Saturday, August 1, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 16

சத்யன் வீட்டுக்குள் நுழைந்தபோது மான்சி தனது நீண்ட கூந்தலை பின்னாலாக மாற்றிக்கொண்டு இருந்தாள்,, சத்யனுக்கு இருந்த ஆர்வத்தில் வேகமாக அவளை நெருங்கி பின்புறமாக இடுப்பை வளைத்து அவளை இறுக்கி அணைத்து தரையை விட்டு அரையடி உயரே தூக்கினான்..

அவன் பிடியில் இருந்த மான்சி “மாமா அத்தை அக்கா எல்லாம் கிச்சன்ல தான் இருக்காங்க விடுங்க,, வந்துட போறாங்க மாமா” என்று மெல்லிய குரலில் மான்சி கெஞ்ச,,.... சத்யன் அவளை அணைத்து தூக்கியவாறு தனது அறைக்குள் நுழைந்து கதவை பின்னங்காலால் உதைத்து சாத்திவிட்டு மான்சியை கட்டிலில் கவிழ்த்து போட்டு அப்படி அவள்மீது அவனும் சரிந்தான்



அவளின் பிடரியில் தன் உதட்டை வைத்து தேய்த்து “ மான்சி ரொம்ப அழகா இருக்க மான்சி” என்று பிதற்றய சத்யன் கிடைத்த இடைவெளியில் தனது கையை அவளின் வயிற்றில் விட்டு அழுத்தமாக பிசைந்த வாறு அடுத்தடுத்து அவள் பின்கழுத்தில் முத்தமிட்டான்

விடுங்க மாமா,, விடுங்க மாமா,, என்று வாய் கூறினாலும் மான்சி தனது வயிற்றை எக்கி அவன் கைக்கு வழிவிட்டாள்,, சத்யன் ஒரு கையை கீழ் நோக்கி செலுத்தி அவளின் புடவையை விலக்கி உள்ளே மான்சியின் அடி வயிற்றை வருடினான்,, மறுகையை மேலே நோக்கி எடுத்துச்சென்று ரவிக்கைக்கு மேல் அவளின் பொற்க்குடங்களை லேசாக வருடினான்

சத்யன் இதுவரையில் தீண்டாத இடங்கள் இவை,,மூசசு முட்ட முட்ட முத்தமிட்டு விளையாடியிருக்கிறார்கள்,, கட்டியணைத்துக் கொண்டு கதைகள் பல பேசியிருக்கிறார்கள்,, ஆனால் இதுபோல நெருக்கமாக தீண்டியதில்லை, சத்யனுக்குள் நெருப்பு பரவி உடம்பு சூடேறியது

அவனுக்கு கீழே கிடந்த மான்சிக்கு உடல் குழைந்து அவன் செயலுக்கு இடம் கொடுத்தாலும், திடீரென்று அவள் உடம்பில் ஒரு விரைப்பு வந்தது,, வயிற்றையும் உடம்பையும் இறுக்கு குறுக்கினாள்,, பிடிவாதமாக அவனை முன்னேற விடாமல் தடுத்தாள்,

அவள் உடல் விரைத்த போதே சத்யன் அவளை உணர்ந்துகொண்டான்,, “ என்னடா என்னாச்சு ப்ரீயா இரு நான்தானே மான்சி” என்று அவள் காதில் கிசுகிசுப்பாக கேட்டான்

“ இல்ல வேனாம் என்னை விடுங்க,, எனக்கு வேண்டாம்” என்ற மான்சி தன் பலம் முழுவதையும் திரட்டி அவனை கீழே சரிக்க முயன்றாள்

அவளின் முயற்சியை புரிந்த சத்யன்,, மேலும் அவளை வற்புறுத்தாமல் பக்கவாட்டில் சரிந்து திரும்பி அவளை பார்த்தான்,, மான்சியின் கண்கள் லேசாக கலங்கியிருக்க கட்டிலைவிட்டு கீழே இறங்கி கலைந்து கிடந்த புடவையை சரி செய்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்

அவள் முகத்தை தீர்கமாக பார்த்த சத்யன் “ சரி நீ வெளிய போ மான்சி நான் அப்புறமா வெளியே வர்றேன்” என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்

