Friday, December 25, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 16

மான்சியைத் தேடி கிளம்பிய சத்யன்.... செங்கல்பட்டு ரயில் நிலையத்திலேயே இறங்கிகொண்டான்...... அப்பா முத்துவுக்கு தகவல் சொல்லியிருப்பார் அவன் சென்னை ரயில்நிலையத்தில் காத்திருந்து அழைத்துச்சென்றான் என்றால் அப்புறம் மான்சியை காண முடியாது என்பதால் செங்கல்பட்டில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமாக தாம்பரம் வந்து சேர்ந்தான் ..

முத்து காத்திருக்க வேண்டாம் என்று சொல்ல ஒரு போன் பூத்க்கு சென்று முத்துவின் நம்பருக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான்... முத்து ஆன் செய்து “ ஹலோ யாரு?” என்று தனது கம்பீரமான குரலில் கேட்க....

“ நான்தான் சத்யன் பேசுறேன் முத்து..... என் ப்ரண்ட் ஒருத்தரைப் பார்க்க சென்னை வந்தேன்... இப்போ தாம்பரத்தில் இருக்கேன்... அவரைப் பார்த்ததும் உன் வீட்டுக்கு வர்றேன் முத்து” என்று கூறினான்....



முத்து கொஞ்சம் பதட்டமாக “ நீ எதுக்குடா தாம்பரத்தில் இறங்கின? நான் இங்கே எக்மோர்ல வெயிட் பண்றேனே? சரி நீ அங்கேயே இரு நான் வந்து உன்னை உன் ப்ரண்ட் கிட்ட கூட்டிட்டுப் போறேன்” என்ற முத்துவுக்கும் மனதில் குழப்பம்... எனக்குத் தெரியாத அப்படியெந்த ப்ரண்ட் இருக்கான்?.... ஒருவேளை மருத்துவமனையில் பழக்கமான நண்பனோ?....

முத்து யோசித்துக்கொண்டிருக்க..... “ இல்ல நீ வரவேண்டாம்... நானே அவரை பார்த்துட்டு உன் வீட்டுக்கு வர்றேன்” என்றவன் முத்து பதில் கூறுமுன் உடனே போன் காலை கட் செய்தான்

“ டேய் சத்யா சத்யா” என்று முத்து கத்திக்கொண்டு இருக்கும் போதே சத்யன் ஆட்டோவை தேடி போய்க்கொண்டிருந்தான்...
சென்னை மருத்துவக்கல்லூரி சென்று சத்யன் ஆட்டோவில் இறங்கும் போது காலை ஏழு இருபது ஆகியிருந்தது.....

ஆட்டோவிற்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு வந்து கல்லூரியின் பிரமாண்டத்தை ரசித்தவாறு உள்ளே சென்ற மாணவர்கள் கூட்டத்தோடு இவனும் நுழைந்தான்....

மான்சி ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள் என்று தெரியும் என்பதால்... ஒரு மாணவியிடம் பெண்கள் விடுதி எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டு விடுதிக்கு சென்றான்...

நேராக வார்டனிடம் சென்று “ பைனல் இயர் ஸ்டூடன்ட் மான்சியை பார்க்கனும் ” என்றான்...

கண்ணாடியை நெற்றிவரை உயர்த்திக்கொண்டு அவனை கூர்ந்து பார்த்த பெண் வார்டன் “ நீங்க யார் சார்?” என்று ஆங்கிலத்தில் திருப்பி கேட்டாள்...
சத்யன் யோசிக்கவேயில்லை உடனடியாக சொன்னான் “ நான் மான்சியோட அத்தை பையன்.... ஊரிலிருந்து வந்திருக்கேன் அவளைப்பார்க்கனும்” என்று இவனும் சரளமான ஆங்கிலத்தில் பதில் சொன்னான்

அவனது தெளிவான தமிழை விட... சரளமான ஆங்கிலம் அந்த வார்டனிடம் மதிப்பைப் பெற்றுத்தர “ அங்கே உட்காருங்க சார்... மான்சியை வரச்சொல்றேன்” என்று ஒரு இருக்கையை காட்டிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து “ மான்சியை வரச்சொல்லு ... அவளோட அத்தைப் பையன் வந்திருக்கார்னு சொல்லு” என்று கூறி அனுப்பி வைத்தாள்..

