Tuesday, December 22, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 12

சத்யன் பவித்ரா திருமணம் பற்றி இங்கே ஆளாளுக்கு ஆளுக்கொரு மனநிலையில் இருக்க.... மான்சியோ சத்யனுடன் இரவு கொண்ட உறவு கொடுத்த உற்சாகத்துடன் மறுநாள் உற்சாகத்துடன் வளைய வந்தாள்...

காலையில் தாமதமாக எழுந்த மோகனா மான்சியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் தன் காதுக்குள் இருந்த பஞ்சை எடுத்து மான்சியின் மீது வீச.... மான்சி முதலில் ஒன்றும் புரியாமல் விழித்து.... பிறகு புரிந்து திகைப்புடன் தலையை குனிய...



மோகனா அவளருகில் வந்து ஒரு ஓரமாக தள்ளிக்கொண்டு போய் “ என்னடி சொன்ன எறும்பு கடிச்சிருச்சா? ஓய் நானும் மெடிக்கல் தான்டி படிக்கிறேன்.... என்கிட்டயேவா.... அன்னிக்கு மழையில ரெண்டுபேரும் ஓடிவரும் போதே எனக்கு விஷயம் புரிஞ்சு போச்சு... நேத்து நைட் பாத்ரூம் போறதுக்காக பின்பக்கமா போனேன்... பார்த்தா இருட்டுல உன் ஆளு உட்கார்ந்திருக்கான்... என்னை அவன் பார்க்கலை... நானும் மறுபடியும் மறுபடியும் போய் எட்டிப்பார்க்குறேன் பய போற மாதிரி தெரியலை... ரொம்ப டென்ஷனா உட்கார்ந்திருந்தான்... சரி பாவம்னு நான்தான் பின் பக்கத்து கதவை திறந்து வச்சிட்டு வந்தேன்... சரி நீ ஏதாவது ரெண்டு உதை கொடுத்து அனுப்புவன்னுப் பார்த்தேன்... ஆனா நீ என்னடான்னா............” என்று மோகனா கேலியாகப் பார்க்க...

மான்சிக்கு அவமானத்தில் கண்கள் கலங்கியது “ இல்லடி மோகி நான் எவ்வளவோ மறுத்தேன்.. ஆனா அது அழுவுற மாதிரி எழுந்து போச்சு.... அப்புறமா தான் என் மனசு தாங்காம” என்று மான்சி முடிக்காமல் நிறுத்த....

அவளின் கலங்கிய கண்களைப் பார்த்து “ ஏய் லூசு அதுக்கு ஏன்டி அழுவுற? நீ எப்படி அவருக்காக வாழுறேன்னு ஒரு வருஷமா உன்கூடவே இருந்து பார்க்குறேன்டி... நான் உன்னை எப்பவுமே கேவலமா நெனைக்க மாட்டேன் மான்சி.... ஆனா நம்மக்கூட இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க அதை மறந்துட்டப் பாரு... இன்னிக்கு அவங்க பார்க்கலை சரி... ஆனா பார்த்திருந்தா?” என்றாள் மோகனா...

“ ஸாரி மோகி இனிமேல் இதுபோல ஆகாது” என்ற மான்சியை அணைத்துக்கொண்ட அமுல்பேபி “ அவங்கதான் பார்க்கலையே விடுப்பா.... ஆனா ஒன்னுடி நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து எனக்காக காத்திருக்கும் என் அத்தைப் பையன் ஞாபகத்தை கிளறி விட்டுட்டீங்க... எனக்கு இப்போ அவனை உடனே பார்க்கனும் போலருக்கே” என்று கூறிவிட்டு சிரித்தவள் “ இன்னொரு குட் நியூஸ்.... ஏற்கனவே நமக்கு ஒதுக்கி கொடுத்த அறையையே மறுபடியும் கேட்டு வாங்கிகிட்டு ரெண்டுபேரும் அங்கே போயிடலாம்... நான் இவளுங்க கூட இங்கே வந்து படுத்துக்கிறேன்... நீயும் உன் மாமனும் அங்கேயே இருந்து ரொமான்ஸ் பண்ணுங்க... பார்த்துக்கடி என்னதான் அத்தை மகனா இருந்தாலும் மாட்டுனா அசிங்கம்.. என் தோழியின் காதல் ஜெயிக்கனும்ங்கறதுக்காக நான் இதை செய்றேன்” என்று மோகனா பேச பேச மான்சி அவளை இறுக்கி அணைத்துக்கொண்டாள்...