மான்சி கதவை திறந்து வெளியேறும் சத்தம் கேட்க,, திரும்பி பார்த்த சத்யன் எழுந்த ஜன்னலருகே போய் நின்றுகொண்டு பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தி பற்ற வைத்து புகையை இழுத்து நுரையீரலை அனுப்பி பிறகு யோசனையுடன் ஜன்னலுக்கு வெளியே ஊதினான்
மான்சியின் பிரச்சனை எதுவென்று சத்யனுக்கு புரியவில்லை,, ஆனால் அதன் தீவிரம் புரிந்தது,, காரணம் தேவியாக இருக்கலாம் என்று அவன் அறிவு யூகித்தது,, ஆனால் எல்லாம் தெரிந்து தானே சம்மதித்தாள் அப்புறம் என்ன என்று தவித்தான் சத்யன்

முடிந்த சிகரெட்டை எடுத்து வெளியில் வீசிய சத்யன் தலையில் கைவைத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான்,, தனது திருமணம் ஒரு தவறான முடிவோ என்று திருமணமாகி மறாவது நாளே யோசிக்க வைத்துவிட்டாளே என்று நினைத்தான், என்னதான் ஆச்சு இவளுக்கு என்று தனது நெற்றியில் அறைந்து கொண்டான்

சிறிதுநேரம் கழித்து கதவை தட்டிவிட்டு காபியுடன் உள்ளே வந்த மான்சி “ என்ன மாமா இன்னும் டிரஸ் கூட மாத்தாம இருக்கீங்க” என்றாள் இயல்பாக,, அவள் முகம் தெளிவாக இருந்தது

இப்போது சத்யனுக்கு தன்மீதே சந்தேகம் வந்தது,, ஒருவேளை பெண்மையின் இயல்பான கூச்சத்தை தவறாக எண்ணிக்கொண்டேனோ,, என்று யோசித்தான்,,
அவனும் இயல்பாகி “ நைட் டின்னருக்கு என்ன மான்சி செய்திருக்க” என்று கேட்க

அவனுக்கு மாற்று துணியை எடுத்து கட்டிலின் மீது வைத்த மான்சி “ நான் எங்க செய்தேன்,, அத்தையும் அக்காவும் உங்களுக்கு பிடிச்ச பூரியும் சன்னா மசாலாவும் தயிர் வெங்காயமும் செய்திருக்காங்க,, நீங்க முகம் கழுவி டிரஸ் மாத்திகிட்டு வாங்க சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு வெளியே போனாள்

இரவு உணவை தனது அம்மாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்ட சத்யன்,, சிறிதுநேரம் அமர்ந்து டிவி பார்த்தான்,, ஜெயந்தியின் கணவருடன் தனது தொழிலை பற்றி சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தான், பிறகு கௌதமுடன் கேரம் விளையாடினான், ஆனால் எதிலுமே மனம் ஒன்றவில்லை, உள்ளுக்குள் படபடவென்று இதயம் அடித்துக்கொண்டது

சிறிதுநேரம் கழித்து கௌதமும் அவன் அப்பாவும் அவர்கள் வீட்டுக்கு பைக்கில் கிளம்பிவிட்டனர்,, தட்சிணாவும் அவர்களுடன் கிளம்பிவிட்டான்,, சத்யன் அம்மாவும் ஜெயந்தியும் வெளி வராண்டாவில் வந்து படுக்கையை விரித்து படுத்துக்கொண்டு கல்யாணத்திற்கு வந்தவர் போனவர்கள் பற்றிய கதை பேசினர்,,

டிவியின் சேனல்களை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு எதிலும் மனம் ஒன்றாமல் ஒருகட்டத்தில் டிவி ஆப் செய்துவிட்டு எழுந்துகொண்ட சத்யன்,, தனது அறைக்குள் சென்று கதவை சாத்தி தாளிட்டான்

கதவை மூடிவிட்டு திரும்பி பார்த்தான் சத்யன்,, மான்சி புதுப்புடவையில் தலை நிறைய மல்லிகை சூடி ஜன்னல் வழியாக வெளியே இருட்டை வெறித்துக்கொண்டு இருந்தாள்,, கட்டிலின் அருகேயிருந்த டேபிளில் ஒரு தட்டில் கொஞ்சம் பழவகைகளும் இனிப்பும் இருந்தது, ஒரு ஜக்கில் பால் வைத்து அதன்மீது ஒரு டம்ளர் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது

சத்யன் திருமணம் எப்படி எளிமையாக நடந்ததோ, அதைவிட எளிமையாக சாந்திமுகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,, ஓ இன்றுதான் முதலிரவா? என்று மனதில் நினைத்து உதட்டளவில் புன்னகைத்த சத்யன், ஜன்னலருகே இருந்த மான்சியை நெருங்கினான்

