Monday, December 7, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 10

பால்கனியில் அமர்ந்து பல சிகரெட்களை கொன்றும் சத்யனுக்கு எந்த யோசனையும் வரவில்லை... எழுந்து வந்து மான்சியைப் பார்த்தான்..... கைகால்களை மடக்கிக்கொண்டு தூங்கிப்போயிருந்தாள்... சத்யன் கட்டிலருகே மண்டியிட்டு அமர்ந்து பக்கத்தில் அவள் முகத்தைப் பார்த்தான்.........

அழுது வீங்கிய இமைகள் அழகாக மூடியிருக்க... நேற்று இரவெல்லாம் இவன் சுவைத்த இதழ்கள் இன்று புது மெருகோடு பளபளப்பாக இருந்தது... நெற்றியில் விழுந்த முடிக்கற்றையின் நுனி அவள் உதட்டை உரசியது... அது ரொம்ப கவர்ச்சியாக இருந்தது..

ஆனால் சத்யனுக்கு அந்த முடிக்கற்றையின் மீது பொறாமையாக இருந்தது.. . சத்யன் தனது நாக்கை நீட்டி அதன் நுனியால் அந்த முடிகளை ஒதுக்கினான்.. பின்பு மெல்ல இதழ்களை நாவால் வருடினான்... மெல்ல மெல்ல ஈரமானது மான்சியின் இதழ்கள்...



எவ்வளவு அழகு இவள்... இது அத்தனையும் எனக்குத்தான்... சத்யனின் நெஞ்சு கர்வத்தில் நிமிர்ந்தது.... எவளுக்காகவும் ஏங்காத நான் இவளிடம் எதைக்கண்டு மயங்கினேன்? இவளைவிட அழகியை நான் பார்த்ததேயில்லையா? எட்டு மாசமா என்னை பைத்தியக்காரனாய் சுத்தவிட்டுட்டியே மான்சி? மூடி மூடி வைக்கிறவ தான் மொதல்ல அவுத்துப் போட்டுட்டு கட்டில்ல விழுவான்னு முதல்நாளே நான் சொன்னேன்.... ஆனா நீ எட்டு மாசம் கழிச்சு நேத்துதான் வந்து விழுந்த... நான் சொன்ன முதல்நாளில் இருந்தே இந்த அழகுக்காக தவிச்சுப் போய்ட்டேன் மான்சி.... நான் ஏங்கி தவிச்ச முதல் பொண்ணு நீதான்டி...’ என்று எல்லாவற்றையும் சரியாக யோசித்த சத்யன் இறுதியாக.....
‘அதுக்கு காரணம் என்னன்னு எனக்குத் தெரியும் மான்சி.... எல்லா பெண்களும் என்கிட்ட வந்து வழியும் போது நீ அலட்சியப்படுத்தினது தான் என்னோட வேட்கையை அதிகப்படுத்தியது... அதான் என்னோட தவிப்பும் ஏக்கமும் தீரும் வரை உன்னை என் பக்கத்துலயே என் படுக்கையிலயே வச்சிருக்கனும்னு முடிவு பண்ணி நாடகமாடி கொண்டு வந்தேன்’ என்று தனது தவிப்புக்கான காரணத்தை தவறாக கணக்கிட்டு அவளையும் வேதனைப் படுத்தி தன்னையும் வேதனைப்படுத்திக் கொண்டிருந்தான்...

வெகுநேரம் அவள் தூங்கும் அழகை ரசித்தவன்... மண்டியிட்டிருந்த முழங்கால்கள் வழிக்க எழுந்து கட்டில் ஏறி அவளுக்கு பக்கத்தில் படுத்து முதுகுப் பக்கமாக அணைத்தான்... தன் இடது கையை நீட்டி அதில் அவள் தலையை மெல்ல நகர்த்தி வைத்தவன்... வலது கையை அவள் அக்குள் பக்கமாக விட்டு அவள் மார்புகளுக்கு நடுவே போட்டு தன்னோடு இழுத்து அணைத்தான்....

