Thursday, August 20, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 16

பலத்த சிந்தனையுடன் தனது மேவாயை தேய்த்தவர் “ ஏனம்மா மான்சி உன் அத்தை சொன்னது எல்லாம் உனக்கு புரிஞ்சுதா” என்றார்

ம்’ என்று தலையசைத்தாள் மான்சி,,

“ அப்ப சரி, நீ எனக்கு ஒரு வாக்கு குடுக்கனுமே மான்சி” என்றார் மான்சியை கூர்ந்து பார்த்து

மான்சி குழப்பத்துடன் நிமிர்ந்து கிருபாவை பார்த்தாள்,, ரஞ்சனாவும் குழப்பத்தோடு அவர் முகத்தை பார்த்தாள்,, “ மான்சி என்னங்க வாக்கு குடுக்கனும்” என்று ரஞ்சனா கேட்டாள்

“ ம்ம் சொல்றேன் இரு” என்றவர் மான்சியிடம் திரும்பி “ மான்சி இப்போ உனக்கு சொன்ன விஷயங்கள் அத்தனையையும் இங்கயே மறந்துடனும்,, எக்காரணத்தைக் கொண்டும் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது,, சத்யன் உள்படத்தான் சொல்கிறேன்,, இதை நீ எனக்கு சத்தியமா பண்ணிக்குடுக்கனும் ” என்று கிருபா அவளை நோக்கி கையை நீட்டினார்

நீட்டிய அவர் கையை எட்டிப்பிடித்த ரஞ்சனா “ என்னங்க இது இப்பத்தான் ஒரு வழி கிடைச்சது அதையும் அடைக்கப் பார்க்குறீங்களே,, சத்யன் கிட்டே இதெல்லாம் சொல்லாம அவன் எப்படி இங்கே வர்றது,, மான்சிக்கும் அவனுக்கும் எப்படி கல்யாணத்தை நடத்துறது” என சிறு கோபத்துடன் கேட்டாள்


அவளிடமிருந்து கையை உருவிக்கொண்ட கிருபா “ என்ன ரஞ்சனா புரியாம பேசுற,, இப்போ மான்சி போய் சத்யன் கிட்ட அனிதாவைப் பத்தி சொன்னாதான் அவன் நம்மகிட்ட வருவான்னா அப்படிப்பட்ட மகனே எனக்கு வேண்டாம்,, என்னைப்பொறுத்தவரை அனிதா என் மகதான் அவளை முன்நிறுத்தி எந்த வரவும் எனக்கு வேண்டாம்,, சத்யனுக்கு உண்மை தெரிஞ்சா அனிதாவை ஒதுக்க மாட்டான்தான்,, ஏன்னா அவன் என் மகன் அதுபோன்ற ஈனப்பிறவி அவன் கிடையாது,, ஆனா பெத்த தகப்பனையே ஒதுக்கிட்டானே அதை நெனைச்சாத்தான் எனக்கு பயமாயிருக்கு,, அதனால்தான் சொல்றேன் அனிதாவை பற்றிய விஷயங்களை சொல்லித்தான் என் மகன் என்கிட்ட வரனும்னா அது தேவையில்லை,, எப்படியிருந்தாலும் நான் செத்தா கொல்லிபோட அவன் வந்துதான் ஆகனும் அவன் வராட்டாலும் இந்த சமூகம் அவனை இழுத்து வரும், அப்படியும் வரலைன்னா என் மகளுங்க மூனுபேரும் எனக்கு கொல்லி போடட்டும் அது போதும் எனக்கு” என்று ஆவேசமாக பேசிய கிருபா மான்சியிடம் திரும்பி “ நீ இதுக்கு என்னம்மா பதில் சொல்ற” என்று அதே ஆவேசத்தோடு கேட்க

மான்சி முகத்தில் புதிதாய் தோன்றிய பிரகாசத்துடன் “ நீங்க கையை கொடுங்க அங்கிள் நான் ப்ராமிஸ் பண்றேன்,, அனிதாவோட வாழ்க்கையை தோலுரிச்சாதான் எனக்கு வாழ்க்கை கிடைக்கும்னா அப்படிப்பட்ட வாழ்க்கையே எனக்கு வேண்டாம்,, நான் உங்களோடு மருமகள் மாமா எப்பவும் உங்கப் பின்னாடி தான் இருப்பேன்” என்று ஆர்வத்துடன் பேசிய மான்சி எட்டி கிருபாவின் கையைப் பற்றி அதில் தனது கையை அடித்து “ நான் செத்தாலும் இந்த உண்மை வெளியே வராது மாமா” என்றாள்

