Tuesday, December 8, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 13

ஷீலா சத்யனை வெளியே இருக்க சொல்லிவிட்டு அவனை பின் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு போனாள் .... அமெரிக்கன் அறையில் இருந்த நர்ஸ் எதற்கோ வெளியேறியதும் அறைக்குள் நுழைந்த ஹோட்டல் ஊழியன்... அமெரிக்கனின் முகத்திலிருந்த மாஸ்க்கை எடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து அவன் முகத்தில் வைத்து அழுத்தினான்...

கதவின் மறைவில் இருந்த ஷீலா அங்கிருந்த மருத்துவமனையின் அலாரத்தை தட்டிவிட்டு அந்த சத்தம் எங்கும் ஒலித்தது... ஷீலாவின் வருகைக்காக வராண்டாவில் நின்றிருந்த சத்யன் பரபரப்புடன் ஓடி வரவும் ஹோட்டல் ஊழியன் அடித்துப்பிடித்துக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது...

கதவின் ஓரத்தில் நின்றிருந்த ஷீலா தனது கையில் இருந்த பேக்கை அவன் முகத்தில் வீச... சுருண்டு விழுந்தவன் எழும்போது சத்யனின் கையில் இருந்தான்...

அதற்குள் மருத்துவமனையின் ஊழியர்கள் மொத்தபேரும் அங்கே கூடிவிட.. ஷீலா நடந்ததை சொன்னாள்...

உடனடியாக சில டாக்டர்கள் உள்ளே ஓடி அமெரிக்கனின் உடல்நிலையை பரிசோதிக்க ... அவன் இறந்து போயிருந்தான்.... போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குற்றவாளியை அவர்களிடம் ஒப்படைத்த சத்யன்... போலீஸாருடன் வந்து.... குற்றவாளி வேலை செய்யும் ஹோட்டல்.... ரோச்சல் கொலையுண்டது... இப்போது அந்த அமெரிக்கன் கொலை செய்யப்பட்டது... என எல்லாம் ஒன்றுக்கொன்று சம்மந்தம் உள்ளது என்று அதன் பின்னனியை விசாரிக்கும் படி எழுதி கொடுத்துவிட்டு வந்தான்...

அதன் பின் போலீசாருக்கும் வழக்கு சூடு பிடித்தது... தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த அமெரிக்கன் ஒரு ஸ்மக்லின் கூட்டத்தை சேர்ந்தவன் என்றும்... தனது ரஷ்ய காதலி ரோச்சலின் வற்புறுத்தலால் அதிலிருந்து விலக நினைத்தவனை அந்த கூட்டம் கொலை செய்ய முயன்றதும்... அதற்காக இவன் உதவியை நாடியதும்.. அதுக்காக பேசப்பட்ட தொகையையும்.... முதலில் ரோச்சலை முடித்துவிட்டு அடுத்ததாக அதே இடத்தில் வைத்து அவளின் காதலனையும் தள்ளி விட்டதையும் அந்த ஹோட்டல் ஊழியன் ஒத்துக்கொண்டான்... யாருக்கும் சந்தேகம் வராதபடி அவர்கள் இருவரும் நல்ல போதையில் இருந்தபோது இதை நடத்தியதையும் தெளிவாக கூறினான்... ஆனால் ரோச்சல் உடனடியாக இறந்துவிட அந்த அமெரிக்கன் மட்டும் கோமாவில் இருந்தையும் கூறியவன்.. அவனுக்கு நினைவு திரும்பினால் ஆபத்து என்று அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து கண்காணித்து சமயம் கிடைத்தபோது கொலை செய்ய முயன்றதையும் ஒத்துக்கொண்டான்..... அவன் மூலமாக இன்னும் நிறைய விஷயங்கள் வெளிவர... போலீஸாரின் தேடுதல் வேட்டை திசை திரும்பியது ...

நீண்ட விசாரணைக்குப் பிறகு சுந்தரத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி சுந்தரத்தை விடுதலை செய்ய கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் ஆனது.... வெளியே வந்த சுந்தரம் தனது மகனை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட... சத்யனும் தன் அப்பாவை ஆறுதலாக அணைத்துக்கொண்டான்....
இனி மலேசியாவே வேண்டாம் என்று முடிவு செய்து அங்கு மிச்சமிருந்த சொத்துக்களை விற்று அப்பாவும் மகனும் இந்தியாவுக்கு கிளம்பினார்கள்....