அவன் அணைத்ததும் மான்சிக்கு உணர்வு வந்தது.... அவனிடமிருந்து விலக முயன்றாள்... சத்யன் அசையவிடாமல் பற்றிக்கொண்டு “ இல்ல......... இல்ல மான்சி நான் ஒன்னும் பண்ணலை தூங்கலாம்னு தான்.” என்றவன் வேறொன்றும் சொல்லாமல் அவளை தன் நெஞ்சோடு மென்மையாக அணைத்தான்... மான்சியிடம் எதிர்ப்பில்லை... இருவரையும் ஒரு மோன நிலை ஆக்கிரமிக்க.... மான்சி தன் உடலை நெளித்து வாகாக அவனுக்குள் அடங்கிப் படுத்துக்கொண்டாள்.... முதன்முறையாக செக்ஸ் உறவு கொள்ளாத அணைப்பில் ஒரு திருப்தியை உணர்ந்தான் சத்யன்... அவனுக்குள் ஒரு இதம் நிலவியது... இருவரும் அமைதியாக உறங்கினர்...

மறுநாள் விடியும்போதும் அந்த அணைப்பு விலகவில்லை... சத்யன் தான் முதலில் விழித்தான்...... விழித்தபின் அவளை அணைத்தபடி அப்படியே கிடந்தான்.... முதல்நாள் ஏற்பட்ட மனஉளைச்சலும்.. அழுத களைப்பும்.. மான்சியின் விழிகளை உறக்கமாக தழுவியிருந்தது... சற்றுநேரம் பொறுத்து... அவள் காதில் தனது மீசையால் தேய்த்த சத்யன் “ என்ன மேடம் எழுந்திருக்கிற மாதிரி ஐடியா எதுவும் இல்லை?” என்று குறும்பு குரலில் ரகசியமாக கேட்க..

மான்சியின் தூக்கம் பட்டென்று கலைந்தது.. இருக்கும் இடம் புரிந்தது... தன்னை அணைத்திருப்பது சத்யனின் கைகள் என்று புரிந்தது.. தான் என்ன நிலைமையில் அங்கே சிறைப்பட்டிருக்கிறோம் என்றும் புரிந்தது... கூச்சத்தில் உடல் குறுக சத்யனிடமிருந்து மெல்ல விலகினாள்...

அவள் விலகுதலுக்கு அனுமதித்த சத்யன் கழுத்தில் கலைந்து கிடந்த கூந்தலை விலக்கி அவள் பிடரியில் முத்தமிட்டு தான் விலக்கி அனுப்பினான்.... கலைந்து கூந்தலை அள்ளி கொண்டையாக சுருட்டியபடி... அளவான பின்புறங்கள் ஏறியிறங்க.. மெல்லிய இடை அசைய’’’ மென் நடையாக நடந்து செல்லும் மான்சியைப் பார்த்துவிட்டு... “ மான்சி” என்ற மெல்லிய முனங்கலுடன் அவள் இவ்வளவு நேரம் படுத்திருந்த தலையணையை எடுத்து தன் முகத்தில் வைத்து அழுத்திக்கொண்டான்..

ஒரு பெண்ணுடன் இரவெல்லாம் உறவுகொண்ட பிறகு அதிகாலை உறங்கிவிட்டு எழுந்திருக்கும் சத்யனின் வழக்கம் இதுவல்ல... காலையில் இவன் கட்டில் அவள் மீது இவனோ இவள்மீது அவனை படர்ந்து உறங்குவார்கள்... சிலநேரங்களில் போதை அதிகமாகி இருவருமே தரையில் உருண்டு கிடப்பார்கள்... காலை சுமார் எட்டு ஒன்பது மணிக்கு ஹோட்டல் அறையாக இருந்தால் டெலிபோன் ஒலியும்... வீடாக இருந்தால் வேலைக்காரர்கள் காலை உணவுக்காகவும் எழுப்புவார்கள்....

அதன்பின் முழு நிர்வாணமாக எழுந்து பாத்ரூம் போய்வரும் பெண்.... தனது உடைகளை அணிந்துகொண்டு.. குளிக்காத உடலுக்கும் முகத்துக்கும் ஒப்பனை செய்துகொண்டு... சத்யன் பாத்ரூமிலிருந்து வரும்வரை காத்திருப்பாள்... பிறகு அவன் தரம் பணத்துக்காக காத்திருப்பாள்.... பணம் கொடுத்ததும் திருப்தியுடன் முத்தமிட்டு செல்வார்கள்.... இவன் கம்பீரத்திற்கும் ஆண்மைக்கும் அதிகப்படியாக மயங்கிய பெண்கள் இலவச சேவையாக இன்னுமொரு முறை இவனை அழைத்து குதிரையேறி விட்டுப்போவார்கள்... அவளை அனுப்பிவிட்டு மறுபடியும் படுத்து உறங்குவான்.. எப்படிப் பார்த்தாலும் லாபம் வரும் பெண்களுக்குத்தான் இருக்கும்..

