Monday, December 21, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 6

ஆனால் இவரைப் போல் இல்லை இவர் மகள் மான்சி..... கிருஷ்ணன் இறக்கும்போது வீரம்மாளின் வயிற்றில் ஒன்பது மாத குழந்தை... கிருஷணனின் பதினாறாம் நாள் சடங்கு அன்று இந்த பூமியில் ஜனித்தவள் அப்படியே அச்சு பிசகாமல் கிருஷணனின் குணநலன்களோடு பிறந்திருந்தாள்... அதே அலட்சியம் அதே வீரமான பேச்சு... எதையும் சுலபமாக சமாளிக்கும் தைரியம்... என எல்லாமே கிருஷ்ணத்தேவன் தான் அந்த குடும்பத்துக்கு பெண் வாரிசாக பிறந்திருக்கிறான் என்று ஊர் சொல்லுபடி வளர்ந்தாள்

சத்யன் தஞ்சாவூரில் கல்லூரியில் படிக்கும் வரை மான்சியின் கண்பார்வையை விட்டு விலகாதவாறு பார்த்துக்கொண்டாள்.... அவளும் தஞ்சாவூரில் பிரபலமான பள்ளியில் படித்ததால் சத்யனை கண்கானிக்க வசதியாக இருந்தது....



சத்யன் கல்லூரிப்படிப்பு முடிக்க... இவள் பள்ளிப்படிப்பை முடித்தாள்... மாமன் நல்ல படிப்பாளி என்றதும் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு படித்து ப்ளஸ்டூவில் நல்ல மார்க் வாங்கியிருந்தாள்....

படிப்பு முடிந்து ஹாஸ்டலை காலி செய்து தாராசுரம் வந்தவள் கமலக்கண்ணனிடம் கேட்ட முதல் கேள்வி “ கமலா யாராவது பெரிய ரவுடியை தெரியுமா?” என்றுதான்...

ரவுடி என்ற வார்த்தைக்கே பயந்து போன கமலக்கண்ணன் “ அய்யய்யோ என்னப் பாப்பா யார்கூடயாவது பிரச்சனையா?” என்று பயத்துடன் கேட்க...

“ ஏன் இவ்வளவு பதட்டப்படுற கமலா? கூல்டவுன் கமலா.... எல்லாம் என் அத்தை மகன் ரத்தினம் அந்த வளந்து கெட்டவன் சத்யனை கடத்தத் தான்” என்று அலட்சியமாக சொன்னவளை அதிசயமாக பார்த்தவர்

“ ஏன் பாப்பா கடத்தனும்” என்று அப்பாவியாக கேட்டார்...

“ பின்ன நீயா போய் அவனை எனக்கு கல்யாணம் பண்ணித்தரச் சொல்லி கேட்கமாட்ட? அதான் ஆளை வச்சு கடத்தி ஏதாவது கோயிலுக்கு கூட்டிட்டுப் போய் அவன் கழுத்துல கத்தி வச்சு மிரட்டி என் கழுத்துல தாலி கட்ட வைக்கலாம்னு ப்ளான் போட்டிருக்கேன்” என்று அவள் தெனாவெட்டாக கூறியது கேட்டு கமலக்கண்ணனுக்கு உள்ளுக்குள் இருந்து கிளம்பிய ரெண்டு உருண்டைகள் வந்து தொண்டையில் அடைத்துக்கொண்டது...

கணவனின் பரிதாபமான முகத்தைப் பார்த்துவிட்டு “ ஏன்டி பொட்டச்சி மாதிரியா பேசுற நீ? என்னடி வயசாச்சு உனக்கு? இதுக்குள்ள கல்யாணம் கேட்குதா உனக்கு? ஒழுங்கா மேல படிக்கிற வழியப் பாரு?” என்று வீரம்மாள் ரொம்ப வீரமாகத்தான் மகளை அதட்டுவாள் ஆனால் அப்புறம்?....................

“ மேலதான படிக்கனும் உன் புருஷன மாடில எனக்கு ரூம் கட்டித்தர சொல்லு மேலபோய் படிக்கிறேன்” என்று நக்கலாக கூறிவிட்டு “ ஏன் வீரம்மா நீ மட்டும் பதினைஞ்சு வயசுல எங்கப்பனை கல்யாணம் பண்ணி பதினாறு வயசுல புள்ளை பெத்துக்குவ? நான் மட்டும் மே..................................ல மே.........ல படிக்கனுமா? என்னடி ஆத்தா இது அநியாயமா இருக்கு?” என்று தனது தாடையில் கைவைத்துக்கொண்டு தன் மகளைப் பார்த்து வாயை கையால் பொத்திக்கொண்டு உள்ளே போய்விடுவாள் வீரம்மாள்...

