Wednesday, August 12, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 18

"என்னடா என்ன ஆச்சு."

"டேய் நான் அப்பா ஆக போறேண்டா. ஆனால் அதை நினைச்சு என்னால சந்தோசபட முடியலை. ஸ்வேதா என்னை இன்னும் வெறுக்கிறாடா."

"கலாவை விட்டு ஸ்வேதாவை பத்திரமா பார்த்துக்க சொல்லு நான் கிளம்புறேன்". பதிலுக்கு காத்து இராமல் வெளியே வந்து காரை எடுத்து கொண்டு வீட்டுக்கு வந்தான்.

படுக்கையில் படுத்து கொண்டே கண்கள் கலங்க வெறித்தபடி மேல் கூரையைபார்த்து கொண்டு இருந்தான். 'ஸ்வேதா கருவுற்று இருக்கும் இந்த தருணம் தன் வாழ்க்கைலே மறக்க முடியாத தருணம், ஆனால் சந்தோசபட முடியவில்லையே.

'

ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் போனை எடுத்து சுமன் ஷெட்டியை அழைத்து "அங்கிள் ஒரு சந்தோசமான செய்தி, நீங்க தாத்தா ஆக போறீங்க". 

"என்ன மாப்பிள்ளை உண்மையா".

"ஆமா இப்போதான் hospitalல இருந்து வரேன்."

"என் பொண்ணு கிட்ட போனை கொடுக்குரின்களா."

"சாரி மாமா நான் வீட்டு வந்துட்டேன். இன்னும் அவளுக்கு என் மேல வெறுப்பு இருக்கு. என்னை மன்னிச்சுடுங்க மாமா. உங்களுக்கு மாப்பிள்ளையா இருக்க எனக்கு இல்லாமல் போச்சு." அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க போனை வைத்து விட்டான்.

சுமன் என்ன செய்வது என்று தெரியாமல் வாயடைத்து போக, நிவேதிதா "என்ன விஷயங்க" என்று உலுக்கினாள். 

கிருஷ்ணா போன் செய்த விஷயத்தை சொல்ல, "நல்ல மனுஷன் அவர். எந்த அளவுக்கு வேதனைபட்டு இருக்கார்" என்று வருத்தபட்டு கொண்டே, ஸ்வேதா நம்பரை டயல் செய்தாள். 

இரண்டாவது ரிங்கில் ஸ்வேதா போன் எடுக்க"ஸ்வேதா Congrats. இப்போ உடம்பு எப்படி இருக்கு. நாங்க உடனே கிளம்பி வரோம்"என்று சொல்ல, 

"உங்களுக்கு எப்படி விஷயம் தெரியும்".

"மாப்ளைதான் போன் பண்ணி சொன்னார்". "அவர் என்னை தவிர எல்லார் கூடயும் பேசுவார்" என்று சலித்து கொண்டு, 

"இப்போ நான் கலா கூட இருக்கேன்மா. நீங்க வர வேண்டிய அவசியம் இல்லை" என்று சொல்ல, 

"இல்லை ஸ்வேதா, இது எங்களோட முதல் பேர குழந்தை. நாங்க கைல வச்சு தாங்க போறோம்" என்று குறும்புடன் சொல்லி விட்டு,சுமனிடம் "முதல்ல நீங்க ட்ரெயின் டிக்கெட் book பண்ணுங்க" என்று சொல்ல, இரண்டாவது நாள் பெங்களூர் வந்து சேர்ந்தனர்.

வீட்டுக்கு வந்த அப்பா, அம்மாவை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டாள்.

நிவேதிதா அவளை பார்த்து, "நான் வேணா மாப்பிள்ளையை வர சொல்லட்டுமா. இப்போ கூப்பிட்டா உடனே ஓடி வந்துடுவார்" என்று சொல்ல, ஸ்வேதா முகம் கடுமையாக மாறியது. 

பேச்சை மாற்றினார் சுமன். "என்ன காலை டிபன்" என்று ஆரம்பிக்க, "இன்னைக்கு ஆபீஸ் லீவ் போட வேண்டியது தானே" என்று கேட்க, 

"இல்லப்பா, இன்னைக்கு பிரான்ஸ்ல இருந்து ஷெரில்-ன்னு ஒரு பொண்ணு வராங்க, நான்தான் எல்லாம் arrange பண்ணி இருக்கேன்.நான் கட்டாயம் போய் ஆகணும்" என்று குளித்து, சாப்பிட்டு கிளம்பினாள்.

