Friday, December 4, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 2

“ அந்தப் பொண்ணு முனங்குது சத்யா... நான் உள்ள போய் பார்த்தேன்.. விடுங்கடா விடுங்கடான்னு அலறுது... எனக்கு பயமாயிருக்கு நீ வாடா” என்றான் தினா...

“ சரி இரு வர்றேன்” என்று கூறி செல்லை ஆப் செய்தவன் உடனே எழுந்து ஷெல்பில் ஒரு டீசர்ட்டை எடுத்து தலைவழியாக மாட்டிக்கொண்டே கதவை திறந்து வெளியே போய் மாடிப்படிகளில் தடதடவென இறங்கினான்...

தினாவும் சாமுவேலும் பதட்டமாக அறை வாசலில் நிற்க்க... “ தினா டாக்டர் குடுத்த மாத்திரை எடுத்துட்டு வா... சாமு நீங்க ஒரு டம்ளர் பால் கொண்டு வாங்க” என்று உத்தரவிட்ட சத்யன் கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடினான்...

கட்டில் கிடந்தவள் “ அய்யோ என்னை விடுங்களேன்” என்று துடித்தபடி உருண்டு கொண்டிருந்தாள்... கட்டிலின் விழிம்பில் பாதி உடல் தொங்கியது.... சத்யன் தாவிச்சென்று அவளை புரட்டி கட்டிலில் கிடத்தினான்... மறுபடியும் உருளாமல் பக்கத்தில் அமர்ந்து அவள் தோள்களை அசையாமல் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்



சத்யனின் கைப்பட்ட மறுவிநாடி அவளின் போராட்டம் அதிகமானது... கண்களை திறக்காமல் “ ஏய் என்னை விடுடா” என்று சத்யனை உதற முயன்றாள்...

சத்யனால் அவளை அடக்கிப் பிடிக்க முடியவில்லை.... துள்ளியது அவள் உடல் ... வில்லாய் வளைந்து எழும்பினாள்... எழுந்தவளின் தோளை அழுத்தமாகப் பற்றி தன் பக்கம் திருப்பி “ இதோபார் நீ நல்லாருக்க... அவங்ககிட்ட இருந்து உன்னை காப்பாத்தியாச்சு... உனக்கு எந்த ஆபத்தும் இல்லை... கண்ணைத்திறந்து பாரு” என்று உலுக்கினான்...

சத்யன் சொன்னதில் ஒரு வார்த்தை கூட அந்த பெண்ணின் காதில் விழவில்லை... அவள் நினைப்பெல்லாம் சத்யனை உதறித்தள்ளிவிட்டு ஓடுவதிலேயே இருந்தது.... சத்யனே சிலநிமிடங்கள் திணறிப் போனான்... மாத்திரையோடு தினாவும்... பால் டம்ளரோடு சாமுவேலும் திகைப்புடன் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்... அந்தப்பெண்ணின் ஆக்ரோஷம் அவர்களை நெருங்கவிடாமல் தடுத்தது...

சத்யன் சற்றுநேர அவளுடன் போராடிவிட்டு.. இறுதியாக அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டு “ தினா பால்ல மாத்திரையை கலந்து எடுத்துட்டு வாடா” என்று கத்தவும்... தினா அவசரமாக பாலில் மாத்திரையைப் போட்டு ஸ்பூனால் கலக்கி எடுத்து வந்து சத்யனிடம் கொடுத்தான்...

ஒருகையால் அவளை தன் நெஞ்சோடு இறுக்கிப்பிடித்து மறுகையால் அவள் உதட்டில் பால் டம்ளரை வைத்து அழுத்தி பால் வழியாத வாறு டம்பளரை அவள் வாயில் தினித்து புகட்டினான்.... முதலில் திமிறித் துப்பியவள் பிறகு வரண்டு போன தொண்டையை நனைத்துக் கொள்ள அவசர அவசரமாக குடித்தாள்...

அவள் குடித்ததும் டம்ளரை சாமுவேலிடம் கொடுத்து சத்யன் உதட்டில் விரலை வைத்து அமைதியாக அவர்களை வெளியேப் போகுமாறு சொன்னான்... தினா தலையசைத்துவிட்டு வெளியேற... அவனை தொடர்ந்து சாமுவேலும் சென்றான்...

ஏனோ தெரியவில்லை அவளின் எதிர்ப்பு அடங்கியிருந்தது... துவண்டு போயிருந்தவளை நெஞ்சில் சுமந்தபடி சற்றுநேரம் அமைதியாக அமர்ந்திருந்தான் சத்யன்... அவள் தலை துவள ஆரம்பித்ததும் கட்டிலில் கிடத்தி தலையணையை சரிசெய்துவிட்டு எழுந்தான்...

அவளையே சற்றுநேரம் பார்த்தான்... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவள் போராடியது சத்யனுக்கு வித்தியாசமாக இருந்தது... அவனது ஒற்றைப் புன்னகைக்கு ஆடையின்றி கட்டிலில் விழும் பெண்களைத்தான் இதுவரையில் அவனுக்குத் தெரியும்.... இந்த போராட்டம் அவனுக்கு புதுசு என்றாலும் அவனுக்கு ஆத்திரம்தான் வந்தது ... முட்டாள்பெண்.. கேவலம் ஐந்து நிமிட சுகம் இதற்குபோய் இப்படியா உயிரைக்கொடுத்து போராடுவது என்று எண்ணியபடி அவள் போர்வையை சரி செய்துவிட்டு வெளியே வந்தான்...


