Saturday, December 12, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 20



மான்சி மெல்ல கண்விழித்தாள்.... அருகில் இருந்த சத்யனைப் பார்த்து மெலிந்த புன்னகையுடன் “ என்னப் பாப்பா பிறந்திருக்கு?” என்று ஈனஸ்வரத்தில் கேட்டாள்...

சத்யன் அவள் கையை எடுத்து கன்னத்தில் அழுத்திக்கொண்டு பக்கத்தில் இருந்த மகளை கண்ணால் ஜாடை காட்டி “ நமக்கு மகள் பிறந்திருக்கா மான்சி... எ... ன்.... என் அம்மா வந்திருக்காங்க.. என் மகளா” என்று சத்யன் உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்க... மான்சி சிரிப்புடன் அவன் கன்னத்தை வருடினாள்...

அந்த நிமிடம் சத்யன் தன்னை மறந்தான்... இதயம் உருகி உதிரமாய் ஒழுக ... “ மான்சி மை லவ்...” என்றபடி அவள் முகத்தை கைகளில் ஏந்தி வரண்டு கிடந்த உதடுகளை கவ்விக் கொண்டான்... மான்சியிடம் எதிர்ப்பில்லை... தனது மலர் இதழ்களை மெல்ல விரித்தாள்... வரண்ட அவளின் வாயை ஈரப்படுத்தியபடி ஒரு அழகான நிறைவான முத்தத்தை வழங்கியவனை அவன் மகள் மெல்ல சினுங்கி அழைத்தாள்.....

மகளின் அழுகை மணியோசை போல் அவனை நிலைப்படுத்த மான்சியின் நிலையுணர்ந்து மெல்ல விலகினான்...

குழந்தையின் அழுகுரல் ஏதோ தேவகானம் போல் ஒலிக்க... சத்யன் தாடையில் கைகளை ஊன்றி குழந்தையை அதிசயமாப் பார்த்தான்... மான்சி மெல்ல ஒருக்களித்துப் படுத்து மகள் வீணையில் ஸ்வரம் தப்பிய மெல்லிசையாய் அழுவதை சிரிப்புடன் வேடிக்கைப் பார்க்க...

“ ஆஹா நல்ல அப்பா அம்மா தான்.... குழந்தை அழறதை வேடிக்கைப் பார்க்கிறீங்களா?” என்றபடி லதா அறைக்குள் வந்ததும் சத்யன் சேரில் இருந்து எழுந்து கொள்ள... லதா அந்த இருக்கையில் அமர்ந்து கையிலிருந்த காபி கப்பை மான்சியின் உதட்டருகே வைத்து.... “ இந்த காபியை குடி மான்சி... குழந்தைக்கு பால் கொடுக்கனும்” என்று சொல்ல ... ஜில்லென்று இருந்த காபியை மிடறு மிடறாய் விழுங்கினாள் மான்சி...

சத்யன் மான்சியின் காலருகே கட்டிலில் அமர்ந்து வீறிட்டு அழும் மகளைப் பார்த்தபடி “ பாப்பா ரொம்ப அழுவுதே லதா... நான் தூக்கி வச்சுக்கட்டுமா? ” என்று கேட்க..

லதா அவனைத் திரும்பி பார்த்து சிரித்து “ பிறந்தவுடனே யாரோ குழந்தையை கையில் வாங்கவே பயந்தாங்களே? இப்போ தூக்கி வச்சுகட்டுமான்னு கேட்குற?” என்று கேலியாக கேட்க...

சத்யன் பதிலுக்கு சிரித்து “ அப்போ மான்சி வேதனைப்படுறதை பார்த்து ரொம்ப பயமா இருந்துச்சு... இப்போ எல்லாம் சரியா போச்சு” என்று பூச்சாண்டிக்கு பயப்படும் சிறுவன் போல சத்யன் பேச.. மான்சி லதா இருவருமே சிரித்தனர்...

லதா தான் எடுத்து வந்த ப்ளாஸ்க்கில் இருந்த காபியை வேறு டம்ளரில் சத்யனிடம் கொடுத்து விட்டு “ நீ ஹால் உட்கார்ந்து காபி குடிச்சிக்கிட்டு இரு சத்யா... நான் மான்சியை கொஞ்சம் ரெடி பண்ணனும்” என்றதும் சத்யன் மான்சியிடம் பார்வையால் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.....

