Wednesday, December 9, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 16

ஒவ்வொரு இரவும் அவள் நினைவின்றி தன்னால் உறங்கமுடியாத தருணங்களை எண்ணிப் பார்த்தான்... மலேசியாவில் இருந்தபோது அவள் குரல் கேட்பதற்கென்றே வாழ்ந்த நிமிடங்களை நினைவுகூர்ந்தான்... மான்சியைப் பற்றி எப்படி நினைத்தாலும் உடலும் உள்ளமும் ஒன்றாய் சேர்ந்து துள்ளுவதன் காரணம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவானது.. ஒவ்வொருமுறையும் அவள் கண்ணீர் தன்னை கலங்க வைத்ததை எண்ணினான்.. சிலசமயம் அவள் பார்வையின் அர்த்தங்களை புரிந்து கொள்ளமுடியாமல் போனது ஏன் என்றும் தெளிவானது... அவளை யாரும் பார்க்கக் கூடாது.. அவள் என்னைத்தவிர வேறு யாருடனும் பேசக்கூடாது என்று தனக்குள் ஏற்பட்ட பொறாமையின் அர்த்தம் விளங்கியது...



மான்சியுடன் சுகித்த இரவை நினைத்தான்... இவனுடன் உறவுகொண்ட பெண்களை எல்லாம் கதறவைக்க வேண்டும் அதுதான் ஆண்மைக்கு அழகு என்று எண்ணியிருந்தது போய்.. இவன் தொடத்தொட மெல்ல மெல்ல மலர்ந்த மான்சியை ஒரு பூவைப்போல் எண்ணி உறவுகொண்ட அந்த இரவு ஞாபகம் வந்தது...

எத்தனை இரவுகள் அந்த சொர்க இரவை மட்டுமே நினைவில் நிறுத்தி பொழுதைக் கழித்தான் என்று கணக்கிட்டுப் பார்த்தது மனம்... எண்ணிலடங்காது நீண்டுகொண்டே போனது அவன் கழித்த இரவின் கணக்குகள்....

எனக்கு மான்சி வேண்டும்..அவளுக்கு என் காதல் வேண்டும்... என் காதலை கொடுத்து அவளை அடைந்தால்தான் என்ன? மான்சியை அவன் வெறும் உடல் தேவைக்காக மட்டும் தேடவில்லை என்று அவனுக்கு தெளிவாக புரிந்தது... அப்படியானால் உடல் தேவைக்கும் அப்பாற்பட்டு ஒரு பெண்ணை மனம் நாடுகிறது என்றால் அதுதான் காதலா? காதல் இவ்வளவு சுகவேதனையா? காதலை அடைய கண்ணீரும் போராட்டமும் தான் வழியா? இந்த போராட்டமும் சத்யனுக்கு பிடித்தது...

தனக்குள் காதல் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது... அதை உணர்ந்து ஒத்துக்கொள்ளத்தான் மனமில்லாமல் இருந்திருக்கிறோம்’என்று சத்யனுக்கு புரிந்த மாத்திரத்தில் அவன்மீதே அவனுக்கு ஆத்திரம் வந்தது...

எது இத்தனை நாட்களாக என் காதலை உணரமுடியாமல் தடுத்தது? ஆண் என்கின்ற அகங்காரமா? ஒரு பெண்ணிடம் நான் வீழ்ந்தேன் என்று ஒத்துக்கொள்ளாத மனமா? அல்லது மான்சியிடத்தில் இருந்த நிமிர்வும் தன்னம்பிக்கையையும் பார்த்து எனக்குள் ஏற்ப்பட்ட ஈகோவா? தன்னையே அலசி ஆராய்ந்த சத்யன் இந்த மூன்றுமே தான் என்று முடிவு செய்தான்...