ஆனால் இன்றைய காலைப்பொழுது வித்தியாசமாக விடிந்திருந்தது... இத்தனைக்கும் இரவெல்லாம் உடல்கள் உறவு கொள்ளவில்லை... அதிகமாக மான்சியின் முகத்தை கூட பார்க்கவில்லை.... முதுகுப்புறம் அணைத்துப் படுத்து அவள் கூந்தலை நுகர்ந்தபடியே தான் தூங்கினான்... இதோ காலை ஆறு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது... இரவு எதுவும் கிடைக்கவில்லையே ஏமாற்றம் இருந்தது தான்... அது இப்போது இல்லை... ஒரு இனம்புரியா இதமும் சுகமும் மனதை ஆக்கிரமிக்க... தினமும் இதேபோல் தூங்கி இதேபோல் விழித்தால் எப்படியிருக்கும் என்று முதன்முறையாக ஏங்கியது சத்யனின் மனது....

மான்சி குளித்துவிட்டு தலையில் கட்டிய துண்டோ முழு ஆடையில் வெளியே வந்தாள்... ஏனோ சத்யனிடம் சிறு ஏமாற்றம் பார்வையில் தெரிய “ ஓ குளிச்சிட்டயா? என்றான்...

“ ம்ம்” என்றவள்... தனது பெட்டியிலிருந்து ஒரு பொட்டு அட்டையை எடுத்து அதிலிருந்து ஒன்றையெடுத்து நெற்றியில் ஒட்டிக்கொண்டு.... கூந்தலில் இருந்த டவலை எடுத்துவிட்டு கூந்தலை உதறி இரண்டு காதோரமும் கற்றையாக முடியை எடுத்து நடு தலையில் முடிச்சாகப் போட்டு அதை சிறு பின்னலாக பின்னினாள்... மிச்சமிருந்த கூந்தலை ஈரம் காய மொத்தமாக விரித்துவிட்டாள்...

பிறகு அங்கிருந்த ஜன்னல் அருகில் போய் நின்றுகொண்டு திரையை விலக்கி ஜன்னல் கண்ணாடியை தள்ளிவிட்டு வெளிர்நீல ஆகாயத்தில் திட்டுத்திட்டாய் கருமேகங்கள் உருண்டோடியதை வேடிக்கைப் பார்த்தாள்....

சத்யன் கட்டிலில் படுத்தபடி இது அத்தனையையும் ரசித்தான்... ஒன்றுமில்லாத இந்த ஒப்பனை அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது... இருநூறு ரூபாய் கூட பெறாத எளிமையான புடவை... கழுத்தில் மெல்லியதாக ஒரு செயின்... கைகளில் மெல்லிய கவரிங் வளையல்கள் இரண்டு... நெற்றியில் ஒற்றைப் பொட்டு.. விரித்துவிட்ட கூந்தல்.. இந்த எளிமையில் ஒரு பெண் அழகாக இருக்க முடியுமா? இருந்தாளே... மான்சி அழகாக இருந்தாள்...

சத்யன் கட்டிலை விட்டு எழுந்து மான்சியின் அருகில் போய் நின்று இடுப்பை இரண்டு கைகளாலும் மென்மையாகப் பற்றிக்கொண்டு அவள் தோளில் தனது முகத்தை ஊன்றி.... அவள் பார்த்த வானை இவனும் நோக்கி “ அங்க என்ன பார்க்குற மான்சி?” என்று கேட்க....

மான்சி திரும்பவில்லை விண்ணை வெறித்தப் பார்வையை அகற்றாமல் “ அழகான நீலநிற வானத்துல கருமேகங்கள் உலா வர்றது விண்ணுக்குகளங்கமா தெரியுது... கிட்டத்தட்ட நான் களங்கப்பட்ட மாதிரி.” என்று தெளிவாக கூறினாள்...




அவள் தோளில் இருந்த சத்யனின் தாடை ரொம்ப அழுத்தமாக பதிந்தது... இடுப்பை பற்றியிருந்த கைகளில் அழுத்தம் கூடியது.... “ மேகங்களை களங்கம்னு சொல்ற........ ஆனா அந்த மேகம் எல்லாம் ஒன்னா சேர்ந்து மழையா பெய்தால் தான் பூமிக்கு சந்தோஷம் மான்சி” என்றவனின் குரலில் சற்றுமுன் இருந்த மென்மை தொலைந்து போயிருந்தது....