லதா மான்சியின் மார்புகளை வெண்ணீரால் துடைத்துவிட்டு குழந்தைக்கு பால் கொடுக்க உதவினாள்... பிறகு மான்சியை மெல்ல எழுப்பி கைத்தாங்கலாய் பாத்ரூமுக்கு அழைத்துப் போனாள்.. வெண்ணீரால் முகம் துடைத்து வேறு உடைகளை மாற்றி மீண்டும் படுக்க வைத்துவிட்டு ஹாலில் எட்டிப்பார்த்து சத்யனை அழைத்தாள்...

சத்யன் உள்ளே வந்து மான்சியைப் பார்த்தான்.... புத்தம் புது ரோஜாத் தோட்டம் போல பளிச்சென்று இருந்தாள் மான்சி... குழந்தை பசியாறிவிட்டு மறுபடியும் உறங்கிக்கொண்டிருக்க... சத்யன் மான்சியின் அருகில் அமர்ந்துகொண்டான்..
அவனைப்பார்த்து புன்னகைத்த லதா “ சத்யா நீ மான்சி கூட இரு நான் ஏதாவது டிபன் செய்து எடுத்துட்டு வர்றேன்.. அப்புறம் நீ உன் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு ராசாத்தியை கூட்டிட்டு வந்து மான்சிக்கு துணையா இங்கே விடு... ஒன்பது மணிக்கு மேலே நான் பிஸியாயிடுவேன்” என்றவள் மான்சியிடம் திரும்பி “ குழந்தை தூங்குதேன்னு சும்மா விடக்கூடாது மான்சி.. அடிக்கடி எழுப்பி பால் கொடுக்கனும்... நாளை மறுநாள் வீட்டுக்கு போயிடலாம்” என்று கூறிவிட்டு மறுபடியும் மாடியில் இருந்த தனது வீட்டுக்கு போய்விட்டாள் 


சத்யன் மான்சியின் கையைப் பற்றிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க.. மான்சி ஒருக்களித்துப் படுத்து மகளையே பார்த்துக்கொண்டிருந்தாள்,, தன் மடியில் இருந்த அவள் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு “ ரொம்ப கஷ்டப்பட்டுட்ட மான்சி... நீ வலியால துடிக்கும்போது என்னால கண்ணீரை கன்ட்ரோல் பண்ணிக்கவே முடியலை... ஆனா குழந்தையா என் அம்மாவே வந்திருக்காங்கன்னு லதா சொன்னதும் என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை மான்சி” என சத்யன் தன் மனநிலையை மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருக்க......... மான்சியிடம் எந்த பதிலும் இல்லை...
அவள் கூந்தலை வருடிய சத்யன் “ என்ன மான்சி எதுவுமே பேசமாட்டேங்குற? இன்னும் என்னை நம்பலையா?” என்று இரக்கமாக கேட்டான்...

குழந்தையிடமிருந்து பார்வையை திருப்பி சத்யனைப் பார்த்த மான்சி “ இந்த நிமிஷம் நான் எதைப்பத்தியும் யோசிக்கவும் இல்லை... நினைக்கவும் விரும்பவில்லை.. இந்த அமைதியும் சந்தோஷமும் இப்படியே நிலைக்கட்டும்னு ஆசையா இருக்கு.. அதனால இனிமேல் வேற எதைப்பற்றியும் பேசவேண்டாம்.. குழந்தைப் பத்தி அதன் வளர்ச்சியைப் பத்தி மட்டும் பேசுவோம் சத்யன்” என்று மான்சி தெளிவாக சொல்ல... சத்யனுக்கு நெஞ்சில் அடைத்துக்கொண்டிருந்த பாரம் விலகி அப்பாடா என்றிருந்தது...

தன் நெஞ்சில் இருந்த அவள் கையை எடுத்து உதடுகளில் அழுத்திக்கொண்டான்.. இருவரும் அந்த நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் போல சற்றுநேரம் வரை அசையாமல் இருந்தனர்....

