Friday, December 11, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 18

எல்லாம் சரியாகத்தான் நடந்தது அந்த இடத்துக்கு மான்சி வரும்வரை.... சட்டென்று கால்கள் எட்டு வைக்காமல் நிற்க ... முகம் இறுக நின்ற இடத்திற்கு மேலே தலையைத் தூக்கி சத்யனின் அறையைப் பார்த்தாள்....
சத்யன் ஒன்றும் புரியாமல் அவளருகே வந்து " என்னாச்சு மான்சி?" என்று கேட்க....

மான்சி குளமான கண்களுடன் அவன் அறையைப் பார்த்துவிட்டு " இதோ இங்கதான்... இதேமாதிரி ஒரு இரவில்..... அது வந்து என்....." மேற்கொண்டு சொல்லாமல் திக்கித்திணற.....

எந்த இரவு என்று சத்யனுக்குப் புரிந்துபோனது .... வேகமாக அவளை நெருங்கி குமுறியவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்தான் .... " வேனாம் மான்சி... அதை நினைக்காதே?.... அன்னைக்கு வலிக்கலை.... இன்னைக்கு பயங்கரமா வலிக்குது மான்சி... ப்ளீஸ்மா அதை மறந்துடு" என்று கண்ணீர் குரலில் கெஞ்சினான் ...



மான்சி அவனிடமிருந்து திமிறி விலகினாள்.... குளமான கண்ணீர் கொட்ட ஆரம்பிக்க .... " கடைசில உங்க ஆசைப்படி பல பெண்களோடு படுத்த அதே பெட்டுல என்னையும்......." என்றவள் முடிக்காமல் முகத்தை மூடிக்கொண்டு துடிக்க.....

அவள் அழுகையை அடக்க வலி தெரியாமல் தேங்கிய விழிகளுடன் அப்படியே நின்றிருந்தான் சத்யன் ...

மான்சி முந்தானையை எடுத்து தன் முகத்தை துடைத்துக்கொண்டு “ ஒவ்வொன்னையும் நெனைச்சுப் பார்த்தா எவ்வளவு வேதனை... இந்த மூனுமாசமும் எப்படா முடியும்னு இருக்கு...” என்று வேதனையுடன் மொழிந்து விட்டு தனது வீட்டை நோக்கி வேகமாகப் போனாள்

சத்யன் கலங்கிய தனது கண்களை டீசர்ட்டின் தோள்பகுதியில் துடைத்துக்கொண்டு அவள் பின்னால் போனான்.. மனதுக்குள் காதல் இருக்கிறதா என்று தெரியாதபோது அலட்சியமாக முடிவெடுத்த தன்னால்... காதலை முழுமையாக உணரும்போது கோழைத்தனமாக அடிக்கடி கண்கள் கலங்குகின்றனவே? என்று எண்ணியபடி கதவை திறந்துகொண்டு வீட்டுக்குள் போனான்...

மான்சி அறையின் ஓரமாக பாயை விரித்து இவனுக்கு முதுகு காட்டி சுவர்ப் பக்கமாக திரும்பிப் படுத்துக்கொள்ள... சத்யன் அவளைப் பார்த்தபடி மறு மூலையில் தனது படுக்கையை விரித்துப் படுத்துக்கொண்டான்... வெகுநேரம் வரை மான்சியின் முதுகை பார்த்தபடி கிடந்தான்... அடிக்கடி அவள் முதுகு குலுங்குவதை வைத்து அழுகிறாள் என்று உணர்ந்த சத்யன்

எழுந்து சென்று ஒரு டம்ளர் தண்ணீருடன் அவளருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து “ மான்சி ப்ளீஸ் அழாதே... உன் வலி புரியுது... நான் எல்லாத்தையும் உணர்ந்து திருந்தி வந்திருக்கேன்.. ஆனா அதை உன்னால நம்ப முடியலை... நீ நம்பும் நாள் வரை காத்திருக்கேன்.. அதுக்காக இப்போ இந்த நிலைமையில உன் உடலை வருத்திக்காத மான்சி... ப்ளீஸ் எழுந்து இந்த தண்ணியை குடிச்சிட்டு படுத்துக்க” என்று வருத்தமாக கூறிவிட்டு தண்ணீரை நீட்டியபடி அப்படியே அமர்ந்திருக்க...

