Monday, December 14, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 25

அவனை நிமிர்ந்துப் பார்த்த அர்ச்சனா இதழ்களில் தேங்கிய சிரிப்புடன் “ ரொம்ப பிடிச்சிருக்கு” என்றதும் ... தன் இதயத்தில் கைவைத்து “ ஸ்ஸ்ஸ் யப்பா” என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் ரவி ..

இப்போது தைரியத்துடன் அவளை நெருங்கி நின்றவன் “ அப்படின்னா நான் தர்றதை மறுக்காம வாங்கிக்கனும்” என்று ரவி சொல்ல... அவன் என்ன தரப்போகிறானோ என்ற பயத்தில் சற்று நகர்ந்தவளைப் பார்த்து சிரித்த ரவி “ ம்ம் நீ நினைக்கிறது இல்லை... ஆனா அதுவும்தான் தரனும் .. அதஷ அப்புறமா தரலாம் ... இப்போ இதை வாங்கிக்க அர்ச்சனா” என்று தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு செல்போனை எடுத்து அவளிடம் கொடுத்தான்

அதைப் பார்த்து மிரண்டவளை கண்டு “ நீ பண்ண வேண்டாம் அர்ச்சனா...

போனை சைலன்ட்ல வச்சுக்க... நான் மட்டும் கால் பண்றேன்... பேசுறதுக்கு ஒரு டைம் பிக்ஸ் பண்ணிக்கலாம் .. அதனால யாருக்கும் தெரியாது அர்ச்சனா... உன்கூட எனக்கு தினமும் பேசனும் அர்ச்சனா ப்ளீஸ் வாங்கிக்க” என்று கெஞ்சியவனிடம் மறுக்க முடியாமல் வாங்கி கொண்டாள் ......

சந்தோஷத்துடன் அவள் கைப்பற்றி இழுத்து முகத்தை நெருங்கினான் ரவி... அவன் எண்ணம் புரிந்தவள் “ ம்ம் ஆசைதான்... இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்” அவனிடம் இருந்து விடுபட்டு மெல்லிய சலங்கையாய் சிரித்தபடி வெளியே ஓடியவளை ஏமாற்றத்துடன் பார்த்தபடி வெளியே வந்தான் ரவி

அன்று இரவு முழுவதும் உறங்காமல் ஆளுக்கொரு மூலையில் நேருக்குநேர் படுத்துக்கொண்டு இருவரும் விழித்தபடி ரகசியமாக பார்த்துக்கொண்டனர்

மறுநாள் வெகு ரம்மியமாக விடிந்தது... எல்லோரும் எழுந்து குளித்து தயாரானார்கள்.... முதல் நாள் இரவைப் போலவே இப்போதும் எல்லோரும் பரபரப்புடன் ஆளுக்கொரு வேலையை செய்தபடி சுற்றினர்....

அர்ச்சனாவிடம் பேசிவிட்ட சந்தோஷத்தில் ரவிகூட காலையிலேயே குளித்துவிட்டு விக்டருடன் கல்யாண வேலைகளை கவனித்தான்....

ஹாலின் நடுவே இருந்த பந்தலில் பூ அலங்காரம் செய்தனர்.... ஒரு மூலையில் கெட்டி மேளம் முழங்கி தூங்கிக்கொண்டிருந்த ஓரிருவரையும் விரட்டியது ... ஹாலில் வாடகைக்கு எடுத்துவரப்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் வரிசையாக போடப்பட்டது...

ஐயர் வந்தார்.... அவருக்கு தேவையானப் பொருட்களை ரவி எடுத்துக் கொடுக்க.... மணவறையில் மனைபோட்டு அமர்ந்து ஹோமம் வளர்க்க தயாரானார்... “ மாப்பிள்ளை பெண்ணை தயார் பண்ணுங்கோ” என்று குரல் கொடுத்தார் ...

தினாவும் விக்டரும் இன்னும் சமையலறையில் சமையல்காரருடன் மல்லாடிக்கொண்டு இருக்க... மகாலிங்கம் மாப்பிள்ளையின் தாத்தாவாக மணவறையின் அருகில் சேரைப் போட்டுக்கொண்டு அமர்ந்தார் ... பேரனின் திருமணத்தை அருகில் இருந்து பார்க்க... சுந்தரம் மாப்பிள்ளையின் அப்பாவாக வெளியே நின்று அனைவரையும் வரவேற்று அமர வைத்துக்கொண்டிருந்தார்

மகளை மடியில் வைத்துக்கொண்டு இறுகி போன முகத்தோடு அமர்ந்திருந்த மான்சியை எழுப்பி தலையில் எண்ணை வைத்து குளித்துவிட்டு வரும்படி சொன்னாள் புவனா....

