Saturday, December 5, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 4

முருகன் படத்திற்கு முன்பு கண்களில் கண்ணீர் வழிய வழிய கைகூப்பி " நேத்துதானே உன் சன்னிதானத்தில் நின்னு வேண்டினேன்.... சத்யன் நல்லபடியா குடும்பம் குழந்தைகள்னு நல்லாருக்கனும்னு.... ஆனா மறுநாளே என்னை இப்படியொரு கேவலத்தைப் பார்க்க வச்சிட்டயே முருகா" என்ற மான்சியின் கதறலுக்கு... தனது அழகான புன்னகையை தந்தபடி அமைதியாக இருந்தான் முருகன்

முருகனின் புன்னகை முகத்தைப் பார்க்க பார்க்க கண்ணீர் பெருகியது..... ஏன் எனக்குமட்டும் இந்த மாதிரியெல்லாம் நடக்குது? என்னை அவமதிக்க தான் இந்த ரீனாவை கூட்டி வந்தாரா? அப்படியென்ன என்மீது வெறுப்பு வந்துவிட்டது? நான் என்ன தவறு செய்தேன்? மான்சியின் மனம் கேள்வியால் அவளையே துளைத்தது... ஆனால் அவன் தவறானவன் என்று தெரிந்தும் ஏன் இந்த கண்ணீர் என்றுமட்டும் அவள் அலசி ஆராயவில்லை... விரும்பவில்லை என்றும் சொல்லலாம்......

கண்களை துடைத்துக்கொண்டு வந்து மறுபடியும் படுக்கையில் விழுந்தாள்... தூக்கம் தொலைதூரம் போனது... துக்கம் அழையா விருந்தாளியாக வந்து அருகில் படுத்துக்கொண்டது... கண்கள் வற்றாமல் நீரை சுரந்து தலையனையை நனைத்தது.... விடியவிடிய விழித்துக் கிடந்தாள்...



காலையும் அவளுக்கு நல்லதாக விடியவில்லை... சாமுவேல் வந்து கதவைத் தட்டினான்.... “ என்ன சாமுண்ணா?” மான்சியின் குரல் அவளுக்கே வித்தியாசமாக இருந்தது... “ ஐயா உங்களை வரச்சொன்னார்மா ” என்று கூறிவிட்டு சாமுவேல் போய்விட்டான்

மான்சி சுவற்றிலிருந்த கடிகாரத்தில் மணிப் பார்த்தாள்... மணி ஏழாகியிருந்தது... சரியாக எட்டரைக்கெல்லாம் எஸ்டேட்டில் இருந்தாக வேண்டும்.... இதற்குமேல் படுத்திருக்க முடியாது... சத்யனிடம் எஸ்டேட் கணக்குகளை காட்டவேண்டும்... இன்றைய கணக்கில் இன்னும் என்னவெல்லாம் பாக்கியிருக்குமோ தெரியவில்லை... போய்த்தான் ஆகவேண்டும்..

மெல்ல எழுந்து மாற்றுடை எடுத்துக்கொண்டு சமையலறையின் பக்கத்தில் இருந்த பாத்ரூமுக்குள் போய் குளித்து உடைமாற்றி விட்டு வந்தாள்... கூந்தலை மட்டும் பின்னிப் போட்டுக்கொண்டு நெற்றியில் ஒற்றைப் பொட்டுடன் அறையை மூடிக்கொண்டு சத்யன் பங்களாவுக்குள் போனாள்...

அவன் முன்னால் கண்கலங்கி காட்டிக் கொடுத்துவிடக் கூடாதே என்று மனம் கடவுளை வேண்டியது..... நடை பின்னிக்கொள்ளாமல் ஜாக்கிரதையாக நடந்தாள்
அப்போதுதான் ஜாகிங் முடித்துவிட்டு ஸ்போர்ட்ஸ் ஷாட்ஸ் டீசர்டில் சோபாவில் அமர்ந்து பேப்பரைப் படித்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து மான்சியை கூர்ந்துப் பார்த்தான்... உதட்டில் ஒரு வெற்றிப் புன்னகை நெளிய... “ என்ன இவ்வளவு லேட்டா வர்ற? நைட் தூங்கலையா?” என்று தனது புன்னகை வார்த்தையில் தெரியாத வாறு கேட்டான்...