மான்சி அதற்க்கு மேல் மறுக்காமல் எழுந்து அமர்ந்து முகத்தை துடைத்துக்கொண்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.... திரும்ப படுக்கப் போனவளை “ கொஞ்சம் இரு மான்சி” என்று தடுத்துவிட்டு எழுந்து போனவன் ஒரு டவலை நனைத்து எடுத்து வந்து அவள் அனுமதியின்றி ஈர டவலால் அவள் முகத்தை மென்மையாக துடைத்தான்...


பிறகு அவள் தோளில் கைவைத்து படுக்கையில் மெல்ல சாய்த்தவன் அவள் பக்கத்தில் அமர்ந்து கூந்தலை வருடி புருவத்தை நீவி தூக்கத்தை வரவழைக்க முயன்றான்.. கண்மூடிப் படுத்திருந்த மான்சி அவன் கைகளை விலக்கியபடி “ இதெல்லாம் எனக்கு பழக்கமானது தான்... என்னைக்கு நீங்க என்னை தொட்டீங்களோ அன்னிலேருந்து என்னோட ஒவ்வொரு இரவும் கண்ணீரில் ஆரம்பித்து துக்கத்தில் தான் முடிகிறது.... அதனால என்னைப் பத்தி கவலைப்படாம போய் படுங்க” என்றாள் விரக்தியாக ...

சத்யன் விலகவில்லை மென்மையாக நெற்றியை வருடியபடி “ நண்பர்களா இருப்போம்னு சொன்னியே மான்சி? ஒரு நண்பனா இதைக்கூட செய்யக்கூடாதா? ஏதாவது அத்துமீறல் இருந்தால் என்னை இந்த வீட்டிற்கு வெளியே நிறுத்து மான்சி ” என்றான்...

மான்சி மேலே வார்த்தையாடவில்லை.... அவனின் இதமான வருடலில் மெல்ல மெல்ல சுகமான உறக்கத்திற்குப் போனாள்... சத்யன் சற்று சரிந்து அமர்ந்து மான்சியின் அழகை விழிகளில் நிறைத்து இதயத்தில் தேக்கினான்...

நிறைமாத கர்ப்பிணியான மான்சி முன்பு இருந்ததை விட இப்போது பூரித்து சிவந்திருந்தாள்... எப்போதும் வசீகரிக்கும் அழகான இமைகளுடன் கூடிய விழிகள்.. அதன்மேல் மெல்லிய ஓவியத் தீற்றலாய் புருவம்... கன்னங்கள் பூசினார்ப் போல் மலர்ந்த ரோஜாவ கொண்டு லேசான சிவப்பும் ரோஸ் நிறமும் கலந்திருந்தது... கத்திபோன்ற கூர்மையான மூக்கின் நுனியில் சற்றுமுன் அழுததால் ஏற்பட்ட சிவப்பு... விரிந்த இதழ்களுக்கு நடுவே சிறிய இடைவெளி.. அதில் தெரிந்த துளி ஈரம்... ஒரு கையை மடித்து கழுத்துக்கடியில் வைத்துக்கொண்டு உறங்கினாள்...

சத்யனின் பார்வை அத்துமீறி தட்டுத்தடுமாறி அவளின் கழுத்துக்கு கீழே இறங்கியது... முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு பெரிதாய் ரவிக்கை கொள்ளாமல் பூரித்து வழிந்தது... அன்று இரவு அவைகளுடன் ஆசை ஆசையாய் விளையாடி சுவைத்து மகிழ்ந்த தருணங்கள் ஞாபகம் வர சத்யனிடமிருந்து நீண்டதொரு பெருமூச்சு ஏக்கமாக வந்தது... குளிருக்கு இதமாக மான்சியின் கைகள் அனிச்சையாக போர்வையை தேட... சத்யன் அருகில் கிடந்த போர்வையால் அவள் மார்பு வரை மூடிவிட்டு தனது படுக்கைக்கு வந்து படுத்தான்... வழக்கம் போல அவனது தூக்கம் தொலைந்து போனது....

