Monday, December 14, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 26

இருங்க என்று ஜாடை காட்டிவிட்டு கீழே ஓடியவள் கொஞ்சநேரத்தில் கையில் ஒரு டம்ளர் பாலும் ஒரு மாத்திரையும் எடுத்து வந்து கட்டிலின் அருகில் இருந்த டீபாயில் வைத்துவிட்டு கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்து விக்டரின் தோளில் சாய்ந்திருந்த சத்யனை தன் பக்கமாக திருப்பினாள்...

இவள் முகத்தைப் பார்த்ததும் சத்யனுக்கு மேலும் குமுறியது லதாவின் கைகளைப் பற்றி அதில் தன் முகத்தை பதித்துக்கொண்டான் “ நான் அவளை எவ்வளவு லவ் பண்ணேன்னு உங்களுக்கு தெரியுமே லதா.... அவளை நடுரோட்டில் பார்த்த விநாடியில் இருந்து என் மனதுக்குள் புகுந்துவிட்டாள்னு புரியாம முட்டாள்தனமா நடந்து என்னையும் என் காதலையும் தொலைச்சுட்டேனே லதா” என்று கதறியவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை லதாவுக்கு.....



காதலியின் உதாசீனத்தால் ஒரு மனிதன் எவ்வளவு உருக்குலைந்து போவான் என்று சத்யனை கண்முன் பார்த்தனர் மூவரும்... ...

தினா பால் டம்ளரையும் மாத்திரையும் எடுத்து லதாவிடம் கொடுக்க ... “ சத்யா உனக்கு ஒரு மகள் இருக்கா... அவளை நினைச்சு உன் மனசை திடப்படுத்திக்கனும் சத்யா... இந்தா இந்த மாத்திரையைப் போட்டுகிட்டு கொஞ்சநேரம் தூங்கு.... தூங்கி எழுந்தா மனசு கொஞ்சம் சரியாகும்பா ” என்று அன்போடு கூறி மாத்திரையை அவன் வாயருகே எடுத்துச்செல்ல...

மாத்திரையை வாங்கிப் பார்த்தவன் “ தூக்கமாத்திரையா லதா? இன்னும் ரெண்டு குடுங்களேன்... ரொம்ப வலியாயிருக்கு லதா... என்னால தாங்கவே முடியலை... ” என்று வேதனையை சுமந்த குரலில் சத்யன் கூறியதும் அதற்குமேல் தாங்கமுடியாமல் “ சத்யா வேணாம்டா... தைரியமா இரு கண்ணா.... ” என்றபடி லதாவும் கதறிவிட்டாள்....

அதன்பின் விக்டர் வெகுநேரம் போராடி இருவரையும் சமாதானம் செய்து சத்யனுக்கு மாத்திரையும் பாலையும் கொடுத்து உறங்கவைத்துவிட்டு கீழே வந்தார்கள்

வந்தவர்கள் அத்தனை பேரும் கலைந்து சென்றுவிட.... வீட்டில் இருந்தவர்கள் மட்டும் மதிய உணவை கூட மறந்துபோய் அமர்ந்திருந்தார்கள்... சுந்தரம் தர்மபுரி செல்வதற்கு தயாராக எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்... தாத்தா சமியை மடியில் வைத்துக்கொண்டு கடவுளை மனதார திட்டிக்கொண்டிருந்தார்...

மாலை நான்கு மணிக்கு சத்யன் தூக்கம் கலைந்து எழுந்து வந்தான்... அவன் முகத்தில் சோகம் இருந்தாலும் வெறுமையில்லை... தினாவின் அருகில் வந்து அமர்ந்து “ நானும் தர்மபுரி கிளம்புறேன் தினா... நீயே முன்ன மாதிரி எஸ்டேட்டை கவனிச்சுக்க ... மச்சானும் உதவி பண்ணுவார்... நான் இனிமேல் இங்கே வர்ற மாதிரி இல்ல... அப்படி வந்தாலும் மான்சியுடன் தான் வருவேன்” என்றான் உறுதியுடன்

தினா தாத்தாவிடமிருந்து குழந்தையை வாங்கி சோபாவில் படுக்கவைத்தான்... கையை காலை ஆட்டியபடி சிரித்த குழந்தையைப் பார்த்ததும் தினாவுக்கும் கண் கலங்கியது.... இந்த சின்னஞ்சிறு சிசு இந்த வயதில் தாயை பிரிந்து வாழனுமா? இப்படி பண்ணிட்டு போயிட்டயே மான்சி? என்று மான்சியின் மீது பழியாக கோபம் வந்தது தினாவுக்கு

நண்பனை தோளோடு அணைத்து “ சத்யா தைரியமாயிருடா நாங்க எல்லாரும் மான்சி கிட்ட போய் பேசி பார்க்கிறோம்” என்ற தினாவை ஆத்திரமாய் முறைத்த சத்யன்

“ யாரும் அவகிட்ட போய் பேசக்கூடாது தினா... இது என்மேல சத்தியம்.... என் காதல் உண்மையானதா இருந்தா அவளை கொண்டு வந்து என்கிட்ட சேர்க்கட்டும்... என் அம்மாவின் நினைவுநாள் அன்று அவளை எனக்கு காட்டினாங்க என் அம்மா... மான்சி அவங்க தேர்ந்தெடுத்த மருமகள் தினா...என் அம்மா வாக்கு பொய்யாகாது... அம்மாவே நாங்க சேர வழி பண்ணுவாங்க... அதுக்காக எத்தனை வருஷம் ஆனாலும் நான் காத்திருப்பேன் தினா” என்று சத்யன் சொன்னான்...

‘காலையில் மான்சி மான்சி என்று குமுறியவனா இவன்?’ என்று தினா தன் நண்பனை அதிசயமாகப் பார்க்க


நண்பனின் பார்வை புரிந்த சத்யன் “ அவமேல எந்த தவறும் இல்லை தினா.... எனக்கு அவமேல கோபமும் இல்லை... இதைவிட வேதனை அவளுக்கும் தானே? சமியை பெறுவதற்கு அவ எவ்வளவு சிரமப்பட்டா தெரியுமா? ஒரு சொட்டு கண்ணீர் விடலை... அந்த வைராக்கியம் எல்லாம் என்னை விட்டு விலகி போகத்தான்னு இப்போ புரியுது... ஆனா நான் அவளை மோசமா நடத்தினப்ப எல்லாம் பொறுத்துப் போனவள்... இப்போ அவளை உயிரா காதலிக்கிறேன்னு தெரிஞ்சும் என்னை ஒதுக்கிட்டாளே தினா... அதைத்தான் என்னால தாங்கமுடியலை” என்று கூறிவிட்டு சோபாவில் கிடந்த மகளை எடுத்து அணைத்துக் கொண்டான்...