காலை கேபினுக்குள் நுழைந்த ஸ்வேதா, கிருஷ்ணாவை காணாமல் எங்கே போய் இருப்பான் என்று யோசித்தாள்.

ஷெரில் நம்பர் போன் செய்ய அவள் எடுத்து "ஹாய் ஸ்வேதா நான் இப்போ ஏர்போர்ட்ல, கிருஷ்ணா என்னை பிக் அப் பண்ண வந்துட்டான்."

"ஓகே" போனை வைத்தாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் Conference ரூமுக்குள் ஷெரில் வர, தொடர்ந்து உள்ளே வந்தகிருஷ்ணா, ஹரி பேசி கொண்டு இருந்தனர்.சேர்மன் சுப்ரமணியம் அடுத்த பத்து நிமிடத்தில் வந்து பேசி கொண்டு இருக்க இதை எல்லாம் கேபினில் இருந்து ஸ்வேதா பார்த்து கொண்டு இருந்தாள். 

சேர்மன் கிளம்பி சென்ற உடன், ஸ்வேதாவை இன்டெர்காம் அழைத்தது. போனில் கிருஷ் அவளை 'கான்பிரன்ஸ் ரூம் வர சொல்ல'அவள் சென்றாள். 

ஷெரில் ஸ்வேதாவை பார்த்து "Hai Indian Beauty" என்று அணைத்து கொள்ள ஸ்வேதா முகம் சிவந்தாள். இருவரும் பிரெஞ்சு மொழியில் பேசி கொள்ள, கிருஷ் புரியாமல் விழிக்க பெண்கள் இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

கிருஷ் விடைபெற்று கொள்ள, ஸ்வேதா ஷெரில் உடன் சர்வீஸ் அபார்ட்மென்ட் drop செய்ய சென்றாள்.

அடுத்த ஒரு வாரம் ஷெரில் உடன் கிருஷ்ஹோசூர் பாக்டரி, directors meeting ஏற்பாடு செய்ய, கடைசியில் ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. 

ஷெரில் பாரிஸ் கிளம்ப வேண்டிய நாள் வந்தது. "என் கூட ஏர்போர்ட் வரியா, உன் கூட கொஞ்சம் தனிமைல பேசணும்" என்று சொல்ல,ஸ்வேதா தலை அசைத்தாள்.

காரில்ஷெரில் பேச ஆரம்பித்தாள். "முதல்ல கிருஷ்ணாவை பார்த்த போது எனக்கு அவனை பிடித்து போனது. அவன் கிட்ட datingபோகலாம அப்படின்னு கேட்டது எங்க நாட்டு culture படி தப்பு கிடையாது. அவன் ஒத்துக்கலை. முதல்ல அவன் ஆண்மை மேல எனக்கு சந்தேகம் வந்தது." சிரிக்க ஆரம்பித்தாள்.

"அவன் கிட்ட கொஞ்ச நாள் பழகினதுக்கு அப்புறம் தான் அவன் உன் மேல எவ்வளவு அன்பு வச்சு இருக்கானு தெரிஞ்சுது"மீண்டும் சிரித்தாள்.

"உன்னை பத்தி பேசும்போது அவன் கண்கள் அப்படியே கனவில மிதக்க ஆரம்பிச்சுடும்.உன் மேல அவன் பைத்தியமா இருக்கானு புரிஞ்சுகிட்டேன். ஒரு வேளை நீ என்னை விட அழகியா அப்படின்னு தெரிஞ்சுக்க ஆசை. நீ ஒரு Indian Angel அப்படின்னு உன்னை பார்த்த உடனே தெரிஞ்சு கிட்டேன்" பெருமூச்சு விட்டாள்.


"இப்போ நான் அவன் கிட்ட பேசிய போது உங்க ரெண்டு பேருக்கும் இடைல பிரச்சனைன்னு சொன்னான். என்ன பிரச்சனைன்னு அவன் சரியா சொல்லலை.ஆனா அவன் உன் மேல வச்சு இருக்கிற காதல்ல ஒரு துளிகூட பொய் கிடையாது. எனக்கு இப்படி ஒரு காதலன் கிடைச்சு இருந்தா நான் அவனை தான் கல்யாணம் பண்ணி இருப்பேன்."