அன்று மாலை நடந்த சம்பவம்தான் மான்சியின் டாக்டர் படிப்புக்கே வித்திட்டது எனலாம்.... மாலையில் மகளை காணோமே என்று சமையலறை பக்கமாக தேடிப் போன கமலக்கண்ணனின் கண்ணில் பட்டது அந்த நிகழ்ச்சி....

வீரம்மாள் மூக்கை சிந்தியபடி வெங்காயம் அரிந்து கொண்டிருக்க... சமையலறை மேடையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த மான்சியின் கையில் ஒரு பெரிய கத்தி... எதிரே ஒரு பெரிய பூசனிக்காய் “ டேய் மாமா செல்வம் நீ மட்டும் என் கையில கெடச்ச இதேபோல ஒரே போடுடா உன்னை” என்றவள் ஆவேசமாக ஓங்கிய கத்தியை பூசனிக்காயில் இறக்க ... இரண்டாய் பிளந்தது பூசனிக்காய்....

வைரமுத்து சொன்ன அதே உருண்டைகள் இரண்டாக மறுபடியும் வந்து கமலக்கண்ணனின் தொண்டையில் அடைக்க அலறிப்போய் ஓடினார் தனது பள்ளித் தோழனான தற்போதைய MLA வின் வீட்டுக்கு...

அவரைப் பிடித்து இவரைப் பிடித்து ... யார் யாரையோ காலிலோ விழுந்து மூன்று ஏக்கர் நிலத்தை விற்று மகளை சென்னை மருத்துவக்கல்லூரியில் கொண்டு வந்து சேர்த்தார்....

சென்னைக்கு ரயிலேறும் போது “ டேய் அப்பா நீ எதுக்காக என்னை நாடுகடத்துறேன்னு தெரியும்லே.... என் மாமனை மட்டும் என்கிட்ட இருந்து பிரிக்க நெனைச்ச மவனே உனக்கு சங்குதான்டி” என்று இவள் மிரட்டியதில் அந்த கம்பார்ட்மெண்ட்டில் இவளைப் பார்த்து “ சூப்பர் பிகரு நம்மகூட மெட்ராஸ் வருதுடா” என்று ரகசியமா கூறிய மூன்று இளவட்டங்கள் வயிறு கலங்கி மேல் பெர்த்தில் ஏறி படுத்து தலைவரை மூடிக்கொண்டனர்

சத்யனும் சென்னையில் தான் இருக்கிறான் ... இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கிறான் என்று உறவினர் மூலமாக கேள்விப்பட்டதும் வேலியில் போற ஓனானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாக தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார் கமலக்கண்ணன்

நிறைய யோசித்து அடுத்ததாக கமலக்கண்ணனும் வீரம்மாளும் போட்ட மாஸ்டர் ப்ளான் என்னன்னா .....

மகளுக்கு போன் செய்தார் கமலக்கண்ணன் குரலில் பெரும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ பாப்பா நல்லாருக்கியாம்மா?” என்று ஆரம்பித்தார்...

“ ஓய் கமலா என்னை பாப்பான்னு கூப்பிடாதேன்னு எத்தனை வாட்டி சொல்றது? என்னத்துக்கு மான்சின்னு பேரு வச்ச?” என்று மகள் தொடங்கி வைத்தாள்...

“ சரி பாப்பா இனிமேல் மான்சின்னே கூப்பிடுறேன் பாப்பா” என்று தடுமாறினார் கமலக்கண்ணன்...

“ உன்னை திருத்தவே முடியாதுடா அப்பா.... எல்லாம் விதி கமலா விதி..... உன்னை எனக்கு அப்பானா ஏற்பாடு பண்ணான் பாரு அந்த ஆண்டவன் அவனைச் சொல்லனும்.... நீயெல்லாம் என்னைப் பெத்ததுக்குப் பதிலா உன் பொண்டாட்டி வீரம்மா கூட செகன்ட் ஷோ சினிமாவுக்கு போயிருக்கலாம் கமலா? நானும் எவனாவது தாதாவுக்கு போய் மகளா பொறந்திருப்பேன் ” என்று கோபமாய் பேசிய மகளின் குரல் கேட்டு சொல்லவந்தது மறந்து போனது கமலக்கண்ணனுக்கு...

“ சரி சரி ஏதோ சொல்ல வந்தியே என்னான்னு சீக்கிரமா சொல்லு? நான் க்ளாஸுக்கு போகனும்” என்று நானும் படிப்பேன் என்று இவள் மறைமுகமாக சொன்ன தகவலில் பூரித்துப் போனார் கமலக்கண்ணன்...

