Monday, August 17, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 5

மான்சி அறையிலிருந்து சென்றதும் சத்யன் மனம் கும்மாளமிட்டு கொண்டாட அடித்து ஓய்ந்திருந்த தொலைபேசியை அடைந்து யார் அழைத்தது என்று காலரைடியில் பார்த்தான்,, கார்த்திக்தான் அழைத்திருந்தான்,, அவனுடைய மொபைல் நம்பரில் இருந்து அழைத்திருந்தான்

கார்த்திக்கை அழைத்துவிட்டு சத்யன் காத்திருந்தான்,, எதிர்முனையில் எடுத்ததுமே “ என்னடா மச்சான் எதுக்கு கால் பண்ண” என்று சத்யன் கேட்டான்
கல்லூரியில் படித்த நாட்களைத் தவிர சத்யன் எப்பவுமே இப்படி அழைத்ததில்லை என்பதால் கார்த்திக்குக்கு ஆச்சரியமாக இருந்தது சந்தோஷத்தில் பேச வாய் வராமல் கார்த்திக் அமைதியாக இருக்க........

“ என்னடா கார்த்திக் என்னாச்சு,, என்று சத்யனின் குரல் கேட்டதும்

“ ஒன்னுமில்ல பாஸ்,, மான்சி உங்க ரூமுக்குள்ள வந்து ரொம்ப நேரமாச்சு, சில பேப்பர்ஸ் நீங்க செக்ப் பண்ணா கூரியரில் அனுப்பிரலாம்,, லேட் ஆகுது அதான் கால் பண்ணேன் பாஸ்” என்றவன் சிறிதுநேர தயக்கத்துக்குப்பிறகு “ மான்சி போய்டாங்களா பாஸ்,, நான் பேப்பர்ஸ் எடுத்துகிட்டு வரவா?” என்று கேட்டான் கார்த்திக்



சத்யனுக்கு சங்கடமாக இருந்தது,, காலையிலேயே ஆபிஸ்ல இது தேவையில்லாத வேலை,, கொஞ்சம் கட்டுப்பாட இருந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு,, “ போய்ட்டா,, நீ வா கார்த்திக்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்

ஏதோ தோன்ற அவசரமாக குனிந்து சட்டையை பார்த்தான்,, அவன் நினைத்தது சரியாகப் போய்விட்டது,, மான்சியை முத்தமிடும்போது அவள் இவன் சட்டையை கொத்தாக பற்றிய இடத்தில் கசங்கி போயிருந்தது,, பதட்டமாக சட்டையின் கசங்கலை நீவி சரிப்படுத்தினான் சத்யன்

உள்ளே நுழைந்த கார்திக்கின் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு அவன் வைத்த பேப்பர்களில் தனது கவனத்தை செலுத்தினான்,, எல்லாவற்றையும் சரி பார்த்து கையெழுத்திட்டு கார்த்திக் முன்பு நகர்த்தினான்
பேப்பர்ஸை கையில் எடுத்துக்கொண்டு திரும்பிய கார்த்திக்கை “ ஸாரி கார்த்திக்” என்ற சத்யனின் குரல் தடுத்தது

ஆச்சரியமாக திரும்பி பார்த்த கார்த்திக் “ எதுக்கு பாஸ் ஸாரி” என்றான்
“ இல்ல கார்த்திக்,, மான்சி தனியா உட்கார்ந்திருந்தா,, சரி வான்னு இங்கே கூட்டி வந்தேன்,, வந்து கொஞ்சநேரம் அனிதா பேமிலியை பத்தி ரொம்ப கோபமா பேசினாள்,, அப்புறமாத்தான் ஏதோ ஒரு வேகத்தில் பேச்சு திசைமாறி போச்சு” என்று கார்த்திக்கின் முகத்தை பார்க்காமல் டேபிளில் இருந்த அத்தனைப் பொருட்களையும் பார்த்துபடி பேசினான்

கார்த்திக்கிடம எந்த பதிலும் இல்லாது போகவே என்னாச்சு என்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தான் சத்யன்

கார்த்திக் முகத்தில் குறும்பு வழிந்தது,, சட்டென்று எட்டி சத்யன் கையைப்பிடித்து குலுக்கி “ பாஸ் நீங்க வெட்கப்பட்டா ரொம்ப அழகா இருக்கீங்க பாஸ்” என்றான்
இப்போது சத்யனுக்கு உண்மையிலேயே வெட்கம் வந்தது,, “ டேய் போடா போடா போய்ப் பொழப்ப பாரு,, இங்கே நின்னு என் மூஞ்சிய ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்க” என்று சிரிப்புடன் சத்யன் சொல்ல....

