Wednesday, December 9, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 17

உள்ளே நுழைந்ததும் சமையலறைக் தான் சென்றான் ... இவனை வியர்வை சொட்ட சொட்ட பார்த்த சாமுவேல் “ என்னங்கய்யா ஜீஸ் வேனுமா... கொஞ்சம் இருங்க ரெடி பண்றேன்” என்று கூற...

அவன் கையைப்பிடித்து தடுத்த சத்யன் ... “ அதெல்லாம் வேண்டாம் ... சியாமா எங்க சாமு” என்று கேட்க...

“ மாடில சுத்தம் பண்ணிகிட்டு இருக்கா... கூப்பிடவா?” என்று கேட்டான் சாமு...

“ இல்ல வேண்டாம்... நீயும் மாடிக்கு வா” என்றுவிட்டு சத்யன் மாடிப்படிகளில் தாவியேறினான்...

சாமுவேல் சியாமாவுடன் சத்யன் அறைக்குள் நுழைய.... சத்யன் கத்தை நூறுரூபாய் எடுத்து சாமுவேலின் கைகளில் தினித்து... “ நீ உடனே சியாமவை கூட்டிக்கிட்டு எங்கயாவது வெளியூருக்கு போயிடு... ஒரு மாசம் கழிச்சு வா சாமு” என்று சத்யன் சொன்னதும்...



இருவரும் திகைப்புடன் அவனையும் கையிலிருந்த பணத்தையும் மாறி மாறிப் பார்க்க... சியாமா மட்டும் முன்னால் வந்து “ அய்யோ மான்சியம்மா கூட இருக்கனுமே? இதுதானே அவங்களுக்கு மாசம்... இவரு மட்டும் போகட்டும்... நான் இங்கயே இருக்கேன் ” என்றாள் உறுதியுடன்...

“ அய்யோ அதுக்காக தான் சொல்றேன் சியாமா... மான்சி கூட நான் இருந்து பார்த்துக்கிறேன்.. நீ கிளம்பு... நான்தான் போகச்சொன்னேன்னு மான்சிகிட்ட சொல்லாதே ” என்று சத்யன் அவசரப்படுத்த...

சியாமா மிரண்டாள் “ வேனாம்ய்யா இதுக்கு முன்னால அவங்களை என்னவோ பண்ணீங்க.. ஆனா இப்போ நிறைமாத கர்ப்பிணி... இப்போ உங்க விளையாட்டு வேனாங்கய்யா” என்று கண்களில் நீர் தழும்ப கெஞ்சினாள் .. சாமுவேலும் மனைவி சொன்னதற்கு தலையசைத்து சத்யனை சங்கடமாக பார்த்தான்...

அய்யோ இவங்களும் என்னை நம்பலையே என்று சத்யனுக்கு ஆத்திரமாக வந்தது.... இருந்தாலும் அவர்களுக்கு புரியவைக்கும் முயற்சியாக “ இல்ல சியாமா நான் இப்போ பழைய சத்யன் இல்லை.... மான்சியோட காதலன் சத்யன்.... நம்பு சியாமா... எனக்கு மான்சி வேணும்... அவகூட இருக்கனும்... அதுக்கு நீங்க ஊருக்கு போனாதான் முடியும்... ப்ளீஸ் சியாமா என்னை புரிஞ்சுக்கோ... நான் இப்போ மான்சியை உண்மையா விரும்புறேன்” என்று சத்யன் உருக்கமாக கூற...

இருவரும் திகைப்பு மாறாமல் பார்த்தனர்... முதலில் தெளிந்தது சாமுவேல் தான்... சத்யன் முகத்தில் எதை கண்டானோ ... மனைவியின் கையை பற்றியவன் “ஏ புள்ள அதான் அய்யா இவ்வளவு சொல்றாருல்ல? அவரு பொஞ்சாதி.. பொறக்கப் போறது அவரு புள்ள... அவங்களை பார்த்துக்க அவருக்கு தெரியும்.. நீபோய்... ஊர்ல எங்கப்பாருக்கு உடம்புக்கு சீரியசா இருக்குன்னு சொல்லி மான்சி அம்மாகிட்ட தகவல் சொல்லிட்டு வா... நான் போய் துணிமணிகளை எடுத்து வைக்கிறேன்” என்று மனைவியிடம் கூறினான்..

சத்யன் அவன் கையைப் பற்றிக்கொண்டு “ ரொம்ப நன்றி சாமு” என்றதும்....

சங்கடமாக நெளிந்த சாமு “ என்னங்கய்யா நன்றி அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு... குழந்தை பிறந்ததும் என்ன குழந்தைன்னு உடனே சொல்லுங்கய்யா” என்று அவன் ஆவலே உருவாக கேட்டதும் ... சத்யன் சரியென்று தலையசைத்தான்....


அவர்கள் வெளியேறியதும்... அவசரமாக குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டு கீழே வந்தான்... சமையலறையின் வாசலில் நின்ற சாமுவேல் பெருவிரலை உயர்த்தி காட்ட.. பார்வையாலேயே அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு மான்சியின் வீட்டை நோக்கி சென்றான்....

லதாவும் மான்சியும் குழப்பத்துடன் அமர்ந்திருக்க... சத்யன் உள்ளே நுழைந்து “ எப்ப வந்தீங்க லதா? மான்சிக்கு உடம்புக்கு எதுவுமில்லையே?” என்று அக்கரையுடன் விசாரித்தான்....