இருக்கையில் போய் அமர்ந்த சத்யனுக்கு சிரிப்பு வந்தது.... பிரண்ட்.. இல்ல லவ்வர்னு சொன்னா விடமாட்டாங்கன்னு அவன் வரும்போதே ஹாஸ்டல்ல கேட்டா அத்தைப் பையன்னு சொல்லனும்னு யோசிச்சு முடிவு பண்ணிக்கொண்டு வந்து அதையே சரளமாக சொல்லியும் விட்டான்.... ஆனால் மான்சியிடம் இந்த பெண் போய் உன் அத்தைப் பையன் வந்திருக்கான்னு சொல்லும்போது அவளுக்கு எவ்வளவு திகைப்பாய் இருக்கும்... இல்லாத அத்தைப் பையனை நினைச்சு ஷாக்காகிடுவா... என்று நினைத்து சத்யனுக்கு சிரிப்பு வந்தது... 

சத்யன் எண்ணியது போலவே அந்த பெண் சொன்னதும் மான்சிக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது... சத்யன் வந்தது அதிர்ச்சியாக இல்லை... ஏனென்றால் இன்னும் நாலு நாளில் கல்யாணம் எனும்போது அவன் இன்று வருவான் என்று மான்சி எதிர்பார்த்தே இருந்தாள்... அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது சத்யன் அத்தை மகன் என்று சொல்லியிருப்பது தான்

அவள் பின்னால் நின்ற மோகனா “ என்னடி மான்சி நீ யாருன்னு உன் ஆளுக்கு தெரிஞ்சு போச்சா ” என்று கேட்க....

அவளை எரிச்சலாக திரும்பிப்பார்த்த மான்சி “ நீ வேற சும்மா இருடி... நானே கதி கலங்கிப் போயிருக்கேன்” என்ற மான்சி என்றவள் “ இதோ வர்றேன்னு சொல்லுங்க ஆயா” என்று கூறிவிட்டு

அவசரமாக தனது நைட்டியை கழட்டி வீசிவிட்டு ஜீன்ஸை எடுத்து மாட்டிக்கொண்டு.. அதன் நீல நிறத்துக்கு மேட்சாக வெள்ளை நிறத்தில் மூழுவதும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஷாட் ஜிப்பா ஒன்றை எடுத்து தலைவழியாக மாட்டிக்கொண்டு.. கூந்தலை வாரி வெறும் போனிடெய்லாக போட்டு.. செதுக்கி வைத்த புருவத்துக்கு மட்டும் லேசாக மை தீட்டி.. நெற்றிக்கு நடுவே மிகச்சிறிய சிவப்பு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு.... வேறு எந்தவிதமான ஒப்பனையும் இன்றி தனது கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப்பை எடுத்து ஒரு இடது கையில் போட்டுக்கொண்டு... வலது தோளில் தன்னுடைய பேக்கை எடுத்து மாட்டியபடி கீழே சிதறிக்கிடக்கும் ஆடைகளை காலால் கட்டிலுக்கடியில் தள்ளிவிட்டு “ மோகி என்னோட எல்லாத்தையும் எடுத்து கரெக்டா வச்சிடுடி செல்லம் ... நான் போய் அந்த வில்லனோட மகன் என்ன சொல்றான்னு கேட்டுட்டு அப்படியே காலேஜ்க்கு போறேன்” என்றவளை தடுத்து நிறுத்திய மோகனா

“ ஏய் ஊருக்குப்போய் மறுநாளே கிளம்பி வந்துருக்காரு.. என்னப் பிரச்சனைன்னு கேளு .. சாப்பிட்டாரான்னு கேளுடி.. இல்லேன்னா வெளிய கூட்டிட்டுப் போய் ஏதாவது வாங்கி குடுத்து சாப்பிட வை... மெடிசன் எடுத்துக்கறதால நிறைய பசிக்கும் மான்சி.. அதனால மொதல்ல சாப்பிட வைடி... இன்னிக்கு அப்படியொன்றும் முக்கியமான க்ளாஸ் இல்லை.. நீ நிதானமா பேசிட்டு வா .. நான் பார்த்துக்கிறேன் ” என்று மோகனா கூற..

