Tuesday, December 15, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 27


அதிகாலை மூன்று மணிக்கு புறப்பட்ட பேருந்து சென்னையை நோக்கி பயணமானது.... எல்லோரும் அரட்டையும் சிரிப்புமாக வந்தனர்.... மான்சியைத் தவிர... இருட்டு இன்னும் விலகாத நிலையில் கண்ணாடிக்கு வெளியே இலக்கின்றி எதையோ வெறித்தபடி வந்தாள்...

அவள் மனம் இப்போது தெளிவாக இருந்தது.... செய்த தவறு எவ்வளவு பெரியது என்று அவள் நன்றாக உணர்ந்துவிட்டாள்.... செய்த தவறு இருவருக்கும் சமம் எனும்போது இருவரும் பேசி வைத்து பிரிந்திருக்கலாம்.... இப்படி அத்தனை பேரை கூட்டிவைத்து அவனை அவமானப்படுத்த தனக்கு என்ன தகுதியிருக்கு என்று தெளிவாக புரிந்துவிட்டிருந்தது...

அவன் காதலை உணராமல்... தன்னையே உணராமல் ஒருநாள் செய்த தவறுக்கு.... அவன் மனசை புரிஞ்சுகிட்டு.... அவன் காதலை உணர்ந்து... பிறகு எல்லாவற்றையும் தூக்கியெறிந்து அத்தனைபேரின் முன்பும் அவனை அவமானப்படுத்தியதை நினைத்து நினைத்து வேதனையில் உருகினாள்



இவ்வளவுக்குப் பிறகும் சத்யன் தன்னை மன்னிப்பானா என்ற கேள்வி அவள் மனதில் எழவேயில்லை.... மன்னிப்பை கேட்கும் தகுதியை தான் இழந்துவிட்டோம் என்று அவளுக்கு தெரியும்... ஏனென்றால் அவனுக்கிழைத்த கொடுமை அந்தமாதிரி....

அவன் உடல்நிலை சரியில்லை என்றால் அதை தீர்க்க என் மானத்தை மருந்தாக்கியது என் தவறு ... இப்படி என்மீதும் தவறு இருக்கும் போது அத்தனை பேர் முன்பும் அவனை மட்டும் குற்றவாளியாக்கிவிட்டேனே? வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியா வண்ணம் சுண்டினாள்

அவன் நடித்தான் என்றாலும் அந்த இரவில் அவனுடைய அனுகுமுறையை அணுவணுவாக ரசித்தது தானே ஒத்துழைத்தேன்... அவன் நோய்க்கு மருந்தா ஒரு முறை என்னை பயன்படுத்தியது என்று அவனுக்கு மறுபடியும் மறுபடியும் என்னைத் தந்ததில் என் உடல் தேவையும் தானே அடங்கியிருந்தது?....

அந்த இரவு முழுவதும் தன்னை ஒரு தேவதையைப் போல் நடத்திய சத்யனின் அணுகுமுறையை எண்ணி மான்சியின் உள்ளம் வெடித்து ஊமையாய் கதறியது... எப்பேர்ப்பட்ட சொர்க்கத்தை தொலைச்சிட்டேனே? இனிமேல் என் சொர்க்கம் எனக்கு கிடைக்குமா?

பக்கத்தில் இருந்த ஆர்த்தி மான்சியை அடிக்கடி திரும்பி பார்த்துக்கொண்டே வந்தாள்.... மான்சி கண்ணீரை துடைப்பை கவனித்து “ அக்கா அழாதே.... மாமாவும் பாப்பாவும் உன்கிட்ட வந்துடுவாங்க பாறேன்” என்று ஆறுதலாக கூற

மான்சி மெல்ல தலையசைத்து மறுத்து “ அவர் வரமாட்டார் ஆர்த்தி.... ஏன்னா அவரோட தன்மானத்தையே பொசுக்குற மாதிரி நான் பண்ணிட்டேன்.... இனிமேல் எனக்கு மன்னிப்பு கிடைக்காது ஆர்த்தி... அவரும் பாப்பாவும் நல்லாருந்தா அதுவே எனக்கு போதும் இனி என்னால அவருக்கு எந்த அவமானமும் வேனாம்” என்று விரக்தியாக கூறினாள்....