அவளின் பின்புறமாக நின்று அவளை தொடாமல் “ என்னாச்சு மான்சி, எவ்வளவு நேரம் இப்படியே நிப்ப, வா உட்காரு ” என்று அழைத்தான்

அவனை திரும்பி பார்த்த மான்சி, உதட்டை எட்டாத சிரிப்புடன்,, “ம் சரி மாமா” என்று சொல்லி கட்டிலின் ஒரு மூலையில் அமர்ந்தாள்

அடுத்த மூலையில் அமர்ந்த சத்யன் “ ம் இப்போ சொல்லு மான்சி உனக்கு என்ன பிரச்சனை,, நான் தாலி கட்டும் போது சந்தோஷமா இருந்த மான்சி இப்போ இல்லை,, இந்த மான்சிக்கு நிறைய குழப்பம் இருக்கு,, சொல்லு என்ன குழப்பம்?” என்று சத்யன் தெளிவாக கேட்டான்

அவன் சுற்றி வளைக்காமல் நேரடியாக பேசியது மான்சியின் மனதுக்கு நிம்மதியை தந்திருக்கவேண்டும்,, நீளமாய் ஒரு மூச்செடுத்து வெளியே விட்டவள் “ குழப்பம் எல்லாம் ஒன்னுமில்லை மாமா,, நான் ரொம்ப தெளிவா இருக்கேன்” என்றாள்

“ சரி அப்போ நான்தான் குழம்பியிருக்கேன் போலருக்கு,, தெளிவா என்ன முடிவு பண்ணிருக்க?” என்றான் இறுக்கமான குரலில் சத்யன்

நிமிர்ந்து அமர்ந்த மான்சி “ நமக்குள்ள இப்போதைக்கு இதெல்லாம் எதுவும் வேண்டாம் மாமா,, இன்னும் நல்லா ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறமா நாம ஒன்னா சேருவதுதான் நல்லது மாமா” என்று மான்சி நிதானமாக சொல்ல

“அப்போ நாம இன்னும் ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுக்கலைன்னு நெனைக்கிறயா மான்சி” என்றான் சத்யன் அவளைவிட நிதானமாக

“ நான் சொல்ற புரிதல் வேற மாமா,, நான் இல்லாம உங்களுக்கு வாழ்க்கையே இல்லைன்னு ஒரு நிலைமை வரும்ல அதை சொன்னேன்” என்று மான்சி தீர்கமாக சொன்னாள்

“ இரு இரு எனக்கு ஒரு விஷயம் புரியலை மான்சி,, நாம ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் விரும்பினோம்,, ஆனா நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை அதுக்கு காரணம் என்னோட ப்ராப்ளம்,, ஆனா நீ அதெல்லாம் மாறிடும்,, எல்லாம் சரியாப்போயிடும்,, நீங்க இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு சொன்ன,, அப்புறம் ரொம்ப பிடிவாதமா இருந்து என்னை கல்யாணம் பண்ணிகிட்ட,, இப்போ திடீர்னு என்னாச்சு இப்படி ஏன் பேசுற” என்று சத்யன் விளக்கம் கேட்டான்

அவனையே சிறிதுநேரம் உற்றுப்பார்த்த மான்சி சரி மாமா நான் கேட்கிற கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லுங்க,, நான் உங்களை விட்டுட்டு இருந்த இந்த இருபது நாள்ல நீங்க என்னை பத்தி எத்தனை நாள் நெனைச்சீங்க?” என்று கேட்க

“ என்ன மான்சி தெரிஞ்சிருந்தும் இப்படி கேட்கிற,, எப்பவுமே உன் நெனைப்புதான்,, என்னில் பாதியை பிரிஞ்ச மாதிரி ரொம்ப நொந்துட்டேன் மான்சி” என்று பதில் சொன்னான் சத்யன்

“ நான் கேட்டது நைட்ல மாமா” என்றாள் மான்சி

“ நைட்லயா?” என்று புருவம் சுருக்கிய சத்யன் “ எனக்கு புரியலை மான்சி” என்றான்

“ஆமா நைட்லதான் கேட்கிறேன்,, அதுவும் இங்கே யாரை நெனைச்சீங்க” என்று கட்டிலை காட்டி கேட்டாள் மான்சி