“ நீங்க ராசாத்தியை இங்கே வரச்சொல்லிட்டு வீட்டுல தூங்கி ரெஸ்ட் எடுங்க.. நைட் முழுக்க தூங்கவேயில்லை... அப்புறம் போகும்போது நெத்தி காயத்துக்கு மருந்து போட்டுகிட்டு போங்க” என்று மான்சி சொல்ல...

“ இல்ல எனக்கு ரெஸ்ட் தேவையில்லை.. நானே ராசாத்தியை கொண்டு வந்து விடுறேன்” என்று சத்யன் அவசரமாக மறுத்தான்... கொஞ்சநேரம் கூட மான்சியை பிரியக்கூடாது என்ற பயம் அவன் குரலில் வெளிப்படையாக தெரிந்தது.... அதற்கு மான்சி எதுவும் சொல்லவில்லை...

சற்றுநேரத்தில் லதா குளித்து சுத்தமாகி இட்லி செய்து எடுத்துக்கொண்டு வந்து இருவரையும் சாப்பிடச் சொல்லிவிட்டு... வரத்தொடங்கியிருந்த நோயாளிகளை கவனிக்க சென்றாள்....

சத்யன் மான்சியை தூக்கி சாய்வாக அமர வைத்துவிட்டு தட்டில் இட்லிகளை வைத்து அவளுக்கு ஊட்டினான்... பிறகு அவனும் சாப்பிட்டதும் க்ளினிக்கில் வேலைசெய்யும் பெண் மான்சிக்கான மருந்துகளை எடுத்து வந்து கொடுக்க... அதை மானசிக்கு கொடுத்துவிட்டு அவளை சரித்துப் படுக்க வைத்தான்...

“ எனக்கு தூக்கம் வருது சத்யன்... நீங்க அக்காகிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்புங்க” என்று கூறிவிட்டு மான்சி கண்மூட... முதல்நாள் பூத்த தாமரைப் பூவைப் போல் கிடந்தவளின் அழகை ரசித்தவாறு குனிந்து அவள் நெற்றியில் இதமாய் ஒரு முத்தத்தை வைத்து சத்யன் விட்டு குட்டியாய் குவித்து வைத்த முத்துக் குவியலைப் போல் கண்மூடியிருந்த மகளின் பிஞ்சு விரல்களை துணியிலிருந்து விலக்கி எடுத்து அதன் நுனிகளில் மிகமிக மென்மையாய் முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்...

வீட்டுக்குப் போன சத்யன் வாட்ச்மேன் மூலமாக ராசாத்திக்கு தகவல் சொல்லிவிட்டு தனது அறைக்குப்போய் குளித்து உடைமாற்றிக்கொண்டு... நினைவு வந்தவனாக தனது அப்பாவுக்கு போன் செய்து “ அப்பா இன்னிக்கு விடியக்காலை மான்சிக்கு பெண்குழந்தை பிறந்திருக்குப்பா” என்று குரலில் பெருமிதத்துடன் சொன்னான்


சில நிமிடங்கள் அமைதிக்குப் பிறகு தழுதழுத்த குரலில் “ என் மருமகளும் பேத்தியும் நல்லாருக்காங்களா? சுகப்பிரசவம் தானே?” என்று சுந்தரம் ஆர்வமாக கேட்க

“ சுகப்பிரசவம் தான்” என்ற சத்யன் பிறகு குரலில் நிதானத்தோடு “ என் மனைவியும் என் மகளும் ரொம்ப நல்லாருக்காங்க” என்று கூற....

“ சத்யா..........” என்று திகைப்புடன் சொன்ன சுந்தரத்திற்கு அதற்குமேல் பேச வரவில்லை...

“ ஆமாம்ப்பா.... இனிமேல் மான்சி இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லைப்பா.... அவகிட்டயும் கொஞ்சம் மாற்றம் தெரியுது... கூடிய சீக்கிரமே உங்க மருமகள் அப்புறம் குட்டி தேவதையா வந்து பிறந்திருக்கும் என் அம்மாவோட தர்மபுரிக்கு வர்றேன்... தாத்தா கிட்டயும் சொல்லிடுங்கப்பா” என்று சத்யன் உணர்ச்சிவசப்பட்டு பேச...