கதவுவரை போன மான்சி ஓடி வந்து மோகனாவை அணைத்து அவள் கன்னத்தில் பச்சக்கென்று ஒரு முத்தத்தை வைத்துவிட்டு “ நீ அடிக்கடி செத்துப்போன என் பாட்டியை ஞாபகப்படுத்துறடி மோகி” என்று கேலி செய்ய...

“ ம்ம் நேரம்டி .... நாமதானே நேத்து அந்த ஆஸ்பிட்டல் போய் சத்யனோட ரிப்போர்ட்டை பார்த்தோம்.. அந்த மருந்தெல்லாம் கொஞ்சம் பவர்புல்.. அதனால சாப்பிட குடுக்கனும்னு போட்டிருந்ததே மான்சி” என்று மோகனா சொன்னதும்.. மான்சி யோசனையுடன் தலையசத்துவிட்டு கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்...

நேற்றுதான் மோகனாவும் மான்சியும் சத்யன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமணைக்கு சென்று யார் யாரையோ பிடித்து சத்யனின் மெடிக்கல் ரிப்போர்ட்டை வாங்கி பார்த்திருந்தனர்... ரகசியமாக ஒரு பிரதியும் எடுத்துக்கொண்டு வந்துவிட்டனர்... சத்யன் முற்றிலும் குணமடைந்துவிட்டான் என்ற செய்தி சந்தோஷமாக இருந்தது... ஆனாலும் அதில் சொல்லப்பட்டிருந்த தகவலில் மான்சிக்கு சாதகமானது எதுவென்றால் ‘ இன்னும் சிலநாட்களுக்கு சத்யனுக்கு மன அழுத்தம் தரும் செய்தியோ... கவலை தரும் விஷயங்களோ தெரிவிக்காமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்... இது ஒன்று போதுமே செல்வத்தை ஆட்டுவிக்க....

மாடிப்படிகளில் இறங்கி வந்தவளின் பார்வையில் முதலில் பட்டது சத்யன்தான்.. அவசரமாக வார்டனுக்கு ஒரு குட்மார்னிங்கை சொல்லிவிட்டு.. சத்யனிடம் விரைந்தாள்....


மான்சியை கண்டதும் தான் சத்யனுக்கு சுவாசமே சீரானது.. அவளை கண்டதும் எழுந்தவன் தனத வலது கையை அவளை நோக்கி நீட்ட... மான்சி மலர்ந்த முகத்துடன் ஓடிவந்த அவன் கையைப் பற்றிக்கொண்டு “ எப்ப வந்த சத்யா?” என்று கேட்டபடி அவனுடன் வெளியே வந்தனர் ...

கல்லூரியின் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்தார்கள் .... சத்யன் பிடித்த பிடியை விடவில்லை... பல வருடங்களாக பார்க்காதவன் போல் அவளை ஆசை ஆசையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்

அவன் பார்வை சொன்ன சேதிக்கெல்லாம் தன் பார்வையால் பதில் சொன்ன மான்சி “ ஆமா ஏன் அத்தைப் பையன்னு சொன்ன? ” என்று கேட்க...

அவளைப் பார்த்து சிரித்த சத்யன் “ லேடிஸ் ஹாஸ்டலாச்சே வெளி ஆளுன்னு விடமாட்டாங்க.. அதான் உன் அத்தைப் பையன்னு சொன்னேன்...” என்றவன் அவளைப் பார்த்து கண்சிமிட்டி “ எப்படியிருந்தாலும் நமக்கு கல்யாணம் ஆனதும் என் அம்மா உனக்கு அத்தை தானே?” என்று கேட்க

‘அடப்பாவி நீ பொறந்ததில் இருந்தே எனக்கு அத்தை மகன் தான்டா’ என்று கத்த நினைத்த தன் மனதை அடக்கிக்கொண்டு “ ம்ம்” என்று புன்னகைத்தவள்.. சில மாணவர்களின் கவனம் தங்கள் மீது படிவதை கவனித்து சத்யனின் கையைப்பிடித்து எழுப்பி “ சரி வா வெளியே போகலாம் .. இன்னிக்கு எனக்கு முக்கியமான க்ளாஸ் எதுவும் இல்லை” என்று கூறிவிட்டு நடக்க.. சத்யன் அவளுடன் இணைந்து நடந்தான்...