இந்த மூன்றையும் ஒழித்தால் என் மான்சி என்னிடம் வந்துவிடுவாளா? அவள் கிடைப்பாள் என்றால் இதையெல்லாம் நான் விடலாமே? விட்டு விடுகிறேன்... எனக்கு மான்சிதான் வேண்டும்... அவள் இருந்தால் போதும் வேறு எதுவும் எனக்கு வேண்டாம்... இப்போது தான் அவளின் பிரிவு எவ்வளவு வலிக்கும் என்று சத்யன் உணர்ந்தான்


“ அன்று காதல் என்னை சுமந்த போது...

“ சுகமாக இருந்தது!

“ இன்று காதலை நான் சுமக்கும் போது...

“ வேதனையாக இருக்கிறது!

“ அன்று எனக்கு கிடைத்த சுகத்தை விட...

“ இன்று நான் படும் இந்த வேதனைதான்...

“ எப்போதும் வேண்டுமென்று ..

“ மனம் விரும்புகிறது! 

முதன்முறையாக காதலை உணர்ந்து அனுபவித்த அவன் மனது... இலவம்பஞ்சாய் மிதந்து பறந்தது... என் மான்சி எனக்குத்தான் எனக்குத்தான் என்று கத்தவேண்டும் போல் இருந்த மனதினை சிரித்தபடி அடக்கினான்... சுகமாக தலையணையை கட்டிக்கொண்டு கிடந்தவனை சாமுவேலின் குரல் கலைத்து அழைத்தது...

சத்யன் எழுந்துபோய் கதவை திறந்தான்... சாமுவேல் சத்யனை முகத்தைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தபடி “ மணி பத்தாகுதுங்க வாங்க சாப்பிட” என்றான் வெற்றுக்குரலில் ..

மற்றொரு நேரமாயிருந்தால் சத்யனின் பார்வையில் பொசுங்கியிருப்பான் சாமுவேல்... இன்று சாமுவேலின் வெறுமைக்கு காரணம் மான்சி வெளியேறியது தான் என்று சத்யனுக்கு புரிய.. உதடுகள் ரகசியச் சிரிப்பில் மலர்ந்தது... ஓ இவங்க எஜமானி வெளிய போனதால என் மேல கோபம் போலருக்கு? என்று எண்ணிக்கொண்டு “ போ சாமு நான் குளிச்சிட்டு வர்றேன்”என்றுகூறி அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான்

காலையிலிருந்து இன்னும் பல்கூட தேய்க்காமல் மான்சியைப் பற்றிய சிந்தனையில் இருந்ததை எண்ணி சிரித்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்தான்... குளித்துவிட்டு வெளியே வந்தவன் உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டான்...

நீதானடி என் மனசுக்குள்ளே புகுந்த மாயக்காரி என்று உடனே போய் மான்சியிடம் சொன்னால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்.. என்னை அணைத்துக்கொள்வாளா? திகைத்து நிற்ப்பாளா? சத்யனின் கற்பனையில் காட்சிகள் விரிந்தது... உதடுகள் குவிந்து விசிலடிக்க... பாடி ஸ்ப்ரேயை எடுத்து அடித்துக்கொண்டு அதை இவனே முகர்ந்து “ இந்த வாசனை மான்சிக்கு பிடிக்குமா என்று காரணமின்றி யோசித்தான்.. பிறகு தனக்குத்தானே தலையில் தட்டியபடி காதல் வந்தால் இப்படித்தான் கண்டதையும் யோசிக்கத் தோன்றுமா? எனக்கு பிடிச்ச எல்லாமே அவளுக்கும் பிடிக்கும் என்று மனதுக்குள் சொல்லிகொண்டு கீழே வந்தான்...

டைனிங் ஹால் சென்று சாப்பிட அமர்ந்தபோது மான்சி சாப்பிட்டிருப்பாளா? என்ற சிந்தனை வர .. “ கொஞ்சம் இரு சாமு மான்சி சாப்பிட்டாளான்னு பார்த்துட்டு வர்றேன்” என்றுகூறி விட்டு எழுந்து தோட்டத்துக்குப் போனான்...