மான்சி சியாமாவை அழைத்து குழந்தையை அவள் கையில் கொடுத்து “ அக்கா குழந்தையை ஜாக்கிரதையா பார்த்துக்கங்க.... உங்களை நம்பித்தான் கொடுக்கிறேன் ” என்று கூறி கொடுத்துவிட்டு.... கண்ணீரை மறைக்க குளியலறையை நோக்கி ஓடினாள்

மான்சி குளித்துவிட்டு வந்ததும் லதாவும் அர்ச்சனாவும் அவளுக்கு அலங்காரம் செய்ய தயராக இருக்க ... “ நீங்க வெளியே இருங்க... நானே தயாராகறேன்” என்ு அவர்களை வற்புறுத்தி வெளியே அனுப்பினாள்....

சத்யன் பட்டுவேட்டி சட்டையில் தயாராகி இந்த்ரஜித் அவன் கையைப்பிடித்து அழைத்து வந்தான்... மணவறையை மூன்று மறை சுற்றிவந்து மனையில் அமருமாறு ஐயர் சொல்ல .. சத்யன் இந்த்ரின் கையைப்பிடித்துக் கொண்டு மணவறையை சுற்றிவந்தான் பிறகு தாத்தாவின் கால்களை தொட்டு வணங்கிவிட்டு மணவறையில் அமர்ந்தான்....

“ பொண்ணை கூட்டிண்டு வாங்கோ” என்று ஐயர் கூறியதும் லதாவும் அர்ச்சனவும் மான்சியின் அறைகதவை தட்டினார்கள்...

சத்யன் அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் வலது பக்கம் தான் மான்சியின் அறை... நேற்று போல் ஒரு தேவதை தரிசனத்தற்க ஆவலாக சத்யன் திரும்பி மான்சியின் அறையைப் பார்த்தான்...

கதவு திறந்தது எல்லோரும் மணப்பெண்ணை கானும் ஆவலில் அங்கேயே பார்க்க... மான்சி வெளியே வந்தாள்.... முதலில் அதிர்ந்து எழுந்தது சத்யன்தான்.... பிறகு கூட்டம் மொத்தமும் சலசலப்புடன் எழுந்தது

சாதரண கைத்தறி புடவையில் எந்த நகையும் இல்லாமல் அவள் எப்போதும் அணிந்திருக்கும் தோடும் ... கழுத்தில் மெல்லிய செயினும் .... கையில் சில கண்ணாடி வளையல்களும்... வலது கையில் பற்றியிருந்த ஒரு லெதர் பையுடன் வெளியே வந்தவள் மணவறையை நெருங்கி “ நான் கிளம்புறேன் சத்யன்... எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை” என்றவள்...

தனது அம்மாவின் பக்கம் திரும்பி “ அம்மா நீங்க எடுத்துட்டு வந்த கார்ல நான் வெயிட் பண்றேன்... நீங்க நம்ம திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வாங்க... சீக்கிரம் வாங்க “ என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள்

அத்தனை பேரும் அதிர்ச்சியில் ஆவென்று வாயை திறந்தபடி இருக்க... முதலில் சுதாரித்தது சத்யன் தான்... கழுத்தில் இருந்த மாலையை கழட்டி வீசிவிட்டு ஒரே பாய்ச்சலாக மான்சியை நெருங்கி அவள் கையைப் பிடித்து சுண்டி இழுக்க... மான்சி அவன் இழுத்த வேகத்தில் சுழன்று விழ இருந்தவளை சத்யனே தாங்கிப் பிடித்து நிறுத்தினான்...




அவளை நேராக நிறுத்தி “ என்னடி ஆச்சு உனக்கு? நல்லாத்தானே இருந்த... ஏதாவது பிரச்சனைன்னா அப்புறமா பேசிக்கலாம்... முகூர்த்த நேரம் முடியறதுக்குள்ள மொதல்ல ரெடியாகி வா மான்சி” என்று கோபத்தை அடக்கிக்கொண்டு கெஞ்சினான் சத்யன்....

அவனை ஏளனமாகப் பார்த்த மான்சி... “ உனக்கும் எனக்கும் கல்யாணமா? அது நடக்கவே நடக்காது சத்யன்.... இன்னைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா?” என்று கேட்டவளை கூர்ந்த சத்யன் எவ்வளவு யோசித்தும் என்ன நாள் என்று புரியாமல் “ என்ன நாள்?” என்று அவளிடமே திருப்பி கேட்டான்....

