Monday, August 24, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 24

பாட்டி ஊருக்கு புறப்பட்ட அன்று காலை சத்யனை மில்லுக்கு அனுப்பிவிட்டு பாட்டியுடன் சாப்பிட அமர்ந்த மான்சியின் தட்டில் ராஜம்மா பொங்கலை வைத்து சாம்பாரை ஊற்றும்போதே மான்சிக்கு குமட்டிக்கொண்டு வர எழுந்து வாஷ்பேசினை நோக்கி ஓடினாள்,

சாப்பிடாமலேயே வாந்தியெடுத்த மான்சி வாயை கொப்புளித்துவிட்டு வந்து சேரில் அமர்ந்தாள், அவளின் முகத்தை பார்த்ததுமே பாட்டிக்கு மான்சியின் நிலைமை புரிந்துபோனது, ராஜம்மாவை சர்க்கரை எடுத்துவரச் சொல்லி மான்சியின் வாயில் போட்டுவிட்டு அவளை தழுவிக்கொண்டார்

“ கண்ணு இந்த நிலைமையில் உன்னை விட்டுட்டு நான் எப்படி ஊருக்குப் போறதும்மா, நான் இங்கேயே இருந்து உன்னை பார்த்துக்கிறேன்” என்றார் பாட்டி,



“ இல்லப் பாட்டி இப்போதான் நீங்க அவசியம் ஊருக்கு போகனும்,, இந்த நிலைமையில் நான் தனியா இருந்தால்தான் அவரை நம்ம வழிக்கு கொண்டு வரமுடியும், நீங்க தைரியமா போங்க பாட்டி எனக்கு ஒன்னும் ஆகாது” என்றாள் மான்சி

தாயில்லாத இந்த கர்பிணிப் பெண்ணை எப்படி தனியே விட்டுவிட்டு போவது என்று கவலையுடன் பார்த்த பாட்டியின் தோளில் ஆதரவுடன் சாய்ந்த மான்சி “ பாட்டி நீங்க போனால்தான் நான் என் மாமனார் வீட்டுக்கு போகமுடியும், நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரனும் பாட்டி, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, ஏதாவதுன்னா போன் பண்ண அடுத்த நிமிஷமே அத்தை மாமா எல்லாரும் வந்துடுவாங்க அதனால கவலைப்படாமல் போய்ட்டு நான் போன் பண்ணும்போது வாங்க பாட்டி” என்று மான்சி விளக்கமாக கூற, அருகில் நின்ற ராஜம்மாவும் அதுதான் சரியென்றாள்

பாட்டி நல்லநேரம் பார்த்து ரஞ்சனாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு மான்சியை கவனமாக பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு ஊருக்கு புறப்பட்டார்கள்


பாட்டி போன சிலநிமிடங்களில் கிருபாவின் மொத்தக் குடும்பமும் மான்சியை பார்க்க வந்துவிட்டது, அதுவரை அங்கே அதிகமாக வராத கிருபா உரிமையுடன் சோபாவில் வந்து அமர்ந்துகொண்டார், பேரக்குழந்தை பிறக்கப்போகும் கர்வம் அவர் முகத்தில் தெரிந்தது, அவருடைய மகன் அந்த வீட்டில் அவருக்கு கொடுக்காத உரிமையை பேரக்குழந்தை கொடுத்தது

ரஞ்சனா தன் மருமகளை அணைத்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி பேசமுடியாமல் தனது சந்தோஷத்தை கண்ணீரில் காட்டினாள், அனிதா அபி வசு மூவரும் தாங்கள் அத்தையாகி விட்ட சந்தோஷத்தை வீட்டில் ஸ்வீட் செய்து கொண்டாடினர்

திருமணம் ஆன இந்த இரண்டு மாதத்தில் சத்யன் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்துவிடுவதால், அவன் வருவதற்குள் அனைவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள், ரஞ்சனா கிளம்பும் முன் மான்சி இனிமேல் எப்படி இருக்கவேண்டும் என்று பாட்டி சொன்ன அதே ஆயிரம் அட்வைஸ்களை செயதுவிட்டு அரைகுறை மனதோ கிளம்பினாள்