அவர்களின் பேச்சை மான்சியின் அறை கதவருகே நின்று கேட்டுக்கொண்டிருந்த லதா .. நகை பெட்டியுடன் வந்து அதை மேஜையில் வைத்துவிட்டு “ காலையில உன்னைப் பார்த்து நீ இதை எப்படி தாங்குவியோன்னு பயந்தேன்... இப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கு... நீ சொன்ன மாதிரி நாங்க யாரும் மான்சி கிட்ட பேசுற மாதிரி இல்லை... அவ தான் செய்த தவறை தானே உணரனும்.... நான் மான்சிகிட்ட இதை கொஞ்சமும் எதிர்பார்க்கலை சத்யா” என்று லதா வருத்தமாக கூற....

“ இல்ல லதா கொஞ்ச நாளாவே அவ சரியில்லை... சரி கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பெத்துட்டு இப்போ சொந்தங்கள் முன்னாடி குழந்தையோட கல்யாணம் பண்ணிக்கிறதை நெனைச்சு நெவர்ஸா இருக்கான்னு நெனைச்சேன்.... ஆனா அவளோட முனத்துக்குப் பின்னாடி இப்படியொரு பயங்கரம் இருக்குன்னு நான் நெனைக்கலை.... அவ சொன்ன மாதிரி எனக்கு இது பெரிய இழப்பு தான்... பயங்கர வலிதான்... இதையெல்லாம் விட என் காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு லதா... அதனால நான் கோழையா மூலையில முடங்க மாட்டேன்..... அவ கால்ல விழுந்ததை கூட நான் அவமானமா நினைக்கலை... எத்தனையோ நாள் அவளோட பாதத்தில் கிஸ் பண்ணிருககேன் இதையும் அப்படியொரு காதல் நிகழ்வா நினைச்சுக்க என்னால முடியும்..... ஆனா நான் அவ கால்ல விழுந்ததை நினைச்சு இப்போ அவதான் துடிச்சுகிட்டு இருப்பா.... அவ மனசு எனக்கு தெரியும் லதா ” என்ற சத்யன் மான்சியின் நினைவுகளால் வேதனையுடன் பின்னால் சாய்ந்துகொண்டான்

அவன் அருகில் வந்து தோளில் கைவைத்த லதா “ நீ குழந்தையை எடுத்துகிட்டு தர்மபுரி கிளம்பு சத்யா... தாத்தாவையும் அப்பாவையும் சமாதானம் பண்ணு... சமி இருக்கிருக்கிறதால் அவங்க கவலைகள் கொஞ்சம் மறையும்.... நீயும் மீண்டு வரனும் சத்யா.... அவளை இழந்ததால் நீ துடிக்கவில்லைனு அவளுக்கு புரியனும்.... அது உன்னால் முடியாது தான் ஆனா உன் வலிகளை மறந்து மறைச்சு நீ ஜெயிக்கனும் சத்யா... நீ நிமிரனும்... உன் நிமிர்வு அதுதான் மான்சியை உன்கிட்ட கொண்டு வந்து சேர்க்கும்னு எனக்கு தோனுது” என்ற லதா சத்யனை கூர்ந்து நோக்கி “ நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியுதா சத்யா?” என்று கேட்க....

சத்யன் லதாவை நிமிர்ந்து பார்த்து “ புரியுது லதா .... அவ என்கிட்ட வருவான்னு எனக்கும் நம்பிக்கை இருக்குது” என்றான் நம்பிக்கையுடன் அவன் கண்களில் ஒரு ஒளியும் முகத்தில் தெளிவும் இருந்தது... அதைப்பார்த்ததும் மற்ற மூவருக்கும் மனசுக்கு இதமாக இருந்தது

“ சரி சத்யா அதே நம்பிக்கையோட இரு... உன்கூடவே சியாமாவையும் சாமுவையும் கூட்டிட்டுப் போ.... சியாமா குழந்தையைப் பார்த்துப்பா.....” என்று லதா யோசனை சொல்ல...

“ ஆமா நானும் அதைத்தான் நினைச்சேன் லதா.... பாப்பா சின்னதா இருக்கா எங்க மூனு பேராலயும் பார்த்துக்க முடியாது.... சியாமா பாப்பா கூட இருந்தாத்தான் சரியா இருக்கும்” என்றான் சத்யன்....

வெளியே போயிருந்த விக்டரும் வந்துவிட... மூவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு மாலை ஆறு மணிக்கு தர்மபுரி கிளம்பனார்கள்... ஒரு காரில் சுந்தரமும் தாத்தாவும் கிளம்ப.... மற்றொரு காரில் சத்யன் சாமுவேல் சியாமா மூவரும் குழந்தையுடன் புறப்பட்டார்கள்....

மான்சியை மனைவியாக அழைத்துக்கொண்டு தான் தர்மபுரிக்கு செல்லவேண்டும் என்று இத்தனைநாள் காத்திருந்த சத்யன்.... இன்று மகளை மட்டும் அழைத்துக்கொண்டு தர்மபுரிக்கு சென்றான்....


வாழ்க்கையைத் தொலைத்த ஏமாற்றம் மனம் முழுவதும் நிரம்பியிருந்தாலும்.... தன் மகளைப் பார்த்து ஆறுதலடைந்தான் சத்யன்.... தனது வாழ்க்கை தோல்வியை தொழிலின் வெற்றியாக மாற்றிக்கொள்ள இரவும் பகலும் கம்பெனியே கதியென்று பாடுபட்டான் சத்யன்..... அதில் வெற்றியும் பெற்றான்....
மான்சியின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி தொழில் ஜெயிக்க கற்றுக்கொண்டான்.... மனதளவில் மான்சியை விட்டு ஒரு நிமிடம் கூட விலகாமல் வாழ பழகிக்கொண்டான்......

மான்சி என்னிடம் வருவாள் வருவாள் என்று ஜெபம் போல் சொல்லிகொண்டே இருந்தான்... நிமிடநேர ஓய்வில் கூட மான்சியின் நினைவில் இன்பமாய் பொழுதை கழிக்க கற்றுக்கொண்டு அதேபோல் வாழ ஆரம்பித்தான்....
சரியாக உண்ணாமல் உறங்காமல் அவன் உடல் மெலிந்தாலும்... அவன் மனதில் இருந்த தெளிவு அவனை கம்பீரத்தை தொலைக்கவிடாமல் பார்த்துக்கொண்டது... உடல் மெலிவு அவனை வசீகரமாக மாற்றியிருந்ததே தவிர ... நடந்து போன சோகத்தை யாருக்கும் ஞாபகப்படுத்தவில்லை....

