Saturday, December 5, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 6

அதன் பிறகு வந்த பத்து நாட்களும் மான்சியின் வாழ்வில் எந்த மாற்றமுமின்றி சென்றது... தினாவிடம் சொல்லி தனக்கென ஒரு செல்போன் வாங்கினாள்... தனது வீட்டினருடன் தினமும் பேசினாள்... ஆனால் தனது நம்பரை சத்யனுக்கு மட்டும் தரவேக் கூடாது என்று தினாவிடம் உறுதியாக கூறினாள்.... தினாவும் சத்யனிடம் மான்சி மொபைல் வாங்கிய விஷயத்தை சொல்லவேயில்லை...

ஆனால் சாமுவேல் மூலமாக விஷயம் சத்யனுக்கு கசிந்தது... மொபைல் வாங்கி கொடுத்தது தினா என்பதும்.. அதை அவன் தன்னிடம் தெரிவிக்க வில்லையே என்ற ஆத்திரம் சத்யனுக்கு அதிகமானது...



உடனடியாக தினாவுக்கு போன் செய்து “ என்ன தினா இப்பல்லாம் என்கிட்ட நிறைய மறைக்க ஆரம்பிச்சுட்ட போலருக்கு” என்று நேரடியாகவே கேட்க...
அவன் எதைப்பற்றி கேட்கிறான் என்று உடனே புரிந்துகொண்டு தினா “ சத்யா ஸாரிடா.... மான்சி உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு ப்ராமிஸ் வாங்கிட்டாடா அதான் சொல்லலை” என்று தினா வருத்தமாக சொல்ல...

“ ஓ.......” என்ற ஒற்றை வார்த்தையுடன் இணைப்பை துண்டித்தான் சத்யன்....

அவளோட நம்பரை வச்சுக்க கூட எனக்கு தகுதியில்லைன்னு நினைக்கிறாளா?... அல்லது போனில்கூட என் குரலை கேட்கக்கூடாதுன்னு எண்ணுகிறாளா? சத்யன் மீண்டும் நீர்ப்பூத்த நெருப்பானான்.... கன்னத்தில் வடுவாக மாறியிருந்த நகக்கீறல்களை வருடிப் பார்த்தது அவன் விரல்கள்...

மறுநாள் மாலை இரண்டு மணிக்கு டாப்சிலிப் கிளம்பினான்... உல்லாசத்திற்காக ஒரு வாரம் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு அழகியுடன்....

இருவரும் இரவு எட்டு மணியளவில் டாப்சிலிப் போய் சேர்ந்தபோது... ஏற்கனவே போன் மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டிருந்ததால்.... உணவு தயாரித்து விட்டு காத்திருந்தான் சாமுவேல்...

சத்யன் விதவிதமான மது பாட்டில்களை காரில் அள்ளி வந்திருந்தான்... அவை அத்தனையையும் சாமுவேல் எடுத்துச்சென்று சத்யனின் அறையில் அடுக்கி வைத்தான்...

மான்சி தனது வீட்டில் இருக்க.... சத்யன் அழகியை அணைத்த கையை எடுக்காமலேயே அவளை அழைத்துவரச்சொல்ல... சாமுவேல் மான்சிக்கு தகவல் சொன்னான்....

தனக்கு அடுத்த சோதனையை தயார் செய்துவிட்டான் சத்யன் என்று எளிதாகப் புரிந்து கொண்டாள் மான்சி... முகத்தை கழுவிவிட்டு... புத்துணர்வுடன் புன்னகைப் பூவாய் சத்யனின் வீட்டுக்குள் நுழைந்தாள்...

முகத்தில் எந்த மாற்றமுமின்றி “ வணக்கம் சார்” என்று சத்யனிடம் சொன்னவள் “ அவன் தோளில் தொங்கியவளைப் பார்த்து “ வணக்கம் மேடம்” என்றாள் புன்னகையுடன்... அவளுடைய வரவேற்புக்கு சத்யன் கள்ளத்தனமாய் சிரித்தான்...