சத்யன் பின்னால் வந்த சாமுவேல் “ அவங்க எஸ்டேட்க்கு போய் ஒரு மணிநேரம் ஆச்சுங்க” என்றதும் சத்யன் ஏமாற்றத்துடன் வந்து அமர்ந்தான்

இட்லியை கையில் எடுத்தவன் “ எப்படி எஸ்டேட்க்கு போனா” என்று கேட்க ... “ விக்டர் சார் கார்ல தாங்கய்யா.. வெளியே காரை நிறுத்திட்டு ஹாரன் அடிச்சாரு உடனே இவங்க போய்ட்டாங்க” என்று சாமுவேல் சாதரணமாக சொல்ல...

சத்யன் கையிலிருந்த இட்லியை தட்டில் போட்டுவிட்டு வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு எழுந்துகொண்டான்... “ அய்யோ சாப்பிடாம போறீங்களே” என்று சாமுவேல் பதட்டத்துடன் ஓடி வர.. அமைதியாக அவனை திரும்பி பார்த்த சத்யன் “ பசிக்கலை சாமு.. நான் எஸ்டேட் கிளம்புறேன் ” என்றுகூறிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்...

வழி நெடுகிலும் பறந்து விரிந்து கிடந்த இயற்கையை மனம் ரசிக்கவில்லை... விக்டரால் தன் காதலில் புயல் வீசுமோ என்று பயந்தான்... விரல் நடுங்க காரை ஓட்டினான் இந்த பயம் நடுக்கம் எல்லாமே புதுசு... தன் காதலியை இன்னொருவனுடன் இணைத்துப் பார்ப்பது எவ்வளவு கொடுமையானது என்று அவன் மனம் வலிக்க வலிக்க உணர்ந்தது

சத்யன் அலுவலகத்துக்குள் நுழையும் போது மான்சி சேரில் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தாள்... சத்யனை நிமிர்ந்து பார்த்துவிட்டு சிறு புன்னகையுடன் “ குட்மார்னிங் சார்” என்றாள்..

சத்யனுக்கு அந்த சம்பிரதாய புன்னகை ரசிக்கவில்லை... மெல்ல தலையசைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தான்... அதன்பின் இருவரும் வேலையில் கவனமாக... சத்யன் மட்டும் மான்சியை ஓரக்கண்ணால் ரசித்தபடி தனது வேலையை தொடர்ந்தான்...



இதுபோல் மறைந்து மறைந்து ரசிப்பதை எண்ணி சத்யனுக்கு சிரிப்பு வந்தது... நானா இப்படி மாறிப்போனேன் ?... மான்சியை நிமிர்ந்து பார்க்கவில்லை சத்யன்... அப்போது தொழிற்சங்க தலைவர் அங்கே வர... சத்யன் புன்னகையுடன் அவரை வரவேற்க... அவர் அவன் புன்னகையை ஏற்காமல் நேராக மான்சியிடம் போய் தொழிளாலர்கள் பற்றி ஏதோவொரு தகவலை கேட்டுக்கொண்டு மீண்டும் சத்யனின் மேசையருகே வந்தார்..

“ உங்களை நல்ல மனுஷன்னு நெனைச்சேன் சார்... அன்னிக்கு உங்க எதிர்லயே மான்சியை அவ்வளவு கேவலமா பேசிட்டு போனோமே... இந்த பொண்ணு நல்லவன்னு ஒரு வார்த்தை சொன்னீங்களா சார்? நீங்கதான் குற்றவாளின்னு தெரியாம பாவம் இவங்களை கேவலமா பேசிட்டேன்... அப்புறமா தான் நடந்தது என்னன்னு எங்களுக்கு தெரிஞ்சது.. ஆனா பெண் பாவம் பொல்லாதது சார்” என்று எச்சரிக்கை செய்துவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் சென்றார்

சத்யன் யோசனையுடன் மான்சியை பார்க்க... அவள் தலைகுனிந்து “ நான் எதுவும் சொல்லலை... அவங்களா விசாரிச்சு தெரிஞ்சுகிட்டாங்க போலருக்கு” என்று மென் குரலில் கூறினாள்...