சத்யன் தர்மபுரி வந்து இருபது நாட்கள் கடந்த நிலையில்.... எல்லோரும் தற்போதைய வாழ்க்கைக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர் சுந்தரம் அதிகநேரம் வீட்டில் இருந்து பேத்தியை கவனித்து கொண்டார்... தாத்தா பேரனின் வாழ்க்கையை நினைத்து கவலைப்பட்டு தனது நடமாட்டத்தை குறைத்துக்கொண்டு அறையிலேயே முடங்கினார்... சியாமா சமிக்கு ஒரு தாயாகவே மாறியிருந்தாள்... சாமுவேல் சத்யனின் ஆஸ்தான டிரைவராக மாறியிருந்தான்...

அப்போதுதான் ஒருநாள் ரவி சத்யனுக்கு போன் செய்துவிட்டு தனது கல்யாணத்துக்கு அழைப்பதற்காக சத்யன் வீட்டுக்கு வந்தான்... அவன் போன் செய்துவிட்டு வந்தததால் அவனுக்காக காத்திருந்த சத்யன்.. அவனை சந்தோஷமாகவே வரவேற்றான்....

தனது திருமண அழைப்பை எடுத்து தகுந்த மரியாதையுடன் கொடுத்த ரவி “ சத்யன் நீங்க எனக்கு அண்ணாவா இருந்து என் கல்யாணத்துல கலந்துக்கனும்... நடந்ததை எல்லாம் மனசுல வச்சுகிட்டு வராமல் இருந்துடாதீங்க... இது நீங்க ஏற்பாடு பண்ண கல்யாணம்.. அதனால நீங்கதான் முன்நின்று நடத்தித் தரனும்... அர்ச்சனா இதைத்தான் சொல்லச் சொன்னா... நீங்க கட்டாயம் வரனும்னு சொல்லிருக்கா சத்யன்... ப்ளீஸ் எங்களுக்காக வாங்க” என்று வேண்டி கேட்டுக்கொண்டான்

ரவியின் வேண்டுதலை சத்யனால் மறுக்கமுடியவில்லை... அதோடு மனதுக்குள் ஒரு சின்ன நப்பாசை வேறு... இந்த திருமணத்திற்கு போனால் என் மான்சியை பார்க்கலாமே?.... என் காத்திருப்புக்கான பலன் அவளிடமிருந்து கிடைக்குமா? சத்யன் சட்டென்று முகம் மலர “ கண்டிப்பா வர்றேன் ரவி..... எனக்கும் சில முடிவுகள் தெரிஞ்சாகனும் அதனால கண்டிப்பா வருவேன் ரவி ” என்றதும்

ரவி சந்தோஷமாக சத்யனை அணைத்துக்கொண்டு “ தாங்க்ஸ் சத்யன் “ என்றான்.... பிறகு ஒருசில வார்த்தைகள் பேசிவிட்டு சமியுடன் சிறிதுநேரம் செலவிட்டு விட்டு ரவி சென்னைக்கு கிளம்பினான் ...

சத்யன் திருமணப் பத்திரிகையை பார்த்தான்... இன்னும் பதிமூன்று நாட்கள் இருந்தன.... பதிமூன்றாவது நாள் எனக்கு விடிவுகாலம் பிறக்குமா? அல்லது மான்சி அதே வைராக்கியத்துடன் தான் இருப்பாளா?’ சத்யனின் இந்த இரண்டு கேள்வியில் ஏதாவது ஒன்றிற்கு அர்ச்சனாவின் திருமணத்தின் போது பதில் தெரிந்துவிடும்.... பணிரெண்டு இரவுகளை மான்சியை தன் நினைவுகளால் அனைத்தபடியே கழித்தான் சத்யன்



“ ஓர் அழகான பெண்ணை ஆண்...

“ அசட்டையாக பார்ப்பதில்லை....

“ ஓர் அழகான பெண் ஆணை...

“ மரியாதையாக பார்ப்பதேயில்லை...

“ அழகும் மரியாதையும் நிறைந்த பெண்ணை...

“ ஆண் அதிசயமாய்த் தான் பார்ப்பான்! 



சத்யனின் கூற்று பொய்யாகவில்லை... கல்யாண வீட்டில் இருந்து கண்ணீருடன் காரில் ஏறிய மான்சி வழியெங்கும் அழுதபடியே வந்தாள்... எல்லாமே ஏற்கனவே முடிவுசெய்தபடி சரியாகத்தான் நடத்திகாட்டினாள்... ஆனால் சத்யன் அவள் காலில் விழுவான் என்பதை அவள் கற்பனையிலும் எண்ணிப்பார்க்காத ஒன்று...

‘ அய்யோ அவ்வளவு பேர் முன்னாடி என் கால் போய் விழுந்தானே?.... மான்சியின் உள்ளம் குமுறி கொந்தளித்தது.... அத்தனை பேருக்கு முன்னாடி எப்படி துணிந்தான்? அய்யோ என் காலில் அவனை விழவைக்க தான் நான் இவ்வளவும் செய்தேன் என்பதுபோல் ஆகிவிட்டதே? மான்சியின் கண்ணீர் நிற்கவில்லை... துடைத்த முந்தானையின் ஈரம் காயவில்லை....

சத்யனை விட்டு விலக நினைத்துதான் எல்லாமும் செய்தாள்... ஆனால் அவன் அவள் காலில் விழுந்ததும் பொடிப்பொடியாக நொருங்கி போனாள் மான்சி.... அவ்வளவு நேரம் தைரியமாக பேசிய மான்சி சத்யன் அவள் காலில் விழுந்ததும் முற்றிலும் ஓய்ந்து போனாள் என்றுதான் சொல்லவேண்டும்.... அவள் எதிர்பார்க்காத விரும்பாத ஒன்று அந்த சம்பவம்....

எஸ்டேட் ஆளுங்க எல்லாம் என்ன நினைப்பாங்க... அவனோட ப்ரண்ட்ஸ் எல்லாம் வந்திருந்தாங்களே ... எவ்வளவு சொந்தக்காரங்க வேற வந்திருந்தாங்க... அவங்க எல்லாரும் என்ன நினைச்சிருப்பாங்க... அய்யோ பாவி என் கால்ல விழனும்னு நானா கேட்டேன்?... மான்சியால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை...

அவள் ஏன் அழுகிறாள் என்று காரில் வந்த யாருமே கேட்கவில்லை.... அவள் விதி அழுகிறாள் என்பது போல் எல்லோரும் சோகமாகவே வந்தனர்.... நடந்த சம்பவங்களை யாராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது...

