Saturday, December 19, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 1

தன் கரங்களை வின்னெங்கும் விரித்து அணைத்தபடி ஆதவன் ஒருபுறம் மறைய.... மறுபுறம் வான் கடலில் மும்முரமாக நீச்சல் பழக வேகமாக வந்துகொண்டிருந்தது நிலவு.... அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவிக்கிடந்த நட்சத்திரங்கள் பூமிக் காதலனை காதலோடு பார்க்க.....வெளிச்சம் விலகியும் விலகாத ஓர் அழகான பொன் அந்தி மாலைப்பொழுது....

அந்த இனிய மாலையில் படபடக்கும் மின்மினிகளாய் விளக்குகள் கண்சிமிட்ட.... எங்கு திரும்பினாலும் வானுயர்ந்த கட்டிடங்களை தனக்குள் அடக்கிக்கொண்டு கான்கிரீட் குப்பையாய் காட்சியளிக்கும் தமிழகத்தின் தலைநகரம்....



தொட்டால் சரிந்துவிடும் சீட்டுக் கட்டுக் கட்டிடங்களைப் போல் பயமுறுத்தும் அடுக்குமாடிக் குடியிறுப்புகள்.... நடுத்தர வர்கத்தினர் மட்டுமே வசிக்கக்கூடிய இரட்டைப் படுக்கையறை ப்ளாட்கள் கொண்ட குடியிருப்பின் நான்காவது தளத்தில் பதினாலாவது நம்பர் ப்ளாட்....

மூடியிருந்த கதவுக்குப் அந்தபக்கம் இருந்து ப்ளேயரில் இளையராஜா பாடிய பழைய பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருக்க .. ஒரு ஆணின் உரத்த குரல் அந்த பாடலை கூடவே பாடிக்கொண்டிருந்தது.......


“ ராத்திரிப் பொழுது உன்னைப் பார்க்குறப் பொழுது.....

“ அடி வேர்த்துக்கொட்டுது வாசமுட்டுது கேட்குற பொழுது......
வெளியே நின்று காலிங் பெல் அடிக்க கையை கொண்டு சென்ற பவித்ரா அந்த பாடல் வரிகளை கேட்டுவிட்டு “ அடப்பாவி இவன் டேஸ்டைப் பாரு... ச்சே கருமம்” என்றபடி பெல்லை அடிக்காமல் கோபமாக கதவைத் தட்டினாள்... அவள் மூன்றாவது முறை கதவைதட்டும் போது கதவுத் திறக்கப்பட்டது...

வெளியே தலையை மட்டும் நீட்டிய சத்யன் “ ஏய் பவி என்னடி இந்த நேரத்துல வந்திருக்க?” என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே கதவைத் தள்ளித் திறந்தபடி அவனை இடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் பவித்ரா....

சத்யன் அவசரமாக கதவை மூடிவிட்டு வந்த சத்யனைப் பார்த்த பவித்ரா சற்றுமுன் இருந்த கோபம் போய் வாயைப்பொத்திக் கொண்டு பக்கென்று சிரிக்க...

சத்யன் அசடு வழிந்தபடி “ இல்லடி நான் மட்டும் தானே இருக்கேன்னு..............” என்று மேல சொல்லாமல் இழுத்தபடி அவசரமாக சோபாவின் மேல் கிடந்த டவலை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டான்....

அவனையே கிறக்கமாகப் பார்த்த பவித்ரா “ தனியா இருந்தா இப்படித்தான் இருப்பியா மாமா?” என்றுபடி அவனை நெருங்கியவள் இடுப்பில் இருந்த துண்டில் கைவைக்க....

“ வேனாம் பவி ..... டவுசர் ரொம்ப ஷாட்டா இருக்குடி” என்றபடி சோபாவின் பின்னாடி ஓடியவன் பின்னாலேயே ஓடினாள் பவித்ரா....

இரண்டாவது ரவுண்டில் சோபாவின் அருகே வந்த சத்யன் “ இப்ப என்னடி என்னை டவுசரோட பார்க்கனுமா? இந்தா நல்லா பார்த்துக்க ” என்றவன் பட்டென்று டவலை உருவிவிட்டு இரண்டு கைகளையும் விரித்து நிற்க்க...

