Wednesday, August 12, 2015

கண்ணனை நினைக்காத நாள் இல்லையே - அத்தியாயம் - 17

"என்ன ஸ்வேதா இந்த மாதிரி பண்ணிட்டு வந்து இருக்க. உன்னை என்னோட பொண்ணுன்னு சொல்ல வெட்கமா இருக்குது" என்று நிவேதிதா பேச்சை ஆரம்பிக்க

"அம்மா இதுதான் KK செஞ்ச நம்பிக்கை துரோகத்துக்கு நான் கொடுக்குற பதில் அடி. வேதனை எனக்கு தானே, உங்களுக்கு அதோட வலி எப்படி தெரியும்".

"புரியாம பேசாதே ஸ்வேதா, நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் சமாதானம் ஆகி குடும்பம் நடத்தினா, இப்போ நடந்தது வாழநாள் முழுக்க உங்க ரெண்டு பேர் மனசுல மறக்க முடியாத வலியாக இருக்கும்."

"அவனை நான் திரும்ப கல்யாணம் பண்ணிக்கிறதா. சான்ஸ்சே இல்லை. ஒரு பொண்ணு மண மேடைல தன்னை நிராகரிச்சா அப்படிங்கறது அவன் வாழ்நாள் முழுக்க குத்திகிட்டே இருக்கும். அதுதான் எனக்கு வேணும்".

"அப்போ உன்னோட வயிற்றில் வர போகும் குழந்தை நிலை?"

"அம்மா அதுக்காக நீங்க ஏன் கவலைபடுறிங்க

. அதுதான் இன்னும் தெரியலையே. அப்படி ஒரு நிலை வந்தா, நான் எக்காரணத்தை முன்னிட்டும் கருவை கலைக்க மாட்டேன். KK என் மேல வச்சுரிந்த காதல் பொய்யா இருக்கலாம். ஆனால் என்னோட காதல் உண்மையானது. எவ்வளவோ குழந்தைகளை single parent டாஅம்மா மட்டுமே வளர்த்து வாழ்க்கைல ஜெயிக்க வைக்கலையா? அது மாதிரி தான் இதுவும்".

"அதுக்கு ரொம்ப கஷ்டப்படனும் ஸ்வேதா. நீ ஏன் கிருஷ்ணாவை மன்னிக்க கூடாது."

சோக சிரிப்பு சிரித்தாள்"அம்மா இப்போ என்னோட மன நிலைல KK கூட வாழ துளிவிருப்பமும் இல்லை. ஒருவேளை எதிர்காலத்ல அந்த மாதிரி எனக்கு ஆசை வந்து, ஒரு வேளை KK-க்கு கல்யாணம் ஆகாம இருந்தா, பார்த்துக்கலாம்."

அயர்ந்து போனாள் நிவேதிதா. சுமன் பேச தொடங்கினார். 

"ஸ்வேதா பெற்றோர்கள் அப்படிங்கிற முறைல நீ செய்ற சரி, தவறுகளை சுட்டி காட்ட வேண்டியது எங்களோட கடமை. பிறகு முடிவு உன் கைல".

வெளியே வந்த சுமன், கிருஷ்ணாவை கூப்பிட்டு நடந்ததை சொல்லி, "மாப்பிள்ளை. ஸ்வேதா ரொம்ப பிடிவாதமா இருக்கா.நீங்க வேற பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணிக்குங்க" என்று சொல்ல

"மாமா, எத்தனை வருஷம் ஆனாலும் நான் ஸ்வேதாவுக்காக காத்து இருப்பேன்."

"ஒரு வேளை அவ மனசு மாறலைனா."

"கவலை இல்லை மாமா, இந்த ஜென்மத்தில அவள்தான் என்னோட மனைவி. நாங்க குடும்பம் நடத்திட்டோம். என்னோட நினைவில அவ என்கிட்ட கோவிச்சுட்டு உங்க வீட்டுக்கு வந்த மாதிரிதான் நான் இப்பவும் நினைச்சுகிட்டு இருக்கேன். ஒரு வேளை அவ வராமலே போய்ட்டா ...."