சத்யன் ஷீலாவுக்கு மனபூர்வமாக நன்றி கூறினான் ...

“ நான் என்ன செய்தேன் சத்யன்.... உன்னோட அப்பா பாசம் உன்னை ஜெயிக்க வச்சது” அவனைப் பார்த்து சிரித்த ஷீலா “ அப்புறம் உன்னோடது லவ்தான்னு கன்பார்ம் பண்ணிக்கிட்டயா சத்யன்” என்று கேட்க....

சத்யன் ஒரு விரல் காட்டி அவளை எச்சரித்துவிட்டு “ லவ்வும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை... இதெல்லாம் ஒரு இண கவர்ச்சி” என்று சொன்னான்...

“ ம்ம் கூடிய சீக்கிரம் அந்த மண்ணாங்கட்டியை தான் நீயும் சாப்பிட போறேன்னு நான் சொல்றேன்.... உன் கண்களும் சிரிப்பும் சொல்லுது நீ காதலிக்கிறாய் என்று... பார்க்கலாம் சத்யன்” என்று சவால் விட்டு அனுப்பி வைத்தாள்...

சத்யன் சுந்தரத்தை அழைத்துக்கொண்டு தர்மபுரி வந்தபோது முழுதாக எட்டு மாதங்களும் ஒரு வாரமும் ஆகியிருந்தது ... தன் மகனின் முகத்தைப் பார்த்துவிட்டு மகாலிங்கம் எதுவுமே கிளறவில்லை... அமைதியாக தலையசைத்து வரவேற்றார்... சுந்தரம் தன் தகப்பனின் இந்த வரவேற்ப்பால் கூனி குறுகிப் போனார்... அப்பாவின் அறைக்குப் போய் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்

மகனின் மனதை உணர்ந்த மகாலிங்கம் “ சுந்தரம் இனிமேலாவது உன் மகனுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருக்க முயற்சி பண்ணு .. எனக்கு அது போதும்” என்றார்
சரியென்று தலையசைத்தார் சுந்தரம்.... மகனின் கம்பெனிப் பொறுப்புகளில் தானும் பங்கெடுத்துக்கொண்டார்.... கம்பெனியை கவனமாக நடத்தி லாபத்தை பலமடங்காக பெருக்கியிருந்த மகனை எண்ணி பெருமையாக இருந்தது...

சத்யன் தன் அப்பாவுடன் ஒரு வாரம் தங்கி அவரை பழைய உற்சாகத்துடன் கம்பெனிக்கு செல்ல வைத்துவிட்டு டாப்சிலிப் கிளம்பினான்.... முன்னறிவிப்பு இன்றி கிளம்பினான்... எதிர்பாராத நேரத்தில் மான்சியின் முன்பு போய் நின்றால் அவள் முகம் எப்படி மாறும் என்ற ஆவலில் ஆயிரம் கற்பனைகளுடன் டாப்சிலிப் நோக்கி பறந்தான்...

சத்யன் டாப்சிலிப் சென்றடைந்த போது மாலை நான்கு மணியாகியிருந்தது... உற்சாகத்தில் துள்ளிய மனதை கட்டுப்படுத்தத் தெரியாமல் அந்த உற்சாகத்தை உதடுகளில் பாட்டாக வழியவிட்டபடி காரைவிட்டு இறங்கினான் சத்யன்...

இறங்கியவனின் கண்ணில் முதலில் பட்டது.... கார் செட்டில் இருந்த சத்யன் விட்டுச்சென்ற கார்தான்... கிட்டத்தட்ட எட்டுமாத காலமாக உபயோகப்படுத்தப் படாமல் தூசி படிந்து டயர்களில் காற்று இறங்கிப் போய் நின்றிருந்தது.... “ ம்ம் கர்வக்காரி... இவன் காரை நாம தொடக்கூடாதுன்னு இருந்திருக்கா போலருக்கு” என்று நினைத்த மாத்திரத்தில் சத்யனுக்கு கோபம் வரவில்லை ..