மதியம் வீட்டுக்கு வந்த சத்யன் சோபாவில் படுத்திருந்த மான்சியை பார்த்துவிட்டு கழுத்தில் இருந்த டையின் முடிச்சை லூசாக்கியபடி வந்து அவள்மீது அப்படியே கவிழ்ந்தான், பாட்டியும் ராஜம்மாவும் ஊருக்கு போகும் விஷயம் காலையிலேயே அவனுக்கு தெரியும் என்பதால், அவன் எந்த பயமும் இன்றி அவள்மீது கவிழ்ந்து நெற்றி வகிட்டில் இருந்து நிதானமாக முத்தமிடத் தொடங்கினான்

மான்சி விழிமூடி அவன் முத்தங்களை ரசித்தாள், அவளின் ஈர இதழ்களை நெருங்கிய சத்யன் வாயை பெரிதாக திறந்து அவளின் இதழ்களை மொத்தமாக உள்ளே இழுத்து சப்பினான், இதழ்களை பிரித்து நாக்கை உள்ளே செலுத்தி சுழற்றினான்

அவன் வாயில் இருந்து வந்த சிகரெட் நெடி மான்சிக்கு மறுபடியும் குமட்டலை ஏற்படுத்த அவன் மார்பில் கைவைத்து முரட்டுத்தனமாக பிடித்து தள்ளிவிட்டு எழுந்து வாஷ்பேசினை நோக்கி ஓடினாள்



சத்யனுக்கு அதிர்ச்சியாக இருந்தது, இத்தனை நாள் உறவில் மான்சி ஒருமுறை கூட இப்படி நடந்துகொண்டதில்லை, நான் முத்தமிட்டது அவளுக்கு ஏன் பிடிக்கவில்லை? என்ற குழப்பத்தோடு சமையலறைக்கு போனான்

கஷ்ட்டப்பட்டு ரஞ்சனா ஊட்டிவிட்டு போன சாப்பாடு மொத்தத்தையும் வாந்தி எடுத்துவிட்டு முகத்தை தொடைத்துக்கொண்டு சமையல் மேடையில் இருந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்து திறந்து ஊறுகாயை விரலால் வழித்து நாக்கில் தடவிக்கொண்டு சப்புக்கொட்டினாள்

அவள் அருகே வந்த சத்யன் அவள் தோளைத் தொட்டு “ ஏன் மான்சி ஓடி வந்துட்ட,, ஏன் வாந்தியெடுத்த, பிடிக்கலையா மான்சி” என்று கவலையுடன் கேட்டான்

“ பின்னே இவ்வளவு சிகரெட் வாசனையோட வந்து கிஸ் பண்ணா வாந்தி வராமல் என்ன பண்ணும்” என்று சலிப்போடு கூறிய மான்சி மறுபடியும் ஊறுகாயை தொட்டு நாக்கில் தடவினாள்

“ இத்தனை நாளா அப்படித்தானே குடுத்தேன், இப்ப மட்டும் ஏன் பிடிக்காமல் போச்சு” என்றான் சத்யன்

அவன் குரலில் ஒரு வெறுமை தென்பட பட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்த மான்சி அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டு “ அதுக்கு நான் என்ன செய்றது சத்தி, எனக்கு என் புருஷனோட எல்லா வாசனையும் பிடிக்கும், ஆனா உங்க பிள்ளைக்கு சிகரெட் வாசனை பிடிக்கலை போலருக்கு, அதுக்கு நீங்க அவனைத்தான் கேட்கனும்” என்று கிசுகிசுப்பாக கூறினாள்

சத்யனுக்கு அவள் கூறியதன் விளக்கம் புரிய சில நிமிடங்கள் ஆனது, புரிந்ததும் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அவளை அணைத்துக்கொண்டு அமைதியாக இருந்தான்,, அவன் தனிமை வாழ்க்கைக்கு மான்சி முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும் தனக்கென்று ஒரு குழந்தையும் வரப்போகிறது என்ற செய்தி அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது

அன்றிலிருந்து மான்சியை நெஞ்சில் வைத்து தாங்கினான்,, அவளுக்கு என்ன தேவை என்பதை புரிந்து நடந்துகொண்டான், ஆனாலும் மான்சி எப்போதுமே ஒரு மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருக்கவே அன்று இரவு படுக்கையில் “ என்னாச்சும்மா “ என்று விசாரித்தான்