“ மழையும் பெய்யவேண்டிய இடத்தை விட்டு இடம்மாறி.. காலந்தவறி தேவையில்லாமல் பெய்தால் பூமியில இருக்குறதெல்லாம் அழிஞ்சு மண்ணோட மண்ணா போயிடும்... நான் இப்போ அழிஞ்ச மாதிரி” மான்சியின் வார்த்தைகள் உக்கிரமாக வெளி வந்தது...

இதற்கு சத்யனிடம் பதில் இல்லை... இறுகிய பிடி தளர்ந்தது “ மான்சி ப்ளீஸ் இன்னிக்கு காலையிலே விழிக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருந்தேன் எதையாவது பேசி அந்த மூடை கெடுத்துடாத....” என்றவன் அப்படியே அணைத்துபடி நின்றிருந்தான்...

மான்சி எதுவும் பேசவில்லை அமைதியாக தொலைதூர மலை முகடுகளை பார்த்தாள்... இங்கிருந்து பார்க்க அது உண்மையில் மலையா அல்லது மேகமூட்டமா என்று புரியா வண்ணம் பனி மூடிய பின்னனியில் தெரிந்தது.. மான்சியும் உற்று உற்றுப்பார்த்தாள்.. ம்ஹூம் மென்மையான மேகங்களா கடுமையான மலைமுகடா தெரியவில்லை.. சத்யனைப் போல என்று எண்ணியது மான்சியின் மனம்... ஆனால் அவனையும் நம்பிக்கையின்மை என்ற பனிதான் மூடியிருக்கிறது என்று இருவருக்கும் புரியவில்லை...

டாப்சிலிப்க்கே உறிய யூக்கலிப்டஸ் மணம் நிறைந்த மென்மையான காற்று இருவர் முகத்திலும் மோதியது... ஒரே இடத்தில் இதுபோல் தன்னை மறந்து நிற்பது சத்யனுக்கு புதுசு... அதுவும் இதமான காற்றில் மென்மையாக ஒரு பெண்ணை அணைத்துக்கொண்டு நிற்பது ரொம்ப புதுசு.... சத்யனின் காற்றில் மிதப்பது போன்றதொரு உணர்வு...

வழக்கமாக அவன் அணைக்கும் அல்லது அவனை அணைக்கும் பெண்களிடம் இருந்து வரும் உயர்தர ஹேராயில் மற்றும் பர்ப்யூம் வாசனைகள் எதுவுமின்றி மான்சியின் கூந்தலில் இருந்து வந்த சீயக்காய். கஸ்தூரி மஞ்சள்.. புங்கங்காய்... பூளாங்கிழங்கு... வட்டக்காசு... நன்னாரி வேர்... செம்பருத்தி பூக்கள்... இவையணைத்தையும் ஒன்றுசேர்த்து கலவையாய் வந்த வாசனை சத்யனை மயக்கியது.. அவள் உடல் வாசனையோடு வந்த சின்தால் சோப் வாசனையும்.. சேர்ந்து சத்யனை இன்ப லோகத்திற்கு அழைத்துச்சென்றது...

அவனின் மயக்கநிலையை மான்சியால் உணரமுடிந்தது... ஓ நான் இப்படி இருந்தா உனக்கு பிடிக்குமா? சரி ரொம்ப நல்லது’ என்று மனசுக்குள் வன்மத்துடன் சிரித்துக்கொண்டாள்

கழுத்தில் உதடுகளால் உரசியபடி “ மான்சி நீ எப்பவுமே எந்த மேக்கப்பும் பண்ணிக்க மாட்டியா? மாடல் டிரஸ் எல்லாம் போடமாட்டியா? ரொம்ப சிம்பிளா இருக்க மான்சி” சத்யனின் மூச்சுக்காற்றுப் பட்டு மான்சியின் பிடரி மயிர்கள் சிலிர்த்தன....

“ எப்பவுமே இப்படித்தான்... உங்களுக்குப் படிக்கலைன்னா நீங்க வாங்கித் தர்றத போட்டுக்கிறேன்... அன்னிக்கு உங்கூட வந்தவங்க போட்டுருந்ததை விட சின்ன டிரஸா இருந்தாகூட வாங்கித்தாங்க போட்டுக்குறேன் ” மான்சி குரலில் வக்கிரம் விரவி தெரித்தது...

சத்யனின் மென்மை தொலைந்து போக முரட்டுத்தனமாக அவளைப் பற்றித் திருப்பி... “ ஏய் உனக்கு வார்த்தையால குத்தாம பேசத்தெரியாதா? நீ என்ன டிரஸ் போட்டா எனக்கு என்ன?” என்று வேகமாக திரும்பியவன் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமை நெருங்கினான்....