அவனைப் பார்த்து உதட்டில் கோர்த்த செயற்கைப் புன்னகையுடன் “ குட்மார்னிங் சார்” என்றுவிட்டு “ நல்லா தூங்கிட்டேன் சார்.... ஸாரி சார்” என்றவள் அங்கிருந்த டிவி கபோர்ட் கீழேயிருந்த அறையில் நேற்று வைத்த பைல்களை எடுத்துவந்து சத்யனின் முன்பிருந்த டீபாயில் வைத்துவிட்டு ஒரு பைலை பிரித்து அவன் முன்பு வைத்து “ இந்த மாதம் முழுக்க எஸ்டேட் தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பள விபரங்களை இதில் எழுதியிருக்கேன் சார்... ஆபிஸ்ல இருக்குற கம்பியூட்டரிலும் தனிதனியே பதிவு பண்ணி வச்சிருக்கேன் சார்” அவன் கண்களைப் பார்ப்பதை கவணமுடன் தவிர்த்து ஒரு நல்ல ஊழியையாக கடமையை செய்ய மான்சியால் முடிந்தது அவளுக்கே வியப்பாக இருந்தது...


சத்யன் பைலை கண்கொண்டு பார்க்கவில்லை... அவன் பார்வை மான்சியின் முகத்திலேயே இருந்தது.... எந்த ஒப்பனையும் இன்றி வந்ததால் இரவு முழுவதும் அழுததை அவள் முகம் காட்டிக்கொடுத்தது.... இமைகள் தடித்து ... விழிகளுக்கு கீழே இருந்த அடர்த்தியான பிரவுன் நிறம்.. மூக்குநுனி சிவந்து.. இவையெல்லாம் மான்சி அழுததற்கு சாட்சியம் கூறியது...

“ நைட் அழுதியா மான்சி” இறுக்கத்துடன் வெளிவந்த சத்யனின் குரல் மறுபடியும் மான்சியின் அழகையை தூண்டும் போலிருக்க... முருகா முருகா முருகா என்ற பிரார்த்தனையுடன் உள் உதட்டை கடித்து அடக்கியபடி “ நான் ஏன் அழனும் சார்? நல்ல முதலாளி.. நல்ல சம்பளம்... அதையெல்லாத்தையும் விட அழகான இயற்கை சூழல்.. அப்புறம் நான் ஏன் சார் அழப்போறேன்” என் உதடுகளை காதுவரை இழுத்துப் புன்னகைத்தபடி கூறினாள்

அவளின் செயற்கையான சிரிப்பை வெறுத்தபடி “ ம்ம் உன் முகம் அழுததா சொல்லுதே?” விடவில்லை சத்யன்

“ அதெல்லாம் இல்லை சார் நைட் லேட்டா தூங்கி காலையில நேரங்கழிச்சு எழுந்தேன்.. நீங்க கூப்பிட்ட அவசரத்தில் பவுடர் கூட போட்டுக்காம வந்தேன்... அதான் அப்படியிருக்கு” சமாளித்தாள் மான்சி..

சத்யன் அவள் கூறியதை நம்பவில்லை என்று அவன் முகத்தில் தெரிந்தாலும் மேலும் எதையும் கேட்காமல்.... அவள் பிரித்துவைத்த பைலைப் பார்த்தபடி “ சாமு ரெண்டு கப் டீ எடுத்துட்டு வா?” என்று உத்தரவிட்டான்...

மான்சி தரையில் மண்டியிட்டு அமர்ந்து பக்கங்களைப் புரட்டி விளக்கம் சொன்னாள்... சத்யன் நிமிராமலேயே “ எழுந்து சோபாவில் உட்காரு மான்சி” என்றான்...

“ பரவாயில்லை எனக்கு இதுதான் வசதியாக இருக்கு சார்” என்றாள் மான்சி ...
இரண்டு கப் டீ எடுத்து வந்து டீபாயில் வைக்கப்பட்டது... சத்யன் நிமிர்ந்து ஒரு கப்பை எடுத்துக்கொண்டு இன்னொரு கப்பை எடுத்து மான்சியிடம் நீட்டி “ டீ எடுத்துக்க மான்சி” என்றான்..

“ இல்லைங்க சார் நான் டீ குடிச்சிட்டு தான் வந்தேன்” என்றவள் அடுத்த பைலை எடுத்து வைத்து... இது எஸ்டேட்டுக்கு மருந்துதடிச்ச விபரங்கள் சார்.... அப்புறம் இந்த மருந்து போடுற ஆட்கள் சம்பளம் அதிகமா கேட்குறாங்க சார்... உங்களை கேட்டு சொல்லறதா சொல்லிருக்கேன் சார்” என்று கவனமாக பேச்சை திசை திருப்பினாள் மான்சி

“ டீயை எடுத்துக்க மான்சி?” சத்யனின் குரலில் கடுமை ஏறியிருந்தது... அவன் டீயையும் குடிக்காமல் அவளையே உறுத்து விழித்துக்கொண்டிருந்தான்...

“ அதான் வேணாம்னு சொல்றேனே சார்... நீங்க குடிங்க” மறுபடியும் மறுத்தாள் மான்சி..