“ ஏய் ச்சீ மாமா.... மூடு மாமா” என்று வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டவளை நெருங்கிய சத்யன் அவள் இடுப்பில் கைபோட்டு வளைத்து “ என்ன பவி இப்படி வெட்கப்படுற? சின்ன பிள்ளையா இருக்கும்போது இதைவிட சின்ன டிரஸ்ல எல்லாம் என்னை பார்க்காத மாதிரி ம்ம்ம் ?.....” என்று குறும்புடன் கேட்டுவிட்டு குனிந்து அவள் முகத்தையேப் பார்த்தான்.....

பவித்ரா சத்யனின் அத்தை மகள்.... இருபத்தியிரண்டு வயதுக்கு அழகான உடலமைப்புடன் கூடிய அழகி ...... தனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே சத்யனை நேசிக்கும் அழகு காதலி.... சத்யனுக்கும் பவித்ரா என்றால் கொள்ளை ஆசை... ஊரிலிருக்கும் போது அவளை ஒரு நாள் கூட பிரிந்திருக்க மாட்டான்.... விரைவில் அவளை மனைவியாக அடைய காத்திருக்கிறான்

சத்யன் வயது 27 .... ஆறடி உயரத்தில் பார்பவர்களை வசீகரிக்கும் எளிமையான அழகன்.... ஏறிய நெற்றியும்... கூரிய நாசியும்.... கூர்மையான பார்வையும்... தடித்து கறுத்த உதடுகளும்... அகன்ற மார்பும்... வலிய தோள்களும்... வலுவான கைகளும்... பலமிக்க நெடிய கால்களும் கொண்ட கிரேக்க சிற்பம் தான் சத்யன்...

எம் சி ஏ முடித்துவிட்டு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் சென்னை மயிலாப்பூர் கிளையின் மேலாளராக இருப்பவன்.... நான்கு வருடத்திற்கு முன்பு இன்சூரன்ஸ் பாலிசி பிடிக்கும் ஏஜெண்டாக சேர்ந்து ஓடி ஓடி அலைந்து பாலிசி பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போதுதான் துணை மேலாளராக உயர்ந்துள்ளான்….

இருவருக்கும் சொந்த ஊர் தஞ்சாவூர் அருகேயுள்ள நன்னிலம் பக்கத்தில் ஒரு கிராமம் .... சத்யனின் அப்பா செல்வம் அம்மா ஆதிலட்சுமி .... சத்யன் மூத்தவன் இவனுக்கு அடுத்ததாக ஆறேழு வருடம் கழித்து பிறந்த ஒரே தங்கை கீதாஞ்சலி.... செல்வத்தின் தங்கை ஜானகியின் ஒரேயொரு மகள் தான் பவித்ரா.... சத்யனுக்காகவே பெற்று வளர்க்கப்படும் தேவதை..... கீதாவின் படிப்பு முடிந்து திருமணம் நடந்தவுடன் தான் இவர்களுக்கு திருமணம் என்பதால் இருவரும் காதலோடு காத்திருந்தார்கள்....

இரு குடும்பத்துக்குமே விவசாயம் தான் குலத்தொழில்.... செல்வத்தின் நண்பரான சுப்பிரமணியை காதலித்து அவர்தான் வேண்டுமென்று தவமாய் தவமிருந்து மணந்தவள் தான் பவித்ராவின் அம்மா ஜானகி....

ஜானிகியை ஆதிலட்சுமியின் அண்ணனுக்கு கொடுப்பதாக நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து தாலி கட்டும் நேரத்தில் ஜானகி காணமல் போய் சுப்பிரமணியை திருமணம் செய்துகொண்டு திருமண மண்டபத்தில் வந்து நின்றாள்...

ஜானகியை உயிராய் காதலித்து திருமணம் வரை வந்து இறுதியில் அவளை இழந்த தோல்வியை ஏற்க்க முடியாமல் ஆதிலட்சுமியின் அண்ணனும் கல்யாண மாப்பிள்ளையுமான கிருஷ்ணன் ..... மணமகன் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள.... கல்யாண வீடு கலவர பூமியானது ... அத்தோடு ஆதிலட்சுமியின் தாய்வீட்டு உறவு முடிந்து முறிந்து போனது...


செல்வம் தனது தங்கையையும் நண்பனையும் விட்டுக்கொடுக்க மனமின்றி தனது மாமியார் வீட்டு உறவை அடியோடு முறித்துக்கொண்டு வந்துவிட்டார்.... ஆதியும் தனது தாய்வீட்டு பாசத்தை மனதுக்குள் குழிதோண்டி புதைத்து விட்டு கணவன் சொல்படி நல்ல மனைவியாக இருந்தாள்.... கிட்டத்தட்ட இருபத்திநான்கு வருடமாக எந்த ஒட்டு உறவுமில்லை...