சத்யனின் சுயம் தெரிந்ததில் இருந்து லதா அவனிடம் பேசுவது மட்டுமல்ல அவனை சந்திப்பதையே தவிர்த்து வந்தாள்... ஆனால் நேரடியாக கேட்பவனுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டுமே?.... அவன் முகத்தைப் பார்க்காமல் சுவற்றைப் பார்த்தபடி “ காலையில லேசானா வலி இருந்தது போலருக்கு... எனக்கு கால் பண்ணா.. உடனே கிளம்பி வந்தேன் சாதரண சூட்டு வலிதான்” என்றாள்..

காலையில் மான்சியைப் பார்க்க வரும்போது உதட்டை கடித்தபடி தரையில் கால்நீட்டி அமர்ந்திருந்தது சத்யனுக்கு ஞாபகம் வந்தது... சாதரணமாக இருக்கிறாள் என்று எண்ணி விசாரித்து விட்டு ஜாக்கிங் போனத எண்ணி வேதனைப்பட்டான் அவளின் முகமாற்றங்களை இனிமேல் கவனமாக பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டான்.... பாவி வலிக்குதுன்னு கூட சொல்ல மாட்டேங்குறாளே?.... என்று நினைத்தான்...

மான்சி தரையில் அமர்ந்திருக்க அவளருகே போய் மண்டியிட்டு அமர்ந்து கைகளைப் பற்றி “ இப்போ எப்படியிருக்கு மான்சி? ” என்று குரலில் கனிவுடன் கேட்க....

சிலநாட்களாகவே பழகிப்போன கனிவுதான்... ஆனால் நம்பிக்கைதான் வரவில்லை மான்சிக்கு .... “ ம்ம்” என்று கூறிவிட்டு கைகளை மெதுவாக உருவிக்கொண்டாள்...

ஏதோ யோசனையில் இருந்த லதா இவன் பக்கம் திரும்பி “ சத்யா மான்சிக்கு டெலிவரி டேட் நெருங்குது... இவங்க அம்மா வந்து துணைக்கு வரமுடியாத சூழ்நிலை... சியாமாவை மான்சி கூட இருக்கறதா சொல்லிருந்தா... ஆனா இப்போ யாருக்கோ உடம்பு சரியில்லைன்னு அவசரமா ஊருக்கு கிளம்பலதா சொல்றா...... இந்த நிலைமையில மான்சியை இங்கே தனியே விடமுடியாது.. அதனால நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்னு முடிவு பண்ணிருக்கேன் சத்யா” என்று அவனிடம் அனுமதியாக இல்லாமல் அறிவிப்பாக சொன்னாள் லதா...

உடனே திக்கென்றது சத்யனுக்கு... அய்யோ போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்டா போயிடும் போலருக்கே? என்ற தவிப்புடன் அவசரமாக எழுந்தவன்.... “ அவங்க போனாப் போகட்டும் அதான் நான் இருக்கேன்ல... அதெல்லாம் நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்” என்று பிடிவாதமான குரலில் கூற ....

இரண்டு பெண்களும் அவனை வித்தியாசமாகப் பார்த்தனர்... அவனது பதட்டமும் அவசரமுமே அவனை காட்டிக் கொடுக்க.... மான்சி கைகளை ஊன்றி மெதுவாக எழுந்து அவனெதிரே வந்து “ அப்போ சாமுவையும் சியாமாவையும் அவசரமா ஊருக்கு அனுப்புறது நீங்கதான்? ஏன் இந்த மாதிரி பண்றீங்க... யாருமே துணைக்கு இல்லாம தனியா கஷ்டப்பட்டு நான் சாகுனும்னா?” என்று மான்சி கூறிய அடுத்த விநாடி....

“ ஏய்” என்ற அதட்டலோடு அவளை நெருங்கியவன் எதுவும் சொல்லமுடியாமல் “ என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா மான்சி?... உனக்காக நான் எவ்வளவு மாறிட்டேன்” என்று சத்யன் இறைஞ்சுதலாய் கேட்க...

அவனை ஏளனமாக நோக்கிய மான்சி “ புரிஞ்சுக்காம இருப்பேனா? உங்களைப் பொருத்தவரையில் நீ ஜெயிக்க எதை வேனும்னாலும் செய்வீங்க... அதாவது நான் நிரந்தரமா உங்ககூட இருக்கனும்... அதுக்காக மறுபடியும் ஒரு நடிப்பை அரங்கேற்றம் பண்ணிருக்கீங்க.. ஆனாப்பாருங்க உங்க துரதிர்ஷ்டம் அன்னிக்கு உங்க நடிப்பை நம்பி ஏமாந்து என்னையே இழந்த நான்.. இப்போ இழக்க எதுவுமில்லை என்றாலும் விழிச்சுக்கிட்டேன்... இப்பவும் ஏமாறுவேன்னு எதிர்பார்க்காதீங்க சத்யன் ” என்று மான்சி நக்கல் கலந்த குரலில் கூற... சத்யன் இயலாமையுடன் அவளைப் பார்த்தான்...


“ சத்யா மான்சிக்கு நல்லபடியா பிரசவம் ஆகனும்.. அதனால அவளை என்கூட அனுப்பி வை” என்று லதா வற்புறுத்தி கூற...