அவளைப் பார்த்தபடி “ ஏய் ப்ளாக்கீ...........” என்று சத்யன் உரக்க குரல் கொடுக்க வாசலில் இருந்து ஓடி வந்தது ஒரு கருப்புநிற ராஜபாளையம் வேட்டை நாய்... சத்யனின் காலடியில் தனது முதுகை வளைத்து குழைந்தது... சத்யன் சாஸரை எடுத்து தரையில் வைத்து தன் கையிலிருந்த தனது கப் டீயை அதில் ஊற்றினான்.. நாய் சிந்தாமல் உறிஞ்சியது... அடுத்து மான்சிக்காக வைத்திருந்த டீயையும் எடுத்து சாஸரில் ஊற்ற அதையும் குடித்துவிட்டு அவன் காலடியில் மண்டியிட்டது .... “ ம் வெளியே போ” சத்யனின் குரல் அதிகாரமாய் உத்தரவிட.. மறுபடியும் வாசலுக்கு ஓடியது.... “ சாமூ... டீகப்பை எடுத்துட்டுப் போங்க” என்று குரல் கொடுத்த அடுத்த நொடி சாமுவேல் வந்து டீகப்புகளை எடுத்துப் போனான்...

மான்சி அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தாள்... இவன் எனக்கு எதை உணர்த்தப் பார்க்கிறான்? இவன் அதிகாரத்துக்கு கட்டுப்படவேண்டும் என்றா? ம்ஹூம் அது என்னிடம் நடக்காது... உத்யோகம் சம்மந்தமானது தவிர வேறு எதற்க்கும் நான் இவனுக்கு கட்டுப்பட மாட்டேன்... அழுத்தமாக நெஞ்சில் பதியவைத்த அடுத்த நிமிடம் அதிர்ச்சி நீங்கி புன்சிரிப்பு வந்து உதடுகளில் ஒட்டிக்கொள்ள டீயை நாய் குடித்த சம்பவத்தையே மறந்து இயல்பாக பைல்களை அடுக்கினாள்..




சத்யனும் வேற எதைப்பற்றியும் பேசாமல் எழுந்து மாடிப்படிகளில் ஏறியவன் பாதி படியில் நின்று “ பைல்ஸ் எல்லாத்தையும் கார்ல எடுத்துட்டுப் போய் வச்சுட்டு பத்து நிமிஷம் வெயிட் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன் எஸ்டேட்க்கு போகலாம் ” என்று கூறிவிட்டு தன் அறைக்குப் போனான்...

மான்சி குழப்பமாக அவன் அறை கதவைப் பார்த்துவிட்டு பைல்களை எடுத்துச்சென்று காரில் வைத்தாள்... இவனுடன் நானும் போவதா அல்லது தனியாக போவதா? யோசித்தபடி தனது வீட்டிற்க்குப் போனாள்...

பாத்ரூமிலிருந்த ஈரத்துணிகளை எடுத்து கொடியில் உலர்த்திவிட்டு வந்தாள்... இரவு சாப்பிடாதது பசி வயிற்றைக்கிள்ள.... ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் வெண்ணீர் வைத்து பால் பவுடரை கலந்து அதில் சிறிது காபித்தூளை கலந்து டம்ளரில் ஊற்றி ஆற்றினாள்... குடிப்பதற்காக உதட்டருகே எடுத்துச் சென்று ஒருமுறை உறிஞ்சினாள்.. மறுமுறை உறிஞ்சும் முன்பு தன் முதுகுக்குப் பின்னால் துளைக்கும் பார்வையை உணர்ந்து திரும்பினாள்...

சத்யன் தான்... வாசற்கதவில் ஸ்டைலாக சாய்ந்து நின்றிருந்தான்.... அவள் பார்த்ததும் கண்சிமிட்டி சிரித்தான்.. இதுபோல் அடிக்கடி கண்சிமிட்டி சிரிப்பதை மான்சி ரசிக்க ஆரம்பித்திருந்தாள்... இப்போதும் நிமிடத்தில் அந்த சிரிப்பை தன் மனதில் பதிய வைத்தாள்...

“ என்ன மான்சி முதல்முதல்லா உன் வீட்டுக்கு வந்திருக்கேன் வான்னு கூப்பிட மாட்டியா?” என்று குறும்பாக கேட்டான்...
மான்சி தடுமாறி பிறகு சுதாரித்து.. கையிலிருந்த காபி டம்ளரை எடுத்து மேசையின் மீது வைத்துவிட்டு அவன் பக்கம் திரும்பி “ வாங்க சார்” என்றாள் புன்னகையுடன்...