அவனை விட்டு சற்று விலகி நின்ற மான்சி “ நீ என்னை ஏமாத்தின நாள் சத்யன்... முதல் என்னை கற்பை உன் காலடியில் நான் இழந்த பிறகு மறுநாள் என்ன நடந்தது சத்யன்?.... இதேநாள் இதேவேளை தான் நீ எக்காரணமிட்டு சிரிச்சியே மறந்துட்டியா? எல்லாம் போச்சேன்னு நான் கதறி துடிச்சப்ப.... ஏளனமா சிகரெட் பிடிச்சிகிட்டே என் வாயில காறித்துப்பினயே அதாவது ஞாபகம் இருக்கா? ஒரு தாலி மட்டும் கட்டுங்கன்னு உன் நெஞ்சில் விழுந்து கதறுனேனே... அன்னிக்கு நான் விட்ட கண்ணீருக்கு பதில்தான் இது.... இந்த நாளுக்காகத்தான் இத்தனை நாளா காத்திருந்தேன் சத்யன்.... நீ நாடகமாடி என் உயிரா நினைச்ச என் கற்பை நாசம் பண்ணுவ?.... அப்புறமா திருந்திட்டேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்குவ? யாருக்கு வேனும் இந்த கல்யாணம்?... யாருக்கு வேனும் உன் தாலி? உனக்கு வேனும்னா காதலும் கற்பும் சாதரணமா இருக்கலாம்... ஆனா எனக்கு அது உயிர்.... அந்த உயிர் போய் இன்னியோட ஒரு வருஷம் ஆச்சு சத்யன்.... நான் இப்போ வெறும் உடல் மட்டும் தான் “ என்று உடல் நடுங்க உள்ளம் குமுற பேசியவள் அப்படியே தரையில் மடிந்து அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்

அவளே மீண்டும் எழுந்தாள் கண்களில் வழிந்த கண்ணீரை சுண்டிவிட்டு “ எல்லாரும் என் கழுத்தையும் வயித்தையும் மாத்தி மாத்திப் பார்த்து சிரிச்சப்ப எவ்வளவு துடிச்சிருப்பேன்... அந்த வலி வேதனைக்கெல்லாம் உன்னால பதில் சொல்ல முடியுமா சத்யன்.... நான் இழந்தது எனக்கு திருப்பிக் கிடைக்காது தான்... உன் நடிப்பை உண்மைனு நம்பி நான் ஏமாந்தது என் தப்புதான்... அதுக்கு நானும் தண்டனை அனுபவிக்கனும் தான்... அதனாலதான் நான் பெற்ற மகளையே பிரிஞ்சு போறேன்... அவளை பிரிஞ்ச அந்த வேதனையிலேயே நான் கொஞ்சம் கொஞசமா சாகனும் அதுதான் எனக்கு நான் குடுத்துக்குற தண்டனை.... நீ நடிச்சு ஏமாத்துவ ? பிறகு திருந்திட்டேன்னு சொல்லி கல்யாண ஏற்பாடு செய்வ? நானும் அமைதியா உன்கிட்ட தாலி வாங்கிககனுமா?.... முடியாது சத்யன்.... என்னால அது முடியாது... என்னை விட்டுட்டு உன் பணக்கார வர்க்கத்தில் ஒரு பணக்காரியை கல்யாணம் பண்ணிக்க... ஆனா மகளை மட்டும் ஒழுக்கத்தோட வளர்க்கப் பாரு ” என்றவள் எல்லாம் முடிந்தது என்பதுபோல் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டு பிரமித்துப் போய் நின்றிருந்த அம்மாவைப் பார்த்து “ அம்மா நீ இன்னும் கிளம்பலையா?” என்று உறக்க கத்த....

புவனாவுக்கு சட்டென்று உயிர் வந்தது ... அவசரமா மகளின் அருகில் ஓடிவந்து “ என்ன மான்சி உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.... அவருதான் மன்னிப்பு கேட்டு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரே மான்சி அப்புறமும் ஏன் இந்த பிடிவாதமும் ஆத்திரமும்... வா மான்சி வந்து மணவறையில் உட்காரு” என்று மகளின் கையைப்பிடித்து இழுத்தாள் ...

