக்குக்குள் போனாள்...

கட்டிலில் படுத்திருந்த மான்சியின் அருகில் அமர்ந்த புவனா வெளியே இருக்கும் நிலவரத்தை சொல்லி “ அவங்களுக்கு பதில் சொல்லமுடியாம மாப்பிள்ளை தவிக்கிறார் மான்சி... எழுந்து கொஞ்சமா அலங்காரம் பண்ணிகிட்டு வெளிய வாம்மா” என்று அன்பாக சொல்ல... மான்சியில் மறுக்க முடியவில்லை.... மெல்ல எழுந்து குளியலறை போய் வெந்நீரில் குளித்துவிட்டு வந்தாள்

சற்றுநேரத்தில் லதாவும் அர்ச்சனாவும் மான்சிக்கு உதவியாக வர புவனா அவர்களிடம் மான்சியை ஒப்படைத்துவிட்டு மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றாள்... லதா சென்று சத்யன் மான்சிக்காக வாங்கி வந்த நகைகளை எடுத்து வந்தாள்... மகாலிங்கம் தன் மருமகளின் வைர நகைகளையும் எடுத்துவந்து கொடுக்க... மான்சி என்ற தங்க ரததிற்கு வைரத்தால் அலங்காரம் செய்தார்கள்...

தோட்டத்தில் நின்றுகொண்டு வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த சத்யனை வம்பாக இழுத்துச்சென்ற விக்டர்... அவனை குளிக்கச் சொல்லி அவனுக்காக வாங்கியிருந்த கருநீல நிற கோட் சூட்டை அணிவித்து மாப்பிள்ளையாக அழைத்து வந்து சோபாவில் அமர வைக்க.... கடல்நீரில் சர்வ அலங்காரத்துடன் அசைந்துவரும் ஒரு போர்க்கப்பல் போல் மெல்ல மிதந்து வந்து சத்யனின் அருகில் அமர்ந்தாள் மான்சி

பக்கத்தில் இருந்த உறவினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த சத்யன் தன்னருகில் யாரோ அமர்வதை உணர்ந்து திரும்பினான்... ஒரு நிமிடம் கண்களை சிமிட்டி மீண்டும் பார்த்தவன் வியப்பில் வாய்த்திறந்தபடி எழுந்து நின்றுவிட்டான் ...

எல்லோரும் இவர்களை கவணிக்க விக்டர் அவசரமாக சத்யன் தோளில் கைப்போட்டு அழுத்தி சோபாவில் உட்காரவைத்தான்... சத்யன் இயந்திரம் போல் உட்கார்ந்தான் மான்சியை விட்டு பார்வையை அகற்றாமலேயே ...

இளஞ்சிவப்பு நிற வைரஊசிப் பட்டில்... பரம்பரை வைர நகைகளின் அலங்காரத்தில்.... மழையின் நடவே திடீரென்று வெட்டும் மின்னலைப் பிடித்து செதுக்கிய சிற்பம் போல் ஜொலித்தாள் மான்சி....


சத்யனால் அவளருகில் உட்கார முடியவில்லை.... அவளைத் தூக்கிக்கொண்டு ஆளில்லாத தேசம் எங்காவது ஓடிவிடவேண்டும் போல் இருந்தது... அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிகை வாசனையையும்... உயர்தர சென்டின் வாசனையையும் மீறி அவளுக்கே உரித்தான வாசனை சத்யனை கிறங்கடித்தது...

இதுவரை எளிமையான உடைகளில் மட்டுமே மான்சியை பார்த்துவிட்டு .. இன்று மணக்கோலத்தில் பார்த்த சத்யனுக்கு ஒரு மயக்க நிலை சூழ சங்கோஜமே இன்றி அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்...

அவளின் குங்குமப்பூ மேனிக்கு பொருத்தமாக இவன் தேர்ந்தெடுத்த இளஞ்சிவப்பு பட்டு அதிப் பொருத்தமாக இருந்தது... அவள் சற்று அசைந்தாலும் ஜொலிக்கும் வைரங்கள் தேவலோக கன்னி பூமிக்கு வந்தது போன்ற தோற்றத்தை தந்தது...

இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்து தோளோடு தோளுரச அவளின் இடதுகை விரல்களோடு தன் வலது கைவிரல்களை கோர்த்துக்கொண்டு கர்வத்துடன் நிமிர்ந்து அமர்ந்தான்.... சத்யனின் மயக்கம் கூடிக்கொண்டே போனது... மான்சியை ஒரு முறையேனும் அணைத்து ஒரு முத்தமாவது கொடுக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்தான்....

