Monday, December 21, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 7

மரங்கள் அடர்ந்த பகுதியில் நடந்தாள்.... அவள் சிந்தனைகள் எல்லாம் சத்யனை சுற்றியே வந்தது..... இத்தனை நாட்களாக அவனைப்பற்றிய தகவல்கள் தெரிந்துகொள்ளாமல் தனது அப்பா பேச்சை கேட்டு செயலற்று இருந்துவிட்ட தனது முட்டாள்தனத்தை எண்ணி வேதனையுடன் தன் நெற்றியில் தட்டிக்கொண்டாள்....

அப்போது அந்த வழியாக போன..... நேற்று பவித்ராவை அலற வைத்த அந்த பலான வியாதிக்காரன் மான்சியைப் பார்த்ததும் ஒரு மாதிரியாக இளித்தபடி அவள் எதிரில் நின்று தனது பச்சைநிற பேன்ட்டை கீழ்நோக்கி இழுக்க ,,..... அவன் என்ன செய்யப் போகிறான் என்று நிமிடத்தில் புரிந்துபோனது மான்சிக்கு......

‘’ அடப்பாவி நானே நொந்து போயிருக்கேன் இதுல உனக்கு இதுவேறயா?” என்று புலம்பிய மான்சி அவனைப்பார்த்து ஈயென்று இளித்து வைக்க.... அவன் உற்சாகமாக அவளை நெருங்கினான்.....



“ வாடி வா” என்றபடி அவன் கிட்டே வந்ததும் தனது வலது காலை மட்டும் மடக்கி ஸ்பிரிங் மாதிரி விர்ரென்று அவன் அடிவயிற்றுக்கு நான்கு அங்குலம் கீழே நச்சென்று இறக்க.... வாய் கோண கண்கள் சொருக கால்களை மடக்கிக்கொண்டு
துடித்து தரையில் விழுந்தான்...

விழுந்துகிடந்தவன் அருகே சென்று தனது காலால் அவன் முகத்தை புரட்டிப் பார்த்தாள்... உயிர் இருப்பதன் அறிகுறியாக மெல்லிய முனங்கல் வெளிப்பட...

“ அடப்பாவி இன்னும் உயிர் இருக்கா.... ம்ஹூம் மான்சி கிட்ட இப்படி ஒரு அடியை வாங்கிட்டு உயிரோட இருக்குறவன் நீ மட்டும் தான்டா.... ஆனா பாவம் வடை போச்சேடா ?” என்று நக்கல் செய்த மான்சி.. மீண்டும் தனது ஹீல்ஸ் செருப்பணிந்த காலால் நச்சென்று ஒரு மிதி மிதித்துவிட்டு “ பைத்தியக்காரன்ங்குற பேர்ல ஆக்டா குடுக்குற பரதேசி நாயே” என்றவள் காறி
அவன் முகத்தில் துப்பினாள்

மான்சி அவன் முகத்தில் துப்பிவிட்டு நிமிர்வதற்கும் பின்னாலிருந்து கைதட்டும் ஒலி கேட்பதற்கும் சரியாக இருந்தது .... யார் கைத்தட்டுவது என்று திரும்பி பார்த்தாள் மான்சி....

அங்கே இருந்த இளம்பெண் மான்சியைப் பார்த்து புன்னகையுடன் “ என்னால முடியாத ஒன்னை நீங்க பண்ணிட்டீங்க... இப்பதான் என் மனசுக்கு சந்தோஷமா இருக்கு” என்றாள்...

கீழே கிடந்த செத்த பாம்பை மீண்டும் ஒரு உதை விட்டு புரட்டித் தள்ளிவிட்டு அந்த பெண்ணை நோக்கி சென்ற மான்சி “ ஓ உங்ககிட்டயும் வாலாட்டினானா.... ஆனா இவனுக்கு இது பத்தாது ... நான் எப்பவுமே பேன்ட் பாக்கெட்டில் சின்ன பேனா கத்தி வச்சிருப்பேன் இன்னிக்குன்னு பார்த்து அதை என் ரூம்லயே வச்சிட்டு வந்துட்டேன்... அது மட்டும் இருந்திருந்தா அவன்
கையில பிடிச்சி ஆட்டுனதை கட் பண்ணி கையிலேயே கொடுத்து இன்னும் வேகமா ஆட்டுடான்னு சொல்லிட்டு வந்திருப்பேன் ” என்று அலட்சியமாக சொன்னவள் ...

தான் பேசுவதையே ஆவென்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த அவளை நோக்கி தன் கையை நீட்டி “ எனிவே நான் மான்சி... மெடிக்கல் காலேஜ் பைனல் இயர் ஸ்டூடண்ட்... இங்கே ஒன் மந்த் கேம்ப் வந்திருக்கேன்” என்றாள் மான்சி

அவள் பேசுவதையே வேடிக்கைப் பார்த்தவள் மான்சி கையை நீட்டியதும் பற்றி குலுக்கிவிட்டு “ நான் பவித்ரா” என்றாள்

“ நீங்க இங்கே எதுனா ஜாப்ல இருக்குறீங்களா?” என்று மான்சி கேட்க....

