Saturday, December 26, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 20



பவித்ராவின் வீட்டுக்கு கிளம்பிய முத்துவின் மன வேகத்துடன் அவனால் போட்டி போடமுடியவில்லை .... அவனுக்கு முன் அது அங்கே போய் பவித்ராவின் காலடியில் செல்ல நாய்குட்டியைப் போல் அமர்ந்திருந்தது...

முத்து வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கே அறிமுகம் இல்லாத சில உறவினர்களை தவிர குடும்பத்தினர் யாருமேயில்லை.. வேலைக்காரி மல்லிகாதான் முத்துவைப் பார்த்தாள் ... திருமணத்தில் முக்கியமானவனாக முத்துவை பார்த்திருந்தாள் என்பதால்.. “ பவித்ரா பாப்பா அவங்க ரூம்ல இருக்குறாங்க” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காது பவித்ராவின் அறையை காட்டிவிட்டு சமையலறைக்குள் புகுந்துகொள்ள...

முத்து ‘ ஒரு பெண்ணின் அறைக்குள் சட்டென்று எப்படி நுழைவது?’ என்ற குழப்பத்துடன் பவித்ராவின் அறைக்கு வெளியே தயங்கி நின்று.. பிறகு அவன் அனுமதியின்றி உள்ளே நுழைந்த மனதை தொடர்ந்து அவனும் போகவேண்டிய நிலையில்..... சும்மா ஒப்புக்கு ஒருமுறை கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான்...



பவித்ரா கட்டிலில் படுத்திருந்தாள்... மதுமிதா பவித்ராவின் அருகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள்... பவித்ராவின் கைகள் மதுவை சுற்றி வளைத்திருக்க... குழந்தையின் முகம் பவித்ராவின் மார்புகளுக்கு மத்தியில் இருந்தது... ஒரு தாய் பறவையின் சிறகுக்குள் உறங்கும் குஞ்சு பறவையை ஞாபகப்படுத்தியது அவர்களின் நிலை.....

இரவு வெகுநேரம் விழித்திருந்த காரணத்தால் முத்து வந்ததை கூட அறியாமல் அசந்து உறங்கிக்கொண்டிருந்தனர் இருவரும்... முத்துவுக்கு அந்த காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது.. வசதியாக சுவற்றில் சாய்ந்து நின்றுகொண்டான்...

இத்தனை நாட்களாக பவித்ராவை காணும்போது இருக்கும் குற்றவுணர்ச்சி இன்று இல்லை... இவள் எனக்கு சொந்தமானவள்.... எனக்கு மட்டும் தான் என்ற உணர்வுதான் இதயம் முழுவதும் இருந்தது... முதன்முறையாக பவித்ராவின் பாதவிரல்களில் இருந்து துளித்துளியாய் பார்த்து ரசித்தான்

இனி பவித்ரா எனக்கு கிடைக்க எந்த தடையுமில்லை’ என்று எண்ணினான்... ஆனால் இன்று காலை அவள் கூறிய வார்த்தைகள் அசந்தர்ப்பமாக ஞாபகத்திற்கு வந்து அவன் சந்தோஷத்திற்கு தடைபோட்டது....

என் அம்மா அப்பாக்கு மகளா இப்படியே இருந்துடுறேன்’ என்று பவித்ரா உறுதியுடன் கூறியது நினைவுக்கு வர..அவள் மனதை எப்படி மாற்றுவது என்ற புது குழப்பம் மனதை ஆக்கிரமித்தது... ஆனாலும் தன் காதல் மீது நம்பிக்கையும்... மது மீதான பவித்ராவின் பாசத்தின் மேல் உள்ள உறுதியும்...அவள் மனதை கரைத்துவிடும் என்று நம்பினான்

புடவைக்கு வெளியே பாதவிரல்கள் மட்டுமே தெரிய ... அன்றொருநாள் அவள் கைவிரல்களுக்கு முத்தமிட்ட ஞாபகத்தில் இன்று பாதவிரல்களை பார்த்ததும் உதடுகள் துடிக்க அவசரமாய் கட்டிலை நெருங்கி கால் பக்கமாக மண்டியிட்டான்

மடித்து வைத்த வென் பாதங்கள் அவன் கண்முன்னே... இரண்டையும் சேர்த்து மென்மையாக கைகளால் பற்றினான்.. குனிந்து ஒரு பூவை உதடுகளில் ஒற்றுவது போலே தனது உதடுகளை ஒற்றியெடுத்தான்.. ஒரு ஒரு விரலாக...

விரல்களுக்கு முத்தமிட்டவன் இன்னும் குனிந்து உள் பாதத்தில் தன் கன்னத்தை வைக்க.. கூச்ச உணர்வில் காலைகளை உதறி பட்டென்று எழுந்து அமர்ந்தாள் பவித்ரா...

முத்து சுதாரித்து எழுவதற்குள் அவனைப்பார்த்தவள் “ இங்கே என்னப் பண்றீங்க?” என்று கோபமாய் கேட்க...

முத்து சங்கடமாக நெளிந்தாலும் பின்வாங்காமல் “ அது கால் பாதம் பளிச்சென இருந்துச்சு ...... அதான் ஒரு ஆர்வத்துல அன்னிக்கு கைவிரலுக்கு குடுத்த மாதிரி.....” என்று முடிக்காமல் அவள் முகத்தைப் பார்க்க..