சத்யனின் வருமானத்தை எதிர்பார்க்காத செல்வம் தன் சேமிப்பிலிருந்து மகனுக்காக வாங்கி கொடுத்தது தான் இந்த ப்ளாட்..... ஒரு ஹால் அதைச்சுற்றிலும் ..ஒரு அழகான சிறிய சமையலறை.... அட்டாச்டு பாத்ரூம் டாய்லெட் கொண்ட இரண்டு படுக்கையறை... இரு படுக்கையறையை இணைக்கும் ஒரே பால்கனி... அதன் பக்கத்தில் ஒரு சிறிய ஆபிஸ் அறை... ஹாலின் மூளையில் தடுக்கப்பட்டு ஒரு சிறிய டைனிங் ஹால் என ஒரு கணவன் மனைவி வசிக்கக்கூடிய அழகான ப்ளாட்.... பவித்ராவும் சத்யனும் திருமணம் முடிந்து வாழ்வதற்கென்றே வாங்கிய ப்ளாட்....

பவித்ரா பிகாம் முடித்துவிட்டு பொழுது போகாமல் வீட்டில் நெல் காயவைத்துக் கொண்டிருந்தவளை சத்யன் தான் அழைத்து வந்து... தான் வேலைசெய்யும் இன்சூரன்ஸ் கம்பெனியின் அண்ணாநகர் பிராஞ்ச்சில் வேலை வாங்கி கொடுத்துள்ளான்.... திருமணம் முடியும் வரை ஒன்றாய் தங்குவது ஆபத்து என்று லேடிஸ் ஹாஸ்டலில் தங்க வைத்துள்ளான்.... ஆனாலும் சனி ஞாயிறு முழுவதும் இங்கேதான் இருப்பாள் .. இன்று வெள்ளிக்கிழமை என்றதும் ஆர்வமாக ஓடிவந்தவள்.... அவன் வெறும் டிரவுசருடன் நிற்கவும் சிரிப்பு தாங்கவில்லை பவித்ராவுக்கு....

சத்யனின் கையில் வில்லாய் வளைந்தவள் “ மாமா எப்ப இந்த வீட்டுல வந்து நிரந்தரமா குடும்பம் நடத்துவேன்னு ஆசையாயிருக்கு மாமா? உன்னைப் பார்க்காம என்னால இருக்கவே முடியலை மாமா ” என்று ரகசியமாக கூறி சினுங்கியவளை வலிக்காமல் அணைத்த சத்யன்...

“ அந்த ஆசை எனக்கு மட்டும் இல்லையாடி? இன்னும் மூனே மாசத்தில் கீதா படிப்பு முடிந்ததும் அடுத்த நாலஞ்சி மாசத்துல கல்யாணமும் முடிஞ்சிடும்... அப்புறம் நாமதான்... ம்ம்ம் நெனைச்சுப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாயிருக்குடி பவி ? நீயும் நானும் மட்டும் இந்த வீட்டுல..... எப்பவுமே என் கைகளுக்குள் நீ.... பவி கற்பனையே எவ்வளவு சுகமாயிருக்குடி” என்று நாளைய நிலவரத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து ரசித்தபடி கண்களை மூடிக்கொண்டான் சத்யன்...

அவனது அணைப்பு இறுகிப்போனதும் பவித்ரா மெல்ல உடலை நெளித்து அசைந்து “ மாமா வலிக்குது விடு மாமா?” என்று கிள்ளையாக கொஞ்ச...

கிறக்கமாக கண்விழித்துப் பார்த்த சத்யன் “ இதுக்கே வலிக்குதுன்னு சொல்றியேடி..... அப்புறம் கல்யாணம் ஆனதும்.......... ம்ம்ம்ம்ம்ம்ம்................” என்று சத்யன் மேலே சொல்லாமல் இழுக்க.... “ ச்சீ போ மாமா” என்று அவன நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டு ஓடிச்சென்று சோபாவில் அமர்ந்து கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.......

சத்யனும் சென்று அருகில் அமர்ந்து அவள் முகத்தை கைகளில் ஏந்தி “ என்னடி இவ்வளவு வெட்கம்?.... அன்னிக்கு எப்படியிருக்கும்னு இன்னிக்கு சும்மா ஒரு ட்ரைல் பார்க்கலாமா? ” என்று கேட்டுவிட்டு ஆர்வமாக அவள் முகத்தருகே குனிந்தவனை பிடித்து தள்ளிய பவித்ரா....