“ மான்சி இவ என் கேர்ள் ப்ரண்ட் மிஸ் ஸ்வப்னா..... ஸ்வப்னா இவள் என் எஸ்டேட் மேனேஜர் மான்சி” என்று இரண்டு பெண்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தான்... போதையில் ஊறிப்போயிருந்த அந்த ஸ்வப்னா மான்சியைப் பார்த்து போதையுடனேயே இளித்தாள்...

தன் தோளில் இருந்து சரிந்தவளை தூக்கி அணைத்த சத்யன் “ மான்சி எனக்கு ஒரு ஹெல்ப் வேனும்... சாமு சமையல் பண்ணிட்டான்... ஆனா அவனுக்கு சரியா சர்வ் பண்ணத் தெரியாது.. நீ கொஞ்சம் ஹெல்ப் பணணா நல்லாருக்கும் ப்ளீஸ் மான்சி” சத்யன் கெஞ்சலாய் கேட்டான்...

சத்யனின் புத்தியை பாடமாக படித்தவளாச்சே மான்சி “ அதுக்கென்ன சார் ப்ளீஸ் போட்டு கெஞ்சுறீங்க... முதலாளி செய்னு சொன்னா செய்துட்டுப் போறேன்... அதுவும் உங்களுடைய ஸ்பெஷல் கெஸ்ட் வந்திருக்குற இந்த சமயத்தில் மறுப்பேனா... வாங்க சார்” என்று அழைத்து விட்டு கிச்சனை நோக்கிப் போனாள்....

சத்யன் அவளை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு ஸ்வப்னாவை இழுத்துக்கொண்டு டைனிங்ஹாலுக்கு போனான்... அவளை சேரில் சரியாக உட்கார வைக்கவே சத்யன் ரொம்ப சிரமப்பட்டான்... பக்கத்தில் அமரவைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டு சாப்பிட்டான்... மான்சி இருவருக்கும் பார்த்து பார்த்து கவனத்துடன் பரிமாறினாள்....

ஸ்வப்னா சாப்பிட்டாள் என்பதைவிட சத்யன் ஊட்டினான் என்று சொல்லலாம்... இருவரும் சில்லறையாக சில சில்மிஷங்கள் செய்தபடி சாப்பிட... உணவு எடுத்துவர செல்வது போல் சமையலறைக்கு சென்றாள் மான்சி...
சாப்பிட்டு முடித்ததும்... அவளை சுமந்தபடியே ஹாலுக்கு வந்தவன் “ மான்சி என்னால முடியலை இவளை பெட்ரூம் வரை கூட்டிட்டுப் போக எனக்கு ஹெல்ப் பண்றியா?” என்று அடுத்த அம்பை எய்தான் சத்யன்...

ம்ம் விட்டா பாய் போட சொல்லுவ... என்று மனதிற்குள் கறுவிக்கொண்டு “ இல்ல சார் எனக்கு அவ்வளவு பலமில்லை... சாமு அண்ணாவை தூக்க சொல்லுங்க,, அவர் தூக்கிட்டுப் போய் பெட்ரூம்ல படுக்க வைப்பார்... எனக்கு பசிக்குது வீட்டுக்குப் போறேன் சார் ” என்று சொல்லிவிட்டு தனது வீட்டுக்கு கிளம்பினாள்...

வீட்டிற்கு வந்து அழவில்லை மான்சி ... கந்தர்சஷ்டிக்கவசம் புத்தகத்தை விரித்து வைத்து மனமுருக படித்துவிட்டு எழுந்து சாப்பிட்டு உறங்கினாள்....