அவன் குரலில் இருந்த மாற்றமும் அவன் சொன்ன வார்த்தைகளும் மகன் மீது புதியதொரு நம்பிக்கையை ஏற்ப்படுத்த “ இன்னும் எத்தனை காலம் ஆனாலும் மான்சி தான் உன் மனைவின்னு எனக்குத் தெரியும்டா மகனே... ஆனா ஒன்னு சத்யா எதையும் கொஞ்சம் பொருமையாவே செய்.. அவசரப்பட்டு கல்யாணம் பத்தி பேசி மான்சியை கோபப்பட வச்சிறாத... அவள் மனசு கல்யாணத்துக்கு தயார் என்றதும் இதைப்பத்தி பேசு... அதுவரைக்கும் உன் அன்பை அவளுக்கு புரியவை” என்று சுந்தரம் மகனுக்கு அறிவுரை கூற....

அப்பா சொல்வதில் இருந்த உண்மையை சத்யன் மனது ஏற்றுக்கொண்டது... மான்சியின் மனம் முழுவதுமாய் மாற கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும்... அதுவரை என் அன்பு ஒன்றே அஸ்திவாரமாய் என் காதலை உணர்த்தவேண்டும் எனறு முடிவு செய்துகொண்டான்.....

“ நீங்க சொல்ற மாதிரியே செய்றேன்பா” என்றவன் சுந்தரத்திடம் கம்பெனி பற்றிய சில விஷயங்களை பேசிவிட்டு செல்லின் தொடர்பை துண்டித்தான்
கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக்கொண்டு இருந்தவனை அறைக்கு வெளியே இருந்து வாட்ச்மேனின் குரல் அழைத்தது... கதவைத்திறந்து என்ன என்று கேட்க ...

“ ராசாத்தி கிட்ட விஷயத்தை சொன்னதும் அது உடனே ஆஸ்பத்ரிக்கு கிளம்பி போயிருச்சுங்க” என்று தகவல் சொல்லிவிட்டு போனான்...

எல்லோருக்குமே மான்சியின் மீது எவ்வளவு அன்பு என்று சத்யன் பெருமையாக நினைக்கும்போதே சாமுவேலின் ஞாபகம் வந்தது... உடனே செல்லை எடுத்து அவனுக்கும் தகவல் சொல்லிவிட்டு... அடுத்த பஸ்ஸில் அவர்களை கிளம்பி வரச்சொன்னான்...

பிறகு கீழே தோட்டத்து வீட்டுக்கு வந்து மான்சிக்குத் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு அவசரமாக க்ளினிக் வந்தபோது.. ராசாத்தி இவனுக்கு முன்பே அங்கிருந்தாள்..

சத்யன் சிறு புன்னகையுடன் தலையசைத்து விட்டு மான்சி இருந்த அறைக்குள் போனான்... போனவன் அப்படியே நின்றான்.... விக்டர் உரிமையுடன் மான்சியின் கட்டிலில் கால் பக்கமாக அமர்ந்து ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருக்க.... தினா மான்சியின் தலைப்பக்கமாக சேரில் அமர்ந்திருந்தான்.. சற்றுத்தள்ளி கிடந்த சேரில் லதா அமர்ந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்...

சத்யனைப் பார்த்ததும் அவர்களின் பேச்சு நின்றது... ஆனால் சந்தோஷமும் சிரிப்பும் மாறாமல் குழந்தையின் பக்கம் கவனத்தை திருப்பினார்கள்... சத்யனின் நெஞ்சுக்குள் காலையிலிருந்து இருந்த இதம் இப்போது சூன்யமாக அமைதியாய் மார்புக்கு குறுக்கே கைகட்டி நின்றான் ...

குழந்தைக்கு தகப்பன் அவன்.... அவனுக்கு ஒரு வாழ்த்து கூட யாரும் சொல்லவில்லை... அவன் மனநிலை புரிந்தவள் போல் அவனது செல்ல மகள் பசிக்காக வீறிட ஆரம்பிக்க... மான்சி பால் கொடுப்பதற்காக ஒருக்களித்துப் படுத்து சங்கடமாய் லதாவைப் பார்க்க... தினாவும் விக்டரும் நாகரீகமாக எழுந்து வெளியே போனார்கள்... 