எதுவும் சொல்லாமல் கண்மூடித் திறந்தாள் பவித்ரா... பிறகு தலைகவிழ்ந்து “ வெளியே ஹால்ல வெயிட் பண்ணுங்க நான் வர்றேன்” என்றாள் ... 


முத்து சரியென்று தலையசைத்தாலும் அங்கிருந்து நகரவில்லை... அவளை விட்டு பார்வையை நகர்த்த முடியாமல் தவித்தான்.... இம்மையான தருனத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தினறினான்.... இத்தனை நாட்களாக இல்லாமல் இன்று புதுமையான உணர்வுகள் நெஞ்சை தாக்கியது

இவன் உதடுகள் ஏற்படுத்திய தொடு உணர்வால் பதட்டமாக எழுந்த பவித்ரா மார்போடு அணைத்திருந்த மதுவை விலக்குகிறேன் என்று மாராப்பையும் சேர்த்து விலக்கியிருந்தாள்... பதட்டத்தில் அவள் அதை உணரவில்லை என்றாலும் முத்துவின் கண்கள் உணர்ந்து விட்டது...

முத்து இன்னும் அங்கேயே நிற்பதை உணர்ந்து நிமிர்ந்தவள் அவன் பார்வை போன இடத்தையும் கவனித்து சட்டென்று தன் நிலையுணர்ந்து விலகி கிடந்த மாராப்பை சரி செய்துவிட்டு “ போய் வெளியே வெயிட் பண்ணுங்க” என்றாள் அமைதியான குரலில்..

அவள் குரலில் இருந்த அமைதி முத்துவை ஏதோ செய்ய கட்டிலின் பக்கவாட்டில் வந்து “ தவறா நெனைக்காத பவி.... இது என்னையும் மீறிய செயல்..... நான் இப்படியில்லைன்னு உனக்குத் தெரியும்..... ஆனா இன்னிக்கு என்னவோ என் மனசு ரொம்ப தடுமாறுது பவி... என்னை மன்னிச்சுடு ” என்றான் வருத்தம் தெரிவிக்கும் குரலில்....

சற்றுநேரம் அங்கே தேவையானதொரு அமைதி... அந்த அமைதி இருவரையுமே அமைதிப்படுத்திக் கொள்ள உதவியது.... முத்து மெல்ல அங்கிருந்து வெளியேற... பவித்ரா மதுவை தூக்கிக்கொண்டு அவனை தொடர்ந்து வெளியே வந்து சோபாவை காட்டி “ உட்காருங்க” என்றாள்

முத்து அமர்ந்ததும் மகளை அவன் மடியில் கிடத்தி விட்டு “ நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்” என்று அங்கிருந்து நகர்ந்தவள் வேறு ஒரு அறைக்குள் போய் தனது பெற்றோரை எழுப்பி அழைத்து வந்துவிட்டு சமையலறைக்கு சென்றாள்...

சுப்பிரமணியன் வந்து “ வாங்க தம்பி” என்றபடி முத்துவின் பக்கத்தில் அமர ஜானகி அவர்களுக்கு எதிரில் தரையில் அமர்ந்தாள்..... மகளின் திருமணம் நின்றுபோன சோகம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது... அழுதழுது சிவந்த முகத்துடன் ஜானகி மறுபடியும் மூக்கை உறிஞ்சினாள்...

“ ஏய் ஜானகி மறுபடியும் மூக்கை சிந்தாத..... எல்லாம் விதி யாராலையும் மாத்தமுடியாது” என்று மனைவியை அதட்டிய சுப்பு... முத்துவின் பக்கம் திரும்பி “ அந்த பொண்ணு சொன்ன மாதிரி அப்போ நாம விதைச்சதை இன்னைக்கு அறுவடை பண்ணிருக்கோம்... அன்னைக்கு வயசு திமிர்ல அடுத்தவன் துக்கம் நமக்கு தெரியலை... இன்னைக்கு அதே துக்கம் நம்ம வீட்டுல நடக்கும் போதுதான் அதனோட வேதனை தெரியுது” என்று விரக்த்தியுடன் நிதர்சனமாக பேசினார்...

முத்துவுக்கு அவரது ஒப்புதல் மனதை தொட்டது... இவ்வளவு விரிவான சிந்தனையை அவன் எதிர்பார்க்க வில்லை... செல்வத்தின் நண்பராக இருப்பதென்றால் சும்மாவா? என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு “ விடுங்க சார் எல்லாம் ஏதோவொரு விதத்தில் நல்லதுக்குன்னு நெனைச்சுக்கங்க” என்று ஆறுதலாக கூறினான்..