உள்ளே வந்தவன் இருந்த ஒரேயொரு சேரில் அமர்ந்து தனது வீட்டையையே ஒருமுறை புதிதாக பார்த்துவிட்டு “ ஏன் மான்சி நீயெல்லாம் இந்தமாதிரி வீட்டுல இருக்க வேண்டியவளா என்ன?... பங்களாவில் சொகுசாக இருக்க வேண்டியவள் ... அதுவும் என் படுக்கையை பார்த்திருக்கியா? அதுல இருக்குற கட்டிலில் ஒயிலா நீ படுத்திருந்தா எப்படியிருக்கும் தெரியுமா? ம்ஹ்ம் நீதான் அதை ஒத்துக்க மாட்டேங்கற.... வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்ணனும் மான்சி... உடம்பு முழுக்க சங்கிலியால் பிணைந்து கொண்டு கஷ்டப்படக்கூடாது...” சத்யன் ரசனையுடன் அவளை அளவிட்ட படி பேச...

படுக்கையறை என்றதும் மான்சிக்கு நேற்று இரவு துடித்ததெல்லாம ஞாபகம் வந்தது.. முகம் ரத்தமென சிவக்க சத்யனை வெறித்துப் பார்த்தாள்...
அவள் முக மாற்றத்தை கண்டுகொண்ட சத்யன் எழுந்து அவளருகில் வந்து “ என்ன மான்சி நான் சொல்ற விஷயங்கள் எல்லாம் ரொம்ப கசப்பா இருக்கா? ஆனா அனுபவிச்சுப் பார்த்தா இனிக்கும் மான்சி ” என்று மீண்டும் தனது கொள்கையை வலியுறுத்தி சொன்னான்...

அவன் எதிரில் தன் முக உணர்ச்சிகளை காட்டினால் அது தன்னையே பலவீனப்படுத்தும் என்று மான்சிக்கு தெளிவாகப் புரிந்தது... அதன் இளக்காரம் தான் அவன் வார்த்தைகளில் தெரிகிறது என்பதும் புரிந்தது... டீ விஷயத்தில் இருந்தது போல் தான் அசையாமல் தடுமாறாமல் இவனை எதிர்த்து போராடவேண்டும் என்றும் புரிந்தது....


சட்டென்று தன் இதயத்தை இரும்பாக்கினாள்... வார்த்தைகளை கூர்மையாக்கினாள்... அவனுக்காக அழுததை தூரமாக வீசினாள்.... அருகில் நின்றவனை நிமிர்ந்து ஏளனமாகப் பார்த்தாள் “ நீங்க இப்போ சொன்னதைப் பத்தி நான் யோசிக்கலை சார்... நேத்து நைட் நடந்ததைப் பத்தி யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.... ஏன் சார் அதையெல்லாம் யூஸ்ப் பண்ணிட்டு டஸ்பின்ல போடமாட்டீங்களா?” என்று தனது வார்த்தையை அவனை நோக்கி குறிபார்த்து எறிந்தாள்...

“ நீ எதை சொல்ற?” சத்யன் குழப்பமாகப் பார்த்தான்....

“ அதான் சார் நேத்து நைட் நீங்க யூஸ் பண்ண காண்டம்.... அதான் சார் ஆணுறை... தூக்கம் வரலையேன்னு தோட்டத்துல வாக்ப் போனேன்... அப்பதான் உங்க ரூம்ல இருந்து விர்னு வந்து விழுந்தது... நல்லவேளை ஒரு அடி முன்னால எடுத்து வச்சிருந்தாலும் என் தலையில வந்து விழுந்திருக்கும்... இனிமேல் ஜாக்கிரதையா டஸ்பின்ல போடுங்க சார்” மான்சிக்க தன் நகம் கொண்ட விரல்களால் அவன் முகத்தில் கிழித்து காயப்படுத்திய உணர்வு... இரவெல்லாம் விட்ட கண்ணீருக்கு அர்த்தம் கண்டுபிடித்த உணர்வு.... ஏளனத்தை இதழ்களில் தேக்கி அவனைப்பார்த்தாள்

சத்யன் இப்படியொரு சூழ்நிலையை எதிர்பார்க்கவில்லை... மான்சி எந்த சலனமுமின்றி தெளிவாக அதைப்பற்றி பேசுவாள் என்றும் எண்ணவில்லை... இரவு அதைச்செய்தது இவன் இல்லை.. இயக்கம் முடிந்து சோர்ந்து விழுந்தவனின் உறுப்பிலிருந்து அந்த ஆணுறையை உருவி ஜன்னல் வழியாக எறிந்தவள் ரீனா தான்.. சத்யன் சில நிமிடங்கள் மான்சியின் முகத்தைப் பார்க்க கூசி சேரில் போய் அமர்ந்தான்...

மான்சி மார்புக்கு குறுக்கே கைகட்டியபடி “ என்ன சார் எஸ்டேட்க்கு கெளம்புவோமா?” என்றாள்... குரலில் எந்த உணர்ச்சியுமின்றி....

“ ம் வா போகலாம் ” என்று சத்யன் எழுந்து வெளியேறினான்...