ஆர்த்தி என்ன சொல்வது என்று புரியாது சோகமாக அக்காவின் தோளில் சாய்ந்துகொண்டாள்

பொழுது விடிந்து கீழ்வானின் சிவப்பு பேருந்து கண்ணாடியை ஊடுருவியது.... பேருந்தில் அரட்டையும் சிரிப்பும் அதிகமானது.... மற்றவர்கள் சந்தோஷம் தன்னால் கெட வேண்டாம் என்று கண்ணீரை அடக்கி மனதை திடப்படுத்த முயன்றாள்

மான்சி மானசீகமாக மன்னிப்பை வேண்டி சத்யனுக்கு அந்த அதிகாலை ஈரக்காற்றில் தூதனுப்பினாள்....


எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓஒஒஒ…
ஏங்கிடுதே மனமே

வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது.... வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது..... ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓஒஒஒ …

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓஒஒஒ…
ஏங்கிடுதே மனமே

காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே
காதலில் உயிரை தேடி வந்து
கலந்திட வா ஏன் ஜீவனிலே
உயிரினை தேடும் உயிர் இங்கே
ஜீவனை தேடும் ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓஒஒஒ …

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓஒஒஒ…
ஏங்கிடுதே மனமே

சத்யன் அர்ச்சனா ரவி கல்யாணத்துக்கு கிளம்பி தயாராக கீழே வந்தான்... சியாமாவும் சாமுவேலும் குழந்தையுடன் ரெடியாக இருந்தனர்... சத்யன் தனது பெட்டியை சாமுவிடம் கொடுத்து விட்டு சியாமாவிடம் திரும்பி “ பாப்பாக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சுகிட்டயா சியாமா?” என்று கேட்க...

“ எடுத்துக்கிட்டேன்ங்கய்யா....” என்றாள் சியாமா....

அப்போது அங்கே வந்த மகாலிங்கம் “ ஏன்ப்பா சத்யா குழந்தையை அவசியம் எடுத்துட்டு போகனுமா? கல்யாண நெரிசலில் பாப்பா தாங்குவாளா?” என்று கவலையாக கேட்க....

“ இல்ல தாத்தா ... நேத்து போன் பண்ணி மான்சியோட அம்மா கல்யாணத்துக்கு அழைக்கும்போது பாப்பாவை பார்க்கனும் வரும்போது எடுத்துட்டு வாங்கன்னு ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க.... அதான் கூட்டிட்டுப் போறேன்... மத்தபடி தங்குறதுக்கு ஹோட்டல்ல ரூம் போட்டுருக்கேன் தாத்தா... நைட் கொஞ்சநேரம் கல்யாண வீட்டில் இருந்துட்டு உடனே ஹோட்டல் ரூமுக்கு வந்துடுவோம்... நீங்க பாப்பாவை நினைச்சு பயப்படாதீங்க தாத்தா” என்று தெளிவாக கூறி பெரியவருக்கு தைரியம் சொல்லிவிட்டு கிளம்பினான்...

காரின் பின் இருக்கையில் சியாமா குழந்தையுடன் அமர்ந்துகொள்ள... கார் ஓட்டும் சாமுவின் பக்கத்து இருக்கையில் சத்யன் அமர்ந்தான்.... அவன் மனம் முழுவதும் இனம்புரியா கிளர்ச்சி.... இந்த கல்யாணத்துக்கு மான்சி வருவாளா? வந்தாலும் என்னை பார்ப்பாளா? பார்த்தாலும் என்னிடம் பேசுவாளா?’ இப்படி அடுக்கடுக்கான எண்ணற்ற கேள்விகள் சத்யனின் மனதில்

‘வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மான்சி வருவது சந்தேகம் தான்’ என்று விக்டர் கூறியிருந்தான்... சத்யன் வழக்கம் போல் தன் தாயை துணைக்கழைத்தான் ‘அம்மா எப்படியாவது ஒரேயொரு முறை அவளை என் கண்ணுல காட்டிடுங்கம்மா’ என்று தாயிடம் வேண்டினான்....

