Saturday, December 5, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 5

மான்சி கைப்பையை தோளில் மாட்டிக்கொண்டு வேகவேகமாக நடந்தாள்...வீட்டு வாசலில் சத்யனின் கார் தயாராக நின்றிருந்தது.... அதை கடந்து வெளியே வெளியேப் போனாள்....

அவள் பின்னாடியே ஓடிவந்த சத்யன் கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான்.... “ ஏய் கார்ல போகலாம்னு சொன்னேனே... வா” என்று முரட்டுத்தனமாக இழுத்தான்...

மான்சி நிதானமாக நின்று திரும்பி அவனைப் பார்த்து “ உங்களுக்கு என்னதான் பிரச்சினை?... ஏன் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டேங்குறீங்க?... என்மேல ஏன் இவ்வளவு வெறுப்பு? அன்னைக்கு நீங்க என் நைட்டியை உயர்த்தியதும்... நான் அதுக்காக சொன்ன வார்த்தையும் பெண்களின் இயல்பான கூச்சம் தான் காரணம்... அதுக்காக வேனும்னா இப்போ நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்... அன்னிக்கு பேசினதுக்காக தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க சார் ” என்று மான்சி தனது கைகளைகூப்பி அவனிடம் மன்னிப்பு கேட்டாள்...

சத்யன் குறும்புப் பார்வையுடன் தனது வழக்கமான கண்சிமிட்டி சிரித்து “ நான் உன்னை ரொம்ப சலனப்படுத்துறேனே மான்சி?” என்றதும் மான்சியின் தன்மானம் மீண்டும் நிமிர்ந்தது....



“ நான் யாரிடமும் சலனப்பட மாட்டேன் சார்... ஏன்னா எனக்குள்ள நிறைய லட்சியங்கள் இருக்கு... என் தம்பி தங்கைகளை நல்லா படிக்க வச்சு வேலைக்கு அனுப்பனும்... தங்கச்சிகளுக்கு நல்ல மாப்பிள்ளைகளாப் பார்த்து கல்யாணம் பண்ணனும்... எங்கம்மாவை உட்கார வச்சு மூன்று வேலையும் திருப்தியா சாப்பிட வைக்கனும்” என்றவள் பாதியில் நிறுத்தி அவனை ஏளனமாக ஒருப் பார்வைப் பார்த்து “ இது எல்லாத்தையும் முடிச்சதுக்கப்புறம் ஒழுக்கமான ஒரு நல்லவனைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் குழந்தைகள்னு சந்தோஷமா வாழனும்... இப்படி நிறைய லட்சியங்கள் எனக்குள்ள இருக்கு.. நான் யாருக்கும் சலனப்படமாட்டேன்... என்னை யாராலயும் சலனப்படுத்தவும் முடியாது ” மான்சி உறுதியுடன் கூறினாள்...

அவள் பேசும்வரை அமைதியாக மார்புக்கு குறுக்காகக் கைகட்டி நின்றிருந்த சத்யன் “ சரி ஒரு சின்ன டெஸ்ட் வச்சுப் பார்க்கலாமா? நீ சலனப்படுறியா இல்லையான்னு?” என்று ஒருமாதிரியான குரலில் கேட்க ....

மான்சிக்கு உள்ளுக்குள் சில்லென்றது “ என்ன டெஸ்ட்?” குரல் சிக்க.. வார்த்தைகள் திக்கித் திணறி வந்து விழுந்தது

சத்யன் பதில் பேசவில்லை அவளின் விரிந்த கண்களையேப் பார்த்தபடி நெருங்கியவன் அவள் சுதாரித்து விலகுமுன் ஒரு கையால் அவள் இடுப்பில் போட்டு வளைத்தவன்... மறுகையால் அவள் முகத்தை பற்றி நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்தபடி அவளின் ஆரஞ்சுச் சுளை அதரங்களை கவ்விக்கொண்டான்... கைகள் அவள் விலகாதவாறு இறுக்கிப்பிடித்துக் கொண்டது

மான்சியின் உடல் விழுக்கென்று உதறிக்கொண்டது... அவன் கடித்துக்கொண்டிருந்த உதடுகளை விடுவிக்கப் போராடி ‘ஆஆஆஆ’ முனங்கலாய் கத்தினாள்... சத்யன் அவள் கத்துவதை தடுக்க கவ்வியிருந்த உதடுகளை விட்டுவிட்டு இடைவெளியின்றி தன் வாயால் அவள் வாயை அடைத்தான்...