“ எஸ் பாஸ் இதோ கிளம்பிட்டேன்,, ஆனா இப்பவும் அனிதா கிட்டே இதைப்பத்தி எதுவுமே பேசக்கூடாதா பாஸ்,, ஏன்னா என்னால அவளை சமாளிக்க முடியலை,, அவளைப்பார்த்ததும் இதைத்தான் முதலில் சொல்லனும் போல இருக்கு ,, ப்ளீஸ் பாஸ் சொல்லிரட்டுமா?” என்று கார்த்திக் அதிகபட்சமாக அசடு வழிந்தான்

“ ம்ஹூம் நமக்கு அந்த வேலையே வேனாம் கார்த்திக்,, மான்சிக்கு என்னைப்பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கு,, அதனால அனிதாவும் மான்சியும் பேசிக்குவாங்க, நீ உன் வேலை பாருடா மச்சான்” என்றான் சத்யன்

சத்யன் மறுபடியும் மச்சான் என்றதும், கார்த்திக்க்கு லேசாக கண் கலங்கியது,, “ என்னை மச்சான்னு கூப்பிட்டதுக்கு தாங்க்ஸ் பாஸ்” என்று உணர்ச்சியில் அடைத்த குரலில் கூறினான்

சத்யனுக்கு கார்த்திக்கின் நிலை புரிந்தது,, இருக்கையைவிட்டு எழுந்து கார்த்திக் அருகில் வந்து அவன் தோளில் கைப்போட்டு “ கார்த்திக் நான் வேனா அனிதாவை என் தங்கச்சின்னு வெளிப்படையா சொல்லாமல் இருந்தாலும்,, அவ என் தங்கச்சின்னு எல்லாருக்கும் தெரியும்,, அப்போ நீ என் மச்சான் தானடா” என்று சத்யன் ஆறுதலாக பேசினான்

கார்த்திக்குக்கு சத்யனின் மாற்றங்கள் ஆச்சர்யமாக இருந்தது,, சத்யன் இதுபோல பேசி பார்த்ததேயில்லை,, அப்படியானால் இது மான்சியால் வந்த மாற்றமா? அப்படியிருந்தால் சத்யன் குடும்பத்துக்கு வரம் கொடுக்கும் தேவதை மான்சிதான்,, இனி சத்யன் ஜோடியாகத்தான் வந்து வாழ்த்தவேண்டும் என்ற அனிதாவின் கனவு நிறைவேறிவிடும்,, என்று கார்த்திக்கின் மனது அடுத்தடுத்து கற்பனையில் மிதக்க, கையில் இருந்த பேப்பர்களை அனுப்ப வேண்டுமே என்ற உந்துதலில் “ ஓகே பாஸ் நான் அப்புறமா வர்றேன்” என்று கூறிவிட்டு அவசரமாக வெளியேறினான்

தனது இருக்கையில் வந்து அமர்ந்த சத்யனுக்கு கார்த்திக்கை நினைத்து பெருமையாக இருந்தது,, மச்சான் என்ற ஒரு வார்த்தைக்கே எவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறான்,, ஒருவேளை நான்தான் எல்லாரையும் விட்டு ரொம்ப ஒதுங்கி வாழ்கிறேனா,, இது போன்ற சின்னச்சின்ன வார்த்தைகள் போதுமா ஒருவரிடம் அன்பை வெளிப்படுத்த,, உணர்ச்சியில் கலங்கிய கார்த்திக்கின் முகம் சத்யன் கண்முன் வந்தது,, ம்ஹும் என்ற பெருமூச்சுடன் தனது அலுவலை கவணிக்க ஆரம்பித்தான்


தனது தாயின் நினைவுகளில் மூழ்கியிருந்த சத்யன் அன்று இரவு தூங்க வெகு நேரமானது,, தன் தாயின் முகத்தில் இருந்த கருணையும் அன்பும் மான்சியின் முகத்திலும் இருப்பது போல் சத்யனுக்கு தோன்றியது,, அதனால்தான் அவளை முதலில் பார்த்தவுடனே பிடித்ததா? என்று தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டான்

எது எப்படியோ மான்சி தான் காதலிக்கிறோம் என்பது சத்யனுக்கு உறுதியாக தெரிந்தது,, அவளின் சோகத்தை துடைத்து சொர்கத்தை காட்டவேண்டும் என்று தீர்மானித்தான்,, இனிமேல் மான்சி ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தக்கூடாது என்று எண்ணினான்

அவனது தூக்கம் பழைய நினைவுகளால் பாதியும்,, மான்சியின் நினைவுகளால் பாதியுமாக பறிபோனது,, ஆனால் மான்சியை பற்றி நினைத்தாலே அவன் பாராசூட் இல்லாமல் விண்ணில் பறந்தது,, அவள் முகம் சத்யன் மனதில் ஆழப்பதிந்தது,,

இந்த நடு ராத்திரியில் அவளைப்பற்றி நான் நினைத்து தூக்கத்தை தொலைத்தது போல்,, அவளும் என்னை நினைப்பாளா,, என்று எண்ணி ஏங்கிய மனதை ‘ இன்று இல்லாவிட்டாலும் இன்னும் சில நாட்களில் அவளும் உனக்காக ஏங்கி தவிப்பாள், என்று அவன் மனம் ஜோசியம் சொன்னது,

மாலையில் ஆபிஸில் மான்சியை இழுத்து அணைத்தது அவனுக்கு நினைவு வந்தது,, உண்மையில் ஒரு பூச்செண்டை எடுத்து நெஞ்சில் சுமந்த உணர்வுதான் சத்யனுக்கு உண்டானது, அவள் உடல் எவ்வளவு மென்மை,, ஒரு பூவை கையாள்வது இருந்ததை நினைவு கூர்ந்தான் சத்யன்,, வெகுநேரம் வரை அவளின் வாசனை தன்மீது மிச்சமிருந்ததை இப்போதும் சத்யனால் உணரமுடிந்தது

அவள் கூந்தலை வருடிய விரல்களை முத்தமிட்டான்,, தனது நெஞ்சில் அவளுடைய இளமை பந்துகள் மென்மையாக அழுந்திய இடத்தை வருடிக்கொடுத்தான்,, தனது தோளில் அவளது தாடை அமிழ்ந்த இடத்தை தடவி பார்த்தான்,, இந்த ஒரு நாளில் தன்னிடம் ஏற்ப்பட்ட மாற்றங்களை நினைத்து சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது

ஒரே நாளில் மான்சிதான் எல்லாமும் என்று தான் ஆகிவிட்டதை சந்தோஷமாக உணர்ந்தான்,, காயம்பட்ட தனது இதயத்தை வருடும் மயிலிறகாக மான்சியை நினைத்தான்,, வரண்டுபோன தன் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தவளை எப்போது வாழ்க்கை துணையாக ஆக்கிக்கொள்வது என்று அவன் மனம் இப்போதிலிருந்தே ஏங்க ஆரம்பித்தது,,

ஆனால் அதற்க்கு முன் அவளின் சோகத்தை நிரந்தரமாக துடைக்கவேண்டும்,, இந்த இளம் வயதில் பெற்றோரை ஒரே சமயத்தில் இழந்த அவளிடம் ஏதாவது ஏடாகூடமாக கேட்டு அவள் மனதை புண்படுத்தி விடகூடாது,, ரொம்ப பொறுமையாக என் காதலை அவளிடம் சொல்லவேண்டும் , என்று சத்யன் திட்டம் தீட்டினாலும் தன்னால் பொறுமையாக இருக்கமுடியுமா என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது

அதுவும் இவ்வளவு அருகாமையில் அவளை வைத்துக்கொண்டு,, எதுவுமே முகத்தில் காட்டாமல் இருப்பது ரொம்ப கஷ்டம் என்றுணர்ந்தான்,, இன்றே அவளை பார்த்து, அந்த அமைதியான அழகில் திகைத்து அடிக்கடி நின்றதும் ஞாபகம் வந்தது,, எதுஎப்படியோ இனி அவளில்லாமல் எனக்கு எதுவுமில்லை என்று உறுதியெடுத்தான்

அவளின் அருகில் நின்றபோது வந்த அந்த வாசனை, அது என்ன வாசனையாக இருக்கும் என்று ஞாபகத்தில் கொண்டு வரமுயன்றான்,, அந்த அற்புதமான வாசனை நிச்சயம் செயற்கையானது இல்லை,,

ம்ஹும் இன்னோரு முறை அவளை அணைத்தால் மட்டுமே அந்த வாசனையை கண்டுகொள்ள முடியும் என்று நினைத்தவன் தன்னை எண்ணி சிரித்தான்,, இன்னும் அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று தெரியாமல் இவ்வளவு கற்பனை செய்கிறோமே என்று வெட்கப்பட்டான்

மான்சியை நினைத்து அருகில் இருந்த தலையனையை அணைத்துக்கொண்டு அவளின் இன்பமான நினைவுகளை மனதில் அசைப்போட்ட படி அப்படியே தூங்கிப்போனான் சத்யன்,, ..............................

சத்யனின் அறையிலிருந்து வெளியே வந்த மான்சி,, குழம்பிய மனதுடனே பேருந்து நிறுத்ததிற்கு சென்றாள்,, சத்யன் என்ன சொன்னான்,, ஏன் அப்படி பேசினான்

சத்யனின் அறையிலிருந்து வெளியே வந்த மான்சி,, குழம்பிய மனதுடனே பேருந்து நிறுத்ததிற்கு சென்றாள்,, சத்யன் என்ன சொன்னான்,, ஏன் அப்படி பேசினான் என்ற குழப்பத்தை தவிர வேறு எதுவும் அவள் மனதில் இல்லை,

அவளுக்கு சத்யன் ஒரு முதலாளி என்று ஒரு போதும் நினைக்க முடியவில்லை,, கல்லூரி நாட்களில் அனிதா தன்னை பற்றி பேசியதைவிட தனது அண்ணனை பற்றி பேசியதுதான் அதிகம்,, ஹாஸ்டலில் இருவரும் ஒரே அறையில் தங்கியதாலும் அனிதாவின் நெருங்கிய தோழி என்பதால் குடும்பத்தில் நடப்பது அத்தனையும் மான்சியிடம் சொல்லிவிடுவாள்

அன்றாடம் சத்யனைப் பற்றி அனிதா பேசும் பேச்சை வைத்து சத்யனக்கு தன் மனதில் ஒரு உருவத்தைக் கொடுத்து அந்த உருவம் என்னவெல்லாம் செய்யும் என்று எத்தனையோ முறை மான்சி கற்பனை செய்து பார்த்திருக்கிறாள்

ஒருமுறைஅனிதா தனது அண்ணனின் புகைப்படத்தை காட்டி அவனை பற்றி பெருமையாக பேசியது இன்னும் நினைவிருக்கிறது,, சத்யனின் கோபம், வருத்தம், சந்தோஷம், அவனுக்கு பிடித்தது,, பிடிக்காதது, எல்லாமே மான்சிக்கு எத்துப்படியான விஷயங்கள் தான்,, அந்தளவுக்கு அனிதா அன்றாடம் அண்ணன் புராணம் பாடுவாள்,, மான்சி தூங்கினாள் கூட எழுப்பி அமர வைத்து அன்று அண்ணனுடன் பேசியதை அவளிடம் சொல்வாள்,,