மான்சியுடன் அந்த சிறிய வீட்டில் வாழ்ந்த நாட்களை மனதில் கொண்டு வந்து கண்மூடி சாய்ந்தான் சத்யன்.... தன் பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு அவள் நடக்கும் அழகு.... தோட்டத்தில் நின்று மான்சி கூந்தலை உலர்த்தும் அழகு.... தரையில் ஒரு காலை ஊன்றி மறுகாலை மடித்து போட்டு அமர்ந்து முழங்காலில் முகத்தை ஊன்றியபடி இவனுக்கு சாப்பாடு பறிமாறும் அழகு.... ம்ஹ்ம் எத்தனை அழகு என் மான்சி... என் முட்டாள்தனத்தால் அந்த அழகை தொலைத்துவிட்டேனே....

குளித்துவிட்டு வரும்போது அவள் மீது வரும் நறுமணம்... ம்ம்ம் சத்யன் நாசியை உறிஞ்சினான்.... மான்சியின் ஒவ்வொரு அசைவும் சத்யனுக்கு கல்வெட்டுகள்... அவளின் வார்த்தைகள் எல்லாம் காவியங்கள் ... அவள் நினைவுகள் மட்டுமே சத்யனை வாழவைத்துக் கொண்டிருந்தது 



உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினந்தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி
கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டு இன்னும் நாணம் மீதி
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
தொட வேண்டி கைகள் ஏங்கும்
பட வேண்டும் பார்வை எங்கும்

இந்தப் பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை மீதி இனி நாளை
மாலை வேளை வீணாய் போகும்
இந்தப் பார்வை ஒன்று போதும்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்
மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்நாள் கண்டே பெண்மை தூங்கும்
மடிமீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்
மடிமீது சாயும் சாபம்
தர வேண்டும் ஆயுள் காலம்
பல கோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினந்தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்



சத்யன் ரூம் புக் செய்திருந்த ஹோட்டல் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இறங்கி ரிசப்ஷன் சென்று கையெழுத்துப் போட்டு ரூம் சாவியை வாங்கிக் கொண்டு வந்து ஒரு சாவியை சாமுவிடம் கொடுத்து.... “ கீழ் தளத்தில் பதினேழாவது ரூம் சாமு.... போய் குளிச்சிட்டு ரெடியாகுங்க... நானும் ரெடியாகி வர்றேன்” என்றவன் சியாமாவிடம் திரும்பி “ பாப்பாவுக்கு அந்த ரோஸ்கலர் ப்ராக் போட்டு ரெடி பண்ணு சியாமா” என்று கூறி மகளை வாங்கி கொஞ்சி மறுபடியும் சியாமாவிடம் கொடுத்துவிட்டு தனது ரூமுக்கு செல்ல மாடிப்படிகளில் தாவி ஏறினான்....

அறையின் கதவை திறந்து பெட்டியை கீழே வைத்துவிட்டு அறையை சுற்றிப்பார்த்தான்.... அறை பெரியதாக இருந்தது நுழைந்ததும் பெரியதாய் ஒரு வரவேற்ப்பறை... அதில் ஒற்றை சோபாக்கள் இரண்டு போடப்பட்டு அதன் நடுவே ஒரு டீபாய்.... எதிர் சுவற்றில் ஒரு எல்சிடி டிவி... பக்கத்தில் பாத்ரூம் செல்லும் கதவு... அந்த அறையை அடுத்து இரட்டை கட்டிலுடன் கூடிய பெரிய படுக்கையறை... என்று ஓரளவுக்கு வசதியாகத்தான் இருந்தது....