நிமிர்ந்து அவனைப் பார்த்து “ நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் முத்து... மகள் கல்யாணம் நின்னதும் முதல்ல எனக்கும் கோபம் வந்தது தான்... அந்த பொண்ணு செய்ததில் எந்த தவறும் இல்லை முத்து... அவ பாதிக்கப்பட்டவ அதனால அதை ஏத்துகிட்டு தான் ஆகனும்.... ஆனா சத்யன்? அவனை எவ்வளவு நம்பினோம்... முதல்நாள் நைட்டு கூட ‘ மாமா நான் வேறொரு பொண்ணை விரும்புறேன்னு ‘ ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானே இந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்பேனே... கடைசி நிமிஷம் வரை நம்பவச்சு கழுத்தறுத்துட்டானே.... இதைத்தான் என்னால தாங்கமுடியலை முத்து” என்று வேதனையுடன் கூறிய சுப்பு கண்ணீரை மறைக்க தலையை கவிழ்ந்து கொண்டார்...

அப்போதுதான் தூக்கம் கலைந்த மதுமிதா முத்துவின் மடியிலிருந்து எழுந்து அமர்ந்து “ அய் தாத்தா” என்று சுப்புவின் கழுத்தை கட்டிக்கொள்ள....

தன் வேதனையை மறந்து குழந்தையை வாரியெடுத்த சுப்பு “ அடடா எங்கம்மா முழிச்சுகிட்டாங்க போலருக்கே.... தாத்தா இன்னிக்கு சாக்லேட் வாங்கிட்டு வரலைடா கண்ணம்மா ” என்று செல்லமாக கொஞ்சியபடி சொன்னார்...


மதுமிதா அழுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு “ நீ நல்ல தாத்தா இல்ல போ” என்று அவர் நெற்றியில் தனது தலையால் முட்ட.... “ ஆஆஆஆ அய்யோ அம்மா வலிக்குதே” என்று நெற்றியைப் பிடித்துக்கொண்டு வலிப்பது போல் மெல்ல அலறினார் சுப்பு

“ அய்யோ அவதான் எழுந்ததும் சாக்லேட் கேட்பான்னு தெரியுமே.. இப்ப பாரு பாப்பாக்கு கோபம் வந்துருச்சு.” என்று அழைத்தாள் ஜானகி

“ மல்லிகா இங்க வா” என்று அழைக்க... வந்த மல்லிகாவிடம் சுப்பு ஐம்பது ரூபாயை கொடுத்து “ பாப்பாக்கு என்ன சாக்லேட் பிடிக்குமோ அதை வாங்கிட்டு வா மல்லிகா” என்று அனுப்பி வைத்த மறுகணமே மதுமிதா அவரது இரண்டு கன்னத்திலும் மாறிமாறி முத்தமிட.... “ இந்த முத்தத்தை குடுத்தே எங்களையெல்லாம் மயக்கிப்புட்டா முத்து உன் மக” என்று சற்றுமுன் இருந்த துக்கத்தை மறந்து சந்தோஷமாக கூறினார்...

அதையெல்லாம் பார்த்த முத்துவுக்கு தனது மகள் அந்த வீட்டில் ஒரு இளவரசியாக இருப்பதாக தோன்றியது.... இதேநிலை என்றும் நீடிக்கவேண்டும் என்று அவசரமாக பிரார்த்தனை செய்தது அவன் மனம்.... மகள் தான் இப்படி? ஆனா அம்மாவை எங்க காணோம் என்று அவன் தேடும்போதே பவித்ராவுடன் சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் முத்துவின் அம்மா...

பவித்ரா தனது கையிலிருந்த கூல்டிரிங்ஸை முத்துவிடம் கொடுத்துவிட்டு “ அம்மா பாரும்மா நாமெல்லாம் போய் படுத்துட்டோம்... ஆன்ட்டி போய் மல்லிகா கூட சேர்ந்து சமையல் பண்ணிருக்காங்க” என்று புகார் போல சொன்னாலும் அதில் மெல்லிய சந்தோஷம்...

உடனே பதட்டமாக எழுந்த ஜானகி “ அய்யோ வந்த விருந்தாளி நீங்க போய் ..... என்னம்மா இதெல்லாம்? ” என்றாள் சங்கடமாக...

லேசாக புன்னகைத்த முத்து அம்மா “ இதிலென்ன இருக்கு ஜானகி?.... எல்லாரும் மனசு குழப்பத்தில் அப்படியே படுத்துட்டீங்க.... காலையிலேர்ந்து பச்சைத்தண்ணி கூட குடிக்கலை நீங்க மூனுபேரும்... எனக்கும் தூக்கம் வரலை.. அதான் எதெது எங்கெங்க இருக்குன்னு மல்லிகாவை கேட்டு சமையலை முடிச்சேன்...” என்றவள் சுப்புவிடம் திரும்பி “ நமக்கு ஒன்னு கிடைக்காமல் தட்டிப் போகுதுன்னா.... அதைவிட சிறப்பான மற்றொன்று நமக்காக காத்திருக்குன்னு அர்த்தம் தம்பி ... நீங்களும் இப்படி சோர்வா இருந்தா பொம்பளைங்க என்ன செய்வாங்க... அதனால நடந்ததை மறந்து எல்லாரும் எழுந்து வாங்க சாப்பிட” என்று ஆறுதல் கூறி சாப்பிட அழைக்க...

