Wednesday, August 19, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 12

கிருபாவின் கண்ணீர் ரஞ்சனாவின் தோளில் வழிய,, ரஞ்சனாவின் கண்ணீர் கிருபாவின் நெஞ்சில் வழிந்து சட்டையை நனைத்தது,,

“ ப்ளீஸ் அழாதீங்க சார்,, தைரியமா இருங்க ” என்று கிருபாவின் முதுகை தடவிக்கொடுத்தாள் ரஞ்சனா

அவளின் ஆறுதலும், இதமான வருடலும் கிருபாவை ஆசுவாசப்படுத்தியது,, மெதுவாக அவளை விலக்கி விட்டு அங்கிருந்த சோபாவில் போய் பொத்தென்று அமர்ந்தான்

ரஞ்சனா முகத்தை முந்தானையால் துடைத்தபடி உள்ளே போய் சிறிது நேரத்தில் ஒரு தண்ணீர் சொம்பும் மறுகையில் ஈரமான ஒரு டர்க்கி டவலும் எடுத்து வந்தாள்

டவலை கிருபாவிடம் நீட்டி “ முகத்தை தொடைச்சிட்டு தண்ணி குடிங்க சார் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்” என்றாள்


கிருபா மறுக்காமல் டவலை வாங்கி முகத்தை அழுந்த துடைத்தான்,, பிறகு தண்ணீரை வாங்கி பருகிவிட்டு பாத்திரத்தை அவளிடம் கொடுத்துவிட்டு “ ஸாரி ரஞ்சனா, என் கஷ்டத்தை சொல்லி உன்னையும் அழவச்சிட்டேன்” என்று குரலில் வருத்தத்துடன் கூறினான்

மறுபடியும் உள்ளே போய் கையிலிருந்தவற்றை வைத்துவிட்டு வந்து கிருபாவின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவள் “ என்னதான் ஆச்சு சார் மேடத்துக்கு,, டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க?” என்று ரஞ்சனா கேட்க

“ வசந்திக்கு ரத்தப் புற்றுநோய் வந்திருக்கு ரஞ்சனா,, அதுவும் கிட்டத்தட்ட மூனு நாலு வருஷமா இருந்திருக்கு,, எங்களுக்கு தெரியவேயில்லை,, இப்போ சமீபமா ஒரு நாலு மாசமா தான் ரொம்ப மெலிஞ்சு போன, எப்பவுமே ஒரு சோர்வு இருந்தது,, இப்பக்கூட நான்தான் வற்புறுத்தி ஆஸ்பிட்டல் கூட்டிப்போனேன்,, இல்லேன்னா இன்னிக்கு வரைக்கும் அவளுக்கு என்னன்னு யாருக்குமே தெரியாம போயிருக்கும்,, புருஷன் பிள்ளைக்காக வாழ வேண்டியதுதான் ஆனா தனக்கு என்னன்னு கூட பார்க்காம எங்க சந்தோஷமே முக்கியம்னு இருந்திருக்கா,, இதை நெனைச்சே எனக்கு வேதனை இன்னும் அதிகமாகுது,, டாக்டர்ஸ் இனிமேல் எதுவும் செய்யமுடியாதுன்னு கையை விரிச்சுட்டாங்க ரஞ்சனா” என்ற கிருபா மறுபடியும் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தான்
ரஞ்சனாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை,, அவனுடன் சேர்ந்து அழுவதை தவிர,, சிறிதுநேரம் கழித்து “ மருந்து மாத்திரைகளின் உதவியால் கொஞ்ச நாட்களை தள்ளி போடமுடியுமே தவிர, வேற எதுவும் செய்ய முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்,, எனக்குள்ள ரொம்ப குற்றவுணர்வா இருக்கு ரஞ்சனா,, அவகிட்ட இத்தனைநாளா ரொம்ப சந்தோஷமா இருந்துட்டு அவ உடல்நிலையை கவனிக்காம இருந்துட்டேன்,, ஒவ்வொரு நிமிஷமும் என்னோட சந்தோஷமே முக்கியமா வாழ்ந்துகிட்டு இருந்தவ,, இப்பவும் இரவுநேரத்தில் என்னை நினைத்துதான் வருத்தப்படுறா ரஞ்சனா” என்று சங்கடமாக கிருபா பேசினான்

அவனுடைய ஒவ்வொரு வார்த்தையிலும்,, ஒவ்வொரு சொட்டு கண்ணீரிலும்,, மனைவியின் மீது அவன் வைத்திருக்கும் அன்பும் காதலும்தான் தெரிந்தது
அவனுக்கு ஆறுதல் சொல்லமுடியாமல் ரஞ்சனா தவிப்புடன் அமர்ந்திருக்க,,..