காலையில் சற்று தாமதமாகவே எழுந்தான்... கண்களை கசக்கிக்கொண்டு நேரம் பார்த்தவன் மணி எட்டு என்றதும் அவசரமாக எழுந்து “ அய்யோ வாக்கிங் கூட்டிட்டுப் போகனுமே.... மறந்து போய் நல்லா தூங்கிட்டேனே.. இதோ அஞ்சு நிமிஷத்தில் ரெடியாகி வர்றேன் மான்சி ” என்று வருத்தமாக சொன்னபடி.. பேஸ்ட்டையும் பிரஸையும் எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள்ப் போனான்....

“ தேவையில்லை நான் ஆறு மணிக்கே வாக்கிங் போய்ட்டு வந்துட்டேன்... நீங்க ரெடியாகி எஸ்டேட் கிளம்புங்க” என்று கூறிவிட்டு காபி போட ஆரம்பித்தாள்...

சத்யன் ஏமாற்றத்துடன் நின்றான் .... இனி அலாரம் வைத்தாவது சீக்கிரம் எழவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்... அவன் பாத்ரூமிலிருந்து வந்ததும் மான்சி காபி கப்பை அவன் முன் நீட்ட.. புன்னகையுடன் வாங்கிக்கொண்டு சேரில் அமர்ந்தான் சத்யன்...

நியூஸ் பேப்பரை எடுத்துவந்து அவன் முன்பு வைத்தாள் மான்சி.... சத்யன் புன்னகை மாறா முகத்துடன் பேப்பரைப் படித்தபடி அதிலிருந்த அரசியல்.. சமூகம்.. பிசினஸ் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி அவளிடம் பேசினான்... மான்சி எல்லாவற்றுக்கும் சரியாக பதில் சொன்னவாறு வார்த்தையாட “ மான்சி நீ ரொம்ப புத்திசாலி... எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்க” என்று பெருமையாக பாராட்டினான் சத்யன்...

காலை உணவுக்காக இட்லி மாவை தட்டில் ஊற்றியபடி அவனைத் திரும்பிப் பார்த்த மான்சி உதட்டை ஏளனமாக பிதுக்கி “ என்ன பிரயோஜனம்... வாழ்க்கைப் பாடத்தில் அடி முட்டாளா இருந்திருக்கேனே? இல்லேன்னா இன்னும் நடிப்பு எது நிஜம் எதுன்னு கண்டுபிடிக்க முடியாம தடுமாறுவேனா? ” என்றாள் ...

நண்பர்களாக இருப்போம் என்று அவள் சொன்னாலும் ஏதாவது சமயம் கிடைத்தால் சத்யனை வார்த்தையால் குத்தி வலிக்கச் செய்யவேண்டும் என்பதே அவளது குறிகோளாக இருந்தது... சத்யன் பேசவில்லை காபி குடித்த டம்ளரை வைத்துவிட்டு குளிப்பதற்காக தனது அறைக்குப் போனான்... குளித்துவிட்டு வந்து தனது தாயின் படத்தருகே கண்மூடி நின்றவன்.. நேற்று வைத்த அதே கோரிக்கையை முன்வைத்தான்


பிறகு மான்சியின் வீட்டுக்குப் போய் சாப்பிட அமர்ந்தவனுக்கு உணவை எடுத்து வைத்த மான்சி “ ஆளுங்களுக்கு இன்னிக்கு சம்பளம் கொடுக்க பேங்கிலிருந்து பணம் எடுத்துட்டு வந்தீங்களா?” என்று மான்சி கேட்க...
இட்லியை பிய்த்து வாயில் வைத்தபடி “ இப்போ பேங்க்தான் போகப்போறேன் மான்சி” என்றான்...

“ இன்னிக்கு ஓணம்... பேங்க் லீவு” என்று மான்சி கூறியதும் ... “ அடடா மறந்துட்டேனே... சரி வீட்டு கொஞ்சம் கேஷ் இருக்கு.. அதை வச்சு சமாளிக்கலாம்” என்றவன் சாப்பிட்டு எழுந்ததும் ஷீலாவின் ஞாபகம் வந்தது ..

ஷீலாவுக்கு ஓணத்திற்கு வாழ்த்து சொல்லவேண்டும் என்று தோன்ற தனது மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான்.... நாலாவது ரிங்கில் எடுத்தவள் “ சொல்லு சத்யா நல்லாருக்கியா?” என்று கேட்க....