மறுநாளும் அதற்கு அடுத்து நாட்களும் சத்யன் சிரித்தபடி அன்பாக கொடுத்த தொல்லைகளை நாசுக்காக சமாளித்தாள் மான்சி... எப்போதும் ஸ்வப்னாவை அணைத்தபடியே அவளிடம் பேசினான்... அரைகுறை ஆடையில் சோபாவில் அமர்ந்திருக்கும் போதும் சத்யனின் விரல்கள் ஸ்வப்னாவின் உடலில் விளையாடும்போதும் மான்சியின் கவனம் சிறிதும் தடுமாறவில்லை... அவளின் பக்தியும்.. கற்று வைத்திருந்த யோகாவும் மனம் தடுமாறாமல் காத்தது..

அலுவலகத்திற்கும் அவளை அழைத்து வந்தான்... மான்சி புன்சிரிப்புடன் வரவேற்று அமர வைத்தாள்... ஸ்வப்னா மான்சியுடன் நட்பாகத்தான் சிரித்து பேசினாள்.. மான்சியும் முதலாளியின் தற்காலிக காதலிக்கு தரவேண்டிய மரியாதையை சரியாக கொடுத்தாள்.. சத்யனுக்குத்தான் எரிந்தது...

ஒருவாரம் முடிந்து போனது... மான்சியை சிறிதுகூட அசைத்துப் பார்க்க முடியாமல் தர்மபுரி திரும்பினான் சத்யன்... அவனால் அது தோல்வியென்று ஒத்துக்கொள்ள முடியவில்லை... ஒரு மாதம் கழித்து மறுபடியும் வேறு ஒருப் பெண்ணுடன் டாப்சிலிப் வந்தான்...


மான்சி அவனை எதிர்கொள்ள தயாராக இருந்தாள்... உதடுகளில் மாறாத புன்னைகையுடன் வரவேற்றாள்.... அவளை அசைக்க முடியாத போராட்டத்தில் சத்யன் துவண்டுத்தான் போனான்... அவளிடம் ஏற்ப்பட்ட தோல்வியின் வலியை உடன் வந்த பெண்களிடம் காட்டினான்... இவன் வேகத்தை தாளாமல் மறுநாளே கிளம்பிய பெண்களும் உண்டு... இவன் ஆண்மைக்கு மயங்கிப்போய் கிடந்த பெண்களும் உண்டு

கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் முயற்சித்தும் மான்சி மான்சியாகவே இருந்தாள்.... அவள் முகத்தில் வருத்தம் வேதனை ஆற்றாமை எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.... சத்யனுக்குள் வெறி கனன்றுகொண்டே இருந்தது... ஏதாவது ஒரு வழியில் மான்சியை வீழ்த்த நினைத்தான் சத்யன் .. ஆனால் எல்லாம் அவள் புன்னகைக்க முன்பு சிதறி சின்னாபின்னமானது...




இந்த முறை தருமபுரி சென்றவன் ஒரு மாதத்திற்கும் மேலகியும் டாப்சிலிப் வரவில்லை... அவன் வந்தால் என்ன வரவிட்டால் என்ன என்று அலட்சியமாக இருந்தாலும் மான்சியின் நெஞ்சுக்குள் இருந்த நேசமிக்க பெண்ணொருத்தி மெல்ல தலையை நீட்டி சத்யன் வரும் திக்கை நோக்கியபடி இருந்தாள்...

ஒன்றரை மாதம் முடிந்த நிலையில்...சாமுவேலிடம் கூட எந்த தகவலும் தெரியவில்லை... தினாவிடம் கேட்டபோது “ எனக்கும் தெரியலைம்மா... நேத்துகூட போன் பண்ணப்ப வர்றேன்னு தான் சொன்னான்... அங்கே ஒர்க் ஜாஸ்தியோ என்னவோ ” என்றான்.. இருக்கலாம் என்று தலையசைத்தாள் மான்சி