சத்யன் குடும்பத்து உறவினர்கள் சிலர் அவர்களின் ஜோடிப்பொருத்தத்தை வியந்து இருவரின் நெற்றியை விரலால் வலித்து திருஷ்டி கழித்தனர்... சத்யனின் நண்பர்கள் கையைப்பிடித்து “ தேவதை மாதிரி பொண்டாட்டி செலக்ட் பண்ணிருக்கடா” என்று மனதார வாழ்த்தினர்

இந்த மொத்த அழகுக்கும் சொந்தக்காரன் நான்தான் என்ற எண்ணமே அவனை கர்வமாய் நிமிர வைத்தது... எல்லோரையும் அவன் பார்க்கும் பார்வைகூட வித்தியாசமாக இருந்தது... ஒரு மகாராணி தன் சேவகனுக்கு சரிக்கு சரி மரியாதை கொடுத்து சிம்மாசனத்தில் தன் பக்கத்தில் அமர வைத்தால் அவன் எப்படி மற்றவர்களை அலட்சியமாக பார்ப்பானோ அதேபோல் பார்த்தான் சத்யன்...

சற்றுநேரத்தில் எல்லோரும் சாப்பிட போக விக்டர் வந்து இவர்களையும் சாப்பிட அழைத்தான்...

“ இதோ வர்றேன் அண்ணா ” என்று மான்சி எதற்காகவோ தன் அறைக்குள் போக... சத்யனும் அவள் பின்னோடு போய் அவசரமாக கதவைச் சாத்திவிட்டு மான்சியை அலுங்காமல் அள்ளினான்....

“ சேலை கசங்கிடும் விடுங்க” என்று மான்சி உணர்ச்சியற்ற குரலில் கூற...

சத்யன் அதை கவனிக்கும் நிலையில் இல்லை... மெல்ல அவளை தரையிறக்கியவன் அவள் முகத்தை கையில் ஏந்தி ஆசைத்தீர பார்த்தான்... சிவந்த இதழ்களில் தன் உதடுகளை வைத்து அழுத்தி ஒரு முத்தத்தை பதித்தவன் தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய டப்பாவை எடுத்து அதிலிருந்து ஒரு மோதிரத்தை எடுத்தான்

தங்க மோதிரத்தின் நடுவே சிவப்பு நிற எனாமலில் ஒரு இதவடிவான படம் செதுக்கப்பட்டு அதில் பொடிப்பொடியான வைர கற்கலால் SM என்று பொரிக்கப்பட்டிருந்தது.. அதை எடுத்து மான்சியின் விரலில் போட்டுவிட்டு மீண்டும் அவள் முகத்தை கையிலேந்திய சத்யன் “ ஜ லவ் யூ மான்சி” என்றான்...

அவன் மான்சியிடம் தன் காதலை சொல்வது இதுதான் முதன்முறை... சத்யன் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தான்... அவனின் காதல் பார்வை அவளை உறுக்கவில்லை... இறுக்கியது... அவன் கைகளுக்குள்ளாகவே மான்சியின் உடல் கடினப்பட்டது....

மீண்டும் அவள் தேன் இதழ்களில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு “ வா சாப்பிட போகலாம்” என்று கைப்பிடித்து வெளியே அழைத்துச்சென்றான்..

அவர்கள் சாப்பிட அமரும்போது ரவிச்சந்திரன் வந்துவிட... அவனை மான்சிக்கு அறிமுகம் செய்து வைத்தான் சத்யன்... ரவி புன்னகையுடன் மான்சிக்கு வாழ்த்து சொல்லிவிட்டு தன் பார்வையால் கல்யாண வீட்டை அலசினான்... அர்ச்சனாவைத் தேடி....


அதன் பின் கல்யாண வீடு வெகு அழகாக மாறியது.... சம்யுக்தாவை மாற்றி மாற்றி தூக்கி கொஞ்சும் உறவுக்கூட்டம்... யார் யார் சாப்பிட்டார்கள் யாருக்கு என்ன வேண்டும் என்று ஓடி ஓடி கவனித்த சுந்தரமும் விக்டரும்... காலை உணவைப்பற்றி சமையல்காரரிடம் சத்தமாய் பேசிக்கொண்டிருந்த தினா.... சொந்தங்களிடம் சம்யுக்தாவை காட்டி பெருமை பேசும் தாத்தா.... பக்கத்தில் இருக்கும் காதலியை பார்த்து பார்த்து நெஞ்சில் நிறப்பியவாறு சாப்பிடும் சத்யன்..... வெட்கம் என்ற போர்வையில் தலைகுனிந்து உணவை விரலால் அளந்த மான்சி....