லதாவும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கத்துடன் நிமிர்ந்த சத்யன் “ நான் அனுப்ப மாட்டேன்... அவ வயித்துல இருக்குறது என் குழந்தை.. அதனால நான்தான் அவளைப் பார்த்துக்குவேன்.. வலிக்கும் போது உங்க க்ளினிக் கூட்டிட்டு வந்துர்றேன்.. அது வரைக்கும் என்கூட இங்கே தான் இருப்பா.. மான்சி பங்களாவுக்கு வரலைனா பராவாயில்லை.. நான் இவகூட இங்கேயே தங்குறதா முடிவு பண்ணிருக்கேன்” என்று தீர்மானமாக கூறினான்...

லதா திகைப்புடன் பார்த்து “ உனக்கு என்ன தெரியும்? ஒரு கர்ப்பிணியை எப்படி கவனிச்சுக்கனும்னு தெரியுமா? முட்டாள்த்தனமா பேசாத சத்யா” என்று சொல்லும்போதே குறுக்கிட்ட மான்சி “ இவர்கிட்ட என்ன பேச்சு அக்கா... நான் ரெடியாகுறேன்” என்று கூறிவிட்டு தனது துணிகளை எடுக்க ஷெல்பை நெருங்கினாள்...

மான்சியின் அலட்சியமானப் பேச்சு சத்யனின் கோபத்தை கிளப்ப அவளை தடுத்தார்ப் போல் நின்று “ அப்போ என்கூட இருக்குறதை விட... வெளிய போய் தங்குறது தான் உனக்குப் பிடிக்குது?... ஆனா நான் சொல்றதை கேளு இது என் குழந்தை.. அது பிறக்குற வரைக்கும் நீ என் பாதுகாப்பில் தான் இருக்கனும் ” என்று கடினமான குரலில் கூறியதும்...

மான்சி உதட்டைப் பிதுக்கினாள் “ இப்பல்லாம் நீங்க என் குழந்தை என் குழந்தைன்னு சொல்லும் போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வருது சத்யன்... பாவம் உங்க நடிப்பை நாங்க நம்பனும்னு நீங்களும் என்னென்ன பொய்யெல்லாம் சொல் வேண்டியிருக்கு?” என்று ஏளனம் செய்தவாறு தனது துணிகளை எடுத்து அடுக்கினாள்....

சத்யனின் கோபம் உச்சத்தில் ஏறியது... சியாமாவை ஊருக்கு அனுப்ப போட்ட ப்ளான் ஜெயித்தாலும் அதை மான்சி கண்டுபிடித்து விட்ட கோபம் ஒருபுறம்... லதாவுடன் புறப்படும் அவளைத் தடுக்கமுடியாத இயலாமை மறுபுறம்... மான்சியின் கைகளை முரட்டுத்தனமாக பற்றிக்கொண்டு “ உன்னை இங்கேருந்து போக விடமாட்டேன்” என்று இறுகிய குரலில் சத்யன் கூற...

அவனை அலட்சியமாகப் பார்த்த மான்சி “ நீங்க என்னை அடைச்சு வச்சிருக்கறதா கம்ப்ளைன்ட் பண்ணுவேன்” என்றாள் வார்த்தையில் விரவியிருந்த திமிருடன்...

இப்போது அலட்சியம் சத்யனுடையதாக இருக்க “ஓஓஓஓ... போலீஸ் கம்ப்ளைண்ட்டா? கொடு கொடு.... ஆனா சட்டம் எனக்கும் தெரியும்டி.. இந்த பிள்ளையை உருவாக்கியதுல எனக்கும் சம உரிமை உண்டு மான்சி.. என் குழந்தையை நான் விட்டுத்தர மாட்டேன்... ” என்றான்...

மான்சி அவனை கூர்மையாகப் பார்த்து “ அப்போ குழந்தையை பெத்து உங்ககிட்ட குடுத்துட்டா என்னை விட்டுடுவீங்களா? .... அதாவது வேலைக்கான ஒப்பந்தம் முடியும் முன் விட்டுடுவீங்களா சத்யன்?” என்று நிதானமாக கேட்டாள்...

அவள் நோக்கம் சத்யனுக்குப் புரிந்துபோனது... என்னிடமிருந்து எவ்வளவு சீக்கிரம் விடுதலையாகி வெளியேப் போகனும்னு நினைக்கறியா மான்சி? என்னை புரியவே புரியாதா உனக்கு... நான் நடிக்கவே இல்லடி... என்று ஓவென்று கத்தவேண்டும் போல் இருந்த மனதை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்...




ஆனாலும் அவனுக்கு நம்பிக்கை இருந்தது... குழந்தை பிறந்ததும் மான்சி என்னைவிட்டுப் போக நினைத்தாலும் குழந்தையை விட்டு போகமாட்டாள் என்று சத்யனுக்கு நம்பிக்கை இருந்தது... இப்போதைக்கு அவள் இங்கே தஙக வைக்கவேண்டுமே என்ற நினைப்பில்..

“ ஒப்பந்தம் என்னடி ஒப்பந்தம்.. எனக்கு என் குழந்தை வேனும்... அதுக்கு நீ இங்கேயே இருந்து பெத்துக் குடுக்கனும்” என்றவன் “ அஞ்சு நிமிஷம் இரு வர்றேன்” என்று அங்கிருந்து அவசரமாக வெளியேறினான்...

அவன் போனதும் லதா கவலையுடன் மான்சியைப் பார்த்து “ என்ன மான்சி இது? அவன் ஒன்னு சொல்றான்... நீ இன்னொன்று சொல்ற... இதுல நான் யாருக்காக பேசறது?... குழந்தையை குடுத்துட்டு நீ போயிடுவியா மான்சி? உன்னால முடியுமா? ” என்று கேட்க..