“ ஓய் மாமா என்னாச்சு உனக்கு? இன்னைக்கு பாட்டு ஒரு மாதிரியா இருக்கு?.... போட்டுருக்க டிரஸ் ஒரு மாதிரியா இருக்கு?.... பேசுற பேச்சும் ஒரு மாதிரியா இருக்கு? ம்ஹூம் எனக்கு பயமாயிருக்கு சாமி நான் கிளம்புறேன்பா” என்றவள் எழுந்திருக்க முயன்றவளை தடுத்து அமர வைத்த சத்யன்....

“ ஹோய் அதெல்லாம் ஒன்னுமில்லடி.... இப்பல்லாம் எப்பவுமே உன் ஞாபகம் தான்... அதான் கொஞ்சம் தடுமாறிட்டேன்.... மத்தபடி நான் கொள்கையிலிருந்து மாறமாட்டேன்.. நீ பயப்படாதே” என்று கூறிவிட்டு அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டான் சத்யன்




விநாடியில் தடம் மாறக்கூடிய சென்னையில் சத்யன் இன்னும் அசல் தஞ்சாவூர் காரனாய் கற்போடு இருக்கக் காரணம் செல்வம் ஆதி இருவரின் வளர்ப்பு தான்... பவித்ரா அத்தை மகள் தான் இருவரும் இன்னும் சில மாதங்களில் கணவன் மனைவியாக போகிறவர்கள் என்றாலும் கூட இன்னும் பவித்ராவின் உதடுகளைக் கூட சத்யன் தொட்டதில்லை... எப்போதாவது காதல் கரையை கடக்கும் போது கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்வதோடு சரி....

துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு காதலனின் முதுகை பள்ளமாக்கிய படி அணைத்து அவன் பிடரியில் முத்தமிட்டுக்கொண்டு... முன்புறம் கையைவிட்டு அவன் பேன்ட் ஜிப்பை வருடியபடி செல்லும் சென்னை காதலை கண்டு மனம் வெறுத்துப் போன சத்யன் அன்று எடுத்த முடிவுதான்....

தன் காதலியை திருமணத்திற்கு பிறகுதான் உதட்டில் கூட முத்தமிடுவது என்று.... திருமணத்திற்கு பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு இருவரும் புத்தம்புது மலர்களாய் இணையவேண்டும் என்ற கொள்கையுடையவன்..... ஒரு பெண்ணின் உடல்கூறுகள் எப்படியிருக்கும் என்று முழுமையாக அறிந்துகொள்ளாதவன்.... சுத்தமான அக்மார்க் கன்னிப் பையன் சத்யன்....

சத்யன் எப்போதுமே ஒழுக்கக்கேட்டை அனுமதிக்க மாட்டான்.... அவனது நேர்மை தான் இவ்வளவு சீக்கிரத்தில் பதவி உயர வைத்தது..... இப்போது கூட துணை மேலாளர் பதிவியிலிருந்து நேரடியாக கோட்ட மேலாளராக பதவிக்கு சிபாரிசில் இருப்பவர்களில் முதலில் இருப்பவன் சத்யன்..... ஆனால் அதற்கு இடைஞ்சலாக இவன் பிராஞ்ச்சில் புதிதாய் ஒரு சிக்கல் முளைத்திருந்தது...

பவித்ராவை விட்டுவிட்டு எழுந்தவன்... “ வா பவி நைட்டுக்கு சாப்பிட ஏதாவது செய்யலாம்” என்று அழைத்தபடி கிச்சனுக்குள் நுழைந்தான்

அவனைத் தொடர்ந்து சென்ற பவித்ரா “ இன்னைக்கு நைட் எங்கயோ வெளியே போகனும்னு போன்ல சொன்னீங்களே மாமா? எங்க போறீங்க?” என்று கேட்டபடி கோதுமை மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் தெளித்து பிசைந்தபடி டைனிங் டேபிளில் அமர....