உதட்டில் பூத்த புன்னகையுடன் திரும்பியவன் கண்களில் மற்றொன்றும் பட்டது... அது மான்சியின் ஸ்கூட்டி... அதுவும் உபயோகப்படுத்தி பலநாட்கள் ஆனதுபோல் ஓரமாக கிடந்தது... சத்யனின் சிரிப்பு மறைந்து போனது... அப்போ மான்சி இங்கே இல்லையா? ஆத்திரமாய் வீட்டுக்குள் நுழைந்தான்...

கையிலிருந்த பெட்டியை வீசி எரிந்தவன் “ ஏய் சாமுவேல்” என்று உரக்க குரல் கொடுக்க.... சாமுவேல் அலறிப்போய் ஓடி வந்தான்...

“ எங்கடா மான்சி?” என்று கர்ஜித்தவனைப் பார்த்து “ எஸ்டேட்டுக்கு போயிருக்காங்க ஐயா... இப்போ வர்ற நேரம் தான்” என்று பனிவுடன் சொன்னான் சாமுவேல்..

சத்யனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.... அப்போ இங்கேதான் இருக்கா... நிம்மதி பெருமூச்சுடன்.... “ காரும் இங்கேதான் இருக்கு.. ஸ்கூட்டியும் நிக்கிது... எதுல எஸ்டேட்க்கு போனா சாமு?” என்று கேட்டான் சத்யன்

“ அது வந்துங்கய்யா?” என்று தலையை சொரிந்த சாமுவேல் “ நம்ம டாக்டர் அம்மா மான்சியம்மாவை வண்டியெல்லாம் ஓட்டக்கூடாதுன்னு சொன்னதால அம்மா வண்டில போறதில்லைங்க” என்றான் திக்கித்திணறி...

சத்யனின் பார்வை அவனை துளைத்தது.... “ ஏன் வண்டி ஓட்டக்கூடாதுன்னு சொன்னாங்க? ” என்றான் சத்யன்


மறுபடியும் தலையை சொரிந்த சாமுவேல்.... “ அது வந்துங்கய்யா” என்று சாமுவேல் இழுக்கும்போதே வெளியே கார் வந்து நிற்கும் ஒலியும் அதை தொடர்ந்து “ மெதுவா இறங்கு மான்சி... இந்த நிலைமையில் எஸ்டேட் வரவேண்டாம்னு சொன்னா கேட்குறியா? பிடிவாதமா வர்ற... ஒவ்வொரு நாளும் உன்னை சேப்டியா கொண்டு வர்றதுக்குள்ள எனக்கு உயிர் போய் வருது” என்ற அக்கரையுடன் ஆண் குரல் ஒன்று சலித்துக் கொண்டது...

மான்சிக்கு என்ன? இது யார் குரல்? நிச்சயம் தினாவின் குரல் இல்லை... அப்போ இது யார் குரல்? சத்யன் ஆர்வத்துடன் வாசலைப் பார்த்தான்....

“ ஆமா என்னமோ என்னை உங்க முதுகுமேல தூக்கிட்டு வர்ற மாதிரி சலிச்சுக்கிறீங்களே... இந்த வீட்டுக்குள்ள இருக்க பிடிக்காம தானே நான் உங்ககூட எஸ்டேட்டிற்கு வர்றதே... நீங்க என்னடான்னா பயந்துகறீங்க” என்றபடி பெரிய வாயிற்றை சுமந்தபடி உள்ளே நுழைந்த மான்சியைப் பார்த்து சத்யன் அதிர்ந்தானா? அல்லாது அங்கிருந்த சத்யனைப் பார்த்து மான்சி அதிர்ந்தாளா? தெரியவில்லை ... ஆனால் இருவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்....

மான்சிக்குப் பின்னால் வந்த புதியவன்.... சத்யன் இதுவரை பார்த்திறாத புதியவன்.... சத்யன் அதிர்ச்சியில் உறைந்துபோய் அப்படியே நின்றிருக்க.... முதலில் சுதாரித்தது மான்சிதான் “ ஹாய் சத்யன் எப்ப வந்தீங்க?” என்றாள் உற்சாகமே உருவாய்...