சத்யன் எழுந்து அவளருகே போய் குனிந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களை நேரடியாக பார்த்து “ உன்னை நல்லவன்னு சொன்னதுல எனக்கு சந்தோஷம் தான் மான்சி... நான் கெட்டவனாகவே இருந்துட்டுப் போறேன் ” என்று மென்மையாக கூற... மான்சி வெறுமையான ஒரு பார்வையுடன் தனது தாடையிலிருந்த அவன் கையை விலக்கிவிட்டு தனது வேலையை கவனிக்க...

அவ்வளவு சீக்கிரமாக மான்சியின் மனது மாறாது என்று சத்யனுக்கு தெரியும்... நானும் காதல்வயப்பட்டு விட்டேன் என்பதை மெல்லத்தான் சொல்லி புரியவைக்க வேண்டும் என்று எண்ணியவாறு அமைதியாக தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தான்...

அன்று மதிய உணவு சாமுவேல் எடுத்து வந்து வைத்துவிட்டு “ காலையிலேயே சாப்பிடாம வந்தீங்க .... தயவுசெய்து இப்பவாவது சாப்பிடுங்கய்யா” என்று கெஞ்ச... சத்யன் மான்சியை நிமிர்ந்து பார்த்தான்..

அன்றுபோல் இவன் பசிக்காக துடிக்கவில்லை மான்சி... அமைதியாக தனது உணவு டப்பாவை எடுத்துக்கொண்டு தடுப்புக்கு பின்னால் போய்விட்டாள்... உண்மையிலேயே என்னை வெறுத்துவிட்டாளா? சத்யனுக்கு வயிற்றில் ஏதோ பிசைய கிலி பிடித்துக்கொண்டது

சாமுவேலின் வற்புறுத்தலால் சிறிது சாப்பிட்டவன்... அன்று மாலை எப்பது வரும் என்று காத்திருந்தான்....

மாலை ஐந்து மணிக்கு மான்சி கிளம்பும் போது “ மான்சி கொஞ்சம் இரு” என்றவன் ... “ இனிமேல் நீ நாலு மாசத்துக்கு வேலைக்கு வரவேண்டாம்... வழக்கமா என் கம்பெனியில் வேலை பார்க்கிற பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னாடி ஒரு மாசமும்.. குழந்தை பிறந்ததும் மூன்று மாசமும் சம்பளத்துடன் கூடிய லீவு கொடுக்கறது வழக்கம்... அதைத்தான் உனக்கும் குடுத்திருக்கேன்... நாளையிலிருந்து நீ எஸ்டேட்க்கு வரவேனாம்... எனக்கு ஏதாவது கேட்கனும்னா வீட்லயே கேட்டுக்கிறேன்”என்று சத்யன் நிதானமாக கூற....

மான்சி அதை மறுக்கமுடியாமல் நின்றாள்... அவன் சொல்வது நியாயமான காரணம்... எப்படி மறுக்கமுடியும்... 

சரியென்று தலையசைத்துவிட்டு வெளியேறினாள்... விக்டரின் கார் வந்து நின்று அவன் இறங்கி மான்சிக்கு காரின் கதவை திறந்து விட அவள் ஏறி அமர்ந்ததும் கார் புறப்பட்டது... சத்யன் கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்தான்

பிறகு சத்யனும் கிளம்பினான்... வீட்டுக்கு போனதும் முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு கீழே வந்தான்... முதன்முறையாக போதையில் இல்லாமல் சத்யனின் கால்கள் தடுமாறியது... மான்சியை தேடி அவள் வீட்டுக்குப் போனான்

மான்சி நிலவின் ஒளியில் தோட்டத்து புல்வெளியில் அமர்ந்திருந்தாள்... சத்யன் மெல்ல நடந்து அவளருகில் போய் அமர்ந்தான்... இவனை எதிர்பார்க்காத மான்சி சட்டென்று எழ முயன்றாள்....