முதலில் மான்சிக்கு எரிச்சலாக இருக்கும், ஆனால் போகப்போக சத்யனைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாகியது,, அவனுக்கு ஒரு கஷ்டம் என்று அனிதா புலம்பினால், இவளும் சேர்ந்து கண்ணீர் வடிப்பாள்,, சத்யனுக்கு ஒரு சந்தோஷம் என்று அனிதா சொன்னால், அவனைவிட மான்சி அதிகமாக சந்தோஷப்படுவாள்

தாய் தந்தையின் மரணத்துக்கு பிறகு எங்கேயும் வேலைக்கு போகக்கூடாது என்று முடிவெடுத்தவள்,, சத்யனின் மில்லில் தான் வேலை,, ஒரு மாறுதலுக்காக வேலைக்கு போனால் மனசு நிம்மதியாக இருக்கும் என்று அனிதா தான் மான்சியின் சித்தப்பா, சித்தி, தாத்தா என அனைவரிடமும் அனுமதி வாங்கினாள்,, சத்யனின் மில் என்றதும் மான்சியிம் தயக்கமின்றி வந்தாள்


ஆனால் சத்யன் முதல் நாளே இப்படி நடந்துகொள்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை,, அவன் பார்வை ஆயிரம் கதைகள் சொன்னாலும் மான்சிக்கு மனதுக்குள் சத்யனிடம் நெருங்க பயமாகத்தான் இருந்தது,, அவனுடைய அந்தஸ்தும் வசதியும் அவளை பயமுறுத்தியது,, அவனுடைய கோபமும் பிடிவாதமும் பற்றி அனிதா நிறைய சொல்லியிருந்தபடியால் , அதுவும் மான்சியை பயமுறுத்தியது,,

மான்சி பல யோசனையுடன் பேருந்து நிறுத்தத்தில் நிற்க்க,, அவள் செல்லும் பேருந்து வந்தது,, கூட்ட நெரிசலில் தட்டுத்தடுமாறி ஏறி ஒரு ஓரமாக நின்று கொண்டாள்,, அவள் இறங்கும் இடம் வந்தது,, எந்த ஆணின் உடலும் உரசாமல் இறங்குவதற்குள் மான்சிக்கு கண்ணீரே வந்துவிட்டது

இந்த அவஸ்தை தனக்கு தேவை தானா என்று எண்ணியவாறு அவள் தங்கியிருக்கும் வீட்டுக்கு போனாள்,, வீட்டுக்கு பக்கவாட்டில் இருக்கும் மாடிப்படிகளில் ஏறி தனது அறைக்கதவை திறந்து உள்ளே போனாள்,,

அவள் பின்னாலேயே வந்த அந்த வீட்டுக்காரம்மா " என்னம்மா மான்சி வேலை எப்படி இருக்குது" என்று விசாரித்த படி கையில் இருந்த பாத்திரத்தை அங்கிருந்த சிறிய மேசையில் வைத்தாள்

மான்சியின் உணவுக்கும் அந்த வீட்டிலேயே அனிதா ஏற்பாடு செய்திருந்தாள்,, " அய்யோ நீங்க ஏன்மா எடுத்துட்டு வந்தீங்க நானே கீழ வந்திருப்பேனே" என்று மான்நஎன்று சொல்லிவிட்டு அந்த பெண்மணி கீழே இறங்கி போய்விட்டாள்

மான்சி முகம் கழுவிட்டு வந்து, கொண்டு வந்த உணவில் கால் வாசி சாப்பிட்டு விட்டு அங்கிருந்த சிறிய கட்டிலில் அமர்ந்தாள்,, சத்யன் இப்போது என்ன செய்துகொண்டு இருப்பான் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடியது

என்னை அப்படி அணைத்தானே,, எதை நினைச்சு அணைச்சான்,, என்று முகம் சிவக்க எண்ணினாள்,, விலக நினைச்சா ' அப்படியே இரு மான்சி எல்லாம் சரியாயிடும்னு" டயலாக் வேற,, ம்ம் ரொம்பத்தான் தைரியம் என்று எண்ணிக்கொண்டே தனது பெட்டியை திறந்து அதிலிருந்து தனது பெற்றோரின் படத்தை எடுத்தாள் மான்சி

தன் தாயின் முகத்தை விரல்களால் வருடியவள் தந்தையின் முகத்தை பார்த்ததும் அழுகை வந்தது,, உலகத்துல எவ்வளவு கெட்டவங்க இருக்காங்க,, அவங்கல்லாம் நல்லாருக்கும் போது ஏன் என் அம்மா அப்பாவை மட்டும் எடுத்துட்டு போய்ட்ட கடவுளே,, என்று கண்ணீருடன் கடவுளிடம் கேள்வி கேட்டாள்

நல்ல அழகான குடும்பம் மான்சியினுடையது,, வயலுக்கு நடுவில் மான்சியின் அப்பாவும் சித்தப்பாவும் பக்கம் பக்கமாக வீடு கட்டிக்கொண்டு ஒன்றாக விவசாயம் பார்க்கும் ஒற்றுமையான குடும்பம்,, மான்சியின் அம்மா அருணாவுக்கு பக்கத்து ஊரிலேயே தாய் வீடு,, மூன்று சகோதரர்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள்,, மான்சியின் அப்பா மாணிக்கத்தை திருமணம் செய்துகொண்டு சொர்கத்தை சொந்தமாக்கிக் கொண்டவள்