சத்யன் பெட்டியை திறந்து டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்... ஹீட்டரைப் போட்டு பயணக் களைப்பு தீர வென்னீரில் குளித்துவிட்டு வெளியே வந்தவன் இலகுவான உடையாக கருநீல நிற நேரோ ஜீன்ஸும் வெள்ளை கார்கோ முழுக்கை சட்டையணிந்து கையை மடித்துவிட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்து செட்வெட் க்ரீம் எடுத்து தலையில் தடவி அவன் சொல்படி தலைமுடியை வணங்க வைத்து தலைவாரினான்...... சார்லி புளூ சென்ட் எடுத்து சட்டைக்கு மேலே ஸ்ப்ரே செய்துகொண்டு தனது ரேடோ வாட்ச் எடுத்து கையில் கட்டி .. ப்ளைன் ரேபான் க்ளாஸை எடுத்து கண்களுக்கு கொடுத்துவிட்டு மறுபடியும் கண்ணாடியில் பார்த்தான்... ம்ம் ஓகே என்று திருப்தியுடன் தலையசைத்துக் கொண்டு தனது பெட்டியை ஒழுங்குபடுத்தினான்...

கல்லூரி மாணவன் ஒருவன் தன் காதலிக்கும் பெண்ணுக்கு முதன்முதலாக காதல் கடிதம் கொடுக்கும் போது என்ன மனநிலையில் இருப்பானோ அதே மனநிலையில் இருந்தான் சத்யன்... அவனது பதட்டமான நிலையை நினைத்து அவனுக்கே சிரிப்பு வந்தது

மெல்லிய விசிலடித்து அவனுக்குப் பிடித்த பாடலை ஹம் பண்ணிக்கொண்டே சோபாவில் அமர்ந்தவனின் மொபைல் அடித்தது.. எடுத்து நம்பர் பார்த்தான்... விக்டர் தான்... உடனே ஆன் செய்து “ சொல்லுங்க மச்சான்? வந்துட்டீங்களா?” என்று கேட்க..

“ நாங்க மதியமே வந்துட்டோம்.... இங்கே மாப்பிள்ளை வீட்டுல பொண்ணு வீட்டுல எல்லோரும் வந்தாச்சு... ... நீ எங்கடா இருக்க? “ என்று விக்டர் கேட்டதும்....

“ நான் ஹோட்டல் ரூம்ல இருக்கேன் மச்சான்.... இதோ இன்னும் அரை மணிநேரத்தில் அங்க இருப்பேன்” என்றான் சத்யன்...

“ சரி சரி சீக்கிரம் வா .. வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு கட் செய்தான் விக்டர்...

அர்ச்சனாவுக்கு வாங்கிய நெக்லஸ் செட்டையும்... ரவிக்கு வாங்கியிருந்த மோதிரத்தையும் எடுத்து ஒரு கவரில் வைத்துக்கொண்டு அறையை பூட்டிவிட்டு கீழே வந்தான் சத்யன்

சாமுவேல்க்கு போன் செய்து வரச்சொல்லிவிட்டு காரை பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்து தயாராக இருந்தான்... சாமுவேல் சியாமா இருவரும் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்ததும் சத்யன் தன் மகளை வாங்கிப் பார்த்தான்... அவனுடைய குட்டி தேவதை உண்மையாகவே தேவதை போல் இருந்தாள் அந்த ரோஸ் நிற கவுனில்... அழகாக புருவம் எழுதி கன்னத்தில் மையிட்டிருந்தாள் சியாமா... சத்யன் மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “ தாங்க்ஸ் சியாமா” என்றான்