சத்யன் திகைப்புடன் அவளை பார்த்தான் ,, “ என்ன மான்சி இதெல்லாம்,, உனக்கு என்னைப்பத்தி எல்லாம் தெரியும் தானே, அதெல்லாம் தெரிஞ்சுதானே என்னை கல்யாணம் பண்ணிகிட்ட” என்று லேசான கோபத்துடன் சத்யன் கேட்டான்

மான்சியின் முகத்திலும் கோபம் வந்து அமர்ந்தது “ சரி அதை விடுங்க,, இப்போ என்ன பண்ணப்போறீங்க ,, இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட்நைட்,, இப்போ நாம என்ன பண்ணனும்,, உங்களோட பழைய நிலைமை மாறிடுச்சா,, அதாவது தேவி கூட நீங்க வாழுறது இப்போ மாறிடுச்சா மாமா” என்று மான்சி கேட்டதும்

தலைகுனிந்த சத்யன் ,, “ இல்லை மான்சி,, மாறவே இல்லை ” என்றவன் பட்டென்று நிமிர்ந்து “ ஆனா இதுனால உனக்கு என்ன பிரச்சனை,, தேவி இப்போ இல்லை மான்சி,, நானும் நீயும் என்ன பண்ணாலும் போட்டிக்கு வரமாட்டா,, மான்சி இறந்து தெய்வமானவளை போய் உனக்கு போட்டியா நெனைக்கிறயே,,... ச்சே இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கலை மான்சி” என்று சத்யன் வருத்தமாக சொல்ல

“ ம்ம் இதையேத்தான் நானு கேட்கிறேன் மாமா இறந்து தெய்வமானவளுக்கு நம்ம பெட்ரூம்ல என்ன வேலை,, அவ இருக்கவேண்டியது பூஜை ரூம்ல தான்,, இது என்னோட பெட்ரூம் இதுல நானும் என் புருஷன் மட்டும்தான் இருக்கனும்,, இங்கே வேற யாருக்கும் இடமில்லை,, அது இறந்துபோன தேவியின் நினைவுகளாக இருந்தாலும் சரி இங்க வரக்கூடாது” என்று மான்சி படபடவென்று பொரிந்து தள்ளினாள்,




சத்யனுக்கு எதுவோ புரிவதுபோல் இருந்தது,, “ஆனால் இதெல்லாம் ஏன் புதுசா கிளப்புற மான்சி ஏற்க்கனவே தெரிஞ்ச விஷயம் தானே?” என்று சத்யன் முகத்தை சுழித்துபடி கேட்டான்

“ ஆமா மொதல்லயே எல்லாமே தெரியும்தான்,, அப்போ காதல் என் கண்ணை மறச்சுது,, மாமாவுக்காக எதை வேனும்னாலும் செய்யலாம்னு நெனைச்சேன்,, இப்போ என் புருஷன் மனசால கூட யாரையும் நெனைக்ககூடாதுன்னு சுயநலமா யோசிக்குது என் மனசு,, காதலை உங்ககிட்ட யாசிச்ச எனக்கு தாம்பத்தியத்தை தேவிகூட பங்கு போட்டுக்க விருப்பம் இல்லை, எனக்கு மட்டும் வேனும் மாமா எல்லாமே வேனும் ” என்று மான்சி கலங்கிய குரலில் பேச

சத்யனுக்கு அவள் மனநிலை தெள்ளத்தெளிவாக புரிந்தது,, “ நீ சொல்றது எனக்கு புரியுது மான்சி, ஆனா இதை விலகியிருந்து சாதிப்பதை விட அருகில் இருந்து சிறுகச்சிறுக என்னை மாற்றிக்கொள்ள நீயும் ஒத்துழைக்கலாமே?” என்றான்

" இல்ல மாமா எனக்கு அந்த தைரியம் இல்லை,, நீங்க என்னை நினைச்சு என்கூட படுக்குறீங்களா,, இல்ல தேவியை நெனைச்சு என்கூட படுக்குறீங்களான்னு ஒவ்வொரு நிமிஷமும் சித்ரவதை படமுடியாது,, நான் மோசமான சுயநலவாதிதான்,, ஒத்துக்கிறேன், எனக்கு என் மாமா மட்டுமே வேனும்,, பத்து வருஷமா உங்களையே மனசுல நெனைச்சு வாழ்ந்த எனக்கு இது ஒன்னும் பெரியவிஷயமில்லை” என்று மான்சி சொல்ல