“ அதில்ல பாப்பா.... உன் அத்த மவன் சத்யன் மேல் படிப்பு படிச்சிகிட்டே வேலை செய்ய வெளிநாடு போயிட்டானாம் பாப்பா.... திரும்பி வர ஆறேழு வருஷமாகுமாம்.... இப்பதான் எனக்கு தகவல் தெரிஞ்சது... அதான் உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன் பாப்பா ” என்று பொய்யை மகளுக்காக உண்மை முலாம் பூசினார்....

மான்சியிடமிருந்து எந்த பதிலும் இல்லை சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ கமலா நீ சொல்றது நெசம் தானே?” என்று இறுகிய குரலில் கேட்டாள்...

அந்த குரல் கமலக்கண்ணனின் வயிற்றில் புளியை கரைத்தாலும் ... மனைவியை ஆதரவாகப் பற்றிக்கொண்டு செத்துப்போன தனது தாயாரிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு “ எங்காத்தா மருதாயி மேல சத்தியமா சொல்றேன் பாப்பா நான் சொல்றதெல்லாம் உண்மை” என்று ரிசீவரில் அடித்து சத்தியம் செய்தார் தைரியமாக...

மறுபடியும் மான்சியிடம் மவுனம்...பிறகு “ இங்கபாரு கமலா நீ பொய் சொன்னேன்னு தெரிஞ்சது அப்புறம் உன் தங்கச்சி தாலி மட்டுமில்லடி உன் பொண்டாட்டி வீரம்மாளோட தாலியும் என் கையிலதான் ஜாக்கிரதை ” என்று சொல்லிவிடு்டு போனை வைத்தாள்.... 




அன்றிலிருந்து தான் சொன்ன பொய்யை காப்பாற்றுமாறு தனது குலதெய்வம் வீரமாகாளிக்கு இருபத்தினாலு முறை முடிகாணிக்கை செலுத்தியுள்ளார்.... பழனிக்கு பாதயாத்திரை போயே பாதம் தேய்ந்து குள்ளமாகிவிட்டார்.... ஊரில் ஒரு தெய்வம் விடாமல் நேர்த்திக்கடன் செலுத்தினார்... அவரால் முடியாத பட்சத்தில் மனைவி வீரம்மாள் நாக்கில் எட்டடி நீள வேல் குத்தும் வைபவமும் உண்டு...

ஒருவழியாக எல்லா தெய்வமும் கமலக்கண்ணனின் பரிதாப நிலைகண்டு மனமிரங்கி இந்த நிமிடம் வரை அவர் கூறிய பொய்யையும் அவர் பொண்டாட்டி வீரம்மாளின் தாலியையும் காப்பாற்றி வந்தனர்...

இப்படிப்பட்ட மான்சியின் ஹாஸ்டல் அறைத் தோழியாக இதுவரை இருபத்துமூன்று பெண்கள் தங்கி ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்காமல் ஓடிவிடுவார்கள்... இந்த அமுல்பேபி மோகனா மட்டுமே கிட்டத்தட்ட ஆறு மாதமாக நீடிக்கிறாள்....

மோகனா நீடிக்க காரணம் என்னவென்றால் தினமும் ஒருமுறை “ மான்சி நீ ரொம்ப அழகுடி” அல்லது “ உன்னை கட்டிக்கப் போற மாமா ரொம்ப குடுத்து வச்சவன்டி மான்சி” இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை சொல்லிவிட்டால் மோகனாவுக்கு அன்றைய பொழுது நன்றாக விடிந்தது என்று அர்த்தம்.... இந்த இரண்டையும் சேர்த்து சொன்னால் அன்றைக்கு நல்ல உணவு விடுதியில் மோகனாவுக்கு ட்ரீட் வைப்பாள் மான்சி.... அதிகமாக பசியெடுக்கும் நாட்களில் இரண்டையும் மறக்காமல் சொல்லிவிடுவாள் மோகனா....