அவள் முகத்தை பார்த்து “ சரி என் பிரச்சினை இருக்கட்டும் ,, நீ ஏன் வயல் வேலையெல்லாம் செய்ற,, உன்னை யாரு அதையெல்லாம் செய்யச்சொன்னது,, ஏற்க்கனவே ரொம்ப வீக்கா இருக்கேன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க,, இப்போ இந்த மாதிரி வேலையெல்லாம் செய்தால் உடம்பு இன்னும் தான் வீக்காகும்,, இதோபார் ரஞ்சனா இனிமேல் என்னால வசந்தியை கவனிச்சுக்கவே நேரம் சரியாக இருக்கும்,, இங்கே அடிக்கடி வரமுடியாது,, அதனால டெலிவரி வரைக்கும் நீதான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்,, இந்த மாதிரி வேலையெல்லாம் செய்து உன் பங்குக்கு நீ வேற என்னை வேதனைப் படுத்தாதே சரியா?” என்று குரலில் கடுமையுடன் கிருபா கேட்டதும், சரியென்று மெதுவாக தலையசைத்தாள் ரஞ்சனா

அதன்பிறகு வசந்தியின் ட்ரீட்மெண்ட் பற்றி சிறிதுநேரம் பேசியவன்,, இனிமேல் அவளுடனேயே இருக்கவேண்டும் என்பதால் இங்கே அடிக்கடி வரமுடியாது என்று கூறி , ரஞ்சனாவை ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்

அவன் சொன்னது போலவே அடிக்கடி வருவதில்லை.. போன் செய்து ரஞ்சனாவின் நலனைப்பற்றி விசாரிப்பவன்,, வசந்தியின் தற்போதைய நிலையை பற்றி சொல்லுவான்,, அவன் குரலை கேட்பதே தனக்கு போதும் என்று நினைத்தாள் ரஞ்சனா

ஒருமுறை அந்த வழியாக எங்கே போனவன் வந்தான்,, தோட்டத்து வீட்டுக்கு ரஞ்சனாவை பார்க்க வந்தான்,, கிட்டத்தட்ட மூன்று மாதம் கழித்து கிருபாவை பார்த்ததும் ரஞ்சனாவுக்கு கண்ணீரே வந்துவிட்டது,, அவனை பார்த்த சந்தோஷத்தில் தன்நிலையை மறந்து வேகமாக வந்து அவன் கையை பற்றிக் கொண்டு “ எப்படி இருக்கீங்க” என்றவள் பற்றியிருந்த கையை கிருபா உற்று நோக்கவும்,, சுதாரித்துக்கொண்டு சங்கடத்துடன் கையை விடுவித்தாள்

கிருபாவுக்கு அவள் மனசும் எதிர்பார்ப்பும் ஓரளவுக்கு புரிந்தாலும் எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருந்தான்,, தன்னையறியாமல் ரஞ்சனாவுக்கு தன் மனதின் ஒரு ஓரத்தில் இடமளித்து விட்டதை அவனும் உணர்ந்தான்,, ஆனால் தன் குடும்ப கௌரவமும், வசந்தியின் மேல் உள்ள அன்பும் ,, சத்யன் மேல் உள்ள பாசமும், ரஞ்சனாவின் நினைவுகள் அவன் மனதில் முழுமையாக பரவாமல் அணை போட்டு வைத்திருந்தது

அவளுடைய அமைதியான முகமும்,, தனது பரிதாபமான நிலையை வெளிக்காட்டாமல் தன்மானத்துடன் வாழ நினைக்கும் பாங்கும்,, தன்னுடைய துக்கமறிந்து தனக்கு அவள் கூறும் ஆறுதல்களும்,, இந்து எட்டு மாதங்களாக ஒரு பார்வைகூட தவறாக பார்த்து அவனை தன்வசப்படுத்த முயலாத அவளின் நேர்மையும் கிருபாவை அவள் பக்கமாக சிறுகச்சிறுக ஈர்த்தது


ரஞ்சனா அவனை பற்றியிருந்த கையை சங்கடத்துடன் விட்டதும்,, மறுபடியும் அவள் கையை பற்றி ஆறுதலளிக்க எழுந்த ஆர்வத்தை அடக்கிக்கொண்டு “ நீ எப்படி இருக்க ரஞ்சனா?,, கரெக்டா செக்கப்புக்கு போறியா? குழந்தை நல்லாருக்கா? ,, என்று கேட்டுவிட்டு முன்பைவிட இப்போது இருமடங்காகிவிட்ட அவளின் பெரிய வயிற்றை குனிந்து பார்த்தான்,,

கிருபா தனது வயிற்றை பார்த்ததும் ரஞ்சனாவுக்கு இயல்பாக வந்த கூச்சத்துடன் தலைகவிழ்ந்து “ ம் அதெல்லாம் கரெக்டா போறேன்,, குழந்தை நல்லாருக்குன்னு சொன்னாங்க” என்றாள்

அதன்பிறகு இருவருக்கும் இடையே திடீரென்று ஒரு மவுனம் வந்து அமர்ந்தது,, அவன் அமைதியாக பிரம்பு சோபாவில் அமர்ந்திருக்க,, அவள் முற்றத்து தூணை பிடித்துக்கொண்டு தலைகவிழ்ந்து நின்றிருந்தாள். எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் கிருபாவின் இந்த மவுனம் ரஞ்சனாவுக்கு வியப்பாக இருந்தது,, அவன் முகத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலை அடக்கிக்கொண்டு அப்படியே நின்றிருந்தாள்