அதன்பின் சத்யனும் ஹால் சோபாவிலேயே படுத்துவிட்டான்... நள்ளிரவு வரை கார் ஓட்டியதும் .. இரவெல்லாம் விழித்திருந்ததும் சேர்ந்து அடித்துப் போட்டார்போல் உறக்கம் வர .. மறுபடியும் அவன் விழித்தபோது மணி எட்டரை ஆகியிருந்தது...

தினா அங்கே இல்லை ... சமையலறையில் அவன் குரல் கேட்டது... சத்யன் எழுந்துபோய் அந்தப்பெண் படுத்திருந்த அறைக்கதவை திறந்து பார்த்தான்... இவன் படுக்க வைத்த நிலையிலேயே அப்படியே கிடந்தாள்...

மறுபடியும் வெளியே வந்து தனது அறைக்குப் போய் குளித்து உடை மாற்றிக்கொண்டு கீழே வந்தான்... சமையலறையை ஒட்டியிருந்த பூஜையறைக்கு சென்று தனது தாயின் படத்தின் முன்பு கண்மூடி நின்றான்... அவன் மனதில் அந்த சமயத்தில் அவன் தாயிடத்தில் எந்த வேண்டுதலும் இல்லை... அதனால் அமைதியாக கண்மூடி நின்றுவிட்டு வெளியே வந்தான்

காபியும் டிபனும் தயாராகியிருக்க மேசையில் அமர்ந்து வெளுத்துக் கொண்டிருந்தான் தினா.... சத்யனைப் பார்த்ததும் ஒரு அசட்டுச் சிரிப்புடன் ... “ நைட் கண்முழிச்சது ஓவர் பசி சத்யா” என்றான்...

சத்யன் சிறு சிரிப்புடன் அவனருகே அமர்ந்து டிபனை சாப்பிட்டுவிட்டு எழுந்தபோது டாக்டர் பிரேமலதா வந்துவிட்டதாக சாமுவேல் வந்து சொன்னான்...

இருவரும் அவசரமாக எழுந்து அந்தப்பெண் படுத்திருந்த அறைக்குப் போனார்கள்... டாக்டர் அந்தப்பெண்ணின் கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றுகொண்டிருந்தாள்... சத்யன் கட்டிலில் பக்கத்தில் சென்று நின்று அவள் முகத்தையே கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தான்...

“ ஏன்மா எழுந்து கண்திறந்து பாருங்க” என்று லதா பத்துமுறை கூப்பிட்டப் பிறகு பதினோராவது முறை கண்திறந்தாள் அந்த கசங்கிப்போன கவிதைப்புத்தகம்... விழித்ததுமே சுற்றுமுற்றும்ப் பார்த்துவிட்டு மிரண்டவள் இறுதியாக லதாவின் மீது பார்வை படிந்ததும் அவசரமாக அவள் கையைப் பற்றிக்கொண்டு.“ என்னை காப்பாத்துங்களேன்” என்றாள் பழையபடியே

அவள் கையை ஆறுதலாகத் தட்டிய லதா “ உன்னை காப்பாத்தி முழுசா பணிரெண்டு மணிநேரம் ஆச்சு... இனிமேல் உனக்கு எந்த ஆபத்தும் இல்லை... இதோ இவர்தான் உன்னை காப்பாத்தி அவர் கார்ல கூட்டிட்டு வந்து எனக்கு தகவல் சொன்னார்” என்று லதா சத்யனை கைகாட்டியதும் ..

அவளின் மிரண்ட பார்வை சத்யனை தொட்டு பிறகு தாழ்ந்தது.. துவண்ட கரங்களை கூப்பி “ நன்றிங்க” என்றாள் ஒரே வார்த்தையில்...

சத்யன் அவள் நன்றியை ஏற்றுக்கொண்டதாகவே தெரியவில்லை.. முதலில் அவளைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வத்தில் “ உன்னோட நன்றிக்காக நான் இதை செய்யலை... மொதல்ல நீ யாரு? உன் பெயர் என்ன? உன்னை கார்ல கடத்திட்டு வந்தவங்க யாரு? அதை சொல்லு? ” என்றான்...

அவள்ப் பார்வை மீண்டும் உயர்ந்து சத்யனைத் தொட்டு லதாவிடம் வந்தது... “ ம்ம் சொல்லும்மா? நீ யாரு? அவங்ககிட்ட எப்படி மாட்டினே?” என்று லதாவும் வற்புறுத்தி கேட்க...

அந்தப்பெண் தனது செப்பு வாயைத் திறந்து “ என்னோட பெயர் மான்சி... நான் பிகாம் முடிச்சிருக்கேன்.. சொந்த ஊர் விருதாச்சலம் பக்கத்துல ஒரு கிராமம்.. அப்பா இல்லை... அம்மாவும் இரண்டு தங்கச்சி ஒரு தம்பியும் இருக்காங்க... ஸ்டெனோ வேலைக்காக கோயமுத்தூர் வந்து ஒரு கம்பெனியில வேலை செய்றேன்” என்று தன்னைப் பற்றி கூறியவள்.. இவர்களின் அடுத்த கேள்விக்கு பதில் சொல்லாமல்... முகம் கலவரமடைய கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்...

சத்யன் யோசனையுடன் அவள் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான்




" தினமும் ஆயிரமாயிரம்...

" கோரிக்கைகளை சுமந்தபடி...

" உன் வாசலில் காத்துக்கிடக்கிறது...

" என் இதயம்!