அவர் கூறிய ஆறுதலில் கணவன் மனைவி இருவருக்குமோ கண்கலங்கியது.... ஒப்புதலாய் தலையசைத்த சுப்பு மனைவியை கண்ணசைத்துவிட்டு மதுமிதாவை தோளில் தூக்கிக்கொண்டு எழுந்து முத்துவின் தோளில் கைவைத்து “ வாப்பா சாப்பிட்டு வந்து பேசுவோம்” என்று அழைத்தார்..

முத்து மறுக்காமல் எழுந்தான்.... அவனுக்கு தனது தாயை நினைத்து பெருமையாஎ இருந்தது..... எப்பவுமே அவன் அம்மா இப்படித்தான்.... சூழ்நிலை அறிந்து சரியாக செயல் படுவார்... அவன் கண்கள் பவித்ராவை நோக்க... அவளும் முத்துவின் அம்மாவைத்தான் பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தாள்

எல்லோரும் சாப்பாட்டு மேசையில் அமர பவித்ரா பறிமாறுவதாக சொல்லிவிட்டு சாப்பாட்டை எடுத்துவந்து எல்லோருக்கும் பறிமாறினாள்... கடைக்குப் போன மல்லிகா வந்ததும் வாங்கி வந்த சாக்லேட்டில் ஒன்றை மட்டும் மதுமிதாவிடம் கொடுத்துவிட்டு மீதியை முந்தானை மடிப்புக்குள் வைத்து இடுப்பில் சொருகிக்கொண்டாள் பவித்ரா...
மது கோபத்துடன் சுப்புவின் தாடையை பற்றி திருப்பி “ தாத்தா ஆன்ட்டிகிட்ட இன்னொரு சாக்லேட் வாங்கித்தா” என்று மிரட்டலாய் கூற...

“ பவி கண்ணு பாப்பாவுக்கு இன்னொரு சாக்லேட்டை குடுத்துடுமா.... இல்லேன்னா என்னை அடிப்பா?” என்று போலியாக பயந்தபடி மகளிடம் கெஞ்சினார் சுப்பு..




“ அப்பா சாக்லேட் சாப்பிட்டா சாப்பாடு சாப்பிடமாட்டா... நீங்க உங்க வேலையைப் பாருங்க... அவளுக்கு வேனும்னா என்கிட்ட கேட்கட்டும்... இன்னும் சாக்லேட் கேட்டா நைட்டு கதை சொல்லமாட்டேன்... எல்லாமே கட்” என்று பதிலுக்கு மிரட்டினாள் பவித்ரா

மதுமிதா முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு “ சரி சாப்பிட்டு தொலைக்கிறேன்... தாத்தா நீயே தின்னுற எனக்கும் ஊட்டிவிடு?” என்று சுப்புவை அதட்டி வாயை ஆவென்று திறந்தாள்

முத்து இவர்களை கண்டுகொள்ளவே இல்லை ... அவனும் காலையிலிருந்து பட்டினி என்பதால் சாப்பாட்டை ஒரு கட்டுக்கட்டிக் கொண்டிருந்தான்.... பேசிக்கொண்டிருந்தாலும் அவனுக்கு என்ன தேவை என்று கவனமாக பறிமாறினாள் பவித்ரா

எல்லோரும் சாப்பிட்டு விட்டு வந்ததும் சுப்புவிடம் “ இன்னைக்கு நைட்டு சென்னைக்கு கிளம்புறோம் சார் ” என்ற முத்து “ மதுவோட டிரஸ் எல்லாத்தையும் எடுத்து வை பவித்ரா” என்று கூற... அவள் சரியென்று தலையசைத்து அழும் மதுமிதாவை சமாதானம் செய்தபடி தனது அறைக்குப் போனாள்

“ அவங்க தேவையானதை எடுத்து வைக்கட்டும் நீங்க வாங்க முத்து தோப்புப் பக்கம் போய்ட்டு வரலாம்” என்று முத்துவை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் இருந்த தோப்புக்கு போக.. அவர்களின் பின்னால் ஜானகியும் சென்றாள்...
சற்று தொலைவுக்குப் போன சுப்பு லேசாக தொண்டையை கமறிக்கொண்டு “ காலையில நடந்ததுக்கு எல்லாரும் எங்களை கேவலமா நெனைச்சிருப்பாங்க.... எல்லாருக்கும் என்னால விளக்கம் சொல்லமுடியாது... யார்வேன்டுமானாலும் எதுனா நெனைச்சுட்டு போகட்டும் அதைப்பத்தி எனக்கு கவலையில்லை.... நீங்க எங்களுக்கு இந்த ஒரு வருஷமா நெருங்கின சொந்தமா ஆகிட்டீங்க.... அதனால உங்களுக்கு எங்களைப் பத்தி தெரியனும் முத்து... அதுக்கப்புறம் எங்கமேல உள்ள தவறை மன்னிக்கனும்” என்று சுப்பு சொன்னதும் முத்து அவசரமாக அவர் கைகளைப் பற்றிக்கொண்டு
“ என்னங்க சார் இது.... பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க... குடும்பம்னா பகை இருக்கத்தான் செய்யும்.... அதையெல்லாம் பெரிசு பண்ணமுடியாது....நீங்க எதுவுமே சொல்லவேண்டாம்.. நான் உங்களை நம்புறேன் சார்” என்று வருத்தமாக கூற..