பட்டுப்பாவாடையை உயர்த்திப்பிடித்துக் கொண்டு பட்டாம்பூச்சியாய் ஓடித்திரிந்த ஆர்த்தி...பொறுப்பான தம்பியாய் வந்தவர்களை கவனித்த அழகான இந்த்ரஜித்.... பார்வையில் காதலைத் தேக்கி வைத்துக்கொண்டு அர்ச்சனாவை தேடிய ரவி... ரவியின் கண்ணில் படாமல் ஓடி ஓடி மறையும் அர்ச்சனா... அடிக்கடி தன் கணவனின் காதில் தங்களின் காதலைப்பற்றியோ அல்லது சத்யனின் கல்யாணத்தைப் பற்றியோ கிசுகிசுத்து விட்டு செல்லும் லதா....

தங்கள் முதலாளி நிமிர்ந்து தங்களை ஒருப் பார்வையாவது பார்க்கமாட்டாரா என்று சத்யனின் பார்வையில் பட்டபடி நடமாடும் எஸ்டேட் ஊழியர்கள்... ஏய் தம்பி அந்த நாலாவது வரிசைக்கு சாம்பார் எடுத்துட்டு போ என்ற விக்டரின் குரலும்...... இந்த வரிசைக்கு இன்னும் ஊத்தப்பம் வரலை என்னான்னு பாருப்பா.... என்ற சுந்தரத்தின் குரலும் மாறி மாறி ஒலித்துக்கொண்டிருந்தது

இரவு பத்தரை மணி .... ஓரளவுக்கு சந்தடி அடங்கி அவரவர் கிடைத்த இடத்தில் உறங்க ஆரம்பிக்க... நெருங்கிய உறவினர்கள் மட்டும் ஹாலில் அமர்ந்து பழங்கதை பேசினர்.... சில ஆண்கள் ஒரு மூலையில் அமர்ந்து சீட்டு கச்சேரியை ஆரம்பிக்க.... மாத்திரைகள் எடுத்துக்கொண்ட தாத்தாவை சுந்தரம் ஒரு அறைக்கு அழைத்துச்சென்று படுக்க வைத்துவிட்டு வந்தார்....

விக்டர் சுந்தரம் தினா மூவரும் கடைசியாக சாப்பிட்டு விட்டு காலை உணவைப்பற்றியும் மற்ற இதர வேலைகள் பற்றியும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்... சத்யன் மான்சியின் விரல்களை விடாமல் பற்றியபடி ஆர்த்தி இந்த்ர் இருவரிடமும் அரட்டையடித்துக் கொண்டிருந்தான்....

அர்ச்சனா தாகத்துக்கு தண்ணீர் குடிக்கு வந்து குடித்து விட்டு போகும் போது ஒரு மரத்தின் மறைவுக்கு இழுக்கப்பட்டாள்... “ ஆஆஆஆஆ....” என்று கத்துவதற்கு அவள் வாயைத் திறக்கும்முன் அவள் வாயை பொத்திய ரவி “ ப்ளீஸ் கத்தாதே அர்ச்சனா நான்தான் ரவி” என்றான் மெல்லிய குரலில்...

அவனிடமிருந்து திமிறிய அர்ச்சனா “ என்னை விடுங்க எங்கம்மாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுடுவாங்க” என்று அழுவதுபோல் கூற.....

“ ஏய் நான் ரவி ... உனக்கும் எனக்கும் அடுத்த மாசம் கல்யாணம் தெரியுமா? என்னமோ வெளி ஆள் மாதிரி பிகேவ் பண்ற... உன்கிட்ட பேசனும்னு எவ்வளவு நேரமா தவிக்கிறேன் தெரியுமா? ப்ளீஸ் கொஞ்சநேரம் அர்ச்சனா ... பேசிட்டு உடனே போயிடு ” என்று ரவி கெஞ்சினான் ....

அர்ச்சனாவோ இன்னும் பதட்டமாகவே இருந்தாள்.... அம்மா பார்த்தால் செத்தேன் என்று அவள் உடல் உதறியது.... இவன் வேற இந்த நேரத்துல இம்சை பண்றானே என்று ரவியின் மீது கோபம் வந்தது “ ம்ஹூம் எனக்கு இதெல்லாம் பிடிக்கலை மொதல்ல கையை விடுங்க.... கல்யாணம் நடந்த பின்னாடி கையைப்பிடிங்க... இப்ப விடுங்க... எங்கம்மா தெரிஞ்சா நான் செத்தேன்...” என்று சுற்றுமுற்றும் பார்த்தபடி மிரண்ட குரலில் பேசினாள்....