அவன் நெஞ்சில் கைவைத்துத் தள்ளினாள் மான்சி... அவளது போராட்டம் அவளுக்கு சாதகமாக இல்லை.. அவனை ஒரு அங்குலம் கூட அசைக்க முடியவில்லை... வலுவாக காலை ஊன்றி அதைவிட வலுவாக அவளை வளைத்து இறுக்கியிருந்தான்.. அவள் கத்த முயன்று வாயைத் திறந்த நேரத்தில் தனது நாக்கை உள்ளே நுழைத்தான்... இடம் கொடுக்காமல் போராடினாள் மான்சி..

சத்யன் விடவில்லை... ஒரு சொட்டாவது அவளின் உமிழ்நீரை உறிஞ்ச வேண்டும் இல்லையேல் இவ்வளவு நேரம் முத்தமிட்டதற்கு அர்த்தமேயில்லை.... அவளை முத்தமிடுவதே அவனது ஆண்மைக்கு சவாலான வேலையாக இருந்தது... அவள் வாய்க்குள் சுழல முயன்ற நாக்கை அனுமதிக்கவே இல்லை.. சத்யனுக்கு வேட்கை மாறி கோபம் வந்தது... அவள் பின்னங்கழுத்தைப் பற்றியிருந்த கை சற்று மேலேறி கூந்தலை கொத்தாகப் பற்றி முறுக்கியது...

வலியால் துடித்தாலும் அவனுக்கு சமமாகப் போராடினாள்... நெஞ்சில் வலுவாக இறங்கிய அவள் நகங்கள்... மேல முன்னேறி அவன் முகத்தை குறிவைத்து .... கன்னங்களில் ரத்தக் கோடுப்போட்டது... சத்யன் துடித்துப் போய் மான்சியை உதறினான்... வழவழவென்று சேவ் செய்த தாடையில் மான்சியின் நகங்கள் பதிந்து நான்கைந்து கோடுகள் ஆழமாக விழுந்திருந்தது...

இடது கன்னத்தில் விழுந்த நகக்குறியை விரல்களால் தடவியபடி அவளை ஆத்திரமாக முறைத்து “ நான் நெனைச்சா இந்த நிமிஷமே கதறக்கதற நாசம் பண்ணமுடியும்... ஆனா நீயா என்கிட்ட வருனும்னு எதிர்பார்க்கிறேன்.. உன்னை தூக்கிட்டு வந்து ஒன்னும் பண்ணமுடியாம விட்டுட்டுப் போனானுங்களே உன் பழைய முதலாளிங்க அவனுங்களை மாதிரிப் பொட்டைப் பய இல்லடி நான்?... நான் ஆம்பளை... ஒரு பொண்ணை கதற வைக்கவும் என்னால முடியும்... என் காலடியே கதின்னு காலமெல்லாம் கிடக்க வைக்கவும் முடியும்.... இப்போ இல்லாட்டியும் எப்பவாவது ஒருநாள் நீயா வந்து என்னை அணைச்சு நீயா உன்னை கொடுக்கறயா இல்லையான்னு பாரு? ... அது மட்டும் நடக்கலைன்னா பலபேர் முன்னாடி நான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்டி இது சத்தியம்டி ” என்றுமில்லாதவாறு இன்று உச்சத்தில் நின்று கத்தி சத்தியம் செய்தான் சத்யன்...

மான்சி அவன் செய்த சத்தியத்தில் அலறிப்போய் நின்றிருந்தாள்.... இப்படி தாயின் மீது சத்தியம் செய்யுமளவுக்கு என்மீது அவ்வளவு வெறியா? விதிர்த்துப் போய் நிற்கும்போதே மான்சியின் கையைப்பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினான்... மறுபுறம் வந்து அவன் ஏறிக்கொண்டு காரை கிளப்பினான்... மான்சி காரைவிட்டு இறங்க முயன்று மீண்டும் தகராறை ஆரம்பிக்க எண்ணாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்....

சத்யனின் முகம் இறுக கோபத்தில் பற்களை கடிக்க தாடை அசைந்து வலது கன்னத்தில் இருந்த நகக்குறியில் இருந்து ரத்தம் துளிர்த்து கோடாக கசிய ஆரம்பித்தது... அவனைத் திரும்பிப் பார்த்த மான்சி இதயத்திலும் ரத்தம் வழிந்தது... அய்யோ என்று அலறித் துடித்தது உள்ளம்...