சிறிதுநேர அமைதிக்கு பிறகு எழுந்துகொண்ட கிருபா “ நான் கிளம்பட்டுமா ரஞ்சனா,, வசந்திக்கு மெடிசன் எடுத்து குடுக்கனும்” என்று கூறிவிட்டு அவளின் பதிலுக்காக நின்றிருந்தான்

அதற்க்கு மேலும் மவுனமாக இருப்பது சரியில்லை என்று உணர்ந்த ரஞ்சனா “ ம் கிளம்புங்க,, வசந்தி மேடத்தை நான் ரொம்ப விசாரித்ததா சொல்லுங்க,, அவங்களை பார்க்க வரனும்னு ஆசையா இருக்கு,, ஆனா நீங்கதான் வேண்டாம்னு சொல்றீங்க” என்றால் சங்கடத்துடன்

“ வேண்டாம் ரஞ்சனா நீ இருக்குற நிலையில அங்கே வரவேண்டாம்,, பலரோட பேச்சு பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்றான் கிருபா

அவன் சொல்வது நூறுசதம் உண்மை என்பதால் மேற்க்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியா அவனை வழியனுப்பு வெளியே வந்தாள்,,

காரில் ஏறிய கிருபா ஏதோ நினைவு வந்தவன் போல மறுபடியும் இறங்கி “ டெலிவரிக்கு இன்னும் பதினைஞ்சு நாள் தானே இருக்கு,, ஈவினிங்ல நிறைய வாக்கிங் போ,, டாக்டர் சொன்ன தேதிக்கு ஒருநாள் முன்னாடியே ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிரு,, ஆஸ்பிட்டல் போனதும் எனக்கு ஒரு போன் பண்ணிடு ரஞ்சனா,, மறந்துறாதே” என்ற கிருபா தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பணக்கட்டை எடுத்து அவள் கையைப் பற்றி அதில் வைத்தான் “ இந்த பணத்தை வச்சுக்க,, மேல்கொண்டு தேவைப்பட்டா நான் வரும்போது எடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு மறுபடியும் காரில் ஏறிக்கொண்டான்

கையில் இருந்த பணத்தை கண்ணீருடன் பார்த்தாள்,, இதோ கிருபாவின் இந்த பணம் மட்டும் தான் ரஞ்சனா அருவருக்கக்கூடிய விஷயம்,, எவனுடைய பிள்ளையையோ கிருபாவின் பணத்தில் பிரசவிக்கப்போவது தான் அவளை கூச வைத்தது,, பணத்தை வைத்து தன்னை விலைபேச முயலாத கிருபா அவள் மனதில் உயர்ந்து நின்றாலும்,, அவன் பணத்தில் வாழும் தன்நிலையை எண்ணி மனதுக்குள் அவள் தாழ்ந்து நின்றாள்,, தன்னால் அவனுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் அவன் பணத்தை மட்டும் உபயோகிக்கும் இந்த கேவலமான நிலையை நினைத்து கூசினாள்,

அவள் கண்ணீர் அவள் மனதை உணர்த்தினாலும் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற நிதர்சனம் அவனுக்கு புரிய, தன்னுடைய கலங்கிய கண்களை அவளுக்கு மறைத்து “ நான் கிளம்புறேன் ரஞ்சனா” என்று கிளம்பினான் கிருபா

அவன் கார் தனது கலங்கிய கண்களுக்கு தெளிவாக தெரியாவிட்டாலும், அது கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டு அங்கேயே நின்றாள் ரஞ்சனா.

காரின் பக்கவாட்டு கண்ணாடி வழியாக அவள் கையில் பணத்தோடு நிற்பதை கலங்கிய கண்களுடன் கார் திரும்பும் வரை பார்த்தான் கிருபா, இத்தனை நாட்களாக இல்லாமல் இன்று மட்டும் தனக்கு ஏன் இப்படி நெஞ்சு குமுறுகிறது என்று எண்ணியபடி காரை செலுத்தினான்

பிரசவ நாள் நெருங்க நெருங்க ரஞ்சனாவின் மனதில் இனம்புரியாத பயம் வந்து அமர்ந்தது,, இரவில் தூக்கம் வராமல் தவிக்க ஆரம்பித்தாள், யாராவது தன்னை மடியில் சாய்த்துக்கொண்டு கூந்தலை வருடி தூங்க வைக்கமாட்டார்களா என்று மனம் ஏங்கியது,, இப்போதெல்லாம் கிருபா கூட அடிக்கடி போன் செய்தாலும் நிறைய பேசுவது கிடையாது