சத்யன் அசையாமல் நின்று அவளது வயிற்றையேப் பார்த்தான்... இன்னும் சிலநாட்களில் பிள்ளைப் பெற்றுவிடக்கூடிய பெரிய வயிறு... இது எப்படி? யாரோடது? என்னுடையதா? எதிர்பாராத அதிர்ச்சியில் அப்படியே நின்றவனை அந்த புதியவனின் குரல் மறுபடியும் இவ்வுலகிற்கு அழைத்து வந்தது...

“ ஹாய் சத்யன்... நான் விக்டர்... பக்கத்தில் இருக்கும் குளோபல் எஸ்டேட்டை நான்தான் வாங்கிருக்கேன்.... உங்களைப் பத்தி மான்சி நிறைய சொல்லிருக்கா.. பட் உங்களை சந்திக்கும் வாய்ப்பு இப்பதான் கிடைச்சது” என்றபடி கைகுலுக்குவதற்காக தனது கையை நீட்டினான்...

சத்யன் அவன் கையை பற்றாமல் அமைதியாக நின்றிருந்தான்... அவன் பார்வை மான்சியின் வயிற்றை விட்டு அகலவில்லை.... அவன் கண்களில் இருந்த அருவருப்பை கவனித்த மான்சி “ ஸ் யப்பா” என்று சலிப்புடன் சோபாவில் பொத்தென்று அமர....

அந்த புதியவன் துடித்துப்போய் அவளருகில் ஓடிவந்து “ மான்சி இப்படியா பொத்துன்னு விழுவ... வரவர நீ சொல் பேச்சே கேட்க மாட்டேங்குற... இந்த குழந்தையை நீ பெறுவதற்குள்ள நான் இன்னும் எவ்வளவு சிரமப்படப் போறேனோ தெரியலை” என்று அக்கரையுடன் கடிந்தபடி மான்சியின் தோள் பற்றி அவளை நகர்த்திவிட்டு இடுப்புக்கு பின்னால் ஒரு குஷனை எடுத்து வைத்து “ ம் இப்போ நல்லா சார்ந்து உட்காரு மான்சி” என்றான் உரிமையுடன் ...

“ தாங்க்ஸ் விக்டர்” என்றாள் மான்சி... அவள் முகத்தில் அப்படியொரு அழகான புன்னகை... செல்லமாக அவள் தலையில் குட்டிய விக்டர் “ நமக்குள்ள தாங்க்ஸ் என்ற வார்த்தையே வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்... ம்ம் உன்னை கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு கொண்டு போனதும் இன்னும் நிறைய க்ளாஸ் எடுக்கனும் போலருக்கே” என்று விக்டர் கூறியதும்... மான்சி க்ளுக் என்று வெட்கமாய் வாய்பொத்தி சிரித்தாள்...

சத்யனின் கண்முன்னால் இத்தனையும் நடந்தது... அவர்கள் இருவரும் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை... ஆனால் அவர்களின் பேச்சில் நடவடிக்கைகளில் நடிப்பு இல்லை......... அப்படியானால்?





“ ஏய் பெண்ணே?

“ குளிர்ந்த என் இதயத்தில்...
“ ஏன் தீயை விதைத்தாய்?

“ உன் கருவிழிகளில்...
“ ஏன் என்னைப் புதைத்தாய்?

“ சிறகடித்த என் மனதை..
“ ஏன் சிதைத்தாய்?

"இவ்வளவு முடிந்தபின்...
“ ஏன் மறுபடியும் சிரித்தாய்?

“ மறுபடியும் என் உடலுக்கு...
“ உயிர் கொடுக்கவா?

“ தாங்க்ஸ் விக்டர்” என்றாள் மான்சி... அவள் முகத்தில் அப்படியொரு அழகான புன்னகை... செல்லமாக அவள் தலையில் குட்டிய விக்டர் “ நமக்குள்ள தாங்க்ஸ் என்ற வார்த்தையே வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்... ம்ம் உன்னை கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு கொண்டு போனதும் இன்னும் நிறைய க்ளாஸ் எடுக்கனும் போலருக்கே” என்று விக்டர் கூறியதும்... மான்சி க்ளுக் என்று வெட்கமாய் வாய்பொத்தி சிரித்தாள்...