“ஏன் மான்சி நான் மாறிட்டேன் என் மனசுல நீதான் இருக்கன்னு பொய் சொல்லி நான் உன்னை தொடமுடியாதுன்னா நெனைக்கிற? ” என்று சத்யன் கேலியாக கேள்வி கேட்டான் சத்யன்

“ இல்ல மாமா உங்களால எனக்கு துரோகம் நினைக்க முடியாது,, எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா” என்று மான்சி தீர்கமாக சொன்னாள்

இருவரும் பேசிப்பேசியே கலைத்து போய் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக சிறிதுநேரம் இருந்தனர்

தனது தொண்டையை சரி செய்துகொண்ட சத்யன் “ என் மனசு மாறாமலேயே போய்ட்டா என்ன பண்ணுறது மான்சி” என்று கலக்கத்துடன் கேட்டான்

“ ஏன் மாமா மாறாது,, தேவி மட்டும்தான் உங்கள் வாழ்க்கைன்னு நெனைச்சீங்க இப்போ அந்த இடத்தில் நான் வந்து உட்கார்ந்துட்டேன்,, இப்போ உங்ககூட கட்டிலில் மட்டும் வாழும் தேவியை மறக்க முடியாதா என்ன,, மாமா எனக்கு தேவியின் மேல எந்த வருத்தமோ பொறாமையோ இல்லை,, ஆனா எனக்கு என் புருஷனை யாருக்கூடயும் பங்குப்போட்டுக்க முடியாது,, அது செத்துப்போனவளா இருந்தாலும் சரி அவ்வளவு தான்” என்று தீர்மானமாக பேசினாள் மான்சி

சத்யன் பரிதாபமாக மான்சியை பார்த்து " இதெல்லாம் யோசிச்சுதான் நான் கல்யாணமே வேண்டாம்னு அத்தனை முறை சொன்னேன்,, அன்னிக்கு எல்லாமே சரின்னு தோன்றிய ஒன்று இன்னிக்கு தப்பா தெரியுதா மான்சி,, கல்யாணத்துக்கு முன்னயே மருந்தா உங்களுக்கு இருக்கேன்னு சொன்னியே அதெல்லாம் சும்மாவா மான்சி" என்று சத்யன் விரக்த்தியாக கேட்க

மெல்ல தலைகுனிந்த மான்சி " அன்னிக்கு சொன்னதெல்லாம் உண்மை மாமா,, நான் வேஷம் போடலை,, ஆனா இப்போ ஒரு மனைவி ஸ்தானத்தில் இருந்து யோசிச்சா,, என்னோட சிந்தனைகள் எல்லாமே ரொம்ப சுயநலமாகத்தான் இருக்கு மாமா,, என்னை மன்னிச்சுடுங்க" என்று மான்சி கண்கலங்க சத்யனிடம் மன்னிப்பு கேட்டாள்

" ஆமா இதெல்லாம் நேத்து கோயிலில் தேவியை பத்தி நான் பேசிய பிறகு யோசிச்சு எடுத்த முடிவா மான்சி" என்று சத்யன் புருவங்கள் முடிச்சிட கேட்டான்

" இல்ல மாமா நிச்சயமா இல்ல,, உங்களை பிரிஞ்சு இருந்த இந்த இருபது நாள்தான் எனக்கு சிந்திக்கும் தன்மையை கொடுத்துச்சு,, நல்லா யோசிச்சு எடுத்த முடிவு மாமா இது" என்று மான்சி அவசரமாக சொன்னாள்


அதன்பிறகு சத்யன் எதுவுமே பேசவில்லை அமைதியாக தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான் ,,

மான்சி எழுந்து அவனருகில் வந்தாள்,, அவன் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டாள்,, பிறகு இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டாள் " இதோ பாருங்க மாமா நாம ரெண்டுபேரும் எப்பவும்போல காதலர்கள் தான் அப்படின்னு மனசுல நெனைக்காம , இதோ இவதான் என் மனைவி, இவளுடைய உடலும் மனமும் எனக்கு மட்டும் சொந்தம், இவளை அனுபவிக்கவும் ரசிக்கவும் எனக்கு முழு உரிமை உண்டுன்னு மனசுக்குள்ள சொல்லிகிட்டே இருங்க,,