மெல்ல தலைகவிழ்ந்த பவித்ரா “ இல்லைங்க நான் இங்கே வேலை செய்றவ இல்லை.... என்னோட மாமா இங்கே அட்மிட் ஆகியிருக்காரு அவரைப் பார்க்க நான் தினமும் வருவேன்” என்றாள் மெல்லிய குரலில்....

மான்சிக்கு அவளது தயக்கம் புரிந்தது... “ ம்ம் கவலைப்படாதீங்க பவித்ரா சீக்கிரம் நல்லாயிடுவாறு உங்க மாமா” என்றபடி அவளுடன் நடந்தாள்...

பக்கத்தில் வந்தவளை ஆச்சர்யமாக பார்த்த பவித்ரா “ உங்களைப் பார்த்தா டாக்டர் மாதிரியே தெரியலைங்க... ரொம்ப தைரியமா வெளிப்படையா பேசுறீங்க” என்று பாராட்டும் குரலில் கூற...

“ அட நீங்க வேற .... நான் பார்க்கத்தான் டீசன்ட்டான பொண்ணு... ஆனா உள்ளுக்குள்ளள பக்காவான லோக்கல்... இந்த பேன்ட் சர்ட்... டாக்டர் கோட் இதையெல்லாம் மீறி எனக்குள்ள ஒருத்தி இருக்காங்க.... அவ அக்மார்க் தஞ்சாவூர் பொண்ணு... அவதான் நிஜம்... மத்தபடி இதெல்லாம் சும்மா வெளிவேஷம்” என்று மான்சி தன்னைப்பற்றி சிறு குறிப்பாக சொல்ல...

பவித்ராவின் மதிப்பில் இன்னும் உயர்ந்தாள் மான்சி.... “ நீங்க தஞ்சாவூரா டாக்டர்?” என்று பவித்ரா வியப்புடன் கேட்க...

“ ம்ம் தாராசுரம் தான் சொந்த ஊர்.... உங்களுக்கு?” என்றாள் மான்சி...

“ நாங்க திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பக்கத்துல ஒரு கிராமம்” பவித்ரா சொன்ன மறுவிநாடி மான்சியின் உடலில் ஒரு விரைப்பு.....

“ இங்கே இருக்குற உங்க மாமா பேரு?” கூர்மையாக வந்தது மான்சியின் கேள்வி...

“ என் மாமா பேரு சத்யமூர்த்திங்க” என்று மான்சியின் தலையில் இடியை இறக்கினாள் பவித்ரா...

‘ ஆகா இவதான் அந்த ஜானகியோட மகளா? வாடி என் சக்களத்தி? யாருடி மாமா... அவன் எனக்கு மட்டும் தான் மாமா’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிய மான்சி அவனை உதைத்தபோது அவிழ்த்து கொண்ட ஷூவின் முடிச்சை
கட்டுவதுபோல் மண்டியிட்டு அமர்ந்து தன் முகபாவனையை மறைத்தாள்...

மறுபடியும் நிமிர்ந்த போது முகம் பழையபடி மாறியிருக்க.... “உங்க மாமாவுக்கு எப்படி இப்படி ஆச்சு?... எதுக்கு கேட்கிறேன்னா நான் இங்கே ஒரு மாசம் வரை இருக்கவேண்டியிருக்கு.... ஒரு டாக்டர்ங்குற முறையில என்னால முடிஞ்ச உதவிகளை சத்யனுக்கு செய்யலாமேன்னு தான்.... ஒரு ஏரியா காரங்களா வேற ஆகிட்டோம்” என்று கூறிவிட்டு மான்சி சிரித்த சிரிப்பில் நிச்சயமாக நட்பில்லை...

பவித்ராவுக்கும் மான்சியை முதல் பார்வையிலேயே பிடித்துப்போனது....
நேற்று தனக்கில்லாத தைரியத்தையும் துணிச்சலையும் மான்சியிடம் கண்டுவிட்டு கொஞ்சநேரத்தில் அவளுக்கு ரசிகையாக மாறியிருந்தாள்....

இருவரும் ஒரு மரத்தின் கீழே போடப்பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தனர்.... இன்று சத்யனிடம் பேசவேண்டும் என்று முத்து வரும் முன்பே சீக்கிரமே கிளம்பி வந்திருந்தாள் பவித்ரா... ஆனால் மெடிக்கல் கேம்ப் காரணமாக சத்யனை உணவு இடைவேளையின் போதுதான் விடமுடியும் என்று வார்டன் சொன்னதால்தான் கொஞ்சம் உலாவவிட்டு வரலாம் என்று நடந்து வந்தாள்....

அதுவும் மான்சியின் வீரதீர செயலைப் பார்த்து அசந்து போய் சத்யனைப் பற்றி மான்சியிடம் கூற முடிவு செய்த பவித்ராவுக்கு மனம் பழைய நினைவுகளில் தவியாய் தவிக்க.....