“ இல்ல அக்கா உங்களுக்கு சத்யனைப் பத்தி தெரியாது.... அவர் ஜெயிக்கனும்னா எதை வேண்டுமானாலும் செய்வார்... எதை வேண்டுமானாலும் சொல்லுவார்... இவர் குழந்தை மேல துளிகூட அன்போ அக்கரையோ கிடையாது... என்னை காலம்பூராவும் இவர் காலடியில் வீழ்த்த இவ்வளவு வேஷம்... இவராவது குழந்தையை பார்த்துக்கிறதாவது ” என்று மான்சி ஏளனத்துடன் கூறியதும் ...

“ நீ சொல்றது சரி மான்சி... எல்லாமே நடிக்கிறான்னே வச்சுக்கலாம்... ஆனா இந்த குழந்தையை கேட்கும் விஷயம் மட்டும் உண்மையாக இருந்தால்.. அதாவது என் பிள்ளை எனக்கு வேனும்னு பிடிவாதமா சொல்லி குழந்தைக்காக நீயும் இங்கேயே தங்கவேண்டிய சூழ்நிலை வந்தா என்ன பண்ணுவ?” என்றதும்....

சட்டென்று நிமிர்ந்து பார்த்த மான்சி ... பிறகு கண்களை மூடினாள்.... வலது கையால் தனது வயிற்றைத் தடவினாள்.. சிறிதுநேரம் அப்படியே இருந்துவிட்டு “ அப்படி ஒரு நிலைமை வந்தா குழந்தையை ஒப்படைச்சிட்டு நான் வெளியேறி விடுவேன்... இன்னொரு முறை என் மானத்தை அடகு வைக்க மாட்டேன் அக்கா” என்றவளின் குரலில் இருந்த உறுதி லதாவை விதிர்க்க செய்தது...

“ மான்சி “ என்ற அவள் கைகளைப் பிடித்த அதேவேளை சத்யன் கையில் ஒரு டாக்குமெண்ட்டுடன் வந்து “ அக்கா இதுதான் இவ கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பேப்பர்ஸ்” என்று லதாவிடம் காட்டிவிட்டு அதை நான்காய் எட்டாய் கிழித்து மான்சியின் மீது வீசி எறிந்தான்....

“ எப்பபாரு ஒப்பந்தம் ஒப்பந்தம்னு சொன்னேல்ல? இப்போ அதையும் கிழிச்சு எறிஞ்சுட்டேன்... இனிமேல் நமக்குள்ள எந்த பிணைப்பும் இல்லை... நம்ம குழந்தையைத் தவிர.... இந்த குழந்தை எனக்கு வேனும்... நீ இங்கேயே இருந்து குழந்தையை பெத்து குடுக்கனும்...அதுக்காக நீ சொல்றதை நான் கேட்கிறேன்” என்று கூறிவிட்டு அவள் பதிலுக்காக அவள் முகத்தையேப் பார்த்தான்...

மான்சி அவனிடம் பேசவில்லை.... லதாவிடம் வந்தாள் “ அக்கா எங்க ரெண்டு பேருக்கும் உங்க மேல மதிப்பும் மரியாதையும் அதிகம்.... உங்க முன்னாடி தான் இவர் சொல்லிருக்கார்... நானும் உங்க முன்னாடியே சொல்றேன் ... இந்த குழந்தைப் பிறக்கும் வரைக்கும்..நான் இங்கேயே இருக்கேன்... குழந்தை பிறந்ததும் இவர்கிட்ட கொடுத்துட்டு போயிடுவேன்... அதுக்கப்புறம் இவர் எதற்காகவும் என்னை கட்டுப்படுத்தவோ வற்புறுத்தவோ கூடாது” என்று சொல்ல...

லதா குறுக்கிட்டு “ குழந்தைப் பிறந்ததும் நீ போக சத்யன் அனுமதிச்சாலும் நான் அனுமதிக்க மாட்டேன்... பிறந்த குழந்தைக்கு மூனு மாசம் தாய்ப்பால் ரொம்ப அவசியம்.. அதனால அதுவரைக்கும் நீ இங்கே தான் இருந்தாகனும்... அதுக்கப்பறம் அவங்கவங்க முடிவுப்படி என்னவேனாப் பண்ணுங்க” என்றாள் ....


சத்யனுக்கு மான்சியை பிரசவம் வரை இங்கேயே தங்கவைத்த நிம்மதி.... மான்சிக்கு பதினேழு மாத சிறை மூன்று மாதமாக குறைந்துவிட்டதே என்ற நிம்மதி.... குழந்தையை விட்டுவிட்டு மான்சி போகமாட்டாள் என்ற தைரியம் சத்யனுக்கு.... என்னை நிரந்தரமாக தங்க வைக்க குழந்தை ஒரு சாக்குதான்.. இவன் எண்ணம் ஈடேறாது என்று தைரியம் மான்சிக்கு....

இருவருக்குமிடையில் எழுத்தில் வராத ஒப்பந்தம் ஒன்று டாக்டர் லதாவின் எதிரில் முடிவானது.... லதா தனது மெடிக்கல் கிட்டை எடுத்துக்கொண்டு வெளியே வர... சத்யன் அவள் பின்னோடு வந்து “ மான்சியை எப்படிப் பார்த்துக்கனும்னு சொல்லிட்டு போங்க லதா” என்றான்...