மான்சி கல்லூரியைவிட்டு வெளியே வந்ததும் தனது கோட் ஸ்டெதஸ்கோப் இரண்டையும் தனது பையில் வைத்துக்கொண்டு “ வா சத்யா ஏதாவது ஹோட்டல் போய் சாப்பிடலாம்... அதுக்கப்புறம் பேசலாம் ” என்று அழைத்தாள்...

சத்யன் சரியென்று தலையசைக்க இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி பாரிஸ் கார்னர் வந்தனர்... அங்கே ஹோட்டல் ரோலக்ஸில் சாப்பிட நுழைந்தனர்... சத்யன் பாத்ரூம் சென்று பல் தேய்த்து முகம் கழுவிக்கொண்டு வர.. அதற்குள் மான்சி உணவுகளை ஆர்டர் செய்து வரவழைத்திருந்தாள்...



இருவரும் சிறு சிறு வார்த்தைகள் மட்டும் பேசியபடி சாப்பிட்டு முடித்ததும்... மான்சி சத்யனின் பையை வாங்கி அதிலிருந்து அவனது காலை வேளைக்கான மாத்திரைகளை எடுத்து கொடுக்க... சத்யன் மறுக்காமல் வாங்கி போட்டுக்கொண்டான் இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தனர்... பிளாட்பார கடைகளை வேடிக்கைப் பார்த்தபடி கைகோர்த்துக்கொண்டு நடந்தார்கள்...

சத்யன் ஒதுக்குப்புறமாக ஓரிடத்தில் நின்று “ மான்சி நான் ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி உன்கிட்ட பேசத்தான் இங்கே வந்தேன்... எங்கே போய் பேசலாம்?” என்று கேட்க ....

மான்சி எதிர்பார்த்தது தானே “ இங்கே எல்லாம் நிம்மதியா பேசமுடியாது... வா வண்டலூர் ஜூவுக்கு போகலாம் அங்கே நிம்மதியா பேசலாம்” என்று மான்சி சொல்ல.
..
“ ஏன் மான்சி அவ்வளவு தூரம்? ” என்றான் சத்யன்

“ ம் அங்கிருக்கும் நம்ம சொந்தக்காரங்களை எல்லாம் நலம் விசாரிச்சு ரொம்ப நாளாச்சு.. அதான் அப்படியே விசாரிச்சிட்டு வந்துடலாம்” என்று மான்சி சிரியாமல் சொல்ல....

சத்யன் பக்கென்று சிரித்து அவள் பின்புறம் பட்டென்று தட்டி “ குறும்புடி.... சரி வா போகலாம்” என்று வண்டலூர் செல்லும் பேருந்தை தேடி அதில் ஏறியமர்ந்தனர் ....

பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே சத்யன் உறங்க ஆரம்பிக்க ... மான்சி அவனை தன் தோளில் சாய்த்துக்கொண்டாள்.... அந்த மாத்திரைகளை உட்கொண்டதும் சிறிதுநேரம் உறக்கம் வரும் என்று மான்சிக்குத் தெரியும்... அதனால்தான் பேசுவதற்காக வண்டலூரை தேர்ந்தெடுத்தாள்... காலை நேர சென்னை நெரிசலில் வண்டலூர் போய்ச்சேர எப்படியும் இரண்டு மணிநேரம் ஆகும்.. அதற்குள் சத்யன் நன்றாக தூங்கி விழிக்கலாம்...

மான்சியின் எண்ணம் போலவே வண்டலூர் சென்றதும் தான் சத்யன் கண்விழித்தான்... “ ஸாரிடா நல்லா தூங்கிட்டேன்” என்று சங்கடமாக சிரித்தவனைப் பார்த்து புன்னகையுடன் “ ம்ம் பரவாயில்லை.. வா இறங்கனும்” என்று கூறிவிட்டு பேருந்திலிருந்து இறங்கினார்கள்


அவன் கையைப்பிடித்தபடி இருவரும் டிக்கெட் எடுத்து ஜூவுக்குள் நுழையும்போது இவர்களைப் போலவே சில காதல் ஜோடிகள் கைகோர்த்தபடி நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்...