அன்றைய பொழுது உற்சாகமாக கழிந்தது... சத்யன் மான்சியை விட்டு விலகாமல் அவள் கூடவே சுற்றினான்.... ஆரோக்கியமான நோயாளிகள் மருத்துவர்களுக்கு உதவுவார்கள் என்பதால் யாரும் அவர்களை தவறாக எண்ணவில்லை... மறைவு கிடைக்கும் போதெல்லாம் முத்தமிட்டுக்கொண்டு மோகனாவைப் பார்க்கும் போது அசடு வழிந்தார்கள்...

மான்சியின் மொத்த சந்தோஷத்தை காலி செய்வது போல் கமலக்கண்ணனிடம் இருந்து அன்று மாலை மான்சிக்கு ஒரு போன்கால் வந்தது

“ சொல்லுப்பா” என்றவளின் காதில் அமிலத்தை கொட்டினார் கமலக்கண்ணன்..

“ பாப்பா உன் அத்தை மகனுக்கும் நம்ம எதிரியோட மகளுக்கும் அடுத்த மாசம் பதினேழாம் தேதி கல்யாணமாம்... நம்ம குலதெய்வம் கோயில்ல வந்து குறிகேட்டு கல்யாணத்துக்கு நாள் வச்சிட்டாங்க... இதுல சத்யன் மாப்ளைக்கும் முழு சம்மதமாம்... இப்போ என்னப் பாப்பா செய்றது?” என்று மகளிடம் கேட்டார்...

மான்சி அப்படியே இறுகிப்போனாள் .... ஓ இவ்வளவு நடக்குதா? என்று எண்ணமிட்டுவள் “ கமலா நான் சொல்றதை கவனமா கேளு... அவங்க கல்யாண ஏற்பாடு பண்ணட்டும்... நீ எதையுமே கண்டுக்காத மாதிரி அவங்களை மறைமுகமா கண்கானிச்சு எனக்கு தகவல் சொல்லு... மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.... என்னைத் தவிர எவ கழுத்துல இந்த பைத்தியக்காரன் தாலி கட்டுறான்னு பார்க்கிறேன்” என்று கோபத்தை அடக்கிக்கொண்டு கூறிவிட்டு போனை கட் செய்தவள்... உடனே சத்யனைத் தேடிப் போனாள்...

" நிஜங்கள் கனவுகளாகும் போது....

" அதன் நினைவுகள் தான் ஆறுதல்....

" நிஜம் நிழலாகும் போது....

" அதன் சுவடுகள் தான் வழித்தடம்!


சத்யனுக்கு எடுத்துச்சென்ற சாப்பாடு கேரியரை ஆதியிடம் கொடுத்துவிட்டு போக வந்தவனிடம் ஆதி அந்த பயங்கரத்தை சொன்னாள்........ “ முத்து சத்யனுக்கும் பவித்ராவுக்கும் கல்யாணத்துக்கு தேதி வச்சிட்டாங்களாம்பா... எங்க குலசாமி கோயில் பூசாரி தான் நல்ல நாள் பார்த்து சொல்லிருக்கார்... வர்ற மாசம் பதினேழாம் தேதி கல்யாணத்துக்கு நாள் வச்சிருக்காங்க முத்து... இன்னும் முப்பத்தேழு நாள்தான் இருக்கு” நல்ல செய்தி சொல்கிறேன் என்று முத்துவின் நெஞ்சில் தனலை வாரிக்கொட்டினாள் ஆதிலட்சுமி...

தனது முகமாற்றத்தை கஷ்டப்பட்டு மறைத்து “ ரொம்ப சந்தோஷம் அம்மா.... பவித்ரா சத்யன் ரெண்டு பேருக்குமே நல்ல மனசு... அவங்களுக்கு எந்த கெடுதலும் வராது... கல்யாணம் பண்ணிகிட்டா நல்லாருப்பங்க” என்று சந்தோஷத்து ஒப்புக்கு வரவழைத்துகொண்டு சொன்னான்..

