Monday, August 10, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 10

மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு திரும்பிய ஸ்வேதாவை பார்த்து, முதலில் அவள் அப்பா பேச ஆரம்பித்தார்.

"என்ன ஸ்வேதா, என் கிட்ட பேசி நிறைய நாள் ஆச்சு. பிரகாஷ் உன் கிட்ட ஏதாவது பேசினானா?.அவனோட பாமிலி எங்களுக்கு நல்லா தெரியும். சீக்கிரம் பேசிட்டா நல்லது. உன் கல்யாணத்தை தள்ளி போட வேணாம்னு பார்க்கிறேன்" என்று சொல்ல, ஸ்வேதா என்ன பதில் சொல்வது என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

"என்னடி,ஏதோ அவன் கூட பேசணும், பழகனும்னு சொன்ன என்ன ஆச்சு. உனக்கு அவனை பிடிசுருக்கன்னு சொல்லு, அப்பா கேக்குறார் இல்ல", என்று அம்மா தொடர

"அம்மா, அப்பா நான் இப்போ ஒரு விஷயம் சொல்ல போறேன் நீங்க கேட்டு அதிர்ச்சி அடைய கூடாது".
ஸ்வேதா அப்பா கேள்வி குறியுடன் பார்க்க
"அப்பா நான் என் ஆபீஸ்ல வேலை பார்க்கிற கிருஷ்ண குமாரை மனப்பூர்வமா விரும்புறேன். அவருக்கும் என்னை பிடிச்சு இருக்கு.சொந்த ஊரு மதுரை.எங்க கம்பெனில CEO-வா இருக்காரு. கம்பெனி சேர்மனுக்கு அடுத்த powerful போஸ்ட். எல்லாத்துக்கும் மேல அவருக்கு என் மேல உயிர். அவரை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்" என்று சொல்ல,
அம்மா கோபம் அடைந்தாள். "என்னடி உங்க அப்பா ஏற்கனவே பிரகாஷ் அப்பாகிட்ட பேசிட்டாரு. நீ தான் பழகனும்னு சொன்னதால,நாங்க இது வரைக்கும் காத்து இருந்தோம். இப்போ திடீர்னு இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டா எப்படி."
"அதுக்காக எல்லாம் நான் அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது. உனக்கு பிடிச்சா நீ வேணா அவனை கல்யாணம் பண்ணிக்கோ

"
"என்னடி கிண்டலா, ஓங்கி அறஞ்சேன்னா, அப்படியே உன் கன்னம் ரெண்டும் வீங்கிடும்" என்று சொல்லிக் கொண்டு கையை ஒங்க, அப்பா தடுத்தார்.
"வளர்ந்த பிள்ளைகளை அடிக்க கூடாது. அவதான் வாழ்க்கை நடத்த போறா? இப்போ என்ன அந்த பையனை பத்தி தெரியனும் அவ்வளவு தானே, நான் விசாரிக்க சொல்றேன். ஸ்வேதா பையனை பத்தி மத்த details கொடு, என்னோட நண்பர்கள் மூலமா நான் விசாரிச்சு சொல்றேன். அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்."

"நாங்க மங்களூர் வீட்டை விட்டு பத்து நாளுக்கு மேல் ஆய்டுச்சு. இன்னைக்கு ராத்திரி ட்ரெயின்ல கிளம்புரோம். ஒரு வாரம் கழிச்சு வந்து ஒரு பத்து நாள் இருந்துட்டு போறேம்.அப்போ அந்த கிருஷ்ணாவை வந்து எங்களை மீட் பண்ண சொல்லு."
"ஏன் அப்பா நான் ஒரே பொண்ணு தானே. நீங்க இந்த வீட்ல இருக்க கூடாதா."