" ஒன்று திருப்பி அனுப்பி வை!

" இல்லை அழைத்து வை !

" நீ செல்லமாய் இமைத் தட்டி அழைத்தால்...

" நான் இதயம் தடுக்கிட வந்து விழுவேன்! 

அவள்ப் பார்வை மீண்டும் உயர்ந்து சத்யனைத் தொட்டு லதாவிடம் வந்தது... “ ம்ம் சொல்லும்மா? நீ யாரு? அவங்ககிட்ட எப்படி மாட்டினே?” என்று லதாவும் வற்புறுத்தி கேட்க...

அந்தப்பெண் தனது செப்பு வாயைத் திறந்து “ என்னோட பெயர் மான்சி... நான் பிகாம் முடிச்சிருக்கேன்.. சொந்த ஊர் விருதாச்சலம் பக்கத்துல ஒரு கிராமம்.. அப்பா இல்லை... அம்மாவும் இரண்டு தங்கச்சி ஒரு தம்பியும் இருக்காங்க... ஸ்டெனோ வேலைக்காக கோயமுத்தூர் வந்து ஒரு கம்பெனியில வேலை செய்றேன்” என்று தன்னைப் பற்றி கூறியவள்.. இவர்களின் அடுத்த கேள்விக்கு பதில் சொல்லாமல்... முகம் கலவரமடைய கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்...

சத்யன் யோசனையுடன் அவள் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தான்...

அவன் தன்னையேப் பார்ப்பதை உணர்ந்து முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கி... கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு லதாவைப் பார்த்து... “ டாக்டர் நான் வேலை செய்ற கம்பெனி முதலாளிகள் தான் அவனுங்க... அது ஒரு நூல் மில்... மூனுபேர் பார்ட்னர்ஸ் ... இன்னிக்கு ஆழியார் டேம் கெஸ்ட்ஹவுஸ்ல ஒரு மீட்டிங் இருக்குன்னு என்னையும் கூட்டிட்டு வந்தாங்க... இவங்ககூட கம்பெனி ஆடிட்டரும் வந்தான்.. ஆனா பொள்ளாச்சிலயே ஒரு பங்களா எடுத்து தங்கிட்டு நைட் கிளம்பி ஆழியார் போகலாம்னு சொன்னாங்க... பொள்ளாச்சில இருக்கும்போதே ஆடிட்டர் என் ரூமுக்கு வந்து தப்பா நடந்துக்க முயற்ச்சிப் பண்ணான்.. நான் ரூம்ல இருந்து வெளிய வந்துட்டு என் முதலாளிகள் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணேன்... அவங்க நாங்க பேசிக்கிறோம் மான்சி.. அவன் நடந்துகிட்டதுக்கு ஸாரின்னு சொன்னாங்க... அப்புறமா கார்ல வரும்போது தான் அவங்க சுயரூபம் தெரிஞ்சுது... பொள்ளாச்சில இருந்து கிளம்பி கொஞ்சநேரத்தில் பின் சீட்ல இருந்த ரெண்டு பேரும் முன்னாடி என் சீட்டுக்கு வந்தாங்க... அதுக்கப்புறம்........ “ என்றவள் மேலே சொல்ல முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு மவுனமாக கண்ணீர் விட ஆரம்பித்தாள்...

சத்யன் எந்த சலனமுமின்றி பார்த்துக்கொண்டிருக்க.... லதா மான்சி முகத்தை இழுத்து தன் தோளில் சாய்த்து “ அழாதம்மா... நீ இருக்குற நிலையில் அழுதா ஜன்னி வந்திரும்... அதான் இப்போ தப்பிச்சிட்டயே அது போதும்” என்று சொல்ல...

“ இல்லைங்க மேடம் அவங்ககிட்ட ஆறு மாசமா வேலை செய்தும் அவனுங்களைப் பத்தி புரிஞ்சுக்காதது என் தப்புதான்... சம்பளத்தை விட அதிகமா பணம் தர்றோம்னு சொல்லி அவனுங்க கூப்பிட்டதும் என் குடும்ப கஷ்டத்தை நெனைச்சு வந்தேன்.. ஆனா இவனுங்க இப்படிப் பண்ணுவானுங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... நானும் என்னால முடிஞ்ச வரைக்கும் போராடினேன் அவங்க நாலுபேரும் என்னை ரொம்ப அடிச்சாங்க மேடம்... கடைசில வேற வழியில்லாம கார் கதவை திறந்து குதிச்சிட்டேன்... அவனுங்களுக்கு கிடைக்காம செத்துப்போகனும்னு தான் நான் குதிச்சேன்” என்று மான்சி முடித்தவுடன் ..

ஊப்ஸ் என்ற பெருமூச்சுடன் மான்சியைப் பார்த்த சத்யன் “ நீ குதிச்சதுல தப்பில்லை ஆனா என் கார்ல அடிப் பட்டு செத்திருப்பியே.... நானும் கம்பி எண்ணியிருப்பேன்... நல்ல பொண்ணு ” என்று அலட்சியமாக சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினான்...

அவன் அலட்சியத்தால் மான்சி அவமானத்தில் குறுகினாள் ... லதா அவள் தோளை தட்டி “ சத்யன் எப்பவுமே இப்படித்தான் பேசுவார்... ஆனா நல்லவர்... நேத்து உன்னை அங்கயே போட்டுட்டு வராம தூக்கிட்டு வந்து எனக்கு போன் பண்ணி வரவழைச்சு.. உனக்கு ட்ரீட்மெண்ட் பண்ணி... இதோ இந்த நைட்டியை கூட அவர்தான் உனக்கு போட்டு விட்டுருக்காரு போல...” லதா சொல்லி முடிக்கவில்லை ... அதற்குள் “ என்னது அவர் போட்டுவிட்டாரா?” என்று அதிர்ச்சியுடன் கூவினாள்...