"இப்போ கூட அவன் என்கிட்ட கேட்டதெல்லாம், ஸ்வேதா கிட்ட இதெல்லாம் சொல்லாதேன்னு கேட்டுகிட்டான். ஆனால் என் மனசு கேட்கலை. நீங்க ரெண்டு பேரும் ஒரு நல்ல கணவன் மனைவியா இருப்பிங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் உன் மேல வச்சு இருக்கிற காதலை பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில வந்து இருக்கிற எனக்கு புரியுது, சில மீட்டர் அருகில இருக்கிற உனக்கு புரியலைன்னு எனக்கு வேதனையா இருக்கு."

"இப்போ உன்னோட வறட்டு பிடிவாதத்தோட நீ அவன் கூட சேராம இருக்கலாம், ஒரு வேளை நீ மனம் மாறி பிற்காலத்தில சேரலாம். அப்போ இந்த இளமை திரும்ப கிடைக்குமா, உங்களுக்கு குழந்தை பிறக்கபோகுதுன்னு சொன்னான். அந்த குழந்தை அப்பா இல்லாம வளரனும்னு என்ன அது செஞ்ச பாவமா? இல்லையே."

"இன்னும் இந்தியால social systems எதுவும் முழுக்க சிதைந்து போகலை.எனக்கு கிடைக்காதஅப்பா அன்பு உன்னோட குழந்தைக்கு கிடைக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு," உதடுகளை கடித்து தன் கண்ணீரை அடக்கி கொண்டாள்.

"எனக்கு தோணியதை சொல்லிட்டேன் அப்புறம் உன்னோட இஷ்டம்". அதற்குள் பெங்களூர் ஏர்போர்ட் வந்து சேர, அவளை இறக்கி விட்டு நேரத்தை பார்க்க மாலை ஐந்து மணி. இப்போ கிருஷ் ஆபீஸ்ல தான் இருப்பாண். நம்ம கிட்ட ஒரு சாவி இருக்கு. அவன் வீட்டுக்கு போகலாம் என்று முடிவு செய்து டிரைவரை வில்சன் கார்டன் நோக்கி வண்டியை விட சொன்னாள்.

தன்னிடம் இருந்த சாவியை போட்டு வீட்டை திறக்க உள்ளே நல்ல இருட்டு.கதவுக்கு அருகில் இருந்த லைட்டை ஆன் செய்ய, ஹால் முழுக்கஒளி வெள்ளம பாய்ந்தது. வீட்டை சுற்றி பார்த்தவள் அசந்து போனாள். 

கதவின் உள்புறம அவள் portrait அளவு போட்டோ மாட்டப்பட்டு இருக்க, திரும்பிய இடம் எல்லாம் அவள் போட்டோதான். சமையல் அறையில் காஸ் அடுப்புக்கு அருகில், பாத்ரூம் கண்ணாடிக்கு அருகில் என்று எல்லா இடங்களிலும் அவள் போட்டோ வியாபித்து இருந்தது.

ஆச்சர்யத்தில் இருந்து மீள முடியாமல் அவன் பெட்ரூம் நுழைந்து படுக்கையை பார்த்தவள் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்

பெட்டில் அவளின் முழு உருவமும் போட்டோ வடிவத்தில் படுத்து இருப்பதுபோல் இருக்க, அருகில் இடம் கிருஷ் படுத்து கொள்ள இடம்காலியாக இருந்தது.

கிருஷ்ணாவுக்கு ஆபீஸில் நிலை கொள்ளவில்லை. என்ன ஸ்வேதாவை இன்னும் காணவில்லை என்று யோசித்து டிரைவரிடம் போன் செய்து கேட்க "சார் இப்போதான் அவங்களை வில்சன் கார்டன் வீட்ல ட்ராப் பண்ணிட்டு வரேன்" என்று சொல்ல அவனுக்கு புரியவில்லை. 

'சரி நாம வீட்டுக்கு போகலாம்' என்று கிளம்பி சென்றான்.ஸ்வேதாவுக்கு எவ்வளவு நேரம் அழுது கொண்டு இருந்தோம் என்று தெரியவில்லை. தலையோ சுற்ற தொடங்கியது. மயங்கி பெட்டில் சாய்ந்து விட்டாள்.