சற்று தொலைவு போனதும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறமான இடத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்தனர் இருவரும்... அமர்ந்த அடுத்த நொடி சத்யன் மான்சியின் இடுப்பை வளைத்து தன் மடியில் சாய்த்து அவசரமாக குனிந்து ஆவேசமாக அவள் இதழ்களை கவ்விக்கொள்ள...

சத்யனின் ஆவேசத்தில் தினறினாலும்... அவனாக கொடுத்த அந்த முத்தம் மான்சியை சொர்க்கத்துக்கே அழைத்துச் சென்றது... கையை அவன் கழுத்தில் போட்டு அவன் முகத்தை இன்னும் நெருக்கத்தில் அழைத்துக்கொண்டு தனது இதழ்களை பிளந்து வைத்தாள்...

இருவரும் தங்களை மறந்து மீளா முத்தத்தில் திளைத்து தங்களது பத்துநாள் பிரிவை தீர்க்கும் முயற்சியில் கிறங்கிப் போயிருக்க.... அவர்களை களைத்துப் பிரிக்கும் நோக்குடன் பொறாமை நிறைந்த பட்சி ஒன்று அவர்களின் அருகில் வந்து கூவிவிட்டு பறந்து செல்ல.. திடுக்கிட்டு விலகினர் இருவரும்

மான்சி சூழ்நிலை உணர்ந்து அவன் மடியிலிருந்து எழுந்து அமர்ந்து தன் வாயை புறங்கையால் துடைத்துக்கொண்டு அவனைப் பார்த்து காதலாய் சிரிக்க.... சத்யன் அவள் கைபட்ட கலைந்த தனது தலைமுடியை விரலால் கோதி சரிசெய்தபடி அவனைப்பார்த்து குறும்பாய் கண்சிமிட்டி சிரித்தான் ...

அவனை விட்டு சற்று விலகி அமர்ந்த மான்சி “ என்ன ஊருக்குப் போன உடனே திரும்பி வந்துட்ட?” என்று கேட்டாள்

யோசனையுடன் புருவம் சுருக்கிய சத்யன் “ நான் ஊருக்குப்போய் ஒருநாள் தான் ஆச்சுன்னு உனக்கு எப்படி தெரியும் மான்சி?” என்று கேட்க..

ஆகா வாயை விட்டுட்டோமே என்று எண்ணிய மான்சி “ அது நேத்து நீ அட்மிட் ஆகியிருந்த ஆஸ்பிட்டல்க்கு உன்னைப் பார்க்க போனேன்... அவங்கதான் நீ டிச்சார்ஜ் ஆகி ஊருக்குப் போய்ட்டதா சொன்னாங்க” என்றாள் சமாளிப்புடன்

“ ஓ என்னைப் பார்க்க வந்தியா மான்சி? நீ என்னை பார்க்க வரலைன்னு நான் ரொம்ப ஏங்கினேன் மான்சி” சத்யனின் குரல் ஏக்கமும் சந்தோஷமுமாக ஒலிக்க...

மான்சியின் மனம் தன் காதலனுக்காக உருகியது... இப்போதெல்லாம் அவனை நினைத்தாலே தன் மனம் இளகி விடுகிறதே என்று கவலையாக இருந்தது... சத்யன் அவளுக்கு வேண்டும் தான்... ஆனால் அதையுமீறி செல்வத்தையும் ஜானகியையும் பழிவாங்க வேண்டும் என்ற வன்மம் அவள் காதலை அழுத்தி அமுக்கிப் பிடித்துக்கொண்டு அதன் மேல் ஏறி அமர்ந்திருந்தது...

அவளுடைய சித்தப்பாவின் மரணத்திற்கும் இத்தனை வருடமாக கமலக்கண்ணன் விட்ட கண்ணீருக்கும் செல்வமும் ஜானகியும் பதில் சொல்லியேத் தீரவேண்டும்... அவர்களின் கண்ணீரில் தான் என் காதல் கரை சேரவேண்டும் என்ற ஆணித்தரமான முடிவில் இருந்தாள் மான்சி .. அதற்காகத்தான் அவளுடைய காதலையே பணயமாக வைத்திருந்தாள்....