சத்யனின் கண்முன்னால் இத்தனையும் நடந்தது... அவர்கள் இருவரும் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை... ஆனால் அவர்களின் பேச்சில் நடவடிக்கைகளில் நடிப்பு இல்லை......... அப்படியானால்?

சத்யன் இருவரையும் கண்கொட்டாமல் பார்க்க... மான்சியின் கால்களை எடுத்து எதிரில் இருந்த டீபாயின் மேல் வைத்த விக்டர் “ கால்கள்லேசா வீங்கின மாதிரி இருக்குடாம்மா... நைட் காலுக்கு வெண்ணீர் வச்சு ஊற்றி தூங்கும் போது காலுக்கு தலையணை வச்சுகிட்டு படுத்துக்கோ மான்சி” என்று விக்டர் அக்கரையுடன் கூற...

மான்சி மெல்லிய சிரிப்புடன் தலையசைத்தாள் .... “ இப்போ தலையாட்டிட்டு என்னை அனுப்பிட்டு அப்புறம் நான் போனதும் சாப்பிட்டு படுத்துட்டு பாதி ராத்திரல எழுந்து போன் பண்ணி எனக்கு கால் வலிக்குதேன்னு அழக்கூடாது? இல்லேன்னா நானும் இங்கேயே இருக்கவா மான்சி?” என்று விக்டர் கேட்க...

“ ம்ஹூம் நீங்க கிளம்புங்க.. இங்கேயிருந்தா நைட் தூங்காம என்னையேப் பார்த்துகிட்டு உட்கார்ந்திருப்பீங்க.... நான் சியாமா கிட்ட சொல்லி வெண்ணீர் ஊத்திக்கிறேன்” என்று மான்சி சிரிப்புடன் கூறினாள்...

அரை மனதுடன் நிமிர்ந்த விக்டர் சமையலறையின் வாசலில் நின்று சத்யனை பயத்துடன்ப் பார்த்துக்கொண்டிருந்த சாமுவேலைப் பார்த்து “ சாமுவேல் உன்னோட ஒய்ப்பை வந்து தினமும் நைட்ல இங்கே வந்து படுத்துக்க சொல்லு... இன்னும் சில வாரங்கள்தான் இருக்கு குழந்தை பிறக்க... அதனால ஜாக்கிரதையா பார்த்துக்கங்க ப்ளீஸ் .” என்று ஒரு மாதிரி அடைத்த குரலில் கூறியவன் மான்சியிடம் திரும்பி “ என் வீட்டுல வந்து இருன்னு சொன்னா இன்னும் ஒன்றரை வருஷம் முடியிற வரைக்கும் இங்கிருந்து வரமாட்டேன்னு சொல்ற... உன்னை இங்கே விட்டுட்டு எனக்கு அங்க இருக்கவே பயமாயிருக்கு மான்சி ” என்றான் வேதனையுடன்..

அவனைப்பார்த்து சிரித்த மான்சி “எனக்கு ஒன்னும் ஆகாது விக்டர்... தைரியமா இருங்க... எதுவாக இருந்தாலும் உடனே கால் பண்றேன்” என்று உறுதி கூறியதும் முகத்தில் நிம்மதி படர திரும்பி சத்யனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அகன்றான் விக்டர்

அவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பும் வரை இறுகிய முகத்துடன் அமைதியாக மான்சியை பார்த்துக்கொண்டிருந்த இருந்த சத்யன்... தன் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை துடைத்தபடி மான்சிக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்...