அவனை ஆச்சர்யமாகப் பார்த்த லதா “ உன்னோட இந்த மாற்றம் உண்மையா இருந்தா இந்த உலகத்திலேயே சந்தோஷப்படும் முதல் ஆள் நானாத்தான் இருப்பேன் சத்யா” என்றவள் மான்சியை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பினாள்...

லதா கூறியவற்றை மனதுக்குள் மனனம் செய்தவாறு வந்துவனை பழக்கப்பட்ட காரின் ஹாரன் ஒலி நிறுத்தியது... நின்று திரும்பிப் பார்த்தான்... விக்டர் தான் காரைவிட்டு இறங்கி நின்றிருந்தான்... சத்யன் யோசனையோட நிற்கும்போதே மான்சி இவனருகில் வந்து சற்று தயங்கி பிறகு கேட்டை நோக்கி நடந்தாள்...

இவள் வெளியேப் போய் விக்டரை சந்திப்பதை விட... அவன் உள்ளே வருவது எவ்வளவோ மேல் என்று தோன்ற “ மான்சி நீ வீட்டுக்குப் போ... விக்டரை நான் உள்ள வரச்சொல்றேன்” என்றான் சத்யன்...

மான்சி சத்யனை நம்பாமல் பார்க்கும்போதே .. “ ஹலோ விக்டர்.. உள்ள வாங்க” என்று கைத்தட்டி அழைத்த சத்யன் சீறிக்கொண்டு நின்ற ப்ளாக்கியின் அருகே மண்டியிட்டு பிடரியை தடவிப் புன்னகையுடன்... “ பாவம் உன் எஜமானி அதிகமா நடக்கக்கூடாது.. அதனால அந்த செகன்ட் ஹீரோவ உள்ள விடு கண்ணா” என்று கூறிவிட்டு மான்சியை நிமிர்ந்துப் பார்த்து சிரித்தான்

மான்சி தோளில் தாடையை இடித்துக்கொண்டு... வீட்டை நோக்கி போனாள்.... விக்டர் சத்யனைப் பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்துவிட்டு மான்சியின் சிறிய வீட்டுக்குப் போனான்...

சத்யன் ப்ளாக்கியை கட்டிவிட்டு தோட்டத்து குழாயில் கையை கழுவிக்கொண்டு கர்சீப்பால் கையைத் துடைத்தபடி மான்சியின் வீட்டை நெருங்கும் போது .. உள்ளேயிருந்த விக்டரின் குரல் “ ....... ஸ்ஸ்ஸ் யப்பா இதை கேட்டதும் தான் நிம்மதியா இருக்கு... இன்னும் ஒன்றரை வருஷம் காத்திருக்கனுமேன்னு கவலை இருந்துச்சு... இப்போ இன்னும் மூனு மாசம் தான்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு மான்சி ... அப்போ நான் என் தரப்புல மேரேஜ்கான வேலைகளை ஆரம்பிக்கவா?... நாம முன்னாடியே பேசி வச்ச மாதிரி பர்ஸ்ட் சர்ச்ல மேரேஜ் முடிச்சிட்டு.. மறாவது நாளே உனக்குப் பிடிச்ச முருகன் கோயிலில் தாலி கட்டிட்டு உடனே ரிஜிஸ்ட்ர் பண்ணிடலாம்... உனக்கு ஓகே தானே மான்சி?” என்று குரலில் குதூகலத்துடன் கேட்டுக்கொண்டு இருந்தான்....

சத்யனின் காதுகள் மான்சியின் பதிலுக்காக கூர்மைபெற்றது.... “ இதென்ன புதுசா என்கிட்ட கேட்கிறீங்க?... ஒன்றரை வருஷம் கழிச்சு நடக்கப்போற நல்லது இப்பவே நடக்குதுன்னா சந்தோஷம் தானே... மொதல்ல எல்லா ஏற்பாடும் பண்ணுங்க விக்டர்” என்று மான்சி குரல் உற்சாகத்துடன் ஒலிக்கவும்

வெளியே இருந்த சத்யன் சுக்குநூறாக உடைந்து போனான்... முட்டிக்கொண்டு வந்த கண்ணீருடன் அங்கிருந்து அகன்றான்.... பங்களாவுக்குள் நுழைந்து சோபாவில் விழுந்தான்... ‘ உண்மையாகவே மான்சி என்னை வெறுத்துவிட்டாளா? இனி அவளை மீட்க முடியுமா? எனது முயற்சிகள் எல்லாம் தோற்றுவிடுமா? குமுறிய நெஞ்சுடன் எழுந்து பூஜையறைக்கு போனான்...


சட்டமிடப் பட்ட படத்தில் சந்தன மாலையுடன் சிரித்தாள் சத்யனின் அம்மா..... சத்யன் தாயின் படத்தின் முன்னால் கைகூப்பி கண்மூடி நின்றான்... மான்சி எனக்கு வேனும்மா என்று அவன் உதடுகள் முனுக்க... அவன் விழிகள் மான்சிக்காக கண்ணீரை உதிர்த்தது.... கண்திறந்து பார்த்தான்... அம்மா இப்போது அழகாக சிரிப்பது போல் இருந்தது.... சத்யன் மனதிற்கு இதமாக இருந்தது அந்த சிரிப்பு... புதிய உறுதியுடன் பூஜையறையில் இருந்து வெளியே வந்தான்...