ஒரே மகள் என்பதால் அருணாவி்ன் அப்பா தனது சொத்துக்களில் அருணாவுக்கும் ஒரு பங்காக ஐந்து ஏக்கர் நிலத்தை கொடுத்தார்,, அருணாவின் சகோதரர்கள் நிலத்துக்கு நடுவே வந்தது அருணாவுக்கான பாகம்,, அவர்களே பயிர் செய்து அருணாவிற்கு கொடுத்து வந்தனர்

மான்சியின் கல்லூரி படிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த போது அவளுடைய பெற்றோர்களுக்கு அவள் மறுபடியும் ஒரு குழந்தையாகிப்போனாள்

நல்ல சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் இடி விழுந்தது போல,, ஒரு விசேஷத்திற்கு சந்தோஷமாக பைக்கில் சென்ற மாணிக்கமும் அருணாவும் ஒரு விபத்தில் சிக்கி மூட்டையாக வீட்டுக்கு வந்தனர்



பெற்றோரின் பிரிவை தாங்க முடியாத மான்சி ,,சுயநினைவை இழந்து பலநாட்களாக கிடந்தாள்,, அனிதா அடிக்கடி வந்து ஆறுதல் சொன்னாலும் தேறவில்லை மான்சியின் மனம்

ஆண்பிள்ளையான ஜெகன் மட்டும் ஓரளவு சுதாரித்துக் கொண்டு தங்கைக்கு ஆறுதலாக இருந்தான் ,, தங்களின் நிலையை எண்ணி மான்சி வருந்தாதே நிமிடமே இல்லை எனலாம்

மான்சியின் சித்தப்பா அண்ணன் பிள்ளைகளை கவணமாக பார்த்துக்கொண்டாலும்,, ஒரே நாளில் அனாதையாக்கப்பட்டதை மான்சியால் ஜீரணிக்கவே முடியவில்லை

உடலும் மனமும் ஓரளவுக்கு தேறி மான்சி எழுந்து நடமாட ஆரம்பித்ததும் அடுத்ததாக புதிதாக ஒரு இடி வந்தது மான்சியின் மூத்த தாய்மாமன் மூலமாக,,

தனது சகோதரிக்கு கொடுத்த நிலம் எப்படியிருந்தாலும் மான்சிக்குத்தான் போய் சேரும் என்பதால்,, மான்சியை தனது மகனுக்கு திருமணம் செய்துவிட்டால் சொத்து வெளியே போகாது என்ற கணக்குடன் மான்சியை பெண் கேட்டு வந்தார்கள்

முதலில் அதிர்ந்து போன மான்சி பிறகு திருமணம் செய்துகொள்ள தீவிரமாக மறுத்தாள்,, மான்சியின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு சொத்துக்காக ஏற்படுத்தப்படும் அந்த சம்மந்தம் சுத்தமாக பிடிக்கவில்லை

ஆனால் உரிமையுள்ள தாய்மாமனை எதிர்க்க தைரியம் இல்லாமல் மான்சியை சரிகட்ட முயன்றனர்,, ஆனால் ஜெகன் தங்கையின் பக்கம் இருந்தான்,, அவனுக்கும் தாய்மாமன்பெற்று வைத்திருக்கும் அரைகுறைக்கு தனது அழகு தங்கையை கொடுக்க அறவே விருப்பம் இல்லை

பேச்சுவார்த்தை நாளடைவில் சண்டையில் போய் முடிய,, இறுதியாக மான்சியை கடத்தி வந்தாவது தாலி கட்டுவது என்று அருணாவின் தாய் வீட்டு ஆட்கள் முடிவு செய்ய ..

மான்சிக்கு எப்போதும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை,, ஜெகன் போலீஸில் புகார் செய்யலாம் என்று குதிக்க,, அவர்களின் தாத்தா இது குடும்ப சண்டை இதை போலீஸார் வந்து விசாரித்தால் ஊரில் மரியாதை இருக்காது என்று கூறி ஜெகனை அடக்கினார்

ஒரு கட்டத்தில் தாய்மாமனின் தொல்லைகள் அதிகரிக்க,, மான்சியை வேறு எங்காவது பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைப்பது என்று முடிவுசெய்தனர்,,

மான்சிக்கு அப்போது ஞாபகம் வந்தது அனிதாதான்,, உடனே அனிதாவுக்கு போன் செய்து கண்ணீருடன் தனது நிலைமையை சொல்லி தனக்கு ஏதாவது வழி சொல்லுமாறு மான்சி கேட்க ,,,

மறுநாளே அனிதா வந்துவிட்டாள்,, தனது அண்ணனின் மில்லில் மான்சிக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துவிட்டு கோவை வந்தவள் மறாவது நாளே மான்சிக்கு போன் செய்து உடனே கிளம்பி வருமாறு சொன்னாள்

குடும்பத்தினர் கண்ணீருடன் வழியனுப்ப,, அண்ணனும் தங்கையும் நடு இரவில் பயந்து பயந்து வீட்டைவிட்டு ரகசியமாக கிளம்பி ரயிலை பிடித்து கோவை வந்து சேர்ந்தனர்,,

ஜெகன் எம் சி ஏ படிப்பதால் உடனடியாக தங்கையை விட்டுவிட்டு போகவேண்டிய சூழ்நிலை,, ஆயிரம் ஆறுதல் மொழிகளுடன்,, கண்ணீர் வற்றும் வரை அழுதுவிட்டு தங்கையை அனிதாவிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பினான் ஜெகன்

தனது வீட்டில் மான்சியை தங்க வைத்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற காரணத்தால்,, ஜன சந்தடி மிகுந்த இடத்தில் இருக்கும் தனது தோழியின் வீட்டில் மான்சியை தங்க வைத்தாள் அனிதா