அதேபோல் மோகனாவுடன் செல்லும்போது தன்னுடைய அழகு பலமடங்காக பெருகியிருப்பது போல தெரியும் என்ற இன்னொரு காரணமும் உண்டு என்பதால் மான்சி மோகனாவை இவ்வளவு நாட்களாக தன்னுடன் தக்கவைத்துக் கொண்டிருந்தாள்

“ ஏன்ட மான்சி மாமா மாமான்னு இப்படி அடிச்சிக்கிறயே? உன் மாமா வேற யாரையாவது காதலிச்சோ கல்யாணமோ பண்ணிகிட்டு இருந்திருந்தா என்னடி பண்ணுவ?” என்று ஒரு முறை மோகனா கேட்டுவிட்டு மான்சி சொன்ன பதிலில் மோகனாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் வந்துவிட்டது

“ ஒரே வெட்டு அவளையும் வெட்டுவேன் என் மாமானையும் வெட்டுவேன்.... எப்படியிருந்தாலும் ரெண்டு மூனு தலை உருண்டுதான்டி எஎன் கல்யாணமே நடக்கும்” இதுதான் மான்சி சொன்ன பதில்

இப்படிப்பட்ட உயிர்த்தோழி (?) மோகனாவுடன் இன்று என்ன சண்டை என்றால்...................................?

“ ஏன்டி பிசாசு போயும் போயும் உன் ஜட்டியை காணோம்னு என் பெட்டியில தேடுற?” என்று கொதிப்புடன் கேட்டாள் மோகனா...

“ எல்லா இடமும் தேடினேன் இல்லடி ... அதான் உன் பெட்டியில பார்த்தேன்.... அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு உன் சைஸ் டபுள் ட்ரிபிள் எக்ஸல்னு... அதான் நீ எடுத்திருக்க மாட்டேன்னு கன்பார்ம் பண்ணிக்கிட்டேன்” என்று மான்சி இளித்தபடி கூற...

ரொம்பவே கொதித்துப் போனாள் மோகனா “ ஏன்டி அதென்ன டபுள் ட்ரிபிள் எக்ஸல்... என் சைஸ் ஒரு டிரிபிள் எக்ஸல் தான்.. டபுளெல்லாம் கிடையாது” என்றாள்...

மான்சி மோகனாவின் பின்னால் போய் அவளின் பின்புறத்தை கையால் அளவெடுத்து “ ம்ஹூம் என்னால நம்பமுடியலையேடி.... உன் பெட்டக்ஸ் இன்னும் கொஞ்சம் பெரிசாச்சுன்னு வை உன் சைஸ்ல ஜட்டி வாங்குறதைவிட துணியெடுத்து டெய்லர்கிட்ட குடுத்து பட்டாபட்டி டவுசர் தைச்சுக்கடி” என்று சிரியாமல் கேலி செய்ய... மோகனா அழுதுவிடுவாள் போல் இருந்தாள்

“ சரி சரி எமோஷனை அடக்குடி” என்று தோளைத் தட்டியவள் “ ப்ளீஸ்டி அந்த ஜட்டி எங்கன்னு தேடுடி... நாளைக்கு மெண்டல் ஆஸ்பிட்டல் கேம்புக்கு போறதுக்காக புதுசா வாங்கிட்டு வந்தேன்டி... லைட் ரோஸ்ல புளுக்கலர் பூபோட்ட ஜட்டி மோகி... தேடுடி ப்ளீஸ்” என்று தோழியிடம் கெஞ்சியபடி தனது பெட்டியை கவிழ்த்தாள் மான்சி...

“ ஏன்டி போறது மெண்டல் ஆஸ்பிட்டல்க்கு........ இது ஜட்டிகூட புதுசா இருக்கனுமா?” என்று மான்சியை கேலி செய்தவாறு மோகனாவும் தேடினாள்..

“ ஆமா பின்னா ஏதாவது பைத்தியம் வந்து சடார்னு நம்ம பேன்ட்டை அவுத்து விட்டுட்டா உள்ள போட்டிருக்க ஜட்டியாவது கொஞ்சம் க்ளாமரா இருக்கனுமே அதனாலதான்” என்றவள் மோகனாவின் எதிரே வந்து திரும்பி தனது பின்புறத்தை ஆட்டி கான்பித்து “ அதெல்லாம் இதுபோல சிக்குன்னு வச்சிருக்கவங்களுக்கு மட்டும் தான் நீ வீனா கற்பனையில மிதக்காதே?” என்று கூற...

“ அடிப்போடி இவளே” என்று சிரித்தபடி மான்சியின் பின்புறத்தில் பட்டென்று ஒர அடி வைத்தாள் மோகனா...

மான்சி தனது பெட்டியை குடைந்துகொண்டிருக்க... மோகனா மான்சியின் கைப்பையில் பார்த்தாள்.... அதில் பில் பிரிக்காமல் கவரோடு இருந்தது மான்சி தேடிய ஜட்டி ...

“ அடிப்பாவி பிசாசே... இதோ இருக்கு பாருடி” என்று எடுத்து மான்சியின் முகத்தில் வீசியடித்தாள் மோகனா...