"நீ சொல்றது வாஸ்தவம்தான். ஆனா கல்யாணம் ஆன பின்னாடி நீ உன் புருஷன் வீட்டுக்கு போய்டுவே.அதுக்கு அப்புறம் நாங்க மங்களூர் வீட்டுக்குதான போகணும். எப்படியும் திரும்ப வர தானே போறோம். கவலை படாதே"
"சரி அப்பா" என்று ஸ்வேதா தலை ஆட்ட

"இன்னும் ஒரு மணி நேரத்தில் கால் டாக்ஸி வந்துடும்" என்று சொல்லி ஸ்வேதா அம்மா, அப்பாவுடன், இருவரும் மங்களூர் ட்ரெயினுக்கு கிளம்பினர்.
ஸ்வேதாவை திரும்ப தனிமை சூழ்ந்தது.

காலை ஆபீஸ் வந்ததுமுதல் கிருஷ்ணாவை பார்க்க முடியவில்லை. ஏதோ மீட்டிங் என்று அவசரமாக ஹோட்டல் தாஜ் சென்று விட்டதால், ஸ்வேதாவுக்கு பொழுது போகவில்லை. மதியம் lunch-க்கு வருவதாக சொல்லி இருந்ததால், அவனுக்கும் சேர்த்து சாப்பாடு செய்து கொண்டு வந்து இருந்தாள். கேபினில் தனியாகவும் இருக்க போர் அடித்ததால் சரி ஹரி இடமாவது பேசி வரலாம் என்று ஹரியின் கேபினுக்கு சென்றாள்.

"வா ஸ்வேதா என்ன இப்போவெல்லாம் எங்களோட பேச டைம் இருக்குதா?" என்று ஹரி கிண்டலுடன் கேட்க

"இந்த கிண்டல்தான வேண்டாம்னு சொல்றது. ஆமா உங்க கல்யாண விஷயமா கிருஷ்ணாகிட்ட சொல்லிட்டின்களா?"

"எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு, கொஞ்சம் குழப்பமாவும் இருக்கு. ஏன்டா உன்னை நண்பன்னு சொல்லி தானே பழக விட்டேன். என் தங்கை கிட்டே உன் வேலையை காமிச்சுடியா அப்படின்னு அவன் கேட்டா என்னால தாங்க முடியாது"
"சரி ஹரி, நான் வேணா அவர்கிட்ட lunch time ல பேசட்டுமா?" என்று கேட்க

ஹரி முகம் மலர்ச்சி கண்டது. ஆமா நல்ல யோசனைதான். நீ அவன் கிட்ட பேச்சு வாக்கில கேட்டு பாரு. ஆமா உன் விஷயம் என்ன ஆச்சு?".
"அம்மாதான் முரண்டு பிடிக்கிறாங்க. அப்பா கிருஷ்ணாவை பத்தி விபரம் சொல்லு, நான் விசாரிக்கிறேன்னு சொல்றாரு. KK கிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசணும்."

"உங்க விஷயம் KK ஒத்து கிட்டா அடுத்து என்ன செய்ய போறதா உத்தேசம்."
"அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வைக்கணும், அப்புறம் கலா அம்மா, அப்பா கிட்ட பேசணும்" என்று சொல்ல, அப்படின்னா "ஹரிக்கு கல்யாண களை வந்துடுச்சுன்னு சொல்லலாமா?" என்று கேட்டாள்.

பிறகு admin section சென்று கொஞ்ச நேரம் பேசி விட்டு, மெயில் செக் செய்யலாம் என்று கேபினுக்கு வந்து வேலை செய்ய நேரம் போனது தெரியவில்லை. கடிகாரத்தை பார்க்க, நேரம் ரெண்டு மணி, 'ஐயோ tine ஆச்சே. இன்னும் KKவை காணவில்லையே" என்று கவலையில் கன்னத்தில் கை வைத்து யோசிக்க, அவள் கண்களை இரண்டு கைகள் மூடின.

"ஏய் KK. எப்ப வந்திங்க" என்று சிணுங்க

"ஸ்வேதா நீ சாப்பிட்டியா."
"இல்லை உங்களுக்காக வெயிட்டிங்.""ஆஹா,client கூட சாப்பிட்டேன்" என்று கிருஷ்ணா நாக்கை கடித்து கொண்டே கையை உதற

எடுத்த hot pack -கை திரும்ப வைத்தாள்.
"ஸ்வேதா நீ சாப்பிடு" என்று சொல்ல, "இல்லை. எனக்கு பசி இல்லை"

"இப்போ தானே சாப்பிடலைன்னு சொன்ன, பசிக்குமே, நான் வேணா சாப்பாடு போடட்டுமா?"