“ ஆமாம்பா எங்க எல்லாரோட ஆசையும் அதுதான்... இன்னும் ஒரு மாசத்துக்கு நாள் நல்லா இல்லையாம் ... சத்யனுக்கும் கெரகம் சரியில்லையாம்.... அதனால சத்யனை கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்கும்போது கூட்டிட்டு வரனும்னு சாமி சொல்லிருக்காராம்... அதுவரைக்கும் என்னை இங்கேயே இருக்க சொல்லிருக்காங்க... அவங்க எல்லாரும் கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்றாங்களாம்..... நாம சத்யனோட இங்கிருந்து போனதும்.... அதுக்கப்புறம் இந்த வீட்டை லீசுக்கு விட்டுடலாம்ப்பா” என்றாள் ஆதிலட்சுமி...

ஒப்புக்கு வரவழைத்த புன்னகையுடன் தலையசைத்துவிட்டு தனது வீட்டுக்கு கிளம்பினான் முத்து... போகும் வழியில் ஸ்டேஷனுக்கு போன் செய்து... தலைவலிக்கிறது இருக்கும் வேலைகளை எஸ் ஐ வந்ததும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தனது வீட்டுக்குப் போனான்....

அவன் கரங்கள் இயந்திரத்தனமாக ஜீப்பை செலுத்தியது... மனமோ பச்சை ரணமாய் பவித்ராவை நிரந்தமாக பிரியப் போவதை எண்ணி எண்ணி அந்த ரணத்தை குத்தி கிளறி ரத்தத்தை வழியவிட்டது....

இதுபோல் அவன் மனம் தன் வாழ்நாளில் ஏங்கி அழுததில்லை... பெரியவர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான் அவனது முதல் திருமணம்... ஆனாலும் மனைவியிடம் நிறைய அன்பு வைத்திருந்தான்.... மனைவி இறந்த போது ஆறுதலுக்கு மதுமிதா இருந்தாள்... ஆனால் இன்றோ மகளையும் மீறி பவித்ராவின் நினைவுகள் அவனை கொன்று புதைத்தது…. ஆயுலற்ற இந்த காதல் ஏன் வந்தது என்று தனது நெஞ்சில் கையால் குத்திக்கொண்டான்...

வீட்டுக்குச் சென்று ஜீப் நின்றபோது.... அவன் அம்மா தோளில் சுமந்திருந்த பேத்தியுடன் வாசலிலேயே நின்றிருந்தார்.... காலையில் ஸ்கூலுக்கு போனாள் என்றால் மூன்றரை மணிக்குத்தான் வருவாள் மது... இப்போது இன்னும் நேரமிருக்க இந்தநேரத்தில் மகளைப் பார்த்ததும் பதட்டமாக அருகில் வந்து மதுவை வாங்கினான்....

மதுவை தோளில் போட்டுக்கொண்டு “ என்னாச்சும்மா....” என்று அம்மாவை விசாரித்தான்...

“ காலையில ஸ்கூல் போகும்போது நல்லாத்தான் இருந்தா... இப்போ ஜுரம்னு ஸ்கூல் ஆயாம்மா கொண்டு வந்து விட்டுட்டுப் போறாங்க.. அவங்களே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் ட்ரீட்மெண்ட் பண்ணிட்டாங்களாம்... ” என்றார்

முத்து மகளின் நெற்றியில் கைவைத்து பார்த்தபடி வீட்டுக்குள் போனான்... காய்ச்சல் குறைந்திருந்தது... ஆனால் ரொம்பவே சோர்ந்து போயிருந்தாள்... மகளை கட்டிலில் கிடத்தி இவனும் பக்கத்தில் படுத்துக்கொண்டு மெல்ல வருடி உறங்க வைத்தான்....