அவனிடமிருந்து கையை விடுவிக்க அர்ச்சனா முழுமூச்சாக போராடியதும் ‘ இவள் தன்னை நம்பவில்லையே’ ரவிக்கு ஏமாற்றமாக போனது... மெல்ல அவள் கைகளை விட்டுவிட்டு “ ஸாரி “ என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்....


அவன் பற்றியிருந்த இடத்தை விரலால் வருடியபடி நிமிர்ந்த அர்ச்சனாவுக்கு ரவியின் வாடிய முகமும் அவன் ஸாரி சொன்ன விதமும் என்னவோ போல் இருந்தது... மனதில் குழப்பத்துடன் வீட்டுக்குள் வந்தாள்..... வந்தவளின் கண்கள் ரவியை தேடியது.... எங்கேயும் அவனை கானவில்லை.... அய்யோ சும்மா பேசனும்னு தானே சொன்னார் அவசரப்பட்டு இப்படி பண்ணிட்டேனே என்ற தவிப்புடன் கண்களை அலையவிட்டாள்

சத்யனின் தோளருகே சரிந்த மான்சி “ எனக்கு தூக்கம் வருது போகவா?” என்று மெல்லிய குரலில் கேட்க..... “ ஓ ஸாரி கண்ணம்மா நீ போய் தூங்கு “ என்று அவளுக்கு சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்தவர்களிடம் “ மான்சிக்கு தூக்கம் வருதாம் ... இதோ வர்றேன் ” என்று கூறிவிட்டு மான்சியின் பின்னால் போனான் அவளுக்கு தாலாட்டு பாடி தூங்க வைப்பவன் போல

அறைக்குள் நுழைந்த மான்சி கட்டிலில் அமர்ந்து ஒரு ஒரு நகையாக கழட்டி அதன் பெட்டிகளில் வைக்க சத்யன் ஒரு நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு அவளின் சின்ன சின்ன அசைவுகளை கூட தன் இதயத்தில் சித்திரமாக்கினான்

எல்லாவற்றையும் கழட்டி விட்டு பட்டுப்புடவையை அவிழ்க்க முந்தானையில் கைவைத்தவள் சத்யனை நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்த்தாள்... அந்தப் பார்வைக்கு கட்டுப்ட்டு எழுந்து நின்றாலும் ‘ வெளியே போகனுமா என்பது போல ஏக்கமாக ஒரு பார்வைப் பார்த்தான் சத்யன் ...

மான்சி எதுவுமே பேசவில்லை அசையாமல் நின்றாள்.... சத்யன் தன் வழக்கம் போல் அவளை அணைத்து இதழ்களில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி தன் அறைக்குப் போனான்...

மான்சி குளித்துவிட்டு வந்து கட்டிலில் படுத்துக்கொள்ள ... சியாமா குழந்தைக்கு பால் புகட்டிவிட்டு எடுத்து வந்து மான்சியின் அறையில் இருக்கும் தொட்டிலில் படுக்க வைத்தாள்... திருமணமாகி ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை செல்வம் இல்லாத சியாமாவுக்கு சம்யுக்தாவை கவனித்துக்கொள்வது கடவுள் தனக்கு அளித்த வரமாகக் கருதினாள்....

ஓரளவுக்கு சந்தடிகள் அடங்கிவிட.... அறைகள் எல்லாம் நிரம்பி விட்டதால் நிறைய ஆண்களும் பெண்களும் ஹாலில் படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டனர் ...

புவனா படுக்கைகளை எடுத்து வந்து ஹாலின் ஒரு மூலையில் போட்டு மகள்களையும் மகனையும் படுக்க சொல்லிவிட்டு தானும் படுத்துக்கொண்டாள்.... இந்த்ர்க்கு தினா ஏதோ வேலை கொடுத்திருந்ததால் “ நான் அப்புறமா வர்றேன்மா” என்று கூறிவிட்டு தோட்டத்து பக்கம் போய்விட்டான் ...

எல்லோரும் உறங்கிவிட அர்ச்சனாவுக்கு பொட்டுக்கூட உறக்கம் வரவில்லை... ரவியின் முகத்தில் இருந்த வருத்தத்தை நினைத்து அழுகைதான் வந்தது... அய்யோ தப்பு பண்ணிட்டேனே... என்னைப் பத்தி என்ன நினைச்சாரோ?’ என்ற வேதனையுடன் விழித்து கிடந்தவளை கடந்து சமையலறையை நோக்கி சென்றான் ரவி...