காரில் ஏறி அமர்ந்துவிட்டு மான்சிக்காக காத்திருந்தான்.... மான்சி ஒரு புதிய லேடிஸ் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்து காரின் மறுபக்க கண்ணாடி வழியாக தலையை நீட்டி “ சார் நேத்துதான் இந்த சைக்கிள் வாங்கினேன்.... நல்லாருக்கா சார்? நான் சைக்கிளில் வர்றேன் நீங்க கார்ல வாங்க சார்” என்று கூறிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு இவனுக்கு முன்னாடி கிளம்பினாள்

சத்யனின் நெஞ்சில் சற்றுமுன்னர் தணிந்திருந்த ஆத்திரமெல்லாம் பலமடங்காக பொங்கியது.... மான்சி தன்னை வேண்டுமென்றே அவமானப்படுத்துவதாக எண்ணி குமைந்தான்... அவனுடைய ஆத்திரம் தாங்காமல் கார் பெரும் அதிர்வுடன் கிளம்பியது.... அவன் ரோட்டில் காரை செலுத்தும் போது பக்கவாட்டில் பிரிந்து சென்ற மண்பாதையில் மான்சி விறுவிறுவென சைக்கிளை மிதித்துக்கொண்டு போனாள்....

சத்யன் அவளையே முறைப்புடன்ப் பார்த்துக்கொண்டு காரை ஓட்டினான்... ஒரு இடத்தில் மண்பாதை மறைந்து வேறுபக்கம் போனது... அந்த வழியாக போனால் சத்யனின் எஸ்டேட்டை சீக்கிரம் அடையளாம்... சத்யன் போவதற்குள் மான்சி ஆபிஸ் அறையை திறந்து ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு இவனுக்காக காத்திருந்தாள்....

சத்யன் அவளை ஏறெடுத்தும்ப் பார்க்காமல் மேசைக்கு மறுபுறம் இருந்த குஷன் சேரில் அமர்ந்து கம்பியூட்டரை ஆன் செய்தான்.... எஸ்டேட் சம்மந்தப்பட்ட எல்லாம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு சேமித்து வைக்கப் பட்டிருந்தது... எல்லாவற்றையும் ஒரு முதலாளியாக இருந்து அலசி ஆராய்ந்தான்.. புரியாத சிலவற்றை மான்சியிடம் கேட்டு தெரிந்துகொண்டான்... இன்னும் செய்யவேண்டிய மாற்றங்களைப் பற்றி கூறினான்.. ஆனால் எல்லாமே இயந்திரத்தனமாய்....


மான்சிக்கும் அவனுடைய அந்த அமைதி பிடித்திருந்தது... அவன் கேட்டவற்றை சரியாக தெளிவுபடுத்தினாள்.... மதியம் மணி ஒன்றானது .... காலையில் இவளுடன் வீம்பு பண்ணிக்கொண்டு டீகூட குடிக்காமல் வந்ததால் சத்யனின் முகத்தில் பசியின் சோர்வு தெரிந்தது... மான்சியும்தான் எதுவும் சாப்பிடவில்லை .. ஆனால் அவளுக்கு அது பெரிதாக தெரியவில்லை...

ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளின் கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் அருகே தயங்கித் தயங்கி சென்று “ சார் ரொம்ப டயர்டா இருக்கீங்க போய் சாப்பிட்டு வந்து மற்ற வேலைகளை பார்க்கலாமே?” என்றாள்....

ஒரு வெற்றுப் பார்வையுடன் அவளை நிமிர்ந்துப் பார்த்துவிட்டு “ நீயும்தான் சாப்பிடலை...பரவாயில்லை ஒருநாள் பட்டினி கிடந்தா செத்துப்போயிர மாட்டேன்... உன் வேலையைப் பார் ” என்றான் அதிகாரமாக....

மான்சிக்கும் கோபம் வந்தது... அய்யோ பட்டினி கிடக்கட்டுமே? யாருக்கு என்ன? என்று அலட்சியமாக தலையை சிலுப்பிக் கொண்டு அவன் டைப் செய்ய சொன்னதை செய்தாள்... கீபோர்டில் அவள் விரல்கள் நர்த்தனம் ஆடியதைப் ஓரப் பார்வையாகப் பார்த்தபடி தனது வேலைகளை செய்தான் சத்யன்...
மணி ஒன்றரையானது மான்சியின் வயிற்றில் மெல்லிய ரீங்காரம் கேட்டது.... டைப் செய்வதை நிறுத்திவிட்டு எழுந்து அறையின் மூலையில் இருந்த பில்டரில் தண்ணீர் பிடித்து குடித்துவிட்டு வந்து அமர்ந்து மீண்டும் டைப் செய்தாள்...