"நீங்க தானே லஞ்ச் சாப்பிட வரேன் சொல்லி SMS பன்னுனிங்க. நான் காலைல சீக்கிரம் எழுந்து உங்களுக்காக சாப்பாடு செஞ்சு கொண்டு வந்தா, நீங்க இப்படிவெளியில சாப்பிட்டு வந்துட்டிங்க"
அவள் கோபத்தில் பேசுவதை கண்டு கிருஷ்ணாவுக்கு சிரிப்பு வந்தது
"என்னோட தேவதைக்கு என்ன கோபமோ, சரி சாப்பிடலாம்."

"யாரும் எனக்கு பரிதாபப்பட்டு சாப்பிட வேண்டாம். "

"இல்லைடா, நான் சும்மா சொன்னேன். உன்னை சீண்டி பார்க்கனும்னுதான் அப்படி சொன்னேன்.வா சாப்பிடலாம். எனக்கு பசிக்குது"என்று சொல்ல
"உண்மைல பசிக்குதா"

"உனக்கு சந்தேகம் இருந்தா என்னோட வயிற்றை தொட்டு பாரு கடபுட சத்தம் கேட்கும்" என்று சொல்ல, அடக்க முடியாமல் சிரித்தாள்
Hot pack எடுத்து அவள் எடுத்து வைத்த சாப்பாட்டை கண்டு அசந்து போனான். அனைத்தும் செட்டி நாட்டு வகைகள்.
"ஸ்வேதா, உனக்கு எப்படி இந்த சமையல் தெரியும். எங்க அம்மா தான் இந்த சமையல்ல expert. நான் பெங்களூர்ல பல இடங்களில் தேடி பார்த்தேன். எங்கயும் கிடைக்கல. ஆமா முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு".
"சாருக்கு இப்போ பதில் வேணுமா, இல்லை சாப்பாடு வேணுமா" என்று கேட்க
"முதல்ல சாப்பாடு" என்று அவளிடம் சரணடைந்தான்.அவன் செய்து கொண்டு வந்த சாதத்துடன், கோழி ரசம், முட்டை மாஸ், கோழி வறுவல், நெத்திலி மீன் குழம்பு என்று சாப்பாடு இருக்க
"ஸ்வேதா என்னை சாப்பாட்டு ராமன் ஆக்குறதா உத்தேசமா?"என்று வயிற்றை தடவியப்படி கேட்டு, "கல்யாணத்துக்கு அப்புறம் உன் கிட்ட ரொம்ப கேர்புல்லா இருக்கணும். இல்லைனா என்னை நல்ல சாப்பாடு போட்டே குண்டாக்கிடுவ".
"ஆமா உன்னோட தட்டுல ஒன்னதையும் காணோம். பாதி சாப்பாடு உள்ளேபோன பிறகு அவன் கேட்க
"நீங்க முதல்ல சாப்பிடுங்க" என்று அவனுக்கு சாப்பாடு போட "நல்ல பசி" என்று சொல்லி கொண்டே அந்த செட்டி நாடு சாப்பாடு வகைகளை ஒரு கட்டு கட்டினான்.
கை கழுவி விட்டு வந்த கிருஷ்ணா, ஸ்வேதாவை பார்த்து கத்த ஆரம்பித்தான்.
"ஏன் ஸ்வேதா இப்படி பண்ணுற, நீ படிச்ச பொண்ணு தானே, உனக்கு அறிவு இல்லை" என்று திட்ட ஆரம்பிக்க

"சத்தம் போடாதிங்க இப்போ என்ன இங்க கொலையா நடந்து போச்சு"என்று வாயில் பாதி வைத்த சாதத்தை முழுங்கியபடி கேட்க

கிருஷ்ணா முகம் மாறி போனது. அவள் அருகில் உட்கார்ந்து அவள் தோளில் கை வைத்து "ஏன் கண்ணா இப்படி பண்ணுற,என்னோட எச்சிதட்டுல நீ சாப்பிடலாமா"