“ எனக்குத்தான் அம்மா இல்லை, மாமியாராவது கூட இருப்பாங்கன்னு நெனைச்சேன் அவங்களும் போய்ட்டாங்க, இப்போ சின்ன மாமியார் கூடயாவது இருக்கலாம்னு பார்த்தா அதுக்கும் கொடுப்பினை இல்லை, இந்த மாதிரி நிலைமையில் இப்படி தனியா இருந்து கஷ்டப்படனும்னு என் தலையெழுத்து போலருக்கு, விடுங்க” என்று சலிப்பாக கூறிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்

சத்யனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, ஒன்றும் புரியாமல் தூங்கிப்போனான்



றுநாள் ஆபிஸில் பகல் பதினோரு மணிக்கு பியூன் வந்து “ ஒரு அம்மா உங்களை பார்க்க வந்திருக்காங்க” என்றான்

யாராயிருக்கும் என்ற குழப்பத்தோடு “ சரி வரச்சொல்” என்றான்

வந்தது ரஞ்சனா தான்,, சத்யன் அதிர்ச்சியுடன் எழுந்துவிட்டான்,, ரஞ்சனா அவனை பார்த்து கைகூப்பி “ என்னை வெளிய மட்டும் அனுப்பிறாத சத்யா,, நான் சொல்ல வந்ததை மட்டும் கேட்டுட்டு அப்புறமா போகச்சொல்லு” என்று கண்ணீருடன் கேட்க

முன்பிருந்த சத்யனாக இருந்திருந்தால் வெளியே போங்க என்று கத்தியிருப்பான்,, ஆனால் இப்போது இருக்கும் சத்யன் மென்மையானவன், ஒரு மனைவிக்கு நல்ல கணவன்,, இன்னும் சில மாதங்களில் ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கு தகப்பனாக போகிறவன்,, இப்போதெல்லாம் அவன் மனதில் நிறைய ஆசாபாசங்கள் உண்டாகியிருந்தது

எதிரில் இருந்த இருக்கையை காட்டிவிட்டு அமைதியாக அமர்ந்தான்,, ரஞ்சனா கண்களை துடைத்துக்கொண்டு அமர்ந்தாள்,, சத்யன் மேசையில் இருந்த தண்ணீ ரை ஞ்சனாவின் பக்கம் நகர்த்தி “ எடுத்துக்கோங்க” என்றான்

ரஞ்சனாவுக்கும் இப்போது தண்ணீர் தேவைதான்,, எடுத்து குடித்துவிட்டு க்ளாஸை மேசையில் வைத்தாள் , பிறகு தொண்டையை சரிசெய்து கொண்டு “ என்மேல் உனக்கு எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து, என்னை உன் வீட்டுல தங்க அனுமதிக்கனும், இந்த நிலைமையில மான்சியை அங்க தனியா விட்டுட்டு என்னால வீட்டுல தூங்ககூட முடியலை, அந்த வீட்டு வேலைக்காரியாக இருக்கவாவது எனக்கு அனுமதி தரனும், பகல்ல மான்சியை கவனமா பார்த்துக்கிறேன் நீ வீட்டுக்கு வந்ததும் உன் எதிரில் கூட வரமாட்டேன் ராஜம்மா தங்கியிருக்கும் ரூம்லயே தங்கிக்கிறேன் , தயவுசெய்து எனக்கு அனுமதிகொடு சத்யா” என்று கண்ணீர் மல்க கைக்கூப்பி கெஞ்சினாள் ரஞ்சனா சத்யன் எதுவும பேசாமல் அமைதியாக இருக்க,,

ரஞ்சனா கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு “ நான் உங்கப்பாவை கல்யாணம் பண்ணிகிட்டதால தானே உனக்கு இந்த கோபம்,, என்னோட கழுத்தில் இருக்கும் இந்த தாலிமீது சத்தியம் பண்ணி சொல்றேன், வசந்தி அக்காவோட அனுமதியுடன் முழு சம்மதத்தோட தான் எங்களுக்கு கல்யாணம் நடந்தது, இன்னும் எல்லா உண்யமயையும் சொல்லனும்னு தான்நெனைக்கிறேன் , ஆனா உங்கம்மாவுக்கு நான் செய்த சத்தியம் என்னை தடுக்குது சத்யா, என்னை நம்பு” என்று மறுபடியும் கெஞ்சினாள்