“ இல்ல முத்து என் மனசுல இருக்குறதை சொன்னாத்தான் எங்க மனபாரம் குறையும்” என்றவர் அன்று தனக்கும் ஜானகிக்கும் நடந்தவைகளை ஒன்று விடாமல் கூறினார்... “ அப்போ எனக்கு இருபத்திரெண்டு வயசு... இவளுக்கு பதினாறு வயசு... இளைமையின் வேகத்துல தப்பு பண்ணாலும் ஜானகிதான் என் மனைவிங்கறதுல நான் ரொம்ப உறுதியோடதான் ஆந்திரா போனேன்... ஆனா திட்டமிட்டபடி என்னால திரும்ப முடியலை... புயல் மழைன்னு ஏகப்பட்ட பிரச்சனை.. எனக்கும் டைபாய்டு காய்ச்சல் வந்து மாசக்கணக்கில் அங்கேயே தங்கிட்டேன் .. அப்புறம் ஆந்திரா வந்த ஒரு நண்பன் மூலமா ஜானகிக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டு அவசரமா கிளம்பி ஓடிவந்தேன்... என்னை மறந்து ஜானகி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதில் எனக்கு பயங்கர வேதனைதான்.. ஆனா அவளோட ரெண்டுங்கெட்டான் வயசை நெனைச்சு அதை மன்னிச்சு அவளைத் தேடிப் போனேன்.. அவளும் எனக்காகவே காத்திருந்ததும் நாங்க அடுத்து என்ன என்று யாரைப் பத்தியும் யோசிக்கமா.. எங்க ரெண்டுபேரோட வாழ்க்கையை மட்டுமே நெனைச்சு சுயநலமா எடுத்த முடிவு ஒரு உயிரே போக காரணமாயிருச்சு... கிருஷணன் தற்கொலை செய்துகிட்டதுக்கு ஒரு விதத்தில் நாங்களும் காரணம் தான்.. அதன் பலன் இப்போ எங்க ஒரே மகள் வாழ்க்கையில விளையாடிருச்சு முத்து” என்று வேதனையுடன் கூறினார்...

முத்துவுக்கு அவர் மனம் புரிந்தது.... என்ன ஆறுதல் சொல்வது என்று தயங்கி நின்றான் 


முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டு “ நான் பண்ணதும் தப்புதான் தம்பி.. எங்கம்மாவோட பேச்சைக் கேட்டு.. குடும்ப கௌரவம்.. அண்ணனோட மானம் மரியாதை அப்படின்னு சொல்லி என்னை கிருஷ்ணனுக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்சாங்க... எனக்கும் இவரு திரும்பி வருவாரான்னு பயமா இருந்துச்சு.. அந்த வயசுல என்னால வேற எதையும் யோசிக்கத் தெரியலை... ஆனா இவரு எப்படியாவது வருவாருன்னு ஒரு நம்பிக்கை ஆழ் மனசுல இருந்துச்சு.... அப்புறம் இவரைப் பார்த்ததும் எனக்கு மற்ற எல்லாமே மறந்து போச்சு... இவர் மட்டும் தான் தெரிஞ்சாரு... கிருஷ்ணன் செத்து போவாருன்னு நான் நினைக்கவே இல்லை... அந்த பொண்ணு மான்சி அவ்வளவு பேசினாளே.... அவ சித்தப்பா கோழைத்தனமா முடிவெடுத்ததுக்கு நான் எப்படி காரணமாக முடியும்?.... அந்த வயசுல வயித்துல இவர் குழந்தையோட நான் வேற எதை யோசிக்கமுடியும்? எங்கம்மா சொன்னதுதான் சரின்னு வாழ்ந்தேன்... அம்மா பேச்சை கேட்டு எங்க அண்ணிக்கு நிறைய தொந்தரவு கொடுத்திருக்கேன்... இவர் அடிக்கடி நெல் ஏவாரத்துக்கு போயிடுவாரு... குழந்தையை வச்சிகிட்டு தனியா இருக்ககூடாதுன்னு எங்கண்ணன் வீட்டோடயே இருந்தேன்... அம்மா இறந்ததும் இவரு உடனேயே வீடு கட்டி என்னை அங்கருந்து கூட்டிட்டு வந்துட்டாரு... நான் தனியா வந்த பிறகு அண்ணிக்கு எந்த தொல்லையும் கொடுக்கலை... நான் மன்னிப்பு கேட்கவேண்டிய ஒரே ஆள் எங்க அண்ணி மட்டும் தான்... மத்தவங்களுக்கு நான் பயப்படனும்னு அவசியமில்லை... பதில் சொல்லவும் வேண்டியதில்லை.... ஆனா என் அண்ணன் மகன் இப்படி துரோகம் செய்வான்னு நான் நெனைக்கவே இல்லை தம்பி ” என்று ஜானகி கூறியதும்....