சத்யன் அவள் கைப்பற்றி தடுத்து “ ப்ளீஸ் மான்சி உன்கிட்ட பேசனும்னு வந்திருக்கேன்... நான் சொல்றதை கேட்டுட்டு போயிடு மான்சி” என்று கெஞ்சலாக உரைத்தான்...

அவனை விசித்திரமாக பார்த்தபடி சற்று தள்ளியே அமர்ந்தாள் மான்சி... சத்யன் பற்றியிருந்த கையை விடாமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான்... அவன் நிலை அவனுக்கே எரிச்சலாக இருந்தது ... ஏன் இப்படி தடுமாறுகிறோம் என்று மெல்ல தன்னை நிதானப் படுத்திக்கொண்டான்

நிமிர்ந்து மான்சியின் முகத்தைப் பார்த்தான்... அவனையுமறியாமல் உதடுகள் புன்னகையில் விரிந்தன.... “ மான்சி நான் சொல்லப்போறதை கேட்டு உனக்கு ஆச்சர்யமா இருக்கும்... ஆனா நான் சொல்றது உண்மை மான்சி” என்று ஆரம்பித்தான்.. ம்ம் சொல்லு என்பதுபோல் பார்த்தாள் மான்சி....

அன்னாந்து விண்ணில் மிதக்கும் நிலவைப் பார்த்தான்... உள்ளுக்குள் இருந்த காதல் தைரியத்தை கொடுக்க “ நானும் உன்னை விரும்புறேன் மான்சி... உயிருக்கு உயிரா... நீ இல்லாம நான் ஒன்றுமில்லை எனுமளவுக்கு விரும்புறேன் மான்சி.... நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சு பலநாள் ஆச்சு... அதை உணராம என்னையும் வதைச்சுகிட்டு.. உன்னையும் கஷ்டப்படுத்தியிருக்கேன்... இப்போ நான் தெளிவா இருக்கேன் மான்சி” என்றவன் அவளின் கையை தன் உதட்டருகில் எடுத்துச்சென்று மொத்த விரல்களையும் சேர்த்துப் பிடித்து விரல்களின் நுனியில் முத்தமிட்டு “ ஐ லவ் யூ மான்சி”என்றான்.. இதைச்சொல்லும் போது உணர்ச்சியில் அவன் உதடுகள் துடிக்க.. விரல்கள் நடுங்கியது...

சிறிதுநேரம் அவனையே கூர்ந்த மான்சி தனது கையை விடுவித்துக்கொண்டு சிறு ஏளனப் புன்னகையாய் ஆரம்பித்து அது பெரும் சிரிப்பாய் மாற வாய்விட்டு பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்தாள்... அவள் சிரிப்பில் மரங்களில் இருந்த இரவுநேர பறவைகள் பயத்தில் சிறகுகளை அடித்துக்கொண்டன... கண்ணில் நீர் வர சிரித்தாள் மான்சி ..

மான்சியின் அந்த சிரிப்பு சத்யனுக்குள் பயத்தை கிளப்ப “ மான்சி...........” என்றான் திகைப்புடன்....

சிரிப்பை கொஞ்சம் அடக்கிக்கொண்டு “ அய்யோ அய்யோ என்னங்க இது இப்படி ஜோக் அடிக்கிறீங்க? .... ஆனா பாருங்க இனிமேலும் நீங்க நடிச்சு என்கிட்ட வாங்க எதுவுமில்லையே? உங்களின் நடிப்புக்கு தகுந்த பரிசு எதுவும் என்னிடம் இல்லை சத்யன்... அதனால என்னை ஆளை விடுங்க” என்று கூறிவிட்டு எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள்...

சத்யன் விதிர்ப்புடன் அப்படியே அமர்ந்திருந்தான்.... நடிப்பா? இதுவா நடிப்பு? அய்யோ மான்சி நான் நடிக்கலையே?” என்று அலறும் மனதோடு எழுந்து அவள் பின்னால் ஓடினான்

அவன் தொடங்கி வைத்த ஒன்று இப்போது அவன் வாழ்க்கைக்கே எதிரியாக வந்து நின்றது


“ அன்பே கண்மூடி காத்திருப்பேன்...