மாலை வீடுவந்து சேர்ந்ததும் காலையிலிருந்து சாப்பிடாத பிள்ளைகளுக்கு அரிசியைப் போட்டு கஞ்சியாக செய்து கொடுத்து தொட்டுக்கொள்ள ஊறுகாயும் கொடுத்துவிட்டு புவனா போய் படுத்துவிட்டாள்...

அர்ச்சனா ஒரு கிண்ணத்தில் கஞ்சியை ஊற்றி எடுத்துவந்து கூடத்தில் மூலையில் சுருண்டு கிடந்த மான்சியின் அருகில் கொண்டு போய் வைத்து “ அக்கா காலையிலேர்ந்து எதுவுமே சாப்பிடலை ... இந்த கஞ்சியாவது குடிக்கா” என்று கெஞ்சினாள்....

மெல்ல தலைதூக்கி பார்த்த மான்சி “ எனக்கு வேண்டாம் அர்ச்சு நீங்கல்லாம் சாப்பிட்டு எடுத்து வச்சிட்டு படுங்க....” என்று கூறி மறுத்தாள்....

“ அக்கா அம்மாவும் சாப்பிடவே இல்லக்கா ” என்று ஆர்த்தி அழ ஆரம்பிக்க... மான்சி எழுந்து அமர்ந்தாள்....

அதற்குள் தன் தாயாரிடம் சென்ற இந்த்ர் “ அம்மா நீ ஏன் இப்ப சாப்பிடாம இருக்க? அவங்க அவங்க இஷ்டத்துக்கு ஏதாவது பண்ணுவாங்க அதையெல்லாம் நினைச்சு நீ குழம்பி போய் இப்படி இருந்தா எங்களுக்கு யாரும்மா இருக்காங்க... ப்ளீஸ்மா வந்து சாப்பிடுங்க.. நீ சாப்பிட வரலைனா நான் சாப்பிடவே மாட்டேன்” என்று கோபமாக கூற..

அவன் பேச்சை கேட்ட மான்சி அதிர்ந்து போனாள்.... இந்த்ரா இப்படி பேசினான்? அவனுக்கு என்மேல்தான் உயிராச்சே? அவன் ஏன் இப்படி பேசினான்?’ தம்பியை பரிதாபமாக பார்த்தாள்... அர்ச்சனா ஆர்த்தி இருவருக்குமே இந்த்ர் பேசியது அதிர்ச்சியாக இருந்தது...

புவனா மெல்ல எழுந்து அமர்ந்து “ எனக்கு பசியில்லாடா தம்பி... நீ அக்காவுங்க கூட போய் சாப்பிடு” என்றாள்....

“ அதெல்லாம் முடியாது இப்போ நீ வரலைனா நாங்க யாருமே சாப்பிட மாட்டோம்.. கஞ்சியை எடுத்துட்டுப் போய் குப்பையில ஊத்திடுவேன்... இப்போ நீ வர்றியா இல்லையாம்மா?” என்று ஆத்திரத்தில் கொதித்தான் இந்த்ர்..

அவன் இயல்பிலேயே ரொம்ப அமைதியானவன்... ஆனால் இன்றைய அவன் பேச்சு மான்சியின் மீது ஏற்ப்பட்டுள்ள அளவுகடந்த வெறுப்பையே காட்டியது...

“ இந்த்ர் “ என்றபடி தன் கையிரண்டயும் நீட்டியபடி அழைத்தாள் மான்சி...

“ நீ பேசாதே” என்று கர்ஜித்தவனைப் பார்த்து... “ நான் என்னடா பண்ணேன்?... என் நிலைமையில இருந்து யோசிச்சுப் பாருடா அப்போ புரியும்?” என்று கண்ணீர் சிந்தியவளைப் பார்த்து...

“ எது உன் நிலைமை?... நீ களங்கப்பட்ட அன்னைக்கே மாமாவை வெட்டி போட்டுட்டு வந்திருந்தா உனக்காக நான் இதையும் செய்வேன்க்கா.... ஆனா அவர் குழந்தையை சுமந்து பெத்துகிட்டு அவர்கூட இருந்து நம்ப வச்சு அவர் கழுத்தறுத்துட்டியே... கடைசில அவ்வளவு பெரிய மனுஷனை உன் கால்ல விழ வச்ச பாரு அதை என்னால ஏத்துக்கவே முடியாது... அதுக்கு உனக்கு மன்னிப்பே கிடையாதுக்கா” என்று கோபத்தில் இருந்தாலும் குரலை தனித்துக் கொண்டு கண்களில் நீர் முட்ட கூறினான் இந்த்ர்...

அவனுக்கு சத்யனை ரொம்பவே பிடிக்கும்... சத்யனின் நடை உடை ஸ்டைல் என அத்தனைக்கும் இந்த்ர் ரசிகன்... சத்யனின் சொந்தக்காரன் ஆகப்போகிறோம் என்ற நினைப்பே அவனை மகிழ்ச்சியாக இருக்கும்.. இப்போது எல்லாம் போனதும் அவனால் தாங்க முடியவில்லை...

மான்சி அவனை திகைப்புடன் பார்த்து “ அய்யோ இந்த்ர் அவர் என் கால்ல விழனும்னு ஒருநாளும் நான் நெனைச்சதில்லைடா.... அது எனக்கே அதிர்ச்சிதான்டா இந்த்ர்... என் மானத்தை நாசம் பண்ணவரை அதே நாளில் தண்டனை கொடுக்கனும்னு நெனைச்சேனே தவிர அவர் என் கால்ல விழனும்னு நான் ஒரு நாளும் நினைக்கலையே” என்று முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்...

“ அவருக்கு தண்டனை கொடுக்க உனக்கு என்ன தகுதியிருக்கு? ” என்ற புவனாவின் குரல் கேட்டு தன் முகத்தில் இருந்து கைகளை எடுத்த மான்சி “ அம்மா” என்று அதிர்ச்சியுடன் அழைக்க...

அவிழ்ந்து விழுந்த கூந்தலை ஆவேசமாக அள்ளிமுடிந்தபடி “ ஆமாடி உன் அம்மாதான்.... இத்தனை நாளா உன் இஷ்டத்துக்கு ஆடின உன் அம்மாதான்.... அவர்கிட்ட என் மானத்தை பறி கொடுத்துட்டேன் அதனால் அவர் மனசு மாறி என்னை ஏத்துக்கிற வரைக்கும் காத்திருக்க போறேன்னு வயித்துல புள்ளையோட நீ சொன்னப்ப உன்னை கொல்லாம விட்ட அதே அம்மாதான்... சொல்லு அவரை தண்டிக்க உனக்கு என்ன தகுதியிருக்குது? ” என்று அதே கேள்வியை மறுபடியும் கேட்டாள் புவனா..