“ ஏன் கோபப்படுறீங்க... இப்பருந்தே பழக்கப்படுத்திக்கிட்டா தானே பிற்காலத்தில் நல்லது...” மான்சியின் ஏளனக் குரல் சத்யனைத் தடுத்து திரும்ப வைத்தது....
முகம் இறுக புருவம் உயர “ எதுக்கு நல்லது? ” என்றான்


“ எப்படியும் மூனு வருஷம் கழிச்சு இங்கருந்து நான் போனதும் வேற ஒருத்தனை கட்டிக்கிட்டு குடும்பமா நடத்தமுடியும்? மறுபடியும் உங்களை மாதிரி யாராவது பெரிய மனுஷனுக்கு வப்பாட்டியாவோ... இல்லேன்னா பறந்த மனசோட பல ஆண்களுக்கு படுக்கையில் சேவை செய்யும் பரத்தையாவோ தான் ஆகனும்... அப்போ நான் இதுமாதிரி பதினாறு முழம் புடவையை கட்டிக்கிட்டு இழுத்துப் போத்திகிட்டு இருந்தா வர்றவனுங்களுக்குப் பிடிக்குமா? அதான் இப்பருந்தே குட்டி குட்டி டிரஸெல்லாம் போட்டு பழகிக்கலாம்னு இருக்கேன் ” என்ற மான்சியின் குரலில் இருந்த வக்கிரம் சத்யனின் முகத்தில் பாறையாக வந்து மோத அவன் முகம் பாறையை விட கடுமையானது...

“ ஷிட்” என்று ஆத்திரத்துடன் தனது முழு பலத்தையும் திரட்டி பாத்ரூம் கதவை ஓங்கி ஒரு உதைவிட... பங்களாக்களில் ஷோவுக்காக வடிவமைக்கப்பட்ட அந்த கதவு இரண்டாகப் பிளந்து விழுந்தது

மான்சி உள்ளுக்குள் ஏற்ப்பட்ட நடுக்கத்தை மறைத்து கால்களை அழுத்தமாக தரையில் ஊன்றி நின்றுகொண்டாள்.... “ என்னை அடிக்கனும்னா அடிங்க கோபத்தை ஏன் கதவுகிட்ட காட்டுறீங்க” மறுபடியும் ஏளனம் செய்தாள்
ரௌத்திரமாய் அவளை நெருங்கி அவள் கூந்தலைப் பற்றி உலுக்கி “ நீ என்ன பேசினாலும் என்னை காயப்படுத்த முடியாது மான்சி... ஏன்னா மூனுவருஷம் முடிஞ்சாலும் நீ இங்கிருந்து போகமாட்ட... என்கிட்ட மயங்கி இங்கயே காலம் பூராவும் இருக்கத்தான் விரும்புவ மான்சி ” என்றும் கர்வமாய் கூறிவிட்டு நக்கலாய் சிரித்தான் சத்யன்

மான்சி அவனிடமிருந்து விடுபட்டு கலைந்த கூந்தலை சரி செய்தபடி அவனைப் பார்த்து “ ஓஓஓஓ அப்போ நான் உங்களுக்கு மூனு வருஷ வப்பாட்டி இல்லையா? நிறந்தர வப்பாட்டியா? ஆனா பாருங்க சத்யன்... இப்போதான் கான்ட்ராக்ட் நாமப் போட்ட ஒப்பந்தம் அது இதுன்னு சொல்லி ஏமாத்திட்டீங்க... மூனு வருஷம் முடிஞ்சதும் ஒரு நாளைக்கு.... ச்சேச்சே ஒரு முறைக்கு எவ்வளவு பணம் குடுப்பீங்கன்னு பேசின பிறகுதான் எதையும் முடிவு செய்யனும் சத்யன்” இதைச்சொல்ல மான்சிக்கு கூசியதோ இல்லையோ.. சத்யன் நெஞ்சுக்குள் கசப்பை உணர்ந்தான்...

அவளுக்கு விட்டுத்தர மனமின்றி “ பணம் என்னடி பணம்... அதான் இந்த பங்களா எஸ்டேட் எல்லாத்தையுமே தர்றேன்னு சொல்றேனே? ” என்றான் சத்யன்
தலைசாய்த்து அவனை ஏளனமாகப் பார்த்த மான்சி “ அய்ய எந்த தொழில் பண்ணாலும் அதுல ஒரு நேர்மை இருக்கனும் சத்யன்... உழைக்காம வர்ற காசு ஒட்டாது... அதனால நான் உடலால் உழைத்த பின் வரும் பலனையே எதிர்ப்பார்க்கிறேன்” என்ற மான்சி உடலால் என்ற வார்த்தைக்கு கொடுத்த அழுத்தம் சத்யனை முகம் சுளிக்க வைத்தது...