சத்யன் கைக்குட்டையால் கூட வழிந்த ரத்தத்தை துடைக்கவில்லை.... அவன்ப் பார்வை ரோட்டை விட்டு இப்படி அப்படி திரும்பவில்லை.. தன் நகங்களைப் பார்த்தாள் மான்சி... வலது கையின் நடுவிரல் நகத்தின் உள்ளே சத்யனின் கன்னத்து தோல் துணுக்காய் இருக்க மான்சியின் இதயம் வாலறுந்த பட்டமாக துடித்தது... தனது விரலை துண்டாக்கி எறிந்து விடலாமா என்று யோசித்தாள்

அய்யோ ஏதாவது மருந்து போடனுமே.. இல்லேன்னா செப்டிக் ஆயிடுமே நெஞ்சு பதறினாள் மான்சி... “ லதா அக்காவோட க்ளினிக் போங்களேன் காயத்துக்கு மருந்து போடலாம்.. ரத்தம் வருது... ஏதாவது செப்டிக் ஆயிடப்போகுது” என்று மெல்லிய குரலில் சொல்ல....

அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே “ உன் வேலையைப் பார் ... எனக்குத் தெரியும்” என்று கர்ஜித்தது கார் ஓட்டிய அடிபட்ட வேங்கை...

காரில் பர்ஸ்ட்டெய்டு பாக்ஸ் இருக்குமே என்று தோன்ற... காரின் டேஷ் போர்டை திறக்க முயன்று.. எப்படி என்று தெரியாமல்.... சத்யனைப் பார்த்து “ இதை எப்படித் திறக்கறது? கொஞ்சம் திறந்து விடுங்களேன்?” கெஞ்சினாள்...

“ ஏன் உள்ள கத்தி ஏதாவது இருந்தா எடுத்து குத்திட்டு ஒரேடியா என்னை ஒழிச்சுக் கட்டிடலாம்னு நெனைக்கிறயா?” சத்யனின் வார்த்தைகள் நக்கலாய் வந்தது...




பார்வையால் அவனிடம் கெஞ்சியபடி “ இல்ல முதலுதவிப் பாக்ஸ் இருக்குமே... காயத்துக்கு மருந்து போடலாம்னு............? ” மான்சியின் குரல் தினறலாய் வந்தது... “அதான் தேவையில்லைன்னு சொல்றேனே” என்று கூறிவிட்டு சாலையில் கவனமானான்

மான்சியில் அமைதியாக இருக்க முடியவில்லை... தனது கைப்பையை திறந்து தண்ணீர் பாட்டிலையும் கர்சீப்பையும் எடுத்து... கர்சீப்பை தண்ணீர் ஊற்றி நனைத்தாள்... சத்யன் பக்கம் திரும்பி அவன் இடது கன்னத்தின் லேசான காயத்தில் ஒற்றினாள்... “ ஸ்ஸ்ஸ்” என்ற எரிச்சல் கலந்த ஒலியுடன் அவள் கையைத் தட்டிவிட்டான்

மான்சி விடாமல் மறுபடியும் காயத்தை துடைத்தாள்... ரத்தம் நின்று போயிருந்தது... “ அந்த கன்னத்தையும் காட்டுங்க” என்றாள்...

திரும்பி அவளை கேலியாகப் பார்த்த சத்யன் “ முத்தம் குடுக்குறவ மாதிரி மறு கன்னத்தையும் காட்டச் சொல்ற? ” என்றதும் ... மான்சி கோபத்துடன் கையிலிருந்த ஈர கர்சீப்பை காருக்கு வெளியே வீசியெறிந்தாள்...

மறுபடியும் இறுக்கமான சூழ்நிலை நிலவியது.... அவனைத் திரும்பிப் பார்த்தாள்... அந்த நகக்குறி தடித்துப் போயிருக்க .. கன்னம் முழுவதும் சிவந்து போயிருந்தது... அய்யோ ஒரு டிடி போட்டால் தான் காயம் ஆறும்... இவன் மனசை மாற்ற வேண்டும்... மான்சி அவனிடம் தன்னைத் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் “ நான் அந்த மாதிரி பொண்ணில்லை சார்... தயவுசெய்து என்னை விட்டுடுங்க” என்று கெஞ்சிவிட்டு அவனை கண்ணீருடன் பார்த்தாள்...

சத்யன் காரின் வேகத்தை குறைத்துவிட்டு அவள் பக்கம் திரும்பி “ இதோபார் மான்சி... பெண்கள் கெட்டவங்க என்பது என் கொள்கை இல்லை.... எனக்குப் பிடிச்சப் பெண்களை நான் படுக்கைக்கு கூப்பிடுவேன்... அவங்களுக்கு அதிலே விருப்பம் இல்லைன்னா நான் வற்புறுத்த மாட்டேன்... அதே சமயம் என்மேல் ஆசைப்பட்டு அவங்க வீட்டுக்கே வரச்சொல்லும் சில நல்ல குடும்பத்துப் பொண்ணுங்களையும் நான் நிறைய சந்திச்சிருக்கேன்... ஆனா உன் விஷயத்தில் அப்படியில்லை... உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு அது எனக்குத் தெரியும்.. அதை ஒத்துக்கத் தான் மனசில்லை.. என்ன நான் சொல்றது உண்மை தானே? ” என்று கூறிவிட்டு அவள் பதிலுக்காக காத்திருக்க...