அம்மாவை ஆத்திரமாக ஏறிட்ட மான்சி “ அம்மா என்னோட இழப்பு உனக்கு கூடவா புரியலை?.... வயித்துல குழந்தையோட இதே ஊர் மக்கள் முன்னாடி நான் எவ்வளவு அவமானப் பட்டேன்னு உனக்கு தெரியும?... ஏன் விக்டர் அண்ணன் சொல்லி என்னை முதன்முதலா பார்க்க வந்தியே அப்போ நீ என்ன சொன்ன? ஏன்டி இன்னும் சாகம உயிரோட இருக்கேன்னு கேட்டியேம்மா? இதுக்குத்தான் காத்திருந்தேன்... இந்த நிமிஷத்துக்காகத்தான் காத்திருந்தேன்.... இவ்வளவு அவமானப்பட்ட பிறகு அந்த தாலி எனக்கு தேவையில்லைமா ...” என்று தாயிடம் சொன்னவள் தங்கைகளை திரும்பி பார்த்து “ ஏய் அர்ச்சு ஆர்த்தி இந்த்ர் எல்லாரும் பெட்டியை எடுத்துக்கிட்டு வாங்க” என்று கூச்சலிட அவர்கள் பெட்டியை எடுத்து வர ஓடினார்கள்...

அதற்குள் விக்டர் லதா தினா சுந்தரம் என எல்லோரும் சத்யனின் அருகில் அதிர்சியுடன் கூடிவிட அவர்கள் அத்தனை பேரையும் பேசவிடாமல் தடுத்த சத்யன் “ இது நாங்க ரெண்டு மட்டும் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் நீங்க யாரும் தலையிடாதீங்க” என்றவன் அவளை நோக்கி “ ஏன் மான்சி அப்போ நீ என் காதலை நம்பலையா? இன்னும் நான் வேஷம் போடுறேன்னு நெனைக்கிறயா ” என்று கேட்க...

அவனை சலனமின்றி ஏறிட்ட மான்சி “ ஏன் நம்பலை? உங்க காதலை நம்பினதால தான் நான் இப்போ வெளியே போறதே” என்று கூற...

“ எனக்கு புரியலை மான்சி” என்றான் சத்யன் குழப்பத்துடன்....

“ புரியலையா? நல்லா தெளிவா சொல்றேன் கேளுங்க.... நீங்க நடிச்சு ஏமாத்தினப்பவே நான் இங்கேருந்து வெளியே போயிருக்கனும்.... அடுத்து உங்க குழந்தை என் வயித்துல வளரும்போதாவது வெளியப் போயிருக்கனும்.... இல்லேன்னா நீங்க மலேசியால இருந்து வந்த பிறகு என்னை மறுபடியும் இம்சை குடுக்கும் போதாவது வெளியேப் போயிருக்கனும்... இல்ல குழந்தை பிறந்த பிறகாவது நான் வெளியே போயிருக்கனும்.. போகாததுக்கு காரணம் என்ன தெரியுமா... நான் எப்படி கரைகாணா காதலோட உன் கால்ல விழுந்து என்னை தொலைச்சேனோ... அதேபோல் நீயும் என்னை காதலிக்கனும்... காதலால் உருகனும்... அதுக்காக தான் சத்யன் காத்திருந்தேன்... அப்போ தானே என்னோட வலி என்னன்னு உனக்கும் புரியும்... இப்போ நீ என்னை உயிரா விரும்புறேன்னு தெரியும்... நான் என் உயிரா நெனைச்ச கற்பை இழந்த மாதிரி... நீ உயிரா நேசிச்ச என்னை இழக்கனும்.. பதிலுக்கு பதில் ... இழப்புக்கு இழப்பு... என்னை இழந்தா நீ துடிப்பேன்னு எனக்கு தெரியும்... நான் இல்லாம உனக்கு வாழ்க்கையே இல்லேன்னு தெரியும்.... அதையெல்லாம் இப்போ இழந்துட்ட... இனிமே என்னை இழந்த நீயும் ஒரு நடை பிணம் தான்... இதுக்காக தான் சத்யன் விக்டரை காதலிக்கிற மாதிரி நடிச்சு.. என் பிரசவ நேரத்துல உன்னை என் பக்கத்துலேயே வச்சிக்கிட்டு நான் துடிச்சது எல்லாமே நீ காதலை உணர்ந்து இப்படி கண்ணீரோடு என் முன்னாடி நிக்கனும்னு தான்” என்று மான்சி சொல்லி முடிக்க சத்யன் உறைந்து போனான்....


இவள் பேசிய அத்தனையும் அமைதியா குமுறும் நெஞ்சோடு கேட்டுக்கொண்டிருந்தான் சத்யன்.... இவள் சொல்வது அத்தனையும் உண்மை தானே இவள் இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்? ஒரு நிமிஷம் கூட நினைச்சு பார்க்க முடியலையே? அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது... எட்டி மான்சியின் கையைப் பற்றினான்.... “ நீ இல்லாம என்னால வாழ முடியாது மான்சி.... நான்தான் எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டுட்டேனே.... வேனாம் மான்சி என்னை கல்யாணம் பண்ணிகிட்டு என்கூடவே இருந்து என்ன தண்டனை வேனும்னாலும் குடு ஆனா இந்த மாதிரி விட்டுட்டு போகாதே மான்சி” என்றவனின் குரல் இறைஞ்சியது