மான்சி அவனைப் பார்த்து மலர்ந்த சிரிப்புடன் “ போன வேலையெல்லாம் சரியா முடிஞ்சுதா? உங்கப்பாவோட லவ்வர் எப்படி செத்துப்போனாளாம்? உங்கப்பா வெளியில வந்துட்டாரா? ஆனா நான் இந்த மாதிரியெல்லாம் கேள்விப்பட்டதேயில்லை... அப்பாவுக்கு ஒரு லவ்வர்... அவளை அப்பாவே கொலை பண்ணிட்டார்னு ஜெயில்ல இருக்கார்... மகன் போய் அப்பாவை வெளிய கொண்டு வர்றானாம்... அய்யோ ஆண்டவா சினிமாவுல கூட இந்த மாதிரி நான் பார்த்ததில்லை சாமி ” என்று விழிகளை விரித்து கைகளை ஆட்டி அசைத்து மிகபெரிய அதிசயத்தைப் பற்றிப் பேசுவது போல் பேசினாள்

சத்யன் அவள்மீதிருந்த விழிகளை அகற்றவில்லை... அவனின் உறுத்து விழித்த பார்வையை மான்சி சலைக்காமல் எதிர்கொண்டாள்.... அவள் கேட்டது எதுவுமே தன் காதில் விழாதது போல் அவளின் பெரிய வயிற்றை நோக்கி தன் ஆள்காட்டிவிரலை நீட்டி “ இது என்னது மான்சி?” என்று கேட்டான்...

சத்யனின் குரல் இப்படியும் கூட இருக்கும் என்று மான்சிக்கு இப்போதுதான் தெரிந்தது... ஆனாலும் பயப்படவில்லை “ என்ன சத்யன் சந்தேகமா படுறீங்களா? அன்னைக்கு நீங்க நடிச்சேன்னு சொன்னீங்களே ? அப்போ ஏற்ப்பட்ட உறவில் வந்தது தான் சத்யன்” என்றாள் தெளிவாக....

“ அது தெரியாம இருக்க நான் முட்டாள் இல்ல? உன்னை சந்தேகப்படும் உரிமையும் எனக்கில்லை? ஆனா இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு உன்கிட்ட பலமுறை சொல்லிருக்கேன் மான்சி.... பிறகு ஏன் இதெல்லாம்?” என்ற வார்த்தைகளை இரும்பு குழம்பில் தேய்ந்து வெளிவந்தன....

“ உங்களுக்குப் பிடிக்கலைன்னா என்ன சத்யன்,, அன்னைக்கு நான் காதலோட தான் உங்களை நெருங்கினேன்.. அதனால இது என் உண்மை காதலுக்கு கிடைச்ச பரிசாக நான் நெனைச்சேன்... அதான் இதை அழிக்காமல் ஆசையோட வயித்துல சுமந்தேன்.... ஆனா இப்போ?” என்று சலிப்புடன் உதட்டை பிதுக்கினாள்
சத்யனின் பார்வை கூர்மை பெற “ இப்போ?” என்று நிறுத்தினான்...

“ இப்போ விக்டரும் நானும் இன்னும் ஒன்றரை வருஷம் கழிச்சு மேரேஜ் பண்ணிக்க முடிவு பண்ணிருக்கோம்... இந்த நிலையில இந்த குழந்தை தேவையான்னு தோனுது... ஆனாலும் உங்களால உருவான பிள்ளைக்கு விக்டரை தகப்பனாக்க எனக்கு சம்மதமில்லை.. எனக்கு குழந்தையும் வேனும்னு விக்டர் சொல்றார்” என்று சலிப்புடன் பேசியவள் சட்டென்று உற்சாகமாகி “ விக்டருக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்குமாம்... பாப்பா எப்போ பிறக்கும்னு ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கிட்டு இருக்கார்.. இஸ் வெரி நைஸ் பர்ஸன் ” என்று ஆர்வத்துடன் கூறிவிட்டு சத்யனின் முகத்தைப் பார்த்தாள் ..

“ இவனோட எத்தனை நாளா பழக்கம்? நான் போனதுமேவா? இல்லை சமீபத்திலா?” இம்முறை வார்த்தைகள் அமிலத்தில் குளித்து வந்தது....