“ சம்பளம் குடுக்குற முதலாளியை பிடிக்காம போகுமா சார்?” என்றாள் மான்சி..

“ பொய்... பொய் சொல்ற மான்சி.... இப்போ நான் வெளிப்படைய பேசலாம்னு நெனைக்கிறேன்... நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற மான்சி... நைட்ல தூங்க முடியலை.. நீ என்கூட இருக்கனும்.. உன்னை ஆசை தீர அனுபவிக்கனும்னு பயங்கர வெறி வருது... அந்த வெறிதான் நைட் உன் சைக்கிளை நொருக்கினது... இதுக்கு காரணம் நீ என்னை வெறுத்து ஒதுக்குறதால் எனக்கு நீ கிடைச்சே ஆகனும்னு வந்த வெறியா இருக்கலாம்... மற்றப் பெண்கள் என்கிட்ட மயங்கி வந்து விழும்போது நீ என்னை விலக்கி ஒதுக்குறது என் வேட்கையை அதிகப்படுத்தியிருக்கலாம்... ஆனால் ஒருநாளாவது உன்னை நான் சுகிக்கனும்... உனக்கு லட்சியங்கள் இறுக்குன்னு சொன்ன அந்த லட்சியங்கள் இனிமேல் என் பொருப்பா ஆக்கிக்கிறேன்... உனக்கு எல்லா வசதியும் செய்து தாறேன்... இந்த பங்களா எஸ்டேட் எல்லாமே உனக்குத்தான்... பிடிச்ச வரை சேர்ந்து வாழுவோம் ஒருத்தருக்கொருத்தர் சலிப்பு ஏற்ப்படும் போது விலகி அவரவர் வழியில போகலாம்... யாருக்கும் எந்த சிக்கலும் வராது மான்சி” என்றவன் அவள் கையைப்பிடித்து “ என்ன சொல்ற மான்சி ?” என்று ஆர்வத்துடன் கேட்க

மான்சியின் கண்ணீர் கப்பென்று நின்று போயிருந்தது... அவன் கைகளில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு “ அதாவது வைப்பாட்டியா இருக்க சொல்றீங்க?” என்று திருப்பி கேட்டாள்


“ ஏய் என்ன இன்னும் அந்த காலம் மாதிரி வைப்பாட்டி அது இதுன்னு சொல்லிகிட்டு...... ஜஸ்ட் ஒரு கம்பெனி பார்ட்னர்ஸ் மாதிரி... பிடிக்கலைன்னா அவங்க அவங்க ஷேர்ஸை பிரிச்சுக்கிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்.... என்னைவிட்டு போனபின் நீ வேற யாரையாவது கல்யாணம் கூட பண்ணிக்கலாம்... ஆனா உனக்கு நான் எப்போதுமே சலிக்கமாட்டேன் மான்சி” சத்யன் கர்வமாக கூறினான்...

மான்சி அமைதியாக இருந்தாள்... அவன் சொன்னவைகள் எல்லாம் கேட்டு அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது... ஒருத்தனுடன் வாழ்ந்து விட்டு பிறகு இன்னொருத்தனை கல்யாணம் செய்து கொள்வதாம்.... மேன்நாட்டு கலாச்சாரம் அவனை எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என்று அவன் பேச்சில் புரிந்தது... இவனுக்கு மானத்தை பத்தி என்ன க்ளாஸ் எடுத்தாலும் மண்டையில ஏறாது என்று தெளிவாக புரிந்தது...

கார் நகரவில்லை அவள் பதிலுக்காக நின்றுபோயிருந்தது... சற்றுநேரம் அமைதியாக கண்மூடி யோசித்தாள்... பிறகு ஒரு முடிவுடன் கண்திறந்து அவனை நோக்கி “ உங்களை ஏதோவொரு விதத்தில் நான் பாதிச்சிருக்கேன்.... அந்த பாதிப்பு தீரனும்னா நான் உங்களுக்கு வேனும்” என்றவள் சற்று நிதானித்து “ படுக்கைக்கு மட்டும் வேனும்” என்று அழுத்தி சொன்னவள்