மான்சி அசைவின்றி நின்றாள்.... “ இது நான் ஒரு வருஷமா வன்மத்தை ஊத்தி ஊத்தி வளர்த்த மரம் சத்யன் ... என் கையால வெட்டுறதுக்காகவே நான் வளர்த்த மரம்... உன்னையும் உன் காதலையும் இழக்கறது எனக்கும் பெரிய இழப்புதான்... ஆனா உனக்கு வலிக்கனுமே... அதுதான் எனக்கு முக்கியம்... அதுக்காக நான் பெத்த மகளையே இழக்குறேன் சத்யன்... ஏன்னா மகள் என்கிட்ட இருந்த நீ மறுபடியும் உறவு கொண்டாடி வருவேன்னு தான்... நீ என் நினைவுகளோடு இங்கே கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைந்து போகனும்... உன் நினைவாலயும் என் மகள் நினைவாலும் நான் சிறுகச்சிறுக சாகனும்... அதுதான் நமக்கு விதிக்கப்பட்டது” என்றவள் தனது பையை எடுத்துக்கொண்டு நகர....

சத்யன் அவள் எதிரில் வந்து நின்றான் “ மான்சி நாம முதன்முதலா பேசிக்கிட்டது என்னன்னு ஞாபகம் இருக்கா?.... நீ தோற்றால் என்கிட்ட வரனும்.. நான் தோற்றால் பலபேர் முன்னாடி உன் கால் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்னு சொன்னேன்... இப்போ நான் தோத்துட்டேன் மான்சி” என்றவன் யாரும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் மான்சியின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் ...

எஸ்டேட் ஊழியர்கள் முதலாளிகள்... உறவினர்கள்... நண்பர்கள்.... வேலைக்காரர்கள் என அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் அப்படியே நிற்க்க.... எதிர்பாராத நேரத்தில் காலில் விழுந்த சத்யனை கண்டு மான்சி அலறிப் போய் பின்னால் நகர.... “ அய்யய்யோ சத்யா ” என்று ஓடிவந்த விக்டர் சத்யனின் தோள்ப்பற்றி தூக்கினான்....

சத்யன் கண்களில் கண்ணீருடன்... மான்சியைப் பார்த்து “ தாய் இல்லாம தகப்பனும் சரியில்லாம ஒருத்தன் எப்படி இருப்பான் என்பதற்கு நான் உதாரணம்.... தகப்பன் இல்லாம ஒரு நல்ல தாயின் வளர்ப்பு எப்படியிருக்கும்னு நீ உதாரணம்.... கற்புதான் பெரிசுன்னு கர்வத்தோடு நிமிர்ந்த உன்னை அழிச்சு என் காலடியில் விழவைக்கனும் நான் நினைச்சேன்... இப்போ நான் உன் காலடியில் இருக்கேன் மான்சி.... நீ என்கூடவே இருந்து என் அம்மாவை வளர்க்கனும்.... இது என் கடைசி கோரிக்கை.... நம்ம குழந்தையை மனசுல வச்சு முடிவு பண்ணு மான்சி.... இதுக்கப்புறம் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்... தடுக்கவும் மாட்டேன்... ” என்று சத்யன் அவள் முன்பு கைகூப்பி நிற்க.....

அதிர்ச்சி தெளிந்த மான்சி முடியாது என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.... அவள் பின்னோடு அவள் குடும்பமும் செல்ல... சற்று நேரத்தில் கார் புறப்படும் ஓசை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து மறைந்தது

கூப்பிய கையுடன் அப்படியே நின்றிருந்த சத்யன் மான்சி போய்விட்டாள் என்று உறைக்க " எல்லாம் போச்சு" என்று கத்தியவன் ஓவென்ற கதறலுடன் அப்படியே மடிந்து அமர்ந்து கதற.... விக்டராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அவனை அணைத்தபடி குமுறிவிட்டான்...

அழகாக இருந்த கல்யாண வீடு சற்றுநேரத்திலேயே இலவு வீடு போல ஆனது.... ஆளுக்கு ஒரு பக்கம் கண்ணீருடன் அமர்ந்திருக்க....