சீட்டில் இருந்து எழுந்த சத்யன், “ நான் யோசிச்சு சொல்றேன் , நீங்க வீட்டுக்கு போங்க ” என்றான் ரஞ்சனா அதற்கு மேல் அவனிடம் பேசி பயனில்லை என்று புரிந்து, அங்கிருந்து வெளியேறினாள்,,

ரஞ்சனா போனதும் சத்யன் வெகுநேரம் யோசித்தான், தன்னுடைய வரட்டு கௌவுரவம் மான்சியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கக்கூடாது என்று முடிவு செய்தான்

அன்று மதிய உணவிற்கு வந்த சத்யன், மான்சியை சில உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்புமாறு கூறினான், மான்சி எங்கே போகிறோம் என்று கேட்க 





 எங்கவீட்டுக்கு போறோம்” என்று கூறிவிட்டு வெளியே வந்து காரை கிளப்பினான், மான்சி வேகமாக ஒரு பெட்டியுடன் வந்து காரில் ஏறிக்கொண்டாள்
சத்யன் காரில் எதுவுமே பேசவில்லை, மான்சியும் அவனை துருவவில்லை,, கிருபாவின் வீட்டுக்கு வெளியே காரை நிறுத்திய சத்யன் இறங்கி மான்சியை அழைத்துக்கொண்டு உள்ளே போனான்,

ஹாலில் இருந்த கிருபா இருவரையும் பார்த்துவிட்டு எழுந்து நிற்க்க, சத்யன் அவரருகே வந்து “ இவளை ஜாக்கிரதையா பார்த்துக்கங்க,, நான் அடிக்கடி வந்து பார்த்துட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு மனைவியிடம் திரும்பி “ மான்சி ஜாக்கிரதையா இரு, எதுவாயிருந்தாலும் எனக்கு போன் பண்ணி சொல்லு,, நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டான்

அன்று இரவு மான்சி இல்லாமல் அவனால் உறங்கமுடியவில்லை,, ஏன் அங்கே போய் விட்டுட்டு வந்தோம் என்று இருந்தது,, அன்று பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்து விடிந்ததும் மான்சியைத் தேடி ஓடினான்

மாடியில் இருந்த அறையில் மான்சி படுத்திருப்பதாக அனிதா கூற, சத்யன் மான்சியிடம் ஓடினான், படுத்திருந்தவள் அவனை பார்த்ததும் எழுந்து அமர்ந்து “ எனக்கு தெரியும் நீங்க வந்துடுவீங்கன்னு” என்று அவனை நோக்கி கைகளை விரிக்க, சத்யன் ஒரு குழந்தையைப் போல அவள் கைகளில் அடைக்கலம் ஆனான்



அதன்பிறகு அவன் மனைவியை பிரிந்து தனது வீட்டுக்கு போகவில்லை, அங்கேயே தங்கிவிட்டான், அந்த குடும்பமே அவர்களிடம் காட்டிய அன்பில் சத்யனுக்கு குற்றவுணர்வு அதிகமானது, இத்தனை நாட்களில் தன் எதிரில் வந்து நிற்க்க சங்கடப்பட்டு ஒதுங்கி செல்லும் ரஞ்சனாவை கண்டு அவனுக்கு பரிதாபம் வந்தது, ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தான் சத்யன்,

சில நாட்களில் மில் வேலையை முடித்துக்கொண்டு இரவு நெடுநேரம் கழித்து சத்யன் வரும் நாட்களில், எல்லோரும் தூங்கிவிட ரஞ்சனா அவனுக்காக டைனிங் டேபிளின் மீதே கவிழ்ந்தபடியே காத்திருந்ததை கண்டு முதல்முறையாக அவளை ஒரு தாயாக பார்த்தான், தனக்கென்று எதையும் செய்துகொள்ளாமல் ஒரு யோகியைப் போல ரஞ்சனாவை எண்ணி மனம் நொந்தான்

கொஞ்சம் கொஞ்சமாக அந்த குடும்பத்தோடு சத்யன் ஒன்றிப் போனாலும் , ரஞ்சனா மட்டும் அவன் எதிரில் வர பயந்து ஒதுங்கியே இருந்தாள்,, அந்த ஒதுக்கம் சத்யனின் இதயத்தை முள்ளாய் தைத்தது, தான் முன்பெல்லாம் உதாசீனப்படுத்தியதால்தான் இவ்வளவு பயப்படுறாங்க என்று வருந்தினான்