‘’எப்படி இருக்க,, ‘ சாப்பிட்டயா,, என்ற ஒருசில வார்த்தைகள் மட்டுமே பேசுகிறான்,, ஏனென்று ரஞ்சனாவுக்கு புரியவில்லை,, ஒருவேளை பிறப்பிலும் வளர்ந்த விதத்திலும் இப்படியொரு கேவலமானவளுக்கு தன்னுடைய பணத்தை வாரியிறைத்து செலவு செய்கிறோமே என்று வருத்தப்படுகிறானோ என்று நினைத்தாள்

ச்சே அப்படியிருக்காது,, அவருக்கு மேடம் பற்றிய கவலையே அதிகமாக இருக்கும்,, இதில் என்னோட பேச நினைப்பது ரொம்ப அதிகப்பிரசங்கித்தனம் என்று அடுத்த கணமே தன்னுடைய நினைப்பை மாற்றிக்கொள்வாள்

ஆஸ்பிட்டல் போவதற்கு ஒருநாள் முன்பு கிருபாவிறகு போன் செய்தபோது அவன் எடுக்கவேயில்லை,, ஒரேயடியாக தன்னை வெறுத்துவிட்டானோ என்று ரொம்பவே பயந்துபோனாள்,, குழந்தை பிறந்ததும் குழந்தையுடன் எங்காவது போய்விடவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துவிட்டு ஆஸ்பிட்டல் கிளம்பினாள்

ரஞ்சனா போன் செய்தபோது கிருபா கலக்கத்துடன் போனைத்தான் வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான்,, அவன் மனதில் ஆக்கிரமித்து விட்ட ரஞ்சனாவின் நினைவுகளை ஒதுக்கமுடியாமல் தவித்தான்,, வசந்தியிடம் வைத்துள்ள அன்பை யாருக்கும் பகிர்ந்தளிக்க முடியாது என்று உறுதியாக எண்ணினான்,, ரஞ்சனாவை பிரசவ நேரத்தில் பார்த்தால் மேலும் தன்மனம் பலகீனமாகிவிடும் என்றுதான் அவன் பயந்தான்


செல்லை ஆப் செய்துவிட்டு மில்லில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான்,, வசந்தியின் அறைக்குள் நுழைந்தவனை படுக்கையில் இருந்த வசந்தி மெலிந்த குரலில் முதலில் கேட்ட கேள்வி “ நீங்க ரஞ்சனாவை ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போகலையா?,, இன்னிக்கு தானே டாக்டர் டெலிவரி டேட் சொல்லியிருக்காங்க? பின்ன நீங்க ஏன் போகலை? ” என்றுதான் கேட்டாள்

அலுவலக உடைகளை மாற்றிக்கொண்டு வசந்தியின் அருகில் வந்து அமர்ந்த கிருபா போகவில்லை என்று தலையசைத்து மறுத்துவிட்டு வசந்தியின் கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு அவளருகில் சரிந்து படுத்துக்கொண்டான்

தன்னருகில் படுத்த கணவனின் தலையை வருடியவாறு “ என்னம்மா என்ன ஆச்சு,, பாவம் அந்த பொண்ணு நம்மை விட்டா யாரு இருக்காங்க,, புருஷன்னு கையெழுத்து வேற போட்டுட்டு வந்துருக்கேன்னு சொன்னீங்க,, பிரசவ நேரத்தில் அவளுக்கு ஏதாவது சிக்கல்ன்னா மறுபடியும் கையெழுத்து கேட்பாங்களேங்க,, இந்த நேரத்தில் இதென்ன பிடிவாதம் ராஜா” என்று மெல்லிய குரலில் வசந்தி எடுத்துரைக்க

“ ம்ஹூம் நான் உன்னைவிட்டு எங்கேயும் போறமாதிரி இல்லை வசந்தி,, என்னை வற்புறுத்தாதே” என்று கூறிவிட்டு தன் நெஞ்சில் இருந்த நோயால் மெலிந்த தன் மனைவியின் கரங்களை எடுத்து தன் கழுத்தடியில் வைத்துக்கொண்டு அவள் புரமாக திரும்பி படுத்துக்கொண்டான்
ஏதோ நடந்திருக்கிறது என்று நினைத்தாலும் ,வசந்தியும் அதற்குமேல் அவனை எதுவும் கேட்டு வற்புறுத்தவில்லை

ஆனால் வசந்தி நோகாமல் அணைத்தபடி படுத்திருந்த கிருபாவிற்கு மனம் முழுவதும் ரஞ்சனாவை கடைசியாக பார்க்கும் போது கையில் பணமும் கண்களில் கண்ணீருமாக நின்ற கோலம்தான் மனதில் மறுபடியும் மறுபடியும் தோன்றி வதைத்தது

அப்பா வந்துவிட்டான் என்றதும் அறைக்குள் ஓடிவந்து கிருபாவின் மீது தாவிய சத்யனையும் சேர்த்து அணைத்துக்கொண்டான் கிருபா,,அவன் செய்கைகள் எதையோ கண்டு பயப்படுவது போல் இருந்தது,,