இனி மான்சியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு பக்கத்துணையாக அருணாவும் மாணிக்கமும் இருப்பார்கள் என்று மான்சியின் குடும்பத்தினர் நம்பிதான் அவளை கோவைக்கு அனுப்பி வைத்தார்கள்

ஆனால் மாணிக்கம் அருணா இவர்களின் ஆத்மாவைவிட ,, மான்சியை உயிராய் நேசிக்கும் சத்யனின் துணை அவளிடம் யாரையும் நெருங்கவிடாது என்பதுதான் நிஜம் 




மறுநாள் கண்விழித்த சத்யனுக்கு இந்த உலகமே தனக்காகத்தான் விடிந்தது போல் இருந்தது,, ஜன்னலை திறந்து தோட்டத்தில் இருக்கும் மகிள மரத்தில் அமர்ந்து கூவும் குயில்களின் நாதத்தை ரசித்தான், தொட்டிகளில் இருந்த பனிமூடிய ரோஜாக்களி அழகை விழியெடுக்காமல் ரசித்து பார்த்தான்,, ஜன்னலுக்கு அருகில் இருந்த மரமல்லி கிளையில் இருந்து கைநீட்டி ஒரு பூவை பறித்து முகர்ந்து பார்த்தான்,, சிறி சிரிப்புடன் மறுபடியும் படுக்கையில் போய் விழுந்தான்

எப்போது ஒன்பது மணி ஆகும்,, தனது காதல் தேவதையை மில்லில் சந்திக்கப்போகிறோமோ என்று ஏங்கினான்,, கடிகாரத்தில் மணி பார்த்தான் ஆறரை ஆகியிருந்தது,, சீக்கிரமாக நகராத சிறிய முள்ளை பார்த்தால் எரிச்சலாக வந்தது,,

எழுந்துபோய் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்,, குளித்து உடை மாற்றி மில்லுக்கு தயாராகி வெளியே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்,, வாட்ச்மேன் வாங்கி வந்திருந்த ஹோட்டல் டிபனை சாப்பிட்டு மில்லுக்கு புறப்படும் சமயத்தில் அவனது மொபைல் ஒலித்தது
யார் என்று எடுத்து பார்த்தான்,, அனிதாதான் அழைத்திருந்தாள்,, ஆன் செய்து காதில் வைத்து “ சொல்லு அனிதா” என்றான் சத்யன்

“ குட்மார்னிங் அண்ணா”என்றாள் அனிதா

“ ம்ம் குட்மார்னிங்,, என்ன காலையிலயே கால் பண்ணிருக்க,, என்ன விஷயம் சொல்லு ” என்றான் சத்யன்

எதிர் முனையில் சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ அண்ணா நம்ம வசு பெரியவளாயிட்டா அண்ணா,, இன்னிக்கு காலையில தான்” என்றாள் அனிதா குரலில் சந்தோஷத்துடன்

இப்போது சத்யனிடம் மவுனம் ,, வசந்தி சத்யனின் மூன்றாவது தங்கை,, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வசுவிடம் உனக்கு யாரை பிடிக்கும் என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட “ எங்க சத்யா அண்ணாவை தவிர யாரையுமே எனக்கு பிடிக்காது என்பாள்

பள்ளியில் அரைநாள் விடுமுறை விட்டால் கூட அடுத்த அரை மணிநேரத்தில் இங்கே வந்துவிடுவாள் ,, சத்யனின் பெண் தோற்றம் போல் அச்சு அசலாக சத்யனின் ஜாடையில் இருக்கும் வசுவின் குறும்புகள் சத்யனுக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் அதை துளிகூட வெளியே காட்டிக் கொள்ளமாட்டான்

பாட்டியுடன் சேர்ந்து கொண்டு எதையாவது செய்து “ அண்ணா இது நல்லாருக்கா பாருண்ணா,, உனக்கு இது பிடிக்குமா” என்று எதையாவது செய்து அவன் அறையைத் தவிர அந்த வீட்டையே தலைகீழாக மாற்றுவாள்,, அவன் அறைக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டானோ என்ற பயத்தில் போகமாட்டாள்
குழந்தைத்தனமாக சுற்றி வந்தவள் இப்போது பெரியமனுஷி ஆகிவிட்டாள் என்பது,, சத்யனுக்கு நம்பமுடியவில்லை,, அனிதாவுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் சிறிது நேரம் அமைதிகாத்தவன் , பிறகு யோசித்து “ வசுவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடு அனிதா” என்றான்

“ அதை நீயே வந்து சொல்லேன் அண்ணா,, அவளுக்கு நீன்னா உயிர்,, காலையிலேர்ந்து அண்ணாகிட்ட சொல்லிட்டியா அனிதான்னு நாலஞ்சு வாட்டி கேட்டா,, அவ நம்ம வீட்டு கடைக்குட்டி,, உனக்கும் அவளை பிடிக்கும்னு தெரியும், நீ வந்து அவளை ஆசிர்வாதம் பண்ணா அவ ரொம்ப சந்தோஷப்படுவா அண்ணா,, ப்ளீஸ்” என்று அனிதா அண்ணனிடம் பாசத்தை யாசகம் கேட்டாள்

சத்யன் எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு ,, இறுதியாக “ மில்லுக்கு நேரமாச்சு கிளம்புறேன்,, பை அனிதா” என்று சொல்லிவிட்டு இனைப்பை துண்டித்தான்

வேகமாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பியவனின் எண்ணங்கள் முழுவதும் கடைக்குட்டி தங்கை வசந்தி ஆக்கிரமித்திருந்தாள்,, தற்காலிகமாக மான்சியை மறந்தான்

சத்யனின் அம்மா வசந்தியின் பெயரை அவளுக்கு சூட்டியிருந்தார்கள், ஆனால் சத்யன் அம்மாவுக்கு நேர் எதிரான குணத்தை கொண்டவள் வசு பயங்கர குறும்புக்காரி, அவளுக்கு நடக்கும் முதல் விஷேசம் இது,, ஆனால் நான் எப்படி அந்த வீட்டுக்கு போகமுடியும்,, என்று குழம்பினான்

அனிதாவுக்கு பதில் சொல்லாமல் லைனை கட் செய்தது மனதை உறுத்தினாலும் தன்னால் வேறென்ன செய்யமுடியும் என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தான்
கார் மில்லில் வந்து நின்றதும்,, மறுபடியும் மான்சியின் நினைவுகள் மனதுக்குள் சம்மணமிட்டு அமர்ந்தது,, அவள் வந்திருப்பாளா,, என்று காரில் இருந்தபடியே சுற்றிலும் பார்வையை ஓட்டினான்

மணி எட்டு இருபது தான் ஆகியிருந்ததால் ஒன்றிரண்டு தொழிளாலர்கள் மட்டும் மில்லுக்குள் வந்து செக்கியூரிட்டி வைத்திருந்த லெட்ஜரில் கையெழுத்து போட்டுவிட்டு அவரவர்பகுதிகளுக்கு பிரிந்து போனார்கள்,, மான்சியை மட்டும் காணவில்லை,, சத்யன் காரைவிட்டு இறங்கி ரிமோட் மூலம் கதவுகளை லாக் செய்துவிட்டு மில்லுக்குள் நுழைந்தான்

மில்லின் பக்கவாட்டில் இருந்த, மரங்கள் அடர்ந்த குட்டி நந்தவனத்தில் தனது பார்வையை திருப்பினான்,, உடனே அவனது கால்கள் நகர மறுக்க,, கண்கள் சந்தோஷத்தில் அகல விரிந்தது

மான்சி அங்கிருந்த ஒரு சரக்கொன்றை மரத்திற்கு கீழே இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்,, சத்யனின் கால்கள் அவனிடம் அனுமதி கேட்காமலேயே அவளிடம் விரைந்தன

அவனை பார்த்ததும்,, முகம் மலர்ந்ததை அவசரமாக தலைகுனிந்து மறைத்தபடி மான்சி எழுந்து நின்றாள்,,

“ என்ன மான்சி இங்கே உட்கார்ந்திருக்க,, மில்லுக்குள் போகவேண்டியது தானே” என்று அன்புடன் கேட்ட சத்யனின் குரல் அவளை நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க வைத்தது 

லேசாக சிவந்த முகத்துடன் அவன் முத்தை நோக்கியவள்,, “ நான் சீக்கிரமா வந்துட்டேன் போலருக்கு,,, நான் போகவேண்டிய பிளாக் இன்னும் திறக்கலை,, அதான் இங்கே வந்து உட்கார்ந்தேன் ” என்று மெல்லிய குரலில் கூறினாள் மான்சி
தானும் இன்று சீக்கிரமே வந்துவிட்டது அப்போதுதான் சத்யனுக்கு உரைத்தது,, நான் இவளை பார்க்கும் ஆர்வத்தில் சீக்கிரமே வந்ததுபோல்,, இவளும் என்னை பார்க்கும் ஆவலில் வந்திருப்பாளோ என்று குதூகலமாக எண்ணமிட்ட மனதை அடக்கியவாறு “ அதுக்காக ஏன் இங்கே உட்காரனும்,, என்னோட கேபின் பியூன் திறந்திருப்பானே,, அங்க போய் உட்கரா வேண்டியதுதானே,, சரி வா போகலாம்” என்று கூறிவிட்டு சத்யன் திரும்பினான்

“ அது வந்து இங்க ரொம்ப நல்லா இருந்தது அதான் வந்து உட்கார்தேன்,, காலைலேயே நிறைய பறவைகளின் சத்தம்,, கேட்கவே ரொம்ப இனிமையா இருந்தது” என்று சொல்லிகொண்டே அவன் பின்னால் வந்தாள்

சட்டென்று நின்று அவளை திரும்பி பார்த்தான்,, சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது,, தானும் இன்று காலையில் எழுந்ததும் பறவைகளின் சத்தத்தை ரசித்தது ஞாபகம் வந்தது,, இவளுக்கும் எனக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கும் போல் தெரிகிறதே,, என்று எண்ணமிட்ட படி மறுபடியும் திரும்பி நடக்க ஆரம்பித்தான்

இருவரும் சத்யனின் அறையை நோக்கி நடக்க,, மான்சி அவனுடைய ஆச்சரியமான பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் “ எனக்கு பறவைகளின் சத்தம் ரொம்ப புடிக்கும்,, ஒவ்வொரு பறவையின் சத்தத்தை வச்சே அது எந்த பறவைன்னு ஓரளவுக்கு கண்டுபிடிப்பேன்,, சின்ன வயசுலேர்ந்தே இது எனக்கு ரொம்ப புடிக்கும்” என்று தன்னைப்பற்றிய சிறு தகவலை அவனுக்கு சொன்னாள்