கிருபா உணர்ச்சி வசப்பட்டு அவள் கையை எடுத்து தனது கண்களில் ஒற்றிக்கொண்டார்

இருவரையும் பார்த்து ரஞ்சனா தலையிலடித்துக் கொண்டு “ அய்யோ அனிதாவைப் பத்தி தெரிஞ்சாதான் என்ன,, நான் தரங்கெட்டவளா சத்யன் கண்களுக்கு தெரிவேன்,, பரவாயில்லை தெரிஞ்சுட்டு போகட்டும், அதுக்காக சத்யன் வர்றதுக்கு இருந்த ஒரு சான்சையும் கெடுத்துட்டீங்களே,, எனக்கு என் பிள்ளை வீடுவந்து சேரனும்,, அவன் அம்மா வாழ்ந்த இந்த வீட்டுல அவன் மனைவியோட சேர்ந்து வாழ்ந்து நிறைய பிள்ளைகள் பெறனும்,, அதுதான் எனக்கு வேனும் ” என்ற ரஞ்சனா கண்ணில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துவிட்டு “ இப்போ நானே போய் சத்யன் கிட்ட உண்மையை சொன்னா என்னப் பண்ணுவீங்க” என்று ஆத்திரமாய் கேட்க..



“ ஏய் ரஞ்சி” என்று கத்திய கிருபா கண்ணிமைக்கும் நேரத்தில் பளாரென்று ரஞ்சனாவை அறைந்துவிட,,, ஏற்கனவே ஒற்றை நாடியான தேகமுள்ள ரஞ்சனா அவர் அறைந்த வேகத்தில் சோபாவில் தொப்பென்று விழுந்தாள்
மான்சி திகைத்துப்போய் நிற்க,, ரஞ்சனா கன்னத்தை பிடித்துக்கொண்டு கிருபாவை மிரள மிரள பார்த்தாள்

அவளை அப்படி பார்த்ததும் கிருபாவுக்கு தன் கையை வெட்டி எறியலாம் போல ஆத்திரமாக வர வேகமாய் வந்து ரஞ்சனா பக்கத்தில் அமர்ந்து அவளை அணைத்து “ மன்னிச்சுடு கண்மணி,, நான் தெரியாம அடிச்சிட்டேன்” என்று குரல் கரகரக்க மன்னிப்பு கேட்க

ரஞ்சனா அழுகையுடன் அவர் மார்பில் சாய்ந்துகொண்டாள்

அவள் கூந்தலை கோதியவர் “ பின்னே நீயே சொல்லு ஏதாவதொரு சந்தர்பத்தில் அனிதாவுக்கு உண்மை தெரிஞ்சா அவள் தாங்குவாளா,, நிச்சயம் உயிரையே விட்டுடுவா,, ஒரு மகன் வரவழைக்க மகளை இழக்க முடியுமா ரஞ்சிம்மா,, அனிதா என் உயிர்டி, என் மகளை இழந்து நான் வாழுவேனா,, அப்புறம் நான் இல்லாமல் நீ இருப்பியா,, அதன் பிறகு இருக்கும் மற்ற ரெண்டு பேரையும் நெனைச்சுப் பாரு,, மொத்த குடும்பமும் சிதைஞ்சு போய்டும்,, இப்போ சொல்லு சத்யன் ஒருத்தனுக்காக எத்தனை இழப்புகள் பார்த்தியா, வேண்டாம்மா அவன் அங்கேயே இருக்கட்டும் தூரத்தில் இருந்தே நம்ம மகனை பார்த்து ரசிக்கலாம், அதுதான் நம்ம விதி” என்ற கிருபா தன் நெஞ்சில் இருந்த ரஞ்சனாவின் முகத்தை உயர்த்தி நெற்றியில் முத்தமிட்டார்