கீழே இறங்கியதும் சியாமாவிடமிருந்து மகளை வாங்கிக்கொண்டான்.... மண்டபத்தின் வாசலிலேயே விக்டரும் லதாவும் காத்திருந்தார்கள்.... லதா வேகமாக வந்து குழந்தையை வாங்கிக்கொள்ள... விக்டர் சத்யனை ஏறஇறங்க பார்த்துவிட்டு உதட்டை மடித்து விசிலடிக்க... லதா அவன் தலையில் செல்லமாக தட்டி “ அடச்சே என்ன இது ரவுடிப் பய மாதிரி” என்றாள்

“ யாருடி ரவுடி? இங்க பாரு உன் தம்பிய? ஹீரோ மாதிரி வந்திருக்கான்... ம்ம்ம் இன்னிக்கு கல்யாண மண்டபமே தீயும்னு நெனைக்கிறேன்” என்று கேலி செய்ய...

சத்யன் சிரித்தபடி மண்டபத்துக்குள் நுழைந்தான்... ரிசப்ஷனில் இருந்த பட்டுப் பாவாடை கட்டிய பதினாறுகள் சத்யனுக்கு பன்னீர் தெளித்து சந்தனம் கொடுக்க... சத்யன் தனது டிரேட்மார்க் புன்னகையுடன் வாங்கிக்கொண்டு உள்ளேப் போனான்

அவன் இருக்கைப் பார்த்து அமர்வதற்குள் ஆர்த்தியும் இந்த்ரும் ஓடிவந்து ஆளுக்கொரு பக்கமாக அவன் கையைப் பற்றிக்கொள்ள.. அவர்கள் பின்னாலேயே வந்த புவனா “ வாங்க “ என்று ஒற்றை வார்த்தையில் சத்யனை அழைத்துவிட்டு லதாவின் கையிலிருந்த பேத்தியை வாங்கி கண்கலங்க கொஞ்சினாள்...

அம்மாவிடமிருந்து சமியை வாங்கிக்கொண்டாள் ஆர்த்தி .... அவள் தூக்கிக்கொண்டு மண்டபம் முழுவதும் சுற்றிவர ... அவள பின்னாடி ஓடிய விக்டர் ஆர்த்தியின் காதில் ஏதோ சொல்ல .. அவள் சந்தோஷமாக தலையசைத்து விட்டு குழந்தையை எடுத்து வந்து சத்யனிடமே கொடுத்துவிட்டு “ மாமா ,, அம்மா என்னை அர்ச்சனா கூட இருக்க சொன்னாங்க... நான் போறேன் மாமா” என்று கூறிவிட்டு சிட்டாகப் பறந்து போனாள்

விக்டர் சத்யனின் அருகில் அமர்ந்து அவன் தோளில் “ என்ன மாப்ள கெட்டப்லாம் பலமா இருக்கு? மகளுக்கு வேற மேக்கப் எல்லாம் பலமா இருக்கு? அப்பனும் மகளும் யாரை கவுக்குறதுக்கு வந்துருக்கீங்க?... ” என்று கேலியாக கேட்க...

சத்யன் அவனை செல்லமாக முறைத்து “ நீங்கவேற ஏன் மச்சான்?... நான் என்னமோ இத்தனை நாளா கோவணம் கட்டிருந்து இன்னைக்குத்தான் பேன்ட் சர்ட் போட்ட மாதிரி நக்கல் பண்றீங்க? நானும் என் மகளும்எப்பவும்போல நாரமலாத்தான் இருக்கோம்” என்று சலிப்பாய் சொன்னான்...

“ ஆனா சத்யா பஸ்ஸை விட்டு இறங்கி மாடில இருக்குற மணப்பெண் ரூமுக்குள்ள போனவ தான் இன்னும் வெளியே எட்டிக்கூட பார்க்கலை” என்று சத்யனுக்கு தேவையான தகவலை சொன்னான் விக்டர்...

சத்யன் எதுவும் சொல்லவில்லை மவுனமாக இருந்தான் அவன் அமைதி விக்டருக்கு ஒரு மாதிரியாக இருந்தது... “ தைரியமா இரு சத்யா... நல்லதே நடக்கும்... நான் போய் இருக்குற வேலைப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்...