அவளுக்கு யாருடன் வேண்டுமானாலும் கல்யாணம் நிச்சயிக்கப்படட்டும் .. ஆனால் என் நேசம் உண்மையானது... அந்த நேசம் அவளை என்னிடம் இழுத்து வரும்... மான்சி எனக்கு கிடைக்கும் கடைசி நிமிடம் வரை போராடுவேன்.. தனது அன்புதான் அவளை ஈர்க்க ஒரே வழி என்று புரிய... சத்யன் அமைதியாக எழுந்து தோட்டத்து வீட்டுக்குப் போனான்.....

விக்டர் எழுந்து வெளியே வர மான்சி புன்னகையுடன் அவனை வழியனுப்பினாள்... சத்யன் உள்ளே போய் அமர்ந்தான்... மான்சி வந்ததும் “ என்ன எஸ்டேட் போகலையா?” என்று கேட்க....

“ இல்லை ... நீ தூங்குற டைம்ல போய்ட்டு வந்திடலாம்னு இருக்கேன்” என்றான் சத்யன்.. அவன் குரல் மெலிந்து போயிருந்தது...

“ அய்யோ நானும் போகலை நீங்களும் போகலைனா என்னாகுறது?..... என்னை யாரும் வந்து கொத்திக்கிட்டுப் போயிட மாட்டாங்க... நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க ” என்று மான்சி கேலியாக பேச.....

சத்யன் அதை லட்சியம் செய்யவில்லை... மீண்டும் தனது வீட்டுக்குப் போய் சிறிய டிவியை தூக்கி வந்து அங்கிருந்த மேஜையில் வைத்து கனெக்ஷன் கொடுத்தான்... பிறகு மீண்டும் போய் தனக்கு ஒரு படுக்கையை எடுத்து வந்து ஷெல்பில் வைத்தான்... தன்னுடைய லேப்டாப் இன்னும் சில பொருட்களை எடுத்துவந்து வைத்துவிட்டு மான்சி என்ன சமையல் செய்து வைத்திருக்கிறாள் என்று பார்த்தான்... எதுவும் செய்யவில்லை

மான்சியிடம் திரும்பி “ மதியம் சாப்பாடு ரெடி பண்ணலாமா?” என்று கேட்க....
மான்சி பார்வையில் கேலி வழிய “ இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலை... இந்த வீட்டுல எப்படி படுப்பீங்க... அதோட உங்களுக்கு குட்டியும் புட்டியும் இல்லாம தூக்கம் வராதே?” என்றால் நக்கலாய்...

சத்யன் அவளருகில் வந்து கையைப்பிடித்து “ மான்சி உன்னைத் தொட்டப் பிறகு என் கைகள் வேறு யாரையுமே தொடவில்லைன்னு சொன்னா நீ நம்புவியா?... ஆனா இதுதான் சத்தியம் மான்சி..... நான் யாரையுமே தொடலை.. உன் ஞாபகங்களோட தான் இருந்தேன்.. இப்பவும் இருக்கேன்” என்று சத்யன் மென்குரலில் சொல்ல....

அவனை விழியகல பார்த்த மான்சி “ அன்னிக்கு உடம்பு சரியில்லைன்னு கார்ல வந்து இறங்குனீங்களே... அதேபோல இப்பவும் பேசுறீங்க... அதே உருக்கம்....குரலில் அதே ஏற்ற இறக்கம்... ம்ம்ம் எப்புடிங்க இதெல்லாம்?” என்று ஆச்சரியப்படுவது போல் அவனை மட்டம் தட்டினாள்....

சத்யன் முகம் கன்ற அவள் கைகளை உதறிவிட்டு சேரில் அமர்ந்தான்... கைகளில் தலையை தாங்கி அவன் அப்படியே அமர்ந்திருக்க... மான்சி சிறிதுநேரம் அவனையேப் பார்த்திருந்துவிட்டு தனது மொபைலை எடுத்து எஸ்டேட் மேஸ்திரிக்கு கால் செய்தாள்...

“ ம் மேஸ்திரி நான்தான் மான்சி பேசுறேன் .... ஏழாவது மடுவில் பூச்சியடிக்குதுன்னு சொன்னீங்களே... அதுக்கு மருந்தடிக்க ஆள் வரச்சொல்லிருக்கேன் .. இன்னைக்கு மதியம் ரெண்டு மணிக்கு வருவாங்க கூட இருந்து வேலையைப் பாருங்க... ஐயா மதியம் வருவாரு” என்றாள்...
சத்யன் நிமிரவில்லை அப்படியே அமர்ந்திருந்தான்.... மான்சி எஸ்டேட் பற்றி மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு போனை கட் செய்துவிட்டு சமையல் செய்ய அடுப்பை பற்ற வைத்தாள்....

காய்கறிகளை கட் பண்ணுவதற்காக தரையில் அமர்ந்த மான்சி “ நான் உங்களுக்கு வலிக்கனும்னு இதையெல்லாம் சொல்லலை... நான் பட்ட அடியும் அவமானமும் இப்படி பேச வைக்குது... இப்படியே மாத்தி மாத்தி பேசி ஒருத்தரையொருத்தர் வார்த்தையால தாக்கிக்கிறதை இத்தோட நிறுத்திக்குவோம்... ஏன்னா வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எல்லாமே கேட்கும்னு சொல்லுவாங்க... பிறக்குறதுக்கு முன்னாலேயே அது மனசுல வக்கிரத்தை விதைக்க வேண்டாம்... இவ்வளவு நாளா விரோதிகள் மாதிரி இருந்தோம்... இன்னும் மிச்சம் இருக்குற இந்த மூனு மாசமாவது நல்ல நண்பர்களா இருக்க முயற்சிப் பண்ணுவோம்... என்னோட சமையல் உங்களுக்குப் பிடிக்குமா? ரொம்ப சிம்பிளாத்தான் இருக்கும் ” என்று இலகுவாக பேசினாள்...