காய்கறிகளை கழுவி எடுத்துக்கொண்டு கத்தியுடன் வந்து பவித்ராவுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்த சத்யன்.... “ அதான் பவி அன்னிக்கு உன்கிட்ட சொன்னேன்ல? ஆறு மாசத்துக்கு முன்னாடி புத்தம்புது எம் ஆர் எப் டயர்கள் ஏற்றி வந்த லாரி இரண்டு எறிஞ்சு போச்சுன்னு.... லாரியும் புதுசு... ஏற்றிவந்த டயர்களும் ரொம்ப மதிப்புள்ளது... எல்லாமே சாம்பலா போச்சு... நாங்க அதுக்கு இன்சூரன்ஸ் கூட க்ளைம் பண்ணி கொடுத்துட்டோம்... ஆனா அந்த லாரிகள் எறிஞ்சதுல ஏகப்பட்ட சந்தேகங்கள்... ஹெட் ஆபிசில் கேள்வி மே கேள்வி கேட்டு மண்டைய குடையுறாங்க...” சத்யன் காய் வெட்டியபடி கவலையாக சொல்ல...

“ ஏன் மாமா சந்தேகம்? சேதத்துக்கு க்ளைம் பண்ணி குடுக்க வேண்டியது தானே இன்சூரன்ஸ் கம்பெனியோட வேலையே?” என்று சந்தேகம் கேட்டவளை ஏறிட்ட சத்யன்...

“ கடமைதான் பவி ... ஆனா அது நியாயமா இருக்கனும்.... ஹெட் ஆபிஸ் சந்தேகத்துக்கு காரணம் போன வாரம் ஒரு லாரி மறுபடியும் எறிஞ்சு போச்சு.... அதனாலதான் சந்தேகம் அதிகமாகுது” என்ற சத்யனை பவித்ரா இன்னும் புரியாத குழப்பத்துடனேயே பார்க்க...

“ பவி ஒரு புது கன்டெய்னர் லாரியோட இன்சூரன்ஸ் வேல்யூ எத்தனை லட்சங்கள் தெரியுமா? அதே போல அந்த லாரியில் வர்ற டயர்களோட மதிப்பு எவ்வளவு தெரியுமா? இரண்டும் சேர்த்து கிட்டத்தட்ட அரை கோடியைத் தாண்டுது... லாரி ஓனரும் டயர்களை வாங்கும் நிறுவனமும் ஒன்று அல்லது ரெண்டு தவனை மட்டுமே இன்சூரன்ஸ் கட்டியிருக்கும் நிலையில் அதாவது இதனால நம்ம இன்சூரன்ஸ் கம்பெனிக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா?” என்று சத்யன் ஓரளவுக்கு புரியும்படி எடுத்து சொன்னான்.... 

“ ம்ம் இப்ப புரியுது மாமா.... உங்க சந்தேகம் எல்லாம் லாரி ஓனர்கள்.. அல்லது டயர் நிறுவனம் இவங்கல்ல யாரோ ப்ளான் பண்ணி லாரிகளை எரித்து இன்சூரன்ஸ் க்ளைம் வாங்குறாங்க என்பது தான்.... ஆனாலும் நாம முழு தொகையும் இன்சூரன்ஸா குடுக்குறதில்லையே? அப்படிப்பார்த்தா லாரி ஓனருக்கும் டயர் நிறுவனத்துக்கும் கூட பயங்கர நஷ்டம் வரத் தானே செய்யும்?” என்று மறுபடியும் சந்தேகமாக கேட்டவளை சிரிப்புடன் ஏறிட்ட சத்யன்...

“ நீ சொல்றது சரிதான் பவி.... ஆனா நஷ்டம் வராம அவங்க எப்படி செய்றாங்கன்னு தான் எங்களுக்கும் புரியலை... அதைத்தான் கண்டுபிடிக்கனும்” என்றான்

அவனை கலவரமாகப் பார்த்த பவித்ரா “ இதுல நாம என்ன பண்ண முடியும்? போலீஸ்ல அவங்க கம்ப்ளைண்ட் பண்ணி எப் ஐ ஆர் வாங்கி நமக்கு அனுப்பிடுறாங்க... உடனே நாம இன்சூரன்ஸ் க்ளைம் பண்ற வேலையைப் பார்க்கிறோம்... இதுல ஏதாவது சதி இருந்தா அதை கண்டு பிடிக்க வேண்டியது போலீஸ் தானே.... நாம இல்லையே?” என்று கேட்டாள்...