அவனை கண்டதும் அர்ச்சனாவின் உள்ளம் துள்ளியது.... அவசரமாய் தலையை நீட்டி ரவி எங்கே போகிறான் என்று பார்த்தாள் .... சமையலறைக்குள் நுழைந்தான்... மெல்ல போர்வையை விலக்கி எல்லோரையும் கவனித்தாள்... எல்லோரும் திருமண விருந்து உண்ட களைப்பில் உறங்கினர்....

மெல்ல எழுந்து பூணை நடைபோட்டு சமையலறை நோக்கி சென்றாள்... உள்ளே ரவி தண்ணீர் பில்டரில் தண்ணீர் பிடித்து குடித்தான்... க்ளாஸை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு திரும்பியவன் சுவரோடு சுவராக பல்லிபோல் ஒட்டிக்கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்து தயங்கி நின்றான் ...

அவன் சொன்ன அதே ஸாரியை இவள் திருப்பி சொன்னாள் “ ஸாரிங்க “ என்று ...

ரவி எதுவும் பேசவில்லை... சற்று இடைவெளி விட்டு நின்றபடி அவளையே உற்று கவனித்தான்... பிறகு “ என்னை உனக்கு பிடிச்சிருக்கு தானே”என்று சந்தேகமாக கேட்டான்...

“ ம்ம்” என்று வெட்கத்துடன் தலைகுனிந்தவளை ரசித்து “ ம்ம் னா என்ன அர்த்தம் அர்ச்சனா? பிடிச்சிருக்கு பிடிக்கலைனு வாயைத்திறந்து சொல்லு” என்றான்... சற்றுமுன் தோட்டத்தில் அவள் நடந்துகொண்டிருந்த விதம் அவனை பெரிதும் பயப்படுத்தியிருந்தது..


அவனை நிமிர்ந்துப் பார்த்த அர்ச்சனா இதழ்களில் தேங்கிய சிரிப்புடன் “ ரொம்ப பிடிச்சிருக்கு” என்றதும் ... தன் இதயத்தில் கைவைத்து “ ஸ்ஸ்ஸ் யப்பா” என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் ரவி ..

இப்போது தைரியத்துடன் அவளை நெருங்கி நின்றவன் “ அப்படின்னா நான் தர்றதை மறுக்காம வாங்கிக்கனும்” என்று ரவி சொல்ல... அவன் என்ன தரப்போகிறானோ என்ற பயத்தில் சற்று நகர்ந்தவளைப் பார்த்து சிரித்த ரவி “ ம்ம் நீ நினைக்கிறது இல்லை... ஆனா அதுவும்தான் தரனும் .. அதஷ அப்புறமா தரலாம் ... இப்போ இதை வாங்கிக்க அர்ச்சனா” என்று தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு செல்போனை எடுத்து அவளிடம் கொடுத்தான்

அதைப் பார்த்து மிரண்டவளை கண்டு “ நீ பண்ண வேண்டாம் அர்ச்சனா... போனை சைலன்ட்ல வச்சுக்க... நான் மட்டும் கால் பண்றேன்... பேசுறதுக்கு ஒரு டைம் பிக்ஸ் பண்ணிக்கலாம் ..

அதனால யாருக்கும் தெரியாது அர்ச்சனா... உன்கூட எனக்கு தினமும் பேசனும் அர்ச்சனா ப்ளீஸ் வாங்கிக்க” என்று கெஞ்சியவனிடம் மறுக்க முடியாமல் வாங்கி கொண்டாள் ......

சந்தோஷத்துடன் அவள் கைப்பற்றி இழுத்து முகத்தை நெருங்கினான் ரவி... அவன் எண்ணம் புரிந்தவள் “ ம்ம் ஆசைதான்... இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்” அவனிடம் இருந்து விடுபட்டு மெல்லிய சலங்கையாய் சிரித்தபடி வெளியே ஓடியவளை ஏமாற்றத்துடன் பார்த்தபடி வெளியே வந்தான் ரவி

அன்று இரவு முழுவதும் உறங்காமல் ஆளுக்கொரு மூலையில் நேருக்குநேர் படுத்துக்கொண்டு இருவரும் விழித்தபடி ரகசியமாக பார்த்துக்கொண்டனர்

மறுநாள் வெகு ரம்மியமாக விடிந்தது... எல்லோரும் எழுந்து குளித்து தயாரானார்கள்.... முதல் நாள் இரவைப் போலவே இப்போதும் எல்லோரும் பரபரப்புடன் ஆளுக்கொரு வேலையை செய்தபடி சுற்றினர்....

அர்ச்சனாவிடம் பேசிவிட்ட சந்தோஷத்தில் ரவிகூட காலையிலேயே குளித்துவிட்டு விக்டருடன் கல்யாண வேலைகளை கவனித்தான்....



No comments:

Post a Comment