" மாமா இனிமேல் இதோ நான் இங்கதான் கீழ படுத்துக்குவேன்,, என்னை பார்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் இவ ஏன் கீழ படுக்கனும்,, இவ இருக்க வேண்டிய இடம் என் கட்டில் அல்லவான்னு நெனைச்சு கிட்டே இருங்க,, உங்க மான்சியின் உடல் எந்த இடத்தில் அழகாயிருக்கும்,, அவளை எப்படி தொட்டால் ரசிப்பாள்,, அவளை எப்படி என்ன பண்ணனும்,, துணிகள் மூடிய என்னோட உடல்பாகம் எல்லாம் எப்படியிருக்கும்,, அதை எப்படி கையாளுவது,, இப்படி உங்க சிந்தனைகள் மொத்தமும் மான்சி என்ற உங்க உரிமையுள்ள பொண்டாட்டியை சுத்தியே வர்ற மாதிரி பார்த்துக்கங்க மாமா,, நிச்சயம் தேவியை மறந்து என்னை நினைப்பீங்க" என்று மான்சி ஒரு குழந்தைக்கு சொல்வதுபோல் சத்யனுக்கு சொன்னாள்

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் சத்யனின் உண்மை நிலையை பறைசாற்ற அவனுக்கு குமுறிக்கொண்டு வந்தது " மான்சி" என்று அவளை இறுக அணைத்துக்கொண்டு கதறிவிட்டான் சத்யன்

தன் மார்பில் இருந்த சத்யனின் தலையை வருடியபடி " வேண்டாம் மாமா அழாதீங்க,, எல்லாம் சரியாயிடும் நாமளும் குடும்பம் குழந்தைன்னு சீக்கிரமே வாழுவோம் மாமா எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா" என்று கூறிவிட்டு மான்சியும் கண்ணீர் விட

அவளை நிமிர்ந்து பார்த்த சத்யன் " இதெல்லாம் நடக்குமா மான்சி,, நான் மாறுவேனா" என்று கவலையாய் கேட்டான்

" நிச்சயமா மாறுவீங்க மாமா,, நீங்க மாறலைனாலும் இதோ இதுக்கு ஒரு சக்தி உண்டு அது நிச்சயமா உங்களை மாத்தும் மாமா" என்று தனது கழுத்தில் இருந்த புது மஞ்சள் கயிறை இழுத்து சத்யனிடம் காட்டினாள் மான்சி

சிறிதுநேரம் இருவரும் அணைத்தபடி தங்களின் பிற்காலத்தை பற்றி கண்ணீருடன் சிந்தித்தனர் ,,

பிறகு அவன் பிடியிலிருந்து விலகிய மான்சி " நீ படுத்துக்கோ மாமா,, நான் கீழ படுத்துக்கிறேன்" என்று சொல்லிவிட்டு மான்சி தயாராக கீழே போட்டு வைத்திருந்த பெட்சீட்டை தரையில் விரித்து ஒரு தலையனையை அதில் போட்டு படுத்துக்கொண்டாள்

அப்படியே கட்டிலில் சரிந்த சத்யன், ஒருக்களித்து படுத்து மான்சியின் அமைதியான எழில் பொங்கும் முகத்தையே பார்த்தான்,, ' இந்த சிறிய வயதில் இவளுக்கு எவ்வளவு அறிவுபூர்வமான சிந்தனைகள்,, என்று சத்யனுக்கு வியப்பாக இருந்தது,,

தனது முதலிரவு ஏமாற்றத்தில் முடிந்ததில் வருத்தம் இருந்தாலும்,, தீர்மானமாக பேசிய மான்சியை நினைத்து பெருமையாக இருந்தது சத்யனுக்கு
என்னுடைய இன்றைய நிலை நிச்சயம் ஒருநாள் மாறும்,, அன்று இதோ என் மனைவி மான்சியை அணைத்துக்கொண்டு தாம்பத்தியத்தில் களைத்துப்போய் உறங்குவேன், என்ற நம்பிக்கை சத்யன் மனதில் அன்று இரவே வேரூன்றியது 




"என் மனதில் பஞ்சு பொதிகளாய்...

"குவித்து வைத்திருக்கும் நினைவுகளை...

" கற்பனையான கனவு மூட்டைகளை....

" ஏராளமான விளங்கப்படாத விதைகளை...

" புதைக்கப்பட வேண்டிய நாள் எப்போது?

" இனி என்று வருமோ?

" மஞ்சத்தில் புரண்டு...

" மலர்களோடு குழைந்து...

" மங்கையவளை கொஞ்சி...

" என் ஜென்மம் பூரணமடைய

" ஒரு முதல்இரவு!!!!!



No comments:

Post a Comment