இடைவெளி விட்டான் "நான் அவ புருஷனாவே சாவேன்" போனில் கதறி அழுதான்.

சுமன் ஒரு கணம்ஸ்தம்பித்து போனார். "அழாதிங்க மாப்பிள்ளை. கல்யாணம் நடந்தாலும், நடக்கட்டினாலும் நீங்கதான் எங்க மாப்பிள்ளை. இப்போ போய் அவள்கிட்ட புத்திமதி சொன்னா அவ எங்க கூட சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே போய்டுவா.அதுனால அவளை நாங்க ஒண்ணும் சொல்றதா இல்லை. இன்னும் ரெண்டு நாள்ல அவளை மங்களூர் கூட்டி போகலாம்னு இருக்கோம். அப்புறம் நான் உங்களை கூப்பிடுறேன் மாப்பிள்ளை" என்று சொல்லி போனை வைக்க, கிருஷ் தன் கண்களை துடைத்து கொண்டு போனை வைத்தான்.

கிருஷ்வீட்டில் அம்மா அப்பா இருவரையும் மதுரைக்கு திரும்பி போக சொல்ல, அவர்கள் தயங்கினர்.

"என்ன அப்பா இப்போ எதுக்கு யோசிக்கிறிங்க. நான் ஒண்ணும் தற்கொலை செய்துக்க மாட்டேன். அது கோழைகளோட செயல். நீங்க கவலைபடாம போயிட்டு வாங்க."

இருவரும் மதுரை சேர, வாசுதேவனுக்கு போன் வந்தது. அழைத்தது ஸ்வேதா.

"மாமா எப்படி இருக்கீங்க. "என் மேல கோபம் தானே. என் கூட பேசுவீங்களா."

"உன் மேல நான் எப்படி கோபப்பட முடியும். நீ தானே என் பையன் கூட சேத்து வச்ச. ஏம்மா நீ என் பையனை மன்னிக்க மாட்டாயா"எதிர் முனையில் பதில் இல்லை. 

"எனக்கு தெரியலை மாமா, என் மனசு ஒரு வேளை மாறினா, நீங்க சொல்றது நடக்கும். இப்போ எனக்கு இருக்கிற நிலைமைல என்ன சொல்றதுன்னு தெரியலை. இப்போதைக்கு நான் உங்களையும் அத்தையும் அடிக்கடி கூப்பிடுவேன்" என்று சொல்லி விட்டு போன் வைத்தாள்.


சுய நினைவுக்கு வந்தான் கிருஷ்.

கேபின் கதவைதட்டி கொண்டு உள்ளே வந்த ஹரி, "என்ன கிருஷ் நீ சரியாவே சாப்பிடுறது இல்லைன்னு கேள்வி பட்டேன்.. உன் தங்கை உனக்கும் சேர்த்து லஞ்ச் கொடுத்து இருக்கா. நீ என் கூட சேர்ந்து கட்டாயம் சாப்பிடனும்" என்று கையை வழு கட்டாயமாக இழுத்து கொண்டு சென்றான். 

ஹரி கொடுத்த சாப்பாட்டை ஏதோ பெயருக்கு சாப்பிட்டு வைக்க, ஹரி பேச ஆரம்பித்தான்.

"ஸ்வேதா இன்னும் வேலைக்கு வரலை. மங்களூர் போய்ட்டான்னு நினைக்கிறேன். இப்போதைக்கு அவள் கல்யாணத்துக்கு போட்ட லீவ் ஓடிகிட்டு இருக்கு. இன்னும் மூணு நாள்ல முடிஞ்சுடும். அவள் மேலும் ரெண்டு நாள் வரலைனா, terminate பண்ணிட்டு புது ஆளை உன் செக்ரேடரியா போட்டுக்கோ" என்று சொல்ல, 

"Terminate செய்ய வேணாம். எதுவா இருந்தாலும் அவள் கிட்ட பேசிட்டு paper போட சொல்லு. சீக்கிரம் relieve பண்ணிடலாம்".
"ஒரு வேளை அவ வேலைல continue பண்ண விரும்பினா."