அவளை வெறுப்புடன்ப் பார்த்துவிட்டு உடைந்த கதவை காலால் ஒதுக்கித் தள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்... மான்சி அந்த ஜன்னலை விட்டு நகரவில்லை அப்படியே நின்றிருந்தாள் ..

சத்யன் வந்து உடை மாற்றியதும் “ பசிக்குது கீழே போகலாமா? ” என்று கூறிவிட்டு அவன் பதிலுக்காக காத்திருந்தான்... அவ்வளவு நேரம் இறுக்கமாக இருந்த சத்யன் அவள் பசியென்றதும் அவசரமாக அவளை நெருங்கி “ ஸாரிடா நேரமாச்சு வா போகலாம்” என்று அவள் விரல் கோர்த்து அழைத்துச்சென்றான்..
அறையை விட்டு வந்து படிகளில் இறங்கும் வரை ஒழுங்காக விரல் கோர்த்து வந்த மான்சி... படிகளில் இறங்கி முடித்து டைனிங் ஹாலுக்கு திரும்பும்போது அவன் வலது கையை எடுத்து தன் இடுப்பை சுற்றி வளைத்துக்கொண்டு... இடது கையை எடுத்து கழுத்து வழியாக சுற்றிப் போட்டு அந்த கையின் விரல்கள் அவள் இடது மார்பை வருடுவது போல் அவன் கையை முன்னால் இழுத்துக்கொண்டாள்.... தனது கையை அவன் இடுப்பில் போட்டு வளைத்துக்கொண்டு போனாள்...

அவன் அவளை முறைப்புடன்ப் பார்த்தபடி அவள் மார்பில் தவழ்ந்த தன் விரல்களை நகர்த்தப் பார்க்க... மான்சி அவனைப் பார்த்து கவர்ச்சியாக சிரித்தபடி விரல்களை விடாமல் பற்றிக்கொண்டாள்....


சத்யன் அமைதியாக டைனிங் டேபிளில் அமர..... மான்சி அவனுக்கு அருகில் அமர்ந்து தொடையில் இடது கை விரல்களை ஊன்றியபடி..... சாமுவேல் எடுத்து வந்து வைத்த காலை உணவை சாப்பிட்டாள்... ஆனால் அமைதியாக சாப்பிடவில்லை... அன்றொருநாள் ரீனா செய்தது போல சத்யனின் தோளில் சாய்ந்து பிறகு தன் மார்புகளால் அவன் தோள்களில் தேய்த்து உரசியபடி சாப்பிட்டாள்... அடிக்கடி சத்யனுக்கு ஊட்டுகிறேன் என்று அவன் வாயி வைத்த மீதியை சாப்பிட்டாள்...

சத்யன் தட்டை நோக்கி குனிந்து “ ஏய் மான்சி சாமு இருக்கான்” என்று எச்சரிக்கை செய்தான்...

அவனை நக்கலாகப் பார்த்த மான்சி “ இருக்கட்டுமே.... அவருக்கு முன்னாடி நீங்க எதுவுமே பண்ணதில்லையா? இல்ல நீங்கதான் யாருன்னு அவருக்கு தெரியாதா? இல்ல நான் இப்போ எதுக்காக எப்படி ஏன் இங்க இருக்கேன்னு அவருக்கு தெரியாதா” என்று நிறுத்தி நிதானமாக சொன்னவள் ...

அப்போது சூடாக பூரிகளை எடுத்து வந்த சாமுவேலைப் பார்த்து.... “ சாமு அண்ணா இனிமேல் இரண்டரை வருஷத்துக்கு நான் சத்யன் கூடத்தான் இருக்கப் போறேன்... சத்யன் என்னை காண்ட்ராக்ட் எடுத்திருக்கார்... அதனால இனிமேல் என்கிட்ட கேட்டுட்டு தான் எதையும் செய்யனும்... அப்புறம் எங்க பெட்ரூம்ல தினமும் பெட் கவர் மாத்தி எல்லாத்தையும் சுத்தமா க்ளீன் பண்ணனும்.. ஓகேயா ” என்று மான்சி சாமுவேலைப் பார்த்து அதிகாரமாக சொன்னாலும் அவளது கண்களில் இருந்த வலி அவளை காட்டிக்கொடுக்க சாமுவேல் கண்கலங்க “ சரிம்மா ” என்றான்.....