"நான் செஞ்சது தப்பு இல்லை. என்னோட புருஷனோட தட்டுல தான் சாப்பிடுறேன்"

"இது எச்சி தட்டு இல்லையா? நீ படிச்ச பொண்ணு, இப்படியா பட்டி காட்டுமிராண்டி தனமா நடந்துக்குவ"

"இதுக்கும் படிக்கும் சம்பந்தம் இல்லை. நான் பிறந்து வளர்ந்தது மதுரை. அதுனால எனக்கு அந்த மண்ணின் மணம்தான் இருக்கு".
அவன் பேச முடியாமல் விக்கித்து நின்றான். "நீங்க உட்காருங்க" என்று சொல்லி அவனை இழுத்து அருகில் உட்கார வைக்க,கண்கள் சிவந்து இருந்தன.
"என்ன KK இன்னும் கோவமா என் கூட", என்று கெஞ்சி கேட்க,
"உன் மேல என்னால கோபப்பட முடியாது. ஏதாவது பதில் சொல்லி என் வாயை அடைச்சுடுறற".
"சாப்பாடை பத்தி நீங்க கேட்ட கேள்விக்கு நான் ஒண்ணும் பதில் சொல்லலையே" என்று கேட்க
"நான் மறந்தே போய்ட்டேன். சொல்லு எப்படி இந்த அளவுக்கு வெரைட்டியா பண்ணுனே. என் அம்மா சமையலுக்கு அப்புறம் இந்த அளவு டேஸ்ட்டான சாப்பாடு நான் எங்கயும் சாப்பிட்டதில்லை"

அதற்குள் சாப்பாட்டு முடித்த ஸ்வேதா, "நான் மதுரைல இருந்த ரெண்டு நாளும் உங்க அம்மா கிட்ட உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு, அதை செய்யுற விஷயம் எல்லாம் நோட் பண்ணிட்டு வந்துட்டேன். உங்க அம்மாவுக்கு நம்மளோட காதல் தெரிஞ்சு போச்சு.அவங்க வாய் திறந்து பேசாட்டினாலும் புரிஞ்சுகிட்டாங்க".

கை கழுவி விட்டு திரும்ப வந்த ஸ்வேதாவை ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டு இருந்தான். சில நாட்களுக்கு முன்னால், "இவள் தோழியா இல்லை காதலியா" என்று தெரியாமல் தவித்தான்.இன்றோ அவள் அவன் மனைவியாக நடந்து கொள்கிறாள். அவளோட இந்த அபரிதமான அன்பை நினைத்து சந்தோசபடுவதா இல்லை பயப்படுவதா என்று புரியவில்லை.
'தன்னை பற்றிய உண்மை தெரிந்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும், சொல்லாமல் விட்டால் நம்பிக்கை துரோகம்.என்ன சொல்வது' என்று புரியாமல் குழம்பி இருக்க, ஸ்வேதா அவனை பார்த்து "என்ன KK பலத்த யோசனைல இருக்கீங்க" என்று அவன் தோளை தொட, நினைவுக்கு வந்தான்
சட்டென்று சமாளித்து கொண்டு "ஒண்ணுமில்லை இன்னைக்கு நடந்த client மீட்டிங் பற்றி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன்".
"ஏதாவது பிரச்சனையா."

"நான் மீட் பண்ணின கிளைன்ட்தமிழ் நாட்டின் பெரிய பில்டர்ஸ்ல ஒருத்தர்.சென்னை கிட்ட ஒரகடம் ன்னு ஒரு இடம் இருக்கு அங்கே பத்து அடுக்கு மாடிகள் கொண்ட எட்டு towers வருது. அந்த எல்லா பில்டிங்க்கும் Solar Panel போடுறதா இருக்காங்க. அதை நாம தான் சப்ளை பண்ண போறோம்."



"சந்தோசமா விஷயம் தானே இதுக்கு எதுக்கு யோசிக்கிறிங்க"

"முதல் டவருக்கு சப்ளை பண்ண நமக்கு இரண்டு மாதம் ஆகும் அவங்க ஒரு மாசத்ல கேக்குறாங்க. எப்படி பன்னுரதுன்னுதான் தெரியல."