கிருஷ்ணா கதவை தன்னிடம் இருந்த சாவி போட்டு திறந்து உள்ளே வர, எல்லா இடத்திலும் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது.ஸ்வேதா தான் வந்து இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு. தேடினான்.



கடைசியில் தன் பெட்ரூம் வந்து பார்க்க, ஸ்வேதா மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ந்து போனான். ஓடி சென்று பிரிட்ஜ் தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்து, தலை தூக்கி கொஞ்சம் வாயில் புகட்டி விட, ஸ்வேதாவுக்கு மயக்கம் தெளிந்தது.

அவனை அருகில் பார்த்தவுடன் KK என்று அழுது கொண்டே இருக்க கட்டி கொள்ள, திணறி போனான்.என்னை மன்னிச்சுடு KK என்று சொல்லி கொண்டு அவன் முகம் முழுக்க முத்த மழை பெய்து, அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள்.

"என்ன கண்ணம்மா, என்ன ஆச்சு" என்று கண்ணில் அன்பு வழிய கேட்க, என்னை பெயர் சொல்லி கூப்பிடுங்க ப்ளீஸ் என்று கெஞ்ச, அவள் காதுக்குள் "என் காதல் ராணி ஸ்வேதா" என்று அழைக்க, கண்கள் மயங்கியது போல் மூடி கொண்டு அவன் இதழ்களை தனது இதழ்களால் பூட்டினாள்.

"இப்போ கோபம் போயிடுச்சா" என்று அவன் கிண்டலுடன் கேட்க, 

"போடா ராஸ்கல், என்னை நீ ரொம்ப படுத்திட்ட. உன்னை நான் விட மாட்டேன்" என்று அவன் மீது படர்ந்து மீசையை பிடித்து இழுத்தாள்.

"ஆ" என்று கத்தி கொண்டே, "கண்ணம்மா இப்போ முன்ன மாதிரி நாம ஆட்டம் போட முடியாது. வயித்தில நம்ம குழந்தை இருக்குது."

"ஆமால்ல, சரி எப்போ நம்ம கல்யாணம்" என்று குறும்போடு கேட்க, கல்யாணம் எப்போ வேணாம் வச்சுக்கலாம். நீ இது வரைக்கும் என்னை பார்த்து ஒரு தடவையாவது I love you சொல்லி இருக்கியா" என்று கிண்டல் செய்ய, 

"சொல்லிட்டா போச்சு" என்று சொல்லியவாறு, முத்தம் ஒன்றுக்கு ஒரு 'ஐ லவ் யூ' சொல்ல, எத்தனை என்று எண்ண ஆரம்பித்தான்.எண்ணிக்கை முடியவில்லை. முத்தங்கள் தொடர்ந்தது.

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கலைகளின் ஆலயம்

தழுவிடும் இனங்களில் மான் இனம்

தமிழும் அவளும் ஓர் இனம் 


உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

என் உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்

உறவினில் விளையாடி 

வரும் கனவுகள் பல கோடி



பின் குறிப்பு

1. காதலர்கள் இருவரும் சேர்ந்தது அனைவருக்கும் சந்தோசமே. அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.திருமணத்துக்கு பிரான்ஸ் ஸில் இருந்து ஷெரில், மும்பையில் இருந்து கல்பனா வந்தது சிறப்பு. வெளி நாட்டு டூரில் இருந்ததால் கல்பனா நின்று போன திருமணத்துக்கு கலந்து கொள்ளவில்லை.

2. ஆறு மாதங்களில் சன் சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வருமானம் முன்னூறு கோடியை எட்டி, இந்திய நிறுவனங்களில் இரண்டாவது இடத்தை அடைந்தது

3. திருமணம் நடந்த எட்டாவது மாதம் கிருஷ்- ஸ்வேதா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது

4. கிருஷ்ண குமார், ஹரி இருவரும் கம்பெனியின் புதிய டைரக்டர்களாக பொறுப்பேற்றனர். கிருஷ்ணா கம்பெனி யின் முதல் MD யாக நியமனம்

5. கிருஷ்ணாவின் பெற்றோர்கள் பெங்களூர் வந்து கிருஷ்ணாவுடன் நிரந்தரமாக தங்கினர்.



முற்றும்






No comments:

Post a Comment