ஒரு டீ குடிக்க மறுத்ததற்காக இவ்வளவு வீம்பா? மான்சிக்கு எரிச்சலாக வந்தது... விரல்கள் தப்புத்தப்பாய் அடித்தது... அழித்துவிட்டு மீண்டும் டைப் செய்தாள்... அப்போது இவர்களின் பட்டினி பிரச்சனைக்கு முடிவுகட்டும் விதமாக சாமுவேல் ஒரு பெரிய எவர்சில்வர் கேரியருடன் சைக்கிளில் வந்து இறங்கினான்...

வேகமாக உள்ளே வந்தவன் மேசையிலிருந்தவற்றை ஒதுக்கிவிட்டு கேரியரை வைத்துவிட்டு கூடையிலிருந்து ஒரு தட்டை எடுத்து மேசையில் வைத்தான் “ கைகழுவிட்டு வாங்கய்யா... சாப்பிடுவீங்க... காலையிலயும் சாப்பிடலை ” என்று அக்கரையுடன் சொல்ல.... மான்சிக்கு அப்பாடா என்று உயிர் வந்தது...

“ சாப்பாடு வேண்டாம் சாமு எடுத்துட்டுப் போ” என்றான் சத்யன் நிமிராமலேயே...

“ அய்யோ என்னங்கையா இது நைட்டும் வந்ததும் சாப்பிடாம மாடிக்குப் போய்ட்டீங்க.... காலையிலயும் சாப்பிடலை... வேனாம்யா உடம்பு கெட்டுடும் வாங்கய்யா” என்று அவன் அழைக்கும்போதே மேசையிலிருந்த தட்டையெடுத்து சுவற்றை நோக்கி ஆத்திரத்துடன் வீசியெறிந்தான் சத்யன்....

தட்டு பயங்கர சத்தத்துடன் சுவற்றில் மோதி விழுந்து உருண்டது.... சாமுவேல் பயத்துடன் பின்வாங்க.... மான்சி அதிர்ச்சியுடன் எழுந்துவிட்டாள் சத்யன் எந்த உணர்ச்சியுமின்றி மேசைமேலிருந்த பைலை புரட்டினான்...

மான்சிக்கு அவன் கோபம் இதயத்தில் ஊசியாய் இறங்கியது.... வீம்பாக பட்டினி கிடப்பதன் அர்த்தம் அவளுக்கு தெரியும்... இந்த ஒரு விஷயத்தில் இளகினால் அவமானம் வந்துவிடப்போவதில்லை என்று எண்ணி கண் ஜாடையில் சாமுவேலை போகச்சொன்னாள்.. சாமுவேல் தலையசைத்து விட்டு வெளியேறினான்..


மான்சி கீழே கிடந்த தட்டை எடுத்து கழுவிவிட்டு மறுபடியும் மேசையில் வைத்தாள்.... கேரியரைத் திறந்து மேல் கப்பில் இருந்த சாதத்தை தட்டில் பாதி அள்ளி வைத்துவிட்டு மீதி சாதத்தை கப்போடு வைத்துவிட்டு குழம்பை எடுத்து அவனுக்கு தட்டிலும்.. தனக்கு கப்பிலும் ஊற்றிவிட்டு தட்டை அவனருகே நகர்த்திவிட்டு கப்பை தன்னருகே வைத்துக்கொண்டு தனது இருக்கையில் அமர்ந்து மவுனமாக சாதத்தை பிசைந்து அள்ளியெடுத்து வாயில் வைக்க... எழுந்துபோய் கைகழுவிவிட்டு வந்த சத்யனும் மவுனமாகவே உணவில் கை வைத்தான்...

ஆனால் சாதத்தை அவசரமாக அள்ளி அள்ளி வாயில் அடைத்தான் சத்யன்... பட்டினி கிடந்து பழக்கமில்லாதவன்.... மான்சி கண்ணில் முட்டிய கண்ணீரை கஷ்ட்டப்பட்டு அடக்கிக்கொண்டு அவனுக்கு பரிமாறியபடி சாப்பிட்டாள்....
சாப்பிட்டு முடியும் வரை இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொள்ள வில்லை.... அவன் கைகழுவ எழுந்ததும் பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு டேபிளைத் துடைத்து விட்டு மீண்டும் டைப் செய்ய அமர்ந்தாள் ...

அதன்பின் மாலை வரை பெரும் அமைதி நிலவிது... இருவரும் அவரவர் வேலையில் கவனமாக இருந்தனர்... வீட்டுக்கு செல்லவேண்டிய தருணத்தில் அந்த அமைதியை சத்யனே கிழித்தான் “ நைட்டு அதனாலதான் அழுதியா மான்சி? தூங்கவேயில்லையா?” என்று மெல்லிய குரலில் கேட்க...