“ உன் கண் பார்க்கும் தருணத்திற்காக...

“ நீ என் காதலை கண்டுகொள்ளா விட்டால்.....

“ உன் நினைவோடு உயிர் துறப்பேன்...

“ இனி இந்த உலகம் எதற்காக!

சத்யன் விதிர்ப்புடன் அப்படியே அமர்ந்திருந்தான்.... நடிப்பா? இதுவா நடிப்பு? அய்யோ மான்சி நான் நடிக்கலையே?” என்று அலறும் மனதோடு எழுந்து அவள் பின்னால் ஓடினான்

அவன் தொடங்கி வைத்த ஒன்று இப்போது அவன் வாழ்க்கைக்கே எதிரியாக வந்து நின்றது.........

மான்சியின் பின்னால் ஓடிய சத்யன்... அவளை தடுத்து எதிரில் வந்து நின்று.. அவள் கைகளைப் படித்துக்கொண்டு “ இல்ல மான்சி நான் நடிக்கலை.. நான் சொல்றது உண்மை தான் மான்சி... என்னை நானே புரிஞ்சுக்க இவ்வளவு நாள் ஆயிருக்கு... ஆரம்பத்தில் இருந்து ......” என்று ஏதோ சொல்ல வந்தவனை கையசைத்து தடுத்த மான்சி..

“ நிறுத்துங்க சத்யன்.... எனக்கு எந்த ஆரம்பமும் வேண்டாம்... எந்த தொடக்கமும் வேண்டாம்... இனி முடிவு மட்டும் தான் வேண்டும்... நீங்க வேண்டாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்... அதில் எந்த மாற்றமும் இல்லை.... உங்களுக்காக நான் காத்திருந்த காலம் முடிந்துவிட்டது.... அதைவிட முக்கியமான ஒன்று... நீங்க நடிக்கிறீங்களா? இல்லை இது உண்மைதானா? அப்படின்னு என் வாழ்நாள் முழுக்க குழப்பத்தோட வாழமுடியாது.... நான் இப்போ ரொம்ப தெளிவா இருக்கேன் சத்யன்... தயவுசெய்து இங்கே வேலை செய்யவேண்டிய மிச்ச நாட்களை நிம்மதியா கழிக்க வழி செய்யுங்கள்?” என்று சத்யனைப் பார்த்து மான்சி கைகூப்பினாள்....

என்றுமில்லாதவாறு இன்று சத்யன் துடித்துப் போனான்... எட்டி அவள் கைகளைப் பற்றிக்கொண்டு... “ என்ன மான்சி இப்படியெல்லாம் பேசுற? நான் நடிக்கலை மான்சி.. இது உண்மை... நீ என்னை புரிஞ்சுக்கிற வரைக்கும் நான் காத்திருக்கேன் மான்சி... என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது... ஆனா என்கூட நீ எப்பவும் பேசனும்.... என்னை ஒதுக்கக்கூடாது” என்று கூறிவிட்டு சத்யன் பரிதாபமாக நிற்க.....

மான்சி எந்த பதிலும் சொல்லாமல் அவனை நம்பாத ஒரு பார்வையோடு வீட்டுக்குள் போனாள்... சத்யனும் அமைதியாக அவள் பின்னால் போய் அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.....

மான்சி அவன் ஒருவன் அங்கிருப்பதையே உணராதவள் போல தனது வேலைகளை கவனித்தாள்... காய்ந்த துணிகளை மடித்து ஷெல்பில் அடுக்கினாள்.... வீட்டை சுத்தம் செய்தாள்... ஒன்றிரண்டு பாத்திரங்களை கழுவி எடுத்துவந்து சமையல் மேடையில் வைத்துவிட்டு ஸ்டவ்வை பற்ற வைத்து தோசைக்கல்லை எடுத்து வைத்து இரண்டு தோசை வார்த்து அதை எடுத்து தட்டில் எடுத்துக்கொண்டு காலையில் வைத்த குழம்பை எடுத்துக்கொண்டு வயிறு தரையில் முட்ட கீழே சிரமமாக அமர்ந்து அவனை கண்டுகொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தாள்...