மான்சியால் எதுவுமே நம்பமுடியவில்லை... “ அப்போ நான் குற்றவாளியா? அவர் பொய் சொல்லி என்னை ஏமாத்தினது தப்பில்லையா? ” என்றாள் ஆத்திரமாக....

அவள் கோபத்தை அலட்சியம் செய்த அந்த தாய்... “ ஆமாடி நீதான் குற்றவாளி... அவரைப் பத்தி எல்லாமே உனக்குத் தெரியும்... மோசமான குடிகாரன்... கெட்ட சகவாசம் உள்ளவர்... நாளைக்கு ஒரு பொண்ணுகூட இருக்குறவர்னு எல்லாமே உனக்கு தெரியும்... அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு அவரை காதலிச்ச உனக்கு... அவர் எனக்கு வயிற்றுவலின்னு ஒரு பொய்யை சொல்லி உன்னை ஏமாத்தினதை ஏத்துக்க முடியலையா? வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டா முருங்கைமரம் ஏறித்தான் ஆகனும்னு சொல்றமாதிரி ... இவ்வளவு பொறுக்கித்தனமா இருக்கிற ஒருத்தன் எதைவேனும்னாலும் செய்வான்னு நீ தயாராக இல்லாதது உன் தப்பு.... என் கற்பு போச்சுன்னு சொல்றியே... அவர் வயித்துவலின்னு நடிக்காம உன்னை காதலிக்கிறதா சொல்லி தொட்டிருந்தா அப்போ இந்த மாதிரி என் கற்பு போச்சேன்னு குதிச்சிருப்பயா?” என்ற தாயாரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று விழித்தாள் மான்சி....

காதலோடு கேட்டிருந்தால் என்னையே கொடுத்திருப்பேனே?’ என்று பலமுறை எண்ணிப்பார்த்து வேதனைப்பட்டது ஞாபகம் வர ... மான்சி மெல்ல தலைகுனிந்தாள்...

“ அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி காதலுக்காக கற்பை பணயம் வைக்கலாம்னு சொல்றியா மான்சி? அப்போ உன் விஷயத்தில் கற்புன்னா என்ன? ” என்று புவனா கேட்க.....

மான்சி மட்டுமல்ல மற்ற பிள்ளைகளும் தாயின் ஆவேசப்பேச்சில் திகைத்துப் போய் அமர்ந்திருந்தனர்....

மான்சி தன் மானத்தையும் இழந்து... காதலனையும் இழந்து.. பெற்ற குழந்தையையும் இழந்து... கடைசியாக கழுத்துக்கு வரவேண்டிய தாலியையும் இழந்ததில் புவனாவுக்கு கடும் கோபம்... யோசித்துப்பார்க்கப் போனால் தன் வளர்ப்பு சரியில்லையோ என்ற வேதனை தான் அவளை இவ்வளவு பேசவைக்கிறது...

“ சொல்லு மான்சி கற்புக்கு உன்னோட விளக்கம் என்ன? கல்யாணத்துக்கு முன்னாடி காதலன் தொட்டா அது காதல்.... அதுவே இந்தமாதிரி ஒரு சூழ்நிலையில் நடந்தால் அதுக்குப் பேர் துரோகம்... இதுதானே உன் கருத்து?.... அப்போ உன் கற்புக்கு அளவுகோல் காதல் தானா? காதலைச்சொல்லி கற்பை எடுத்துக்கலாம்னா அப்புறம் ஏன்டி இந்த வேஷம்.... இப்போ நீ சத்யனுக்கு கொடுத்தது தண்டனை இல்லை ... உன்னோட பழிவாங்கும் வெறி.... மறுநாள் உன்னைப்பார்த்து அவர் ஏளனமா சிரிச்சாருன்னு சொன்னபாரு அதுக்காக பழிவாங்கனும்னு நீ நெனைச்சிருக்க.. இதுக்காக கற்பு மானம்னு வேஷம் போட்டு திருந்தி நல்லா வாழனும்னு நெனைச்ச ஒரு மனுஷனை தலைநிமிர முடியாம பண்ணிட்டயே ச்சே நான் வளர்த்த பெண்ணாடி நீ.... இதையெல்லாம் பார்க்கனும்.. அனுபவிக்கனும்னு என் விதி ” என்ற புவனா தன் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்க பிள்ளைகள் மூவரும் தாயைச் சுற்றி அமர்ந்துகொண்டு அவர்களும் அழுதார்கள்....

மான்சி தாயின் அருகில் போகவில்லை.... அம்மா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவள் செவிப்பறையில் மோதி கிழித்தது.... சத்யன் காதலோடு என்னை தொட்டிருந்தால் நான் கற்போடு இருப்பவள் என்று அர்த்தங்கொள்ள முடியுமா? அம்மா சொல்வது போல் ஒன்றுமில்லாத ஒரு விஷயத்துக்காக சத்யனை பழிவாங்கி விட்டேனா? இல்லையே அன்று இதெல்லாம் நடிப்பு என்று சத்யன் சொன்னபோது என் உடலெல்லாம் புழு ஊர்வதுபோல் துடித்தேனே அது பொய்யா? இல்லை இல்லை நான் கற்புக்கரசி மாதிரி வேஷமிடவில்லை ’ மான்சி ஆவேசமாக நிமிர்ந்தாள்.....

“ அம்மா நானா வேஷம் போடுறேன்னு சொல்ற... அன்னைக்கு நான் தவிச்ச தவிப்பு துடிச்சதெல்லாம் உனக்கெங்கே புரியப்போகிறது.... இப்போ இருகிற மான்சியைத்தான் நீ நெனைக்கிற... வயித்துல குழந்தையோடு அவமானப்பட்டு நின்ன மான்சியை உனக்கு தெரியாது” என்று ஆக்ரோஷத்துடன் பேசிய மகளை தடுத்த புவனா....

“ அவரோட குழந்தை வேனும்னு முடிவு பண்ணி சுமந்தது நீ.... அவர் நடிச்சு ஏமாத்தாம காதலிச்சு உன்னை தொட்டிருந்தாலும் இதே குழந்தை உருவாகியிருக்கும்... அப்போ மட்டும் அவமானப்பட்டிருக்க மாட்டியா மான்சி?” என்று கேட்க....

“ அவர் காதலிச்சிருந்தா அப்படி நடந்ததுக்குப் பிறகு என்னை கல்யாணம் பண்ணிகிட்டு இருந்திருப்பார்” என்று மான்சி கூற...

“ அப்போ உனக்கு அவரோட காதலும் கல்யாணமும் தான் பிரச்சனை? கற்பு ஒரு பிரச்சனை இல்லை?” என்றாள் தாய்....