அம்மா சாப்பிட கூப்பிட்டதும் எழுந்து வெளியே வந்தான்... தாயின் திருப்திக்காக அரைகுறையாக சாப்பிட்டான்.... சாப்பிட்டு விட்டு மீண்டும் படுக்கையறை வந்தவன் மகளின் நெற்றியில் கைவைத்துப் பார்த்து விட்டு அறையிலிருந்த பீரோவின் லாக்கரில் இருந்த மனைவியின் போட்டோவை எடுத்தான்

அந்தப் படத்தையேப் பார்த்தவனின் கண்கள் கலங்கியது.... “ ஏன் வாசுகி என்னை தனியா விட்டுவிட்டுப் போன.... தனிமை என்னை கொல்லுதுடி..... ஒருத்தியோட காதலுக்காக ஏங்குறேன் வாசு... அவகிட்ட காதலுக்காக பிச்சைக்காரன் மாதிரி நிற்க்கிறேன்.... ஆனா அவ என்னை வேனாம்னு ஒதுக்கிட்டா வாசு... நானும் என்னை கட்டுப்படுத்தி பார்க்கிறேன்... முடியலையே வாசு.... இந்த காதலால நான் ரொம்ப கோழையாயிட்டேன்... எனக்கு பவித்ரா வேனும்... ஆனா சத்யனோட வாழ்க்கை என்னால பாதிக்கக் கூடாது... பேசாமல் யாருக்கும் பிரச்சனை இல்லாம நானும் உன்கிட்டயே வந்துடவா?” என்று மனைவியின் படத்தை பார்த்து தானாகவே பேசியவன் அந்த படத்தை நெஞ்சில் சுமந்தபடி மகள் அருகில் படுத்துக்கொண்டான்....

அன்று இரவு எட்டு மணியளவில் விழித்த மதுமிதாவின் முதல் வார்த்தையே “ நான் பவித்ரா ஆன்ட்டி கிட்ட போகனும்” என்பதுதான்....

முத்து துடித்துப்போனான்.... சொல்லனாத உணர்வுகள் நெஞ்சை தாக்க மகளை அணைத்து ஆறுதல் படுத்த முயன்றான்.... நேரமாக நேரமாக மதுவின் அழுகையும் காய்ச்சலும் அதிகமாக... முத்துவுக்கும் அழுகை வரும் போலிருந்தது... மதுவுக்கு மருந்து கொடுத்து தூங்க வைக்க முயன்றான்... அவளோ தன் அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு “ ஆன்டிகிட்ட போகலாம் டாடி” என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல பயந்து போனான் முத்து...

ஒரு யோசனையுடன் எழுந்தவன் தனது மொபைலை எடுத்து செல்வத்துக்கு கால் செய்தான்.... இரண்டு ரிங்கிலேயே அவர் எடுத்து “ என்ன முத்து நல்லாருக்கியாப்பா?” என்று கேட்க...

“ நான் நல்லாருக்கேன்பா.... பவித்ராகிட்ட பேசனும்... அவங்க நம்பர் சுவிட்ச் ஆப்ன்னு வருது... அதனால வேற நம்பர் இருந்தா குடுங்கப்பா” என்று முத்து முடிந்த வரை தன் குரலை இலகுவாக வைத்துக்கொண்டு கேட்க....

“ வீட்டு லேன்ட் லைன் நம்பர் தர்றேன் பேசுப்பா” என்றவர் பவித்ரா வீட்டு நம்பர் கொடுக்க....

முத்து அவருக்கு நன்றி சொல்லி இணைப்பை துண்டித்துவிட்டு பவித்ரா வீட்டுக்கு கால் செய்தான்.... யாரோ ஒரு பெண் எடுத்து “ பவிம்மா ரூம்ல இருக்காக இதோ கூப்பிடுறேங்க” என்று கூறிவிட்டு ரிசீவரை வைத்துவிட்டு போனாள்

சற்றுநேரத்தில் “ யாரு மல்லிகா போன் பண்ணது? யாருன்னு விசாரிக்காமல் என்னை கூப்பிடக்கூடாதுன்னு உனக்கு சொல்லிருக்கேன்ல?” என்று பவித்ராவின் அதட்டலை தொடர்ந்து ரிசீவரை எடுத்து “ ஹலோ யாருங்க?” என்றாள்...

தன் காதில் விழுந்த பவித்ராவின் குரலை சிந்தாமல் சிதறாமல் அவசரமாக தன் இதயத்தில் சேமித்தவனை அடுத்ததாக ஒரு ஹலோ சொல்லி அழைத்தாள் பவித்ரா

“ நான்தான் பவித்ரா முத்து” என்றான்...