“ நல்லாருக்கேன் ஷீலா...திருவோணம் வாழ்த்துக்கள் ஷீலா” என்று சத்யன் சொன்னதும்...

“ ம்ம் தாங்க்ஸ் சத்யா..... இந்த ஓணத்தின் பெரிய பரிசு உன் வாழ்த்து தான்” என்று சிரிப்புடன் பகர்ந்தவள்... “ அப்புறம் உன் காதலி மான்சி எப்படியிருக்கா?... உன் லவ்வை சொல்லிட்டயா?” என்று கேட்க....

மான்சி என்றதும் சத்யனுக்கு உற்சாகம் கரைபுரண்டது... முதன்முதலாக அவன் காதலை கண்டுபிடித்து சொன்னவள் ஷீலா தானே “ ம்ம் நல்லாருக்கா ஷீலா... மான்சி இப்போ கர்ப்பம்.. இன்னும் பத்து நாளுக்குள்ள குழந்தை பிறந்திடும் ஷீலா” என்று சத்யன் சொன்னதும்...

“ அடப்பாவி வேற ஒருத்தன் கூட அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” என்று வருத்தமாக கேட்டாள் ஷீலா...

உடனே பதட்டமான சத்யன் “ ஏய் ஏய் ஷீலா வெயிட் வெயிட்... நான்தான் குழந்தையோட அப்பா” என்று சத்யன் உற்சாகமாக கூறியதும்...

எதிர்முனையில் இருந்த ஷீலா சிறிதுநேர மவுனத்திற்குப் பிறகு ... “ ஹய்யா” என்று கூச்சலிட்ட வாறு “ அடப்பாவி காதலிக்கவே இல்லைன்னு கத்தி கத்தி சொல்லிட்டு சத்தமில்லாம அப்பா ஆன விஷயத்தை சொல்றியே... ரொம்ப சந்தோஷமா இருக்கு சத்யா... மலேசியா வந்தா சொல்லு.. நான் மான்சியைப் பார்க்கனும்” என்று சொன்னாள்...

“ வந்தால் உன்னை பார்க்காமல் வரமாட்டேன் ஷீலா” என்றவன் சிறிதுநேர தயக்கத்திற்குப் பிறகு “ ஷீலா நீ ஏன் இன்னும் அங்கே இருக்கனும்.. இங்கே வந்திடு ஷீலா.. என் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை போட்டுத் தர்றேன்.. அதுமட்டுமல்ல ஒரு நல்லவனப் பார்த்து கல்யாணமும் பண்ணி வைக்கிறேன் ஷீலா இங்கே வந்துடேன்” என்று சத்யன் மெல்லிய குரலில் கூற...

சற்றுநேரம் வரை ஷீலா எதுவுமே பேசவில்லை அமைதியாக இருந்தாள்... “ என்ன ஷீலா எதுவும் பேசலை” என்று சத்யன் கேட்க....

எதிர்முனையில் இருந்தவள் பக்கென்று சிரித்துவிட்டு “ சத்யா இப்பல்லாம் ஹெச்ஐவி சர்டிபிகேட் இல்லாம என்னை யாரும் தொடுறது இல்லை தெரியுமா? இந்த மாசம் சர்டிபிகேட் வாங்குறதுக்காக இப்போ ஆஸ்பிட்டல்ல வெயிட் பண்றேன் சத்யா... என்னோட நிலைமை கடைசி கட்டத்துல இருக்கு... எனக்குப் போய் கல்யாண ஆசை காட்டுறியே?” என்று விரக்த்தியான குரலில் கூறினாள்...

சத்யனால் எதுவும் பேசமுடியவில்லை... அமைதியாக இருந்தான் “ சரி சரி என்னைப் பத்தின கவலையை விட்டுட்டு மான்சிக்கு பிறக்கப்போகும் உன் குழந்தையைப் பற்றிய கனவுகளில் ஈடுபடு சத்யா.... மான்சிக்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிடு ” என்றவள் இவன் பதிலை எதிர்பார்க்காமல் இணைப்பை துண்டித்தாள்...