மான்சி பதில் சொல்லமுடியாமல் விழிக்க.... பெற்றவளுக்கு மகளி் மேல் பரிதாபம் வந்தது... மெல்ல நகர்ந்து மகளருகே வந்தவள் அவள் தலையை இழுத்து தன் மடியில் சாய்த்து கூந்தலை கோதினாள்....

தன் மடியில் தன் கண்ணீரை கொட்டிய மான்சி “ அம்மா நான் சத்யனை பழிவாங்கனும்னு நெனைக்கலைம்மா.... அவர் எனக்கு செய்த கொடுமைக்கு தண்டனையா நான் அவரை பிரிஞ்சு வந்தேன்மா” என்று தன்நிலை விளக்கம் சொல்ல ...

இன்னும் மகளுக்கு வாழ்க்கை புரியவில்லையே என்ற வேதனையில் “ கண்ணம்மா நான் சொல்றதை கவனமா கேள்..... அவருக்கு தண்டனை கொடுக்க நீ பிரிஞ்சு வந்த சரி... அப்பவே காதலோட தொட்டிருந்தா இந்த தண்டனைக்கு அவசியம் இல்லைன்னு நீ நினைக்கிற சரியா?” என்று கேட்க... “ ஆமாம்” என்பதுபோல் தலையசைத்தாள் மகள்...

“ அப்படின்னா கற்புக்கு நீ தப்பாக அர்த்தம் பண்ணி வச்சிருக்க... அதுதான் உண்மை... மான்சி மகாபாரதத்துல.... புருஷனுக்கு கண் தெரியலைன்னு தன்னோட கடைசிகாலம் வரை கண்களை கட்டிக்கொண்டு வாழ்ந்த காந்தாரியும் இருக்காங்க..... தன்னோட பிள்ளைகள்ல ஒருத்தரைக் கூட தன் கணவனவனான பாண்டுவுக்கு பெறாத குந்திதேவியும் இருக்காங்க... ஆனா புராணங்கள் போற்றியது குந்தியைத்தான்... காந்தாரியை இல்லை.... மகாபாரதத்தில் ஐந்து கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதியும் தெய்வம்.... அதே புராணகாலத்தில் ஒருவனுக்கு ஒருத்தின்னு இராமயணத்தில் வாழ்ந்த சீதையும் தெய்வம்.... இராமயணத்தில் தன் மனைவியை சந்தேகப்பட்ட அதே ராமன் தான் கணவன் அல்லாத ஒருவனை நேசிச்ச அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தார்... அப்போ புராணகாலத்திலேயே கற்பு என்பது உடல் சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை.... மனம் சம்மந்தப்பட்ட விஷயம்னு சொல்லிருக்காங்க...... ஆமா மான்சி கற்பு உடலுக்கு இருக்குறது முக்கியமில்லை... மனசுக்குத்தான் கற்பு இருக்கனும்....” என்று புவனா விளக்கமாக மகளுக்கு எடுத்து சொல்ல... மான்சிக்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது.... 


“ இவன்தான் நமக்கு வாழ்க்கை... இவனுக்காக நான் எதையும் இழப்பேன்.. இவன் இல்லேன்னா எனக்கு எதுவுமில்லைன்னு தோனுது பாரு அதுதான் கற்பு... விதவையான லதாவுக்கு விக்டர் இரண்டாவது புருஷன் தான்... அதுக்காக லதா கற்பில்லாதவள்னு சொல்லமுடியுமா? இவர்களுக்கு கற்புங்கறது இவங்க ரெண்டு பேரோட புரிதல்தான்... சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு செய்தி.... புதுசா கல்யாணம் ஆன ஒரு பெண் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டாள்னு செய்தி... கணவன் தொடுறதுக்கு முன்னாடியே அந்த பொண்ணு கற்பிழந்துட்டான்னு அவளை கொன்னுட முடியுமா? என் மனைவியின் மனசை தான் நேசிக்கிறேன்... அவள் உடலை இல்லைன்னு சொல்லி அந்த கணவன் அவளை ஏத்துக்கிட்டான் பாரு அவனோட அந்த காதல்தான் அந்த பெண்ணோட கற்பு... அது கடைசிவரை அவர்களுக்குள் இருக்கும்....”

“ என்னை எடுத்துக்க... நானும் உன் அப்பாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு உனக்குத் தெரியும்... எங்க இரண்டு பேர் வீட்டுலயும் யாருமே கடைசிவரை எங்களை சேர்த்துக்கலை... நீங்கள்லாம் சின்ன பசங்களா இருக்கும் போதே உன் அப்பா இறந்துட்டார்... அன்னிலேருந்து இப்ப வரைக்கும் என்னை ஒழுக்கத்தோடு வழி நடத்துறது என்னோட கற்பு இல்லை.. உன் அப்பா மேல நான் வச்சிருக்குற காதல்தான்.... அது நான் சாகும்வரை என் கூட இருக்கும் மான்சி” என்று தாய் சொல்ல சொல்ல....

மான்சி தன் தாயின் மடியை தன் கண்ணீரால் நனைத்தாள்.... அவள் சத்யனுக்கு செய்த கொடுமையின் அளவின் விகிதம் அதிகமாவது போல் இருந்தது... காதலுக்கும் கற்புக்கும் சம்மந்தமில்லையோ... “ அப்படின்னா சத்யன் செய்தது நியாயம்னு சொல்றியாம்மா?” என்று அம்மாவிடம் கேட்டாள்...

“ நியாயம்னு நான் சொல்ல வரலை மான்சி.... அவர் பொய் சொல்லி நடிச்சது தப்புதான்... ஆனா அதுக்குப்பிறகு வாழ்ந்த சத்யனை நெனைச்சுப் பாரு... நீயில்லாமல் அவரால வாழமுடியாதுங்கற நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தின பாரு அதுதான் உன் கற்பு... எத்தனை தேசம் போனாலும் எனக்கு என் மான்சிதான் தான்னு அவரை தப்பு செய்யவிடாமல் இழுத்து வந்தது பார் அதுதான் உன் கற்பு... எத்தனை பெண்கள் இருந்தாலும் நீ மட்டும் தான் அவருக்கு வாழ்க்கைன்னு உணர வச்சப் பாரு அதுதான் உன் கற்பு.... காதலும் கல்யாணமும் வேனாம்னு சொன்னவரை காதலிக்க வச்சு... உனக்காக அழுது துடிக்க வச்சு... கல்யாணம் வரை கொண்டு வந்து நிக்கவச்சதே அதுதான் உன் கற்பு... யாராலும் திருந்தா ஒருத்தரை திருத்தி நல்வழிப்படுத்திருக்குப் பாரு ... அந்த இடத்தில் தான் உன் கற்பு ஜெயிச்சது... இது உனக்கு வெற்றி மான்சி... நீ நெனைச்சுப்பார்த்து கண்ணீர் விடும் அளவுக்கு இது பாதகமான செயல் இல்லை...”