“ உங்களோட உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியுது...ஆனா நீங்க வளர்ந்த சூழ்நிலை வேற நான் வளர்ந்த சூழ்நிலை வேற ... என் அப்பா இறக்கும் போது என் அம்மாவுக்கு வயசு முப்பத்தியொன்னு.. நாங்க நாலுபேரும் சின்ன பசங்க.. எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க.. அவங்க நினைச்சிருந்தா அந்த அழகைப் பயன்படுத்தி அவங்களும் வசதியா வாழ்ந்து எங்களையும் வசதியா வாழ வச்சிருக்கலாம்... ஆனா என் அம்மா அதை செய்யலை... நாலு வீட்டுல பாத்திரம் கழுவி பாத்ரூம் சுத்தம் பண்ணி எங்களை வளர்த்தாங்க... கடுமையான வறுமையில வாடினபோதும் எங்களுக்கு ஒரு வேளை சோற்றோடு சுயமா எப்படி வாழனும்னு கத்து குடுத்தாங்களே தவிர... பசிக்காக எப்படி வழி தவறுவதுன்னு கத்து குடுக்கலை...இன்னும் எங்கம்மா வீட்டுவேலை செய்றாங்க... அப்படிப்பட்ட தாய்க்குப் பிறந்த மகள் நான் எப்படி வழி தவற முடியும்?” என்று மான்சி தன்நிலை விளக்கம் கொடுக்க...

சத்யன் அவளை கூர்ந்து பார்த்து “ இங்கே நம்ம அம்மாக்கள் எப்படிப்பட்டவங்கன்னு வாதம் பண்ண வரலை... நீ சொல்றதைப் பார்த்தா நான் இப்படியிருக்கிறதால என் தாய் சரியில்லைன்னு சொல்லுவியா?” சூடாக கேட்டான் சத்யன்...

சத்யனின் வார்த்தைகளில் பதறிப்போனாள் மான்சி “ இல்ல நான் அப்படி சொல்லவில்லை... உங்கம்மாவை பற்றி அவங்க உயர்வுகளைப் பற்றி தினா நிறைய சொல்லிருக்கார்” என்றவள் ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து... “ சரி உங்களோட கருத்துப்படியே பேசுவோம் ... எனக்கு உங்களைப் பிடிக்கும்னு நீங்க கண்டு பிடிச்சிருக்கீங்க... ஆனா நீங்க என் மனசுல ஒரு சதவிகிதம் கூட பதியலைன்னு நான் நெனைக்கிறேன்.. அப்படியிருந்தால் நான் உங்களிடம் விழும் காலம் தொலைவில் இல்லை... அதுவரைக்கும் காத்திருக்க முடியுமா?” நெஞ்சை நஞ்சால நிறப்பியபடி அந்த கேள்வியை கேட்டாள்....

“ எனக்கு புரியலை மான்சி?” சத்யன் குழப்பத்தோடு பார்த்தான்...

“ அதாவது உங்கள் பாணியில் சொல்லனும்னா... நான் உங்கள் படுக்கைக்கு வரவதற்கு என் மனசு மாறனும்.... அதுக்கு காலம் ஆகலாம்.... நான் உங்ககிட்ட மயங்குவேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தா நான் உங்க கட்டிலுக்கு வரும்வரை என்னை எந்த விதத்திலும் தொல்லை செய்யக்கூடாது... அதாவது என்னை என் போக்கில் விட்டுவிட்டு ஒதுங்கியிருக்கனும்... அதுவரைக்கும் நல்ல நண்பர்களாக இருக்கலாம்..” மான்சி முடிவாக சொன்னாள்....

சத்யனின் முகம் மலர்ந்தது... “ ம்ம் இந்த டீல் எனக்கு ஓகே...... ஆனா எனக்கு ரொம்ப நாள் காத்திருக்கப் பிடிக்காது மான்சி.. அதுவும் உனக்கு தெரியனும்” என்றான் சத்யன்...

“ ம்ம் நானும் காலம் கடத்த மாட்டேன்... எனக்கு நீங்க வேனும்னு தோன்றிய அடுத்தநொடி உங்க காலடியில் இருப்பேன்” என்றாள் குரல் இறுக...

“ ச்சேச்சே காலடியில் வேண்டாம் மான்சி... நீ என்னோட வெற்று மார்பில் சுமக்கப் படவேண்டியவள் உன்னை ஒரு மகாராணியைப் போல் உணரவைக்க என்னால் முடியும் மான்சி” சத்யன் வசனம் பேசினான்....

மான்சிக்கு அது ரசிக்கவில்லை..... அவளுக்குத் தெரியும் தப்பிக்க முடியாதபடி மாட்டிக்கொண்டோம் என்று... கொஞ்ச காலத்திற்காவது இவனின் தொல்லையிலிருந்து விடுபட்டு தள்ளியிருக்க இதுவொரு சந்தர்ப்பம்... அது மாதங்களோ வருங்களோ... அதுவரை நிம்மதி என்று நினைத்தாள் மெதுவாக கார் கதவை திறந்தவள் “ சரி நம்மளோட ஒப்பந்தத்தை இந்த நிமிஷத்தில் இருந்து அமுலுக்கு கொண்டு வரலாம்.. நான் நடந்து போறேன் நீங்க கார்ல வாங்க” என்று சொல்லிவிட்டு மான்சி காரைவிட்டு இறங்கி நடந்தாள் ...