அதுவரை அவர்களின் உரையாடல்களை கண்கலங்க கேட்டுக் கொண்டிருந்த மான்சி, கிருபா ரஞ்சனாவை முத்தமிட்டதும் என்ன செய்வது என்று புரியவில்லை, இப்போ வெளியே போவதா?, அல்லது திரும்பி நிற்பதா? என்று புரியாமல் சில வினாடிகள் குழம்பியவள் சட்டென்று குறும்புடன் “ மாமா நான் வேனா கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கட்டுமா?” என்று கேட்க

அவள் அங்கே இருப்பதை உணர்ந்து ரஞ்சனா வெட்கத்துடன் கிருபாவிடம் இருந்து விலக... அவளை விலகவிடாமல் பற்றியிருந்த கிருபா “ ஏய் வாலு நீ இன்னுமா இங்கருந்து போகலை?, விடு ஜீட்” என்று அவளை அடிப்பதுபோல கைநீட்டியவாறு கூற..

“ அய்யோ மாமா இதோ ஓடிட்டேன்” என்றவள் சில்லரைகளை இறைத்தது போல பட்டாசாய் சிரித்து அங்கிருந்து ஓடினாள் மான்சி, 


அறைக்குள் இருந்து வெளியே வந்த மானசியை அனிதா பிடித்துக்கொண்டாள், “ ஏய் இவ்வளவு நேரமா என்னடி பேசினீங்க நீயும் அம்மாவும்,, ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்க...

அனிதாவை பார்த்ததும் ஏதோ இனம்புரியாத துயரம் வந்து இதயத்தை தாக்க, அய்யோ எவ்வளவு மென்மையானவள் இவள்,, இவளின் பிறப்பு ரகசியம் தெரிந்தால் தாங்குவாளா? மாமா சொன்னது போல எத்தனை காலம் ஆனாலும் இந்த உண்மை மண்ணோடு மடியவேண்டும்,, என்று நினைத்த மான்சி முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை உதட்டை கடித்து அடக்கியவாறு, தன் தோழியை அணைத்து “ அதெல்லாம் மாமியார் மருமகள் சீக்ரட், நீ மேரேஜ் ஆகி இன்னொருத்தர் வீட்டுக்கு போகப்போறவ தானே, அதனால உனக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை” என்றவள் அனிதாவை தள்ளி நிறுத்தி “ என்ன புரிஞ்சுதா?” என்றாள்

தன் தோழியின் குறும்பை ரசித்த அனிதா “ அடிப்பாவி இன்னும் ஒரு அடிகூட எடுத்து வைக்கலை அதுக்குள்ள இவ்வளவு மிரட்டுறயே, இன்னும் கல்யாணம் ஆனபிறகு எங்களை என்ன பாடுபடுத்த போறியோ தெரியலையே?” என்று பொய்யான கவலையுடன் சோகமாக தடையில் கைவைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள்

அவளருகில் அமர்ந்த மான்சி “ அதெல்லாம் அப்ப அப்போ எனக்கு என்ன தோனுதோ அதன்படி உத்தரவு போடுவேன், அதுக்கு கட்டுப்பட்டு எல்லா வேலையும் செய்யனும்” என்று ஒரு எஜமானி போல மிடுக்காக பேச..

அனிதா எழுந்து நின்று கைகட்டி வாய்பொத்தி “ உத்தரவு மகாராணி,, இப்போ நேரமாச்சு உணவை முடித்துக்கொண்டு தங்களின் அரண்மனைக்கு புறப்படலாமா?” என்று கேலி செய்தாள்

மான்சி சிரித்தபடி அனிதாவுடன் டைனிங் ஹாலுக்கு போக அங்கே வசு ஏற்கனவே அமர்ந்து உணவை ஒரு பிடிபிடித்துக் கொண்டு இருந்தாள்,

மான்சியை பார்த்ததும் அசடு வழிய “ ஸாரிக்கா பசி தாங்கமுடியலை அதான் உங்களை விட்டுட்டு சாப்பிட வந்துட்டேன்” என்றாள்

மான்சி அவள் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து “ ம்ம், இந்த முறை மன்னிச்சு விடுறேன், இனிமே என்கிட்ட கேட்டுட்டு தான் சாப்பாட்டுல கை வைக்கனும்” என்று மிரட்டியவள் சட்டென்று ஒரு தாய்மை உணர்வுடன் வசுவின் தோளை அணைத்து “ நீ தான் என்னோட செல்லக் குட்டிம்மா ஆச்சே, நான் இதெல்லாம் போய் தப்பா நெனைப்பேனா?” என்று புதிதாய் பூத்திருந்த பூவைப்போன்ற வசுவின் கன்னத்தில் முத்தமிட்டாள்