எட்டு மாதமாக மான்சியை உடனிருந்து பார்ப்பவன் ஆச்சே? அவனுக்குத் தெரியாதா அவள் எப்படிப்பட்டவள் இப்போது எப்படி வந்து மாட்டினாள் என்று...
சத்யன் தலை நிமிராமல் சாப்பிட்டு எழுந்தான்... அவன் கைகழுவிவிட்டு ஹாலுக்கு வந்ததும் அவன் பின்னாலேயே வந்த மான்சி “ நானும் எஸ்டேட்க்கு வர்றேன் சத்யன் இங்கயே இருந்தா போரடிக்குது ” என்று ஒயிலாக தலைசாய்த்து சொல்ல “ சரி வா போகலாம்” என்று அவளையும் அழைத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பினான்...

காரில் ஏறி அமர்ந்ததும் அவன் பக்கமாக முந்தானையை சரியவிட்டு சரிந்து அமர்ந்த மான்சியை பிடித்துத் தள்ளி “ ஏய் நான் காரை ஓட்டுறதா இல்லையா? புடவையை சரியாப் போட்டு நேரா உட்காருடி” என்று எரிந்து விழுந்தான்...
அசரவில்லை மான்சி “ இப்படியெல்லாம் இருந்தா உங்களுக்கு பிடிக்கும்னு தான் பண்றேன் ” என்றவள் மீண்டும் அவன் மீது சரியா விட்டாலும் முந்தானையை எடுத்து மூடிக்கொள்ளவில்லை அப்படியேதான் அமர்ந்திருந்தாள்...

சற்றுதூரம் போய் சத்யன் காரை நிறுத்திவிட்டு அவள் பக்கம் திரும்பி முந்தானையை எடுத்து அவள் தோளில் போட்டு விட்டு காரை கிளப்பினான்....

சத்யனின் கார் அலுவலகம் வந்தபோது அங்கே டாப்சிலிப் தொழிளாலர்களின் ஒட்டுமொத்த தொழிற்சங்க தலைவர் சத்யனை சந்திப்பதற்காக வந்து காத்திருந்தார்... அவருடன் எஸ்டேட் ஊழியர்கள் சிலரும் வந்திருந்தனர்....

அவரை சந்திக்க வேண்டும் என்று சத்யன் தான் வரச்சொல்லியிருந்தான்... ஆனால் காலையில் இவன் வரத்தான் தாமதமானது... சத்யன் சங்கடத்துடன் காரைவிட்டு இறங்கி அவர்களை நோக்கிப் போக... இந்தப்பக்கத்து கார் கதவை திறந்து இறங்கிய மான்சி.. சத்யன் வெறுமென போட்டுவிட்ட முந்தானை சரிந்து விழ அதை எடுத்து தோளில் போட்டு ஒழுங்குபடுத்திய படியே இறங்குவதை வந்திருந்த ஆண்கள் மொத்த பேரும் பார்த்தனர்... 


காரில் இருந்து முதலாளி முதலில் இறங்க... வேலைக்காரி முந்தானையை சீர்செய்தபடி பின்னால் இறங்கினால் பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றுமோ அதுதான் அவர்களுக்கும் தோன்றியது... ஒரு ஏளனமான நமுட்டுச் சிரிப்புடன் சத்யனைப் பார்த்தார்கள்...

வந்தவர் பார்வை போன திசையை திரும்பி பார்த்த சத்யன் உக்கிரமானான்... விழிகள் தெறிப்பது போல் மான்சியைப் பார்த்து “ ஆபிஸைத் திற மான்சி என்று சாவிக்கொத்தை அவளை நோக்கி வீசினான்

லாவகமாக சாவிக்கொத்தை பிடித்த மான்சி அவனைப் பார்த்து கவர்ச்சியாக இளித்து “ ஓகே டியர்” என்று கூறிவிட்டு அலுவலகத்தை நெருங்க.... அவள்கூப்பிட்ட டியரை சத்யன் வெறுக்க.... வந்திருந்த தொழிலாளர்கள் ஆவென்று வாயை திறந்தபடி பார்த்தனர்....