இறங்கிப் போகும் அவளையேப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன் திடீரென்று வாய்விட்டு பலமாக சிரித்தான்.... “ என்கிட்டயே உன் ஜாலமாடி என் அழகு பிசாசே.... ம்ம் கால அவகாசம் வாங்கி தப்பிக்கலாம் என்று நினைப்பா? .... நீ உன் வழில போ நான் என் வழில உன்னை மடக்குறேன்... உன் எப்படி விழி வைக்கனும்ங்கற வித்தை எனக்குத் தெரியும்டி ” என்றவன் கன்னத்தில் இருந்த காயத்தை கைகளால் தடவினான் வன்மத்தில் வயிறு காந்தியது

“ ஒரு முத்தம் குடுக்க முயற்சிப் பண்ணதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என் உடல் முழுக்க உன் முத்தத்தால் குளிர்காய வைக்கலைனா பாருடி?” ஆனாலும் அவள் முன்பு தான் தோற்றுப்போனதை சத்யனால் ஜீரணிக்கவே முடியவில்லை... அவ்வளவு முயன்றும் ஒரு சொட்டு இதழ்த்தேனைக் கூட உறிஞ்ச முடியவில்லை என்ற ஆத்திரம் கொழுந்துவிட்டு எரிந்தது.. இது சத்யனின் முதல் தோல்வி...

வெகுநேரம் கழித்து காரை எடுத்துக்கொண்டு எஸ்டேட் அலுவலகத்திற்கு சென்றான்... மான்சியை சட்டை செய்யாமல் எல்லா அலுவல்களையும் பார்த்துவிட்டு.. நடந்தே எஸ்டேட்டை சுற்றி வந்தான்... எஸ்டேட்டில் வேலை செய்த ஊழியர்கள் அனைவரும் சத்யனின் கன்னத்தில் இருந்த காயத்தை தான் முதலில் பார்த்தார்கள்... சத்யன் புன்சிரிப்புடன் அவர்களை கடந்து சென்றான்....

அன்று மாலை வந்த தினா ... சத்யனின் கன்னத்தைப் பார்த்து அதிர்ச்சியுடன் “ என்னடா இது காயம்?” என்று வினவ...

மான்சியைப் பார்த்து குறும்பாக கண்சிமிட்டி சிரித்தபடி “ ஒரு கிளியை கொஞ்சலாம்னு கிட்டப் போனேன் தினா.... அது கொத்திருச்சு... அது கொஞ்சும் கிளின்னு நெனைச்சேன்.. ஆனா கொத்தும் கிளியா போச்சு... ஆனா எனக்கு நம்பிக்கையிருக்கு அதே கிளி என்னை கொஞ்சும்னு” என்று சத்யன் கூறியதும்....

தினாவுக்கு புரிந்து போனது... இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்தவன் ஆயிற்றே... ஆனாலும் மான்சியோ சத்யனோ சொல்லாமல் இதில் தலையிடக்கூடாது என்று ஒதுங்கியிருந்தான்... “ சரிடா அதுக்கு மருந்து போடாம அப்படியே விட்டு வச்சிருக்க? வா டாக்டரைப் போய் பார்த்துட்டு வரலாம்” என்று அழைத்தான் தினா... டாக்டரிடம் அழைத்துச் செல்லுமாறு மான்சி தினாவிடம் பார்வையால் கெஞ்சினாள்..

“ வேனாம் விடுடா... காயத்தை கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் இந்த கிளியோட ஞாபகம் வரனும்” என்று சத்யன் மறுக்க.. தினா வம்பாக கையைப்பிடித்து அழைத்துச் சென்றான்...


லதாவிடம் தான் போனார்கள்... காயத்தைப் பார்த்து திகைத்துப்போய் அதைப்பற்றி கேட்க நினைத்தவளை தன் பார்வையால் வேண்டாம் என்றான் தினா... லதா அமைதியாகி மருந்திட்டு ஒரு டிடி போட்டு அனுப்பினாள்...
சத்யன் நேரமாகிவிட்டது என்று அப்படியே பங்களாவுக்கு கிளம்பிவிட.. தினா அவன் எஸ்டேட்டிற்கு சென்றான்... சத்யன் பங்களாவுக்குப் போனபிறகு தான் மான்சி அவ்வளவு தூரம் எப்படி நடந்து வருவாள் என்று யோசித்தான்..

தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வரும் ஜீப் கூட இவன் பங்களா இருக்கும் பகுதிக்கு வராதே.. மறுபடியும் போய் அழைத்து வரலாமா என்ற யோசனையுடன் சத்யன் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வர அப்போது தினாவுடன் பைக்கில் வந்து இறங்கினாள் மான்சி

அவ்வளவு நேரமும் சத்யனுக்குள் இருந்த ஏதோவொன்று சொல்லாமல் கொள்ளாமல் விடைபெற மறுபடியும் பழி உணர்ச்சி வந்து அமர்ந்தது... பைக்கில் இருந்து இறங்கி தினாவிடம் எதையோ சொல்லி சிரித்துக்கொண்டிருந்தாள் மான்சி...

மான்சி சிரித்து இப்போதுதான் சத்யன் பார்க்கிறான்... ஐந்தாறு உலோகங்களை ஒன்றாய் கொட்டி குலுக்கியது போல் ஒரு ஜலதரங்கமான சிரிப்பு... அபினை அளவற்று அருந்தியவன் போல் வெறியுடன் கூடிய போதை ஏறியது சத்யனுக்கு...

சிரிக்கும் மான்சியையும் அவளை சிரிக்க வைத்த தினாவையும் வெறித்துப் பார்த்தான்... தினா இவனைப் பார்க்காமலேயே கிளம்பிவிட... மான்சி இவனைத் திரும்பிப் பார்த்தபிறகு சட்டென்று தனது சிரிப்பை தொலைத்துவிட்டு இறுகிய முகத்துடன் தனது வீட்டிற்கு போனாள்...

சத்யன் இரும்பான நெஞ்சோடு வீட்டுக்குள் வந்தான்.... இரவு அவன் தூங்க வெகுநேரமானது.... மான்சியின் சிரிப்பு ஒருபுறம் வதை செய்ய... இவன் பார்த்ததும் அந்த சிரிப்பு தொலைந்து போனது மறுபுறம் வதை செய்தது...
அன்று விடிந்ததும் மான்சி வழக்கமான வேலைகளை முடித்துக்கொண்டு எஸ்டேட்க்கு கிளம்பி வெளியே வந்தாள்... இன்று தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தை இருந்தது... சீக்கிரமே போயாக வேண்டும்... எஸ்டேட்க்கு நடந்து செல்வதற்குள் நேரமாகிவிடும்... தினாவை வந்து அழைத்துச்செல்ல சொல்லலாமா? என்று யோசித்தபடியே மான்சி கதைவைப் பூட்டிவிட்டு திரும்பியவள் திகைத்து நின்றாள்...

அவள் வீட்டு வாசலில் புத்தம்புதிய வைல்ட் நிற ஸ்கூட்டி ஒன்று கழுத்தில் மாலையுடன் நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்துக்கொண்டு நின்றிருந்தது... மான்சி வியப்புடன் பார்க்கும்போதே தினா வந்தான்....

“ என்ன மான்சி வண்டி பிடிச்சிருக்கா? நைட்டு சத்யன் போன் பண்ணி உடனே பொள்ளாச்சி போய் வண்டி வாங்கிட்டு வரச்சொன்னான்... நீ ஒருமுறை உனக்கு வைலட் கலர் பிடிக்கும்னு சொன்னேல்ல? அதான் அதே கலர்ல தேடிப்பிடிச்சு வாங்கிட்டு வந்தேன்... வண்டியோட வரும்போது மணி பதினொன்றரை ஆயிருச்சு.. அப்புறம் இங்கேயே படுத்துட்டேன்.... காலையில நான்தான் மாலை வாங்கிப்போட்டு பூஜை பண்ணேன்... எப்படி சூப்பரா? ” என்று வெகுளியாய் சிரித்தபடி கேட்டான்....

மான்சிக்கு அவனை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை.... இவனுடன் பைக்கில் வந்து இறங்குவதை தடுக்கவே இந்த புது ஸ்கூட்டி என்று தெரியாமல் வெகுளியாய் சிரிக்கும் தினாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது... 


“ எனக்கு ஸ்கூட்டி தேவையில்லை தினா... முதலாளி சார் கிட்டயே குடுத்துடுங்க” என்று மான்சி சொல்லும்போதே அங்கே வந்த சத்யன் “ அம்மா தொழிலாளி மேடம்.. இது ஒன்னும் இனாம் இல்லை... மாசாமாசம் சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்ய சொல்லியிருக்கேன்... அதனால இது உன்னோடதுதான் நீ இதுலயே எஸ்டேட் போகலாம்” என்று சொல்லிவிட்டு அங்கே மேலும் நிற்காமல் நகர்ந்து தன் காரில் கிளம்பினான்.. முதன்முறையாக மான்சிக்கு பயந்து ஓடுவது போல் சத்யனின் மனதுக்குள்ள ஓரமாய் ஒரு உறுத்தல்... அங்கே நின்றிருந்தால் ஏதாவது பேசி மறுத்துவிடுவாளோ என்ற பயம் தான் காரணம்....