“ ஆனா நஷ்டம் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்குத் தானே பவி.... போலீஸ் மேலேயும் தப்பு சொல்ல முடியாது அவங்க விசாரிச்ச வரைக்கும் சம்பவம் நடந்தது தற்செயலான விபத்துதான்.... ஒரு கன்டெய்னர் எரிஞ்சது பக்கத்துல போன வண்டிலேருந்து வந்து விழுந்த அனையாத சிகரெட் துண்டால... இன்னெரு கன்டெய்னர் எரிஞ்சது லாரிலயே ஏதோவொரு பார்ட்ஸ் உராய்ஞ்சதாலே வந்த நெருப்பு பொரி பட்டு... இப்போ எரிஞ்ச கன்டெய்னர் மின்சார கம்பியில் உராய்ஞ்ததால் என்று போலீஸ் ரிப்போர்ட் சொல்லுது.... ஆனா சில வருஷங்களுக்கு முன்னாடி இதே போல தான் சில வண்டி எரிஞ்சிருக்கு... அதெப்படி மறுபடியும் மறுபடியும் அதே மாதிரி அப்படின்னு தான் ஹெட் ஆபிஸ்சோட சந்தேகம்... அதுக்குத்தான் நான் ப்ரைவேட்டா க்ரைம் பிராஞ்ச்ல கம்ப்ளைண்ட் பண்ணி ரகசியமா கண்டுபிடிக்கப் போறோம்” என்று சத்யன் முடிக்க.....

“ அய்யய்யோ நீ ஏன் மாமா போகனும்? அது போலீஸோட வேலை ? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு மாமா? ப்ளீஸ் போகாதேயேன்” என்று அவன் கையைப்பிடித்துக் கொண்டு பதட்டத்துடன் பவித்ரா கெஞ்சினாள்

காய் வெட்டுவதை விட்டுவிட்டு எழுந்து அவள் பின்புறமாக சென்று அவள் தலையை தன் நெஞ்சோடு அணைத்த சத்யன் “ நீ பயப்படுற அளவுக்கு இதுல ஒன்னுமேயில்லடா பவி... இன்னைக்கு மூன்று கன்டெய்னர் பாண்டிச்சேரியில் இருந்து டயர்களை ஏத்திக்கிட்டு சென்னை வந்து ஹைதராபாத் போகுது கொஞ்ச தூரம் வரை அந்த வண்டிகளை பின் தொடர்ந்து போய் பார்க்கப் போறாங்க.... ஒரு வாரமா ரகசியமா பின் தொடர்ந்து போய் செக்ப் பண்றாங்க.. எதுவுமே ஆகலை... கரெக்டா லோடு போய் சேர்ந்துடுது.... இன்னைக்கும் தொடர்ந்து போகப் போறாங்க... சரி நானும் சனி ஞாயிறு ரெண்டு நாள் லீவு தானே .. அதான் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம்னு க்ரைம் பிராஞ்ச் போலீஸ் கூட போகப் போறேன்..” அவள் பயத்தைப் போக்குகிறேன் என்று இன்னும் தெளிவாக சொல்லி பயத்தை அதிகப்படுத்தினான்....

தன் கழுத்தை வளைத்திருந்த அவன் கைகளை எடுத்து தன் கன்னங்களில் வைத்துக்கொண்ட பவித்ரா “ வேண்டாம் மாமா ? எனக்கென்னவோ இது சரியாப் படலை” என்று கூற...

அவளின் கண்ணீர் துளி சத்யனின் கைகளை நனைக்கவும் பதறிப்போன சத்யன் அவளை தூக்கி நிறுத்தி “ ஏய் உன் மாமா மேல அவ்வளவு தான் நம்பிக்கையா? நான் என்ன சின்ன குழந்தையாடி...? என்னைப் பத்திதான் உனக்கு தெரியுமே? இதுபோன்ற விஷயத்தில் எனக்கு ஆர்வம் அதிகம்னு... இந்த வேலைக்கு வரலேன்னா நிச்சயம் போலீஸ் வேலைக்கு தான் போயிருப்பேன் ” என்றவன் அவள் முகத்தில் இன்னும் கலவரம் மறையாததை கண்டு இறுக்கமாக அவளை அணைத்து “ பவி எனக்கும் என் உயிர் வெல்லம் தான்... ஏன்னா இந்த பவித்ரா எறும்பு மொய்க்கனுமே? அதனால இப்போ எப்படி போறேனோ அதே போல உன்கிட்ட மறுபடியும் வருவேன் பவி....” என்று உறுதி கூறினான் தனது உறுதி பொய்த்துப் போகும் என்று அறியாமலேயே....

ஒரு வழியாக சமாதானம் ஆனாலும் பவித்ராவின் நெஞ்சு திடுக் திடுக் என்று அடித்துக்கொள்ளத் தான் செய்தது.....