“ இப்போ உன் விஷயத்தையே எடுத்துக்க... உன்னை உன் பழைய முதலாளிகள் நாசம் பண்ணிருந்து அந்த சூழ்நிலையில் சத்யன் உன்னை காப்பாத்தியிருந்தாலும் நாளடைவில் சத்யன் உன்னை உயிரா விரும்பித்தான் கல்யாணம் பண்ணிருப்பார்... ஏன்னா அவரை கவர்ந்தது கண்ணுக்கு தெரியாத உன்னோட கற்பு இல்லை... அவர் கண்ணுக்கு தெரிஞ்ச நீயும் உன்னுடைய நல்ல குணங்களும் தான்... கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் சமமானது தான்... ஆனா அது உடலில்லை மான்சி... இல்லை ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ நினைக்கும் மனசுல தான் கண்ணம்மா இருக்கு... அப்படிப்பார்த்தா சத்யனும் நீயும் கற்புடையவங்க தான்... எல்லாவகையிலும் சிறந்தவங்க தான்... அவர் ஏமாத்தினார்னா அப்போ அவர் தன் காதலை உணரலை... உணர்ந்த பிறகு அவரை வழி நடத்துச்சு பாரு கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்னு?.... அதுதான் மான்சி உன்னோட கற்பு ” அவ்வளவு தான் என்பது போல் மகளின் தலையை கோதியவாறு அமைதியானாள் அந்த ஏழைத் தாய் ....

மான்சியின் கண்ணீர் முன்பைவிட அளவில்லாமல் கொட்டியது... தாயின் இடுப்பை கைகளால் சுற்றி வளைத்துக்கொண்டு துடித்துத் துடித்து அழ ஆரம்பித்தாள்....

இந்த்ர் எழுந்துபோய் ஒரு பாத்திரத்தில் கஞ்சியை ஊற்றி எடுத்து வந்து அம்மாவின் எதிரில் வைத்துவிட்டு “ அக்கா எழுந்து சாப்பிடுக்கா” என்றான் கண்ணீர் குரலில்...

மான்சி நிமிர்ந்து தம்பியைப் பார்க்க.... “ ஸாரிக்கா... இனிமேல் அந்த மாதிரி பேசமாட்டேன் ப்ளீஸ் சாப்பிடுக்கா” என்றவன் கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சொட்ட...

தாயின் மடியில் இருந்து எழுந்து “ இந்த்ர்” என்று தம்பியின் கையைப் பற்றிக்கொண்டாள்... அவ்வளவுதான் பதினெட்டு வயது இந்த்ர் உடைந்து போனான் “ என்னை மன்னிச்சிடுக்கா... இனிமேல் அதுபோல பேசமாட்டேன்... மாமா ரொம்ப நல்லவருக்கா... அதனாலதான் எனக்கு கோபம் வந்துடுச்சு... ஸாரிக்கா” என்று ஆயிரம் முறை மன்னிப்பை வேண்டினான்...

“ பரவாயில்லடா தம்பி உன் அக்காவை தானே பேசினே.... அழாதேடா” என்று தம்பியை சமாதானம் செய்தாள்...

ஒருவழியாக எல்லோரும் சமாதானமாகி பிள்ளைகளுக்கு சாப்பிடக் கொடுத்து விட்டு புவனாவும் சாப்பிட்டு படுக்கும்போது இரவு மணி 11 ஆகியிருந்தது...
அர்ச்சனாவும் ஆர்த்தியும் உள் அறையில் படுத்துக்கொள்ள... இந்த்ர் வெளி வராண்டாவில் போய் படுத்துக்கொண்டான்... புவனா கூடத்தின் ஒரு மூலையில் படுக்க.. மான்சி தன் தாயின் அருகில் அணைத்தார் போல் படுத்துக்கொண்டாள்... எதைஎதையோ நினைத்து கண்ணீர் சொரிந்த மகளை வருடி தூங்க வைத்தாள் அம்மா

மறுநாளில் இருந்து மான்சியால் யாருடனும் சகஜமாக பழக முடியவில்லை... சத்யனை புரிந்துகொள்ளாமல் அவனை தண்டித்தது அவளை வதைத்தது.... யாரிடமும் பேசாமல் முடங்கினாள்....

நெஞ்சு கடுத்து பால் தானாக வெளியேறும் போதெல்லாம் மகளை நினைத்து சத்தமில்லாமல் கதறினாள் மான்சி... பால் சேர்ந்து கட்டிக்கொண்டு போது பாத்ரூமுக்கு சென்று அதை பீய்ச்சி வெளியேற்றும் போது பெற்ற மகளை எண்ணி மான்சியின் வயிறு காந்தியது....

சத்யனைப் பற்றி எண்ணும்போதெல்லாம் தலையணை அவளுக்கு துணையாயிற்று.... எனக்கு முத்தமிடாமல் அவனுக்கு உறக்கம் பிடிக்காதே? இப்போது என்ன செய்கிறானோ என்று எண்ணும்போது தவிப்பில் நெஞ்சு விம்மி தனிந்தது.... ஒவ்வொரு விநாடியையும் சத்யனின் நினைப்போடு கழித்தவள்

இவ்வளவு அவமானப் படுத்திட்டேனே என்னை மன்னிப்பானா? என்று நெஞ்சு குமுறும்.... என்னை கைவிட்டு விடுவானா? என்று எண்ணும்போதே உடல் நடுங்கிப்போகும்... ஆனால் அது அவனால் முடியாது என்று அவளுக்கும் தெரியும்... இருந்தாலும் தவறிழைத்த உள்ளம் கண்டதை எண்ணி நொந்தது...

தனிமையில் இருக்கும் மகளை எதற்காகவும் தேடவில்லை புவனா... அவள் யோசிக்க வேண்டும்... தன் வாழ்க்கைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று எண்ணிய புவனா அவளை யாரும் தொந்தரவு செய்யாமல் தனியாக விடும்படி மற்ற பிள்ளைகளிடம் கூறினாள்.... மகள் தெளிவாள் என்ற நம்பிக்கை புவனாவுக்கு இருந்தது... இந்த தனிமை அவளுக்கு தன்னை உணர்த்தும் என்று நம்பினாள் தாய்

அக்கம்பக்கம் கேட்பவர்களுக்கு எதைஎதையோ சொல்லி சமாளித்தாள்... புவனா
விடுமுறை முடிவதற்குள் அர்ச்சனாவின் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று ரவி வீட்டார் வற்புறுத்தினார்கள்... புவனா இந்த்ருடன் அர்ச்சனாவின் கல்யாண ஏற்பாடுகள் சம்மந்தமாக அலைய ஆரம்பித்தாள்...