அவன்மீது அலட்சியமானதொரு பார்வையை வீசியவள் “ நீங்க போன ஒரு மாசம் கழிச்சுதான் பக்கத்து எஸ்டேட்டை வாங்கினார்... லேபர்ஸ் சம்மந்தமா உதவி கேட்டு வந்தார்... நானும் ஹெல்ப் பண்ணேன்... அப்புறம் நட்பா பழக ஆரம்பிச்சோம் ... என்னோட நிலைமை நான் இங்கே இருக்கவேண்டிய சூழ்நிலை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு என்னை லவ் பண்றதா சொன்னார்.. இப்படி ஒருத்தனை நம்பி ஏமாந்து சீரழிஞ்சு போன பிறகு எதுக்கு கல்யாணம்னு முதல்ல நான் மறுத்தேன்.. ஆனா நீ எந்த நிலையில் இருந்தாலும் நீதான் என் மனைவி என்று பிடிவாதமா இருந்த விக்டரோட லவ் என்னை மாத்திடுச்சு... இப்போ நானும் அவரை உயிருக்குயிரா நேசிக்கிறேன் சத்யன்... உங்களோட மூன்று வருஷ கான்ட்ராக்ட் முடிஞ்சதும் எனக்கும் விக்டருக்கும் மேரேஜ்னு முடிவு பண்ணிருக்கோம்... விக்டர் என் வீட்டுக்குப் போய் அம்மாகிட்டயும் என் நிலைமையை சொல்லி சம்மதம் வாங்கிட்டார்” என்று மான்சி சொல்ல...

சத்யனின் புருவங்கள் முடிச்சிட “ ஓ உன் வீட்டுக்கும் விஷயம் தெரியுமா? ” என்றான் ..

“ ஆமாம் ... இப்பல்லாம் அம்மா நாலு மாசமா அடிக்கடி வந்து என்னைப் பார்த்துட்டு போறாங்க... மொதல்ல வந்தப்ப உங்க மேல போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கனும் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டாங்க... விக்டர் தான் என் அம்மாவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்தார்... இவ்வளவு பெரிய தப்பு பண்ண உங்களையே மன்னிச்ச விக்டர் ரொம்ப கிரேட் சத்யன்” என்றாள் பெருமை பொங்க...

இந்த வார்த்தைகளுக்குப் பிறகு ரௌத்திரமாய் எழுந்த சத்யன் “ என்னடி நக்கலா? நான் என்னமோ உன்னை கடத்தி வந்து கற்பழிச்ச மாதிரி பேசுற? நீயா வந்த எல்லாத்தையும் அவுத்துட்டு வந்து என்கூட படுத்த” என்று சத்யன் சொல்லும்போதே ஆத்திரமாய் எழுந்த மான்சியை கையமர்த்தி தடுத்த சத்யன் “ என்ன? நான் நடிச்சதால ஏமாந்துட்டேன்னு சொல்லப் போறியா? ஆமாம்டி நான் நடிச்சேன் தான்... எனக்கு நீ வேனும்... உன்னை அடைய வழி தெரியாம நடிச்சு என் படுக்கைக்கு உன் சம்மதத்தோட கொண்டு வந்தேன்... பொட்டச்சி நீயில்ல ஜாக்கிரதையா இருந்திருக்கனும்? ஆனா நீ என்ன பண்ண? என் நடிப்பை நம்பி பொசுக்குன்னு கட்டில்ல விழுந்துட்ட? அதுக்கு காரணம் என்மேல வச்சிருந்த காதல்னு சொல்லுவ? உன் காதலோட லட்சனம் பார்த்தியா? நான் உன்னை காதலிக்கலைன்னு தெரிஞ்சதும் என்னைவிட கலரா ஒருத்தன் வந்ததும் அவன்கிட்ட போயிருச்சு உன் காதல்... இந்த கருமத்துக்கு தான்டி நான் காதலையே அறவே வெறுத்தது... அந்த எளவெல்லாம் இப்படித்தான்... ஒன்னைவிட ஒன்னு பெஸ்ட்டா தோனும் போது அதுக்கு தாவிடும்... ஆனா இவ்வளவும் பண்ணிட்டு இப்போ என்னமோ தப்புக்கு நான் மட்டும்தான் காரணம்ங்கற மாதிரி பேசுற” என்று சத்யன் குமுறி கொட்டினான்... அவன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசியது இதுதான் முதல்முறை..