“ ஏன் மான்சி எனக்கு ஒரு சந்தேகம்,, வசு அப்படியே எங்க அண்ணன் ஜாடையில இருக்குறதால தானே நீ அடிக்கடி அவ கன்னத்துல முத்தம் குடுக்குற?” என்று அனிதா குறும்பாக கேட்க

“ ஏய் ச்சீ அதெல்லாம் இல்லை” என்ற மான்சியின் முகம் பட்டென்று வெட்கத்தை பூசிக்கொண்டது

அப்போது அங்கே கிருபாவும் ரஞ்சனாவும் வந்தனர், அதன்பிறகு சிறிதுநேரம் அரட்டையும் சிரிப்புமாக அனைவரும் உணவை முடித்துக் கொண்டு ஹாலுக்கு வர,, கிருபா மான்சியை காரில் பாதுகாப்பாக அவளது அறைக்கு அனுப்பி வைத்தார்

அந்த வீட்டில் இருந்து கிளம்பியதுமே மான்சிக்கு சத்யனை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனை வந்து மனதில் உட்கார்ந்துகொண்டது,, எதைப்பற்றியும் கூறாமல் அவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தாள்,,

அவளுக்கு எதுவுமே புரியவில்லை, அடுத்து எப்படி முன்னேறுவது என்று தெரியாமல் ஏதோ தடுப்பு சுவற்றில் முட்டுவது போல இருந்தது,, தனது அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தவள் என்ன செய்வது என்ற சிந்தனையிலேயே தூங்கிப்போனாள்

மறுநாள் மில்லுக்கு புறப்பட்டவள் சத்யனை பார்க்காமல் இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பது என்று எண்ணி ஏங்கினாள், நாளுக்கு நாள் அந்த ஏக்கமே சிறுகச்சிறுக பரவி பெரும் தீயாய் பரவ, இதற்க்கு மேல் தன்னால் அவனை காணாமல் இருக்க முடியாது என்று முடிவு செய்தாள்..


இருவரும் பேசி கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் ஆன நிலையில் சத்யனுக்கும் தவிப்பு அதிகமானது,, ஏன்தான் என் மனசு புரியாம இப்படி பிடிவாதம் பண்ணி என்னை நோகடிக்கிறான்னு தெரியலையே, என்று மனதுக்குள் புலம்பியவன், அன்று பாட்டி கொடுத்தனுப்பிய உணவை சாப்பிடாமல் ப்யூனிடம் கொடுத்து விட்டு மான்சியை பார்க்கும் ஆவலில் கேன்டீன்க்கு போனான்

அவனுடன் வந்த கார்த்திக்கு சத்யன் எதற்காக கேன்டீன் வருகிறான் என்று புரிந்தாலும் எதுவும் கேட்கவில்லை, ‘சமூகத்தில் எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும் இந்த காதல் வந்துட்டா என்ன பாடு படுறாங்கப்பா” என்று மனசுக்குள் நினைத்து சிரித்தபடி சத்யனுடன் போனான்

இருவரும் உள்ளே சென்று ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டனர், சத்யன் தன் பார்வையை சுற்றிலும் ஓடவிட்டான், அதோ பார்த்துவிட்டான் அவன் தேவதையை, அவனையும் அறியாமல் முகம் மலர்ந்தது

பின்னலை முன்னால் போட்டு காதுகளில் இருந்த ஜிமிக்கிகள் ஆட ரொம்ப கவனமாக எதிரில் இருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தாள், ஆனால் தடாலடியாக இவனை திரும்பி நேர்பார்வை பார்த்தாள்..

அவள் பார்த்ததும் சத்யன் சட்டென்று திரும்பிக்கொண்டான், அப்படியானல் நான் வந்ததை மொதல்ல இருந்தே கவணிச்சிருக்கா, இல்லேன்னா இந்தமாதிரி கரெக்டா என் டேபிளை பார்க்கமுடியுமா? என்று எண்ணிய சத்யன் எதிரில் இருந்த உணவை அசிரத்தையாக பிசைய ஆரம்பித்தான்..