அவளே இறங்கி வந்ததும் சத்யன் தலையிலிருந்து கையை எடுத்துவிட்டு “ அதெல்லாம் சாப்பிடுவேன்... என் அம்மா இறந்த புதுசில்... அப்பாவும் நானும்தான் சமையல் பண்ணுவோம்... சுமாராத்தான் இருக்கும்... ஒருநாள் தாத்தாக்கு பயங்கர வயித்து வலி வந்துருச்சு... அப்புறமாதான் சமையல்காரர் வச்சோம்” என்று தனது குடும்பத்தைப் பற்றிக் கூறும் இந்த சத்யன் மான்சிக்கு புதியவன்....

“ ம்ம் தாத்தாக்கு வந்த வயித்து வலியாவது உண்மையா?” என்று மான்சி கேலிபோல் கேட்க.... சத்யனிடமிருந்து எந்த பதிலும் இல்லை... மான்சி அவனை நிமிர்ந்துப் பார்த்து “ நான் சும்மா கேலிக்குதான் கேட்டேன் ” என்று மெல்லிய குரலில் சமாதானம் கூறினாள்

தலையசைத்த சத்யன் எழுந்து அவளருகில் வந்து “ நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்க....

“ இல்ல நானே செய்துடுவேன்... ஆனா நைட்ல இங்கே தூங்க வசதி பத்தாது.. நீங்க உங்க ரூம்லயே தூங்குங்க.. நான் எதுனாச்சும்னா போன் பண்றேன்” என்றபடி வெட்டிய காய்களை தண்ணீர் போட்டுவிட்டு எழுந்து அரிசியை கழுவினாள் ...

“ பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்... காலேஜ்ல படிக்கும்போது இதைவிட சின்ன ரூம்ல ஆறு பேர் தங்கியிருந்தோம்... இது எவ்வளவோ பரவாயில்லை ” என்ற சத்யன் அவள் எப்படி சமையல் செய்கிறாள் என்று உடனிருந்து கவனித்தபடி இவன் சின்னச்சின்ன உதவிகள் செய்தான்....

சாதத்தை வடித்துவிட்டு குழம்பை தயார் செய்த மான்சி “ இப்போ சாப்பிட்டு எஸ்டேட்க்கு கிளம்புங்க... நாளையிலேருந்து காலையில போய்ட்டு மதியம் வந்துடுங்க... சுத்தமா போகாம இருக்க முடியாது... காலையில உங்க ப்ளாக்கிய அவுத்து விட்டுட்டு போங்க... மதியத்துல நீங்க வந்து எனக்கு காவல் இருக்கலாம்” என்று மான்சி சாதரணமாக சொன்னாலும் அதிலிருந்த நக்கல் சத்யனை குத்தியது ...

அவன் முகமாற்றத்தை கண்டுகொண்டு “ இல்ல நீங்க என்னை விட்டு போகப் பயப்படுறீங்களே அதுக்காக சொன்னேன்” என்று சமாளித்தவளை பரிதாபமாகப் பார்த்தான் சத்யன்....

பேசிக்கொண்டே சமையல் முடிந்துவிட.... அதன்பின் இருவரும் அமைதியாக டிவிப் பார்த்தார்கள் ... சியாமா ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருந்த மலைஜாதிப் பெண் ராசாத்தி வந்து துணிகளைத் துவைத்து காய வைத்துவிட்டு பாத்திரங்களை கழுவிவிட்டுப் போக....

சத்யனும் மான்சியும் சாப்பிட அமர்ந்தார்கள்.... பேன்ட் போட்டுக்கொண்டு தரையில் அமர சிரமப்பட்ட சத்யனைப் பார்த்து “ நீங்க சேர்ல உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று சொல்ல...

சத்யன் தலையசைத்து மறுத்துவிட்டு எடுத்து வந்த துணிகளில் ஒரு கைலியை எடுத்து கட்டிக்கொண்டு பேன்ட்டை அவிழ்த்துவிட்டு சாப்பிட அமர்ந்தான்... மான்சியின் சமையல் வித்தியாசமாக இருந்தது... மசாலா வாசனைகள் அதிகமின்றி எளிமையாக இருந்த அந்த உணவு சத்யனுக்கு பிடித்துப் போனது... ருசித்து சாப்பிட்டான்....

சாப்பிட்டதும் சற்றுநேரம் கழித்து மான்சி தூக்கம் வருவதாக படுத்துக்கொள்ள.. எதுவானாலும் போன் செய்யச்சொல்லி பலமுறை எச்சரித்து விட்டு சத்யன் எஸ்டேட் கிளம்பினான் 


மாலை ஆறு மணிக்கு வந்தவன் நேராக பங்களாவுக்குள் போய் குளித்து உடை மாற்றிவிட்டு மான்சியின் குடிலுக்கு வந்தான்.... மான்சி காபி தயாரித்து கொடுத்ததும் வாங்கிக்கொண்டு சேரில் அமர்ந்து எஸ்டேட் விஷயங்களை பேசினான்...

மான்சி குளிப்பதற்காக வெண்ணீர் காயவைத்து... அது காய்ந்ததும் பாத்திரத்தை தூக்க முயன்றவளை தடுத்து “ இரு நான் கொண்டு போய் ஊத்துறேன்” என்று வெண்ணீரை எடுத்துப்போய் பாத்ரூமில் ஊற்றினான்...