சத்யன் நகரவில்லை அப்படியே நின்றிருந்தான்... அவர்களும் நானும் ஒன்றா? நான் நகரமாட்டேன்... என்று உரிமையை விட்டுக்கொடுக்க முடியாமல் அப்படியே நின்றிருந்தான்

லதா எழுந்து குழந்தையை மான்சியின் மார்புக்கு அருகில் நகர்த்தி மான்சி பால் கொடுக்க உதவி விட்டு “ இதுபோல படுத்துக்கிட்டே பால் கொடுக்க கூடாது மான்சி... எழுந்து உட்கார்ந்தா ஸ்டிச்சிங் போட்ட இடத்தில் வலிக்குமேன்னு சும்மா விடுறேன்.. நாளையிலிருந்து எழுந்து உட்கார்ந்து குழந்தையை மடியில வச்சுதான் பால் கொடுக்கனும்” என்று மான்சிக்கு எச்சரிக்கை செய்தவள் ...

சத்யன் அருகே வந்து “ மதியம் நீ போகும்போது என் ரூமுக்கு வந்துட்டு போ சத்யா... குழந்தைக்கு என்னனென்ன வாங்கனும்னு எழுதித்தறேன்” என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியே போய்விட்டாள்

மான்சி டவலால் மறைத்தபடி குழந்தைக்கு பாலூட்ட... சத்யன் மெல்ல நடந்து தினா அமர்ந்திருந்த சேரில் அமர்ந்து பாலுண்ணும் மகளின் தலைமுடியை மெல்ல வருடினான்...

மான்சி அவனை நிமிர்ந்துப் பார்த்து “ சாமு அண்ணாக்கு போன் பண்ணி வரச்சொல்லுங்க... சியாமா வந்தால்தான் குழந்தையை பார்த்துக்க வசதியா இருக்கும்” என்று சொல்ல.....

தினாவும் விக்டரும் இருந்தபோது பால் கொடுக்க சங்கடப்பட்ட மான்சி... தான் இவ்வளவு அருகில் அமர்ந்து குழந்தையை உற்றுப் பார்த்தும்... மான்சி சங்கடப்படாமல் இலகுவாக பால் கொடுப்பதை சத்யனின் மனம் தனக்குள் பதிவுசெய்துகொள்ள “ சொல்லிட்டேன் மான்சி... அனேகமா இன்னைக்கு ஈவினிங் வந்துடுவாங்க” என்றான்...

குழந்தை பால் குடித்து முடிக்க.. டவலுக்குள்ளேயே தனது ஆடையை சரி செய்த மான்சி “ பாப்பாவை மெல்ல தூக்கி தொட்டில்ல போடுறீங்களா” என்று கேட்க...

சத்யன் சர்வ ஜாக்கிரதையாக மகளை தூக்கி தொட்டிலில் கிடத்திவிட்டு “ மான்சி பாப்பா யூரின் போய்ட்டா போலருக்கு துணியெல்லாம் ஈரமாயிருக்கு” என்றபடி குழந்தையின் இடுப்பில் இருந்த ஈரத்துணியை எடுத்துவிட்டு வேறு துணியை சுற்றினான்...

பிறகு கைகழுவிவிட்டு வந்து மான்சியின் அருகில் சேரில் அமர்ந்தான்... எட்டி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்துக்கொண்டு “ இத்தனை நாளா நீ என்கூட இருக்கனும்னு தான் போராடினேனே தவிர குழந்தையைப் பத்தி எனக்கு எதிர்பார்ப்பும் இல்லாம இருந்தேன் மான்சி ஆனா இப்போ என் மகளை விட்டு ஒரு நிமிஷம் கூட விலக முடியாதுன்னு தோனுது... இரட்டை சொர்க்கம் என் கையில் இருப்பது மாதிரி ரொம்ப சந்தோஷமா இருக்கு மான்சி” என்று உள்ளத்தில் இருந்து வார்த்தைகளை வரவழைத்து பேசினான்...

மான்சி எதுவும் சொல்லவில்லை அமைதியாக இருந்தாள்... அவளின் வழவழப்பான கன்னத்தில் சத்யனின் சொரசொரப்பான தாடை மெல்ல உரசியது... அவளின் வலது கை தயங்கி தயங்கி அவன் சட்டை காலரைப் பற்றி மெல்ல இழுத்து தன் கன்னத்தோடு அவன் கன்னத்தை அழுத்தியது...