அவனையே கவனித்த கார்த்திக் “ பாஸ் நான் ஒன்னு சொல்லட்டுமா? ஏன் பாஸ் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு, எந்திரிச்சு போய் பக்கத்துல உட்கார்ந்து நேரடிய பேசுங்க பாஸ்” என்று கூற..

சோற்றில் கவனமில்லாமல் பிசைந்த சத்யன் ” இல்ல கார்த்திக் அவளுக்கு கர்வம்டா,, நான் போய் அவ கால்ல விழனும்னு நெனைக்கிறா,, என்கிட்டயே எதுத்து பேசுறா” என்று உதட்டளவில் மான்சிப் பற்றி புகார் கூறினாலும் கண்கள் அவளை தேடியே ஓடியது ,



“ ஆனா பாஸ் முதல்ல யார் சரண்டர் ஆவீங்களோ தெரியலை, ஏன்னா ரெண்டு பேரோட தவிப்பும் ஒரே மாதிரியா இருக்கு,, அவங்களும் நிமிஷத்துக்கு ஒருவாட்டி உங்களைத்தான் பார்க்கிறாங்க” என்று கூறிவிட்டு தன் சாப்பாட்டில் கவனம் செலுத்தினான் கார்த்திக்

சத்யனுக்கு ஒரு கவளம் கூட உள்ளே இறங்கவில்லை, ரொம்பவே தவிப்பாக இருந்தது, நிமிர்ந்து அவளைப்பார் என்று அதட்டிய மனதை அடக்கவே சிரமமாக இருந்தது, அவன் அவளை பார்த்தவரையில் அவள் வேண்டுமென்றே எதிரில் இருப்பவளிடம் சிரித்து சிரித்து பேசுவதுபோல் இருந்தது, என்னை வெறுப்பேத்துறா போலருக்கு, என்று கருவினான் சத்யன்

ஒருவழியாக பெண்கள் இருவரும் சாப்பிட்டு கைகழுவிவிட்டு வெளியே போக சத்யனும் அவசரமாக எழுந்து கைகழுவிவிட்டு பின்னால் போனான், மான்சியும் அந்த பெண்ணும் மில்லின் பின்புறமாக சென்றனர், சத்யன் அவர்கள் பின்னால் போனான்,

உடனிருந்த பெண் தூரத்தில் இருந்த பெண்கள் கழிவறையை நோக்கி போக, மான்சி மட்டும் பக்கவாட்டில் இருந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தாள்

சத்யன் வேகமாக மான்சியை நெருங்கினான், சற்று தொலைவிலேயே அவன் வருவதை கவனித்து விட்ட மான்சி சிறு திகைப்புடன் எழுந்து மரத்தில் சாய்ந்து கொண்டாள்,

அவள் அருகே வந்த சத்யன் அவளுக்கு இரண்டு பக்கமும் கைகளை மரத்தில் ஊன்றி நின்று தலையை சாய்த்து அவளையே பார்த்தான்

அவன் வேகமாக தன்னை நெருங்கியயதை கண்டு மான்சி முதலில் மிரண்டாலும் பிறகு அவன் பார்வையின் கூர்மையால் வெட்கமாக தலை கவிழ்ந்தாள்

அவளின் வெட்கம் படர்ந்த முகமும் பேச துடித்த இதழ்களும் இத்தனை நாட்களாக பிரிந்திருந்த சத்யனின் மனதை பித்தாக்க “ ஓய் என்ன நக்கலா, கேன்டீன்ல என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி மூஞ்சிய திருப்பிக்கிற, அந்த பொண்ணுகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுற, என்ன வெறுபேத்துறியா?” என்று கொஞ்சம் கோபமும் நிறைய காதலுமாக சத்யன் கேட்க

இன்னமும் வெட்கம் குறையாத முகத்துடன் “ ஓ முதலாளி சார் இருந்தா பேசக்கூடாது சிரிக்கக்கூடாதுன்னு இந்த மில்லுல சட்டம் இருக்கா என்ன,, எனக்கு இவ்வளவு நாளா தெரியாதே” என்று குரலில் வியப்பு காட்டி மான்சி சொல்ல..

“ என்ன நக்கலா? எனக்கு கோபம் வந்துச்சுன்னா அவ்வளவு தான்” என்று பொய்யாய் மிரட்டினான் தன் காதலியை..