"இதுல என்ன குழம்புறதுக்கு இருக்கு.நான் கேக்குற சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.இப்போ இருக்குற ஆட்களை வைத்து வேலை செய்ய ரெண்டு மாசம் ஆகும் சரியா?"

"ஆமா?"

"புதுசா வேலைக்கு சேந்தவங்களை சேர்த்திதிங்கலா."

"இல்லை அவங்க எல்லாம் சேர்ந்து ரெண்டு மாசம் தானே ஆகுது."

"சரி ஒண்ணு பண்ணுங்க. இப்போ வேலைக்கு இருக்கிற நிரந்தர தொழிலாளர்களை over time கொடுத்து வேலை செய்ய சொல்லுங்க. டாப் 10% employees அனைவருக்கும் promotion கொடுக்குறதா அறிவிப்பு கொடுங்க. அவங்களுக்குள்ள நல்ல போட்டி இருக்கும். production அதிகமாகும்.பிறகு நம்ம கம்பனில இருக்குற senior technicians பத்து-இருவது பேரை தேர்ந்தெடுத்து, புதுசா வேலைக்கு வந்துருக்க எல்லாருக்கும் ட்ரைனிங் கொடுக்க சொல்லுங்க, ஒரு மாதம் ட்ரைனிங் முடிஞ்சவுடனே, அவங்களை கன்பார்ம் பண்ணுங்க. அவங்களும் நல்ல வேலை பார்ப்பாங்க.சீனியர் technicians எல்லோருக்கும் increment கொடுங்க."

"நீ சொல்றது நல்ல யோசனை தான். நான் சேர்மன் கிட்ட பேசி பார்க்கிறேன்."

"ஆமா இப்போ சொல்லு, நேத்து வீட்டில பேசுனியா"

"சொல்ல வந்ததை மறந்துட்டு என்ன என்னமோ பேசிகிட்டு இருக்கேன். அப்பா உங்களை பற்றிய details கேட்டார். அம்மாதான் கொஞ்சம் கோபமா இருக்காங்க. நான் ரெண்டு பேரையும் சரி பண்ணிடுவேன். நேத்து அவங்க ரெண்டு பேரும் கிளம்பி மங்களூர் போய்ட்டாங்க.அடுத்த வாரம் திரும்ப வருவாங்க. அப்போ நான் ரெண்டு பேரையும் மீட் பண்ண கூட்டிட்டு போறேன்."

"ஒருவேளைஉங்க அம்மா அப்பாவுக்கு என்னை பிடிக்கலைனா."

அவன் கன்னத்தை பிடிச்சு, "இந்த செல்ல கண்ணனை யாருக்குதான் பிடிக்காது....பிடிக்க வைப்பேன் " என்று அழுத்தமாக சொல்ல அசந்து போனான்

"சரி கலா விஷயமா என்ன முடிவு பண்ணிருக்கிங்க."

"எந்த விஷயம். கலா ஹரி கல்யாண விஷயமா"

"ஆமா, நீங்க முதல்ல ஹரி கிட்ட பேசுங்க. ரெண்டு குடும்பத்தையும் சந்திக்க வைங்க. மற்ற விஷயங்களை கலா பாத்துக்குவா. அவ உங்களை மாதிரி கிடையாது, smart"என்று சொல்ல
"அப்படின்னா என்னை பார்த்தா இளிச்சவாயன் மாதிரி தெரியுது, அப்படிதானே" என்று கேட்க, "நான் ஒண்ணும் அப்படி சொல்லல,உங்க தங்கையோட ஒப்பிட்டு பார்த்தா உங்களுக்கு விபரம் இல்லைன்னு தோணுது."

"ஓ அப்படியா. இந்த விபரம் இல்லாத பையன் செய்ய போற விபரமான விஷயத்தை இப்போ பாரு" என்று சொல்லி அவளை இழுத்து இதழில் முத்தம் கொடுக்க, கதவை திறந்து கொண்டு ஹரி.
"கருமம் கருமம், டேய் இது ஆபீஸ்ஸா, இல்லை பார்க்கா பீச்சா, எனக்கு சந்தேகமா இருக்கு".