தன் மாமனைப் பற்றி பவித்ராவிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய நிலையை எண்ணி மான்சியின் மனம் எரிமலையாய் தகித்தது... ‘ டேய் கமலா என்னை இந்த நிலைமைக்கு கொண்டுவந்து விட்டுட்டியேடா மக்கா.... ஊருக்கு வந்து உனக்கு இருக்குடி ஆப்பு....” என்று கமலாவை மனசுக்குள் வசைமாரி பொழிந்தாள் மான்சி பவித்ரா மெல்லிய குரலில் ஆரம்பித்தாள்... தான் யார்? சத்யன் யார்? இரு குடும்பத்தின் பின்னனி... இருவரின் உறவு முறை... குழந்தைப் பிராயத்தில் இருந்து இருவருக்கும் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் முடிவு..... சத்யன் சென்னைக்கு வந்தது பவித்ராவுக்கும் சென்னையில் வேலை வாங்கி கொடுத்து அழைத்து வந்தது... அதன்பின் அலுவலகத்தில் நடந்த பிரச்சனைகள்.. சத்யன் முத்துவுடன் இணைந்து கொள்ளையை கண்டுபிடிக்கச் சென்றது.... அங்கே சத்யனுக்கு நடந்த பயங்கரம்... பிறகு மருத்துவமனையில் போராடி சத்யனை மீட்டது... அதன்பின்பு சத்யனின் மனநிலையில் தெரிந்த மாற்றங்கள்... அப்புறம் நடந்த பிரச்சனைகள்... பின்னர் இங்கே கொண்டுவந்து சத்யனை அனுமதித்தது... கடந்த பத்துமாதமாக மாமனுக்காக வேலையை ரிசைன் செய்துவிட்டு தினமும் இங்கே வந்து போவது வரை எல்லாவற்றையும் தெளிவாக கூறினாள் பவித்ரா...




அவள் சொல்லாமல் விட்டது ... சமீபகாலமாக சத்யனுக்கு என்னைப்பற்றிய நினைவும் தன் காதலைப்பற்றிய எதிரொலியும் இல்லாமல் போனதையும்.... இப்போது அதற்கான கேள்வியுடன்தான் சத்யனை சந்திக்க வந்திருப்பதையும் தான்.... இதை
சொல்லி மான்சியின் குமுறலை கொஞ்சம் குறைத்திருக்கலாம்... ஆனால் சொல்லவிடாமல் தடுத்தது பவித்ராவின் தன்மானம் தான் ....

மான்சி இலகுவாக இருப்பது போல் தோன்றினாலும் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்... அவளால் எதையுமே ஜீரணிக்க முடியவில்லை.... ஜானகிக்கு இப்படியொரு அழகான மகள் இருந்து அவளும் சத்யனும் காதலிக்கிறார்கள் என்ற
செய்தி மான்சியை நொருக்கியிருந்தது....

மாமா மாமா என்று பத்து வருஷமாக உருப்போட்டு வாழ்ந்தவளுக்கு இந்த செய்தி மேலும் பயங்கர வெறியை கிளப்பியிருந்தது... யாரையாவது கொன்றால்தான் சத்யன் கிடைப்பான் என்றால் அதற்கும் தயாராவாள் போல் கொந்தளித்துப் போய்
அமர்ந்திருந்தாள்...

இவையெல்லாவற்றையும் விட சத்யனின் தற்போதைய நிலைமை அவளை மேலும் பலவீனப்படுத்தியது.... அந்த கம்பீரத்தின் பின்னால் இப்படியொரு வேதனை சரித்திரம் அவள் எதிர்பார்க்காத ஒன்று.... அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கமுடியாமல் தவிப்புடன் அமர்ந்திருந்தாள் மான்சி.... தன் காதலுக்கு எதிரி தன் கண்ணெதிரே இருந்தும் ஒன்று செய்யமுடியாமல் கைகட்டி அமர்ந்திருந்தாள்.... தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த பவித்ராவை பார்த்த மான்சி ‘ என் உயிர் இருக்கும் வரை என் மாமனை யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்’ என்று உறுதியாக மனதுக்குள் கூறி நெஞ்சில் பதியவைத்துக் கொண்டாள்...

சத்யன் பவித்ரா இருவரின் காதலும் எந்த கட்டத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் எண்ணத்தில் மேலும் அவளிடம் பேச்சு கொடுத்தாள் மான்சி “உங்க காதலால் கூடவா சத்யனை மீட்க முடியலை... அதாவது டாக்டர் சொன்ன மாதிரி
இதிலிருந்து சத்யனை டைவட் பண்ணனும்னா வேற சம்பவங்கள் அவர் மனசுல பதிய வச்சாலே போதுமே? அப்படிப்பார்த்தா நீங்களும் சத்யனும் சேர்ந்திருந்த நாட்களை அவருக்கு நினைவுபடுத்தி ஏன் அந்த மாதிரி முயற்சி பண்ணலை?” என்று
மான்சி தான் கேட்க நினைத்ததை ஓரளவுக்கு கேட்டேவிட்டாள்

பவித்ரா சற்றுநேரம் அமைதியாக இருந்தாள்.... எப்படி சொல்வது என்று புரியவில்லை... மான்சி ஒரு டாக்டர்... சற்றுமுன் கிடைத்த தைரியம்மிக்க தோழி என்ற நினைப்பு அவள் வாய்ப் பூட்டை திறந்தது....