சத்யன் சற்றுநேரம் மவுனமாக நின்றிருந்தான்.... “ உங்களை மாதிரி ஒரு நல்லவனை எங்கயும் பார்க்க முடியாது.... உங்க கூட இருந்த பெண்களுக்கெல்லாம் வேலை போட்டு தர்றீங்களே.. யூ ஆர் ரியலி கிரேட்” என்ற மான்சியின் ஏளனக் குரல் அவன் முதுகுக்குப் பின்னாலிருந்து கேட்க.... சத்யன் விறைப்புடன் அவள் பக்கம் திரும்பினான்...

“ ஆனா நீங்க வேலை கொடுத்ததிலேயே குழந்தையும் சேர்த்துக் கொடுத்தது எனக்கு மட்டும் தான்னு நெனைக்கிறேன்... இல்ல என்னைமாதிரி இன்னும் இருக்காங்களா? ” என்று மீண்டும் ஏளனத்துடன் அவனை வார்த்தையால் கிழித்தாள்...

சத்யனுக்கு பொறுமை பறிபோய் விடும் போலிருந்தது... பல்லை கடித்து கோபத்தை அடக்கியவன் “ மான்சி ஷீலா நீ நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல... இங்கே லதா எப்படியோ.. அது போல் மலேசியாவில் ஷீலா... அப்பாவை வெளியே கொண்டு வர நிறைய உதவினா... அதனாலதான் உதவி பண்றதா வரச்சொன்னேன்” என்று சத்யன் பொறுமையாக எடுத்துரைக்க...

“ மலேசியாவில் என்ன வேலை செய்றா?” என்று புருவம் சுருக்கி கேட்டாள்...
சத்யன் எதையும் மறைக்கும் எண்ணமின்றி “ கார்ள் கேர்ள் தான் மான்சி.. குடும்பத்துக்காக கஷ்டப்படுறா” என்று சத்யன் வருத்தமாக கூற..

மான்சியின் கோபத்தில் ரத்தமென சிவக்க “ ஒரு கார்ள் கேர்ள் கூட போய் லதா அக்காவை ஒப்பிட்டு பேசுறீங்களே இது உங்களுக்கே கேவலமா இல்லை” என்று ஆத்திரத்தில் கத்தினாள்...

சத்யன் சட்டென்று அவளை நெருங்கி “ அய்யோ நான் ஒப்பிட்டுப் பேசலை மான்சி... லதா எனக்கு எவ்வளவு நன்மை நினைப்பாங்களோ அதே மாதிரி ஷீலாவும்... அதைத்தான் அப்படி சொன்னேன்” என்று சத்யன் சொன்னதும் ...

மான்சி முகம் சுளித்து “ ஒரு வேசிக்கு சர்டிபிகேட் குடுக்குறீங்க... உங்களுக்கு நல்லா திருப்தியா சுகம் கொடுத்திருப்பா... அதான் அவள் புகழ் பாடுறீங்க” என்று பரிகாசம் செய்தாள்...

சத்யன் இயலாமையுடன் அவளையேப் பார்த்தான்.. பிறகு அவளை இன்னும் நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு “ மான்சி என்னை நம்பு ... உன்னைத் தொட்டதுக்குப் பிறகு நான் வேற எந்தப் பெண்ணையும் தொடலை.. இந்த ஷீலாவும் அதுக்காக தான் வந்தா... என்னால அவளைப் கண்ணால கூடப் பார்த்து ரசிக்க முடியலை... என் மனசுப் பூராவும் உன்னோட இருந்த அந்த இரவும் உன் அழகான உடலும் தான் இருந்தது.. பிடிவாதமா ஷீலாவை மறுத்துத் தள்ளிட்டேன்... அப்பதான் ஷீலா சொன்னா... நீ யாரையாவது காதலிக்கிறயான்னு? என் மனசே எனக்கு தெரியாத நிலையில் அப்படியெல்லாம் இல்லைன்னு மறுத்துட்டேன்... ஆனா அவ கண்டுபிடிச்சுட்டு உன்கிட்ட லவ்வை சொல்லும்போது அவளோட வாழ்த்துக்களையும் சொல்லச் சொன்னா மான்சி.. இப்பகூட உன்னைப் பத்திதான் கேட்டா ” என்று சத்யன் மெல்லிய குரலில் பொறுமையாக சொல்ல...