தன்னை கண்டு கொண்டானே என்ற ஆத்திரம் உள்ளுக்குள் குமிழியிட நிமிர்ந்து அவனை நேராகப் பார்த்து “ அதுக்குப் போய் நான் ஏன் சார் அழனும்... நீங்க இப்படித்தான்னு நீங்களே சொல்லிட்டீங்க பிறகு உங்களுக்காக கண்ணீர் விடுறது ரொம்ப அபத்தம் சார்... நான் அழுதேன் தான்... இப்படியொரு கேவலமான நிலையில என்னை கொண்டு வந்து வச்சிட்டயே ஆண்டவான்னு அழுதேன்... நான் இங்கே இருந்து வேலை செய்யவேண்டிய சூழ்நிலையை நினைச்சு அழுதேன்... நோயால செத்துப்போன அப்பாவை நெனைச்சு அழுதேன்... எங்களுக்காக பட்டினி கிடந்த என் அம்மாவை நினைச்சு அழுதேன்... இப்படி எத்தனையோ காரணங்களால அழுதேன் சார்” என்று மான்சி முடிக்க....

சத்யன் அவளையே வெறித்துப் பார்த்தான்... அவள் பதில்கள் ஒவ்வொன்றும் அவன் முகத்தில் அறைந்தது.... “ நேத்து வந்தவள் என்கூட என்னப் பண்ணுறாளோன்னு நெனைச்சு நீ அழவேயில்லைன்னு சொல்றியா மான்சி?” சத்யன் அழுத்தமாக கேட்டான்..

மான்சிக்கு இந்த கேள்வியின் அர்த்தம் முழுமையாக புரிந்தது.... அவனை காயப்படுத்த வேண்டும் என்ற ஆத்திரம் குபுகுபுவென கிளர்ந்தது “ இதென்ன சார் இப்படியொரு கேள்வி ஓரு அந்த மாதிரிப் பொண்ணும் உங்களை மாதிரி ஆணும் பூட்டிய அறைக்குள்ள என்னப் பண்ணுவாங்கன்னு தெரியாமல் இருக்க நான் என்ன சின்ன பாப்பாவா? அப்புறம் எதுக்காக நான் அழனும்?” அவனைத் திருப்பிக் கேட்டாள்....

“ ஏன் அழனும்?” அவளைப் போலவே சொல்லிக்காட்டிய சத்யன் “ அது ஏன்னா..... அவள் இடத்தில் நாம் இல்லையேன்னு நீ அழுதிருக்கனும்.... கரெக்டா மான்சி?” சத்யனின் குரலில் அளவுகடந்த ஏளனம்...

இந்த வார்த்தைக்கு மான்சியின் உடலெல்லாம் கூசியது.... ரௌத்திரமாய் நிமிர்ந்தாள்... “ ச்சீ யாரை பத்தி இவ்வளவு கேவலமா சொன்னீங்க.... உங்க ஆண்மையின் மேல் உங்களுக்கு கர்வமிருக்கலாம்.... ஆனால் எனக்கு அது தேவையில்லை... அந்த ஆண்மைக்கு அடிபணிந்து கிடப்பவள் கிட்ட போய் அழச் சொல்லுங்க” என்று சிறு கூச்சலுடன் உரக்க பேசியவளைப் பார்த்து சிரித்தான் சத்யன்..


“ ஏய் எதுக்கு இவ்வளவு கோபம்... நீ வேனும்னா என்னை நெனைச்சு அழாம இருந்திருக்கலாம்..... ஆனா நான் விடியவிடிய அந்த ரீனா உன்னை நினைச்சுதான் பண்ணேன்.... அவள் கதற கதற பண்ணேன்... காலையில ஏழு மணிக்கெல்லாம் வாடகை டாக்ஸியில் கந்தலாகி ஊர் போய் சேர்ந்தாள்.... ஒரு ஒரு நிமிஷமும் உன்னை நினைச்சுகிட்டு தான் அவளை போட்டேன் மான்சி” சத்யனின் வக்கிரம் வார்த்தைகளாக வந்து விழுந்தது...

மான்சி இதுவரை கேட்டறியாத வார்த்தைகள்.... மனதாலும் உணரப்படாத அவமான உணர்ச்சிகள்.... அன்று காரிலிருந்தவர்கள் காயப்படுத்தும் போது கூட செத்துவிட்டால் இவர்களிடமிருந்து தப்பிக்கலாம் என்றுதான் நினைத்தாளே தவிர... இப்படி உடலில் முழுவதும் புழு ஊர்வது போல் உணரவில்லை.... இரவு தன் காலடியில் விழுந்த ஆணுறையின் ஞாபகம் வந்தது ... வயிற்றைப் புரட்டியது நெஞ்சு காந்தியது...