"அதுக்கான வாய்ப்பு இல்லை. ஒரு வேளை வந்தா, Admin department ல வேலைகாலியா இருக்கு அதை கொடுத்துடு".கை கழுவி விட்டு தன் இடத்துக்கு வந்தான் கிருஷ்.

கடந்த ஒரு வாரமாக சரியான தூக்கம் இல்லாததால் கண்கள் சொருக சேரில் சாய்ந்து விட்டான்.சேர்மன் எல்லோரையும் பார்க்க rounds வர, அனைவரும் எழுந்து நிற்க, உட்கார சொல்லி விட்டு ஹரி இருப்பிடம் வந்து பேசி கொண்டு இருந்தார். 


ஹரியும் கூட வர, கிருஷ்ணா கேபினுக்குள் இருவரும் நுழைய, சேரில் உறங்கி கொண்டு இருந்த கிருஷ்ணாவை கண்ட ஹரி முன்னே செல்ல, அவை கையை பிடித்து தடுத்தார்.

"ஹரி, எனக்கு தெரியும். தினமும் காலை ஆறு மணிக்கு வர்ற கிருஷ்ணா தினமும் பதினோரு மணிக்கு தான் வீட்டு போறான்னு எனக்கு தெரியும்."

ஹரி வியப்போடு பார்க்க, "என்கிட்ட செக்யூரிட்டி ஆபீசர் சுரேஷ் இதைபத்தி சொல்லி இருக்கார். அதனால அவன் தூங்கட்டும்.தொந்தரவு செய்யாதே" என்று சொல்லிவிட்டு கிளம்பினார். 

கதவு சாத்தப்படும் ஓசை கேட்டு கிருஷ் கண் விழிக்க, யாரோ வந்து சென்ற தடம் தெரிய, ஹரியின் கேபினை பார்க்க ஹரியை காணவில்லை.

வாசலை பார்க்கஹரிகதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். "கிருஷ் இப்போதான் சேர்மன் வந்தார்"
"என்னது சேர்மன் வந்தாரா, அய்யயோ தூங்கிட்டேன்" என்று மருக

"கவலைபடாதே, எனக்கு கூட தெரியாத ஒரு உண்மை அவருக்கு தெரிஞ்சு இருக்கு.ஏண்டா நீ வீட்டுக்கு போறதே இல்லையா" என்று குரலில் கடுமையுடன் கேட்க, என்ன பதில் சொல்வது என்று அறியாமல் கிருஷ் திணறினான்.

"ஏண்டா பதில் சொல்ல மாட்டேன்கிற"

"இல்லேடா. ரொம்ப நேரம் வீட்ல இருக்க பிடிக்கலை. வீட்ல எதை பார்த்தாலும் ஸ்வேதா ஞாபகம்தான்.அதுனாலதான் ஆபீஸ்ல அதிக நேரத்தை செலவிடுறேன். இனிமே முழிக்க முடியாதுன்னு நிலை வரப்போதான் நான் வீட்டுக்கு போறேன்."

"ஓஹோ, அப்படின்னா, நீ காலைல ஆறு மணிக்கு வந்து இரவு பதினோரு மணி வரை ஆபீஸ்ல இருக்குறதா சேர்மன் சொன்னது உண்மைதான். அதனால தான் உன்னை எழுப்ப வேண்டாம்னு போய்ட்டார். சேர்மனுக்கு இந்த ஆபீஸ்ல காது மட்டும் இல்லை, கண்ணும் இருக்குன்னு நினைக்கிறேன்".