ஆனால் அந்த முடிவை சத்யனின் முத்தமும் அவனின் காதல் பார்வையும்.. கவர்ந்திழுக்கும் சிரிப்பும் அடிக்கடி பலவீனப்படுத்தியது....

மனதில் உறுதியை வரவழைத்துக் கொண்டு “ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சத்யா? என்ன இவ்வளவு அவசரமா கிளம்பி வந்திருக்க?” என்று தீர்க்கமாக கேட்க....

சத்யன் தரையிலிருந்த புற்களை கிள்ளியெறிந்தபடி “ மான்சி உன்கிட்ட சில விஷயங்களை மறைச்சிட்டேன் மான்சி” என்றான் சிறுத்துப் போன குரலில்..

“ என்னத்த மறைச்ச?” மான்சியின் கேள்வியில் கூர்மை ஏறியிருந்தது


சற்றுநேர அமைதிக்குப் பிறகு “ என் அத்தைப் பொணணு பவித்ராவை பத்தி உனக்கு சொல்லிருக்கேன்ல மான்சி... அவளை ஒரு தோழியாத்தான் உன்கிட்ட சொன்னேன்... ஆனா அவளுக்கும் எனக்கும் தான் கல்யாணம் பண்ணனும்னு சின்ன வயதுலேருந்தே முடிவு செய்துட்டாங்க மான்சி.... நாங்களும் அதை மனசுல வச்சுத்தான் வளர்ந்தோம்..” என்று சத்யன் சொல்லும்போதே குறுக்கிட்ட மான்சி..

“ நீ அவளை லவ்ப் பண்ணியா?” என்று கேட்க..

அவளை நிமிர்ந்துப் பார்த்த சத்யன் “ இல்ல மான்சி .. எனக்கு அவமேல ரொம்ப அன்பு.. ஆனா அது காதல் இல்லைன்னு உன்னைப் பார்த்ததும் தான் புரிஞ்சுகிட்டேன்... நான் உன்னை மட்டும் தான் மான்சி காதலிக்கிறேன்.... காதலிப்பேன்” என்று சத்யன் சொல்ல....

இப்போது சத்யன் சொன்னது.. இனிமேல் சொல்லப் போவது என அத்தனையும் மான்சிக்கு தெரிந்த விஷயம்தான் என்றாலும் புதிதாக கேட்பவள் போல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்

சத்யன் மான்சியின் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்து தரையை நோக்கியவாறு “ எனக்கு அந்த விபத்து நடக்குற வரைக்கும் பவித்ராதான் என் வருங்கால மனைவின்னு நெனைச்சேன் மான்சி... அவளுக்கும் என்மேல பயங்கர அன்பு இருக்கு... விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் என்னை விட்டதும் பவித்ராவைப் பற்றிய நினைப்பு எனக்கு படிப்படியா குறைஞ்சது... போலீஸ் வேலை சம்மந்தப்பட்ட ஞாபகங்கள் தான் அதிகமா இருந்தது.. அப்புறம் ஒருநாள் பவித்ரா வந்து நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. நீங்க இனிமேல் இந்த ஆஸ்பிட்டல்ல இருக்கவேண்டாம்னு சொன்னா.. நீ அங்கே வந்தியே அன்னைக்குத்தான் பவித்ரா என்கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசினது.. நானும் ஆஸ்பிட்டல்ல இருந்து வெளியேப் போனாப் போதும் என்ற ஆர்வத்தில் கல்யாணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யச்சொல்லி சொல்லிட்டேன்... அவளும் ஊருக்குப்போய்..................” சத்யன் மேலே சொல்லாமல் மான்சியை நிமிர்ந்துபார்க்க...

மான்சி அதே முகத்துடன் “ ம் ஊருக்குப் போய்? ” என்று அவனை பேச தூண்டினாள்...