சட்டென்று நிமிர்ந்த மான்சி “ அய்யோ என்ன பண்ணுவீங்களாம்?” என்று அவனைப்பார்த்து நெஞ்சை நிமிர்த்தி காட்டியவள் அது எவ்வளவு தவறு என்று விரைவிலேயே புரிந்துகொண்டு “ ச்சீ பார்வையைப் பாரு திருடன் மாதிரி” என்றாள்

சத்யனால் அவள் நிமிர்த்தி காட்டிய கோபுர கலசங்களில் இருந்து பார்வையை அகற்றமுடியாமல் “ நீயா பண்ணிட்டு இப்ப எதுக்கு ச்சீன்னு சொல்ற, ஆனாலும் மான்சி உனக்கு.....” என்று எதையோ சொல்லவந்து வார்த்தைகளை மென்று விழுங்கினான்

அவன் என்ன சொல்ல வந்தான் என்று அவன் சொல்லாமலே அவளுக்கு புரிய அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளிய படி “ என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க,, யாராவது பார்க்குறதுக்குள்ள இங்கிருந்து போங்க” என்று கிசுகிசுப்பாய் சொன்னவளால் அவனை ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியவில்லை,

அவள் என்ன சொன்னாலும் சுற்று சூழ்நிலையை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை,, மேலும் அவளை நெருங்கிய சத்யன் வெட்கத்துடன் துடித்த அவள் இதழ்களில் தனது தடித்த உதடுகளை பதித்து கீழுதட்டை கவ்வி இழுக்க.. அவள் போராட்டமாக அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினாள்

அவனுடைய உதடுகளின் அழுத்தமும் வேகமும் அதிகமாக, மான்சியின் பிடி தளர ஆரம்பித்தது, அவளுக்கும் இத்தனை நாள் அவனை பாராமல் ஏக்கம் விழித்துக்கொள்ள அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் அவன் சட்டையை கொத்தாக பற்றி தன்னுடன் அழுத்திக்கொண்டு வாயைத்திறந்து அவன் தேடலுக்கு வழிவிட்டாள்

இருவரும் தங்களை மறந்திருக்க, சத்யனை தேடி வந்த கார்திக் தூரத்தில் இரண்டு ஜோடிப்புறாக்கள் காதல் செய்வதை கண்டு ரசித்தபடி அப்படியே நின்றுவிட்டான், அப்போது சற்று தொலைவில் யாரோ இரண்டு ஊழியர்கள் பேசிக்கொண்டு வந்தனர்

அவர்களை பார்த்ததும் பரபரப்பான கார்த்திக் தனது மொபைலை எடுத்து சத்யன் நம்பருக்கு கால் செய்தான், ஊழியர்கள் தங்கள் முதலாளி வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் இப்படி இருப்பதை பார்தால் சத்யனுக்கு எவ்வளவு மரியாதை குறைவு என்ற பதட்டம் கார்த்திக்கு


தனது பாக்கெட்டில் இருந்த மொபைல் அடித்ததும், தங்களை மறந்து முத்தமிட்ட இருவரும் திடுக்கிட்டு விலகினர், சத்யன் அவசரமாக தனது மொபைலை எடுத்து யாரென்று பார்த்தான், அதற்குள் கார்த்திக் கட் செய்துவிட்டதால், சத்யன் கார்திக் எங்கே என்று பார்க்க, தூரத்தில் நின்ற கார்த்திக் பக்கத்தில் வந்த ஊழியர்களை ஜாடை காட்டினான், சத்யன் சட்டென்று விலகி நின்றதும், மான்சியும் கவனித்துவிட்டு சங்கடத்துடன் முகத்தை துடைத்தபடி மில்லை நோக்கி வேகமாக நடந்தாள்

அன்று முழுவதும் பழைய உற்சாகம் திரும்பிவிட மும்பையில் நடக்கவிருக்கும் மாநாடு சம்பந்தமான மீட்டிங்கில் தனது பேச்சு எப்படியிருக்க வேண்டும் என்று சில முக்கிய ஊழியர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டான்