“ அப்போ ஒரு வேசியோட நிர்வாணத்தைப் பார்த்ததும் என் ஞாபகம் வந்துச்சா?” என்றவள் அவன் முகம் கறுப்பதை அலட்சியமாக பார்த்தபடி “ நீங்க முன்னாடியே சொல்லிருக்கீங்க ஞாபகம் இருக்கா சத்யன்... அதான் அந்த ரீனா வந்தப்போ உன்னை நினைச்சுதான் அவளை கதறக்கதற போட்டேன்டி என்று சொன்னீங்களே? அதே மெத்தேட ஷீலாகிட்டயும் யூஸ் பண்ண வேண்டியது தானே? அதாங்க என்னைன்னு நினைச்சு அவளைப்......” மான்சி முடிக்குமுன் சத்யன் அவள் வாயைப் பொத்தினான்...

“ வேண்டாம் மான்சி... உன் வாயால அதை சொல்லாதே.... கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு மான்சி” என்றவன் அதற்கு மேல் தாங்க முடியாதவனாய் அவளை நெஞ்சோடு அணைத்து “ உனக்குப் பிறகு என் வாழ்க்கையில் பெண்களே இல்லடி... இது சத்தியம் மான்சி ” என்றவனின் முதுகு குலுங்கியதை வைத்து அழுகிறான் என்று புரிய...




அவன் கண்ணீரால் இளகிய மனதை ... அன்றும் எவ்வளவு அழுதான்... இறுதியில் கதறிய என்னைப்பார்த்து எப்படி சிரித்தான்... என்று எண்ணி மனதை கடினப்படுத்தியவள் அவனிடமிருந்து உதறி விலகி வீட்டுக்குள் போனாள்...

சிறிதுநேரம் கழித்து “ நான் எஸ்டேட் கிளம்புறேன் மான்சி” என்ற சத்யனின் கரகரத்த குரல் கேட்டது... மான்சி “ ம்ம்” என்று மட்டும் சொல்ல ... “ ஜாக்கிரதையா இரு மான்சி” என்று கூறிவிட்டு கிளம்பினான் சத்யன்...

மான்சி வெகுநேரம் வரை அப்படியே அமர்ந்திருந்தாள்... சத்யனின் கண்ணீர் உண்மையா? என்ற குழப்பம் அவளை வேறு எதிலும் கவனம் செலுத்தவிடாமல் கட்டிப்போட்டது... எத்தனைமுறை எந்த கோணத்தில் யோசித்தாலும் சத்யனின் முந்தைய ஏமாற்றுக் கண்ணீருக்கும் இன்றைய கண்ணீருக்கும் வேற்றுமையே தெரியவில்லை... இவனுக்கா நடிக்கத் தெரியாது?... ஏமாற்றுக்காரன்.. என்று ஆத்திரத்துடன் தலையை உதறிக்கொண்டு எழுந்தாள்...

வழிநெடுகிலும் மான்சியின் மனசுக்குள் நுழையும் வழி தெரியாமல் தவித்து குழம்பினான் சத்யன்.... அலுவலகத்தில் அமர்ந்தவனுக்கு வேலையில் கவனம் போகவில்லை... என்ன செய்தால் இவள் மனம் இளகும் என்ற சிந்தனையே மேலோங்கி இருந்தது...

வெகுநேர யோசனைக்குப்பின் சத்யனின் மூளையில் மின்னலடிக்க... ஆஹா இதை பத்தி இவ்வளவு நேரம் யோசிக்காமல் போனேனே என்று எண்ணியபடி தனது மொபைலை எடுத்து கோவையிலிருந்த தனது கல்லூரி நண்பன் ஒருவனுக்கு கால் செய்தான்.....

முறையான நலன் விசாரிப்புக்கு பிறகு... சத்யன் தனது நண்பனிடம் அந்த உதவியை கேட்டான்... படிக்கும் காலத்தில் சத்யனால் நிறைய பலனடைந்த அந்த நண்பன் இன்னும் இரண்டு நாட்கள் டைம் கொடு மச்சான் வேலையை முடிச்சிட்டு தகவல் சொல்றேன்.. என்று சத்யனின் உலர்ந்த நெஞ்சுக்கு நீர் வார்த்தான்....