பெரும் தயக்கத்துடன் அவளை சங்கடமாகப் பார்த்த சத்யன் “ பவித்ரா ஊருக்கு போய் எல்லார்கிட்டயும் பேசி எனக்கும் அவளுக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி... சாமிகிட்ட குறி கேட்டு நாளும் வச்சிட்டாங்க மான்சி” என்று சத்யன் கூறிய மறுவிநாடி

மான்சி அந்த விஷயத்தை புதிதாக கேட்பவள் போல பலத்த அதிர்ச்சியுடன் “ என்ன சொல்ற சத்யா?” என்று சிறு கதறலாக கேட்க...

“ ஆமாம் மான்சி எனக்கும் பவித்ராவுக்கும் வர்ற ஞாயிறு கல்யாணம்னு எல்லா ஏற்பாடும் பண்ணி... நேத்து நான் ஊருக்குப் போனதும் பந்தக்கால் நட்டு எனக்கு நலங்கும் வச்சிட்டாங்க மான்சி” என்று சத்யன் வேதனையுடன் கூறினான்...
.
சட்டென்று மான்சி சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள்... பிறகு தன் முகத்தை கைகளால் அறைந்துகொண்டு “ அய்யோ நான் ஏமாந்துட்டேனே.... நீ எனக்குத்தான்னு நம்பி என்னையே கொடுத்து என் வாழ்க்கையை நாசம் பண்ணிகிட்டேனே” என்று கண்ணீர் கரைபுரள ஓவென்று கதறினாள்...

மான்சியின் கண்ணீர் சத்யனை கொல்லாமல் கொன்றது அவளை நெருங்கி இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து “ அப்படியெல்லாம் சொல்லாத மான்சி ... இவ்வளவு சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவாங்கன்னு நான் நெனைச்சே பார்க்கலை மான்சி... நான் உன்னை ஏமாத்தமாட்டேன்.. நம்பு மான்சி” என்று கண்ணீர் குரலில் கெஞ்சினான்...

அவன் நெஞ்சில் இருந்து முகத்தை நிமிர்த்தி அவனை ரௌத்திரமாகப் பார்த்தவள் சட்டென்று விலகி “ அடப்பாவி துரோகி முதல்நாள் அவகிட்ட கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லி ஊருக்கு அனுப்பிட்டு... மறுநாள் என்கூட படுத்து என்னை நாசம் பண்ணிட்ட... உன்னை வெகுளி நல்லவன்னு நெனைச்சேனே... நீ இப்படி துரோகம் பண்ணிட்டயே.. இனிமே நான் ஏன் உயிரோட இருக்கனும்... செத்துப்போறேன்” என்றவள் அவன் நெஞ்சில் தனது கைகளால் பட்பட்டென்று அறைந்தபடி கத்தி கதறினாள்...


சத்யனுக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது... அறைந்த அவள் கைகளோடு அவளை தன்னோடு இறுக்கி அணைத்த சத்யன் “ இல்லடா.. இல்லடா சத்தியமா நான் துரோகி இல்லடா மான்சி... அங்கிருந்து வெளியேப் போகனும் என்ற எண்ணத்தில் தான் பவித்ராகிட்ட சொன்னேன்... ஆனா அப்புறம் தான் உன்னை சந்திச்சேன்.. மொதல்ல ஆசைக்காகத்தான் உன்னைத் தொட்டேன்... அப்புறம் அதுவே உயிர் காதலா மாறிப் போச்சு மான்சி... நான் துரோகி இல்லடி... உன்னை உயிரா விரும்பும் உன்னோட சத்யன்... நீ என்னை மறுத்தால் அடுத்த விநாடியே நான் செத்துப்போவேன்டி.... எனக்கு நீ வேனும் மான்சி.... உன்னைத்தவிர இந்த உலகத்தில் வேற எதுவுமே எனக்கில்லை மான்சி ” என்று சத்யனும் அவளை அணைத்துக்கொண்டு கதறிவிட்டான்

மான்சி அவ்வளவு சீக்கிரமாக சமாதானம் ஆகவில்லை... அவன் நெஞ்சில் விழுந்து கதறியபடியே “ இல்ல பவித்ரா விஷயத்தில் நீ பொய் சொல்லிட்ட... உன்னை எவ்வளவு நம்பி ஒரு மாசமா உன்கூடவே வாழ்ந்தேனே” என்று அவனை குற்றவாளியாக்கி மறுபடியும் மறுபடியும் சொல்லிச்சொல்லி அழுதாள்...