சத்யன் மனதில் மான்சி பேசியதெல்லாம் மறுபடியும் ஓடியது.... அவன் நெஞ்சில் இருந்த காதலையும் மீறி ஆண் என்ற கர்வம் வந்தது.... கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தான் " நான் காலில் விழுந்து கெஞ்சிய பிறகும் உதறிவிட்டு போனவளை நினைத்து இனிமேல் வருந்த மாட்டேன்... எனக்கு என் மகள் இருக்கா" என்று சத்தமாக கூறியபடி எழுந்தவன் .... சியாமாவிடம் இருந்த மகளை வாங்கினான்

" அப்பா தாத்தா வாங்க தர்மபுரி கிளம்பலாம் .... தினா... விக்டர் மச்சான் இங்கே எல்லாத்தையும் பார்த்துக்கங்க... எனக்கு இனிமேல் இந்த டாப்சிலிப் வேண்டாம்" என்று கூறிவிட்டு தன் மகளுடன் தன் அறைக்குப் போனான் சத்யன்





" உன்னோடு வாழத்தான் ஆசைப்பட்டேன்....

" உன் நினைவுகளோடு அல்ல!

" நான் இப்போது வெறும் கல்....

" இந்த கல்லை இனி நீ...

" தாலாட்டவும் முடியாது...

" சீராட்டவும் முடியாது...!

" நீ முடிவுரை எழுத நினைத்த...

" என் காதலுக்கு....

" நான் முற்றுப்புள்ளியே வைக்கிறேன் போடி! 

அழகாக இருந்த கல்யாண வீடு சற்றுநேரத்திலேயே இலவு வீடு போல ஆனது.... ஆளுக்கு ஒரு பக்கம் கண்ணீருடன் அமர்ந்திருக்க....

சத்யன் மனதில் மான்சி பேசியதெல்லாம் மறுபடியும் ஓடியது.... அவன் நெஞ்சில் இருந்த காதலையும் மீறி ஆண் என்ற கர்வம் வந்தது.... கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தான் " நான் காலில் விழுந்து கெஞ்சிய பிறகும் உதறிவிட்டு போனவளை நினைத்து இனிமேல் வருந்த மாட்டேன்... எனக்கு என் மகள் இருக்கா" என்று சத்தமாக கூறியபடி எழுந்தவன் .... சியாமாவிடம் இருந்த மகளை வாங்கினான்

" அப்பா தாத்தா வாங்க தர்மபுரி கிளம்பலாம் .... தினா... விக்டர் மச்சான் இங்கே எல்லாத்தையும் பார்த்துக்கங்க... எனக்கு இனிமேல் இந்த டாப்சிலிப் வேண்டாம்" என்று கூறிவிட்டு தன் மகளுடன் தன் அறைக்குப் போனான் சத்யன்….
தாத்தா நடந்தவற்றை ஜீரணிக்க முடியாமல் அப்படியே அமர்ந்திருக்க.... அவர் முகத்தை கவனித்த லதா அவசரமாக அவரை நெருங்கி “ ஒன்னுமில்ல தாத்தா... எல்லாம் சரியாயிடும்... நீங்க மாத்திரை எடுத்துக்கிட்டீங்களா? வாங்க ரூமுக்கு போகலாம்” என்று அவர் கையைப்பிடித்து எழுப்பியபடி விக்டரை கண் ஜாடையில் அழைத்தாள்....

திகைப்பில் இருந்து இன்னும் மீளாமல் இருந்த விக்டர் மனைவியை நெருங்கினான்.... அவன் பக்கமாக சரிந்த லதா “ மொதல்ல இங்கிருக்கும் எல்லாரையும் அப்புறப்படுத்துங்க.... செஞ்ச உணவு வீனாகம எஸ்டேட் ஊழியர்களை சாப்பிட சொல்லுங்க.. இல்லேன்னா எடுத்துட்டு போகச்சொல்லுங்க.... தினாவை போய் சத்யன் கூட இருக்க சொல்லுங்க... நான் தாத்தாவுக்கு மாத்திரை கொடுத்து தூங்க வச்சிட்டு சத்யனைப் போய் பார்க்கிறேன்” என்று மெல்லிய குரலில் உறுதியுடன் கூறிவிட்டு தாத்தாவை அழைத்துக்கொண்டு அறைக்குப் போனான்....

அவர்கள் பின்னாலேயே கலங்கிய கண்களுடன் வந்த சுந்தரத்தைப் பார்த்த லதா “ அங்கிள் ப்ளீஸ் தாத்தா முன்னாடி அழுதுடாதீங்க.... அவர் ரொம்ப எமோஷனலா இருக்கார்... எனக்கு பயமாயிருக்கு... மொதல்ல அவரை தூங்க வைக்கனும்...” என்றதும் சுந்தரம் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு அவர்களின் பின்னால் போனார்...