சத்யன் அவள் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் அணுவணுவாக ரசித்தான்... என்றுமில்லாமல் மான்சி இன்று புதிதாக தெரிந்தாள்... மேடான வயிற்றுடன் அவள் வேலை செய்யும் அழகு அவன் மனதை கவர்ந்தது... ஒரு பெண்ணுக்கு முழுமையான அழகே அவளின் தாய்மை தான் போலிருக்கு என்று நினைத்தவன்... பிறக்கப் போகும் குழந்தை மான்சி மாதிரி வெள்ளையா அழகா இருக்குமா? அல்லது என்னைப்போல் மாநிறமாக உயரமா இருக்குமா? சத்யனின் மனதில் ஓடிய இந்த சிந்தனையால் அவன் உடல் சிலிர்த்தது....

தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காத மான்சியின் ஒவ்வொரு அசைவுகளையும் மனதில் பதியவைத்தான்... தோசையை பிய்த்து விழுங்குவதை ஆசை ஆசையாகப் பார்த்தான்... அடிப்பாவி ஒரு வார்த்தை சாப்பிடுறீங்களா என்றுகூட கேட்காம சாப்பிடுறாளே... சரியான அழுத்தக்காரி.. என்று எண்ணினான்.. ஆனால் மயிலிறகு போல் இலகுவாக இருந்த அவள் மனதை அழுத்தமான பாறையாக மாற்றியது தான்தான் என்ற வேதனை அவனை வருத்தியது...

அவளின் வைராக்கியம் அவனை பயமுறுத்தியது... அந்த வைராக்கியத்தை உடைத்து தன்னால் உள்ளே நுழைய முடியுமா? முடியும்....முடித்துக் காட்டுவேன்... எப்படியாவது என் காதலை புரியவைப்பேன்... சத்யன் மனதில் உறுதியெடுத்த அதேவேளை மான்சி சாப்பிட்டு முடித்து எழுந்து எல்லாவற்றையும் வைத்துவிட்டு சத்யன் அருகில் வந்தாள்

சத்யன் அவளை ரசனையோடு பார்க்க ... மான்சி அவனை வெறுமையாக பார்த்து “ நான் தூங்கனும்... நீங்க எழுந்து வெளியேப் போறீங்களா?” என்று கேட்க....

சத்யன் அவளை யோசனையுடன் பார்த்து “ மான்சி நீ இருக்குற நிலைமையில் உன்னை இங்கே தனியா விட முடியலை... நான்தான் உன்னை எந்த தொந்தரவும் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேனே.... ப்ளீஸ்மா... அங்கே வந்து அதே ரூம்ல தங்கிக்க மான்சி” என்று மென்மையாக கெஞ்சினான்....

“ நீங்க உங்க வீட்டுல வந்து தங்கச் சொன்னா... நான் இங்கேருந்து வெளியே போய் தங்க இடம் தேட வேண்டியிருக்கும்.... என்ன சொல்றீங்க” என்று இரக்கமேயில்லாமல் கேட்டாள் மான்சி...

சத்யன் கண்களில் தெரிந்த வழியை மறைத்து எழுந்து வாசல் வரை போய் அவளை திரும்பி பார்த்து “ நைட்ல மட்டுமாவது அங்கே வந்து படுக்கலாமே மான்சி” என்றவனின் குரல் பெரிதும் இறங்கி போயிருந்தது....

நீ இன்னும் வெளியே போகலையா? என்ற பார்வையுடன் கதவை மூட தயாராக இருந்தாள் மான்சி... சத்யன் அமைதியாக வெளியேற மான்சி ஆத்திரமாக கதவடைத்துவிட்டு வந்து படுத்தாள்...