"ஏம்மா நீயாவது சொல்லலாமே", என்று ஹரி கேட்க

அவன் உதடுகளில் இருந்து தன் உதடுகளை அவசரமாக விடுவித்த ஸ்வேதா "நான் சொன்னா உங்க நண்பர் எங்க கேக்குறார்" என்று கிண்டல் செய்ய, கிருஷ் அசடு வழிந்தான்.

"சரி ரொம்ப வழியுது, தொடச்சுகிட்டு வா, சேர்மன் இன்னும் ஒரு மணி நேரத்ல ஆபீஸ் வந்திடுவார். நம்ம ரெண்டு பேரையும் நாலு மணிக்கு அவர் கேபினுக்கு வர சொன்னார்" என்று சொல்லி விட்டு ஹரி திரும்பி செல்ல,

ஸ்வேதா "முதல்ல நீங்க ஹரி கிட்ட கலா விஷயமா பேசுங்க. ஒகேன்னா சேர்மனை சந்திக்கும்போதே இந்த கல்யாண விஷயத்தை ஆரம்பிச்சுடலாம். ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கங்க, கலா கல்யாணம் தான் முதல்ல. சரி இப்போதைக்கு கிளம்புங்க" என்று சொல்லி, அவன் முதுகில் கை வைத்து செல்லமாக தள்ள, கிருஷ்ணா ஹரி கேபினுக்கு வந்தான்.

"வாடா மாப்பிளை. உன்னோட காதல் நாடகம் முடிஞ்சுதா. இல்லை இன்னும் இருக்கா?"என்று கேட்க

"நீ வேறடா. சும்மா ஒரு கிஸ் பண்ணலாம்னு போனேன். சிவா பூஜைல கரடி மாதிரி நீ புகுந்துட்ட."

"ஆமாண்டா, இல்லைனா நீ முதல் இரவை இந்த ஆபீஸ்லயே முடிச்சுடுவ" என்று சொல்ல,

"சரி கிண்டல் இருக்கட்டும். நான் கேக்குற கேள்விக்கு உண்மையா பதில் சொல்லு."

"என்னடா பீடிகை அதிகமா இருக்கு. சரி கேளு"

"நீ கலாவை காதலிக்குராயா? அவளை கல்யாணம் செய்துக்க இஷ்டமா?" கிருஷ்ணா அவன் கண்களை பார்த்து கேட்க தடுமாறினான் ஹரி

"உண்மை தாண்டா நான் கலாவை காதலிக்கிறேன். கல்யாணம் செய்துக்க ஆசைபடுகிறேன். நீ என்ன தான் என் உயிர் நண்பணா இருந்தாலும், இது நட்புக்கு செய்ற துரோகம் மாதிரி எனக்கு தோனுச்சு. அதுனாலதான் இது வரைக்கும் நான் உன் கிட்ட பேசலை.தவறு இருந்தா என்னை மன்னிச்சுடு நண்பா."

அவனை கட்டி அணைத்து கொண்டான்"டேய் உன்னை விட ஒரு நல்ல மாப்பிளை அவளுக்கு கிடைக்க மாட்டாடா. நாம நாலு மணிக்கு சேர்மனை, பார்க்கும் போது அவர் கிட்ட பேசிடலாம். பிறகு என் வீட்டில நான் பேசுறேன்" என்று சொல்ல, "நன்பேண்டா"என்று கட்டி கொண்டான் ஹரி.

நாலு மணிக்கு நடந்த மீட்டிங்கில் ஸ்வேதா சொன்ன யோசனையை கிருஷ்ணா சொல்ல, நல்ல யோசனை, என்று பாராட்டி சில மாறுதல்களை சொல்லி உடனே அமல்படுத்தினார்.