“ ஆமாம் ஆபத்து பாவமில்லை மான்சி” என்ற லதா “ சரி இப்போ என்ன முடிவு பண்ணிருக்க... போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணலாமா? உன் ஊருக்குப் போறியா?” என்று கேட்க..

மான்சி சிறிதுநேர யோசனைக்குப் பிறகு... “ இல்லைங்க மேடம் அவனுங்க பணக்காரனுங்க ... நான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணாலும் போலீஸையும் விளைக்கு வாங்கிடுவானுங்க... ஆனா அவனுங்களுக்கு தண்டனை கிடைக்கும்... நான் தினமும் கும்பிடுற முருகக்கடவுள் அவனுங்களை சம்ஹாரம் பண்ணுவார்.. அதை என் கண்ணால ஒருநாள் பார்ப்பேன்னு நம்பிக்கையிருக்கு” என்று விழிகள் சிவப்பாகி கண்ணீரில் மிதக்க ஆவேசத்துடன் அவள் சொல்ல... அங்கே நின்றிருந்த தினாவுக்கு உடலெல்லாம் சிலிர்த்தது...

நல்லவேளை சத்யன் அந்த இடத்தில் இல்லை.. இருந்திருந்தால் இவள் பேச்சுக்கு விழுந்து விழுந்து சிரித்திருப்பான்.... என்று நினைத்த தினா ‘ இந்த ஆவேசமும் தன்நம்பிக்கையும் தான் நாலுபேரிடமும் போராடி அவள் கற்ப்பை காப்பாற்றிக்கொள்ள உதவியிருக்கு என்று எண்ணினான்... அவன் மதிப்பில் மான்சி உயர்ந்து விட்டாள்... கட்டிலை நெருங்கியவன் “ நான் சத்யனோட நண்பன் தினா... நைட் நான்தான் டாக்டரைக் கூட்டிட்டு வந்தேன்... சரிங்க போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணவேண்டாம்.. உங்க ஊருக்கு போறீங்களா... இன்னும் கொஞ்சம் உடல் தேறியதும்?” என்று அன்பாக கேட்டான்...

மீண்டும் மான்சியின் விழிகளில் கண்ணீர் “ இல்லைங்க ஊருக்குப் போனா என்னோட இன்னும் நாலுபேர் சேர்ந்து பட்டினிதான் கிடக்கனும்.... உடம்பு நல்லானதும் வேற வேலை ஏதாவது தேடனும்... எதுவுமில்லாம நான் ஊருக்குப் போகமுடியாது” என்றவள் சட்டென்று லதாவின் கைகளைப் பற்றிக்கொண்டு “ மேடம் நீங்க டாக்டர் தானே.. உங்களுக்குத் தெரிஞ்ச இடத்தில் ஏதாவது ஒரு வேலை வாங்கி குடுங்களேன் .. நான் சம்பாதிக்கலைன்னா என் குடும்பமே பட்டினி கிடக்கும் மேடம்... எனக்கு சின்னவங்க மூனுபேரு படிக்கிறாங்க... மூனுபேரும் பார்ட் டைம் ஜாப் பார்த்து அவங்க படிப்பு செலவைப் பார்த்துக்கிறாங்க... சாப்பாடுக்கு நான் அனுப்பும் பணம்தான் மேடம்.. எனக்கு ஹெல்ப் பண்ணுங்க” என்று கண்ணீர் வழிய உறுக்கமாக வேண்டினாள்...

லதா அழும் மான்சியை சங்கடத்துடன் பார்த்தாள்... “ இல்லம்மா நான் அந்தளவுக்கு பெரியாள் கிடையாது... சாதரணமான ஏழைகளுக்கு வைத்தியம் பண்ணும் கிராமத்து மருத்துவச்சி மாதிரி நான்... நான் போய் உனக்கு எப்படி வேலை தேடித் தரமுடியும்” என்று தன் நிலையை கவலையுடன் கூறினாள்..

“ கவலைப்படாதீங்க டாக்டர் சத்யன்கிட்ட சொல்லி எங்க எஸ்டேட்லயே இவங்களுக்கு ஒரு வேலைக்கு ஏற்ப்பாடு பண்ணலாம்.. எஸ்டேட் கணக்கு வழக்குப் பார்க்க ஒருஆள் தேவைதான்... நான் சத்யன்கிட்ட கேட்டு தகவல் சொல்றேன்” என்று கூறி இரண்டு பெண்கள் முகத்திலும் ஆறுதலை வரவழைத்தான்

“ சரி நானும் இதுபற்றி சத்யன் கிட்ட சொல்லிட்டுப் போறேன்.” என்ற லதா மான்சியிடம் திரும்பி “ நீ ஏதாவது சாப்பிட்டு விட்டு மாத்திரை போட்டுகிட்டு ரெஸ்ட் எடு நான் ஈவினிங் வந்து காயங்களுக்கு டிரஸிங் மாத்துறேன்... காயம் ஓரளவுக்கு ஆறுகினற வரைக்கும் குளிக்க முடியாது வெண்ணீர்ல உடம்பை தொடைச்சுக்கோ... எழுந்திருக்க ட்ரைப் பண்ணாத இரண்டு முட்டியிலும் பலத்த காயம் இருக்கு... மயக்கம் வரலாம் ” என்று எச்சரித்துவிட்டு... தினாவை தன் பார்வையாலேயே வெளியேப் போகச்சொல்லி விட்டு... மான்சியின் காயங்களை பரிசோதித்து ஊசி போட்டாள்...