அவன் வார்த்தைகள் தன்னை ஒன்றும் செய்யாது என்பதுபோல் பச்சென்று உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கிய மான்சியின் அலட்சியம் சத்யனை மேலும் ஆத்திரப்படுத்த எதிரில் நின்றவளின் தோள்களை முரட்டுத்தனமாகப் பற்றி உலுக்கியபடி “ ஏய் பெண்ணே இந்த அலட்சியம் என்கிட்டே ஆகதுடி.... நான் நெனைச்சேன்னா காலம்பூராவும் உன்னை இங்கேயே சிறைவைக்க முடியும்” என்று ஆத்திரத்துடன் கர்ஜிக்க...

சாமுவேல் அவசரமாக ஓடி வந்து “ ஐயா வேண்டாம்ங்க நிறைமாத கர்ப்பிணி... விட்டுருங்க” என்று கெஞ்ச... சத்யன் தன் வயிற்றில் முட்டிய மான்சியின் வயிற்றைப் பார்த்துவிட்டு “ ச்சே” என்ற இயலாமையுடன் அவளை சோபாவில் தள்ள.. மான்சி தொப்பென்று சோபாவில் விழுந்தாள்...

சத்யனின் ஆத்திரம் சாமுவேலிடம் திரும்பியது... “ ஏய் நான் போன் பண்ணும் போதெல்லாம் இங்கே நடந்ததை ஏன் சொல்லலை?” என்று பவேங்கையாய் உறுமினான்

சத்யனின் உறுமலில் நடுங்கிப்போனான் சாமுவேல் “ இல்லைங்க மான்சி அம்மாதான் உங்ககிட்ட எதையும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிகிட்டாங்க” அவன் சொல்லி முடிக்குமுன் சத்யனின் வலது கை அவன் கன்னத்தில் இடியாய் இறங்கியது



“ உனக்கு சம்பளம் நான் தர்றேனா?... இல்ல இவ தர்றாளா? வருஷக்கணக்கா உனக்கு சம்பளம் தர்ற என்னைவிட நேத்து வந்த இவ உனக்கு பெரிசா போயிட்டா? ” என்று சத்யன் சொல்லும்போதே படாரென்று அவன் கால்களில் விழுந்த சாமுவேல்...

“ ஐயா என்னை மன்னிச்சிடுங்க... இனிமே இதுபோல தப்பு பண்ணமாட்டேன்” என்று சத்யனின் கால்களை கட்டிக்கொண்டு கண்ணீர் விட...

சாமுவேலின் கண்ணீரால் சத்யனின் கோபம் கொஞ்சம் தனிந்தது அவனை தூக்கி நிறுத்திவிட்டு “ போய் ப்ளாக்கிய அவுத்துவிடு... இந்த வாசப்படியில் எவன் கால் வச்சாலும் கடிச்சு குதறச்சொல்லு.. கால் வச்சவன் மறுபடியும் உயிரோட திரும்பக்கூடாது... ம் சொன்னதை செய் ” என்று அவனைப் பிடித்து தள்ள.. சாமுவேல் ப்ளாக்கி இருக்கும் இடம் நோக்கி ஓடினான்...

அவன் சென்றதும்... மான்சியின் எதிரில் வந்து நின்றவன் “ உன்னோட புது லவ்வருக்கு போன் பண்ணி சொல்லிடு... இந்த பங்களாவுக்கு வெளியே ஒரு வெறி நாயும்... பங்களாவுக்கு உள்ளே ஒரு வேங்கையும் அவன் ரத்தத்தை ருசிக்க காத்திருக்குன்னு.. மறுபடியும் வந்தான் தொலைஞ்சான்டி அவன்” என்று கர்ஜித்தவன்... மான்சியின் முகத்தில் தெரிந்த மிரட்சியும்.. விழிகளில் துளிர்த்த ஒரு துளி கண்ணீரும் அவனை கோழையாக்க... உள்ளங்கையால் தன் நெற்றியில் தட்டியபடி தனது பெட்டியை எடுத்துக்கொண்டு மாடியில் தன் அறைக்குப் போனான்...

No comments:

Post a Comment