"கிருஷ்ணா நாளை மறுநாள் டெல்லில Ministry of New and Renewable Energy மூலமா ஒரு conference நடக்குது. நான் வெளிநாடு போறதால நம்ம கம்பெனி சார்பாஉன்னை அனுப்பலாம்னு இருந்தேன். அந்த பொண்ணு கொடுத்த யோசனைய பார்த்தா சாதாரண பொண்ணா தெரியலை. உன்னோட Secretary அப்படிங்கிறது பெயருக்கு தான். அவ உன்னோட வேலைல பாதியை குறைச்சுடுவா.நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க. ரெண்டு நாள் மாநாடு தான். திரும்பி வந்த உடனே உனக்கு மட்டும்பிரான்ஸ் ஒரு வார பயணம் இருக்கு. அங்கேயும் சிலtie up இருக்கு. போயிட்டு வந்தா நாம local production technical improvement process ஸ்டார்ட் பண்ணிடலாம்" என்று சொல்ல "சரி சார்" என்று தலை அசைத்தான். 

ஸ்வேதாவுடன் இரண்டு நாள் பயணம் எண்பது சந்தோசமாய் இருந்தாலும், பிறகு ஒரு வாரம் பிரிந்து இருக்க வேண்டும் என்பதை அறியும்போது அவனுக்கு வருத்தமாக இருந்தது. 'எப்படி ஸ்வேதாவை பார்க்காமல் இருக்க போய்கிறோம் என்று தெரியவில்லை'.
சேர்மனிடம் "சார் உங்க கிட்ட சில personal விஷயங்கள் பேச வேண்டி இருக்கு" என்று சொல்ல, சுப்ரமணியம் ஹரியை வெளியே காத்திருக்க சொல்லி விட்டு கிருஷ்ணாவிடம் பேச ஆரம்பித்தார்.

"என்ன கிருஷ் என்ன விஷயம்"

"சார் எனக்கு கலான்னு ஒரு தங்கை இருக்கா அவ இப்போ PG final year படிச்சுகிட்டு இருக்கா"
"ஓ தெரியுமே, ஹரி கூட ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொல்லி இருக்கான். சொல்லுப்பா என்ன விஷயம்."

"சார் என் தங்கையும் ஹரியும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறாங்க"
யோசனையில் ஆழ்ந்தார் சுப்ரமணியம். "சரி கிருஷ், அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க, இதுல நாம என்ன சொல்லி வேண்டி இருக்கு. என்னை பொறுத்த வரையில் கல்யாணம் அப்படிங்கறது ரெண்டு பேர் சம்பந்தபட்ட விஷயம். அதுல அவங்களை தவிர யாருக்கும் முடிவு எடுக்குற தகுதி இல்லை. நாம எல்லாருமே வெளி ஆட்கள் தான்."

"எனக்கு அடுத்த ரெண்டு வாரம் வெளி நாட்டு சுற்று பயணம் இருப்பதால் நான் திரும்பி வந்தவுடன் அம்மா, அப்பா, தங்கையை உன் வீட்டுக்கு வர சொல்லு, நல்ல நாள் பார்த்து ஹரியோட நான் வீட்டுக்கு வரேன். முதல்ல ஹரியோட கல்யாணம். பிறகு உன்னோட கல்யாணத்தையும் பேசி முடிச்சுடலாம்."

"இங்க பாருடா கல்யாணம்ன்னு சொன்ன உடனே கிருஷ்ணா முகத்தில வெட்கத்தை" என்று கிண்டல் செய்தார்,

"சரி நீ கிளம்பு. ஹரியை உள்ளே அனுப்பு நான் பேசணும்" என்று சொல்ல, கிருஷ்வெளியேறி ஹரியை உள்ளே அனுப்பி வைத்தான்.

தனது கேபினுக்கு திரும்பிய கிருஷ்ணாவின் வரவை எதிர்பார்த்து இருந்த ஸ்வேதா செய்தியை கேட்ட உடன் தாங்க முடியாத சந்தோசத்தில்அவனை கட்டி அணைத்து முத்த மழை பெய்தாள்.

'நாளை மறுநாள் டெல்லி போக வேண்டும் என்றும், ஸ்வேதாவை தயாராக இருக்க' சொல்ல' அவளுக்கு KK உடன் Delhi போக போகிறோம் என்ற உடன் மனம் வானத்தில் சிறகடித்து பறக்க தொடங்கியது.




No comments:

Post a Comment