மறுநாள் மில்லுக்கு கிளம்பும் போதுதான் தனது மொபைலை ஆன் செய்தான் கிருபா,, காரில் போகும்போது மொபைல் அடிக்க எடுத்து பார்த்தான், புது நம்பராக இருந்தது, ஆன் செய்து காதில் வைத்தான்

“ ஹலோ நீங்க கிருபானந்தனா,, நாங்க ஆர் கே ஆஸ்பிட்டல்ல இருந்து பேசுறோம்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டதும்,,

ஆஸ்பிட்டல்ல இருந்து என்றதும் கிருபாவின் வயிற்றில் சில்லென்று ஒரு உணர்வு தாக்க “ சொல்லுங்க நான் கிருபானந்தன் தான்,, ரஞ்சனாவுக்கு என்னாச்சு” என்றான் பதட்டத்துடன்

“ ஒரு நிமிஷம் இருங்க சார்,, இதோ பேசுறாங்க” என்று கூறிவிட்டு போனை பக்கத்தில் யாரிடமோ கொடுக்க

அன்னம்மாதான் பேசினார் “ ராசா எப்படியிருக்கீக,, இங்க ரஞ்சனா கண்ணுக்கு பொட்டப்புள்ள பொறந்து இருக்கு,, நைட்டு பதினோரு மணிக்கு பொறந்துச்சு,, உங்களுக்கு போன் பண்ணி தகவல் சொல்ல சொல்லி ரெண்டு மூனு வாட்டி சொல்லுச்சு,, அதான் போன் பண்ணேன்” என்று அன்னம்மா உரக்க பேசினார்

அதுவரை மனதை பிடித்து வைத்திருந்த ஏதோவொன்று பட்டென்று விடுபட,, ரஞ்சனா பிரசவ நேரத்தில் தன்னை காணாமல் எப்படி தவித்தாளோ என்ற கழிவிரக்கம் மேலோங்க “ சரி அன்னம்மா இதோ இன்னும் அரை மணிநேரத்தில் அங்க இருப்பேன்” என்று கூறி இணைப்பை துண்டித்து காரை மருத்துவமனைக்கு திருப்பினான் கிருபா

மருத்துவமனைக்குள் நுழைந்து ரஞ்சனா இருக்கும் அறையை விசாரித்து,, அவர்கள் கூறிய அறையை அடைந்து வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே போனான்

முதலில் அவன் கண்கள் தேடியது ரஞ்சனாவைத்தான்,, பிரசவித்த களைப்பில் கலைந்த ஓவியமாக கண்மூடி கட்டிலில் கிடந்தாள் ரஞ்சனா,, சிறிதுநேரம் அவளருகே நின்று கலங்கிய கண்களுடன் அவளையே பார்த்த கிருபா பிறகு அவளருகே தொட்டில் கிடந்த ரோஜா குவியலை அருகில் சென்று பார்த்தான்

ரஞ்சனா அழகி என்றால் அந்த அழகின் பிரதியாக கிடந்தது அந்த பெண் குழந்தை,, சத்யன் பிறந்து பதினோரு வருடம் கழித்து இப்போதுதான் ஒரு பிறந்த குழந்தையை கிருபா பார்க்கிறான், கொஞ்சநேரம் அவன் மனதில் இருந்த சோகங்கள் மறைந்து, இனம்புரியாத சந்தோஷம் வந்து அமர குழந்தையின் கால் விரல்களை தொட்டான்,, இவன் தொட்டவுடன் சிலிர்த்தது குழந்தை,, அதை பார்த்ததும் கிருபாவுக்கும் உள்ளுக்குள் சிலிர்த்தது

தனது ஆள்காட்டி விரலை நீட்டி குழந்தையின் வலது உள்ளங்கையில் வைக்க குழந்தை அந்த விரலை பற்றிக்கொண்டது,, கிருபாவுக்கு ஓவென்று அழவேண்டும் போல் இருந்தது,, சில மாதங்களாக சந்தோஷத்தை மறந்துவிட்டிருந்த அவன் மனதுக்கு வெண்பனி சாரலாய் இருந்தது அந்த குழந்தையின் வரவு,, இந்த குழந்தையை ரஞ்சனா வயிற்றில் சுமந்த போது கிருபாவுக்கு குழந்தையை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் கிடையாது,, ஆனால் இப்போது அந்த சின்னஞ்சிறு சிசுவை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது

கிருபா நிமிர்ந்து ரஞ்சனாவை பார்த்தான் அவள் கண்விழித்து இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் கண்கள் கலங்கி கண்ணீர் கன்னங்களில் வழிய அவனையே பார்த்தாள், அவள் இதழ்கள் எதையோ சொல்ல துடித்தது,

கிருபா குழந்தையிடமிருந்து தனது விரலை விடுவித்துக்கொண்டு ரஞ்சனாவை நெருங்கினான், குனிந்து அவள் முகத்தை பார்த்த கிருபா “ அழாத ரஞ்சனா,, நான்தான் வந்துட்டேனே” என்று கூறிவிட்டு அவள் கண்ணீரை துடைத்துவிட்டு தனது தயக்கத்தை உதறிவிட்டு சட்டென்று அவள் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான்