உற்சாகமான சத்யன் ஒரு கையால் அவள் கழுத்தை வளைத்து இன்னும் நெருக்கமாக அவள் முகத்தோடு தன் முகத்தை இழைத்து “ மான்சி ஸ்டிச் போட்டிருக்காங்களா? ரொம்ப வலிக்குதா மான்சி?” என்று மென் குரலில் வருத்தமாக கேட்க....

மான்சி பெரும் தயக்கத்திற்குப் பிறகு “ ம்ம் சும்மா மூனு தான்... சரியாயிடும்” என்றாள்...

அப்போது வெளியிருந்து கதவை லேசாக தட்டி “ மான்சி” என்ற தினாவின் குரல் கேட்க... சட்டென்று விலகிய மான்சி “ உள்ள வாண்ணா” என்றாள்...


சத்யனுக்கு தினாவின் மேல் பயங்கர ஆத்திரம் வந்தது... ஆனால் அடக்கிக்கொண்டான்... ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும் என்று தன்னை நிதானப் படுத்தியவாறு ரொம்ப கொஞ்சமாக விலகி அமர்ந்தான்...

தினாவும் விக்டரும் உள்ளே வந்தார்கள்... விக்டரின் பார்வை நெருக்கமாக அமர்ந்திருந்த சத்யனின் மீது அழுத்தமாக படிந்து மீண்டது... இயல்பாய் மான்சியைப் பார்த்து சிரித்தவாறு தனது மொபைலை எடுத்து ஏதோ நம்பர்களை தட்டியபடி “ மான்சி உன் அம்மாவுக்கு தான் கால் பண்றேன்” என்று அவளுக்கு தகவல் சொல்லிவிட்டு மொபைலை காதில் வைத்தான்....

உன்னால் நெருக்கமாக அமர மட்டும் தான் முடியும்... ஆனால் நான் அவள் குடும்பத்துக்கே முக்கியமானவன் என்று காட்டிக்கொள்கிறானா? என்று நினைத்த சத்யன் ‘ச்சே காலையில மான்சிகிட்ட நம்பர் வாங்கி அவ வீட்டுக்கு நாமே கால் பண்ணி சொல்லிருக்கலாம்’ என்று வருந்தினான்....

“ ஆங்...... ஆன்ட்டி நான் விக்டர் பேசுறேன்.......... ம்ம் நல்லாருக்கேன் ஆன்ட்டி... மான்சிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு.... ரெண்டுபேரும் நல்லாருக்காங்க....... இதோ குடுக்கிறேன் ஆன்ட்டி...” என்றவன் மான்சியிடம் தனது செல்லை நீட்டி “ ஆன்ட்டி உன்கிட்ட பேசனுமாம் மான்சி” என்றான்

செல்லை வாங்கிய மான்சி காதில் வைத்து “ சொல்லுங்கம்மா?.......... நல்லாருக்கேன்..... பாப்பாவும் நல்லாருக்கு..... விடியக்காலை நாலு பத்துக்கு பிறந்ததும்மா.... சத்யன் தான் கார்ல கூட்டிட்டு வந்தாரு.......... ம்ம்...... சரிம்மா....... கவனமா இருக்கேன்........ இன்னிக்கு சாமுவும் சியாமாவும் வந்துடுவாங்க.... அவங்களுக்கெல்லாம் எக்ஸாம் முடிஞ்சதும் வாங்கம்மா........ இங்கே பார்த்துக்க ஆள் இருக்காங்க......... ம்ம் இதோ இருக்கார் குடுக்குறேன் ” என்றவள் சத்யனிடம் போனை கொடுத்து “ அம்மா பேசனுமாம்” என்றாள்..

“ என்கிட்டய ?” என்ற வினாக்குறியுடன் வாங்கிய சத்யன் என்ன பேசுவது என்ற பதட்டத்துடன் காதில் வைத்து “ ஆ....ன்...ட்டி..... நான் சத்யன்” என்றான்....

“ நல்ல சமயத்தில் ஆஸ்பிட்டல் கூட்டிட்டு வந்தீங்க... ரொம்ப நன்றிப்பா” என்று முதுமையில்லாத இளமையும் இல்லாத ஒரு குரல் நன்றி சொன்னது

ஸ் யப்பா என்ற நிம்மதியுடன் “ பரவாயில்லை ஆன்ட்டி இது என் கடமை” என்றான்... இதற்கு எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை ...

சற்று பொறுத்து “ விக்டர் தம்பிகிட்ட போனை கொடுங்க” என்றது அந்த குரல்.... சத்யன் அமைதியாக விக்டரிடம் போனை கொடுத்தான்...

அதன்பிறகு விக்டர் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை ஆப் பண்ணி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு “ சரி மான்சி நான் கிளம்புறேன் ... ஈவினிங் வர்றேன் ” என்று சொல்லிவிட்டு கிளம்ப......

“ நானும் கிளம்புறேன் மான்சி...... மதியம் சாப்பாடு என் வீட்டுலேர்ந்து எடுத்துட்டு வர்றதா லதா கிட்ட சொல்லிட்டேன்... ஒரு மணிக்குள்ள எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு தினாவும் அவனுடனேயே கிளம்பினான்...
கதவுவரை போனவன் மறுபடியும் திரும்பி வந்து சத்யனிடம் “ சாப்பாடு உனக்கும் தான்டா” என்று சொல்லிவிட்டு போனான்....

சத்யன் மூடிய கதவைப் பார்த்துவிட்டு “ சண்டைக்காரன் கிட்ட பேசுற மாதிரி பேசிட்டுப் போறான் பாரு? ” என்று மான்சியிடம் கூற... அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள்...

“ நீங்க நைட் முழுக்க தூங்கலையே... கொஞ்சநேரம் தூங்கிட்டு வர்றது தானே?” என்று மான்சி சொன்னதும் ... “ பரவாயில்லை மான்சி... எனக்கு டயர்டா இல்லை” என்று சத்யன் சொன்னாலும் கட்டிலில் இரண்டு கைகளையும் மடித்து வைத்து மான்சியைப் பார்த்தவாறு கவிழ்ந்தவன் அப்படியே தூங்கிப்போனான்....
தூங்கும் அவன் முகத்தையேப் பார்த்த மான்சியின் முகம் விரக்தியில் துவண்டது....

“ வாழ்க்கையே ஒரு பயணம்...

“ அந்த பயணத்தில் தான் எத்தனை பள்ளங்கள்!

“ நானும் பள்ளத்தில் வீழ்ந்தேன்...

“ உன் சதியால்..

“ வீழ்ந்த அதே வேகத்தோடு

“ மீண்டும் எழுந்து மேலேறினேன்...

“ இப்போதும் அதே பாதையில்..

“ உன்னுடன் பயணமாகிறேன்....

“ உன்னை வீழ்த்த வேண்டுமே?..

“ இந்த பயணம் மட்டும் இல்லாது போனால்..

“ பயனற்றுப் போயிருப்பேன் நான்!

அடுத்த நாளும் இயல்பாகவே போனது... காலையும் மாலையும் விக்டர் வந்தான்... தினா நேரம் கிடைத்தபோது வந்து பார்த்துவிட்டு போனான்... சாமுவும் வந்து பார்த்துவிட்டு போக சியாமா மான்சியின் உடனிருந்தாள்...

சத்யன் எஸ்டேட் செல்ல இரண்டு மணிநேரம் மட்டும் ஒதுக்கி விட்டு மிச்ச நேரத்தில் மான்சியுடனும் தன் மகளுடனும் கழித்தான்... அடிக்கடி வீட்டு ஓடி போய் வந்தான்... இரவு மான்சி எவ்வளவு வற்புறுத்தி சொல்லியும் வீட்டுக்கு போகாமல் க்ளினிக் ஹாலில் கிடந்த சோபாவில் படுத்துக் கொண்டான்

மூன்றாம் நாள் காலை மான்சி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.... சத்யனின் கார் பங்களாவின் வாசலில் நின்றதும் அவர்களுக்கு முன்பே தினாவும் விக்டரும் அங்கே காத்திருந்தார்கள்.... எல்லோர் மனதிலும் இருந்த ஒரே கேள்வி “அந்த சிறிய அறையில் மான்சி குழந்தையுடன் எப்படியிருப்பாள்?’ என்பதுதான்