மங்களூர் வீட்டில், ஸ்வேதாதனது அப்பா அம்மாவிடம் பேசி கொண்டு இருந்தாள். "அப்பா, அம்மா நான் திரும்ப வேலைக்கு போறேன்.அப்பதான் எனக்கு கொஞ்சம் மனமாற்றமா இருக்கும்."

"சரிம்மா, அது எப்படி திரும்ப கிருஷ்ணா இருக்கிற ஆபீஸுக்கு வேலைக்கு போவ" என்று நிவேதிதா கேட்க,

"அம்மா இப்போதைக்கு நான் அங்கே வேலைக்கு போய் சேர்ந்து வேற இடத்தில புது வேலை கிடைக்கிற வரைக்கும் தொடர்ந்து வேலைசெய்கிறேன். அங்கே ஹரிகிட்ட கேட்டா எனக்கு வேற டிபார்ட்மென்ட்ல வேலைபோட்டு கொடுப்பார்."

"எப்படியும் ரெண்டு மாசத்ல புது வேலை கிடைக்கும்ன்னு நினைக்கிறேன். பார்க்கலாம். நான் நாளைக்கே பெங்களூர் கிளம்புறேன்."



கிருஷ் காலை ஆபீஸ் வந்தது முதல் இரண்டு தடவை vomit செய்து விட்டான். முந்தைய நாள் சாப்பிட்ட உணவு ஒத்து கொள்ளவில்லை.தூக்கம் சரி இல்லாததாலும், சரியான உணவு இல்லாததாலும் உடல் நலம் குலைய தொடங்கியது. 

கைகள் நடுங்க மோர் குடித்து விட்டு தன் வேலைகளை கவனித்து கொண்டு இருந்த அவனுக்கு கேபினுக்குள் வந்த சார்லி சென்ட் மனம் மூக்கில் ஏற, 'இது ஸ்வேதா use பண்ற சென்ட் ஆச்சே' என்று யோசித்தபடி தலை நிமிர்ந்து பார்க்க, கதவை திறந்து ஸ்வேதா உள்ளே வந்தாள். அவளை தொடர்ந்து ஹரியும் உள்ளே வந்தான்.

உள்ளே வந்த ஸ்வேதா கிருஷ்ணாவை பார்த்து அதிர்ந்து போனாள். பத்து நாட்களில் நோயாளி போல் ஆகி விட்ட அவன், முகத்தை பார்த்து கலங்கி போனாள்.

"ஹாய், Please come and sit" என்று இருவரையும் அழைத்து உட்கார சொன்னான்.

"கிருஷ், ஸ்வேதா திரும்ப join பண்ணி இருக்காங்க. அவங்களை admin department -க்கு மாத்த சொல்லி request ட்ரான்ஸ்பர் கேட்டு இருக்காங்க, அதை நான் டைப் பண்ணி கொண்டு வந்து இருக்கேன்" என்று சொல்ல அதை வாங்கி படிக்காமல் கையெழுத்து போட்டு திருப்பி கொடுத்து, "Best of luck" சொல்லி விட்டு திரும்பி தன் வேலையில் ஆழ்ந்தான்.

தன்னிடம் ஏதாவது பேசுவான் என்று காத்திருந்த ஸ்வேதா முகத்தில், அவன் பேசாததால் வருத்தம் தெரிந்தது.

ஹரியுடன் கிளம்பி, வெளியே செல்ல, அவள் சென்றவுடன் எழுந்துஅவள் உட்கார்ந்த சேரை தடவி பார்த்து கண் கலங்கினான். 

ஹரி ஸ்வேதாவிடம் "எனக்கு ஒரு விஷயத்தை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. நீயும் admin டிபார்ட்மென்ட்தான் transfer கேட்டுருக்க,அவனும் உன்னை admin அட்மின் டிபார்ட்மென்ட்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணனும்னு சொல்லி இருந்தான். நீ வேலைக்கு வரமாட்டேன்னு நான் சொன்னேன், அவன்தான் நீ கட்டாயம் வேலைக்கு வருவேன்னு சொன்னான். அவன் சொல்றது மாதிரியே தான் நீ நடந்துக்கிற, what a jodi " என்று சொல்லி விட்டு தன் கேபின் சென்று விட்டான்.