மான்சி அலுவலகத்தை திறந்ததும்... சத்யன் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அமர்ந்தான்... வரும் தீபாவளிக்கு வழங்கவிருக்கும் போனஸைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்... சத்யன் கூறிய தொகைக்கும் அவர்கள் கேட்ட தொகைக்கும் சில புள்ளிகளே வித்தியாசப்பட்டது... ஆனாலும் சத்யன் தனது பேச்சை விட்டுகொடுக்க வில்லை...

பேச்சுவார்த்தை எஸ்டேட்டின் லாப நஷ்ட கணக்கில் வந்து நிற்க.... “ க்கும் கண்டவளுக்கெல்லாம் எவ்வளவு செலவழிக்கிறான் ஆனால் உழைக்கும் தொழிலாளர்களுக்கு குடுக்குறதுல இவ்வளவு பிடிவாதமாக இருக்கான் பாரு ராஸ்கல்’ என்று வயிறு எரிந்த மான்சி ... எல்லோரும் டீ எடுத்துக்கொண்டு வந்து கொடுத்துவிட்டு சத்யனை உரசியபடி நின்று அவன் நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையை தனது கர்சீப்பால் ஒற்றியபடி “ என்ன டார்லிங் இப்படி பேசுறாங்க? பணம் என்ன கொட்டியா வச்சிருக்கு? எதுவும் தரமுடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டு வாங்க வீட்டுக்கு போகலாம்” என்று கொஞ்ச...

அவள் பேசியதை கேட்ட தொழிலாளர்கள் ஆத்திரத்துடன் எழுந்தார்கள்... “ என்னம்மா பேசுறீங்க? எங்களையெல்லாம் பார்த்தா கேனப் பயலுக மாதிரி தெரியுதா? ” என்று தொழிற்சங்க தலைவர் கோபமாக கேட்க....



மான்சி வேகமாக நிமிர்ந்து “ ஆமா உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுன்னு தான் சொல்வீங்க... முதலாளி வீட்டு தோட்டத்தில் மரம் வச்சிருக்கார்னு நெனைப்பு” என்றாள் எகத்தாளமாக....

அவ்வளவுதான் அத்தனைபேரும் கோபமாக எழுந்து நிற்க... சத்யன் அவசரமாக எழுந்து அவர்கள் அருகில் வந்து தலைவரின் தோளில் கைப்போட்டு “ அவ தெரியாம பேசிட்டா தலைவரே... அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்... எல்லாரும் ஈவினிங் வாங்க சுமுகமா பேசி முடிக்கலாம் ” என்று தயவாக பேசி அவர்களை வாசல்வரை வந்து அனுப்பினான்

அவனுடைய பணிவில் ஈர்க்கப்பட்ட தலைவர் “ தம்பி சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க? காலாகாலத்தில் கல்யாணத்தைப் பண்ணி பொண்டாட்டி புள்ளைன்னு சந்தோஷமா இருக்குற வழியப் பாருங்க... இது மாதிரி இருக்குற சிரிக்கிகளை கூட வச்சுக்கிட்டா உங்களையும் அழிச்சு உங்க பேரையும் நாரடிச்சிடுவாளுக... பொண்டாட்டி பொண்டாட்டி தான்... கூத்தியா கூத்தியா தான் தம்பி புரிஞ்சு நடந்துக்கங்க” என்று மான்சியின் காதில் விழும்படி அறிவுரை கூறிவிட்டு போக....

உடன் சென்ற தொழிலாளர்கள் “ அட வாங்கண்ணே இதைப் பத்தியெல்லாம் பேசிகிட்டு? அவ சின்னவீடு தானே அப்படித்தான் இருப்பா? இவ்வளவு நாளா எங்களுக்காக பாடுப்பட்ட நல்லவன்னு நெனைச்சோம்... இப்போ மொதலாளி பணத்துக்கு மயங்கிட்டாப் போலருக்கு ” என்று மேல்கொண்டு பேசிக்கொண்டே போனார்கள்...

மான்சி டீ தயாரிக்கும் தடுப்புக்குள் மறைந்து “ முருகா நான் அழக்கூடாது முருகா நான் அழக்கூடாது” என்று உதட்டை கடித்தபடி வேண்டிக்கொண்டிருக்க....

சத்யன் அவர்கள் கண்ணைவிட்டு மறைந்து அவர்களின் வார்த்தைகள் தேயும் வரை கேட்டுக்கொண்டிருந்து விட்டு உள்ளே வந்து இருக்கையில் தொப்பென்று விழுந்தான்... நெஞ்சுக்குள் ஏதோ சுருக் சுருக்கென்று தைக்க பெருவிரலால் அழுத்திக்கொண்டான்



No comments:

Post a Comment