அடுத்த ஆறு நாட்கள் ஜவுளித்துறையின் மாநாட்டுக்கு என்று சத்யன் மும்பை சென்றுவிட்டு, ஏழாவது நாள் கோவை வந்து இறங்கியதும் முதலில் மான்சிக்குத்தான் போன் செய்தான், இத்தனை நாளும் அலுவல் மிகுதியால் எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசியவன், இப்போது பேசியே ஆகவேண்டும் என்ற எதிர்பார்பில் போன் செய்தான்

கால் செய்துவிட்டு எதிர்பார்ப்புடன் காதில் வைத்தவன் சுவிட்ச் ஆப் என்று வந்தவுடன் ஏமாற்றத்துடன் காரில் ஏறி வீட்டுக்கு வந்தான், வீட்டுக்கு வந்ததும் பாட்டியுடன் சிறிதுநேரம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்து கார்த்திக்கு போன் செய்து மில் சம்பந்தமாக பேசிவிட்டு மான்சியை பற்றிக் கேட்டான்

“ அவங்க இன்னிக்கு மில்லுக்கு வரலை பாஸ், போன் செய்து பார்த்தேன் சுவிட்ச் ஆப்ன்னு வந்தது, என்னன்னு தெரியலை பாஸ்” என்றான் கார்த்திக்
சத்யனுக்குள் பதட்டம் வந்து புகுந்துகொள்ள “ காலையிலேர்ந்தே போன் சுவிட்ச் ஆப் ஆகிருக்கா? என்னாச்சு அவளுக்கு” என்றவன் கார்த்திக் பதிலை எதிர்பார்க்காமல் போன் காலை கட் செய்துவிட்டு அனிதாவுக்கு போன் செய்தான்
நான்கைந்து ரிங்கில் எடுத்த அனிதா “ சொல்லுங்கண்ணா” என்றாள்

“ மான்சி எங்கபோனா? இன்னிக்கு மில்லுக்கும் வரலை அவ செல்லுக்கு கால் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது, என்னாச்சு நீ அவளை பார்த்தியா?” என்றான் முடிந்தவரை பதட்டத்தை அடக்கிக்கொண்டு

“ இல்லையேண்ணா, நாங்க எல்லாரும் திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்கு வந்திருக்கோம் அண்ணா,, உங்களுக்கு சனிதிசை விலகுறதால ஏதோ சாங்கியம் செய்யனும்னு ஜாதகத்தில் சொன்னாங்கலாம் அதுக்காக வந்திருக்கோம், நான் காலையிலேர்ந்து இப்பத்தான் போனையே ஆன் பண்றேன், எனக்கு தெரியலையேண்ணா ” என்று அனிதாவும் பதட்டமாக கூற

“ ம்க்கும் சனீஸ்வரன் கோயிலுக்கு போனீங்களா, அதுதான் இப்போ ரொம்ப முக்கியம்” என்று முனங்கிய வாறு போனை கட் செய்துவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு உடனே மான்சியை தேடி கிளம்பினான்

காரில் போகும்போது கார்த்திக் ,, அனிதா இருவரும் மாற்றி மாற்றி போன்செய்ய சத்யன் எரிச்சலுடன் கட் செய்தான், காலையிலேருந்து ஒருத்திய காணும் என்னாச்சு தெரிஞ்சுக்கலை இப்போ மாத்தி மாத்தி போன் மட்டும் பண்ணத் தெரியுது,, என்று ஆத்திரமாய் முனங்கினான்

மான்சியை காணும் வரை தன்னுடைய உயிர் தனக்கில்லை என்பதுபோல் காரை ஓட்டினான், 



" உன்னைப் பார்த்து நிலவென்றேன் "

" உன்னை நினைத்து தினமும் நான்தான் தேய்கிறேன்!

" உன்னை வாடாத மலரென்றேன் "

" உன்னை நினைத்து நித்தமும் நான்தான் வாடுகிறேன்!

" உனது குரல் யாழிசை என்றேன்"

" உன்னைப் பார்த்தாலே நான் பேசும் சக்தியை இழந்துவிடுகிறேன்!

" உனது நடை அன்னம்போல் அழகு நடை என்றேன்"

" உன்னை கண்டதும் என் கால்கள் புயலாகிறது!

" ஓ,, மொழி புரியா என் மௌனக் கவிதையே...

" என் ஆக்கமும் நீதான், என் ஏக்கமும் நீதான்!

No comments:

Post a Comment