ஸ்வேதா அப்படியே சிலையாக நின்று விட்டாள். 

தன்னை சுதாரித்து கொண்டு காவேரி அருகில் உட்கார, அந்த இடத்தை தாண்டி போன அனைவரும் அவளை பரிதாபமாக பார்த்து விட்டு போனார்கள். 

அவள் அருகில் வந்து காவேரி பேச தொடங்கினாள்."நீ ரொம்ப தைர்யமான பொண்ணுதான் ஸ்வேதா. கிருஷ்ணா மாதிரி நல்ல மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்ல யாருக்கு தான் மனசு வரும்" என்று சொல்லி விட்டு, முகத்தை திருப்பி கொண்டு தன் வேலையை செய்ய ஆரம்பித்தாள்.

ஸ்வேதா,'ஏன்டா இப்போ இங்கே வந்தோம்' என்று யோசிக்க ஆரம்பித்தாள். எல்லோரும் அவளை தப்பாக நினைப்பதாக தோன்றியது. 

தனது கேபினில் இருந்து கவனித்து கொண்டு இருந்த கிருஷ்,ஹரிக்கு போன் அடிக்க, "என்ன கிருஷ்" என்று ஹரி கேட்டான்."ஸ்வேதாவை பார்த்தா uneasy யா இருக்கிற மாதிரி இருக்கு. நீ கொஞ்சம் என்னனு check பண்ணு" போனை வைத்தான்.

ஹரிக்கு உதட்டில் புன்முறுவல் தவழ எழுந்து ஸ்வேதா இருக்கும் இடம் வந்தான். 

ஸ்வேதா அவனை எதிர்பார்க்கவில்லை.

"என்ன ஸ்வேதா ஏதாவது problem-மா?"

"இல்லையே" என்று தடுமாறிசுதாரித்து கொண்டு, "யார் உங்களுக்கு சொன்னா", 

"கிருஷ்ணா தான் கூப்பிட்டு சொன்னான்" என்று சொல்ல, வியப்போடு பார்த்தாள்.

"ஆமா ஹரி, எனக்கு இங்கே உட்கார்ந்து இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஏதோ முள்மேல உட்கார்ந்து இருக்கிற மாதிரி இருக்கு.இங்கே இருக்குறதுக்கு, நான் உள்ளே KK கேபின்ல இருந்தா கூட பிரச்சனை இல்லைன்னு நினைக்கிறேன்."


அங்கே இருந்து இன்டர்காமில் கிருஷ்ணாவை அழைத்தான்


"ஸ்வேதா உன்னோட கேபின்ல வேலை செய்ய ஒதுக்குறா. அனுப்பி வைக்கட்டுமா?"

"சரி அனுப்பி வை, என்னோட கணிப்புபடி அவள் வேற வேலை தேட ஆரம்பிச்சுட்டா, அது வரைக்கும் இங்கே இருப்பா" என்று சொல்ல "அப்படியா" என்று ஆச்சர்யபட்டு கொண்டே, "ஸ்வேதா நீ உன்னோட வழக்கமான வேலை பார்க்கிற இடத்துக்கு போய்உட்கார்ந்துக்கோ" என்று சொல்ல, ஸ்வேதா கிருஷ்ணா கேபினுக்கு சென்றாள்.

உள்ளே வந்த ஸ்வேதாவுக்கு உட்கார இடத்தை காண்பித்து விட்டு தன் வேலையில் மூழ்கினான்.