அதற்குள் சத்யனின் அறை வந்துவிட்டது, அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தபடி “அப்படின்னா நீ ஆர்னிதாலஜி இல்ல படிச்சிருக்கனும் ஏன் பேஷன் டிசைனிங் படிச்ச மான்சி” என்று சத்யன் கேட்க

“எனக்கு இதுவும் ரொம்ப புடிக்கும்,, அதான் படிச்சேன் என்று பதிலலித்தாள் மான்சி

அறைக்குள் பியூன் டேபிளில் இருந்த வற்றை துடைத்து சீராக அடுக்கிக்கொண்டு இருந்தான்,, சத்யனையும் மான்சியையும் பார்த்து புன்னகையோடு குட்மார்னிங் சொன்னான்

தனது இருக்கையில் வந்து அமர்ந்த சத்யன் “ என்ன குமார் எல்லாம் முடிஞ்சுதா” என்றான்

“ ம் எல்லாம் தொடச்சு அடுக்கிட்டேன் சார்,, நான் போகவா” என்று கேட்டான் பியூன்

“ சரி நீ போய் ரெண்டு கப் காபி கொண்டு வந்து குடுத்துட்டு போ” என்ற சத்யன் மான்சியை பார்த்து “ உட்கார் மான்சி” என்று எதிர் இருக்கையை காட்டினான்

“ தாங்க்யூ சார்” என்று அமர்ந்தாள் மான்சி,, பியூன் வெளியேற,,

“ எனக்கு கூட சாப்ட்வேர் இன்டஸ்ட்ரியில் போகனும்னு தான் சின்ன வயசுல ஆசை,, ஆனால் அம்மாவோட இந்த மில்லை நிர்வாகம் பண்ணனும் என்ற ஒரே காரணத்தால் தான் டெக்ஸ்டைல்ஸ் இஞ்ஜினியரிங் படிச்சுட்டு,, மேல் படிப்பு எம்பிஏ யூஎஸ்ல முடிச்சேன்,, வந்ததுமே இந்த மில்லின் இந்த சீட்ல உட்கார்ந்து இப்போ அஞ்சு வருஷம் ஆயிருச்சு” என்று தன்னைப்பற்றிய விபரங்களை அவளுக்கு சொன்னான்

இது எல்லாமேதான் மான்சிக்கு, அனிதாவின் உபயத்தில் தெரியுமே,, இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் லேசாக விழிவிரித்து “ ஓ அப்படியா’ என்றாள்

“ ம்ம்,, அதுக்கப்புறம் இந்த மில்லை சீராக்கவே என் நேரம் போயிருச்சு,, எனது சந்தோஷம் துக்கம் எல்லாத்தையும் மில்லின் வளர்ச்சியில் தான் காட்டுவேன்,, என்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி ஒருநாள்கூட யோசிக்கலை மான்சி,, ஆனா நேத்து காலையிலிருந்து என்னுடைய பிற்க்காலம் பற்றிய சிந்தனைகள் இடைவிடாமல் வருது,, வருங்காலத்தில் ஒரு குடும்பத்தின் தலைவனாக நான் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைகள் வருது மான்சி” என்று தனது மனநிலையை அவள் கண்களைப் பார்த்தபடியே சத்யன் சொல்ல

“ அதான் இப்பகூட ஒரு குடும்ப தலைவராகத்தானே இருக்கீங்க” என்று மான்சி சத்யனுக்கு அவனது அப்பாவின் குடும்பத்தில் இருக்கும் மரியாதையை மனதில் வைத்து அதை சொல்லிவிட்டு அய்யோ என்று தனது நாக்கை கடித்துக்கொண்டாள்

சத்யன் நெற்றியை சுழித்து புருவத்தை சுருக்கி “ நீ என்ன சொல்ற” என்று கேட்க
சட்டென்று சுதாரித்த மான்சி “ அதான் இந்த மில்லும் ஒரு குடும்பம் மாதிரிதானே அதை வச்சு சொன்னேன்” என்று சமாளித்தாள்

“ ஓ அதுவா” என்று இலகுவான சத்யன் “ ஆமாம் நீ சொல்றதும் சரிதான்,, இந்த மில் ஒரு குடும்பம்னா நான் குடும்பத்தலைவன் தான்” என்று கூறிவிட்டு சிரித்த சத்யன் “ ஆமா நீ ஏன் மான்சி அனிதா கூடவே தங்கமா , அவ ப்ரண்ட் வீட்டுல தங்கின,, அனிதா வீட்டுல கெஸ்ட்ஹவுஸ் கூட இருக்கே என்று சத்யன் கேட்க


சிறிதுநேரம் என்ன பதில் சொல்வது என்று தயங்கிய மான்சி அவனிடம் பொய் சொல்ல மனம் வராமல் தயக்கத்தை உதறிவிட்டு “ அனிதா முதலில் அவக்கூட தான் தங்க சொன்னா,, ஆனா அனிதா வீட்டுல தங்கினா உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் அதனால்தான் வேற எங்கயாவது ரூம் பார்க்க சொன்னேன்,, வேற லேடிஸ் ஹாஸ்டல் எதிலேயும் இடம் இல்லாததால், தற்சமயம் இந்த வீட்டுல தங்கச்சொன்னா,, அதான்.....” என்று மான்சி கூறிவிட்டு தலையை குனிந்து கொண்டாள் 




No comments:

Post a Comment