மான்சி எதுவும் மறுத்து பேச வழியின்றி அமைதியாக நின்றிருக்க... “ மான்சி ஈவினிங்ல காட்டு பாதையில நீ தனியா வர்றது எனக்கும் பயமாயிருக்கு மான்சி... அதான் நைட்டு சத்யன் சொன்னதும் உடனேப் போய் வாங்கிட்டு வந்தேன்... எனக்காக மறுக்கதம்மா... சம்பளத்துல தானே பிடிக்கப் போறான் அதனால உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்று தினா அக்கரையுடன் பேச... மான்சி புன்னகையுடன் தலையசைத்தாள்...

உடனே உற்சாகமான தினா “ ம்ம் அப்ப கெளம்புங்க மேடம் ... அங்கே முதலாளியும் தொழிலாளர்களும் காத்திருக்காங்க... அது மட்டுமில்லை என்னோட வண்டியும் வீட்டுல இருக்கு.. அதனால இப்போ உன்கூடத்தான் நானும் வரனும்.. வா போகலாம்” என்றான்

இருவரும் ஸ்கூட்டியில் கிளம்பினார்கள்.. மான்சி வண்டியை ஓட்ட.. தினா பின்னால் அமர்ந்து கொண்டான்.... இருவரும் எஸ்டேட் அலுவலகம் சென்று அடைந்தபோது... சத்யனின் கார் அங்கே இருந்தது... அலுவலகம் திறந்திருக்க சத்யன் மான்சியின் வருகைக்காக வாசலில் நின்றிருந்தான்..
இருவரும் ஒரே வண்டியில் வந்து இறங்கியதும் சத்யன் ஆத்திரத்துடன் கையால் சுவற்றில் ஓங்கி குத்தினான்.... தினாவை தன்னுடன் அழைத்து வராத முட்டாள்தனத்தை நினைத்து நெற்றியில் அடித்துக்கொண்டு அலுவலகத்திற்க்குள் சென்றான்...

தினா வண்டியை லாக செய்ய... மான்சி சத்யனின் நடவடிக்கைகளை கவனித்துவிட்டாள்... பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் அவசரமாய் தலையை குனிந்து கொண்டாள்...

தினாவும் உடனிருக்க... அன்றைய தொழிலாளர்கள் மீட்டிங் முடிந்ததும் சத்யன் தனது காரில் தினாவை ஏற்றிக்கொண்டு கிளம்பிப்போய் அவன் வீட்டில் விட்டு வந்தான்... மான்சி ஒப்பந்தத்தில் தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு அன்று மாலை வீட்டுக்கு தனது ஸ்கூட்டியில் கிளம்பினாள்.....



ஆறு மணிக்கு வீட்டுக்குப் போனதும் சத்யன் காருடன் வாசலில் நின்றிருந்தான்... இவளைப் பார்த்ததும் “ நான் தர்மபுரி கிளம்புறேன் மான்சி” என்றான்...

மான்சி சில நிமிடங்கள் என்ன சொல்வது என்று புரியாமல் தயங்கி பிறகு... “ சரிங்க சார் கிளம்புங்க” என்று புன்னகையுடன் சொல்ல.....

“ என்ன சனியன் ஓழியட்டும்னு சந்தோஷமா இருக்கா?” நக்கலாக கேட்டான் சத்யன்...

இதற்கு என்ன பதில் சொல்வது மான்சி காலையிலிருந்து இதம் தொலைந்து போனது

அவளையே சற்றுநேரம் பார்த்திருந்துவிட்டு காரில் ஏறி கிளம்பினான்... மான்சி கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு தனது அறைக்குப் போனாள்....

மனதில் இனம்புரியா வலியும் வேதனையும் ஆட்டுவிக்க முகம் கைகால் கழுவி உடை மாற்றிக்கொண்டு முருகனின் படத்திற்கு முன் கண்மூடி அமர்ந்தாள்... அவளது முதல் வேண்டுதல்.. இரவில் செல்லும் சத்யன் நல்லபடியாக வீடு போய் சேர வேண்டும் என்பதுதான்


“ பிரிவு என்பதே கண்ணீரின்...
“ கையொப்பம்தான்!

“ வானத்தை விட்டு மேகம் பிரிகிறது..
“ அது மழை என்ற கண்ணீருடன்!

“ என்னைவிட்டு நீ பிரிய நேர்ந்தால்...
“ அது மரணம் என்ற கண்ணீருடன்!

“ பிரிவு என்பதே கண்ணீரின்...
“ கையொப்பம்தான்!

No comments:

Post a Comment