“ சரி கோபப்படாதே மோகி.... உன் மேல நான் சநதேகப்பட்டாலும் உன் சுடிதாரை அவுத்து காட்டுடின்னு சொல்லலைப் பார்த்தியா? ஏன்னா நான் தஞ்சாவூர் ஜில்லாடி நாங்கல்லாம் நல்லவங்க” என்று தனது தரப்பை அழகாக பூசி மொழுகியவளை பார்த்து மோகனாவுக்கு சிரிப்புதான் வந்தது....

அதன்பின் இருவரும் கேம்ப்புக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டு தயாராகி கீழே வந்தனர்.... கல்லூரி வளாகத்தில் இருந்த வேனில் எல்லோரும் ஏறி அமர்ந்தனர்... மான்சியின் பார்வை வேனில் இருந்தவர்களை அளவெடுத்தது ..

“ ஏன்டி மோகி ஒருத்தன் கூட பார்க்குற மாதிரி இல்லையேடி? எல்லாம் இத்துப்போன பீஸா இருக்கானுங்களே” என்று மோகனாவின் காதில் கிசுகிசுக்க... அந்த கிசுகிசுப்பு வேன் முழுவதும் கேட்டது.....

மோகனா எதுவும் பேசவில்லை ஒரு கையால் வாயையும் மறுகையால் எக்கி தனது பின்புறத்தை உயர்த்தி அங்கேயும் வைத்து மூடி ‘ பொத்திக்கிட்டு வாடி’ என்று சிம்பாலிக்காக சொல்ல...

“ ஹிஹிஹிஹி அங்க ஆல்ரெடி ஜட்டி ... ஜட்டிக்கு மேலே ஜீன்ஸும் போட்டு மூடியாச்சு... இதை வேனும்னா உனக்காக பொத்திக்கிறேன் ” என்றவள் தனது வாயை கையால் பொத்திக்கொள்ள... தனது குறும்புக்கார தோழியை அணைத்துக்கொண்டாள் மோகனா...

அவர்களின் வேன் கீழ்பாக்கம் மென்டல் ஆஸ்பிட்டல் வந்தடையும் போது காலை மணி எட்டு .... அவரவருக்கு ஒதுக்கிய அறைகளில் தங்கள் உடைமைகளை வைத்து பூட்டிவிட்டு வந்தவுடனேயே ஒரு பெரிய வார்டில் தனித்தனி தடுப்புகள் வைத்து மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பித்தது....

ஒரு மேசையின் இருபுறமும் மோகனாவும் மான்சியும் எதிரெதிராக அமர்ந்து ட்ரீட்மெண்ட்டை ஆரம்பித்தனர்.... ஒரு வார்டன் ஒரு ஒரு மனநோயாளியாக அழைத்து வந்து நிறுத்த அவர்களுக்கு ஜென்ரல் செக்கப் நடந்தது....காய்ச்சல் வயிற்று வலி என்று சொல்பவர்களை ரத்தப் பரிசோதனை கூடத்துக்கு சீட்டெழுதி கொடுத்து அனுப்பினார்கள்...

அடுத்ததாக ஒரு நபர் வந்து நிற்க .. மான்சி தலையை நிமிராமலேயே “ உன் பேரு என்னப்பா?” என்றாள்...

“ ஐ ஆம் சத்யமூர்த்தி... ஸன் ஆப் செல்வம் ஆதிலட்சுமி” என்ற குரல் கேட்டு வெடுக்கென்று நிமிர்ந்தவள்.... ரத்தம் உறைநிலைக்கு போக அப்படியே விதிர்த்துப் எழுந்து நின்றாள்....

மோகனா திகைப்புடன் எழுந்து மான்சியின் தோளில் தட்டி “ ஏய் என்னாச்சு மான்சி” என்று கவலையோடு கேட்க....

ஒன்றுமில்லை என்று அவளுக்கு தலையசைத்து சொன்னவள் “ இவரை பார்த்துக்கோ நான் போய் அவசரமா ஒரு போன் பண்ணிட்டு வந்துர்றேன்” என்று சத்யனைப் பார்த்தபடி விரைப்புடன் வெளியே போனாள்...

தனது செல்லை எடுத்து தனது அப்பாவின் செல்லுக்க கால் செய்துவிட்டு அவர் இணைப்பில் வரும்வரை கோபத்தை முடிந்தவரை அடக்கிக்கொண்டு நின்றாள்....

“ பாப்பா சாப்பிட்டயாடா” என்று கமலக்கண்ணனின் குரல் எதிர் முனையில் உருக..

மான்சி எடுத்த எடுப்பில் நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் “ டேய் அப்பா உன் தங்கச்சி மவன் சத்யன் எந்த நாட்டுல இருக்கான்னு சொன்ன?” என்று கேட்க...

கமலக்கண்ணனுக்கு புரிந்து போனது “ இல்ல பாப்பா.... அது வந்து.....” என்று தடுமாறி தத்தளிக்க...

கொதித்துப் போனாள் மான்சி “ அடப்பாவி கமலா உன் தங்கச்சி மகன் மெண்டல் ஆஸ்பத்திரியில நோயாளியா இருக்கான்... என்னா சொன்ன? வெளிநாடு போயிருக்கானா வெளிநாடு” என்று ஆத்திரமாய் கர்ஜித்தாள்...

தங்கையின் மகன் மனநல மருத்துவமனையில் நோயாளி என்பதை மான்சி கண்டுபிடித்து விட்டாள் என்றதுமே கமலக்கண்ணனின் நெஞ்சு துடிப்பு எகிறிப் போனது.... “ அய்யோ பாப்பா மாமனுக்கு என்னாச்சிம்மா?” என்றார் ஒன்றும் தெரியாதவர போல..

“ ஒன்னும் தெரியாத மாதிரி என்கிட்டயே கேட்கிறயா?” என்றவள் “ நீ ஒன்னுப் பண்ணு கமலா.... நான் வர்றதுக்குள்ள உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி நல்லது பொல்லது எல்லாம் ஆக்கிப் போடச்சொல்லி நல்லா சாப்பிட்டுக்கோ... அப்புறம் உன் பொண்டாட்டியோட தாலிக்கு சிறப்பு பூஜை எல்லாம் போடச்சொல்லு” என்றவள் அவர் பதிலை எதிர் பார்க்காமல் போனை கட்செய்தாள்...

ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மீண்டும் வார்டுக்குள் நுழைந்தாள் மான்சி... சத்யன் இவளுக்காக மிடுக்குடன் அமர்ந்திருந்தான்


" நான் தனியாய் இருக்கும் போது....

" அடிக்கடி வந்து உயிரை எடுக்கும்.....

" காய்ச்சல் தலைவலி எல்லாம்.....

" எங்கிருந்தாலும் உடனே வரவும்....

" என்னை கவனித்துக் கொள்ள ....

" வந்துவிட்டாள் ஒருத்தி...


ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மீண்டும் வார்டுக்குள் நுழைந்தாள் மான்சி... சத்யன் இவளுக்காக மிடுக்குடன் அமர்ந்திருந்தான்....

மான்சி தன் அத்தை மகனின் நிலையை எண்ணி வருந்தினாலும் அவனது கம்பீரத்தை ரசித்தபடி அவன் எதிரில் போய் அமர்ந்தாள்....

எதனால் இப்படி ஆனது என்ற கேள்வியுடன் அவனை உற்றுப் பார்த்தவள் “ உங்க பேரு சத்யன் சரி... சொந்த ஊர் எது?” என்று மெதுவாக அவனை துருவ ஆரம்பித்தாள்..
நிமிர்ந்து அமர்ந்து அவளை நேர்ப் பார்வை பார்த்த சத்யன் “ தஞ்சாவூர் மாவட்டம்... நன்னிலம் வட்டம்.... சேராவூரணி கிராமம்ங்க.... விவசாய குடும்பம்” என்ற தெளிவான பேச்சை கேட்டு வியந்த மான்சி...

‘ இவ்வளவு தெளிவா இருக்குறவன் ஏன் இங்கே இருக்கான்?’ என்ற யோசனையுடன் “இங்கே எதுக்காக வந்துருக்கீங்க?” என்று கேட்க...

“ ஒரு கொள்ளைக் கூட்டத்தை கண்டுபிடிக்க போலீஸ்க்கு ரொம்ப ஹெல்ப் பண்ணேன்... அவனுங்க எல்லாரையும் அரஸ்ட் பண்ணியாச்சு... ஆனா அவனுங்க மாட்டுறதுக்கு நான்தான் காரணம்னு என்னை கொலைப் பண்ண தேடுறதால் இங்கே
கொண்டு வந்து தலைமறைவா வச்சிருக்காங்க... அந்த கூட்டத்தை சேர்ந்தவங்க இன்னும் சிலர் வெளியே நடமாடிக்கிட்டு இருக்காங்க... அவங்களை கண்டுபிடிக்கற வரைக்கும் நான் இங்கேதான் இருக்கனும்னு இன்ஸ்பெக்டர் ஆப் தி போலீஸ் மிஸ்டர் முத்துகுமார் சொல்லிருக்கான்... அவன் என்னோட பெஸ்ட் ப்ரண்ட் ... அவன் வார்த்தையை தட்டக்கூடாது என்பதற்காக இங்கே இருக்கேன்”

இவனை இந்த மருத்துவமனையில் சேர்ப்பதற்காக முத்துகுமார் சத்யனுக்கு சொன்ன அதே காரணங்களையே மான்சிக்கு சொன்னான் சத்யன்....