தினா வெளியே வந்தபோது சத்யன் சோபாவில் அமர்ந்து எஸ்டேட் சம்மந்தமான பைலைப் பார்த்துக்கொண்டிருந்தான்... தினா அவன் அருகில் போய் அமர்ந்ததும் நிமிர்ந்து பார்த்து புன்னகையுடன் “ என்ன தினா அந்த பொண்ணோட வீர பிரதாபங்கள் எல்லாம் சொல்லி முடிச்சிட்டாளா? இப்போ போலீஸ்க்கு போறாளாவாம்?... இல்லை?” என்று கேள்வியை முடிக்காமல் நிறுத்தினான்...

“ இல்ல சத்யா போலீஸ்க்கு போன அந்த பணக்காரங்களை எதிர்க்க முடியாதாம்... அவள் கும்பிடும் முருகக்கடவுள் அவனுங்களுக்கு தண்டனை கொடுப்பான்.. அதை நான்ப் பார்ப்பேன்னு ஆவேசமா சொல்றா சத்யா... எனக்கு அப்படியே உடம்பெல்லாம் சிலுத்துகிச்சுடா... இந்த ஆவேசம் தான் அவளை ஆபத்திலிருந்து காப்பாத்தியிருக்கு ” என்று ஆவர்மாக தினா கூற

அவனை நக்கலாகப் பார்த்த சத்யன் “ ஆமா ஆமா உனக்கு எதுக்குத்தான் சிலுத்துக்களை... பொம்பளையாப் பொறந்து எவனையாவது கல்யாணம் பண்ணி அஞ்சாறு புள்ளையை பெறவேண்டியவன் இப்புடி ஆம்பளையா பொறந்து என்னை இம்சை பண்றடா... முருகன் வந்து காப்பாத்துவாராம்..... அவ சொன்னாளாம் இவனுக்கு சிலிர்த்துச்சாம்.. போடாப் போ அவகூட சேர்ந்து நீயும் கந்தனுக்கு காவடி எடு .. இப்போ எனக்கு பதிலை சொல்லு... எப்போ அவ வீட்டுக்குப் போறாளாம்?” என்று சத்யன் ஏளனமாக கேட்க...

சத்யனை ஆச்சர்யமாக பார்த்த தினா “ நீ என்னை வேனும்னாலும் சொல்லிக்க .... ஆனா அந்த பொண்ணை ஏன் அவ வீட்டுக்கு அனுப்புறதுலயே குறியா இருக்க? உனக்கு அழகான பெண்களை கூடவே தங்க வச்சிக்கத் தானே பிடிக்கும்? இந்த பொண்ணைப் பார்த்து பயப்படுறியா?” என்று கேலியாக கேட்டான்...
இந்த கேள்விக்கு சத்யனின் முறைப்பையே பதிலாக பெற்றான் தினா.... “ சொல்லுடா பயம் தானே?” தூண்டினான் தினா ...

“ ஏய் எனக்கெல்லாம் இவ தூசு மாதிரி... நான் ஏன் இவளைப் பார்த்து பயப்படனும்? இவளை அனுப்பாம இங்க வச்சுகிட்டு குடும்பமா நடத்த முடியும்? உனக்கேத் தெரியும் இந்தமாதிரி ஓவர் பில்டப் குடுக்குற பொண்ணுங்களை எனக்கு பிடிக்காதுன்னு? இவளுங்களும் டென்ஷனாகி ... நம்மளையும் இம்சை பண்ணுவாளுங்க... மொதல்ல இவளை பேக்ப் பண்ணனும்டா?” என்று சத்யன் எரிச்சலாக கூற... தினா அவன் முகத்தையேப் பார்த்தபடி அமைதியாக இருக்க... தேவையில்லாமல் மான்சியின் மீது வெறுப்பை காட்டுகிறோமோ என்று சத்யனுக்கு தோன்ற.. சற்று அமைதியாகி “ சரி ஏதோ சொல்ல வந்தியே அதை சொல்லு? ” என்றான் தணிந்த குரலில்..

“ எங்க நீ பேசினதுல நான் கேட்க வந்ததே மறந்துடும் போலருக்கே? மான்சி விஷயமா தான் பேச வந்தேன்... ஆனா இப்போ அது தேவையில்லைனு தோனுது ” என்ற தினாவின் குரலில் இருந்த வெறுமை வழக்கம் போல சத்யனை லேசாக உலுக்கியது..

“ இப்படியே குரலை பாவமா வச்சிகிட்டே என்னை கவுத்துடுடா.. சொல்லித் தொலை நான் என்ன செய்யனும்?” என்ற சத்யனின் குரலில் எரிச்சலோ கோபமோ இல்லை...

சத்யன் தனக்காக எதையும் செய்வான் என்று தினாவுக்கு தெரியும் “ இந்த மான்சி ரொம்ப பாவம்டா” என்றவன் அவள் குடும்ப நிலைமையை சத்யனிடம் எடுத்துச்செல்லி “ உன்கிட்ட பேசி ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்றேன்னு மான்சிகிட்ட சொல்லிருக்கேன் சத்யா.. இப்போ நீதான் ஓகே சொல்லனும்?” என்றான்..