அதன்பின் ஒருவாரம் கழித்து மான்சி அலுவலகம் சென்றபோது... தினா அவசரமாக வந்து “ மான்சி உனக்கு விஷயம் தெரியுமா? சத்யனுக்கு உடம்பு சரியில்லையாம்... அவனோட தாத்தா போன் பண்ணி சொன்னார்... அடிக்கடி வயிறு வலிக்குதுன்னு படுத்து கிடந்தானாம்.... ஒருநாள் வலி தாங்க முடியாம... ஆஸ்பிட்டல் கூட்டிப்போயிருக்காங்க.. செக்கப் பண்ணி பார்த்ததில் அதிகமா குடிச்சதால கல்லீரல் ரொம்ப டேமேஜ் ஆயிருக்காம்... இனிமேல் குடிச்சா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டாங்களாம்... இப்போ ஓய்வுக்காக இங்க கிளம்பி வர்றானாம் தாத்தா அவனை கவனமாப் பார்த்துக்க சொல்லி சொன்னார் மான்சி” என்று மூச்சுவிட கூட இடைவெளி விடாது கலங்கிய கண்களுடன் தினா சத்யனைப் பற்றி சொல்ல...

மான்சிக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது... அவளுக்குள் இருந்த சத்யனின் காதலி “ கம்பீரமும் ஆண்மையும் நிறைந்த என் சத்யனுக்கா இந்த நிலைமை ” என்று கத்திக் கதறினாள்.... இந்த திடீர் அதிர்ச்சியை மூளை ஏற்க்காமல் கண்களை இருட்டிக்கொண்டு வர மெல்ல சரிந்தவளை தினா கண்ணீருடன் தாங்கி அமர வைத்தான்...

அவனுக்கு தெரியும் மான்சி சத்யனை விரும்புகிறாள் என்று... தனது நண்பன் திருந்தி இவளை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற பிரார்த்தனை அவன் நெஞ்சிலும் இருந்தது

தண்ணீர் கொடுத்து அவளை நிதானப்படுத்தியவன் ... “ வாம்மா வீட்டுக்குப் போகலாம்... சத்யன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவான்” என்று அழைத்தான்... இயந்திரமாய் தலையசைத்து அவனுடன் கிளம்பினாள்...

வீட்டுக்கு வந்தபோது சாமுவேலுக்கும் விஷயம் தெரிந்து கண்களில் நீர் தளும்ப சத்யனின் வருகைக்காக காத்திருந்தான்... மான்சி சித்தபிரமை பிடித்தவள் போல் வாசலில் அமர்ந்து கேட் திறக்கும் சத்தத்திற்காக காத்திருந்தாள்...

சற்றுநேரத்தில் சத்யனின் கார் வந்தது... டிரைவர் தான் காரை ஓட்டி வந்தார்... சத்யன் பின் இருக்கையில் படுத்தபடி வந்தான்... கார் பாங்களாவுக்குள் நுழைந்து நின்றதும்.... டிரைவர் கார் கதவை திறந்து விட சத்யன் இறங்கினான்...

மான்சி எழுந்து நின்று சத்யனைப் பார்த்தாள்... துவண்டு போயிருந்தான்... தாடையில் பலநாள் ரோம வளர்ச்சி... உடல் மெலிவால் தொளதொளவென்று இருந்த உடைகள்... கண்கள் குழி விழுந்து... தாடையில் எலும்புகள் துருத்தி தெரிய... சத்யன் முற்றிலும் ஒரு நோயாளியாக வந்து இறங்கினான்
மான்சியின் இதயம் சில விநாடிகள் நின்று போய் மீண்டும் துடித்தது... கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிய இத்தனை நாட்களாக பொத்தி வைத்த காதல் பொங்கி வழிந்து உருண்டோடி அவன் காலடியில் தேங்கியது...