ரஞ்சனா தன் கண்களை மூடிக்கொண்டாள் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது,,

மறுபடியும் அவள் கண்ணீரை துடைத்த கிருபா “ ஸ்... ரஞ்சனா அழாதே இந்தமாதிரி நேரத்தில் அழக்கூடாதுன்னு சொல்லுவாங்க ப்ளீஸ் அழாதே ரஞ்சனா” என்று அவள் கையைப்பிடித்து கெஞ்சினான் கிருபா,, ஆனால் அவனுக்கும் கண்கள் கலங்கித்தான் இருந்தது

இருவரும் இப்போதெல்லாம் நிறைய கண்ணீர் விடுகிறோம் என்று இருவருக்குமே புரிந்தது,, ஏன் அழுகிறோம் என்று காரணம் புரியாமல் இல்லை ,, ஆனால் அதைச் சொல்லத்தான் இருவரும் பயந்தனர்,, காலங்கடந்து முறையற்று வந்த இந்த காதலைச்சொல்ல இருவரும் பயந்தனர்,, இருவருக்கும் காதலைவிட குற்றவுணர்வே அதிகமாக இருந்தது,, கண்ணீரால் தங்களின் காதலை இருவரும் மறைக்க முயன்றனர்,,

இந்த முறையற்ற காதல் வெளிவுலகிற்கு தெரிந்தால் எவ்வளவு கேலி பேச்சுக்கு ஆளாவோம் என்று இருவருக்குமே புரிந்ததால்,, இருவரும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள பயந்தனர் என்பதுதான் உண்மை,, எந்த நேரத்திலும் காதலை வெளிக்காட்டாமல் மனதுக்குள் புதைந்து மடிந்து போகவேண்டும் என்று இருவருமே நினைத்தனர்

அதற்க்குள் அன்னம்மா காபி பிளாஸ்க்குடன் உள்ளே வர, இருவரும் கண்ணீரை துடைத்துக்கொண்டனர்,, கிருபா மறுபடியும் குழந்தையின் அருகில் வந்தான்,, குழந்தையை அவன் தொட்டுத் தொட்டு ரசிப்பதை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தாள் ரஞ்சனா

அன்னம்மா குழந்தையை துணியில் சுற்றி தூக்கி கிருபாவிடம் கொடுக்க,, கைகள் நடுங்க குழந்தையை வாங்கிய கிருபா,, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்,, அவன் மனதில் இருந்த கவலைகள் மறந்து மனம் லேசானது போல உணர்ந்தான்

சந்தோஷத்துடன் ரஞ்சனாவை பார்த்தான் கிருபா,, அவள் முகம் சந்தோஷத்தில் பூரித்து சிவந்து போயிருந்தது,, பார்த்த கொஞ்சநேரத்தில் அவள் அழகு பலமடங்காகி விட்டதை வியப்புடன் பார்த்தான் கிருபா

சிறிதுநேரம் இருந்துவிட்டு ரஞ்சனாவிடம் கண்களாலேயே கிளம்பட்டுமா என்று கேட்க,, அவளும் சரியென்று கண்களாலேயே அவனுக்கு விடைகொடுத்தாள்,,
அறையில் இருந்து மனமேயில்லாமல் வெளியே வந்த கிருபா, குழந்தையின் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் அப்பா என்ற இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு மில்லுக்கு கிளம்பினான்

அன்று முழுவதும் மனது சந்தோஷமாக இருந்தது,, அந்த குழந்தையின் முகம் கிருபாவின் மனதைவிட்டு நீங்கவில்லை,, மாலை வீட்டுக்கு போனதும் முதல் வேளையாக வசந்தியிடம் சென்று ரஞ்சனாவிற்கு பெண் குழந்தை பிறந்தது பற்றி சந்தோஷமாக கூறிய கணவனை வியப்புடன் பார்த்தாள் வசந்தி

சில நாட்களாக சிரிப்பு சந்தோஷம் இவற்றை மறந்திருந்த கிருபாவின் முகத்தில் மீண்டும் சந்தோஷத்தை பார்த்ததும்,, வசந்திக்கு மகிழ்ச்சியாக இருந்தது,, குழந்தையை பற்றியே அன்று முழுவதும் பேசிக்கொண்டு இருந்த கணவனை ஆச்சரியமாக பார்த்தாள்,, அவளுக்கு கணவனின் மனநிலை புரிந்தது,, அந்த குழந்தையின் வரவு கிருபாவை மகிழ்வித்திருக்கிறது என்று புரிந்துகொண்டு அவளும் குழந்தையை பற்றி விசாரித்து அவன் சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டாள்