அவன் சொல்வதை கேட்டபடியே அமைதியாக பைலைப் பார்த்த சத்யன் அலட்சியமான சிரிப்புடன் நிமிர்ந்து “ இவ்வளவு அழகான பொண்ணு சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறான்னு சொல்றது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு தினா.. ம்ஹ்ம் இதைப்பத்தி விளக்கிச் சொன்னா உனக்குப் பிடிக்காது.. சரி இப்போ அவளுக்கு தர்ற மாதிரி எந்த வேலையும் நம்மகிட்ட காலி இல்லையேடா?” என்று குழப்பமாக தினாவிடமே கேட்டான்...

“ சத்யா நான் சொல்றேன்னு தவறா நினைக்காதே? முன்ன மாதிரி என்னால ரெண்டு எஸ்டேட்டையும் கவனிச்சுக்க முடியலைடா... எங்க எஸ்டேட்ல அப்பா தனியாயிருந்து கஷ்டப்படுறார்... அதனால இந்த எஸ்டேட் பொறுப்புகளை மான்சிகிட்ட குடுத்துட்டு எனக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் வந்து கணக்கு வழக்கை கவனிச்சுக்கறேன்... ப்ளீஸ்டா இதுக்கு நீ ஒத்துக்கனும்” என்ற தினா கெஞ்சினான்....

“ எல்லாம் நீயே முடிவு பண்ணிட்டு அப்புறமா நான் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்ல கையெழுத்து போடனும்? ... வழக்கமா இதுதானே நடக்குறது? இப்பவும் அதத்தான் செய்திருக்க? தினா நீ சொல்லி நான் எதையும் மறுக்க மாட்டேன்... ஆனா நீ வந்து பார்த்துக்கறதா இருந்தா மட்டும் இவளை அப்பாயிண்ட்மென்ட் பண்ணு ... அப்புறம் இந்த கத்துக்குட்டி கற்புக்கரசியால என் எஸ்டேட் திவாலாயிடும்” என்று மான்சியை மறுபடியும் கிண்டல் செய்தான் சத்யன்....

தினா சத்யனின் கையைப் பற்றி “ சத்யா நீ அவளுக்கு வேலை குடுக்கலைன்னா கூட பராவாயில்லை... ஆனா இந்த மாதிரி கேலி பேசாதடா? பாவம் ரொம்ப நொந்து போயிருக்கா?” என்று வருத்தமாக கூற...

சத்யனுக்கு ஒருமாதிரியாகிவிட்டது “ சரி விடு இனி பேசலை ... ஆனா இந்த பொண்ணு மேல நீ இவ்வளவு அக்கறை காட்டுறதை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு... ஏதாவது சம்திங்?” என்று கூறிவிட்டு நண்பனை கேள்வியாகப் பார்த்தான் சத்யன்..

வெடுக்கென்று அவனை முறைத்த தினா “ உன்னை மாதிரியே எல்லாரையும் நினைக்காதே தம்பி... நான் வரப்போற பத்தினிக்காக இப்பவே ஏகபத்தினி விரதனா காத்திருக்கேன்... உன்னைப்போல் ஏகப்பட்ட பத்தினி விரதன் நான் இல்லை... இந்த மான்சி எனக்கு தங்கை மாதிரி ” என்று தினா கோபமாக கூற...

“ தங்கை மா...தி....ரி..... தானே? தங்கை கிடையாதே?” என்ற மறுபடியும் நக்கலாய் சிரித்தான் சத்யன்.... தினா முகம் இறுக எழுந்துகொண்டான் .... சத்யன் அவன் கையைப்பிடித்து இழுத்து அமர வைத்து “ டென்ஷன் ஆகாதேடா மச்சான்... உலக நடப்பை சொன்னேன்... சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எவனும் யோக்கியனும் இல்லை... சூழ்நிலை தவறினால் எவளும் பத்தினியும் இல்லை... இது என் கொள்கை... நீ சேலை கட்டுனவள் எல்லாம் மாரியாத்தான்னு சொல்லி பொங்கல் வச்சு பூஜை போடுறவன்... நான் அந்த சேலைகுள்ள என்ன இருக்குன்னு நிமிஷத்தில் கண்டுபிடிக்கிறவன்... என்கிட்ட வேஷம் கிடையாதுடா தினா... இதுதான்.... இப்படித்தான் என்று வெளிப்படையா இருக்குறவன் நான்” சத்யன் தன்னைப் பற்றி நீண்டதொரு பிரசங்கத்தை முடிக்க...

தினாவின் முகத்தில் மறுபடியும் கோபத்தின் குமுறல்கள்... சத்யனை கூர்ந்து பார்த்து “ ஏன் சத்யா பார்க்குற எல்லா பொண்ணுங்களையும் மயக்கி உன் காலடியில விழ வைக்கிறயே? நம்ம டாக்டர் லதா கிட்ட மட்டும் ஏன் நெருங்க மாட்டேங்கற... அவங்களும் அழகான பொண்ணு தானே?” சத்யனின் முகம் கோபத்தில் ஜொலிப்பதை கண்டு அசையாமல் இருந்தான் தினா..