மான்சிக்கு குழப்பமாக இருந்தது.... இவர்களையே கவனித்த மோகனாவின் பக்கம் திரும்பினாள்... அவளும் மெல்ல இவள் பக்கம் சாய்ந்து.... “ என்னடி இவன் ஜேம்ஸ்பாண்ட் ரேஞ்சுக்கு கதை சொல்றான்?” என்றாள்...

இவர்கள் குசுகுசுவென ரகசியம் பேசினாலும் அது சத்யனின் காதில் தெளிவாக விழுந்தது..... “ என்னங்க நான் சொல்றதை நம்பமுடியலையா? இன்னைக்கு மதியம் என் ப்ரண்ட் முத்துகுமார் வருவான் அவன்கிட்ட நேரடியா கேட்டு தெரிஞ்சுக்கங்க” என்று சத்யன் சொன்னதும் தோழிகள் இருவரும் அமைதியானார்கள்.........

“ சரிங்க நான் போகலாமா?” என்று சத்யன் கேட்க... மான்சி மெல்ல தலையசைத்தாள்.... சத்யன் எழுந்து அங்கிருந்து வெளியேறினான்

மான்சிக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கைகளை மேசையில் ஊன்றி தலையை அதில் கவிழ்த்தாள்... அவள் கற்பனையில் சத்யனை அப்படியொன்றும் பெரிய உத்தியோகத்தில் எக்கச்சக்க சம்பளக்காரனாக எதிர்பார்க்கவில்லை.... ஒன்றுமேயில்லையென்றாலும் தன் மாமன் தான் தனக்கு புருஷன் என்று வாழ்ந்தவள் மான்சி.......... ஆனால் இப்படியொரு சூழ்நிலையில் பச்சைநிற சீருடையில் அவள் சத்யனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை....

அவன் தெளிவாக பேசுவதுபோல் இருந்தாலும் ஆரம்பத்தில் ஐ ஆம் சத்யமூர்த்தி ஸன் ஆப் செல்வம் ஆதிலட்சுமி என்ற அவனது அறிமுகத்தில் இருந்த ஒட்டாத்தன்மை மான்சிக்கு பயத்தை கிளப்பியிருந்தது...

அதேபோன்று உண்மையாகவே ஒரு கொள்ளை கும்பலுக்கு பயந்து தலைமறைவாக இவனை இங்கே பதுக்கிவைத்திருந்தால்.... அதைப்பற்றி இவ்வளவு சுலபமாக வெளியே சொல்ல முடியுமா? இந்த இடம் பலமாக உதைத்தது .....

சத்யனுக்கு எதுவென்றாலும் சமாளிக்க அவள் தயார்தான்.... ‘ ஆனால் நல்ல நினைவில் இருந்தான் என்றாலே இரு குடும்பத்துக்கும் உள்ள விரோதம் மறந்து தன்னை அவன் நெஞ்சிலே பதிப்பது ரொம்ப சிரமம்... இதிலே இப்படி லூசுப்பய மவனா இருந்தா என்னத்த சொல்லி புரியவச்சி இவனை கல்யாணம் பண்றது? .... ஏற்கனவே இவன் குடும்பமே லூசு... இதுல இதுவேறயா?
இவனை கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்றதா இருந்தாலும் எப்படி இங்கேயிருந்து கடத்துவது? ’.. என்று பலவாக்கில் அவள் சிந்தனை ஓடி அவளை வலுவிழக்கச் செய்தது....

எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் மான்சி சோர்வுடன் தலைகவிந்திருப்பதை பார்த்த மோகனா எழுந்து அவளருகே போய் தோளில் கைவைத்து “ ஏய் என்னாச்சு மான்சி” என்று அக்கரையோடு கேட்டாள்....

நிமிர்ந்தவள் முகத்தில் குழப்பத்தைப் பார்த்து திகைப்புடன் “ என்னடி உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?” என்றாள் மோகனா...

ஒன்றுமில்லை என்று தலையசைத்தவள் “ கொஞ்சம் மனசு சரியில்லை மோகி... அவ்வளவுதான்” என்றாள் மான்சி...