ரஞ்சனா மருத்துவமனையில் இருந்த ஐந்துநாட்களும் அடிக்கடி போன் செய்து ரஞ்சனாவின் நலனையும் குழந்தையின் நலனையும் விசாரித்தான்,, மருத்துவமனையில் இருந்து வரும் நாளில் அவனே வந்து காரில் ரஞ்சனாவையும் குழந்தையும் வீட்டுக்கு அழைத்து வந்தான்

ரஞ்சனா, குழந்தை, வெளியே நிற்க வைத்து அன்னம்மா ஆரத்தி சுற்றும் போது அவனையும் அருகில் நிற்குமாறு அன்னம்மாள் சொல்ல சங்கடமில்லாமல் ரஞ்சனாவின் அருகில் நின்றுகொண்டான்,, மூவருக்கும் சேர்த்து ஆரத்தி சுற்றினார் அன்னம்மாள்

படுக்கையில் குழந்தையை கிடத்தியதும் அருகே போய் அமர்ந்துகொண்டு,, தூக்கத்தில் சிரித்த குழந்தையின் அழகை ரசித்தபடி,, பக்கத்தில் நின்றுகொண்டு இவன் குழந்தையை ரசிக்கும் அழகை பார்த்துக்கொண்டிருந்தவளிடம் “ ரஞ்சனா குழந்தைக்கு அனிதான்னு பேர் வைக்கலாமா?” என்றான்

ஆச்சர்யத்தில் விழிவிரித்து “ ஓ பெயர் நல்லாத்தான் இருக்கு,, வைங்களேன்,, ஆனா குறிப்பா இந்த பேர் மட்டும் ஏன் ?,, ஏதாவது விசேஷ காரணம் உண்டா?” என்றவளைப் பார்த்து..

சிரிப்புடன் உதட்டை பிதுக்கி “ ம்ஹூம் விசேஷ காரணமென்று எதுவும் இல்லை,, எனக்கும் வசந்திக்கும் அடுத்து பெண் குழந்தை பிறந்தா இந்த பெயரை வைக்கனும்னு நெனைச்சோம்,, ஆனா சத்யனுக்கு அப்புறம் குழந்தை எதுவும் இல்லாம போச்சு,, நைட் நானும் வசந்தியும் பாப்பாவை பத்தி பேசும்போது அனிதாங்கற பேரையே வசந்தி வைக்கச் சொன்னா,, அதான் கேட்டேன்” என்று கிருபா சொன்னதும்

“ சரி அந்த பேரே வைக்கலாம்” என்றாள் ரஞ்சனா

சிறிதுநேரம் குழந்தையை கொஞ்சிவிட்டு அரைமனதோடு வீட்டுக்கு கிளம்பினான் கிருபா,, தாய்மையின் பூரிப்புடன் ஒருக்களித்து படுத்திருந்த ரஞ்சனாவிடம் வந்து, “ நல்லா சாப்பிடு,, எதையும் போட்டு மனசை குழப்பிக்காதே” என்று கூறிவிட்டு அவள் கண்களை பார்த்தபடி எதற்காவோ அவளை நோக்கி குனிந்தவன் எதையோ நினைத்துக்கொண்டு தலையை உலுக்கியபடி அவசரமாக அந்த அறையைவிட்டு வெளியேறினான்

அதன்பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனிதாவை காண ஓடிவந்தான்,, குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் ரஞ்சனாவுடன் சேர்ந்து கண்டுகளித்தான்,



வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் வசந்தியிடம் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டவனை பார்த்து குழப்பமில்லாத மனதோடு வசந்தி கேட்டாள் “ ரஞ்சனாவையும் குழந்தையையும் நம்ம வீட்டுக்கு கூட்டி வந்திறீங்களா?” என்று..
சட்டையை கழட்டிவிட்டு டீசர்ட்க்குள் தலையை நுழைத்தவன்,, திகைத்துப்போய் மனைவியை ஏறிட்டான் “ என்ன வசந்தி சொல்ற,, ஏன் ரஞ்சனாவை இங்கே கூட்டி வரனும்,, புரிஞ்சுதான் பேசுறியா வசந்தி” என்றவனை பலகீனமாக கையசைத்து அருகில் அழைத்தாள் வசந்தி

அவள் அழைத்ததும் அருகே வந்து சரிந்த அமர்ந்த கிருபாவின் கையை பற்றிய வசந்தி “ புரிஞ்சுதாங்க சொல்றேன்,, ரஞ்சனாவையும் குழந்தையையும் இங்க கூட்டி வந்துடுங்க,, எனக்கு தங்கைச்சியா,, உங்களுக்கு மனைவியா,, கூட்டிட்டு வாங்க” என்று தீர்மானமாக கூறினாள்

அவள் கூறியதை கேட்டதும் அதிர்ந்து போனான் கிருபா,, தனது முகம் தன் மனதை வசந்திக்கு காட்டிக்கொடுத்து விட்டதோ என்று கலங்கிப்போனான் அவசரமாக தலையசைத்து “ அதெல்லாம் வேண்டாம் வசந்தி,, அவங்க அங்கேயே இருக்கட்டும்” என்றான் பதட்டத்துடன்