ஸ்வேதாவுக்கு வேலை எதுவும் இல்லாததால் என்ன செய்வது என்று விழிக்க, புரிந்து கொண்ட கிருஷ் அவளுக்கு ஒரு பைலை எடுத்து கொடுத்து டைப் அடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி கொடுத்தான். 

ஸ்வேதாவுக்கு நம்ப முடியவில்லை. கிருஷ்ணா நடந்து கொள்ளும் விதம் சுத்தமாக மாறி விட்டது. அவளுக்கு வேலை கொடுத்து விட்டு தன் வேளையில் சுத்தமாக மூழ்கி போனான். அவள் இருப்பதை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. 

மதியம் சாப்பாடு அவள் கொண்டு வந்து இருக்க"நீங்க கொஞ்சம் சாப்பிடுரிங்களா" என்று கேட்க, "தேங்க்ஸ் எனக்கு பசிக்ககலை"என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான். அவள் சாப்பிட்டு முடித்த பின் உள்ளே வந்து தன் வேலையை தொடர்ந்தான்.

அடுத்த இரண்டு வாரமும் வேகமாக பறந்து சென்றது. அதற்குள் பிரான்ஸ்ஸில் இருந்து ஷெரில் வருவதாக தகவல் வர, அவளின் டூர் பற்றிய email லை அனுப்பி ஸ்வேதாவை coordinate பண்ண சொன்னான். 

ஆபீஸில் தினமும் பதினாறு மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்கும் கிருஷ்ணாவை பார்த்து உருகினாள்
"KK நீங்க இப்படி வேலை பார்த்தா உடம்பு என்ன ஆகும். கொஞ்சம் பார்த்து கொள்ள கூடாதா" என்று கேட்ட அவளை பார்த்து பதில் ஏதும் சொல்லாமல் சிரித்து மழுப்பி விட்டு சென்றான்.

இன்னும் இரண்டு நாட்களில் ஷெரில் வருவதாக மெயில் வர அதை ஸ்வேதாவிடம் அதை forward செய்து ஷெரில் தங்க இடம் மற்றும்transport arrange செய்ய சொன்னான்.
அடுத்த நாள் வேலை அதிகம் இருந்ததால் ஆபீஸில் எல்லோரும் சென்று விட, கிருஷ் ஸ்வேதா ஆபீஸில் வேலை பார்த்து கொண்டு இருந்தனர். 

நேரம் எட்டு மணி ஆகி விட்டதால் ஸ்வேதாவை கால் டாக்ஸி மூலம் வீட்டில் ட்ராப் செய்யலாம் என்று புக் செய்ய போக அவனை காரில் ட்ராப் செய்ய சொன்னாள்.

ஒன்றும் பதில் சொல்லாமல் கிருஷ் வேலையை தொடர்ந்து பார்க்க "என்ன கே கே என்னை ட்ராப் பண்ண மாட்டிங்களா?" என்று கேட்க,"சரி நான் டிரைவரை வர சொல்றேன்" என்று சொல்ல, அவளுக்கு கோபம் வந்தது.

"என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க. உங்களை பார்த்தா எனக்கு வயிறு பத்திகிட்டு எரியுது.உங்களை கஷ்டபடுத்தி எல்லோரையும் அழ வைக்கிரதுல நீங்க ஒரு sadistநீங்க இப்போ யார் கூடயும் சரியாவே பேசுறது இல்லை. பத்து கேள்வி கேட்டா, ஒரு கேள்விக்கு பதில் சொல்றிங்க. அது மட்டும் இல்லை நான் இங்கே திரும்ப வந்து பதினாறு நாள் ஆகுது, ஒரு தடவை கூட என் பேர் சொல்லி கூப்பிடலை.முன்னால தினமும் என்னை நூறு தடவையாவது ஸ்வேதா அப்படின்னு கூப்பிடுவிங்க, இப்போ என் பெயர் சொல்ல கசப்பா இருக்கு அப்படிதானே."