“ வேணாம் தினா என்னை கோபப்படுத்தாதே... லதாவோட சேவையில் நான் என் அம்மாவை பார்க்கிறேன்... இந்த உலகத்திலேயே நான் மதிக்கும் ஒரே பெண் இவங்க மட்டும்தான்... எப்பவுமே அவங்க கிட்ட நான் இப்படியே இருக்கனும்னு ஆசைப்படுறேன்... இன்னொரு முறை இவங்ககூட வேற யாரையும் ஒப்பிட்டு பேசாதே” என்று எச்சரிக்கை விடுத்தான் சத்யன்

“ ம்ம் அப்படித்தான் எனக்கும்... உனக்கு லதாவைப் பார்த்தா அம்மாவா தெரியுது... எனக்கு மான்சியைப் பார்த்தா ஒரு பெண் தெய்வமா தெரியுது... உன் கொள்கையில நான் தலையிடலை... அதேபோல் என் கொள்கையில நீ தலையிடாதே.... இப்போ மான்சிக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணவா வேண்டாமா?” என்றான் தினா...

“ கொஞ்சம் வெயிட் பண்ணு... டாக்டர் போனதும் நான் அந்த பொண்ணுகிட்ட பேசிட்டு என் முடிவை சொல்றேன்” என்ற சத்யன் மீண்டும் பைலில் மூழ்கினான்....

பக்கத்தில் அறையிலிருந்த மான்சிக்கும் லதாவுக்கும் இவர்கள் பேசியது தெளிவாக கேட்டது.... மான்சியின் காயங்களுக்கு மருந்திட்ட லதாவை மான்சி மிரட்டிச்சியுடன் பார்க்க... லதா புன்சிரிப்புடன் அவளை ஏறிட்டு “ எப்பவுமே சத்யன் இப்படித்தான்... சத்யனை எனக்கு நாலு வருஷமா தெரியும்.... என் கணவர் இறந்தபிறகு... எனக்கு இன்னொரு கல்யாணம் செய்துவைத்து வாழ வைக்கனும்னு நினைக்கும் ஒரே நல்லவன் இவன்தான்... நான் சம்மதிக்காததால் இப்போ அமைதியா இருக்கான்... நீ இவனை நினைச்சு பயப்படவேண்டிய அவசியமில்லை மான்சி... குடும்பபெண்களிடம் இவன் தூரம் ரொம்பவே அதிகம்..... தாயற்ற வளர்ப்பு தடமாறிவிட்டது... மீண்டும் சரியான தடத்திற்கு வருவான் என்ற நம்பிக்கை இருக்கு... என் நம்பிக்கை நிறைவேற உன்னோட முருகன் கிட்ட வேண்டிக்க மான்சி ” என்று மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டே காயங்களுக்கு மருந்திட்டாள் லதா....

மான்சிக்கு ஏனோ உடனே முருகனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் போல் இருக்க கண்களை மூடிக்கொண்டு ‘ ரோட்டில் கிடந்த என்னை தூக்கிட்டு வந்த இந்த நல்லவர் வாழ்கை நல்லபடியாக இருக்கனும் முருகா’ என்று மனமுருக வேண்டினாள்

மான்சியின் முனுமுனுக்கும் உதடுகளைப் பார்த்து சிரித்த லதா “ என்ன மான்சி இப்பவே பிரார்த்தனை பண்றியா?” என்றதும் ..... “ ஆமாம் மேடம்” என்று வீங்கிய உதடுகளின் வழியாக மெல்ல புன்னகைத்தாள்....

மருந்திட்டதும் மான்சியை எழுப்பி தன் தோளில் சாய்த்தபடி பாத்ரூம் செல்ல உதவினாள் லதா.... பிறகு தனது வேலைகளை முடித்த லதா “ சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு... ஈவினிங் வந்து பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு தனது பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்...

லதா சென்றதும் தினாவும் சாமுவேலும் கையில் டிபன் தட்டுடன் வந்து அவள் முன்பு ஒரு சேரில் வைத்துவிட்டு சாமுவேல் வெளியேற தினா “ ம் சாப்பிடுங்க மான்சி’ என்று அன்புடன் உபசரித்தான்....

புன்னகையுடன் தலையசைத்து விட்டு பசியுடன் தட்டில் இருந்த இட்லிகளை அவசரமாக விழுங்கினாள்... அவள் சாப்பிட்டு முடிக்கும்போது சத்யன் அறைக்குள் வந்தான்.... அவனைப் பார்த்ததும் கடைசியாக தட்டில் இருந்த பாதி இட்லி மான்சியின்
அவள் எதிரில் விண்ணைத் தொடுவது போல் கூர்ந்த பார்வையுடன் நின்றிருந்த சத்யனை நிமிர்ந்து பார்க்காமல் இட்லியை விழுங்க முயன்றாள்.... முடியவில்லை என்றதும் பரிதாபமாக தினாவைப் பார்க்க ... “ உள்ள இறங்கலைன்னா துப்பிடும்மா.... நான் கொண்டு போய் கொட்டிர்றேன்” அன்புடன் சொன்னான் தினா...

மான்சிக்கும் வேறு வழியில்லை துப்பிவிட்டாள் தட்டிலேயே... அவள் கைகழுவ தினா தண்ணீர் ஊற்றினான்.... பேன்ட் பாக்கெட்டில் நான்கு விரல்களை விட்டு.. கட்டை விரலை பாக்கெட்டின் விழிம்பில் மாட்டிக்கொண்டு ஒரு அலட்சியப் பார்வையுடன் நின்றுகொண்டு இவர்களின் நடவடிக்கைகளை ஏளனமாக பார்த்தான் சத்யன்...