அவன் போன சிலவிநாடியில் ரவியும் அவன் அப்பாவும் வந்தனர்... ரவியின் அப்பா சத்யனின் கையைப்பிடித்து “ எப்ப வந்தீங்க சத்யன்... பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்ததா?” என்று சம்பிரதாயமாக விசாரிக்க... சத்யன் அழகாக தலையசைத்து பதில் சொன்னான்...

ரவியின் நண்பர்கள் கூட்டம் வரவே “ இதோ வர்றேன் சத்யன்” என்று கூறிவிட்டு அவர்களிடம் போனான் ரவி... அவன் அப்பா சத்யனிடம் சொல்லிகொண்டு சமையலறை பக்கமாக செல்ல....

அவர்கள் விலகிச் சென்றதும் ஆர்த்தி ஒரு கூட்டத்தோடு வந்தாள்... வந்த பெண்கள் அனைவரும் ஆர்த்தி அர்ச்சனா இருவரின் தோழிகள்... அத்தனைபேரும் சத்யனையும் குழந்தையையும் சுற்றி நின்றுகொண்டு சலசலக்க ஆரம்பித்தார்கள்... சத்யன் உதட்டில் நிரந்தரமான புன்னகையுடன் அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்

அவர்களை அவனிடம் விட்டுவிட்டு ஆர்த்தி புவனா அழைத்தாள் என்று போய்விட.... அந்த இளம்பெண்கள் கூட்டம் சத்யனை சுற்றி அமர்ந்து கொண்டது... அதிலொருத்தி சத்யனை உரசிக்கொண்டு சேர் போட்டு அமர்ந்து அவனைத் தொட்டுத்தொட்டு பேச ஆரம்பித்தாள்

அவனிடம் அந்த பெண்கள் அமர்ந்து பேசுவதை மாடியில் இருந்த பிரமாண்டமான பால்கனியின் தூண் மறைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் மான்சி.... அவள் விழிகள் சத்யனின் அழகை ஆசை ஆசையாக பருகியது... அவன் மடியில் கிடந்த மகளின் வளர்ச்சியை பிரமிப்புடன் நோக்கியது

அவள் கண்கள் மகளை விட்டு அகலவில்லை... ஒரு மாசத்துல இவ்வளவு பெரிசா வளர்ந்திட்டாளே என்று ஆச்சிரியமாக பார்த்தாள்... அந்த ரோஸ்நிற உடையில் குழந்தையின் அழகை பார்த்தவளின் நெஞ்சில் அதே குறுகுறுப்பு... மார்புகளை தூணோடு சேர்த்து அணைத்தார் போல் நின்றாள்

அப்போது அவள் தோளில் கைவைத்த ஆர்த்தி “ அவளுங்க எல்லாரும் என் காலேஜ் ப்ரண்ட்ஸ் அக்கா.... மாமாவையும் பாப்பாவையும் பார்க்கனும்னு சொன்னாங்க அதான் கூட்டிட்டுப் போய் காட்டினேன்... மாமா ரொம்ப ஹாண்ட்ஸமா இருக்காருன்னு சொல்றாளுங்க அக்கா” என்று சொல்லிவிட்டு சிரித்த ஆர்த்தியைத் திரும்பி பார்த்து வெறித்தாள் மான்சி ...

“ என்னக்கா உனக்கு சங்கடமா இருக்கா நான் வேனும்னா அவளுங்களை போகச்சொல்லிடவா?” என்று அக்காவை ஆழம் பார்த்தாள் தங்கை...