சத்யன் மான்சியைப் பார்த்து சோகமாக புன்னகைத்தான் “ இனிமேல் உன்கூட வம்பு பண்ண யாரும் இல்லை மான்சி.... அந்த சத்யன் செத்துட்டான்... இந்த சத்யன் செத்துக்கிட்டு இருக்கான்” என்று வலுவில்லாத குரலில் பேசினான்

அந்த வார்த்தைக்கு மான்சி கதறிவிட்டாள்... " அய்யோ முருகா இதுக்காகவா தினமும் உன்னை கும்பிட்டேன்" என்று முகத்தில் அறைந்து கொண்டாள்... வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் சத்யனை நோக்கி ஓடினாள்... அவன் கைகளைப் பற்றி அதில் தனது முகத்தைப் பதித்து " வேனாம் இந்த வார்த்தை மட்டும் சொல்லாதீங்க.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது... நான் இருக்கேன்" என்று அவளுக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னாள்..

சத்யன் அவளிடமிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு மெல்ல வீட்டை நோக்கி நடந்தான்...


“ நீ தாசியும் அல்ல...
“ துய்த்துவிட்டு தூக்கி எறிய!

“ நீ என் மனைவியும் அல்ல...
“ மரியாதையோடு நடத்தப்பட!

“ நீ என் எஜமானியும் அல்ல...
“ நான் தலை வணங்கி நிற்க!

“ நீ என் தெய்வமும் அல்ல
“ பக்த்தியோடு கைகூப்ப!

“ அப்படியானால் நீ யார்? 

சத்யன் மான்சியின் கைகளை உதறிவிட்டு சென்ற பின்பும் மான்சி அங்கேயே நின்று அழுதுகொண்டிருந்தாள்... தனது கண்ணீர் தன்னை காட்டிக்கொடுத்துவிடுமே என்ற அச்சம் அவளுக்கில்லை... அவள் உயிருக்கே ஆபத்து வந்துவிட்ட பிறகு அவள் காதலை மூடிவைக்க நினைக்கவில்லை...
தினாவுக்கு மான்சியை அப்படிப் பார்க்க சகிக்கவில்லை... “ வா மான்சி உள்ள போகலாம்? ” என்று அழைத்தான்

மான்சி மென் நடையாக தினாவுடன் வீட்டுக்குள் போனாள்... சத்யன் அங்கே இன்லை மாடியில் அவன் அறைக்கு போய்விட்டிருந்தான்... சாமுவேல் சமையலறையின் வெளியே நின்று துண்டால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதுகொண்டிருந்தான்...

சாமுவேலின் அழுகை மான்சியை மேலும் அழத் தூண்டியது... சோபாவில் சரிந்து அமர்ந்து முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்டு “ என்னால அவரை இப்படிப் பார்க்க முடியலையே..... ” என்று குமுறினாள்...

அப்போது டிரைவர் ஒரு பெரிய கவரை எடுத்து வந்து தினாவிடம் கொடுத்து “ சார் இதுல சின்னய்யவோட மாத்திரை மருந்துகள் இருக்கு.... நான் உடனே தருமபுரி கிளம்பனும் பெரியவருக்கு கார் ஓட்ட டிரைவர் இல்லை.. இன்னொருத்தர் லீவுல போயிருக்கார்.. இங்கே நீங்க பார்த்துக்குவீங்கன்னு பெரியவர் சொன்னார்... அதனால நான் கிளம்பட்டுமா சார்” என்று அனுமதிகேட்டு நின்றான்..

“ சரி நீங்க கிளம்புங்க... சத்யனை நாங்கப் பார்த்துக்குறோம்... பெரியவரை வருத்தப்பட வேண்டாம்னு சொல்லுங்க.. அவரையும் கவனமா பார்த்துக்கங்க” என்று கூறி டிரைவரை அனுப்பி வைத்தான் தினா....

தினாவிடமிருந்த கவரை வாங்கி பிரித்துப் பார்த்த மான்சி நெஞ்சில் கைவைத்து அதிர்ந்தாள்... கத்தைக் கத்தையாக மாத்திரை அட்டைகள்... கலர் கலர் மருந்துகள்... மான்சிக்கு மயக்கம் வரும்போல் இருந்தது... தினா அவள் நிலைமையை புரிந்து கவரை வாங்கிக்கொண்டு “ சத்யன் ரூம்ல வச்சிட்டு வர்றேன் மான்சி” என்று மாடிக்கு போனான்… அவன் பின்னோடு சாமுவேலும் போனான் கையில் சத்யனுக்குப் பிடித்த மசாலா டீயுடன்...