“ நீங்க நினைக்கிற மாதிரி நாங்க லவ் பண்ணலை மான்சி... நானும் என் மாமாவும் அதிகபட்சம் தொட்டுகிட்டது.... ஒரு தோழனும் தோழியும் போலஅழுத்தமில்லாத அணைப்புகள் தான்... அதிகபட்சம் கொடுத்த முத்தங்கள் எல்லாம் என் கைகளிலும் நெற்றியிலும் தான்.. எப்போதாவது ரொம்ப சந்தோஷமா இருக்கும் பட்சத்தில் கன்னத்தில்..... மாமா ரொம்ப கண்ணியமிக்கவர் திருமணம் வரை என் உதட்டில் கூட முத்தம் கொடுக்ககூடாது என்று உறுதியாக இருந்தார்... ரொம்ப உற்சாகமாக இருந்தால் நிறைய ரொமான்டிக்கா பேசி கேலி செய்வார்.... இவ்வளவு தான் எங்கள் காதல் மான்சி... இதில் எதைப்போய் என் மாமாவோட மனசில் பதிய வைப்பேன்? ” என்று விரக்த்தியாக கூறினாள் பவித்ரா.......


மான்சிக்கு அவ்வளவு கொதிப்புக்கு நடுவிலும் ஒரு குளிர் நீரூற்று கிளம்பியது... சத்யனின் கொள்கை அவளுக்கு நல்லது செய்திருந்தது.... இவர்களின் பலமற்ற காதலை எளிதில் சாய்த்து என் அத்தை மகன் மனதில் என்னை குடியேற்றுவேன் என்ற உறுதியினால் மனம் கொஞ்சம் தைரியமாக “ ம்ம் சத்யனுக்கு நல்லதே நடக்கனும்னு உங்ககூட நானும் பிரார்த்தனை பண்றேன்
பவித்ரா” என்று கூறிவிட்டு மான்சி எழுந்துகொள்ள...

“ இன்னிக்குத்தான் ஒரு முடிவோட வந்திருக்கேன்.... நான் நெனைச்சு வந்தது நிறைவேறனும் சேர்த்து பிரார்த்தனை பண்ணுங்க மான்சி” என்று பவித்ரா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே

“ பவித்ரா” என்ற முத்துவின் குரல் கேட்டு இருவரும் ஒரேநேரத்தில் திரும்பிப்பார்த்தனர்.... அவர்களை நோக்கி வந்தவனின் முகம் பாறையாக இறுகி போயிருக்க... பவித்ரா மெல்ல தலைகவிழ்ந்தாள்...

அருகில் யந்து நின்றவனின் போலீஸ் கிராப்பை பார்த்ததுமே அவன்தான் முத்து என்று மான்சிக்கு புரிய தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.... முத்து சம்பிரதாயமாக புன்னகைத்து தன்னை அறிமுகம் செய்துகொண்ட முத்து “ நீங்க இருக்குற வரைக்கும் சத்யனை கவனமா பார்த்துக்கங்க மேடம்” என்றான்...

“ கண்டிப்பா மிஸ்டர் முத்து... அதைவிட எனக்கொன்னும் வேலையில்லை ” என்றவள்

“ இந்த மேடம்... டாக்டரம்மா.. இதெல்லாம் வேண்டாமே... ஜஸ்ட் மான்சி அவ்வளவுதான்” என்றாள் புன்னகையுடன்... சத்யனுக்கு உதவிய முத்து மான்சிக்கு கடவுளாக தெரிந்தான்....

முத்துவும் நட்புடன் புன்னகைத்து விட்டு “ சத்யனுக்கு சாப்பாடு கொடுக்கும் நேரமாச்சு மான்சி .... நாங்க கிளம்புறோம்... பிறகு ஒருநாள் பார்க்கலாம்” என்று கூற ..... பவித்ராவும் மெல்லிய தலையசைப்புடன் மான்சியிடமிருந்து விடைபெற்றாள்...

இருவரும் அங்கிருந்து செல்ல... மான்சி அதே பெஞ்சில் அமர்ந்து தனது மொபைலை நோண்டிக் கொண்டே அவர்களை கவனித்தாள்.... இவள் பார்வை வட்டத்துக்குள்ளே தான் அவர்கள் சாப்பிட அமர்ந்த இடமும் இருந்தது.... பவித்ரா மவுனமாக நிழல் குடையின் கீழே அமர... முத்து அதே இறுகிய முகத்துடன் சத்யனின் வார்டுக்குப் போய் அவனை அழைத்து வந்தான்.... சத்யன்
முத்துவிடம் சலசலவென ஏதோ பேசிக்கொண்டே வர.... எப்போதும் ஒரு சிரிப்புடனேயே அவனுக்கு பதில் சொல்லும் முத்து அன்று மவுனமாக தனது தலையசைப்பின் மூலமாகவே பதில் சொன்னான்...