சத்யனுக்கு அவள் மனது புரிந்தது... ஒரு மாதமாக என்னுடன் ஒரே அறையில் வாழ்ந்தவள்... இன்று வேறொருத்தியுடன் எனக்கு திருமணம் என்றால் எப்படித்தான் சகித்துக்கொள்வாள்... மான்சியின் துடுக்குத்தனத்துக்கு பின்னால் இப்படியொரு பலவீனமான காதலி இருப்பது சத்யனுக்கு சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஒரே சமயத்தில் கொடுத்தது...

திடீரென அவனைவிட்டு விலகிய மான்சி “ போ நீ போய் அந்த பவித்ராவையே கல்யாணம் பண்ணிக்க... என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது... நான் இங்கேயே கடல்ல விழுந்து செத்துப் போறேன்... என் பிணம் கூட யாருக்கும் கிடைக்கக்கூடாது” என்று மான்சி ஆவேசமாக பேசிவிட்டு எழுந்திருக்க...

அவள் கூறிய வார்த்தைகள் சத்யனின் காதுகளில் அமிலமாக விழுந்தது... அவனும் அவளுடன் எழுந்தான் கையை இறுக்கமாக பற்றினான் “ சாகனும்னு முடிவு பண்ணிட்டயா? சரி வா ரெண்டு பேருமே செத்துப் போவோம்” என்று அவளை இழுத்துக்கொண்டு நடந்தான்
மான்சி அவன் கைகளை உதறிவிட்டு தொப்பென்று அமர்ந்தாள் முகத்தை மூடிக்கொண்டு விசும்பினாள் “ நீயேன் சாகனும்.. அவளை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இரு.... கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை நம்பி தப்பு பண்ண நான்தான் சாகனும்” என்று மெல்லிய குரலில் கூறியபடி புலம்பினாள் மான்சி...

சத்யன் அவளருகில் அமர்ந்து முகத்தை மூடியிருந்த அவள் கைகளை விலக்கினான் .. ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தினான் கண்ணீர் வழியும் கண்களில் மாற்றிமாற்றி முத்தமிட்டான் .. அவள் கண்ணீரின் உப்புச் சுவையை அவன் உதடுகள் ருசித்தன.. நெருக்கமாக அவள் முகத்தைப் பார்த்து



“ மான்சி இன்னொரு முறை நமக்குள்ள நடந்த உறவை தப்பு பண்ணதா சொல்லாத... அது புனிதம்... என்னை எனக்கே மீட்டுக் கொடுத்த உண்ணதமான உறவு அது... தப்பு என்மேல தான்.. இரண்டு பெண்களின் வாழ்க்கையில் விளையாடிட்டேன்... ஆனா பவித்ராவை விலக்கினால் அவளுக்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமையும்... ஆனா நீயும் நானும் விலகினால் ரெண்டு பேரோட வாழ்க்கை மட்டுமல்ல உயிரும் போயிடும்... அதனால நடந்தது நடந்து போச்சு நிதானம யோசிச்சு ஒரு முடிவெடுக்கனும்னு தான் நான் கிளம்பி வந்ததே...” என்று அவன் மெல்லிய குரலில் கூற.

அந்த மாயக்கண்ணனின் குரல் மான்சியை வசியப்படுத்தியது போல் அவள் கண்ணீர் நின்றது..... அடுத்து என்ன என்பதுபோல் ஒரு எதிர் பார்ப்புடன் அவன் முகத்தையேப் பார்த்தாள்

“ உன் மானத்தை காப்பாத்த என்ன விலையானாலும் நான் கொடுத்து தான் ஆகனும் மான்சி..... நாம இப்படித்தான் சேரனும்னு விதியிருந்தா அதை மாற்ற முடியாது... சொல்லு இனி நான் என்ன செய்யனும்?” ஊருக்குப் போகாம தலை மறைவா இங்கேயே தங்கிடவா? இல்லை இப்பவே ஏதாவது கோயிலுக்குப்போய் ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா? .. சொல்லு மான்சி நான் என்ன செய்யனும்? ” சத்யன் எல்லையை மீறிய காதலுடன் கேட்டான்



No comments:

Post a Comment