Thursday, August 6, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 2

திரும்ப திரும்ப ஹரி கிருஷ்ணாவை உலுக்க கிருஷ் தன் நிலைக்கு திரும்பினான்.

"சாரிடா எனக்கு பழைய ஞாபகம் வந்தது"

"ஏண்டா நீ செய்றது உனக்கே நல்லா இருக்கா"

"என்னடா சொல்ற"

"நீ அப்பா கூட சண்டை போட்டது, பேசாம இருக்கிறது எல்லாம் சரி. அதோட விடாம எதுக்கு அம்மா கிட்ட பேச மாட்டேன்கிற"

"அம்மா கிட்ட பேசுனா, அப்பா கிட்ட பேச சொல்லி கட்டாய படுத்துறாங்க. அதனாலதான்"

"சரிடா, அட்லீஸ்ட் உன் தங்கை கலா கிட்ட பேசுறியா"

"ஆமாண்டா அவ கிட்ட அடிக்கடி பேசுவேன்"

 என்று சொல்லி பெரு மூச்சு விட்டான்.

இவனை எப்படி பழைய மூடுக்கு திருப்புவது என்ற யோசித்த ஹரிக்கு ஒரு ஐடியா தோன்றியது.

"டேய் கிருஷ், அந்த டேபிள்ல இருந்த பொண்ணு எப்படி?"

"நல்லாதான் இருக்கா, ஆனா எவன் கிட்டயும் மாட்ட மாட்டான்னு நினைக்கிறேன்"

"எதை வச்சு சொல்ற"

"அவளை சுத்தி எத்தைனையோ பசங்க லுக் விட்டாலும் அசையாம உக்கர்ந்துருக்கா பாரேன்."

"ஒ நீ அவளை பார்த்தா சில நிமிஷத்ல இவ்வளவு விஷயங்களை கவனுச்சு இருக்கியா? நீ பெரிய ஆள் தாண்டா" என்று ஹரி மனதுக்குள் நினைத்து கொண்டே

"டேய் இது வரைக்கும் எத்தனை பொண்ணுங்கள டாவடுச்சுரிக்க?என்னடா ரொம்ப யோசிக்கிற"

"10 இருக்கும்னு நினைக்கிறேன். எண்ணிக்கை சரியாய் தெரியலை"

"டேய் உனக்கு 10 ரொம்ப ஜாஸ்தி"

"பொறாமை படாதே. எல்லா பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆய்டுச்சு. என்னோட ராசி அப்படி."

"ஆமா உனக்கு பொண்ணுங்களோட சைகாலஜி தெரியுமா? எப்படிடா அத்தனை பொண்ணுங்களை மடக்கின."

"மாம்ஸ் அதுக்கு சைகாலஜி தெரியணும்னு அவசியம் இல்லை. பொண்ணுகளோட கொஞ்சம் அன்போட பேசி பண்போட நடந்துக்கிட்டா உன்னை தேடி வருவாங்க. இந்த 10 பொண்ணுங்கள்ள ஒரு பொண்ணை கூட நான் ஏமாத்தினது இல்லை.அவங்க தான் என்னை ஏமாத்திட்டாங்க."

"சும்மா ரீல் விடாத. மச்சான் இந்த பொண்ணை உன்னால மடக்க முடியுமா?"

"எந்த பொண்ணு,? ஒ இந்த பொண்ணா? கொஞ்சம் கஷ்டம் மாம்ஸ், இருந்தாலும் ஓகே என்ன bet? "

"உனக்கு என்னோட அண்ணா நகர் பிளாட்."

"உண்மையா சொல்றியா"

"ஆமாம் ஏன் என்னை நம்ப மாட்டியா"

"ச்சே அப்படி இல்லை. நீ இந்த அளவுக்கு பெட் கட்டுறமாதிரி அந்த பெண் கிட்ட என்ன இருக்கு."

"நீ அவளை சரியா கவனிக்கலைன்னு நினைக்கிறேன். பக்கத்தில போய் பார்த்திட்டு வா."

அடுத்த டேபிளில் அமர்ந்திருந்த ஸ்வேதா பிரகாஷ் உடன் பேசி கொண்டு இருக்க, பிரகாஷ் தன் சட்டை பாக்கெட்டில் இருந்து கார்டு ஒன்றை எடுத்து அவளிடம் நீட்ட ஸ்வேதா முகம் சிவந்தாள். அதை கொஞ்ச தூரத்தில் இருந்து கவனித்த கிருஷ் தன் Black Berryயில் அவளை படம் பிடித்து கொண்டு, திரும்பி தன் இருக்கையில் அமர்ந்தான்.

ஹரிக்கு அருகில் உட்கார்ந்து அவள் போட்டோவை பார்க்க அசந்து போனான்.

"என்ன மாம்ஸ் இப்போ தான் நான் சரியா கவனிக்கிறேன்.உண்மைலே அழகா தான் இருக்கா.இவளை சுத்தி நிறைய பேர் ஜொள்ளு விடுரதுல தப்பு இல்லைன்னு தோணுது"

"சரி மச்சான் இப்போ போட்டிக்கு நீ ரெடியா"

"அதல்லாம் ஓகே. ஆனா புது சிக்கல் ஆரம்பிசுடுசுன்னு நினைக்கிறேன். அவள் பக்கத்தில இருக்கிற அந்த பைய்யன் அவள் கிட்ட ஏதோ கார்டு கொடுத்தான். அவள் முகம் சிவந்து போனதை பார்த்தால் அவங்க ரெண்டு பேரும் கட்டாயம் காதலர்களாக தான் இருக்க வேண்டும்"

"டேய் அப்படின்னா அந்த பொண்ணை விட்டுடா. நான் இந்த போட்டியை வாபஸ் வாங்கிக்கிறேன்"

"டேய் எதுக்கு அவசர படுற. இதல்லாம் என்னோட guessசரியா இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.ஒன்னும் பிரச்சனை இல்லை.இப்போ அவ யாரு, அவளோட விருப்பு, வெறுப்புகள் என்ன? இதல்லாம் தெரிஞ்சுக்க பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்துற யஷ்வந்த் கிட்ட நான் முதல்ல பேசணும்".
யஷ்வந்த் கம்பெனி வேலைக்கு சேரும் சில பேர் மீது நடத்தும் profile verification மூலமாக பழக்கம். யஸ்வந்துக்கு போன் அடிக்க,
"யஸ்வந்த் நான் MMS மூலம் ஒரு போட்டோ அனுப்பிச்சு இருக்கேன், எனக்கு அர்ஜென்ட்டா அவளை பத்திய விஷயங்கள் வேணும்"

"என்ன விஷயமா?"

"இல்லை அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். கொஞ்சம் சரியா விசாரிச்சு சொல்லணும். இது ரெண்டு பேரு வாழ்கை சம்பந்த பட்ட விஷயம். நான் எப்போ திரும்ப கூப்பிடனும்."

"நானே ரெண்டு நாள்ல கூப்பிடுறேன்" என்று சொல்லி யஸ்வந்த் போனை கட் செய்தான்.
அவன் பேசியதை கேட்டு குழப்பம் அடைந்த ஹரி, "ஏன்டா அவளை கல்யாணம் பண்ணிக்க போறியா?"

"இல்லை மாம்ஸ், சும்மா ஒரு வேடிக்கைக்கு தான் அப்படி சொன்னேன். மற்றபடி இப்படி சொன்னாதான் அவன் சரியான விபரங்களை சொல்லுவான். இது ஒரு புது டெக்னிக்" என்று சிரித்து கொண்டே கிருஷ் சொல்ல,

"டேய் எனக்கு என்னமோ நீ தவறான பாதைல போற மாதிரி தெரியுது. வேணாம்டா" என்று ஹரி கெஞ்ச, கிருஷ் சிரித்து கொண்டே, "சரி நாம கிளம்பலாம்" என்று காபி டே யை விட்டு ஹரியுடன் வெளி வந்தான்.

ஸ்வேதா பிரகாஷ் இடம் "என்ன பிரகாஷ், நீ ஏதோ சொல்லன்னுமு கூட்டி வந்து இப்போ இந்த கார்டை கொடுத்து என்னை பிடிச்சு இருக்கான்னு கேக்குற. 

நீ என்னோட சீனியர், அதோட எங்களோட family friend வேற, உன் மேல எனக்கு மதிப்பு இருக்கு. ஆனால் காதல் இருக்கான்னு எனக்கு தெரியலை. கொஞ்சம் யோசிக்க அவகாசம் கொடு. நாம அடுத்த வாரம் சந்திக்கும் போது என்னோட முடிவை சொல்றேன்."

பிரகாஷ் பெரு மூச்சு விட்டபடி "அப்பாடா முதல்ல என்னோட காதலை அவள் reject பண்ணலை. ஒரு வாரத்ல முடிவு சொல்றேன்னு சொல்லி இருக்கா.சரி வெயிட் பண்ணலாம்" என்று நினைத்து கொண்டே, 

"சரி ஸ்வேதா நாம கிளம்பலாம்" என்று வெளியில் வர அவளை ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டு தன் பைக்கில் அவன் வீட்டுக்கு திரும்பினான்.

காலை எட்டு மணிக்கு Prestiege Meridian-ல் அமைந்து இருக்கும் தலைமை அலுவலகத்துக்கு கிருஷ் வந்து சேர, வழக்கம் போல் ஆபீஸ் ஸுக்கு யாரும் வரவில்லை. பத்து மணிக்கு ஆரம்பிக்கும் ஆபீஸில் எட்டு மணிக்கு வருவது மூலம் சில முக்கிய வேலைகளை முடிப்பது கிருஷ் வழக்கம். ஹரியும் ஒன்பது மணிக்கு வருவதாக சொல்லி இருக்கிறான். 

"கம்பெனியின் பாலன்ஸ் சீட் ரெடி பண்ண வேண்டும். ஆடிட்டர் பதினோரு மணிக்கு வருவதாக சொல்லி இருந்தார்"இதை நினைத்து கொண்டே வேலை செய்து கொண்டிருக்க, ஒன்பது மணி அளவில் செக்யூரிட்டி வந்து 

"KK சார் ஹரி சாரை தேடி ஒரு பொண்ணு வந்துருக்காங்க. அவரோட ரூம் பூட்டி இருக்கு. எங்க உட்கார சொல்லணும். ".


"ஏன் கான்பெரன்ஸ் ரூம்ல உட்கார சொல்ல வேண்டியது தானே", என்று சொல்லி விட்டு கான்பெரன்ஸ் ரூமின் சாவியை எடுத்து கொடுக்க, செக்யூரிட்டி சாவியை வாங்கி கொண்டு திரும்பி சென்றான். 

பத்து நிமிடத்தில் ஹரி வந்து சேர, கிருஷ்ணாவுக்கு குட் மார்னிங் சொல்லி விட்டு கிருஷ்ணாவுக்கு அடுத்து அமைந்திருந்த அவன் கேபினுக்குள் நுழைந்தான். 

அதற்குள் இன்டர்காமில் போன் வர ஹரி பேசி விட்டு வைக்க, அந்த பெண் உள்ளே நுழைந்து "குட் மார்னிங் சார்" என்று சொல்ல,தலை நிமிர்ந்து பார்த்த ஹரி அசந்து போய் நின்றான். 

அவனின் அதிர்ச்சியை அறியாத ஸ்வேதா, "என்ன சார் பிரச்சனை" என்று கேட்க, 

"No problem, please take your seat, என்று சொல்ல அவள் இருக்கையில் அமர்ந்தாள். 

"சார் என்னோட பெயர் ஸ்வேதா ஷெட்டி, நான் காம்பஸ் இண்டர்வியுல செலக்ட் ஆகி பாக்டரில ஒரு மாத ட்ரைனிங்ல இருந்தேன்."

"ஓகே என் பேரு ஹரி ஹர சுப்ரமணியன், ஹரின்னு கூப்பிடலாம். உங்க qualification MBA தானே",

"ஆமா சார் specialisation in Finance and Marketing" 

"ஓகே, bye the bye, Welcome to Sun Solar Systems. உங்களுக்கு கம்பெனியோட operation எல்லாம் ஓரளவுக்கு ஐடியா கிடச்சுருக்கும்.அங்கே நீங்க பாக்டரி working தெரிஞ்சுகிட்டிங்க. நீங்க இங்கே எல்லா டிபார்ட்மென்ட்லயும் rotation முறைல வேலை கத்துக்கணும்.ஆறு மாத முடிவில உங்க திறமைய பார்த்து எந்த டிபார்ட் மெண்டல வேலைக்கு போடலாம்னு நாங்க decide பண்ணுவோம். Of courseஉங்க சம்மததோடதான்."

"நீங்க முதல் ஒரு மாசம் admin-ல இருந்துட்டு, அடுத்த ட்ரைனிங் account, finance. அது மூணு மாசம். கடைசில, எங்க HRடிபார்ட்மென்ட். ஓகே யா. ஒரு நிமிஷம் இருங்க", என்று சொல்லி விட்டு இன்டெர் காமில் கிருஷ்ணாவை அழைத்தான். 

உள்ளே நுழைந்த கிருஷ்ணாவை பார்த்து ஸ்வேதா ஆச்சர்யபட்டு நிற்க, கிருஷ்ணாவும் ஆச்சர்யத்தில் உறைந்து போனான். 

முதலில் சமாளித்து கொண்ட கிருஷ், "Hai, I am Krishna Kumar, CFO of this company" என்று கை நீட்ட ஸ்வேதா சமாளித்து கொண்டு 

"sorry, I am Swetha Shetty, joined as MT a month back at factory and now moving to HO for training" என்று சொல்ல, "சார் நீங்க எப்படியும் ஒரு நாற்பது வயசுக்கு மேல இருப்பிங்கன்னு நினைச்சேன்". "I am surprised, you are so young"

"Thanks for the complements. நீங்க உட்காருங்க பேசலாம்" என்று சொல்லி விட்டு, "ஹரி நீ இப்போ இவங்களை எங்க ட்ரைனிங் கொடுக்க போற"

"முதல் மாசம் கொஞ்சம் admin தெரிஞ்சுகட்டும். இவங்களுக்கு பைனான்ஸ் specialisation இருக்கிறதால, உன்னோட டிபார்ட்மென்ட்ல அதிகமான ட்ரைனிங் கொடுத்து அனுப்பலாம்னு இருக்கேன்.""ஆமா admin யாருக்கு ரிப்போர்ட் பண்ணுறாங்க""CEO-க்கு தான்." என்று பதில் சொன்ன ஹரி "ஸ்வேதா இந்த கம்பெனில சேர்மன், CEO அடுத்தபடியா பவர்புல் ஆன ஆள் இந்த கிருஷ்தான். அதனால அவன் கிட்ட பகைச்சுக்காதிங்க", என்று சிரித்தபடி ஹரி சொல்ல, 

"டேய் நீ ரொம்ப build up கொடுக்கிற." 

"Dont worry, நீங்க உங்க வேலைய பாருங்க ஸ்வேதா, ஹரி, உன்னோட வேலை முடிஞ்சவுடனே என் கேபின் வா" என்று சொல்லி விட்டு, இருவருக்கும் பை சொல்லி கிளம்பினான்.




ஸ்வேதாவை அட்மின் டிபார்ட் மென்டில் வேலைக்கு சேர்த்து விட்டு விபரங்களை சொல்லி விட்டு, பத்து மணி அளவில் கிருஷ்ணாவின் கேபினுக்குள் நுழைந்தான் ஹரி.சிந்தனையில் ஆழ்ந்து இருந்த கிருஷ், ஹரியை முதலில் கவனிக்கவில்லை.

"டேய்" என்று ஹரி அழைக்க, 

"ஏய் எப்ப வந்த,"

"நீ ஏதோ யோசனைல இருக்கிற மாதிரி தெரியுது. என்னடா பிரச்சனை.?

"டேய் நேத்து தான் இந்த பெண்ணை மடக்கனும்னு சவால் விட்ட, இப்போ பாரு இவளே என் கண் முன்னாடி நிக்கிறா."

"டேய் ஏடா கூடமா எதுவும் பண்ணிராத."

"சீ வாயை மூடு, அவளை ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா கொஞ்சம் அவளை வாட்ச் பண்ணிட்டு அவளை எப்படி அட்டாக் பண்ணுறதுன்னு முடிவு பண்ணுறேன்."

"அய்யா சாமி என்னை ஆள விடு. ஏற்கனவே சில பொண்ணுங்க விஷயத்ள உனக்கு உதவி செஞ்சு நான் திட்டு வாங்கினது போதும். இந்த பொண்ணு விஷயத்ல நான் தலையிட மாட்டேன். என் daddy முதுகில டின் கட்டிருவாரு. இந்த நிமிஷத்ல இருந்து இந்த பொண்ணு விஷயத்ல, நீ யாரோ நான் யாரோ" என்று தலைக்கு மேல் கை குவித்து, "என்னை விடுடா மச்சான்"என்று சொல்ல, மெல்ல சிரித்தான் கிருஷ்.

"சரி உன்னை தொல்ல செய்ய மாட்டேன். ஆனா நீ அந்த பொண்ணை பத்தின விபரங்கள், அவளோட resume எனக்கு சாய்ந்தரம் வேண்டும்.சரியா" என்று கேட்க

"சரி, உன்னோட நண்பனா இருந்த பாவத்துக்கு அந்த கருமத்தை செஞ்சு தொலைறேன்." என்று சொல்லி "இப்போ நான் கிளம்புறேன்" என்று வெளியேற, கிருஷ் தனது ICICI பேங்க் அக்கௌன்ட் டை திறந்து நெட் டில் அம்மா பெயரில் transfer செய்தான். சில நிமிடங்களில் அவனுக்குSMS வர, போனை எடுத்து தங்கையை கூப்பிட்டான். 

"டேய் அண்ணா என்ன விஷயம்"

"இங்க பாருடி அம்மா நேத்து கூப்பிட்டாங்க. பண விஷயமா. transfer பண்ணிட்டேன்னு சொல்லு,"

"ஏன் நீயே பேச வேண்டியது தான,"

"எனக்கு இப்போ மூடு இல்லை, அப்புறம் கூப்பிடுறேன்னு அம்மா கிட்ட சொல்லு"

"அங்கே எல்லாரும் சௌக்கியமா?".
"ஏன் நேரடியா கேக்க வேண்டியதுதானே ஹரி நல்லா இருக்கானான்னு"சிரித்தபடி கேட்க

"போண்ணா" என்று சொல்லி சினுங்கியபடி போனை வைத்தாள் கலா.

பழைய சம்பவங்களையும், அடிக்கடி ஹரி செய்யும் உதவியையும் அவன் மறக்காமல் சொல்லி விடுவதால் கலாவுக்கு ஹரி மீது தனிப்பட்ட பிரியம். சில சமயங்களில் கிருஷ்ணாவுடன் ஹரியும் மதுரை வருவது உண்டு. அப்போது ஹரியை கண்டால் கலா ஓடி மறைந்து விடுவாள். ஹரியின் கண்களை அவளை தேடி ஏமாறுவதை கண்டு தன் ஓர கண்ணால் ரசிப்பது கிருஷ்ணாவின் வழக்கம். 

அவனை பொறுத்தவரையில் ஹரி போன்ற ஒரு மாப்பிள்ளை கலாவுக்கு எங்கு தேடினாலும் கிடைக்காது என்று தெரியும். பெரிய இடத்து பிள்ளையாக இருந்தாலும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அம்மா சிறிய வயதில் இறந்து போனதாலும்,அப்பா சுப்ரமணியம் அடிக்கடி வெளி நாடு டூர் சென்று விடுவதாலும் அவனுக்கு பெற்றோர்கள் பாசம் கிடைத்ததில்லை. அவனுக்கு கிருஷ் மட்டுமே நெருங்கிய நண்பன். 

தன் சுகம் துக்கம் எல்லாவற்றையும் ஹரி கிருஷ்ணாவிடம் தான் பகிர்ந்து கொள்வான். நண்பனின் தங்கையை டாவடிப்பது தவறு என்று தெரிந்தாலும், கலா அவனை விரும்புகிறாள் என்று அவனுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.


மதுரை வீட்டில் சாப்பிடும்போது ஹரியை தனி கவனம் எடுத்து பார்த்து கொள்வது கலாவின் வழக்கம். 

இதை எல்லாம் நினைத்து சிரித்து கொண்டே, இன்டெர் காமில் ஹரியை அழைத்து, "டேய் கலா உன்கிட்ட அவசரமா பேசணுமாம். நீ கூப்பிட்டு பேசு" என்று சிண்டு முடிந்து விட்டு, மனதுக்குள் சிரிக்க ஆரம்பித்தான்.

மதியம் ஒரு மணி அளவில் லஞ்ச் பிரேக் பெல் அடிக்க ஹரி, கிருஷ்ணாவுடன் pantry ரூமுக்கு வர, அங்கே இருந்த அனைவரும் கிருஷ்ணாவுக்காக காத்திருந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட அந்த அலுவலகத்தில், தினமும் மதிய உணவு சாப்பிடும் பணியாளர்களுடன் அமர்ந்து உணவு உண்பது கிருஷ், ஹரி இருவரின் வழக்கம். 

அதிலும் கிருஷ் எல்லாரின் டிபன் பாக்ஸ் எடுத்து ஒரு ஸ்பூன் சாப்பிடுவது வழக்கம். அவனின் இந்த கள்ளம்,கபடம் இல்லாத பழகும் தன்மை அனைவருக்கும் பிடிக்கும்.இன்றுஸ்வேதாவும் உணவு வேளையில் கலந்து கொள்ள வர, அங்கே இருந்த ஆண் ஊழியர்கள் அழகு தேவதையை கண்டவுடன் உற்சாகம் அடைந்தனர்.

கிட்டதட்ட இருபது பெண்களும், எண்பது ஆண்களும் கொண்ட அந்த ஆபீஸில் கிருஷ் ஆண் பெண் வித்யாசம் இல்லாமல் பழகுவது வழக்கம். கிருஷ் ஒவ்வொரு ஊழியர்களின் டிபன் பாக்ஸ் திறந்து ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட, கிருஷ்ணாவுக்கு வந்த ஹோட்டல் சாப்பாடை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். 

எல்லாரிடமும் ஒரு ஸ்பூன் சாப்பாடை எடுத்து சாப்பிட கிருஷ், ஸ்வேதா அருகில் வந்தவுடன் அவள் டிபன் பாக்ஸ்சை திறந்து அவனுக்கு காண்பிக்க, அவளை தாண்டி அடுத்த பாக்ஸ் சென்று விட்டான்.சாப்பிட்டு விட்டு ஒவ்வொருவராக அந்த இடத்தை காலி செய்ய புதிய ஊழியர்கள் வந்து சாப்பாடை பகிர்ந்து கொள்ள, அரை மணி நேரம் கழித்து கிருஷ் ஹரி இருவரும் தங்கள் இடத்துக்கு விரைந்தனர.

தன் அறைக்கு வந்த கிருஷ் கண்ணை மூடி ஸ்வேதா கொடுத்த டிபன் பாக்ஸ் சையும், அவன் சாப்பிட எடுக்காமல் சென்றதால் அவள் முகம் போன போக்கையும் நினைத்து பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.

இன்டெர் காம் ஒலித்தது.

"சார் உங்களையும், ஹரி சாரையும் சேர்மன் அவசரமாக கூப்பிடுறார்"என்று ரிசப்சனிஸ்ட் ஆனி சொல்ல,

"சரி நாங்க உடனே வரோம்" என்று சொல்லி விட்டு ஹரி காபின் சென்று அவனையும் அழைத்து கொண்டு அடுத்த மாடியில் அமைந்து இருக்கும் சேர்மனை பார்க்க சென்றனர்.

கிருஷ்ணாவுக்கு ஒரே சிந்தனை, "டேய் ஹரி அங்கிள் எதற்கு கூப்பிட்டு இருப்பார்".
"அவருக்கு என்ன வேலை. நீ வேற, போர் அடிச்சுருக்கும். நம்ம பிசினஸ் விஷயமா, இந்த வருஷம் எவ்வளவு லாபம் வரும்னு உன்கிட்ட கேப்பாரு, வேற என்ன".
அதற்குள் சேர்மன் அறைக்கு வாசலில் இருந்த அவர் PA கீதா உள்ளே போக சொல்ல, கையில் இருந்த நோட் உடன் இருவரும் உள்ளேநுழைந்தனர்.

சுப்ரமணியம், வயது 55மாநிறம், சொந்த ஊர், திருச்சி. அடிக்கடி வெளிநாடு சென்று வருவதால் உடலில் தெரிந்த செழுமை, அவரை பார்த்து கொண்டுருந்தான் கிருஷ்.

"ஹாய், கிருஷ் ஹரி, எப்படி இருக்கீங்க. பாத்து ரெண்டு வாரம் ஆக போது".
ஹரி மனதுக்குள், "நீங்க ரெண்டு வாரம் வெளி நாடு போனதால நாங்க எல்லாம் சந்தோசமா இருந்தோம். இப்போ என்ன குண்டு போட போறாரோ" என்று முனகினான்.

"ஹரி, நீ என்னமோ என்னை மனசுக்குள்ளதிட்டுறது மாதிரி தெரியுது"என்று சிரிக்க, 

கிருஷ் "ஒன்னும் இல்லை சார், நாங்க இப்போ தான் பேசிட்டு வந்தோம்.என்ன காரணமோ தெரியலை. திடீர்னு சேர்மன் நம்மளை ஏன் அழைசுக்கார்னு".
"கிருஷ் I know that you are smart. இந்த மீட்டிங்கை நாம எமெர்ஜென்சி மீட்டிங் அப்படின்னு சொல்லலாம்.நம்ம CEO ராம துரை paperபோட்டுட்டார்"
"என்னது" ஆச்சர்யமாக ஹரி கேட்க





No comments:

Post a Comment