தான் வருகிறோம் என்று சொல்லியும் முன்னாடியே புறப்பட்டு வந்த பவித்ராவின் மீதுதான் முத்துவின் கோபம்... ஆனால் செயலற்ற கோபம்... எதையுமே அவளிடம் கேட்கவும் முடியாது.... எந்த பதிலையும் அவளிடமிருந்து வாங்கவும் முடியாது.... தனக்கு அவளிடம் என்ன உரிமையிருக்கிறது என்ற கழிவிரக்கம் அவனை கொஞ்சம் கொஞ்சமாக தின்றது....

பவித்ரா தட்டில் சோற்றைப் போட்டு கொடுக்க... முத்து பிசைந்து சத்யனுக்கு ஊட்டினான்... இடைஇடையே அன்று நடந்த மெடிக்கல் கேம்ப் பற்றி ஏதாவது சொல்லிகொண்டே இருந்தான்... சத்யன் சாப்பிட்டு முடித்ததும் அதே தட்டில்
முத்துவுக்கு சாதம் போட... “ எனக்கு பசியில்லை” என்று ஒற்றை வார்த்தை மட்டும் கூறிவிட்டு சத்யனின் தலையை சீப்பால் வாரிவிட்டான்...


பவித்ராவுக்கும் முத்துவின் கோபத்துக்கான கோபம் புரிந்தது.. என்னால் என்ன செய்யமுடியும்? என்பதுபோல் மவுனமாக இருந்தாள்

எவ்வளவு நேரம் தான் அப்படியே இருப்பது... பவித்ரா முத்துவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சத்யனின் பக்கத்தில் போய் அமர்ந்து அவன் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு “ மாமா நான் இப்போ உன்கிட்ட சில கேள்விகள் கேட்பேன்... கேட்குறதுக்க கரெக்டா பதில் சொல்லனும்?” என்று சொல்ல...

அவள் கைகளுக்குள் இருந்த தன் கையை உருவிக்கொண்ட சத்யன் பவித்ராவின் காதில் இருந்த தொங்கல்களை தட்டிவிட்டு அது ஆடுவதை வேடிக்கைப் பார்த்தபடி “ இந்த தோடு நீயும் நானும் கீதாவும் தஞ்சாவூர் போய் வாஙகுனது தானே?” என்று சத்யன் கேட்க....

பவித்ராவுக்கு சத்யனின் தெளிவான மனநிலை கொஞ்சம் நிம்மதியை கொடுக்க....
முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைத்தாள்....

முத்து சற்று தள்ளியிருந்த மரத்தில் ஒருகாலை மடித்து ஊன்றிக்கொண்டு ஒற்றைக்காலில் நின்றபடி இங்கே நடப்பதை வேடிக்கைப் பார்த்தான்...

“ எதுவோ கேட்கனும்னு சொன்னியே பவி கேளு” என்றான் சத்யன்...

“ ம்ம் இதோ ” என்றவளின் பார்வை முத்துவிடம் போனது ... இந்த மருத்துவமனைக்குள் எத்தனைபேர் சிகரெட் பிடித்து பார்த்திருக்கிறாள்....
ஆனால் ஒருமுறை கூட முத்து புகைத்துப் பார்த்ததில்லை... இன்று முத்து சிகரெட்டை பற்ற வைத்து உதட்டில் பொறுத்தி கண்மூடி மரத்தில் சாய்ந்தவாறு புகைத்துக் கொண்டிருந்தான்

பவித்ராவின் பார்வை சத்யனிடம் திரும்பியது “ நேத்து நான் சாப்பாட்டு பாத்திரமெல்லாம் கழுவ போனப்ப கத்துனேனே... "ஏன் மாமா வரலை?” என்று கேட்டாள்....

அவளை யோசனையுடன் பார்த்த சத்யன் “ ஏய் பவி நீ எதாவது பூச்சியைப் பார்த்து பயந்திருப்ப.... அதான் முத்து உடனே வந்தானே.... நானும் வந்தா மதுமிதாவை யார் பார்த்துக்குவா? அப்புறம் இன்னொரு விஷயம் புரிஞ்சுக்க பவி? தேவையில்லாம இதுபோன்ற விஷயத்துக்கு உன் பின்னாடி ஓடி வந்து என்னோட பவரை வேஸ்ட் பண்ணனுமா? சில விஷயங்களை நீதான் தைரியமா கையாளனும்... நான் இருக்கும் பிஸில உன்கூடவே சுத்த முடியாது... என்ன ஓகேயா?” என்று சத்யன் கொடுத்த விளக்கமே பவித்ராவின் கவலைகளை குறைப்பதற்கு போதுமானதாக இருந்தது...

“ மாமா... உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணனும்னு நம்ம வீட்டுல பேசி வச்சது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று சற்று உரத்த குரலிலேயே கேட்டாள்...


அவளை வித்தியாசமாக பார்த்த சத்யன் “ என்னை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா பவி ? அதெப்படி எனக்கு ஞாபகம் இல்லாம இருக்கும்? ... நாம குழந்தையா இருந்தப்ப இருந்தே பேசி முடிவு பண்ணதாச்சே பவி அதையெப்படி
மறக்க முடியும்?” என்றான் சத்யன்...