மறுநாள் நண்பனுக்கு தேவையான பணத்தை வங்கியில் அவன் அக்கவுண்ட்க்கு மாற்றினான்

மதிய உணவிற்காக வந்தபோது சத்யன் எதையும் காட்டிக்கொள்ள வில்லை.. மான்சியும் அமைதியாகத்தான் பறிமாறினாள்... இரண்டாவது முறையாக சாப்பாடு கேட்டு வாங்கிய சத்யன் சாப்பிட்டபடி “ நீ நல்லா சமையல் பண்ற மான்சி... என் அம்மா மாதிரியே” என்று சத்யன் பெருமையாக கூற...

அவ்வளவு நேரம் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுமையாக அமர்ந்திருந்த மான்சி.... “ உங்க அம்மா மாதிரி நானா? அப்போ நீங்களும் லீகலா பிறக்கலையா?” என்றவள் தன் வயிற்றில் கைவைத்து “ இதேபோல் இல்லீகல் தானா?” என்று அவன் தன்மானத்தை உரசிப் பார்க்க...

முந்தைய சத்யனாக இருந்தால் எதிரில் இருந்த தட்டு சுவற்றில் அடிக்கப்பட்டு உடைந்திருக்கும்... ஆனால் இந்த சத்யன் காதலில் விழுந்து கோழையாகி விட்டிருந்தான்... உதட்டை கடித்தபடி ஒருவாய் கூட உண்ணாமல் தட்டிலேயே கைக் கழுவிவிட்டு எழுந்தான்....

“ ஏன் சாப்பிடலை? நீங்க தானே என் அம்மா மாதிரின்னு சொன்னீங்க? அதான் அப்படி கேட்டேன்? நான் கேட்டதில் ஏதாவது தப்பிருக்கா?’ என்று அப்பாவியாக கேட்டாள் ...

கதவு வரை சென்ற சத்யன் நின்று திரும்பி “ இல்ல நீ கேட்டதில் தப்பில்லை.... ஆனா நமக்கு நடுவே என் அம்மா வேண்டாம் மான்சி... அவங்க இறந்து தெய்வமா இருக்காங்க... என்னால அவங்களுக்கு அவப்பெயர் வேண்டாம்” என்று கூறிவிட்டு வெளியேப் போனான்

அவன் போனபிறகு மான்சி அவனை வார்த்தையால் வதைத்ததை எண்ணி சந்தோஷமாக சாப்பிட அமர்ந்தாள்... ஆனாலும் போகும்போது அவன் கண்கள் கலங்கியிருந்தனவா? என்ற கேள்வி மனதை குடைந்தது... அவன் தாய் மட்டும் தான் உத்தமி மற்றப் பெண்கள் உத்தமி இல்லையா? நல்லா வலிக்கட்டும்... நான் அப்படித்தான் பேசுவேன்’ என்று மனதிற்குள் எண்ணமிட்டபடியே சாப்பிட்டாள்....


கொஞ்சநேரத்தில் தினா வந்தான்... மான்சியின் நலம் பற்றி விசாரித்து விட்டு... “ என்ன மான்சி துரை எப்படியிருக்காரு?” என்று கேலியாக விசாரிக்க...

“ அவருக்கென்ன நல்லாதான் இருக்காரு... பங்களாவுக்கு போனார் இன்னும் ஆள் வரலை” என்று மான்சியும் கேலியாகவே பதில் சொன்னாள்....

“ விக்டர் சொன்னாரு மான்சி.... பாவம் மனுஷன் இன்னும் ஒன்றரை வருஷம் காத்திருக்கனுமான்னு ரொம்ப தவிச்சுப் போயிருந்தார்... இப்போ உற்சாகமா இருக்காரு... இவ்வளவு சீக்கிரமா பிரச்சனை தீர்ந்ததுல சந்தோஷம் மான்சி... அதான் உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” என்ற தினாவின் குரலில் சந்தோஷம் துள்ளியது...