விக்டர் தினாவை அழைத்து சத்யனுடன் இருக்குமாறு கூறிவிட்டு ..... இந்த இரண்டுநாட்களாக சியாமாவுடன் சேர்ந்து குழந்தையை கவனித்துக்கொண்டிந்த சாமுவேலை அழைத்துக்கொண்டு வந்தவர்கள் எல்லோருக்கும் விளக்கம் கொடுத்து அவர்களை திருப்பி அனுப்பும் வேலையில் ஈடுபட்டான்....

லதா தாத்தாவுக்கு மாத்திரை கொடுத்து ஆறுதல் சொல்லி உறங்க வைத்துவிட்டு மான்சியின் அறைக்கு வந்தாள்... மான்சியின் பொருட்கள் ஒரு சிறு துரும்பு கூட இல்லாமல் சுத்தமாக இருந்தது... பீரோவின் லாக்கரில் நேற்று அவளுக்கு அணிவித்த நகைகள் எல்லாவற்றையும் பத்திரப்படுத்தியிருந்தாள்... அவற்றை பத்திரப்படுத்தி விட்டு தன் கணவனைத் தேடி போனாள்....

சத்யனின் அறைக்குள் நுழைந்த தினாவுக்கு மனதில் பெரும் கவலை என்னவென்றால்.... இந்த வலிக்கு தீர்வாக மறுபடியும் குடிக்க ஆரம்பித்துவிடுவானோ என்று கவலையாக இருந்தது....
கட்டிலில் படுத்திருந்த சத்யன் மகளை நெஞ்சில் போட்டுக்கொண்டு கண்மூடி கிடந்தான்... கண்களின் ஓரம் கோடாக நீர் வழிந்து தலையணையை நனைத்தது.... வலது கை மகளின் முதுகை வருடியபடி இருந்தது....

சத்யன் அருகில் அமர்ந்த தினா அவன் தோளில் கைவைத்து “ சத்யா அழாதடா.... உன் கண்ணீருக்கு தகுதியான ஆள் மான்சி இல்லடா” என்று வேதனையுடன் சொல்ல

பட்டென்று கண்விழித்த சத்யன் “ இன்னைக்கு ஒருநாள் மட்டும் என்னை அழவிடு தினா.... இனிமேல் யாருக்காகவும் எதுக்காகவும் நான் அழமாட்டேன்...” என்ற சத்யன் கண்களை இறுக மூடிக்கொண்டு “ நான் கொஞ்சநேரம் தனியா இருக்கனும் தினா” என்று கூற ... தினாவுக்கு அவன் மனநிலை புரிந்தது... மெல்ல அவன் தோளில் தட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்....

அவன் போன சிறிதுநேரத்தில் சியாமா கதவை தட்டிவிட்டு வந்து “ குழந்தைக்கு பால் குடுக்குற நேரம்ங்கய்யா” என்று தயங்கி நிற்க்க.... சத்யன் அந்த நிமிடத்தில் தனக்கு பெரிய துணையாக எண்ணிய மகளை சியாமாவிடம் கொடுத்து கதவை லாக் செய்துவிட்டு மீண்டும் கட்டிலில் விழுந்தான்.....
அவன் மனம் முழுவதும் “ மான்சி ஏன் இப்படி செய்தாள்? என்ற கேள்விதான் மறுபடியும் மறுபடியும் பூதகரமாய் எழுந்து நின்று அவனை வதைத்தது...
அவளது ஒதுக்கமெல்லாம் கல்யாணம் ஆனதும் சரியாப்போகும்னு நெனைச்சேனே... அவளுக்குள்ள இவ்வளவு வலியையும் வேதனையையும் சுமந்துகிட்டு என்கூடவே இருந்திருக்கா.... என் காதலை புரிஞ்சுகிட்ட அவளால அவ இல்லாம நான் இல்லேன்னு ஏன் புரியாம போச்சு? என்று சத்யன் யோசிக்கும் போதே சற்றுமுன்னர் மான்சி சொல்லிவிட்டு போன வார்த்தைகள் ஞாபகம்... அவளைப் பிரிஞ்சு நான் வேதனைப்படனும்னு தானே அவ இதை செய்ததே ,, பிறகு அவ இல்லாம நானில்லை என்பதே தேவையில்லாத சிந்தனை... என்று சலிப்புடன் எண்ணினான்

மான்சியுடனான வாழ்க்கையை எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தானோ அவை அனைத்தும் இப்போ இவனைப் பார்த்து ஏளனமாக சிரித்து கலைந்துபோனது.... நேற்று அவள் அழகை விழியெடுக்கமுடியாமல் ரசித்தது இன்றைய பிரிவுக்காத்தானா? இந்த அழகும் பொழிவும் எனக்கு மட்டும் தான்னு எவ்வளவு கர்வப்பட்டேன்? எல்லாம் ஒரே ராத்திரியில் முடிஞ்சு போச்சே? குமுறலில் நெஞ்சை அடைத்தது சத்யனுக்கு ...