இவ்வளவு நேரம் அடக்கி வைத்த கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் வழிய... வாயைப் பொத்திக்கொண்டு வெளியே ஓடினாள்... சத்யன் அவளை அசைத்து விட்ட கர்வத்தோடு அப்படியே நின்றிருந்தான்...

சைக்கிளை மிதித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவள் கதவைத்திறந்து உள்ளே போய் கதவை அறைந்து மூடிவிட்டு படுக்கையில் விழுந்தாள்... அவளால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை... அவன் வார்த்தைகள் அனைத்தும் அவள் ரத்தத்தில் நஞ்சாய் கலந்து உயிர் வதை செய்தது...

இரவு உணவை மறந்து கிடந்தவளை சாமுவேல் வந்து அழைக்க .... மூடிய கதவை திறக்காமலேயே படுத்தவாக்கில் “ தலை வலிக்குதுண்ணே நல்லா தூங்கினா சரியாப் போயிடும்... ப்ளீஸ் தொந்தரவு பண்ணாதீங்க” என்றாள் மான்சி...

சற்றுநேரம் கழித்து சத்யனின் குரல் கேட்டது “ மான்சி கதவை திற” என்றான்... மான்சி அமைதியாக இருக்க கதவை படபடவென்று தட்டப் பட்டது...

என்னை நிம்மதியா விடமாட்டேன் போலருக்கே என்று ஆத்திரத்துடன் எழுந்து கதவருகில் வந்தாள் " இதோ பாருங்க எனக்கு தலைவலிக்குது நான் தூங்கனும்... ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்கிறேன் என்னை தனியா விடுங்க." என்று கதவுக்கு மறுபுறம் இருந்தவனிடம் இறைஞ்சினாள் மான்சி




சற்றுநேர மவுனத்திற்கு பிறகு சத்யன் திரும்பிசெல்லும் சத்தம் கேட்டது .... மான்சி ஓசையற்ற பெருமூச்சுடன் வந்து படுக்கையில் விழுந்தாள்... முன்தினம் போல் வெகுநேரம் அவள் விழித்திருக்கவில்லை... கண்களில் வழிந்த கண்ணீருடனேயே தூக்கமும் வந்தது...

காலையில் எழுந்திருக்கும்போதே ஒரு முடிவுடன் எழுந்தாள் ... இனிமேல் சத்யன் முன்பு எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருப்பது என்று... தனது உணர்ச்சி கொந்தளிப்பு தான் அவனை மேலும் தூண்டுகிறது என்று நினைத்து அவனை விட்டு முற்றிலும் ஒதுங்க எண்ணினாள்...

அதிகாலையே எழுந்து அவசரமாக எல்லா வேலையையும் முடித்தவள் சத்யன் கிளம்புவதற்கு முன்பே எஸ்டேட்க்கு போய்விடும் நோக்கில்... செய்துவைத்திருந்த உப்புமாவை ஒரு கப்பில் போட்டுக்கொண்டு தனது கைப்பையில் வைத்துக்கொண்டு கிளம்பி வெளியே வந்தாள்...

கார் செட்டின் பின்னால் நிறுத்தியிருக்கும் தனது சைக்கிளை எடுக்க போனவள்... அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள்.... அவளின் புத்தம்புதிய சைக்கிள் அடித்து நொருக்கப்பட்டிருந்தது டயர்கள் கிழிக்கப்பட்டிருந்தது... மான்சிக்கு வயிறு எரிந்தது .... விழிகளில் முட்டிய நீருடன் ஆத்திரமாக திரும்பியவள் பின்னால் நின்ற சத்யன் மீது மோதி நின்றாள் ...

அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன் " என்ன சைக்கிள் போச்சா? நான் தான் நொருக்கினேன்.... எனக்கு இந்த சைக்கிளே பிடிக்கலை மான்சி அதான் நொருக்கிட்டேன்.... வா கார்ல போகலாம்" என்று உரிமையுடன் அவள் கையைப்பிடித்து அழைத்தான்...

அவன் கைகளை உதறி தன்னை விடுவித்துக் கொண்ட மான்சி.... " சைக்கிள் போன என்ன சார்... ஆண்டவன் கொடுத்த கால் நல்லாத்தானே இருக்கு... நடந்து போறேன்... நீங்க கார்ல வாங்க" என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தாள்...





" உனக்கும் தெரியவில்லை...

" எனக்கும் தெரியவில்லை...

" உன்னை நான் நேசிப்பது!

" ஆனாலும் உன்னை நேசிக்கும் படி...

" எனக்கு உத்தரவிட்டது எது?

" நீ கோபத்தில் சிலுப்பிக் கொண்டு...

" திரும்பும் போது...

" உன் நெற்றியில் வந்து...

" கத்தையாய் விழுகிறதே...

" உனது கருநிற கூந்தல்...

" அதுவாகத்தான் இருக்கும்! 


No comments:

Post a Comment