மான்சி தலையை இரண்டு கையாலும் தாங்கியபடி அப்படியே அமர்ந்திருந்தாள்... அவள் காதல் மனம் என்றோ தெரிந்திருந்தாலும் இத்தனை நாளாக சத்யன் எங்கே? நான் எங்கே? இது தகுதியற்ற காதல் என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாள்.... ஆனால் இன்று அத்தனையும் காணமல் போக அவனை அள்ளியணைத்துக் கொண்டு யாருக்கும் தராமல் எங்காவது போய்விடவேண்டும் என்று துடித்தது அவளின் காதல் நெஞ்சம்...

அவனின் தற்போதைய தோற்றம் அவளை ரொம்பவும் பாதித்திருந்தது.... அவன் கம்பீரத்திற்கும் தலைசாய்த்து கண்சிமிட்டி சிரிக்கும் அந்த அழகிற்கும் தான் அவள் அவனிடம் தன் மனதை பறிகொடுத்தது.. இன்று அது இரண்டுமே அவனிடத்தில் காணமல் போயிருந்தது... கவிழ்ந்த நிலையில் தலையை தாங்கியிருந்தவளின் கண்ணீர் அவள் மடியில் சொட்டியது.... இனிமேல் சத்யனை பழையபடி புத்துணர்ச்சியோடு மாற்றுவது எப்படி என்று புரியவில்லை...

மாடிப்படிகளில் காலடி சப்தம் கேட்டு மூக்கை உறிஞ்சியபடி தலையை உயர்த்தி பார்த்தாள்... சாமுவேல் எடுத்துப் போன டீயை திரும்ப எடுத்துக்கொண்டு சோகமாக வந்தான்... “ என்னாச்சு சாமு அண்ணா? அவர் டீ குடிக்கலையா?” என மான்சி கேட்க..

“ இல்லம்மா... வேனாம்னு சொல்லிட்டாரு... இனிமேல் யாரும் என் ரூமுக்குள்ள வராதீங்கன்னு சொல்லிட்டார்” சாமுவேல் அழுதுவிடுவான் போல சொன்னான்...

மான்சியின் சோகம் அதிகமாக என்ன சொல்வது என்ன செய்வது என்று புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.... சற்றுநேரத்தில் தினாவும் துக்கம் தோய்ந்த முகத்துடன் இறங்கி வந்தான்....

“ என்ன தினா எப்படியிருக்கார்?” என்றாள் ஆர்வமுடன்..

“ ரொம்ப டென்ஷனா பேசுறான்... யாரையும் பார்க்க விரும்பலையாம்... அடிக்கடி வயிறு வலிக்குதா என்னன்னு தெரியலை? ... வயித்தை இறுக்கிப் பிடிச்சுக்கிட்டு கவிழ்ந்துப் படுத்துக்கிறான்... நான் கிட்டப்போனா போ போன்னு கத்துறான்... ஒன்னும் புரியலை மான்சி? ” என்று சோபாவில் அமர்ந்தான்...

கொஞ்சநேரம் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை... மான்சி ஏதோ யோசனையில் இருந்து விடுபட்டவளாய் “ தினா நீங்க போய் நிறைய ஃப்ரூட்ஸ் வாங்கிட்டு வாங்க.. அடிக்கடி ஜூஸ் போட்டு குடுக்கலாம்.. டீ காபி வேனாம்” என்றதும் “ ஆமாம் நானும் அதைத்தான் நினைச்சேன் மான்சி.. நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என்று தினா கிளம்ப...