கீற்றாய் ஒரு புன்னகை இதழ்களில் ஓட “ உனக்கு யாரு இந்த மாதிரி யோசனை எல்லாம் சொல்லித் தந்தது? அவருக்கூட பொண்ணுங்க இருந்தா நான் பொறாமைப்பட்டு அவர்கிட்ட போயிடுவேன்னு யார் சொன்னாங்க ஆர்த்தி? உனக்கு நான் ஒரு விஷயம் சொல்றேன் கேளு... உலகப் பேரழகியை கொண்டு வந்து அவர் முன்னாடி நிறுத்தினாலும் அவர் மனம் என்னைத்தவிர வேற யாரையும் தீண்டாது.... எங்களுக்குள்ள காதல் இல்லாமலா பிரிஞ்சிருக்கோம் நெனைச்ச? அளவுக்கதிகமான காதலால் தான் விலகி இருக்கோம்,, இப்ப மட்டுமல்ல இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் சத்யன் எனக்கு மட்டும் தான்.. எவளாலயும் அவரை நெருங்க முடியாது ” என்று மான்சி உறுதியாக கூற... ஆர்த்தி வாயடைத்துப் போனாள்... தங்கையின் தோளில் கைவைத்து “ போடி போ இருக்குற வேலையைப் பார்” என்று அனுப்பி வைத்தாள் மான்சி

ஆர்த்தி அங்கிருந்து போனதும் மான்சியின் பார்வை மீண்டும் சத்யனிடம் போனது... அவன் தோற்றம் அவள் மனதில் ஆழப் பதிந்தது....அவள் பார்வை அவனை அலசி ஆராய்ந்தது... அவன் சிரிப்பும் ஸ்டைலும் அவன் சந்தோஷமாக எல்லோரிடமும் பேசுவதும் அவளுக்கு திகைப்பாக இருந்தது... என்னை இழந்தது சத்யனை பாதிக்கவில்லையா?... நான் அவன் வாழ்க்கையில் தேவையே இல்லையா? நான் இல்லாமல் வாழ பழகிக்கொண்டானா? இவ்வளவு அழகும் நிமிர்வும் நான் இல்லாமலா? அப்படியானால் நான் போட்ட கணக்கு தவறா? குழந்தை அவன் சந்தோஷத்தை மீட்டுவிட்டதா?’ மான்சியின் பார்வை ஏக்கத்துடன் குழந்தையிடம் பதிந்தது...



கிட்டத்தட்ட நான்கு மாதம் ஆன நிலையில் சத்யன் மடியில் படுத்துக்கொண்டு கையை காலை அசைத்து விளையாடியது.... இங்கிருந்து பார்க்க குழந்தையின் கன்னத்தில் இருக்கும் மைப் பொட்டு கூட தெளிவாக தெரிய... மான்சியின் ஏக்கம் அதிகமானது... அவளது ஏக்கம் நெஞ்சில் பாலாக ஊற்றெடுக்க.... கொஞ்சம் கொஞ்சமாக கனக்க ஆரம்பித்த மார்புகளை விரல்களால் அழுத்தி விட்டபடி மகளைப் கண்கலங்கப் பார்த்தாள்...

தன் வாழ்க்கை தான் இப்படி ஆகிவிட்டது.. தன் தங்கையின் வாழ்க்கையாவது நல்லாருக்கனும் என்று எண்ணிய மான்சி வரும்போதே கல்யாண வீட்டில் அழக்கூடாது என்ற முடிவோடு தான் வந்தாள்... ஆனால் மகளைப் பார்க்க பார்க்க அழகையை அடக்க முடியவில்லை

அங்கே மகளின் ஒவ்வொரு அசைவுகளும் இங்கே இவளின் மார்புகளை கனக்க வைத்தது... மான்சி புடவைக்கு போட்டிருந்த பின்னை எடுத்துவிட்டு முந்தானையை லூசாக்கி மார்புகளின் இறுக்கத்தை தளர்வித்தாள்...

சத்யனை சுற்றியிருந்த பெண்கள் கூட்டம் கலைந்து போக சத்யன் மட்டும் குழந்தையோடு அமர்ந்திருக்க... அவனுக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி சியாமாவும் சாமுவேலும் அமர்ந்திருந்தனர்...


No comments:

Post a Comment