பவித்ராவுக்கு சொல்லனா உணர்வுகள் நெஞ்சை தாக்க... காரணமேயில்லாமல் முத்துவை இரக்கத்துடன் பார்த்தாள்... அவன் இன்னும் கண்மூடியிருந்தான்....
ஆனால் காதுகள் கூர்மையுடன் இருந்தது...

“ சரி மாமா .. அப்போ நாம ரெண்டுபேரும் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம்.... நீங்க இங்கே இருக்கறது எனக்கு பிடிக்கலை மாமா.... கல்யாணம் முடிஞ்சு நாம நம்ம ஊருக்கே போயிடலாம்...” என்று பவித்ரா சொன்னதும்...

“ நமக்கு கல்யாணம் ஆனா இங்கேருந்து போயிடலாமா பவி” என்று அவளையேத் திருப்பி கேட்டான் சத்யன்...

“ பின்ன இங்கேவா நாம குடுத்தனம் பண்ணமுடியும்?” என்றாள் பவித்ரா...

“ ஓகே அப்படின்னா உடனே போய் உங்கப்பாவையும் எங்கபபாவையும் பார்த்து நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லு.... நம்ம கல்யாணம் முடிஞ்சதும் கீதாவுக்கு பண்ணலாம்னு சொல்லு” என்று சத்யன் உற்சாகமாக கூறினான்..

பவித்ராவுக்கும் உற்சாகமாகத்தான் இருந்தது... ஆனால் அதையும் மீறி ஒரு வெறுமை மனதை சூழ்ந்தது... முகம் இறுக நின்றிருக்கும் முத்துவின் பாதத்தில் தனது முகத்தைப் பதித்து கண்ணீரால் கழுவவேண்டும் போல் ஒரு உணர்வு உள்ளிருந்து எழ... கண்ணீரை மறைக்க முகத்தை வேறு புறமாக திருப்பிக்கொண்டாள் ....

முத்து சிகரெட்டை கீழே போட்டு காலால் நசுக்கிவிட்டு அவர்களிடம் வந்தான்... முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டு “ என்ன உன் மாமாகிட்ட பேசியாச்சா? இப்போ சந்தோஷமா? ” என்று பவிதராவைப் பார்த்து கேட்க... .

பதில் சொல்லாமல் முகத்தை கவிழ்த்துக்கொண்டாள் பவித்ரா

சத்யன் முத்துவின் தோளில் கைப்போட்டு “ முத்து எனக்கும் பவிக்கும் கல்யாணம்டா.... எல்லாத்தையும் நீதான் கிட்டேயிருந்து கவனிச்சுக்கனும்” என்று உற்சாகமாக கூற....

“ எனக்கு அதைவிட வேறென்னடா வேலையிருக்கு? நீ நல்லாயிருந்தா அதுவே எனக்கு போதும் சத்யா?” என்ற உளமார கூறிவிட்டு முத்து சத்யனை அணைத்துக்கொண்டன்...

நடந்தவைகள் அத்தனையும் செயல்முறை விளக்கம் போல் மான்சிக்கு தெளிவாக நிலவரத்தை உணர்த்தியது... சத்யனின் கையைப்பிடித்துக் கொண்டு பவித்ரா என்ன கேட்டிருப்பாள் என்று ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது... “ புல்ஷிட்” என்று மரத்தை கையால் குத்தியவள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க தனது அறையை நோக்கி நடந்தாள்....

அந்த வார்த்தைகளில் இருந்த உண்மையும் நேர்மையும் அன்பும்... பவித்ராவை கண்ணீர் சிந்த வைத்தது... செயலற்ற வேதனையுடன் பாத்திரங்களை எடுத்து அடுக்கியவள் “ கொஞ்சமாவது சாப்பிடுங்களேன்” என்று முத்துவை பார்க்காமலேயே கெஞ்சினாள்...

“ ம்ம் போடு பவித்ரா சாப்பிடுறேன்... என் நண்பனுக்கு கல்*யாணம் நிச்சயமான சந்தோஷத்தில் இருக்கேன்.... நிறைய சாப்பிடுவேன் போடு” என்று முத்து கரகரத்த குரலில் சொல்ல....

பவித்ரா விம்மலை அடக்கிக்கொண்டு அவனுக்கு தட்டில் சாதத்தை போட்டு கொடுத்தாள்.... முத்து தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரால் தனது கையை கழுவிட்டு சாதத்தில் கைவைத்தான்...


சத்யன் யாரோ ஒரு நோயாளியின் முகவரி தேடி வந்தவர்களுக்கு வழி சொல்ல அவர்களுடன் போக.....

முத்து சோற்றை கட்டாயம் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் சாப்பிடுபவன் போல் ருசியறியாமல் அள்ளி அள்ளி வாயில் அடைத்தான்.... தொண்டைக்குள் இறங்காத கவளத்தை தண்ணீர் குடித்து விழுங்கினான்....