மான்சிக்கு மாதங்கள் கடந்து பிரசவநாள் நெருங்க நெருங்க அவளை கண்போல் பாதுகாத்த ரஞ்சனா அவனுக்கு தன் தாய் வசந்தியாகவே தோன்றினாள், இளம் வயதில் இந்த தாயின் அன்பை இழந்து தனியாக வாழ்ந்துவிட்டோமே என்று முதன்முறையாக ஏங்கினான் சத்யன்

மான்சிக்கு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, கண்ணீரும் பிரார்த்தனையுமாக நின்ற ரஞ்சனாவை பார்த்து சத்யனின் உள்ளம் கறைந்து போனது, மான்சியின் அலறல் உள்ளே கேட்டபோது, சத்யன் கலக்கத்துடன் கிருபாவை பார்க்க கிருபா வேகமாக வந்து சத்யனின் தோளில் ஆறுதலாக தட்டி, “ என் வசந்தி மறுபடியும் வரப்போறா சத்யா எனக்கு பேரக்குழந்தையா” என்று கூறிவிட்டு அவரும் கண்கலங்கினார்


இவர்கள் இருவரிடமும் நெருங்க முடியாமல் ரஞ்சனா ஒதுங்கியிருந்து கண்ணீர் விட்டாள், அப்போது மான்சியின் அலறலை தொடர்ந்து குழந்தையின் அழுகுரல் கேட்க, ரஞ்சனாவிடம் எப்படித்தான் அவ்வளவு உற்சாகம் வந்ததோ தெரியவில்லை வேகமாக ஓடிவந்து அறையின் கதவை நெருங்கினாள், பிறகு எதையோ நினைத்துக்கொண்டு அங்கிருந்த பெஞ்சில் போய் அமர்ந்துகொண்டாள்

சற்று நேரத்தில் ஒரு நர்ஸ் டவலால் சுற்றப்பட்ட குழந்தையுடன் வெளியே வந்து சத்யனிடம் குழந்தையை கொடுத்து “ உங்க மனைவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்க சார்” என்றாள்

சத்யன் புன்னகையுடன் குழந்தையை வாங்கினான், குனிந்து அந்த பூக்குவியலுக்கு முத்தமிட்டவன் திரும்பி ரஞ்சனாவை பார்த்தான், குழந்தையை பார்க்கவேண்டும் என்ற தவிப்பு அவள் கண்களில் கண்ணீரை வெளிவந்தது

சத்யன் குழந்தையுடன் அவளை நெருங்கி சில வினாடிகள் அவள் முகத்தை உற்று பார்த்தான் பிறகு “ அம்மா இந்தாங்க உங்க பேத்தி” என்று அவளிடம் குழந்தையை நீட்டினான்.

ரஞ்சனாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை, கண்கள் விரிய மகனை பார்த்தாள், “ என்னம்மா பார்க்கிறீங்க, பிடிங்க உங்க பேத்தியை, எனக்கு சின்ன வயசுல கிடைக்காத உங்களோட அன்பு என் மகளுக்காவது கிடைக்கட்டும், இனிமேல் அவளை நீங்கதான் பார்த்துக்கனும், அப்பத்தான் அடுத்து உடனே ஒரு பேரனுக்கு எங்களால ஏற்பாடு பண்ணமுடியும்” என்று சிரிப்பும் குறும்புமாக சத்யன் கூற ..

அதற்க்கு மேல் ரஞ்சனாவால் தாங்க முடியவில்லை, “ சத்யா என் மகனே” என்று சிறு கதறலுடன் சத்யனை அணைத்துக்கொண்டாள்,

சத்யன் தன் மகளை ஒரு கையாலும் தன் தாயை மறுகையாலும் அணைத்துக்கொண்டான், அவனுக்கும் தாங்கவில்லை கரகரவென கண்ணீர் வழிந்தது “ அம்மா என்னை மன்னிச்சிடுங்க அம்மா, இவ்வளவு நாளா உங்களை ரொம்ப நோகடிச்சிட்டேன், உங்களோட அன்புக்கு முன்னாடி என்னோட வரட்டு கவுரவம் தோத்துப் போச்சும்மா ” என்று தன் தாயிடம் மனதார மன்னிப்பு கேட்டான் சத்யன்.







முற்றும்


1 comment: