Saturday, August 29, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 10

ஜனவரி மாதம் 2011 ஆண்டு. 

ஏற்காடு காபி எஸ்டேட். நடுவில் இருந்த அந்த பங்களா. பெரிய, வசதிகள் நிறைந்த அந்த வீடு கட்டப்பட்டு இருவது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். உள்ளே ஹாலில் சிவா தனது கையில் இருந்த அந்த திருமண ஆல்பத்தை புரட்டி கொண்டு இருந்தான்.

சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நடந்த திருமணம். அவன் மனதில் பசுமையாக நிறைந்து நிற்கின்றது. வீணா அனைத்து போட்டோக்களிலும் சிவா முகத்தையே பார்த்து கொண்டு இருப்பது தெரிகிறது. கண்களில் நீர் துளிக்க வேதனை பெருமூச்சுடன் ஆல்பத்தை கீழே வைத்தான்.

"டாடி"என்று கத்திக்கொண்டே ஓடி வந்து பிரபா அணைத்து கொள்ள "ஹாய். செல்ல குட்டி இன்னைக்கு ஸ்கூல் போகலையா?" என்று கேட்க, "அய்யோடாடி, இன்னைக்கு சண்டே ஸ்கூல் கிடையாது. நாம நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் போகலாம்னு சொல்லி இருந்திங்களே மறந்து போச்சா. வயசானா இப்படிதான் ஞாபக மறதி அதிகமா போய்டும்" என்று சொல்லி விட்டு சிரிக்க, அவளின் மழலை பேச்சில் அப்படியே தோய்ந்து போனான். 

"

உன் அம்மா ஒரு வார்த்தை பேச மாட்டாளான்னு ஏங்கினேன்.
 அதுக்கு எல்லாம் சேர்த்து நீ பேசி என் உயிரை வாங்கிறே".
பிரபாமுகம் வாடி போனது. 

புரிந்து கொண்ட சிவா, "சாரிடா தங்கம். ஒரு விளையாட்டுக்கு சொன்னேன். நாம பிரேக் பாஸ்ட்சாப்பிட்டு கிளம்பினா, கோயிலுக்கு போயிட்டு மாலை அஞ்சு மணிக்குள்ள திரும்ப வந்துடலாம்" என்று சொல்ல, "சரி டாடி" என்று சந்தோசமாக தலை ஆட்ட, சிவாவின் நினைவுகள் பின்னோக்கி சென்றன. 

ஜனவரி மாதம் 2007 ஆண்டு. 
சென்னை சென்ட்ரலில் இறங்கிய சிவா, ஏற்கனவே தீபக் கொடுத்து இருந்த போன் நம்பரை அழுத்த, "ஹலோ"என்று ஒரு பெண் குரல் ஒலித்தது. 

"அம்மா என் பேரு சிவா. நான் தீபக்கோட பிரெண்ட். உங்க கிட்ட தீபக் சொல்லி இருப்பான்னு நினைக்கிறேன். வீடு விஷயமா...."

தீபக் அத்தை பத்மாவதி "சொல்லுங்க தம்பி, ஆமா, தீபக் எல்லாம் விபரமா சொன்னான். நீங்க இப்போ எங்க இருக்கீங்க.சென்ட்ரல்ல தான.நீங்க எலெக்ட்ரிக் ட்ரெயின் பிடிச்சு வரலாம். இல்லைனா ஆட்டோல வந்துடுங்க. ஒரு நூத்தம்பது கேட்பான். சீக்கிரம் வந்துடலாம்."
பர்சை திறந்து பார்க்க, அவனுக்கு அவன் அக்கா தரும் மாத செலவுக்கான பத்தாயிரம் ரூபாய் இருந்தது."சரிங்க, வந்து கிட்டே இருக்கேன்".
போர்டர் தனது இரண்டு பெட்டிகளை வைக்க, ஆட்டோ வில் உட்கார்ந்த சிவா அடுத்த அரை மணி நேரத்தில் ஆவடி தீபக் அத்தை வீடு சேர்ந்தான்.

வாசலில் காத்து கொண்டு இருந்த அந்த அம்மா, ஒரு ஐம்பது வயது மதிக்க தக்க குண்டான உருவம், "வாங்க தம்பி"என்று அழைத்து கொண்டு, "டேய் வேலு சிவா தம்பியோட பெட்டிகளை எடுத்து மாடி ரூம்ல வை" என்று சொல்ல, உள்ளே இருந்து வந்த வேலு பெட்டிகளை எடுத்து மேலே கொண்டு சென்றான்.


சிவா ஆட்டோ டிரைவருக்கு காசு கொடுத்து விட்டு திரும்ப, பத்மாவதி பேச தொடங்கினாள்.

"தம்பி பாப்பாவை என் கிட்ட கொடுங்க, உள்ளே வாங்க" என்று அழைக்க, பிரபாவை கொடுத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தான். 

அந்த வீடு ஒரு நடுத்தர குடும்பத்தின் அத்தனை அடையாளங்களுடன் இருந்தது. இரண்டு பெட் ரூம், சமையல் அறை, பாத்ரூம், ஹால் இருந்தாலும் இடம் குறைவாக இருந்தது.

உள்ளே இருந்த சேரில் சிவா உட்கார, தொடர்ந்து வந்த வேலு அருகில் கீழே அமர்ந்து கொண்டான்.

"வேலு, மேல சேர்ல உட்காருங்க" என்று சொல்ல, 

"இல்லை சார் எனக்கு தரைல உட்காருவது தான் ஈஸியா இருக்கு"

சிரித்து கொண்ட சிவா, பத்மாவதி தோளில் இருந்த குழந்தை தூங்கி விட்டதை கண்டு "அம்மா பாப்பா தூங்கிட்டா" என்று சொல்ல, 

"அப்படியா தம்பி, டேய் வேலு பாய் போட்டு அதுல பெட்சீட் விரிடா. பாப்பாவை விட்டுட்டா கொஞ்ச நேரம் தூங்குவா" என்று சொல்ல, வேலு படுக்கை விரித்தவுடன் கவனமாக குழந்தையை விட்டாள் பத்மாவதி.

"தம்பி, உங்களுக்கு தோசை ஊத்தட்டா" என்று கேட்க, 

"இல்லை அம்மா எதுக்கு இந்த நேரத்ல. எனக்கு அந்த அளவுக்கு பசி இல்லை" என்று சொல்ல, 

"இரு தம்பி எனக்கு நல்லா தெரியும் ட்ரெயின்ல நல்ல சாப்பாடு கிடைக்காது. நீங்க இறங்கி அரைமணி நேரத்ல வந்துட்டிங்க, அதனால வெளியே சாப்பிட்டு இருக்க வழி இல்லை. நாலுதோசையாவது சாப்பிடுங்க" என்று அன்புடன் சொல்ல, 

அந்த கபடம் இல்லாத அன்பில் நெகிழ்ந்து போன சிவா "சரி அம்மா உங்க இஷ்டம், ரெண்டு தோசை போதும்."

தோசை சாப்பிட்டு விட்டு, "அம்மா உங்க தோசை, சாம்பார் ரொம்ப அருமையா இருக்கு" என்று பாராட்ட,வேலு பதிலுக்கு "சிவா அண்ணா, அம்மா பக்கத்தில இருக்கிற பாக்டரி கான்டீனுக்கு காலை சாப்பாடு, மதியம் சாப்பாடு சப்ளை பண்ணுறாங்க" என்று சொல்ல"அப்படியா" என்று ஆச்சர்யபட்டான்.

கையை கழுவி விட்டு பக்கத்தில் இருந்த ஸ்டூலில் அமர்ந்த பத்மாவதி பேச தொடங்கினாள். 

"தம்பி வேலுவோட அப்பாவுக்கு பீடி பழக்கம் ஜாஸ்தி, அதனால கான்சர் வந்து இவனுக்கு அஞ்சு வயசு இருக்கும்போதே மேல போய் சேந்துட்டாரு. அண்ணா, அதுதான் தீபக் அப்பா, அவருக்கு பாரமா இருக்க மனசு விரும்பலை. என்னோட மாமியார் உதவி செய்ய எனக்கு தெரிஞ்ச சமையலை வச்சு மெஸ் வச்சு பிழைக்க ஆரம்பிச்சேன். இப்போ இருவது பாக்டரிகளுக்கு சாப்பாடு சப்ளை பண்ணுறேன்.முன்னே மாதிரி ஓடி ஆடி வேலை செய்ய முடியலை. 

இந்த பயலுக்கு (வேலுவுக்கு) படிப்பு சரியா வரலை. அதனால ஒரு பாக்டரில வேலைக்கு சேர்த்து விட்டேன். அஞ்சு வருஷம் ஆச்சு. இப்போ ஓரளவு சம்பாரிக்கிறான். நான் சமையல் வேலைசெய்யுறதும் கம்மியா போச்சு."

"மன்னிச்சுக்கோ தம்பி நான் பாட்டுக்கு பேசிகிட்டே போறேன். உனக்கு ட்ரெயின்ல வந்தது களைப்பா இருக்கும், வேலு அண்ணாவுக்கு மாடில பாய், தலையணை போட்டு விட்டு வா. தம்பி நாம காலைல பேசிக்கலாம். நீங்க போய் நிம்மதியா உறங்குங்க."




சிவா நன்றி சொல்லி விட்டு, குழந்தையை தன் தோளில் தூக்கி கொண்டு மாடிப்படி ஏறினான். மாடி வீடு கீழ் வீடை போலவே இருக்க, கீழே பாய், பெட் சீட், தலையணை விரித்துஇருக்க, உதவி செய்த வேலுவுக்கு நன்றி சொன்னான். 

"அண்ணா, இதுக்கெல்லாம் எதுக்கு தாங்க்ஸ் சொல்லிட்டு, நீங்க என்ன உதவி வேணும்னாலும் என் கிட்ட கேளுங்க" என்று சொல்ல, சரி என்று தலை அசைத்தான் சிவா.

சரி முதலில் தீபக், சந்தோஷ் கிட்ட பேசலாம் என்று யோசித்தபடி தனது செல் போனை எடுக்க, சார்ஜ் இல்லாமல் செல் போன் ஆப் ஆகி இருந்தது.

சார்ஜ் போட்டு போனை ஆன் செய்தான்.

பத்துக்கும் மேற்பட்ட மிஸ்டு கால் ,மற்றும் இரண்டு எஸ்எம்எஸ் வந்து இருக்க, முதலில் எஸ்எம்எஸ் சை திறந்து பார்க்க அவன் பேங்க் அக்கௌன்ட்டில் நாற்பதாயிரம், மற்றும் இருபதாயிரம் கிரெடிட் ஆகி இருப்பதாக தெரிவித்தது. அந்த பணம் சந்தோஷ் மற்றும் தீபக் அக்கௌன்ட்டில் இருந்து கிரெடிட் ஆகி இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான்.

சரி இப்போது மிஸ்டு கால்ஸ் யாரிடம் இருந்து வந்து இருக்கிறது என்று பார்க்க, சந்தோஷ், தீபக், அவன் மாமனார் சதாசிவம், அக்கா வசந்தி இவர்கள் அழைத்து இருக்கிறார்கள் என்று உணர்ந்தான்.அதிலும் அக்காவிடம் இருந்து ஐந்து, மாமனாரிடம் இருந்து மூன்று கால்கள் வந்து இருப்பதை பார்த்து விட்டு முதலில் தீபக் மற்றும் சந்தோஷ் இருவரையும் கான்காலில் அழைத்தான். 

"தீபக், சந்தோஷ் என்னடா இதல்லாம் என் அக்கௌன்ட்டுக்கு எதுக்கு பணம் ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்கீங்க?. நான் உங்களை பணம் கேட்டேனா.?"

இடை மறித்த சந்தோஷ், "டேய் சிவா, கேட்டு செய்றது நட்பு இல்லைடா. கேட்காம செய்றது தாண்டா உண்மையான நட்பு. எங்களுக்கு நீ வீட்ல சண்டை போட்டது தெரியும். உன் அக்கௌன்ட்ல பணம் இருக்க வாய்ப்பு இல்லை. எப்படியும் புது வேலைல சேர்ந்தா சம்பளம் கிடைக்க ஒரு மாதமாவது ஆகும். உனக்கு புது வீட்டில வாங்க வேண்டிய சாமான்கள், வாடகை, தினசரி செலவு எல்லாம் சேர்ந்து ஒரு நாற்பதாயிரம் ஆகும். நாங்க அதனால தான் அறுபதாயிரம் ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்கோம்".

"நான் எப்படிடா உங்களுக்கு இதை உடனே திருப்பி தர போறேன்" என்று சிவா கண் கலங்க.

தீபக் பதில் பேசினான் "டேய் சிவா, உன்னால முடியும்போது கொடுத்தா போதும். ஒரு வேளை திருப்பி கொடுக்க முடியலைனா பரவாயில்லை. இந்த உதவி கூட செய்ய முடியலன்னா நாங்க நண்பர்களா இருந்து என்ன பிரயோஜனம் சொல்லு" என்க, சிவா மனம் நெகிழ்ந்து போனான்.

சந்தோஷ் அதை உணர்ந்து, "சிவா நேரம் ஆய்டுச்சு, நீ சீக்கிரம் படுத்துக்கோ. ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். உன் மாமனார் எனக்கு போன் பண்ணி இருந்தார். அவருக்கு விஷயத்தை நான் சொல்லிட்டேன். உனக்கு போன் பண்ணுவார்" என்று சொல்ல, "ஆமாண்டா எனக்கு போன் பண்ணி இருக்காரு, நான் அவர் கிட்ட பேசிக்கிறேன்" என்று சொல்லி விட்டு சிவாபோனை கட் செய்தான்.

உடனே மாமனாருக்கு போன் செய்ய, அவர் குரல் உடைந்து போய் இருந்தது. "என்ன மாப்பிளை, உங்க அக்கா கூட சண்டை போட்டா என் நம்ம வீட்டு வர வேண்டியது தானே. எதுக்கு இப்போ ஊர் விட்டு ஊர் போகணும்."

"இல்லை மாமா அங்கே இருந்தால் எனக்கு வீணா ஞாபகம் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கும். அதனால தான். உங்க கிட்ட சொல்லாம வந்ததுக்கு மன்னிக்கணும்."

"பரவாயில்லை மாப்ளை. நான் என் பொண்ணை இழந்துட்டேன். பேத்தியாவது பார்த்துகிட்டே என் கடைசி காலத்தை கழிக்கலாம்ன்னு நினைத்தேன். அதுக்கு எனக்கு ப்ராப்தம் இல்லை போலிருக்கு" என்று குரல் கம்ம, சிவா மனம் கலங்கி விட்டான்.


"அதனால என்ன மாமா நீங்க சென்னைக்கு வாங்க. நாம மூணு பேரும் ஒண்ணா இருந்துக்கலாம்."

சதாசிவம் நம்ப முடியாமல் கேட்டார். "உங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே"
"அதல்லாம் ஒண்ணும் இல்லை நீங்க கிளம்பி வாங்க"

"சரி மாப்ளை. நான் வரும்போது என்னோட பெரியம்மா பொண்ணு பெரிய நாயகி என்னோட இருக்காங்க. அவங்க புருஷன் இறந்து போய் பல வருஷம் ஆச்சு. குழந்தை கூட இல்லை. உங்களுக்கு கூட தெரியுமே, கல்யாண மேடைல நீங்க வீணாவை கல்யாணம் பண்ணிக்குவீங்கலான்னு கேட்டாங்களே", சிவா நினைவுக்கு வர, "ஆமா நல்லா ஞாபகம் இருக்கு". 
"அவங்களையும் நான் கூட்டி வரேன்.அவங்களுக்கு என்னை விட்டா யாரும் கிடையாது. நம்ம கூட வந்தா குழந்தை வளர்க்க உதவியா இருக்கும். என்ன சொல்றிங்க மாப்ளை."

"சரி மாமா. நீங்க சேலத்தில உங்களோட வேலைகளை முடிச்சுட்டு சீக்கிரம் வாங்க."

போனை வைத்து விட்டு அடுத்து வசந்தியை அழைத்தான்
"சொல்லு அக்கா, கூப்பிட்டியா"

"டேய் தம்பி. ஏண்டா என் போனை எடுக்க மாட்டேங்கிற.?"

"என் செல்போனில சார்ஜர் இல்லை. இப்போதான் போட்டுட்டு கூப்பிடுறேன். சொல்லுக்கா".
"டேய் எனக்கு சொத்து எதுவும் வேண்டாம்டா. இப்பவே வக்கீல் மாமாவை கூப்பிட்டு நீ கையெழுத்து போட்ட பத்திரத்தை கிழிக்க சொல்லிடுறேண்டா. நீ போனதில இருந்து எனக்கு கை கால் ஓட மாட்டேங்குது. உன்னோட அத்தானும் என்னோட பேச மாட்டேங்கிறாரு. ப்ரியா கூட நான் கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கிறா. எல்லாரும் என்னை ஏண்டா கொலைகாரி மாதிரி பாக்குறிங்க. நான் பொன்னம்மாவை அப்படி சொல்ல சொன்னது தப்புதான். மத்தபடி நான் ஒண்ணும் செய்யலையே."

"அக்கா, நடந்ததை பேசி ஒண்ணும் ஆக போறதில்லை. என்னோட மனசு மரத்து போச்சு. எனக்கு சொத்து எதுவும் வேண்டாம். உன் குடும்ப பிரச்சனைல நான் தலையிட விரும்பலை. நீ இனிமே என்னை எக்காரணத்தை முன்னிட்டும் கூப்பிடாதே. நிம்மதியா விடு"சட்டென்று போனை வைத்து விட வசந்தி விக்கித்து நின்றாள்.

போனை சார்ஜரில் வைத்து விட்டு, குழந்தை அருகில் படுத்து அவள் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.

அடுத்த சில மாதங்கள் வேகமாக ஓடின.

மாமனார், தனது அக்கா பெரிய நாயகியுடன் வந்து விட குழந்தை வளர்ப்பது சிவாவுக்கு எளிதானது. வீட்டு வேலைக்கு ஆள் வீட்டு வேலை செய்ய பிரச்சனை இல்லாமல் போனது.

சிவா வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆனது. குழந்தையும் வேகமாக வளர ஆரம்பித்து விட்டாள். அவளின் வேகத்தை பெரியவர்களால் சமாளிக்க முடியவில்லை. சிவா வீட்டில் இருந்தால் அவனுடன் தான் இருப்பாள். அவளின் மழலை சிரிப்பை பார்த்து வீணா இறந்த துக்கத்தை சிவா கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தொடங்கினான்.


2008 Global Recession இந்தியாவை தாக்க, இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கபட்டன.

சம்பளம் குறைக்கப்பட்டு சிவா தனது வேலையை தொடர வேண்டிய கட்டாயம் தொடர்ந்தது.

இதற்கு இடையில் சதாசிவம் திரும்ப இதய தாக்குதலில் பாதிக்கப்பட, அவன் கையில் இருந்த சேமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது. திரும்ப சேலம் சென்று விடலாம என்று சிந்திக்க தொடங்கினான்.
2008 நவம்பர் மாதத்தில் குழந்தை பிரபாவின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் சதாசிவம் வக்கீலிடம் இருந்து ஒரு நல்ல செய்தி வந்தது. 

குடும்ப சொத்தான ஏற்காடு எஸ்டேட் தீர்ப்பு கோர்டில் வர, ஏற்கனவே சதாசிவம் அண்ணா அனுபவித்து வந்ததால் அதை எல்லாம் கணக்கிட்டு, இருநூறு ஏக்கர் காபி எஸ்டேட் சதாசிவம் பெயரிலும் மீதி நூறு ஏக்கர் எஸ்டேட் அவர் அண்ணா பெயரிலும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தன் மாமானாரின் வேண்டுகோளுக்கு இணங்க சிவா, குழந்தை மற்றும், பெரிய நாயகியுடன் 2009 ஜனவரிமாதம்ஏற்காடு எஸ்டேட்டுக்கு குடி புகுந்தான். 

பசுமையான காபி எஸ்டேட், வருடம் முழுக்க சில் லென்ற தட்ப வெப்பம் சதாசிவத்துக்கும் மாறுதலாக இருக்க அவர் உடல் நிலையும் பரவாயில்லை என்று இருந்தது. தொடர்ந்த வருடத்தில் சிவா குழந்தை பிரபாவை மொன்த்போர்ட் ஸ்கூலில் சேர்க்க முடிவு செய்து விட்டான்.

சேலம் அடிக்கடி சென்று நண்பர்கள் சந்தோஷ், தீபக் இருவரையும் அடிக்கடி சந்தித்து வந்தான். அத்தான் மற்றும் ப்ரியாவும் வாரம் ஒரு முறையாவது குழந்தை பிரபாவை பாத்து விட்டு செல்வது வழக்கம்.

மூன்றரை வயது ஆன பிரபாவை எல் கே ஜி யில் சேர்க்க குழந்தை சந்தோசமாக சென்று வந்தாள். 

சிவா காபி தோட்டத்தை நிர்வகித்து கொண்டே கிடைத்த நேரத்தில் நேரடியாக வெளி நாடு எக்ஸ்போர்ட் செய்ய முயற்சி செய்து வந்தான்.வேலை இல்லாத நேரங்களில் சதாசிவம் அவனுக்கு ஆறுதலாய் இருந்தார்.அவருடன் பேசி கொண்டு இருந்தால் நேரம் போவதே தெரியாமல் இருந்தது. 

இந்த நேரத்தில் மூன்றாவது இதய தாக்குதல் வர, சிவா அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எல்லாம் பயனில்லாமல் போக, இயற்கை எய்தினார்.

குழந்தை காலை எட்டு மணிக்கு சென்றால் மாலைஆறு மணிக்குதான் வருவாள். சிவாவுக்கு வேலை குறைவாக இருந்ததால் வீணா வின் நினைப்பு வாட்டியது.

குழந்தை இரவு எட்டு மணிக்கு உறங்கி விட வீணாவின் நினைவும் அவளுடன் கொண்ட அந்த அலுக்காத தாம்பத்யமும் அவனை அலை கழித்தது. சில இரவுகளில் விரக தாபம் தாங்க முடியாமல் பாத்ரூம் சென்று குளித்து விட்டு வந்து கந்த சஷ்டி கவசம் படிப்பது வழக்கம்.

மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் வரும் மனைவி குழந்தை பிரபாவை சரியாக பார்த்து கொள்வாள என்று தெரியவில்லை.சிவா மனது அலைபாய தொடங்கியது.

தினமும் இரவு படுக்கும் முன், 'வீணா என் மனது அலைபாயாமல் இருக்க நீ தான் உதவி செய்யனும்' என்று வேண்டி கொள்வான்.

ஒரு முறை வழக்கமாக நடக்கும்ரோட்டரி கிளப் மீட்டிங்கில் கலந்து கொள்ள சேலம் சென்ற போது ஒரு நண்பர் மூலம் அவனுக்கு பெண்கள் சப்ளை செய்யும் புரோக்கர் ரமேஷ் தொடர்பு கிடைத்தது.

ரமேஷ் சினிமா நடிகைகள் கல்லுரி பெண்கள் போன்றவர்களை பணக்காரர்களுக்கு சப்ளை செய்வது வழக்கம். மெல்ல மெல்ல அவன் சிவாவுக்குவலை விரிக்க ஆரம்பித்தான்.






No comments:

Post a Comment