முத்து அவளைப் பார்த்து ஒரு ஆறுதல் புன்னகையுடன் “ எனக்கு புரியுதும்மா நீங்க யாருக்கும் எந்த பதிலும் சொல்லவேண்டியதில்லைம்மா... எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு... மான்சிதான் சத்யனுக்கு மனைவின்னு கடவுள் எழுதிட்டான்.. அதனால அதைப் பத்தி பேசியும் பிரயோஜனம் இல்லை.... உங்க தரப்பில் சத்யன் செய்தது மிகப்பெரிய துரோகம் தான்... ஆனா அதுக்கு பின்னனியில் என்ன இருந்ததுன்னு நமக்கு தெரியாது.. அந்த பொண்ணு மான்சி கடைசி வரை யாருக்கும் தெரியக்கூடாதுன்னு ஏதாவது சத்தியம் வாங்கியிருக்கலாம்... ஏன்னா அவ யார்னு தெரிஞ்சா சத்யன் அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டான் என்ற பயத்தால் கூட இருக்கலாம்... அதனால நீங்க மனசு கொதிச்சு வயிரெரிஞ்சு சத்யனை எதுவும் சொல்லிடாதீங்கம்மா... பாவம் இந்த ஒரு வருஷமா அவன் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டான்.. இனிமேலாவது அவன் நல்லாருக்கனும்... எனக்காக அவனை மனசார வாழ்த்துங்கம்மா ” முத்து ஜானகியின் கையைப்பிடித்துக் கொண்டு கெஞ்சினான்

ஜானகியால் தாங்கமுடியவில்லை ஓவென்று கதறியபடி “ நான் தூக்கி வளர்த்த பிள்ளை அவன்.... எங்க வீட்டுக்கே இருக்குற ஒரே ஆண் வாரிசு... அவனைப் போய் நான் வயிரெரிஞ்சு பேசுவேனா தம்பி.... இப்படி பண்ணிட்டானேன்னு ஆத்திரம் இருக்கே தவிர ... எப்பவுமே அவனை சபிக்க மாட்டேன்... எந்த கோயிலுக்கு போனாலும் என் மகளுக்கு வேண்டுறதுக்கு முன்னாடியே அவன் நல்லாருக்கனும்னு தான் நான் பிரார்த்தனை பண்ணுவேன்... நான் போய் அவன் நல்லாருக்க கூடாதுன்னு நெனைப்பேனா தம்பி” என்று கண்ணீர் மல்க கூறியவளின் கைகளை கண்ணில் ஒற்றிக்கொண்ட முத்து “இதுபோதும்மா எனக்கு...” என்றான்

அதன்பின் சுப்பு ஜானகி இருவரின் கண்ணீரும் அடங்கி மூவரும் பேசிக்கொண்டே மறுபடியும் வீட்டுக்கு வந்தபோது.... பவித்ரா மதுவின் பையில் எல்லாவற்றையும் அடுக்கி தயாராக இருக்க...

முத்து மகளை அவளிடமிருந்து வாங்கி மகளை முகர்ந்து பார்த்து “ ம்ம்ம்ம்” என்று மூச்சை இழுத்து “ குட்டிம்மா மறுபடியும் குளிச்சீங்களா?” என்று மகளை கொஞ்ச...

அவளோ அப்பாவின் கொஞ்சலுக்கு மயங்காமல் “ நான் ஊருக்கு வரலை .. நீயும் பாட்டியும் மட்டும் போங்க.. நான் பவி ஆன்ட்டி கூடவே இருக்கப் போறேன்” என்று பிடிவாதமாக கூறினாள்...

“ ஸ்கூலுக்கு நாலுநாள் தான் லீவு குடுத்திருக்கு மது... நாளைக்கு ஸ்கூலுக்கு கண்டிப்பா போகனும்” என்று முத்து கண்டிப்புடன் கூறிய மறுகணம் ஆரம்பித்தாள் அவனது செல்ல மகள் தனது அழுகையை ஆரம்பித்தாள்.


அதன்பின் யாராலும் அடக்க முடியலை மதுமிதாவை... யாரு தூக்கினாலும் விலுக் விலுக்கென்று கைகால்களை உதறிக்கொண்டு அடித்தொண்டையிலிருந்து கத்த ஆரம்பித்தாள்.... யார் சமாதானமும் அவளிடம் எடுபடவில்லை
கோபத்தில் முத்து பட்டென்று முதுகில் ஒரு அடி வைக்கு... “ என்ன இது குழந்தையை போய் கை நீட்டுறீங்க... சின்ன பசங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க” என்று முத்துவை கடுமையாக அதட்டினாள் பவித்ரா

பவித்ரா தனது அப்பாவையே அதட்டியதும் மது இன்னும் சலுகையாக அழ ஆரம்பித்தாள்... முத்து என்ன செய்வது என்று புரியாமல் தவிப்புடன் தனது அம்மாவைப் பார்க்க...

அவர் மகனின் தவிப்பை புரிந்து சுப்புவை நெருங்கி “ தம்பி எனக்கு ஒரு யோசனை தோனுது.... உங்களுக்கு சம்மதம்னா அது போல செய்யலாம் ” என்றார்...