அவளுக்கு கொடுத்த முத்தங்களும்.. அணைப்புகளும் மறுபடியும் கிடைக்குமா?.... அவள் மீதான மோகமும் காதலும் அவனை மிக மோசமாக வதைக்க... “ ஏன்டி இப்படி பண்ண பாவி?... இந்த நிலைமையை என்னால தாங்க முடியலை.... இதைவிட என்னை விஷம் கொடுத்து கொன்னுட்டு போயிருக்கலாமே மான்சி” என்று வாய்விட்டு அலறியபடி நெஞ்சில் அறைந்து கொண்டான்

அவள் மீது வரும் வாசனை அந்த அறை முழுவதும் நிறைந்து சத்யனை மூச்சுத்திணற வைப்பதுபோல் இருக்க.. மூச்சுக்கு திணறியவன் போல் தலையணையில் கவிழ்ந்தவன் “ மான்சி நடந்தது எல்லாமே கனவா போகட்டும் கண்ணம்மா.... நீ வந்துடுடி... நான் செத்துருவேன் போலருக்குடி” என்று அரற்ற ஆரம்பித்தான்....

அவள் சென்றவுடன் கீழே வீம்பாக சொல்லிவிட்டு வந்தாலும்.... இனிமேல் மான்சி தன்னுடன் இல்லை என்ற எண்ணமே அவனை கொன்றுவிடும் போல் இருந்தது.... மான்சி தனக்கு எவ்வளவு தேவை.... அவளை எவ்வளவு விரும்பியிருக்கிறான் என்று சத்யனுக்கு புரியவைத்தது இந்த பிரிவு... இவன் கண்ணீரால் ஈரமான தலையணையில் முட்டி மோதினான்....



“ அவள் காலில் விழுந்தபோதே நான் இறந்து போயிருக்கலாமே... என்னை கட்டியணைச்சு கதறியிருப்பாளே என் மான்சி?” என்று அவன் வாய்விட்டு கதறலுடன் சொல்லும்போது இன்னொன்றும் அவனுக்கு ஞாபகம் வந்தது....
இவன் தடாலென காலில் விழுந்ததும்.. மான்சியின் முகத்தில் தெரிந்தது என்ன... ஏன் விழுந்த என்ற கோபமா? அய்யோ இப்படி பண்ணிட்டயே என்ற இரக்கமா? அதன்பிறகு அவள் பேச்சு அடங்கி மவுனமாக தலையசைத்து வெளியேறியதும் ஞாபகம் வந்தது.... நான் அவள் காலில் விழுந்தது என்னைவிட அவளுக்குத்தான் வேதனை என்று சத்யனுக்கு இப்போது புரிந்தது...

உடனே கழிவிரக்கம் நெஞ்சை கிழித்தது .... அன்னிக்கு நான் ஏன் அப்படி செய்தேன்?.... இரு கையாலும் நெஞ்சில் அறைந்துகொண்டான் ..... காதலோடு கேட்டிருந்தா அவளாவே தன்னை குடுத்திருப்பாளே.... இப்படி நடிச்சு ஏமாத்தி என் வாழ்க்கையே.. என் உயிரை தொலைச்சுட்டேனே?.... என்று கத்தியவன் குமுறலுடன் முகத்தை மூடிக்கொண்டான்....

இவன் அலறல் கேட்டு விக்டர் லதா தினா மூவரும் மாடிக்கு ஓடிவந்தனர்... கதவை உதைத்து திறந்துகொண்டு உள்ளே வந்த விக்டர் கட்டிலில் துடித்துக்கொண்டிருந்த சத்யனிடம் ஓடி அவனை தூக்கி அமர வைத்து தன் நெஞ்சோடு இறுக்கிக்கொண்டான்

விக்டரால் சத்யனை இப்படி பார்க்க முடியவில்லை.... மான்சியை கொலைசெய்யும் அளவிற்கு ஆத்திரம் வந்தது... தன் தோளில் விழுந்து கதறிய சத்யனின் முதுகை வருடியபடி “ வேனாம்டா சத்யா? உடைஞ்சு போயிடாதே? இந்த நிலையில தைரியமா நிமிரலைனா நீ ஒன்னுமில்லாம ஆயிடுவடா? எல்லாத்தையும் தள்ளி நிறுத்தி பாருடா” என்றவன் மேலே என்ன சொல்வது என்று புரியாமல் கண்ணீருடன் ‘என்ன செய்றது?’ என்று தன் மனைவியை பார்த்தான்...


No comments:

Post a Comment