சத்யன் காரை விட்டு இறங்காமல் பின்பக்கமாக திரும்பி “ மான்சி நீயும் நானும் எங்க வேனும்னாலும் இருக்கலாம்... ஆனா பாப்பா அந்த சின்ன வீட்டுல எப்படியிருக்கும்?... அதனால நம்ம வீட்டுலயே நீயும் பாப்பாவும் தங்க ஏற்பாடு பண்ணிருக்கேன்... மறுக்காதே மான்சி பாப்பாவுக்காக” சத்யனின் குரல் பெரிதும் இறங்கி வந்து கெஞ்சியது.....

மான்சி இதை எதிர்பார்த்தவள் போல் சற்றுநேர அமைதிக்குப் பிறகு சரியென்று தலையசைத்தாள்....

சத்யன் எகிறி குதிக்காத குறைதான்.... கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டு காரிலிருந்து இறங்கினான்.... சியாமா ஆரத்தி சுற்ற மான்சியும் அவள் மகளும் சத்யனின் வீட்டுக்குள் அழைத்துச்செல்லப் பட்டனர்

மான்சி எப்போதும் தங்கியிருக்கும் கீழ் அறையையே இப்போதும் ஏற்பாடு செய்திருந்தான் சத்யன்....... குழந்தையும் அவளும் தங்குவதற்கான சகல வசதியும் செய்யப்பட்டிருந்தது... குழந்தைக்காக அந்த அறையில் நிறைய மாற்றங்கள் செய்திருந்தான்....

“ ஓ.......... இதற்காகத்தான் அடிக்கடி வீட்டுக்கு வந்து வந்து போனானா?” என்று எண்ணியபடி கட்டிலில் அமர்ந்தாள்... குழந்தை அவள் மடியில் கிடத்தப்பட்டது.... விக்டரும் தினாவும் மான்சியிடம் சொல்லிகொண்டு விடை பெற்றனர்

சத்யன் உரிமையோடு மான்சியின் அருகில் அமர்ந்து தன் வீட்டுக்கு வந்த மகளை பூரிப்புடன் பார்த்தான்... குனிந்து அவளின் சின்ன பிஞ்சு பாதங்களை எடுத்து தன் முகத்தில் வைத்துக்கொண்டான்... பாதங்களில் மாறி மாறி முத்தமிட்டான்... அவன் கண்கள் கலங்கியிருந்தன ....



நிமிர்ந்து மான்சியைப் பார்த்தவன் அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து “ இந்த நிமிஷம் இந்த உலகிலேயே மிக சந்தோஷமானவன் நான்தான் மான்சி” என்றான்...

மான்சி விலகவில்லை அவன் நெஞ்சில் சாய்ந்தபடி “ எனக்கும் பாப்பா பிறந்ததால் ரொம்ப சந்தோஷம்... பெண் குழந்தைதான் வேனும்னு தினமும் முருகனை கும்பிட்டேன்” என்றாள் ...

அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி குறும்பாக அவள் விழி நோக்கி “ அதென்ன ஸ்பெஷலா பெண் குழந்தைதான் வேனும்னு பிரார்த்தனை பண்ணிருக்க? ஏதாவது விஷேச காரணம் இருக்கா?” என்று சத்யன் கேட்க...
ஏதோ சொல்ல வாய் திறந்தவள் கப்பென்று வாயை மூடிக்கொண்டு ... ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள்...

“ இல்ல ஏதோ சொல்ல வந்த? பரவாயில்லை மான்சி சொல்லு... அன்றைய உன் மனநிலை வேற தான?” என்று சத்யன் வற்புறுத்த....

சற்றுநேர அமைதிக்குப் பிறகு அவனிடமிருந்து விலகி அமர்ந்து “ பெண்களை மதிக்காத... பெண்களை தன் தேவைக்கு இணங்க வைக்க எவ்வளவு வேனும்னாலும் இறங்கி போற உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து.... பெண் என்றால் யார்னு அந்த ஆண்டவன் புரியவைக்கனும்னு நெனைச்சேன்”... என்று மான்சி சொன்னதும் சத்யன் அமைதியாக இருந்தான்....


No comments:

Post a Comment