எதிர்முனை மயானத்தின் அமைதி..... “ பவித்ரா?” என்று அழைத்து எதிர்முனைக்கு உயிர் கொடுத்தான் முத்து...

உயிர்பெற்ற எதிர்முனை “ ம்ம் சொல்லுங்க... நல்லாருக்கீங்களா? மது எப்படியிருக்கா?” என்று சம்பிரதாயமாக விசாரித்தாள்....

நானும் என் மகளும் நீ இல்லாம நல்லாயில்லைடி என்று அலறிய மனதை அடக்கிக்கொண்டு “ நான் நல்லாருக்கேன் ... மதுவுக்குத்தான் பீவர்” என்றான்...

மதுவுக்கு காய்ச்சல் என்றதுமே பதட்டமாக வந்தது பவித்ராவின் குரலில் “ என்னாச்சு .... ஏன் திடீர்னு காய்ச்சல் வந்தது?” என்று கேட்டாள்

“ நீ ஊருக்குப் போனதில் இருந்து எப்பபார்த்தாலும் ஒரே அழுகை... சரியா சாப்பிடலை.... இன்னிக்கு ஸ்கூல் போய்ட்டு அங்கேயே பீவர் வந்து ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய்ட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க... இப்போ தான் கண்ணு முழிச்சா... அதுலேருந்து உன்னைப் பார்க்கனும் உன்கிட்ட வரனும்னு ஒரே அழுகை... என்னால சமாளிக்க முடியலை.. அதான் வேற வழியில்லாம செல்வம் சாருக்கு போன் பண்ணி இந்த நம்பரை வாங்கி கால் பண்ணேன்” என்று தமது நிலையை தெளிவாக எடுத்துக்கூறிவிட்டு அவள் பதிலுக்காகக் காத்திருந்தான்....

சற்றுநேர மவுனத்திற்குப் பிறகு “ மதுகிட்ட குடுங்க நான் பேசுறேன்” என்றாள்...

முத்து மகளிடம் செல்லை கொடுக்க .... எடுத்தவுடனேயே அழுதுகொண்டே ஆரம்பித்தாள் ஆனால் எதிர்முனையில் பேசிய பவித்ராவின் குரலில் என்ன மந்திரம் இருந்ததோ சற்று நேரத்திற்க்கெல்லாம் அவள் அழுகை நின்று “ டாடி பவி ஆன்ட்டி உன்கிட்ட பேசனுமாம்” என்று போனை முத்துவிடம் கொடுத்தாள்

முத்து காதில் வைத்ததுமே அவனுக்கான உத்தரவு வந்தது “ மதுவோட காதுல ஹெட்போன் மாட்டி படுக்க வைங்க... நான் கதை சொல்லி தூங்க வைக்கிறேன்” என்றாள் பவித்ரா

“ ம் சரி” என்றவன் மதுவை கட்டிலில் படுக்க வைத்து காதில் ஹெட்போனை மாட்டிவிட்டு இவனும் அவளருகில் படுத்துக் கொண்டான்...

மதுமிதா உம் கொட்டியபடி கதை கேட்கும் அழகை அவனால் ரசிக்கமுடியவில்லை.... எனக்கும் உனக்கும் மட்டும் ஏன் மகளே இப்படியொரு வாழ்க்கை? என்று மகளிடம் மனசீகமாக கேள்வி கேட்டான்... கடைசிவரை நான்தான் உனக்கு தாயுமாக இருப்பேனோ?

பவித்ரா போனில் மெல்லிய குரலில் கதை சொல்வது போல் தாலாட்டு பாடி மதுமிதாவை தூங்க வைக்க.... முத்து மகளை இதமாக வருடி மனதில் தாலாட்டு பாடி தூங்க வைத்தான்



தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ....

உன் சோகம் என் ராகம்
ஏன் என்று கேட்கிறாய்....
பெண் மானே.. செந்தேனே
யார் என்று பார்கிறாய்.....
உன் அன்னை நான் தானே...
என் பிள்ளை நீ தானே...
இது போதுமே...............

தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ....


கண்ணீரில் சந்தோஷம்
நான் இன்று காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண்மூடு
சுகமாய் இறு........................

தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ....

ஆராரோ ஆரிராரிராரோ
ஆராரோ ஆரிராரிராரோ



No comments:

Post a Comment