“ சொல்லுங்கக்கா.... மதுகுட்டி அழுகை நிறுத்தினா அதுவேப் போதும்” என்றார் சுப்பு

“ இல்ல பவித்ரா மறுபடியும் சென்னைக்கு வந்து வேலைக்குப் போகப் போறேன்னு சொல்றா... அவ செய்த வேலையே கிடைச்சிடும்... எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள பவித்ராவும் சென்னைக்கு வந்துதான் ஆகனும்... அதுக்கு இப்பவே எங்ககூட வரட்டுமே? இப்போ இருக்குற சூழ்நிலைக்கு மது கூட இருக்குறது அவ மனசுக்கும் ஆறுதலா இருக்கும்... அதான் நீங்க என்ன சொல்றீங்க?” என்று தயக்கமாக கேட்டார்...

சுப்பு தன் மனைவியை பார்த்தார்..... “ அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே” என்றாள் ஜானகி...

“ பின்ன அவனை கேட்காமலா செய்வேன்... என்னால அவனுக்கு சம்மந்தியாகுற பாக்கியம் தான் இல்லை... மத்தபடி அவன் எப்பவும் என் சினேகிதன் தானே... சரி பவித்ரா நீ என்னம்மா சொல்ற?” என்று மகளிடம் கேட்க..

மதுமிதாவின் கண்ணீர் பவித்ராவையும் தடுமாற வைத்திருந்தது... மெல்ல நிமிர்ந்து முத்துவைப் பார்த்தாள்... அவன் பார்வை அவளிடம் எதையோ யாசகம் கேட்டது ‘ வர்றேன்னு சொல்லு பவித்ரா’ என்று இறைஞ்சியது..

“ உங்களுக்கு ஓகேன்னா நான் போறேன்பா.... எப்படியும் இன்னும் நாலஞ்சு நாள்ல போகத்தானே போறேன்... ஆனா இவங்க ட்ரைன்ல டிக்கெட் ரிசர்வ் பண்ணிகிட்டுல்ல வந்திருப்பாங்க... நான் எப்படி போறது” என்று முத்துவை ஓரப்பார்வை பார்த்துக்கொண்டே கேட்டாள்

“ அதெல்லாம் டிடியார் கிட்ட சொல்லி அட்ஜஸ்ட் பண்ணலாம்” என்றான் முத்து அவசரமாக..

வீட்டில் எல்லோருக்கும் சம்மதம் என்றானதும் சுப்பு செல்வத்துக்கு போன் செய்தார்.... செல்வம் இரண்டு ரிங்கிலேயே எடுத்து “ என்ன சுப்பு? ஜானகி சாப்பிட்டாளா?” என்றுதான் முதலில் கேட்டார்..

இந்த ஒரு வார்த்தைக்காக எவ்வளவு இழப்புகளையும் தாங்கி நண்பர்களாகவே இருக்கலாம் என்று தோன்ற “ ம்ம் சாப்பிட்டா செல்வம்” என்றார்..

ஜானகிக்கு தனது அண்ணன் தன்னைத்தான் விசாரிக்கிறார் என்று புரிய.. நின்றுபோன அழுகை மீண்டும் வெடித்தது... முத்துவின் அம்மா அவள் கைகளை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள்

சுப்பு நடந்த விவரங்களை செல்வத்துக்கு சொன்னார்... மதுமிதா ரொம்ப அழுவதால் வேறு வழியில்லை என்று சொல்ல....
“ இதிலென்ன இருக்கு சுப்பு... நீ பவித்ராவை தாரளமா அனுப்பி வை... முத்துவோட அம்மா தங்கமானவங்க மகள் மாதிரி கவணமா பார்த்துக்குவாங்க... அவளுக்கும் நடந்ததை மறந்து ஒரு ஆறுதலா இருக்கும்” என்று செல்வமும் ஒப்புதல் தந்தார்...

பவித்ரா முத்துவுடன் செல்வது உறுதியானது... ஜானகியும் பவித்ராவின் உடைகளை எடுத்து வைக்க உள்ளே போனார்கள்... முத்து தனது அம்மாவுடன் செல்வம் வீட்டுக்கு சொல்லிக்கொண்டு போவதற்காக சென்றான்

சத்யனின் வீட்டுக்குள் நுழைந்ததுமே அறையில் படுத்திருந்த சத்யனை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் மதுமிதா “ சித்தப்பா நான் ஊருக்குப் போறேன்... நீயும் வா சித்தப்பா.. பவி ஆன்ட்டியும் எங்ககூட வர்றாங்களே” என்று உற்ச்சாகத்துடன் கூறினாள் 

பவித்ராவும் அவர்களுடன் செல்கிறாள் என்றதும் சத்யனுக்கு சட்டென்று முந்தைய நாள் இரவு முத்து குடித்துவிட்டு படுத்திருந்த போது... மதுவை தூக்கிக்கொண்டு வந்து கண்ணீர் மல்க சென்ற பவித்ராவின் ஞாபகம் வந்தது... மூளையில் பொறி பறக்க... யோசனையுடன் நண்பனை ஏறிட்டுப் பார்த்தான் சத்யன்

முத்து நண்பனின் பார்வையை தவிர்த்து “ மது ரொம்ப அழுதா... அதோட பவித்ராவும் சென்னையில் பழைய வேலைக்கே போகப் போறேன்னு சொன்னா... அதான் சத்யா” என்று சமாளிப்பாக பேசினான்

சத்யனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது “ பவித்ரா உன்கூட வர்றது நல்லது தான்.. அத்தை மாமாவை நான் பார்த்துக்கிறேன்.... நடந்த சம்பவத்துக்கு நான் அவகிட்ட மனசார மன்னிப்பு கேட்டதா சொல்லு முத்து... உண்மை புரியாம ரொம்ப சுயநலமா பண்ணிட்டேன்” என்றான் சத்யன் வருந்தும் குரலில்...