மான்சி மாற்றுடையுடன் பாத்ரூமுக்குள் நுழைய... “ மான்சி நான் வந்து ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்டவனை மான்சி முறைக்க.... “ இல்ல மான்சி .... இடுப்புக்கு நிறைய தண்ணி ஊத்தனும்னு துணிதுவைக்க வந்த ராசாத்தி சொன்னாங்களே... அதான்....” என்று சத்யன் புதிதாய் தடுமாற....

“ எனக்கு கையிருக்கு.... நானே ஊத்திக்குவேன்” என்று கோபமாய் கூறிவிட்டு உள்ளே போய் கதவடைத்தாள்... சத்யன் மூடிக் கதவைப் பார்த்துவிட்டு டிவிப் பார்க்க அமர்ந்தான்... மான்சி குளித்துவிட்டு இலகுவான பருத்தி புடவையில் வந்தாள் ... வந்ததும் எந்த வீன் பேச்சுமின்றி சாப்பிட்டனர்...

ஒரே நாளில் அவர்களுக்குள் மெல்லிய நட்பு இழையோடியது... இருவருமே காயப்படுத்திவிடுவோமோ... அல்லது காயம் பட்டுவிடுவோமோ என்று தயங்கி தயங்கி பேசினர்... கண்ணாடி சில்களின் மேல் நடப்பது போல் மிக ஜாக்கிரதையாக அடியெடுத்து வைத்தனர்..

சாப்பிட்டு முடித்ததும் “ வா மான்சி கொஞ்சநேரம் நடந்துட்டு வரலாம்” என்று சத்யன் கைநீட்டி அழைக்க...

மான்சி அவன் கைகளைப் பற்றாமல் மெல்ல நடந்தாள்... சத்யன் அவளுக்கு அருகில் நடந்தவாறு.... எஸ்டேட்டில் நடந்தவற்றை மெல்லி குரலில் சொன்னான்... அவளிடம் சில ஆலோசனைகள் கேட்டான்....

சத்யனுக்கு சொர்க்கமே அருகில் இருப்பது போல் இருந்தது.... இதமான காற்றும்.. அழகான நிலவும்... அருகில் கர்பிணியான காதலியும்... ரொம்பவே மனசுக்கு இதமாக இருந்தது...

மான்சியும் அமைதியாக அவனுடன் நடந்தாள்... அவளுக்கும் இந்த சூழ்நிலை மனதுக்கு இதமாக இருந்தது.... சத்யனின் சீறலான மூச்சு தோளில் உரச நடந்தாள்... அவள் முகம் மென்மையை தத்தெடுக்க விரிந்த உதடுகளுடன் நடந்தாள்

எல்லாம் சரியாகத்தான் நடந்தது அந்த இடத்துக்கு மான்சி வரும்வரை.... சட்டென்று கால்கள் எட்டு வைக்காமல் நிற்க ... முகம் இறுக நின்ற இடத்திற்கு மேலே தலையைத் தூக்கி சத்யனின் அறையைப் பார்த்தாள்....



சத்யன் ஒன்றும் புரியாமல் அவளருகே வந்து " என்னாச்சு மான்சி?" என்று கேட்க....

மான்சி குளமான கண்களுடன் அவன் அறையைப் பார்த்துவிட்டு " இதோ இங்கதான்... இதேமாதிரி ஒரு இரவில்..... அது வந்து என்....." மேற்கொண்டு சொல்லாமல் திக்கித்திணற.....

எந்த இரவு என்று சத்யனுக்குப் புரிந்துபோனது .... வேகமாக அவளை நெருங்கி குமுறியவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்தான் .... " வேனாம் மான்சி... அதை நினைக்காதே?.... அன்னைக்கு வலிக்கலை.... இன்னைக்கு பயங்கரமா வலிக்குது மான்சி... ப்ளீஸ்மா அதை மறந்துடு" என்று கண்ணீர் குரலில் கெஞ்சினான் ...

மான்சி அவனிடமிருந்து திமிறி விலகினாள்.... குளமான கண்ணீர் கொட்ட ஆரம்பிக்க .... " கடைசில உங்க ஆசைப்படி பல பெண்களோடு படுத்த அதே பெட்டுல என்னையும்......." என்றவள் முடிக்காமல் முகத்தை மூடிக்கொண்டு துடிக்க.....

அவள் அழுகையை அடக்க வலி தெரியாமல் தேங்கிய விழிகளுடன் அப்படியே நின்றிருந்தான் சத்யன் ...

" வினை விதைத்தவன் வினையறுப்பான்...

" தினை விதைத்தவன் தினையறுப்பான்.....


" காதல் என்பது...

" காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு வரும் கவிதை....

" காதல் சூரியனைப்போல் பிரகாசிக்கும் ஒரு பனித்துளி...

" காதல் இமயமலையின் எடையை கொண்ட ஒரு பஞ்சுப்பொதி!

" காதல் உடனடியாக உறை நிலைக்குப் போகும் நெருப்பு!

" காதல் சட்டென்று உருகிவழியும் கடும் குளிர்!

" காதலின் இதயத்தை தொட கண்ணீர் தான் வாசல்!

" காதல் புன்னகையில் புதுவுலகை படைக்கும்!

" காதல் என்றாலே முரண்பாடு என்றுதான் அர்த்தம்! 


No comments:

Post a Comment