மான்சி சாப்பிட்ட தட்டை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிய தினாவைப் பார்த்து ... “ சாப்பிட வச்சாச்சுள்ள இனி நீ எஸ்டேட்க்கு கிளம்பு தினா.... நான் இவகூட தனியா பேசனும்” என்று குரலில் ஏளனத்துடன் சொல்ல... அவன் ஏளனத்தை புரிந்துகொள்ளாமலேயே சரியென்று தலையசைத்துவிட்டு வெளியேறினான் தினா .... சத்யன் அதே அலட்சியப் பார்வையை மான்சியின் மீது வீசி “ என்ன பேசலாமா? அல்லது தூங்கனுமா?” என்று கேட்க....

மான்சிக்கு ஓய்வு எடுக்கவேண்டும் தான்.... ஆனால் சத்யன் எடுத்த எடுப்பில்... அறிமுகமற்ற தன்னை இவள் என்று அழைத்தது மான்சிக்கு எரிச்சலாக இருந்தது... இருந்தாலும் அடக்கிக்கொண்டு கட்டிலில் நன்றாக கால்நீட்டி அமர்ந்து பின்னால் சாய்ந்து அவன் முகத்தைப் பார்க்காமல் தனது கால் பெருவிரலை பார்த்தவாறு “ ம் பேசலாம்” என்றாள் மான்சி ...

ஒரு சேரை இழுத்து அவள் கட்டிலருகே போட்டு அமர்ந்த சத்யன் “ உன்னோட பெயர் மான்சின்னு சொன்னான் தினா.... பெயர் நல்லாருக்கு” ....

அவன் அப்படி சொன்னதும் லேசாக உடல் வழிகள் மறக்க.. முதன்முறையாக அவன் முகத்தை நேரடியாகப் பார்த்து சிறு புன்னகையுடன் “தாங்க்ஸ்.... எங்க தாத்தா வச்சப் பெயர்” என்றாள் மான்சி

ஆச்சரியம் அவளின் அந்த அழகுப் புன்னகை சத்யனை சலனப் படுத்தவே இல்லை “ ம்ம் எனக்கும் என் தாத்தாதான் பெயர் வச்சார்.” என்றவன் இந்த பேச்சு இத்துடன் போதும் என்பதுபோல் நிமிர்ந்து அமர்ந்து “ போலீஸ்க்கு போகவேண்டாம் அவனுங்களுக்கு தண்டனை கடவுள் குடுப்பான்னு சொன்னியாமே?”

மான்சியின் குனிந்திருந்த தலை அசைந்து ஆமாம் என்றது...

“ சரி அது உன் இஷ்டம்... நான் எதுவும் சொல்ல விரும்பலை... ஆனா இங்கேயே வேலை வேனும்னு சொன்னியாம்... தினா சொன்னான்... இங்கே உனக்கு வேலையிருக்கு... ஆனா அதுக்கு முன்னாடி என்னைப் பத்தி தெரிஞ்சுக்கோ... அதுக்கப்புறம் வேலையில சேரலாமா வேண்டாமான்னு யோசிச்சு முடிவெடு ” சத்யனின் பார்வை அவள் முகத்தில் ஓடிய உணர்ச்சிகளை பதிய வைத்தது
இதற்குமேல் தலைகவிழ்ந்த மவுனம் சரி வராது என்று யோசித்தவளாய் நிமிர்ந்து நேராக அமர்ந்து “ சொல்லுங்க சத்யன்” என்றாள்..



அவள் தன்னை பெயர் சொல்லி அழைத்ததை சத்யனின் மனம் ரசித்தது... “ ம்ம் சொல்றேன்....... நேத்து உன்னை காப்பாத்துனதால நான் பெண்களை தெய்வமாய் மதிக்கிறவன்னு நெனைக்காதே... என்னைப்பொறுத்தவரை பெண் என்றாள் அதுக்கு அர்த்தமே வேற... என்னிடம் எல்லாவிதத்திலும் வெளிப்படையா இருக்குற பெண்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.... நான் பத்தினி தெய்வம்னு இழுத்து போர்த்திகிட்டு மனசுக்குள்ள பிடிச்ச பிலிம் ஆக்டர் கூட டூயட் பாடுறவளுங்களை அறவே பிடிக்காது... எனக்கு பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது.... நான் எப்பவுமே இப்படித்தான் யாருக்காகவும் மாற மாட்டேன்... இதையெல்லாம் ஏன் உன்கிட்ட சொல்றேன்னா? வேலையில சேர்ந்துட்ட பின்னாடி என்னைப் பத்தி தெரிஞ்சுகிட்டு ச்சே என்னை காப்பாத்தினதை வச்சு உங்களை நல்லவருன்னு நெனைச்சேனே.... இப்படி கேவலமான மனுஷனா இருப்பீங்கன்னு நெனைச்சுகூட பார்க்கலைன்னு சினிமா டயலாக்கெல்லாம் பேசக்கூடாது... அதுக்குத்தான் முன்னாடியே சொல்றேன்... இப்ப சொல்லு இங்க வேலை பார்க்க சம்மதமா?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தை உற்றுப்பார்க்க....

மான்சி எந்த யோசனையும் செய்யாமல் உடனே வாய் திறந்தாள் “ எனக்கு இங்க வேலை செய்ய சம்மதம்தான் சத்யன்” என்றாள்...

அவளை ஆச்சர்யமாகப் பார்த்த சத்யன் “ பரவாயில்லையே தைரியமாத்தான் இருக்க” என்றான்


No comments:

Post a Comment