மான்சி கர்ப்பத்தின் களைப்பில் உறங்கிவிட ........ சத்யன் புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் தவித்தான்.....எழுந்து அமர்ந்து ஏகப்பட்ட சிகரெட்டுகளை ஊதித்தள்ளினான்... மறுபடியும் மான்சியை இந்த வீட்டுக்கு கொண்டு வருவதற்கு வழியே தெரியாமல் தவித்தான்......

மறுநாளிலிருந்து சத்யன் மான்சியை தனது வீட்டுக்கு கொண்டு வர நினைத்த முயற்சி எல்லாம் தோல்வியில் முடிய... அந்த வார இறுதியில் ஒரு முடிவெடுத்தான்... அவ இங்கே வரலைன்னா என்ன? நான் அங்க போய் அவகூட இருக்கேன்... இதை யார் தடுக்கமுடியும்? என்று அவன் உற்சாகத்துடன் யோசிக்கும் போதே ‘ நிச்சயம் மான்சி இதை விரும்ப மாட்டாள்.. என்று அவன் மனம் சொன்னது... இதை நினைத்ததும் அவன் குழப்பம் மேலும் அதிகரித்தது.... எப்படியாவது நாளைக்கு இதற்கொரு ஏற்பாடு செய்யவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தான்

கிட்டத்தட்ட பத்து நாட்கள் இப்படி எதிர்பார்ப்பு நிறைந்த போராட்டமாகவே கழிய.... ஒருநாள் காலையில் எழுந்து சத்யன் ஜாக்கிங் முடித்து வரும்போது மான்சியின் வீட்டுக்குள் லதா நுழைவதை கவனித்து ‘ மான்சிக்கு உடம்பு ஏதாவது பண்ணுதா? இவ்வளவு காலையிலயே லதா வந்திருக்காங்களே?’ என்ற பதட்டத்துடன் சத்யன் மான்சியின் அறை வாசலை நெருங்க....

உள்ளேயிருந்து லதாவின் குரல் கேட்டது.... “ குழந்தை நல்லாருக்கு மான்சி... இன்னிலேர்ந்து பதினைந்து நாட்களுக்குள்ள எப்ப வேனா வலி வந்து குழந்தை பிறக்கலாம்....

நாங்க நாளை நிர்ணயிச்சாலும்.. உன் பிள்ளை எப்ப வெளிய வரனும்னு அந்த ஆண்டவன் தான் நிர்ணயிக்கனும்.... அதுவரைக்கும் இதுபோன்ற சின்னச்சின்ன வலிகள் வரும் மான்சி பயப்படாதே... அம்மாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லி கூட துணைக்கு வச்சுக்க மான்சி” என்று லதா சொல்லிகொண்டு இருக்க...

“ இல்ல அக்கா அங்கே தம்பி தங்கச்சி எல்லாருக்கும் எக்ஸாம் டைம்... அம்மாதான் எல்லாரையும் பார்த்துக்கனும்... அதனால அவங்களை வரவேண்டாம்னு சொல்லிட்டேன்.. சியாமா அக்காவை திணமும் துணைக்கு வந்து படுத்துக்க சொல்லிருக்கேன்... பகல்ல எல்லாரும் இருக்கீங்கள்ள அதனால பயம் இல்லை” என்றாள் மான்சி...

“ சரிம்மா ... ஆனா ஜாக்கிரதையா இரு... நிறைய நட ... நைட்ல வெண்ணீர் வச்சு உடம்புக்கு ஊத்திக்க... கால் வீங்காம தலையணை வச்சு படுத்துக்க... இப்ப உட்காரு பிரஸர் செக் பண்ணிடுறேன்” என்று லதா சொல்வதை கேட்ட சத்யன்... ஏதோ தோன்ற அவசரமாய் பங்களாவுக்குள் ஓடினான்.....


No comments:

Post a Comment