அவனை அப்படி பார்க்க முடியவில்லை பவித்ராவால்... முந்தானையை எடுத்து தன் வாயில் அடைத்துக் கொண்டு துக்கத்தை விழுங்கினாள்.... முத்து சாதத்தில் குழம்பின்றி சாப்பிடுவதைப் பார்த்து குழம்பை எடுத்துக்கொண்டு அவனை நெருங்கினாள்...

தட்டை நீட்டாமல் இருந்த முத்துவை காண நிமிர்ந்தாள் பவித்ரா ... முத்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.... அவன் விழிகள் நீரில் மிதந்தன...

உதடுகள் துடிக்க “ ப.......வி........த்.....ரா” அவள் பெயரை தடுமாற்றமாக உச்சரித்தான்...

நீர் நிரம்பிய இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்து தடுமாற இவன் கையிலிருந்த சாப்பாட்டு தட்டு நழுவி கீழே விழ.... அவள் கையிலிருந்த குழம்பு பாத்திரம் தடுமாறி விழுந்து தரையை தொட்டது....

“ பவி நான்...................” என்று எதையோ சொல்ல வந்து முத்து விழுங்க.... பவித்ரா அவன் வாயை தன் விரல்களால் பொத்தி “ வேனாம் எதையுமே சொல்லாதீங்க.... நீங்க சொல்ல வந்ததை நான் கேட்க விரும்பலை” என்று பவித்ரா சொல்லும்போதே தன் வாயை பொத்திய அவள் விரல்களை எடுத்து தன் உதட்டில் பதித்தான் முத்து...

அடுத்த நிமிடம் உடைந்துபோனாள் பவித்ரா... அப்படியே தரையில் மண்டியிட்டவள் முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தாள்.... முத்து அவளெதிரே மண்டியிட்டு அமர்ந்து “ பவி இந்த அழுகைக்கு காரணம் என்ன பவி?” என்று கேட்க...

பவித்ரா கண்ணீருடன் தலையை இடமும் வலமுமாக அசைத்து “ இல்ல இல்ல இல்ல...... நான் அழலை..... நான் அழலை” என்று அழுதுகொண்டே சொன்னாள்....

“ எனக்குத் தெரியும் பவி இந்த கண்ணீர் எனக்காகத்தான் என்று.... நீ எனக்கு கிடைக்க மாட்டேன்னு ஆரம்பத்துலேருந்தே தெரியும்.... ஆனாலும் என் மனசு....” என்றவன் மேலே சொல்லமுடியாமல் அவனும் கோழையாக விம்மி வெடிக்க...

பவித்ரா அவன் கண்ணீர் கண்டு துடித்துப்போனாள்.... தனது கையில் அவன் கண்ணீர் வழியும் முகத்தை ஏந்தியவள் “ ம்ஹூம் அழக்கூடாது முத்து... இதெல்லாம் எனக்கு விதிக்கப்பட்டது... என் மரணம் வரும்வரை மாறாதது.... நீங்க இதை ஏத்துகிட்டு தான் ஆகனும்... இல்லேன்னா சத்யா மாமாவுக்கு நாம ரெண்டு பேருமே துரோகம் செய்தவங்களாகிவிடுவோம்” என்று தெளிவாக பவித்ரா கூற....

அவள் கூறிய நிதர்சனம் முகத்தில் அறைந்தாலும்.... தன் மனதை நிலைப்படுத்த வழி தெரியாது அவள் கைகளை விலக்கிவிட்டு எழுந்த முத்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தனது கையை கழுவிவிட்டு கர்சீப்பால் கையையும் கண்ணீர் வழிந்த முகத்தையும் துடைத்துக்கொண்டான்


“ இந்த உலகமே சத்யா மாமா எனக்கு வேனாம்னு சொன்னாலும் என்னால சொல்ல முடியாது... நான் அப்படி சொன்னா அப்புறம் என் தாயைப்போல மகளும் என்ற அவப்பெயர் தான் எனக்கு கிடைக்கும்” என்று பவித்ரா மெல்லிய குரலில் கூற...

முத்து அவளை குழப்பமாக பார்த்தான்....

“ ஆமாம்......... என் அம்மா செய்த அதே தவறை நான் செய்யமாட்டேன்...” என்றவள் சிறுத்துப்போன குரலில் தனது தாயின் திருமணத்தையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கிருஷ்ணனின் அகால மரணத்தையும் சொன்னவள் “ இப்போ சொல்லுங்க? நான் சத்யன் மாமாவை ஒதுக்க முடியுமா? அப்படி நடந்தால் ஆதி அத்தையால அதை தாங்கமுடியுமா? ஏற்கனவே என் அம்மா மேல இருக்குற வெறுப்பை நேரடியாக காட்டலைனாலும் ஆதி அத்தையோட பேச்சில் நான் பலமுறை உணர்ந்திருக்கேன்.... மறுபடியும் அவங்களை நோகச் செய்ய என்னால முடியாது” என்று பவித்ரா தெளிவாக தனது நிலையை சொல்ல....