“ தினா ஒரு நிமிஷம் இருங்க” என்று தடுத்த மான்சி “ அப்புறம் தினா... எஸ்டேட் போய் பார்த்துக்கங்க.. நான் இவருக்கு வேளாவேளைக்கு மருந்து கொடுத்து கவனிச்சுக்கிறேன்” என்று உறுதியுடன் கூறினாள்... தினாவின் முகத்தில் சந்தோஷத்தின் சாயல் “ ம் சரிம்மா” என்று கிளம்பினான்...

மான்சி எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து “ சாமு அண்ணா காரம் அதிகமில்லாம சமையல் பண்ணுங்க... கீரை அதிகமா சேர்த்துக்கங்க” என்று உத்தரவிட்டு விட்டு ப்ரிட்ஜை திறந்து அதிலிருந்த சாத்துக்குடி பழங்களை எடுத்து ஜூஸ் பிழிந்து எடுத்துக்கொண்டு பெரும் தயக்கத்துடன் மாடிப்படிகளில் ஏறினாள்...

சத்யனின் அறைக்கதவருகில் வந்து தயங்கி நின்றாள்... மான்சி இங்கே வேலைக்கு சேர்ந்த இந்த எட்டுமாதத்தில் இந்த பங்களா முழுவதும் சுற்றியிருக்கிறாள்... ஆனால் ஒருமுறைகூட சத்யனின் அறையை நெருங்கியதில்லை... இன்று சத்யனின் நிலைமை அவளது வைராக்கியத்தை தூசாக மாற்றியிருந்தது....

கொஞ்ச நஞ்சம் இருந்த தயக்கத்தையும் உதறிவிட்டு... லேசாகத் திறந்திருந்த கதவை தள்ளித் திறந்துகொண்டு உள்ளே போனாள்... ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அறையைப் போல் சகல வசதிகளுடன் பிரமாண்டமாக இருந்தது சத்யனின் படுக்கையறை... மான்சியின் பார்வை எதையுமே அளவிடவில்லை... சத்யன் எங்கே என்று தேடியது ...



அறை கதவிலிருந்து பத்தடி தொலைவில் வலது பக்கமாக சற்று மேடாக இருந்த மேடையில் வெள்ளை நிற எம்ப்ராய்டரி துணியால் போடப்பட்டிருந்த பெரிய திரைக்குப் பின்னால் அதிக வேலைபாடுகளுடன் கூடிய பெரிய கட்டில் இருக்க அதன்மேல் சத்யன் படுத்திருந்தது திரைக்கு அப்பால் நிழலாக தெரிந்தது..

கால்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு சிக்கிய புடவை கொசுவத்தை உயர்த்திப்பிடித்துக் கொண்டு... கால்கள் துவளாமல் அந்த மேடையை நோக்கிப் போனாள்... ஒரே படி கொண்ட மேடையில் ஏறி திரையின் நடுவே விலக்கி கட்டிலைப் பார்த்தாள்..

ஒருக்களித்துப் படுத்து தனது ஆறடி உயரத்தை மூன்றடியாக குறுக்கிக்கொண்டு... இரண்டு கைகளையும் மடித்து அடி வயிற்றில் வைத்து அழுத்திக்கொண்டுதலையணையில் முகத்தை அழுத்தியபடி படுத்திருந்த சத்யனின் வேதனை சுமந்த முகத்தில் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்துக்கொண்டிருந்தது....

சிரிப்பும் கும்மாளமுமாகவே பார்த்துப் பழகிய சத்யனை இப்படி நைந்துபோன உடலோடும் கண்ணீரோடும் பார்ப்பது... மான்சியின் இதயத்தை உலுக்கி வெளியே எடுத்துப்போட்டது நசுக்கியது போல் இருந்தது... சற்றுமுன் அடக்கி வைத்த கண்ணீர் மீண்டும் வழிய ஆரம்பிக்க.... அவனுக்குப் பக்கத்தில் இருந்த டீப்பாயில் கையிலிருந்த க்ளாஸை வைத்துவிட்டு கட்டிலில் சத்யனின் தலைமாட்டில் போய் நின்றாள்...


No comments:

Post a Comment