மகளை சத்யன் உயிராக பார்த்துக்கொள்வான் என்ற நிலையில்.... மான்சியின் சிந்தனைகள் மொத்தமும் சத்யன் தான் ஆக்ரமித்தான்.... அவனிடம் முன்பு தெரியாத நல்லவைகளை எல்லாம் இப்போது தேடித்தேடி சேகரித்தது மான்சியின் மனது.... அவன் கூறிய காதல் மொழிகளை எல்லாம் தன் இதயத்தில் கல்வெட்டுகளாக மாற்றினாள்...

விரலில் கிடந்த மோதிரத்தை பார்த்துப் பார்த்து கண்ணீர் விட்டாள்.... எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த அவளால் இந்த மோதிரத்தை மட்டும் விட முடியவில்லை.... சத்யன் முதன்முதலாக தன் காதலைச்சொல்லி அணிவித்த மோதிரமல்லவா? தன் உயிர் பிரியும்போதுதான் அதை பிரியவேண்டும் என்று எண்ணித்தான் கொடுக்கவில்லை...

ஒருநாள் யாருமில்லாத போது மான்சியின் அருகில் அமர்ந்த இந்த்ர்... “ அக்கா உனக்கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்க்கா” என்று பயந்து பயந்து ஆரம்பித்தான்.....

ஏற்கனவே நொந்து போயிருந்த மான்சி பதறிப்போய் “ என்னடா? எதை மறைச்ச?” என்று கேட்க...

மெல்ல தயங்கி தயங்கி ஆரம்பித்தான் இந்த்ர் “ போன வருஷம் காலேஜ்க்கு பீஸ் கட்ட நீ மாமாகிட்ட கடன் வாங்கி அனுப்புனேல்ல.... நான்கூட எனக்கு ஒரு ஸ்பான்சர் பணம் கட்டிட்டாருன்னு சொல்லி அந்த பணத்தை திருப்பி அனுப்பி வச்சேனே” என்று கேட்க

“ ஆமா... அதனால இப்போ என்னாச்சு “ என்று தலையசைத்து தம்பியை குழப்பமாகப் பார்த்தாள்

“ அந்த ஸ்பான்சர் வேற யாரும் இல்லக்கா... சத்யன் மாமாதான்” என்று இந்த்ர் கூறியதும் மான்சி அதிர்ச்சியுடன் “ என்னடா சொல்ற? ” என்று கூவினாள்

“ ஆமாக்கா.... எனக்கு போன வருஷம் படிப்புக்கு ஹெல்ப் பண்ணப்ப... நான் என் காலேஜ் ப்யூன் கிட்ட கெஞ்சி அந்த ஸ்பான்சரோட போன் நம்பர் வாங்கி அவருக்கு தாங்க்ஸ் சொல்ல கால் பண்ணேன்... அப்போ எடுத்து பேசின மாமா... இனிமேல் கால் பண்ணக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு...எனக்கு அப்போ அவரு யாருன்னு தெரியாது... ஆனா விக்டர் அண்ணா கல்யாணத்துக்கு வந்தப்ப அண்ணாவோட செல்லை நான் எடுத்து உனக்கு போன் பண்ணும் போதுதான் மாமாவோட நம்பரைப் பார்த்தேன்... எனக்கு அந்த நம்பர் மனப்பாடமா மனசுல இருந்தது... என்னோட ஸ்பான்சர் மாமா தான்னு தெரிஞ்சது... அவர் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொன்னதால நான் இதைப்பத்தி யார்கிட்டயும் சொல்லலக்கா” என்று இந்த்ர் சொல்ல...

மான்சி சோர்வுடன் சுவற்றில் சாய்ந்தாள்.... அப்போ என் குடும்பத்தை வச்சு மிரட்டிணதும் பொய்யா? இந்த பக்கம் உதவி பண்ணிட்டு அந்த பக்கம் உண்மையை மறைச்சு என்கிட்ட விளையாடிருக்கான்... இவன் எனக்காக இன்னும் என்னவெல்லாம் செய்திருக்கானோ தெரியலையே?’



“ இப்பகூட இதை சொல்லிருக்க மாட்டேன்... இவ்வளவு பிரச்சனைக்குப் பிறகு மாமா எனக்கு பீஸ் கட்டமாட்டார்னு நெனைச்சு.. இந்த வருஷ பீஸ் எவ்வளவுன்னு கேட்டுட்டு வரலாம்னு இன்னிக்கு காலேஜ் போனேன்... ஆனா மாமா மூனு நாளைக்கு முன்னாடியே பீஸ் கட்டிட்டாருன்னு சொன்னாங்க... அதான் உன்கிட்ட சொல்லனும்னு வந்தேன் ” என்று இந்த்ர் கூறிவிட்டு எழுந்து போக...

மான்சி முழங்காலை கட்டிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்... இவ்வளவுக்குப் பிறகும் மறக்காமல் பணம் கட்டிய சத்யனை எண்ணி என் புருஷன் என்று கர்வத்தில் அவள் நெஞ்சு நிமிர்ந்தது.... அவன் தரப்பு நியாயங்கள் ஏறிக்கொண்டே போக இவள் தரப்பு இறங்கிக்கொன்டே போனது....

ரவி அர்ச்சனா திருமண நாள் நெருங்கியது.... விக்டர் டாப்சிலிப்பில் இருந்தபடியே புவனாவிடம் கல்யாண வேலைகள் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டான்.... ஆனால் மான்சியுடன் ஒரு முறைகூட பேசவில்லை... விக்டர் மட்டுமல்ல தினா லதா கூட பேசவில்லை.... மான்சி குற்றவுணர்வில் உருக்குலைந்தாள்

அர்ச்சனாவின் திருமணத்திற்கு சத்யன் வருகிறான் என்ற தகவல் அர்ச்சனா மூலமாக மான்சிக்கு தெரிந்தபோது... அவனை எதிர்கொள்ளும் சக்தி தனக்கில்லை என்று திருமணத்திற்கே வர மறுத்து வீட்டிலேயே முடங்கியவளை புவனா வற்புறுத்தி அழைத்துச்சென்றாள்..

திருமணத்திற்காக அமர்த்தப்பட்ட தனி பேருந்தில் எல்லோரும் ரவி அர்ச்சனா திருமணத்திற்கு சென்னைக்கு பயணமானார்கள்....

“ கங்கை எப்போதும் காய்வதில்லை...

“ காதல் எப்போதும் தோற்பதில்லை...


No comments:

Post a Comment