தினாவை சோர்ந்த பார்வைப் பார்த்த மான்சி... “ எனக்கும் சந்தோஷமாத்தான் இருக்கு... ஆனா சத்யனைப் பத்திதான் உங்களுக்குத் தெரியுமே? எந்த சமயத்தில் என்னப் பண்ணுவாருன்னு யாருக்குத் தெரியும்... புலி பதுங்குரது பாயுறதுக்கா கூட இருக்கலாம்... அதனால நான் ரொம்ப ஜாக்கிரதையாத் தான் இருக்கேன் அண்ணா... சத்யனை அடிச்சு வீழ்த்த வேற வழி ஒன்னையும் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்... போகப்போக செயல்படுத்தி சத்யனை ஒன்னுமில்லாம ஆக்குவேன் தினா ” என்று மான்சி ஆக்ரோஷமாக சொல்ல...

தினா யோசனையுடன் தலையசைத்து “ நீ சொல்றதும் புரியுது.... பல வருஷம் நண்பனா பழகுன என்னையவே தன் நடிப்பால ஏமாத்தி கண்ணீர் விட வச்சவன் ஆச்சே.... அதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? சத்யனோட மறு பக்கத்தைப் பார்க்க வச்ச அந்த நாட்களை நான் எப்பவும் மறக்க மாட்டேன்... அவன் பெண்களைத் தேடிப் போகும் போதெல்லாம் அது அவனோட பர்ஸனல் நாம தலையிடக்கூடாதுன்னு ஒதுங்கி இருந்தேன்.. ஆனா உன்னை கேவலமா ஏமாத்தினான் பாரு.. அந்த நிமிஷமே அவனை வெறுத்துட்டேன் மான்சி... அவனை நீ வீழ்த்தனும்னு நெனைச்சது சரிதான் மான்சி ” என்று தினா கோபமாக பேசிக்கொண்டு இருக்கும்போது....

“ தினா நான் திருந்திட்டேன்டா” என்ற சத்யனின் குரல் கலங்கிப்போய் ஒலித்தது....

தினா திரும்பிப்பார்த்து “ முன்னாடி அரங்கேற்றம் பண்ணியே அந்த வயித்துவலியோட செகன்ட் பார்ட் தான் இந்த திருந்திட்டேன் நாடகமா?” என்று ஏளனத்துடன் கேட்க...



“ இல்ல தினா நிஜமாகவே........” என்று சத்யன் முடிக்கும் முன் . “ நிஜம்னா உனக்கு என்னன்னு தெரியுமா சத்யா?” என்றவன் மான்சியின் வயிற்றை கைநீட்டி காட்டி “ இதோ மான்சியோட வயித்துல இருக்குற குழந்தை நிஜம்.... நீ கேடுகெட்டவன்னு தெரிஞ்சும் மான்சி உன்மேல வச்சிருந்த காதல் நிஜம்... உன் நடிப்பை நம்பி நாங்க ரெண்டுபேரும் ஏமாந்தது நிஜம்.. இதெல்லாம் தான் நிஜம்... உன்னோட சொல் செயல் அத்தனையும் பொய் சத்யா ” என்று கொதிப்புடன் பேசியவன் சட்டென்று நிதானப்பட்டு “ ச்சே இப்படியெல்லாம் பேசிடுவென்னு தான் உன் முகத்திலேயே முழிக்காம இருந்தேன்.... இன்னைக்கு மான்சியைப் பார்க்க வந்து இப்படி ஆயிருச்சு” என்றவன் மான்சியிடம் திரும்பி “ நான் கிளம்புறேன் மான்சி... ஜாக்கிரதையா இரும்மா” என்று கூறிவிட்டு தனது பைக்கை ஸ்டார்ட் செய்து எடுத்துக்கொண்டு திரும்பிக் கூட பார்க்காமல் கிளம்பினான்...

சத்யன் அப்படியே குறுகிப் போய் நிற்க.... நீயும் ஒரு மனுஷனா? என்பதுபோல் ஒரு பார்வையை வீசிவிட்டு மான்சி வீட்டுக்குள் போய் விட்டாள்

" உன்னை எனக்குப் பிடிக்கவில்லை....

" என்று நீ எழுதிய கடித்ததை...

" வேதனையுடன் தான் பிரித்துப் படித்தேன்...

" படித்ததுமே சந்தோஷமடைந்தேன்..

" அன்புள்ள' என்று ஆரம்பித்திருந்தாயே..... "


No comments:

Post a Comment