அவளை பரிதாபமாக பார்த்தான். "yes, எனக்கு மறக்க முடியாத நாள் கல்யாண நாள், மறக்க முடியாத இடம் மணமகள் அறை. நீ அப்போ சொன்ன அந்த வார்த்தைகள் என் காதில ஒலித்து கொண்டே இருக்கு. 'என் பெயரை சொல்ல கூடாது. உங்களுக்கு அந்த உரிமை போச்சு.'

"எனக்கு உரிமை இல்லாத ஒரு விஷயத்ல நான் எப்பவுமே தலை இடுறது இல்லை.அந்த அளவுக்கு எனக்கு வெட்கம் மானம் இல்லாம போகலை. அந்த நாளை நினைச்ச எனக்கு இன்னமும் இங்கே வலிக்குது தெரியுமா? ஆமா உனக்கு எங்க தெரிய போகுது. அதுக்கு மனசு இருக்கணும்."

"எதுக்கு எடுத்தாலும் நான் செஞ்சது தப்புன்னு சொல்றியே, உன்னோட சம்மதம் இல்லாம நான் உன்னை தொட்டேனா இல்லையே.அப்புறம் எனக்கு ஏன் இந்த கடுமையான தண்டனை. நான் ஒழுங்கா சாப்பிட்டு பல நாட்கள் ஆய்டுச்சு தெரியுமா, எனக்கு தூக்கம் வரலை.அழுது அழுது என் கண்ணீர் வத்தி போச்சு."

"இருந்தாலும் நான் இன்னும் காத்து கொண்டு இருப்பது, உன் மனசு மாறும் என்ற நம்பிக்கையிலதான்.நான் சாகுற வரைக்கும் இந்த நம்பிக்கையோட இருப்பேன்.ஒரு வேளை நாம சேராமலே போய்ட்டா, நான் செத்த பின்னால எனக்காக வருத்தப்பட்டு நீ ஒரு கண்ணீர துளி சிந்தினா போதும் என் ஆத்மா சாந்தி அடையும்"

ஸ்வேதாவுக்கு நம்பமுடியவில்லை. பேசுவது கிருஷ்ணாதானா என்றுஅதிர்ச்சியோடு பார்க்க, கண் இருட்ட தொடங்கியது. மெதுவாக மயங்கி விழ, பதறி போய் கிருஷ்ணா அவளை தூக்குவதும், "கண்ணம்மா எழுந்துறி" என்று கத்துவதும் அவளுக்கு எங்கேயோ கேட்பது போல் இருந்தது. 

"செக்யூரிட்டி" என்று கிருஷ் சத்தம் போட, இரண்டு செக்யூரிட்டி ஓடி வந்து கதவை திறக்க, மயங்கிய ஸ்வேதாவை தன் இரு கைகளில் தூக்கி கொண்டு கீழே பார்கிங்கில் இருந்த தனது Audi காரின் பின் இருக்கையில் கிடத்தி விட்டு காரை விரைந்து செலுத்தி Vittal Mallaya hospital சென்று அட்மிட் செய்தான். 

ஹரி, கலா இருவரையும் வர சொல்லி விட்டு, emergency ward வாசலில்காத்து இருக்க, டாக்டர் முதல் உதவிக்கு பிறகு ஸ்வேதாகண் விழித்தாள். 

தொடர்ந்து லேடி டாக்டர் வந்து பரிசோதனை செய்து விட்டு, " Congrats, நீங்க அம்மா ஆக போறீங்க"என்று சொல்ல ஸ்வேதா சந்தோசத்தில் நெகிழ்ந்து கிருஷ்ணாவை தேட, அங்கே கிருஷ்ணா வாசலை நோக்கி நடந்து வெளியே சென்று கொண்டு இருந்தான். 

கலா வழியில் பார்த்து கேட்க, உள்ளே கை காண்பித்து விட்டு பின்னால் வந்த ஹரியை கட்டி அழ ஆரம்பித்தான்.




No comments:

Post a Comment