நலிந்த விரல்களால் அவன் வாயை பொத்திய வசந்தி “ எதுவும் சொல்லாதீங்க,, எனக்கு உங்க மனசு ஓரளவுக்கு புரியும்ங்க,, நான் இதை வருத்ததோடு சொல்லலை முழு மனசோடு தான் சொல்றேன்,, நானோ ஒவ்வொரு நாளையும் எண்ணிக்கிட்டு இருக்கேன்,, எனக்கு பிறகு உங்களை கவனிச்சுக்க ஒருத்தி வேனும்ங்க,, அது ரஞ்சனாவா இருந்தா எனக்கு சந்தோஷம் தான்,, சத்யன் வளர்ந்துட்டான் அவனை பற்றிய கவலை எனக்கு இல்லை எங்கம்மா அவனை பார்த்துக்குவாங்க,, ஆனா நீங்க?, இந்த எட்டு மாசமா நைட்ல நீங்க எவ்வளவுதான் கட்டுபாட்டோடு இருந்தாலும் உங்களோட ஏக்கங்களை பக்கத்தில் இருந்து பார்க்கிற எனக்கு எப்படியிருக்கும்,, சும்மா என்னை தொட்டுக்கிட்டு படுத்துக்கிறதே சுகம்னு நீங்க நெனைக்கலாம்,, ஆனா உங்களை அப்படியே விட நான் ஒன்னும் சுயநல பிடிச்சவள் இல்லைங்க,, உடலின் தாபங்களை அடக்கிக்கொள்ளும் வயசில்லை உங்களுக்கு,, அப்படி அடக்கி வைச்சுக்கவும் நான் உங்களை பழக்கவில்லை,, எனக்கே இந்த அறையும் இந்த மருந்து வாசனையும் சுத்தமா பிடிக்கலை,, ஆனா நீங்க இத்தனை நாளா இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு என்கூடவே இருக்கிறது உங்களுக்கு வேனா பெருந்தன்மையா இருக்கலாம்,, என்னால இதையெல்லாம் சகிச்சுக்க முடியலைங்க,, எனக்காகவே நீங்க இருக்கனும்னு ஒருபோதும் நான் நினைக்கமாட்டேன்,, அத்தோட இப்பல்லாம் உங்க மனசுல ரஞ்சனாவும் அனிதாவும் இடம் புடிச்சுட்டாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது,, நீங்க யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படாமல் ரஞ்சனாவையும் குழந்தையும் இங்கே கூட்டிவாங்க” என்று வசந்தி மூச்சுத் திணறத் திணற வேகமாக ஆனால் தெளிவாக பேசி முடிக்க..

கிருபா விக்கித்துப்போய் அமர்ந்திருந்தான்,, வசந்திக்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை,, அவளின் அன்பை நினைத்து கண்களில் கண்ணீர் குளம்கட்டியது,, ரஞ்சனா பற்றிய நினைவுகளால் வசந்திக்கு துரோகம் செய்துவிட்டது போல் உணர்ந்தான்,, மென்மையாக வசந்தியை இழுத்து தன்மீது போட்டுக்கொண்டவன் “ வேனாம் வசந்தி இப்போ எதை பத்தியும் பேசாதே,, பேசி உன்னோட பிரிவை உறுதிபடுத்தாதே,, நீ இருக்கும் வரை நான் உன்னை விட்டு விலகமாட்டேன்,, இதே அறையில் உன்னுடன்தான் இருப்பேன்,, வசந்தி நான் தவறு எதுவும் செய்யவில்லை” என்று கூறிவிட்டு அவளை அணைத்தபடியே படுத்துக்கொண்டான்

வசந்தியிடம் அப்படி சொன்னாலும் அதன்பிறகு அவனால் ரஞ்சனாவையும் குழந்தையையும் பார்க்காமல் இருக்கமுடியவில்லை,, அவன் பார்த்துவிட்டு வரும் சமயங்களில், வசந்தி அவர்களை பற்றியே பேசி அவன் மனதில் அவர்களை பதியவைக்க முயன்றாள்,, சமயம் கிடைக்கும் போதெல்லாம் ரஞ்சனாவை பற்றி கேட்பாள்,, வசந்தியின் பார்வையை தவிர்த்தபடி அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வான்

அவனை எது தடுக்கிறது என்று வசந்தி யோசித்ததில் கண்டுபிடித்தது,, இத்தனை வருடம் அவர்கள் நடத்திய நிறைவான தாம்பத்தியம் தான் கிருபாவை இன்னும் ரஞ்சனா அருகில் நெருங்க விடாமல் தடுத்தது,, இது தானாக சரியாக வேண்டும் என்று நினைத்தாள் வசந்தி,, தன் புருஷனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுப்பது மனதுக்கு கடைமையான வலியை கொடுத்தாலும்,, கிருபாவின் கலப்படமற்ற அன்புக்கு ஈடாக இதை செய்தே ஆகவேண்டும் என்று நினைத்தாள்



No comments:

Post a Comment