“ ஏன் மான்சி வெளிநாட்டுல இருந்த மாமாவை இங்கே பார்த்ததும் அதிர்ச்சி தாங்கமுடியலையா?” என்று கேட்டு மான்சியை அதிரவைத்தாள் மோகனா...

“ உனக்கெப்படித் தெரியும் மோகி?” என்று வியந்தவளைப் பார்த்து சிரித்து...

“ ஏன்டி மான்சி ..... ஆதிலட்சுமி மகன் சத்யமூர்த்தின்னு அவர் சொல்லும்போதே எனக்கு தெரிஞ்சு போச்சுடி.... நீதான் தினமும் உன் மாமா பேரை ஜபம் மாதிரி சொல்லுவியே மான்சி” என்று மோகனா கூறியதும்.... மான்சி கண்கள் குளமாக தலையை குனிய.... நின்றநிலையில் அவள் முகத்தை தன் மார்போடு அணைத்த மோகனா “ ம்ஹூம் என் மான்சிக்கு சிரிக்கவும் குறும்பு பண்ணவும் மட்டும் தான் தெரியும்... அவளுக்கு இதுபோல அழத் தெரியாது “ என்றவள் மான்சியின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்தாள்.

தோழியின் கைகளை ஆறுதலாக பற்றிக்கொண்ட மான்சி “ இல்ல மோகி........ என் மாமனை எப்படியெல்லாம் கற்பனை பண்ணிருந்தேன் .. ஆனா இப்படி ஒரு நிலைமையில் நான் நெனைச்சுக்கூட பார்க்கலைடி” என்று கூறிவிட்டு விசும்பினாள்.....

மான்சியின் கண்களை கூர்மையாக பார்த்த மோகனா “ மான்சி நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு? சத்யன் இப்படி இருக்குறதால உனக்கு வெறுப்பா இருக்கா?” என்று மோகனா கேட்க...........

திகைப்புடன் எழுந்த மான்சி “ ஏய் மோகனா என்னடி இப்படி கேட்குற?.....

சத்யனோட அப்பா அவரோட தங்கச்சி ஜானகி இவங்க ரெண்டு பேர் மேலயும் தான்டி எனக்கு வெறுப்பு ஆத்திரம் விரோதம் எல்லாம்... என்னோட ஆசை அத்தை பெத்த மகன் மேல எந்த வெறுப்பும் இல்லை... சத்யன் எந்த நிலைமையில இருந்தாலும்
அவன்தான் என் புருஷன்.... இது மாறவே மாறாது மோகி” என்று மான்சி உறுதியாக கூற....



“ சபாஷ்டி மான்சி” என்று மான்சியின் தோளில் தட்டிய மோகனா “ பிறகு என்னடி கோழை மாதிரி கண்ணீர் விடுற.... உன் பாணியில் களத்தில் இறங்கு.... இத்தனை நாளா உன் மாமன் ஒரு இடத்திலும் நீ ஒரு இடத்திலும் இருந்தீங்க இப்போ அவர்
உன் பக்கத்துலயே இருக்காரு.... இன்னும் ஒரு மாசத்துக்கு இங்கேதான் இருக்கப்போற.... அதை உனக்கு சாதகமா பயன்படுத்திக்க மான்சி...... அவருக்கு உன் மனசை புரியவை.... அவரும் அப்படியொண்ணும் மோசமான நிலையில இருக்குற மாதிரி தெரியலை..... இன்னிக்கு அவர் ரிப்போர்ட் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து படிச்சுப்பார்க்கலாம்... அப்புறம் அவரைச் சேர்ந்தவங்க யாராவது பார்க்க வந்தா நீ யாருன்னு காட்டிக்காம ஒரு டாக்டரா பேச்சு குடுத்து சத்யனைப் பத்தி தெரிஞ்சுக்க..... அதுக்கப்புறம் என்ன செய்றதுன்னு சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி முடிவு பண்ணு மான்சி” என்று ஒரு தாயாய் .... சகோதரியாய்... தோழியாய்.. இருந்து மோகனா மான்சியை தெளிவுப் படுத்த.... மான்சி புத்துணர்வுடன் நிமிர்ந்து “ தாங்ஸ்டி மோகி” என்றாள்....

“ சரி நீ போய் வெளியே கொஞ்சநேரம் நடந்துட்டு வா இங்கே நான் பார்த்துக்கிறேன்” என்று மோகனா சொல்ல... மான்சி தன்னாலும் இனிமேல் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்பதை உணர்ந்து சரியென்று தலையசைத்துவிட்டு தனது கோட்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள்....



No comments:

Post a Comment