இப்போது முத்துவுக்கு அவளது மனநிலை தெளிவாக புரிந்தது.... எழுந்துபோய் பாத்திரங்களை எடுத்து பையில் அடுக்கியவன் “ இனிமேல் என்னால உனக்கு எந்த பிரச்சனையும் வராது பவித்ரா... என்னை நம்பு” என்றான்...

அதன்பின் முத்து கால்கள் துவள சத்யனைத் தேடிச்சென்று அவனை அழைத்து போய் வார்டில் விட்டுவிட்டு வந்தான்.... பவித்ரா புறப்பட தயாராகி நின்றிருந்தாள் இருவரும் மவுனமாக வெளி கேட்டை நோக்கி நடந்தனர்...

“ இன்னைக்கு நைட் நான் ஊருக்கு கிளம்புறேன் ... மாமாவை தினமும் வந்து பார்த்துக்கங்க.... அத்தை சாப்பாடு செய்து தருவாங்க எடுத்துட்டு வந்து குடுங்க” என்று போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே போனாள் பவித்ரா....

முத்து “ ம்ம்” என்றானேத் தவிர வேறு எதுவும் பேசினான் இல்லை.... ஜீப் அருகில் வந்ததும் நின்று அவளைத் திரும்பிப்பார்த்தான்....

“ நான் வந்தமாதிரியே ஆட்டோவில் போறேன்... நீங்க கிளம்புங்க” என்றாள் பவித்ரா

சற்றுநேரம் அவளையே வெறித்துப் பார்த்த முத்து... பிறகு வேகமாக சென்று ஜீப்பில் ஏறினான்.... ஜீப்பை ஸ்டார்ட் செய்து அவளருகில் வந்து நிறுத்தி தனது பாக்கெட்டில் இருந்த ஒரு சீட்டை எடுத்து கசக்கி அவள் காலடியில் வீசிவிட்டு அதிவேகமாக ஜீப்பை கிளப்பிக்கொண்டு போனான்...

பவித்ரா அது என்ன சீட்டு என்ற குழப்பத்துடன் குனிந்து எடுத்துப் பிரித்தாள்.... அது நேற்று மருத்துவமனையில் கொடுத்த பில்லுடன் கூடிய மாத்திரை சீட்டு.... ‘ இதையேன் இப்போ தூக்கி போட்டுட்டு போறார்?’ என்ற கேள்வியுடன் மீண்டும் அந்த சீட்டை ஆராய்ந்தாள்....

அந்த சீட்டை ஆராய்ந்தவளின் பார்வை ஓரிடத்தில் அப்படியே நிலைக்க.... பவித்ராவின் கண்கள் மீண்டும் குழம்பிய குட்டையாக..... நெஞ்சுக்கூடு வேகமாக ஏறியிறங்க..... அவளின் சூடான சுவாசம் அந்த சீட்டில் மோதியது.... கண்ணீர் இதோ வழிந்து விட்டுவேன் என்று பயமுறுத்த... அந்த சீட்டை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்து நின்றிருந்த ஆட்டோவில் ஏறி போகவேண்டிய இடத்தை சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து கொண்டாள்....

மறைவிடம் வந்தது அவள் கண்கள் மடை திறந்து கொள்ள... கண்ணீர் கரைபுரண்டு வழிந்தது... தனது நெஞ்சில் இருந்த சீட்டை பிரித்து மீண்டும் பார்வையை ஓட்டினாள்....

அவளது கண்ணீர் எல்லா எழுத்துக்களையும் மறைத்தாலும்.... அந்த வரிகளை மட்டும் மறைக்காமல் தெளிவாக காட்டியது.... பவித்ராவின் உதடுகள் நடுங்க அந்த வரிகளை வாசித்தாள்.............. “ மிஸஸ் பவித்ரா முத்துக்குமார்”.....

அந்த சீட்டில் இருந்தது இந்த வார்த்தைகள் தான்.... இருவரின் பெயரும் இணைக்கப்பட்ட இவர்கள் காதலின் முதல் அத்தியாயம்....

மீண்டும் அந்த சீட்டை தனது நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.... அவளது கண்ணீர் வழிந்து அந்த சீட்டை நனைத்து அதை அவள் நெஞ்சோடு ஒட்ட வைத்தது...




“ உன் பார்வை அனல்பட்டு...
“ உதிரும் சருகாக நான்!
“ என் கண்ணீரின் குளிர்பட்டு....
“ உறையும் பனியாக நீ!


“ உன் பார்வை என்னை..
“ உற்றுப்பார்த்தாலும்...
“ உன் காதல் என்னை....
“ உரசிப்பார்த்தலும்...


“ இயல்பாய் என்னுள் நுழைந்து...
“ என் இதயக் கருவரையின்...
“ உயிர்ச் சங்கிலியைப் பிடித்திழுத்து...
“ என்னை உயிரோடு வதை செய்யும்....


“ உன் காதலில் இருந்து..
“ வெளியேற முடியாமல்..
“ சிக்கி தவித்து...
“ சின்னாபின்னமாகிறேன் நான்!



No comments:

Post a Comment