இருவருமாக சேர்ந்து சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள குருமாவும் செய்தனர்.... எல்லாவற்றையும் எடுத்து வந்து டேபிளில் வைத்து விட்டு “ கொஞ்சம் வெயிட் பண்ணு பவி நான் போய் குளிச்சிட்டு வர்றேன்” என்றவன் தனது படுக்கையறைக்குப் போய் ஒரு டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்...

பவித்ரா அவன் குளித்துவிட்டு வருவதற்குள் ஹாலில் களைந்து கிடந்தவைகளை ஒழுங்குபடுத்தினாள்.... இது அவள் வழக்கமாக செய்யும் ஒன்று... வாரத்தில் இரண்டு நாட்கள் வந்து சத்யனுடன் சேர்ந்து எதையாவது பேசி அரட்டையடித்த வாறு சத்யனின் உடைகளை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்து அயர்ன் செய்து அடுக்கிவிட்டு.... வீட்டில் இறைந்து கிடப்பவைகளை ஒழுங்குபடுத்தி விட்டு போவாள்....

குளித்துவிட்டு சத்யன் வந்ததும் இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.... சத்யனின் மார்பில் வழிந்த நீர் துளிகள் பவித்ராவை என்னவோ செய்ய நிமிராமல் தலையை குனிந்தபடியே சாப்பிட்டாள்...

அவளின் அசைவுகள் ஒவ்வொன்றையும் மனதில் பதியவைத்திருக்கும் சத்யன் மெல்ல அவள் பக்கம் சரிந்து “ பவி இன்னைக்கு என்னான்னு தெரியலை பவி..... உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கனும்.... அப்புறம் உன்னை ஏதாவது பண்ணனும் போல ரொம்ப ஆர்வமா இருக்குடி.... நம்மளோட கொள்கையை கொஞ்சம் தளர்த்திக்கலாமா பவி?” என்று தாபத்துடன் சத்யன் ரகசியமாக கேட்க...

ஏற்கனவே பயத்துடன் உள்ளுக்குள் பதறிக்கொண்டிருந்தவள் இவனின் இந்த புதிய முரண்பட்ட பேச்சில் இன்னும் அதிகமாக நடுங்கி “ என்ன மாமா என்னென்னவோ பேசுற?.... நீ எப்பவும் இந்த மாதிரி பேசமாட்டியே? ஏதோ நடக்கப்போவது மாதிரி எனக்கு மனசு படபடன்னுது மாமா ” என்று கண்ணீர் முட்டிக்கொண்டு வரும் கண்களால் அவனை கலவரத்துடன்ப் பார்த்து கேட்டாள்....

“ அய்யோ என்னடி இது இன்னிக்கு வந்ததிலேருந்து பொசுக்கு பொசுக்குன்னு அழுவுற? தஞ்சாவூர்காரியா நல்லா தில்லோட இருக்கனும்டி” என்று சத்யன் சொல்லிகொண்டிருக்கும்போது ஹாலில் சார்ஜ் போட்டிருந்த அவன் மொபைல் அடிக்க.... சத்யன் சாப்பிடுவதை விட்டுவிட்டு எழுந்து போய் மொபைலை எடுத்தான்...

மொபைலில் முத்துகுமார் S I என்ற பெயரைப் பார்த்துவிட்டு உடனே ஆன் செய்தவன் “ சொல்லுங்க சார் என்ன தகவல்?” என்று கேட்க...

“ நான் முத்துகுமார் பேசுறேன் சத்யன்... மூனு லாரிகளும் பாண்டியிலிருந்து கிளம்பி மூன்று மணிநேரம் ஆகுது.... நாம சென்னை பைப்பாஸ் நுழைவுகிட்ட தயாரா நின்னா அவங்களை தொடர வசதியா இருக்கும்... நீங்க நேரா ஸ்டேஷன் வந்துடுங்க சில விஷயங்களை பேசிட்டு புறப்படலாம்” என்று போலீஸ் எஸ் ஐ சொல்ல...

சத்யனை பரபரப்பு தொற்றிக்கொண்டது “ ஓகே சார் நான் இன்னும் அரை மணி நேரத்தில் ஸ்டேஷன்ல இருக்கேன்” என்று கூறிவிட்டு மொபைலை கட் செய்தான்...

சத்யன் மீண்டும் டேபிளுக்கு வந்தபோது பவித்ரா சாப்பிடாமல் கைகழுவிவிட்டிருந்தாள்....