நண்பனை தோளோடு அணைத்த முத்து “ அதையெல்லாம் யோசிக்காத சத்யா.... எல்லாம் சரியாகிவிடும்... நீ மட்டும் கரெக்டா மருந்து எடுத்தக்க.... மத்ததெல்லாம் அப்பா பார்த்துக்குவார்... நீ மனசை ரிலாக்ஸா வச்சிரு” என்றவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சத்யனின் காதருகில் குனிந்து “ அது எப்புடிடா மெண்டல் ஆஸ்பிட்டல்ல போய் மான்சிக்கு பிராக்கெட் போட்டு ஒரு மாசம் குடித்தனமும் பண்ண? பார்க்க தான்டா நீ பூனை ஆனா அந்த விஷயத்தில் படா கேடிபயலா இருக்கடா” என்று சத்யனின் மனதை இலகுவாக்கும் நோக்கில் கேலியாக பேசினான்..

அவன் நோக்கம் போலவே சத்யன் பட்டென்று குலுங்கி சிரித்து “ நான் எங்கடா ப்ராக்கெட் போட்டேன்... அவதான் என்னை கரெக்ட் பண்ணி காரியத்தை சாதிச்சிட்டா” என்றான்..

“ ம்ம் எதுவோ ஒன்னு... திரும்ப அவ வர்ற வரைக்கும் அந்த ஒரு மாசத்தை நெனைச்சுக்கிட்டே மல்லாக்க படுடா தம்பி” என்று கேலியாக கூறிவிட்டு செல்வத்தை தேடிப்போனான் முத்து

அவரிடமும் ... கீதாவின் அறையிலிருந்த ஆதியிடமும் சில வார்த்தைகள் பேசிவிட்டு பவித்ராவை அழைத்துச்செல்லவேண்டிய சூழ்நிலையை ஆதியிடம் கூறினான்...

பவித்ரா முத்துவுடன் செல்வதில் ஆதிக்கு பயங்கர சந்தோஷம்... அவளுக்கு பவித்ராவை ரொம்ப பிடிக்கும்... அவளின் அமைதியும் நல்ல குணமும் ஆதியை கவர்ந்த விஷயங்கள்... அதனால்தான் ஜானகியின் மேல் வெறுப்பு இருந்தாலும் பவித்ரா தனக்கு மருமகளாக வருவதை முழு மனதாக வரவேற்றாள்... இப்போது அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும் என்று பிரார்த்தனை ஆதியின் மனதிலும் இருந்தது.... ஏற்கனவே முத்து பவித்ரா இருவரின் பார்வை பறிமாற்றங்களில் கொஞ்சம் புரிந்திருக்க...

“ நல்லபடியாக கூட்டிட்டு போ முத்து... நடந்ததுக்கு அவகிட்ட நான் மனபூர்வமாக மன்னிப்பு கேட்டதா சொல்லு முத்து” என்று கூறி அனுப்பி வைத்தாள்...



முத்து மீண்டும் பவித்ராவின் வீட்டுக்கு கிளம்பி சென்று தயராக இருந்த பவித்ராவை அழைத்துக்கொண்டு எல்லோரும் கிளம்பி ரயில்நிலையம் சென்றபோது... அங்கே செல்வமும் சத்யனும் அவர்களை வழியனுப்ப வந்திருந்தனர்..

பவித்ராவை கண்டு சத்யன் தலைகுனிய ... அவனை நெருங்கிய பவித்ரா “ நீங்க ஏன் மாமா தலை குனியிறீங்க? நடந்ததுக்கு முழு காரணமும் நீங்க இல்லேன்னு எனக்கு தெரியும்... அந்த சமயத்துல நீங்க எந்த மாதிரி சூழ்நிலையில இருந்தீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது... மான்சி செய்ததுக்கும் காரணம் குடும்பம் ஒன்னு சேரனும் என்பதுதான்.. அதனால என் கல்யாணம் நின்னு போனதில் எனக்கு வருத்தமில்லை மாமா... அதனால நீங்க எப்பவுமே தலை குனியகூடாது சரியா?” என்று கனவுடன் கூற..

அந்த கனிவும் சத்யனின் கண்களில் நீரை வரவழைத்தது .. பவித்ராவின் கையைப்பிடித்து “ புரிஞ்சுகிட்டதுக்கு தாங்க்ஸ் பவி” என்றான்..

சட்டென்று கண்களில் குறும்பு மின்ன “ அய்யா சாமி ஆளை விடுங்க... நீங்க இப்படி என் கையை பிடிச்சிருக்கது தெரிஞ்சா என்னை கொன்னாலும் கொன்னுடுவா உங்க பொண்டாட்டி” என்று இலகுவாக கூறிவிட்டு செல்வத்தைத் தேடி சென்றாள் பவித்ரா..


No comments:

Post a Comment