“ ஏய் என்னாச்சு பவி சாப்பிடலையா?” என்று சத்யன் அக்கரையோடு கேட்க.... “ இல்ல மாமா பசியில்லை நீ சாப்பிடு” என்று அவனுக்கு இன்னும் இரண்டு சப்பாத்தியை எடுத்து தட்டில்வைத்தாள் ..

சத்யனுக்குள் இருந்த பரபரப்பில் மேலும் எதையும் கேட்காமல் அவசரமாக விழுங்கிவிட்டு எழுந்தான்...

உடை மாற்றிக்கொண்டு வந்த சத்யனை பின்புறமாக வந்து அணைத்த பவித்ரா “ மாமா ஜாக்கிரதையா போய்ட்டு வா... எதுவாயிருந்தாலும் எனக்கு அடிக்கடி கால்ப் பண்ணு ப்ளஸ் ” என்று கெஞ்சுதாலாய் கூற...

பின்புறமாக கைவிட்டு அவளை முன்னால் இழுத்து தன் நெஞ்சோடு அணைத்த சத்யன் “ வாழ்க்கைன்னா ஒரு த்ரில் இருக்கனும் பவி.... நான் எதையும் சமாளிப்பேன்னு தைரியத்தோட இரு நான் சீக்கிரமா வந்துடுவேன்” என்று அவளை தைரியப்படுத்தினான்

பவித்ரா அசையாமல் அவனை அணைத்தபடி அப்படியே நிற்க்க... அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்ட சத்யன் “ வா உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு நான் போலீஸ் ஸ்டேஷன் போறேன்” என்றவன் அவளை கையணைப்பிலேயே அழைத்துச் சென்று பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து கதவைப் பூட்டினான்....



அவளுடன் லிப்டில் இறங்கியவன் “ மேடம் நாளைக்கு வந்து கதவைத் திறந்து எல்லாத் துணியையும் வாஷ் பண்ணி அயர்ன் பண்ணி வைங்க... அடுத்த வாரம் ஆபிஸ்க்கு போட்டுகிட்டு போக டிரஸ் இல்லை” என்று குறும்பாக கூற...

மேலும் பயந்த பவித்ரா “ அய்யய்யோ அப்போ இன்னிக்கு நைட் வரமாட்டீங்களா?” என்று அலறலாய் கேட்டாள்...

“ ஏய் ஏய் ... உடனே டென்ஷன் ஆகாத... போற வேலை எப்படியிருக்குமோ நாளை வரைக்கும் அவனுங்க பின்னாடியே சுத்துற மாதிரி இருந்தா என்னப் பண்றது அதான் அப்படி சொன்னேன்” என்று சொல்லிவிட்டு தனது பைக்கை ஸ்டார்ட் செய்ய பவித்ரா பின்னால் பக்கமாக அமர்ந்துகொண்டாள்.... இதுவும்கூட அவர்களின் கட்டுப்பாடுகளில் ஒன்றுதான்...
சத்யன பவித்ராவை அவளது ஹாஸ்டல் வாசலில் இறக்கி விட்டு " ம்ஹும் கனவுலயாவது என்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டு நிம்மதியா தூங்கு பேபி" என்று அவள் கன்னத்தை தட்டி குறும்புடன் கூறிவிட்டு கிளம்பினான்...
கண்ணீர் கண்களை மறைத்தாலும் அந்த கண்ணீரையும் தாண்டி சத்யனின் உருவத்தை கண் மறையும் மட்டும் பார்த்துவிட்டு ஹாஸ்டல் உள்ளே போனாள் பவித்ரா.....





" ஒவ்வொருவனுக்கும் அவனுடைய பகைவன்...
" அவனுக்குள்ளேயே இருக்கிறான்...

" அதிகம் பேசுகிறவனுக்கு பகைவன்....
" அவன் நாக்கில் இருக்கிறான்

“ அதிகம் கோபிப்பவனுக்கு பகைவன்...
“ அவன் பிடிவாதத்தில் இருக்கிறான்!

" சோம்பேறிக்கான பகைவன்..
" அவனுள் இருக்கும் இயலாமை!

“ அதிகம் யோசிப்பவனுக்கு பகைவன்...
“ அவன் குழப்பத்தில் இருக்கிறான்!

“ ஒரு வீரனுக்கான பகைவன்...
“ அவனுள் இருக்கும் அசட்டுத் துணிச்சல் தான்!


1 comment:

  1. Hi I'm maheshwaran i like all of Mansi sathiyan stores I need pdf files of the story how can I get that

    ReplyDelete